அதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –
கர தூஷணாதிகள் வந்த காரணம் இது அன்றோ –
பஞ்சவடியில் மூவரும் மகிழ்ந்து இருக்க வந்தவள் சூர்ப்பணகை
கொல்லை அரக்கியை மூக்கரிந்த குமரனார் –
சக்ர தாரி -இங்கும் கோவர்த்தன உத்தாரணத்திலும் -உகந்தாருக்குத் தான் தானே காட்டி அருளுவான்-
கீழே சாளக்கிராமம் திருக்குடந்தை சேர்ந்து அனுபவம்
இதில் ராம கிருஷ்ண சேர்த்து அனுபவம் –
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-
வியாக்யானம் –
அடுத்து –
மேல் விழுந்து கிட்டி
ஆர்த்து எழுந்தாள் –
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
கிளர்ந்து வந்து தோற்றினவள் –
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்
கூர்மை கூரிய
திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்
விளங்கு இத்யாதி
கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-
நண்ணார் -இத்யாதி –
சத்ருக்கள் முன்பே
இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
(நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரத்தையும் அறியாதே
ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று
தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –
—————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply