ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ப்ரஹ்ம வாதிகள் பிரமாணங்கள் பலவும் உண்டே இவனே புருஷோத்தமன் என்று நிரூபிக்க –

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

கண்டானை-வேதாதிகளைப் ப்ரவர்த்திப்பித்து நாம் உஜ்ஜீவிக்க-சாஸ்த்ர வழியில் ஆஸ்ரயிக்க வைத்தானை

———————————————

வியாக்யானம் –

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருப்பாரைச் சொன்னபடி –
ஆயார் என்றது ஆனார் என்றபடி –
அவர்கள் ஜாமதக் ந்யஸ்ய ஜல்பத-என்கிறபடி
அடைவு கெட்டு ஏத்தும்படியான திருவடிகளை உடையவனை –
(ஜமதக்கினி-பரசுராமர் -நாரதர்- கிருஷ்ண த்வைபாயனர்-இத்யாதிகள் சொல்லக் கேட்டுள்ளோமே )

படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்-
நம்முடைமை ஒன்றும் தவர ஒண்ணாது என்று
தான் கொடு வந்து திருவடிகளை தலையிலே
வைத்த ஸ்வபாவத்தை உடைய நீர்மையில் தோற்று –
இனி நாமும் அவன் உகந்த அடிமை செய்து உளோம் ஆவோம் –
என்கிற இவ்வர்த்தத்தில் விண்டவன் உண்டு –
விண்டானை -தென்னிலங்கை யரக்கர் வேந்தை-
ந நமேயம் -என்று இருக்கிறவனை –
ஆளாய் உய்தல் விண்டார்க்கு எல்லாம் பிரபுவாய் இருக்கிறவனை-( யரக்கர் வேந்தை )

விலங்குண்ண –
அவனை நாயும் நரியும் கழுகும் பருந்தும்
பற்றி யிசிக்கும்படியாக –

வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –
பிரதிகூல நிரசனத்துக்கும்
அனுகூலருக்கு தர்ச நீயமாய் இருக்கைக்கும்
கையும் வில்லுமான  இருப்பே அமையும் –

பண்டாய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும் –
அபௌருஷேயமாகையாலே நித்தியமாய் –
நிர்தோஷமாய் பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சார்யமாணமான வேத அஷர ராசியும்
தன்னுடைய சமாதாரான ரூபமான வைதிக கர்மங்களுக்கு
உப லஷணங்களான பஞ்ச மஹா யஞ்ஞங்களும் –
இந்த வைதிக கிரியைகள் தன்னை சமாராதான ரூபம்
என்னும் இடத்தை சொல்லுகிற அங்கங்கள் ஆறும் –
கேள்வியாலே அனுசந்திக்கப் படுவதான-

கண்டானை –
சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான
வழியைக் கண்டு வைத்தவனை –

தொண்டனேன் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே –
அப் பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே
இக் கண்ணாலே காணப் பெற்றேன் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading