காரணத்தை மூன்று பாட்டில் விவரித்து
அத்தால் பலித்த முமுஷுத்வம்
அநிஷ்டம் போக்கி இஷ்ட பிரதானம்
ஸ்ரீ கஜேந்திர வ்ருத்தாந்தம்
புபுஷுக்களுக்கு உபாஸ்த்வம்
காளியனுக்கு அருளியதை -ஐஸ்வர்யார்த்தி -அத்தை மேலே விவரிப்பார் நான்கு பாடல்களில் –
தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-
பாம்புடைப் பல்லவர்-அரவம் கொடி இவனுக்கு -மீன் கொடி பாண்டியர்
பூம்புனல்-இவன் புனல் ஆகும் படி குதித்தான் –
—————————————————-
தூம்புடை இத்யாதி –
துளையை உடைத்தாய்
திண்ணிய கையை உடைத்தாய்
வலிதான தாளையும் உடைய
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு
ஜல சர தத்வத்தால் வந்த துக்கத்தைப் போக்கி-
அரவம் இத்யாதி –
காளியனானவன் ஒரு தடாகத்தை விஷத்தால் தூஷிக்க
அவன் அஞ்சி ஒடும்படியாக தான் அதிலே போய்ப் புக்கான் ஆயிற்று
தேம் பொழில் இத்யாதி –
தேனை உடைத்தான சுற்றில் சோலையும்
மலை போல் இருக்கிற மதிளையும் உடைய
தென்னவனான் அறிவு கேடும்படியாக
யுத்தத்தில் பெரிய ஆதாரத்தோடு சென்று கிட்டின-
பாம்புடை
நாக லோகத்தை வென்று
சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
அவன் பணித்த
————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply