ஏழு வயசில் பண்ணின அத்தைச் சொன்ன பின்பு பூதனா நிரசனம்
எதுகை மோனை
கிருஷ்ண வாமன -ஊராக நாடாக தீண்டின அவதாரங்கள் அன்றோ –
வருக வருக வாமன நம்பி
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6-
விழுது-வெண்ணெய்
வாயான் -வெண்ணெய் உண்ட வாயான் -இன்றும் வாசனை வீசும்
ஏயான்-பொருந்தாத
வியாக்யானம் –
தாயாய் இத்யாதி –
தாய் வடிவைக் கொண்டு வந்த பூதனை உடைய உயிரையும்
யசோதை பிராட்டியார் உடைய தயிரையும்
வெண்ணெயும் ஒக்க
அமுது செய்த திருப் பவளத்தை உடையவன் –
அநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்
பிரதிகூல பிராணனும் ஒக்க
தாரகமாக வளர்ந்தவன் –
தூய இத்யாதி –
கண் அழிவற்ற வாமன வேஷத்தை உடையனாய்
அம்புக்கு செல்லா விடத்தே
அழகாலே வசீகரிக்கும் படியான
வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று
(வாம -ஸூகம் -அழைத்து போமவன் வாமனன் -பட்டர்
கொண்ட கோல உருவம் -இவனே நினைத்தாலும் அது போலே மீண்டும் கொள்ள முடியாத வடிவம் )
ஏயான் இரப்ப –
ஸோ சஹச்ர ப்ரதாதாரம் -ஸ்ரீ ராமாயணம்
தத் யாந்ந ப்ரதி க்ருஹ்ணீயாத் -ஸ்ரீ ராமாயணம்-(பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்தது )
என்று இரப்புக்கு ஆகாத – தான் சென்று இரக்க
மா வலியை ஏயான் இரப்ப –
கொடேன் என்றே அபிசந்தி பண்ணி இருந்த அவன் பக்கலிலே – இரப்பன் -என்னவுமாம்
மூவடி மண் இப்போதே தர வேணும் என்று வேண்டிக் கொண்டு –
அநுமதி பண்ணின அநந்தரம்
மரு மனஸ் படுவதருக்கு முன்னே வளர்ந்து
லோகம் ஏழையும் அளந்து கொண்டு
தாயான் –
தாவினவன்
காயா மலர் வண்ணன்-
அவ்வடிவைக் கொண்டு ஆயிற்று
பூமியை அளந்தது –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply