அவதாரிகை –
(ஸ்வரூப ரூபம் குணம் காட்டி அனுபவிப்பித்தான் என்றார் மூன்றாலும்
கீழ் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் – பரகத ஸ்வீ காரத்துக்கு அர்ஹதை தனக்கே என்கிறார்)
முதல் மூன்று பாட்டில் திருமந்த்ரார்த்தங்கள் அனைத்துமே அருளிச் செய்தார்-திரு நெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அன்றோ இது –
ஓம்-நான் அடிமைப்பட்டவன் என்றும் தான் அடிமை கொள்ளுபவன் -என்றும் சேஷ சேஷி பாவம் -அநந்யார்ஹ சேஷத்வம்
இரண்டாம் பாட்டில் -நம -அது அநந்ய சரண்யத்வம் -நான் ஒருவனே ஸ்வாமி சேஷி என்றும்
மூன்றாம் பாட்டில்-நாராயணாய -போக்யத்வம் குறைவற்று இருக்கும் படியையும் -அநந்ய போக்யத்வம் – காட்டி அருளியதை அருளிச் செய்தார்
பத த்ரயம் -பிரமாணம் -ஓம்- நம – நாராயணாய –
பிரகார த்ரயம் -திருமேனி -ப்ரமேயம் -ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே -வைத்த அஞ்சல் என்ற கை -கவித்த முடியும் முகமும் முறுவலும் –
ஆகார த்ரயம் –அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம்
அழகிய மணவாளன் ராஜன் -திரு மந்த்ர ராஜாவை வைத்தே ஆலி நாட்டு அரசரான இவரை அரச மரத்தின் அடியில் ஆழ்வார் ஆக்கி அருளினார்
(நெஞ்சுக்கு திருமந்திரத்தில் மூலம் அவனே ஜகத்காரண பூதன் ஜனகன் என்கிறார் இதில்
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே)
கீழ் மூன்று பாட்டாலும் திருமந்த்ரார்தம் ஆய்த்து –
முதல் பாட்டில் –சேஷ சேஷித்வம் சாஷாத்க்ர்தம் ஆய்த்து –
இரண்டாம் பாட்டில் –அந்ய சேஷத்வம் நிவர்த்தம் ஆய்த்து –
மூன்றாம் பாட்டில் -போக்யதை குறைவற்றது –
இனி அனுபவத்துக்கு சஹ காரிகளைத் தேடும் இத்தனை இறே –
அதில் –
நித்ய ஸூரிகள் தேச விப்ரக்ர்ஷ்டர் ஆகையாலும்
சம்சாரிகள் விஷய பிரவணர் ஆகையாலும் –
துணையாக மாட்டார்கள் –
இனி தமக்கு அவர்ஜநீயமாய் இருந்துள்ள திரு உள்ளம் இறே சஹகாரி யாவது –
ஆகையால் -நெஞ்சே -நாம் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பாராய் –
என்கிறார் –
கீழ்ச் சொன்ன விலஷண விக்ரஹ விசிஷ்டன் உடைய
ஜகத் காரண பிரயுக்தமான வைபவத்தை
ஸ்வரூப பிரகாசமான திருமந்திர முகத்தாலே அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
இவர் தாம் திரு மந்திர முகத்தாலே அனுபவிக்கிறார் ஆகில்
அதுக்கு
உபயவிபூதி நாதத்வமும் சமஸ்த கல்யாண குணாத்மகத்வத்மமும் அன்றோ அர்த்தம் -என்னில்
அதுவும் பிரமாண ப்ராசுர்யத்தாலே காரணத்வத்திலே ஒதுங்கி இருக்கக் கடவது –
ஏகோஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந -(மஹா உபநிஷத்-ஸ்ருதி -அவன் ஒருவனே இருந்தான் )என்றும்
நராஜ்ஜாதானி தத்வானி-(நாராயண ஸ்ம்ருதி மஹா பாரதம் நாரதர் புண்டரீகருக்கு உபதேசம்-அவன் இடம் இருந்தே அனைத்தும் உருவான )என்றும்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -(படைக்கப்பட்ட நீரை பிரளய ஜலத்தை இருப்பிடமாகக் கொண்டவன் )என்றும் இத்யாதிகளாலே
ஜகத் காரணத்வத்தை நாராயண சப்தார்த்தமாக சொல்லக் கடவது இறே –
(ஸ்ரீ விஷ்ணு சித்த விஜயம் விவரமாக ப்ரமாணங்களைக் காட்டுமே
ஒன்றும் தேவும் -திருவாய் மொழி
அது தனக்கு கருத்து என் என்னில் -முறை அழிந்து கிடக்கிறது இத் தேசம் ஆகையாலே
பிரமாண அபேஷை உள்ளது இத் தேசத்துக்கு இறே –
தம் காணியைப் பிறர் ஆளும் போது இறே பிரமாணம் காட்ட வேண்டுவது –
ஆகையால் சொல்லுகிறது
ஆகையால் –நெஞ்சே ஜனகனை அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
—————————————————————————————————————————————–
இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே
பதவுரை
இந்திரற்கும்–இந்திரனுக்கும்
பிரமற்கும்–ப்ரஹ்மாவுக்கும்
முதல்வன் தன்னை–காரண பூதனாய்
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்–பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
செம்திறத்த தமிழ் ஓசை ஆகி–செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசித்தவனாய்
வடசொல் ஆகி–ஸம்ஸ்க்ருத வேதத்தையும் பிரகாசித்தவனாய்
திசை நான்கும் ஆய்–நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அந்தராத்மாவாய்
திங்கள் ஞாயிறு ஆகி–சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய்
அந்தரத்தில்–இப்படி ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில்
தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை–தேவர்களுக்கும் அறியக் கூடாத ஸூத்த ஸ்வபாவனாய்
அந்தணர் மாடு–பிரமாணர்கட்குச் செல்வமான வேதத்தினுடைய
அந்தி–முடிவிலே
வைத்த–விளங்குகிற
மந்திரத்தை–பரம மந்த்ரமான ஸர்வேஸ்வரனை
மந்திரத்தால்–திரு மந்த்ரத்தாலே
மறவாது வாழுதி ஏல்–இடைவிடாது அநுபவிப்பாயாகில்
மட நெஞ்சமே–விதேயமான நெஞ்சே!
என்றும்–இவ் வாத்மா உள்ளவளவும்
வாழலாம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்.
இந்திரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் காரண பூதனாய்
பெரிதான பூமி காற்று அக்னி ஜலம் ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்ம தயா வியாபித்து நிற்குமவனாய்
தன்னை உள்ளபடியே காட்டும் செவ்வையை யுடைய திராவிட வேதமான ப்ரபந்தங்களுமாய் சமஸ்க்ருத வேதங்களுமாய்
நான்கு திக்குகளிலும் உள்ள பதார்த்தங்களும் அந்தர்யாத்மாவாய்
சந்த்ர ஸூர்யர்களுக்கும் அந்தர்யாத்மாவாய்
இப்படி அந்தர்யாத்மதயா வியாபித்து நிற்கும் இடத்தில் தேவாதி ஸகல பதார்த்தங்களும் அறியக்கூடாத ஸூத்த ஸ்வபவனாய்
ப்ராஹ்மணர்களுக்கு தனமான வேதத்தினுடைய முடிவிலே பிரகாசிக்கிற ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரனை
திரு மந்திரத்தால் இடைவிடாமல் அனுபவிப்பாயே ஆகில்
எனக்கு கீழ்ப் படிந்து நடக்கும் நெஞ்சே
இவ்வாத்ம உள்ளதனையும் நித்ய ஸூரிகள் நடுவே இருந்து அனுபவிக்கப் பெறுவாய் –
———————————————————————
இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
மூ வுலகும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்கிற இடத்தில்
சப்தத்தை நெருக்கி இறே பொருள் சொல்வது –
அதுவே தமக்கு கருத்து என்னும் இடம் தோற்ற அத்தை இங்கே வ்யக்தமாக்குகிறார்
ஏகனே நிர்வாஹகன் என்று கீழ்ச் சொல்லிற்று என்கிறார் –
சம் ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞனான இந்த்ரனுக்கும்
ஈஸ்வரன் என்று சங்கிக்கைக்கு யோக்யமான ப்ரஹ்மனுக்கும்
உத்பாதகன் ஆனவனை –
சங்க நீயகனான ப்ரஹ்மாவை முற்படச் சொல்லி பின்பு இவனைச் சொல்ல பிராப்தமாய் இருக்க –
இவனை முற்படச் சொல்லிற்று
இவனோபாதி அவனும் ஸ்ர்ஜயக் கோடி கடிதன் என்னும் இடம் தோற்றுகைக்காக –
ஆனால் ருத்ரனும் ஈஸ்வரனாக சங்க நீயனாய் அன்றோ இருப்பது
அவனைச் சொல்லாது ஒழிவான் -என் என்னில்
ப்ரஹ்மணச் சாபி சம்பூதஸ் சிவா இத்ய வதார்யதாம் -என்றும்
இத்யாதி பிரமாணங்களாலே அவனுக்கு ப்ரஹ்ம புத்ரத்வம் பிரசித்தமாய் இருக்கையாலே
எல்லாரிலும் பிரதானனான ப்ரஹ்மாவையும் கீழான இந்த்ரனையும் சொன்ன போதே
ப்ரத்யாஹார ந்யாயத்தாலே மத்யே அவனையும் சொல்லிற்றாகக் கடவது –
(ப்ரத்யாஹாரம் -அல் -அகாரத்தையும் லகாரத்தையும் எடுக்கவே
நடுவுள்ள அக்ஷரங்கள் தன்னடையே ஸித்திக்குமே
ஸப்த பிரகர்யா நியாயம்
அப்படியே ஆதி அந்தங்களைச் சொல்லவே நடுவுள்ளதும் ஸித்திக்கும் )
(எம்பெருமான் கருடனுக்கு அருளிச் செய்தது -நான்கு வித ஸ்ருஷ்டிகளைச் செய்தேன் –
முதலில் உந்தித் தாமரை -அதில் இருந்து -நான்முகன் -அவன் -ருத்ரன் -ஸ்கந்தன்)
இந்த்ரனுக்கும் பிரமனுக்கும் என்னாதே ரேபாந்தமாகச் சொல்லிற்று
பூஜ்யதா புத்தியால் அன்று -ஷேபிக்கிறார் –
ஈஸ்வரனே ஸ்ர்ஜயனாய் இருக்கச் செய்தே கிடீர்
த்ரிலோக்யாத்யஷன் -நான் -என்று இருக்கிறதும்
சதுர்தச புவனமும் என்னாலே ஸ்ர்ஜ்யம் -இத்தனைக்கும் நிர்வாஹகன் நான் என்று இருக்கையும்
கும்பிட்டுக் கொள்ளுகிறதும் –
முதல்வன் –
தனக்கு உத்பாதகன் இன்றியே இருக்கிறவன் –
தன்னை –
வ்யஷ்டி சிருஷ்டிக்குக் காரணமான தன்னை -என்னுதல்
இரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்-
கீழ் வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லிற்று
இத்தால் –சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது –
முற்பட வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லி பின்பு சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது
ஈஸ்வர சங்கை உள்ளது இவர்கள் பக்கலிலே யாகையாலே –
நாரங்களுக்கு ஈஸ்வரத்வ சங்கை இல்லை இறே –
பூதங்களை வ்யய க்ரமத்திலே சொல்லுதல் -ஸ்ர்ஷ்டி க்ரமத்திலே சொல்லுதல் செய்யாதே
அக்ரமமாக சொல்லிற்று ஒரு நினைவைப் பற்ற –
சர்வாதரமுமாய் -அசஞ்சாரியுமாய் -அபாதகமுமாய்
இருக்கும் பெருமையைப் பற்ற
பூமியை முற்படச் சொன்னார் –
அல்லாத பூத த்ரயங்களும் சஞ்சாரியுமாய்-ரஷகத்வ பாதகத்வங்களும் பொதுவாய் இருக்கையாலே
அக்ரமத்திலே சொன்னார் –
இத்தனைக்கும் அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தை பற்ற
ஆகாசத்தைப் பின்பே அருளிச் செய்தார் –
இவை நினவு இல்லாத போது இதுக்கு பிரயோஜனம் இல்லை –
முதல்வன் தன்னை -என்றார் கீழ்
இங்கே –ஐந்தாய் -என்கிறார்
ஆகையால் இந்த சாமானாதி கரண்யத்துக்கு நிபந்தனம் –
உத்பாத்ய உத்பாதக பாவ சம்பந்தம் – என்க –
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
மேல் சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக
சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் –
திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து
ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க –
இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —
1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்
2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்
3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்
4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக
முற்பட அருளிச் செய்கிறார்-
வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை –
அனுஷ்டாவின் வார்த்தை இறே இது –
(த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –
செந் திறத்த தமிழ் ஓசை
திறம் –கூறுபாடும்-பிரகாரமும் –
ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்
உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே –
(தமிழ் வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும்,-அது தேவ பாஷை இது மனுஷ்ய பாஷை –
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்ற
வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும்,
ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம்
போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும்
இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க.
வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர் பெற்றிருக்கும்;
இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத் தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும்
சிறப்புறுதல் பற்றிச் ‘செந் திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.)
ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்
லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே
வடசொல் -என்று
சமஸ்க்ரதத்தை சொல்கிறது –
த்ரமிட பாஷை சஞ்சரிக்கும் தேசத்துக்கு வட எல்லையாக
திருமலையைச் சொல்லக் கடவர்கள் இறே –
அதற்கு வடக்கு எல்லாம் சமஸ்க்ர்தமே சஞ்சரிக்கும் இறே
அத்தேசத்தில் தமிழ் சஞ்சரிக்காது –
உபயமும் சஞ்சரிக்கும் ஏற்றம் உண்டு இறே இத் தேசத்துக்கு -(உபய வேதாந்தம் இங்கே தானே )
ஆகி -சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )
திசை நான்குமாய் –
நாலு திக்குகளிலும் உண்டான சகல பதார்த்ர்ங்களையும் ஸ்ருஷ்டித்து
மஞ்சா க்ரோசந்தி -இதிவத் -இத்தால் –
சாஸ்திர வஸ்யருடைய ஸ்ருஷ்டியைச் சொல்கிறது –
திங்கள் நாயிறாகி –
அக்னௌ பிராப்தா ஹூதிக்ஸ் சமயக் ஆதித்யம் உபதிஷ்டதே
ஆதித்யாஜ்ஜாய தேவ்ர்ஷ்டி -வ்ர்ஷ்டோரன்னம் ததா பிரஜா (மனு ஸ்ம்ருதி )-என்னக் கடவது இறே –
ஸ்ருஷ்டி சமாப்தி -தோற்ற –ஆகி -என்கிறார் -(ஆய் –கீழ் இங்கு ஆகி )
லோக உபகாரகர் ஆகையால் இவற்றையும் ஸ்ருஷ்டிக்கிறார் –
(ஆஹுதியைப் பெற்ற ஸூர்யன் மழை பெய்விக்க தான்யம் விளைந்து -சந்திரன் தாபம் ஆற்ற -இவ்வாறு உபகாரம் -)
ஆனால் தேவர்க்கும் -என்று இவர்களை விசேஷித்து எடுப்பான் என் என்னில்
ஜ்ஞான சக்திகளால் அதிகர் ஆனவர்களுக்கும் அறிய ஒண்ணாது என்கைக்காக அருளிச் செய்கிறார் –
கீழே நார -சப்தார்த்தம் சொல்லிற்று
மேலே அயன சப்தார்த்தம் சொல்கிறது –
அந்தரத்தில்
அந்தரனாம் இடத்தில் –
ஸ்ர்ஷ்டமான சகல பதர்த்தங்களிலும் வியாபித்து நிற்கும் இடத்தில் –
ப்ர்திவ்யா அந்தர -ஆத்மந அந்தர -என்று
அந்தர சப்தத்தாலே வ்யாப்தியைச் சொல்லக் கடவது இறே –
(ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-
யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-
வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி -தண்ணீர் -வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –)
தேவர்க்கும் அறியலாகா –
ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று
யாவன் ஒருவனை ஆத்மா அறியான் –
அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி )
அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –
அந்தணனை –
ஸூத்தனை -(அம் தன்மை -அழகிய தன்மை -மனஸ் வாக் கர்மங்களால் ஸூத்தி )
ஆழ்வார்கள் எல்லாம் இச் சப்தத்தால் சுத்தியை சொல்லக் கடவதாய் இருப்பதொரு ஏற்றமும் உண்டே –
அறவனை ஆழிப்படை அந்தணனை -என்றார் இறே நம் ஆழ்வார் –
பிறவித் துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப் பெய்வார்,*
அறவனை* ஆழிப் படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
கையும் திரு ஆழியுமாய் இருப்பன் ஒரு பிராமணன் இல்லை இறே –
கேவலனுக்கு ஸூபாஸ்ரயமாக அருளிச் செய்கிறார் ஆகையாலே அங்கன் அருளிச் செய்தது –
பகவத் பிராப்தி காமன் குண விசிஷ்டமாக உபாசிக்கக் கடவன் –
குணங்களே பிராப்யம் ஆகையாலே ஆத்ம பிராப்தி காமன் ஸூத்தி விசிஷ்டனாக உபாசிக்கக் கடவன் –
ஜரா மரண மோஷமே புருஷார்த்தம் ஆகையாலே –
ஆனால் -இவர்க்கு ஸூத்தி அபேஷிதமோ -என்னில்
கீழ் ஸ்ருஷ்டியைச் சொல்லி –
ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்கும் என்கையாலே
தத் கத தோஷ ரஸம் அஸ்ப்ருஷ்டம் என்கை-அபேஷிதம் –
அத்தைப் பற்றச் சொல்கிறது
(கைவல்யன் அந்தணன் என்று சாணிச் சாறு மாத்ரமாக கொள்வான் –
ஆனால் -தேவர்களுக்கும் அறியலாகா அந்தணன் -இங்கே சொல்வது பொருந்துமோ என்னில்
வியாப்ய கத தோஷம் தட்டாதவன் என்பதாலேயே -)
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா -என்று வ்யாப்தியைச் சொன்ன பிரகாரங்களில்
தத்கத தோஷை ரஸம் அஸ்ப்ருஷ்டங்களையும் சொல்லக் கடவது இறே –
இது இறே இவர் திரு உள்ளத்தில் கிடக்கிறது –
பரம வைதிகள் இறே ஆழ்வார்கள் ஆகிறார்கள் –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை –
கீழ் உக்தமான இவ் வஸ்து
வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –
அந்தணர் மாடு –
பிராமணா நாம் தனம் வேத -என்கிறபடியே
ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் -இறே
(”மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி மாடு-செல்வம்;
பிரமாணர்கட்குச் செல்வம் வேதமென்று நூல்கள் கூறும்.)
தனம் மதியம் தவ பாத பங்கஜம் -என்கிற ஈஸ்வரன் அன்று தனம் –
வேதங்களே தனம் –
வேதைக சமதி கம்யன் -என்று இறே வஸ்துவுக்கு ஏற்றம் –
பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –
(விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருத க்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 30 –)
(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷)
அந்தி வைத்த மந்த்ரத்தை –
வேதாந்தத்தில் பிரகாசிக்கிற ரகஸ்யத்தை –
மாட்டந்தி -வேதத்தின் முடிவிலே -வேதாந்தத்தில் -என்றபடி –
மந்த்ரம் -என்றும் –
சர்வைஸ் ஸ்மாத் பரன் -என்றும் பர்யாயம் போலே காணும் –
ஈஸ்வரனை ரகசியம் -என்கிறது –
தலைக்கடையும் புழக்கடையும் அடைத்து
கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்ப்பாரைப் போலே
அஷட் கரணமாக உபதேசிக்கவும் அனுசந்திக்கவும் வேண்டி
இப்படி சீரிய சரக்காய் இருக்கையாலே –
அதவா
மந்த்ரம் -என்று
ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே
மந்த்ரஸ் சந்த்ராம் ஸூர்ப்பாஸ்கரத் யுதி -என்னக் கடவது இறே –
(ஓஜஸ்தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி|–ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமா-30
281-மந்த்ர-மந்தாரம் த்ராயத இதி மந்திர-
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –)
அந்தணர் மாடு -என்கிறார் காணும் தாம் அதுக்கு அயோக்யர் என்னும் இடம் தோற்ற –
சர்வமும் திரு உள்ளத்திலே பிரகாசியா நிற்க –
வாய் விடுகை மர்யாதஹானி என்று இருக்கிறார் இறே –
தாம் பரம வைதிகராய் இருக்கச் செய்தே -பிறர் தனம் என்பாரைப் போலே
அத்தோடு சம்பந்தம் அற வார்த்தை சொல்லுகிறார் இறே
மர்யாதா ஸ்தாபன அர்த்தமாக –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்தரத்தால் வாழ்தியேல்
பிரதிபாத்யமும் அங்கேயாய்
பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி –
மந்த்ரத்தை -வாழ்தியேல்
1-ஜகத் காரண பூதனை –
2-சர்வாந்தராமியாய் –
3-துர் ஜ்ஜேயனாய் –
4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை
அனுபவிப்புதியாகில்
மந்தரத்தால் வாழ்தியேல்-
அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –
இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே
நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –
திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –
திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே –
சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –
சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –
(ருக் யஜுஸ் ஸாம வேதார்த்தங்கள் எல்லாம் அஷ்டாக்ஷரத்திலே உண்டே)
பகவத் மந்த்ரங்கள் அசங்க்யாதங்கள் அன்றோ –
மந்த்ரம் -என்ன –
பெரிய திருமந்த்ரத்தை காட்டுமோ வென்னில் –
யானி நாமானி கௌனானி -என்கிறபடியே
அல்லாதவை குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் இறே இருப்பது –
கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு வாசகமாய் இருப்பதொரு சப்தம் இல்லையே இறே -ஆகையாலே காட்டும் –
அல்லாத வ்யாப்த மந்த்ரங்கள் இதுக்கு வாசகம் அன்றோ என்னில் –
அவற்றைப் பற்ற சாபேஷம் ஆகையாலே வ்யாபகாந்தரங்களையும் காட்டாது –
அடியிலே இவர் தாம் —நான் கண்டு கொண்டேன் -என்று
தலை செய்த மந்த்ரம் இது இறே –
(பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-8-)
மறவாது வாழ்தியேல் –
விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்
பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே
விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –
அது இவர்க்குச் சேராது –
சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே
இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் –
விஷய வைலஷண்யத்தைப் பாரார் –
தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக
அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –
அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது –
ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்
இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ
இங்கனே சொல்லுவான் என் என்னில்
அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்
இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –
பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-
வாழ்தியேல் –
அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே –
போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –
(கேவலம் உபேயாகவே நினைக்க வேண்டிய எம்பெருமானை
உபாயமாகவும் நினைத்தல் அவனை மறந்ததாகவே கருதக் கூடியதாதலால் அந்த நினைவு வேண்டாவென்கிற தென்க.
‘சிந்தித்தியேல் என்றோ ‘நினைத்தியேல்‘ என்றோ சொல்ல வேண்டுமிடத்தில் ‘வாழுதியேல் என்றது,
அதுதானே வாழ்ச்சியாயிருக்கவேணு மென்கைக்காக.
எம்பெருமானுடைய பரத்வத்திலும் உபாயத்வத்திலும் இழியாதே போக்யதையில் இழிந்து
அநுபவித்தால் அதுதானே வாழ்ச்சியாயிருக்குமிறே.)
வாழ்தியேல் –
வாழ்ச்சி உன்னதே இறே
நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –
வாழ்தியேல் -என்று
தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே
கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –
மன பிரதானம் தோற்ற –
யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய் இறே முமுஷூ இருப்பது –
என்றும் வாழலாம் –
நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –
எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது
வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே –
மட நெஞ்சமே
எனக்கு பவ்யமான நெஞ்சே
விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு
போக வேளையோடு
வாசி அற
என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே
என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –
நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply