ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-8-
—————————————
வியாக்யானம் –
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல்-ஐவர் ஏவினார்
கலியார் என்கிறார் ஆயிற்று -கலி காலத்துக்கு அஞ்சினபடியாலே —
எங்கனே வாழுமாறு –
அவர் எங்கனே இனி ஜீவிக்கும்படி –
என் தான் –
ஏவிற்றாகில் நடந்தது என் என்னில் –
ஐவர் இத்யாதி –
மனஸ்க்கு சேஷமாய் -இந்த்ரியங்கள் அது போன வழியே இவை போகக்
கடவதாக இருக்க -அது தவிர்ந்து
இவை தான் இப்போது மனஸை சுமை எடுக்கத் தொடங்கிற்று ஆயிற்று –
இவை தான் நினைத்தபடி செய்யும் க்ரூரமான செயல்களை தெரிய விடுவித்தேன் –
ஆரைப் பற்றி தான் நீர் இவற்றை திரிய விடுவித்தது என் என்ன –
குறுங்குடி நெடும் கடல் வண்ணா-
திருக் குறுங்குடியில் ஸ்ரமஹரமான வடிவைக் கொடு வந்து
நீ சந்நிஹிதன் ஆகையாலே –
பாவினார் -இத்யாதி –
நல்ல சந்தஸ் ஸுக்கள் ஆர்ந்துள்ள இனிய சொற்களாகிய
பல மலர்களைக் கொண்டு
அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி
திருவடிகளிலே விழுந்து –
என் நாவினால் –
அனர்த்தங்களை விளைக்கைக்கு உறுப்பான வற்றையே
சொல்லிப் போந்த என் நாவாலே –
நைமி சாரணி யத்துள் எந்தாய்—
ஸ்துத்யனான நீ என்னுடைய ஸ்துதிக்கு
விஷய பூதனாய் கொண்டு
திரு நைமி சாரணி யத்துள் வந்து சந்நி ஹிதன் ஆனாய் –
——————————————————————– .
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply