(மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -ஷேம கரம் –
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -நடுவில்
ஓம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ஸயதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் இவாவசிஸ்யதே –
குண பூர்ணம்-சரணாகதியும்-கல்யாண குண பூர்த்தியையும் கைங்கர்ய பிரார்த்தனையும் -மூன்றும் சேர்ந்தே -ஸ்ருதியில் உள்ளன
அகிஞ்சனன் அகதி விண்ணப்பம் செய்தே சரணாகதி
நோற்ற நோன்பிலேன் -குளித்து மூன்று-ந தர்ம நிஷ்டோஷ்மி -லோக விக்ராந்த சரணவ்-மூலம்
ஒன்றும் இல்லை என்றும் இருந்து விட்டதாகவும் -பரித்யஜ்ய மாயா லங்கா -பிதரம் மாதரம் -போன்றவை உண்டு
விட்டே பற்ற வேண்டும் விட்டதும் பற்றுவதும் உபாயம் இல்லை -விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்
த்வயத்தின் பூர்வ வாக்கியம் இது உத்தர வாக்கியம் சிற்றம் சிறு காலையில்-)
(ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ஓம் சாந்தி சாந்தி சாந்தி:
பூர்ணம் – முழுமை: அத: – அது: இதம் – இங்கே: பூர்ணாத் – முழுமையிலிருந்து: உதச்யதே – உதித்தது அல்லது வந்தது:
பூர்ணஸ்ய – முழுமையிலிருந்து: ஆதாய – எடுக்கப்பட்டது: பூர்ணம் ஏவ – முழுமையாகவே: அஸிஷ்யதே – இருக்கிறது.)
(இதிலும் பிரார்த்தனை என்னது சொல்ல வில்லை-ஆறு பாகங்களாக இப் பாசுரம் பிரித்து வியாக்யானம்
1-கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–கர்மா ஞான பக்தி யோகங்கள் ன்றும் இல்லை
2-அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து -மேல் இவை வரை யோக்யதை இல்லாத குலத்தில் பிறந்தோம்
3-உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -மூல ஸூ ஹ்ருதம் நீரே எண்களைத் தேடி வந்தீர் அன்றோ
4-உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-நித்ய சம்பந்த ஞானம்
5-அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே-அபராத ஷாமணம்
6-இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-நீயே உபாயம்)
அவதாரிகை –
முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன
பிராப்ய
பிராபகங்கள் இரண்டையும்
மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக
இப் பாட்டில்
பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்
(நாராயணனே பறை
நாராயணனே தருவான்
என்பதின் விவரணம் இப்பாசுரமும் அடுத்த பாசுரமும்)
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
பதவுரை
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேர்ந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத-அறிவு ஞானம் யோகம் அறிவு ஓன்று கர்ம யோகம் அறிவு ஒன்றும் பக்தி யோகம் -மூன்றுமே இல்லை
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோடு உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–நாராயணனே இத்யாதி சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆஸ்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருள வேணும்;
எல் ஓர் எம் பாவாய்
வியாக்யானம் –
கறவைகள் -இத்யாதி –
ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து
சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி –
தேக போஷண ஏக பரராய்
இருந்தோம்
இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –
அறிவொன்றும் இல்லாத –
ஞானமும்
ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –
ஆய்க் குலம் –
உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –
இத்தால் –
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –
(ஏழை ஏதலன் கீழ் மகன் போல்)
ஆகில் –
புருஷார்த்தத்தை இழக்கும் இத்தனை யன்றோ -என்ன –
புண்ணியம் இல்லாதார் அன்றோ இழப்பது -என்ன
உங்கள் புண்ணியம் ஏது -என்ன –
உன் தன்னை -இத்யாதி –
எங்கள் குலத்தில் அவதரித்த உன்னையே புண்ணியமாக
அநந்ய சாதனரான யாம் உடையோம் –
குறை ஒன்றும் இல்லாத –
எங்கள் அபூர்த்தி ஆராயும்படியாயோ உன்னுடைய பூர்த்தி இருப்பது –
சர்வ நிரபேஷன் அன்றோ நீ என்று கருத்து –
கறைவைகள் இத்யாதி –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
இவ்வளவும் தங்கள் உடைய
ஆகிஞ்சன்யத்தையும்
அநந்ய கதித்வத்தையும்
உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும்
சொன்னார்கள் ஆய்த்து –
குறைவாளர்க்கு நிறைவாளர் குறை தீர்க்க வேணும்
என்கிற நிர்பந்தம் என் என்ன –
அதுவோ –
கோவிந்தா -உன் தன்னோடு உறவு –
எங்கள் குலத்தில் பிறந்த அசரண்ய சரண்யனான -உன் தன்னோடு –
அநந்ய சரண்யரான எங்களுக்கு –
உண்டான ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த நிர்பந்தம் -என்ன
அதுவோ ஒரு குட நீரோடு போகிறது என்ன –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால்
சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே
அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது –
பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –
க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது –
(விதி வாய்க்கின்றது காப்பார் யார் -கருணை பிரவாகம் தடுப்பார் யார்
யாவதாத்மபாவி ஸ்வாமி சொத்து சம்பந்தம் இருக்குமே)
சம்பந்த ஞான ரூபம் ஆகையாலே இதுக்கு விஸ்மிருதி இங்கே வரக் கூடாதோ என்ன
பிறந்த பின் மறந்திலேன் -என்கையாலே வரக் கூடாது
நீங்கள் நம்மை சிறு பேரிட்டு அழைத்தி கோள்
உங்கள் சிறுமை தீரும்படி -எங்கனே -என்ன
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
அறியாமையாலும்
பால்யத்தாலும்
பிரேமத்தாலும்
உன்னை சிறு பேராலே அழைத்தோமே யாகிலும்
சர்வஞ்ஞனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
பிரேம பரவசனான
நீ
சீறி அருளாது ஒழிய வேணும் –
இறைவா சீறி அருளாதே –
சீறினால் வரும் அநர்த்தம் உன்னது அன்றோ -(ஸ்வாமிக்குத் தானே பேறும் இழவும்)
ஆகையால்
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
நீ -தாராய் –அத் தலையில் குறை யன்றியிலே ஒழிய அமையும் இறே –
பேற்றுக்கு அத்வேஷம் இறே இத் தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம்
அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –
(பேற்றுக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டும்)
இறைவா-
வானோர் இறையை நினைத்தன்று –
ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –
(திருவாய்மொழி (1-5-1-)அருளிச் செய்த இறை அன்று -திருவிருத்தத்தில் -(61)- அருளிச் செய்த இறை)
(வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-)
(வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –)
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply