ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-8-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே—-1-3-8-

———————————————

வியாக்யானம் –
ஈசி போமின் –
நடவும் -சீ சீ என்றபடி
போமின் -போகீர் என்பர்கள்
என்றவாறே இருக்கச் சொல்லிற்றாகக் கொண்டு இருக்கும் இறே பழைய வாசனையாலே –

ஈங்கு இரேன் மின் –
நீர் இருக்கிற இடம் தன்னை அறிந்திலரோ –
உமக்கு இங்குத்தை இருப்பில் ஓர் அந்வயம் இல்லை காணும் போம் என்பர்கள் –
என் தான் எனக்கு போக வேண்டுகிற ஹேது என் -என்னுமே –

இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும்-என்பர்கள்
இருமலாலே போர இளைத்தீர் -உம்மை அறிவீரே
இவர்கள் முன்னே இப்படி படுவோமே என்று எங்கள் சன்னதியை அனுசந்தித்து
ஹ்ருதயம்  கூசினீர் என்று சொல்லுகிற –

குவளை அம் கண்ணியர் பால் –
இவனுடைய எளிவரவு காண்கைக்காக சாதரமாகப் பார்ப்பார்கள் ஆயிற்று
அரு நஞ்சாகிலும் ஆகிறது -ஆரா அமுதாலும் ஆகிறது -இவர்களால் தாம் பார்க்கப் பெற்றோம் இறே
என்று இவனுடைய பாவ பந்தத்துக்கு உடலாய் இருக்கும் ஆயிற்று

நாசமான பாசம் விட்டு –
ஏதேனும் தசையிலும் இவனை விடாதே
விநாசத்தைப் பலிக்கும் படியான சங்கம் ஆயிற்று –
ஹேய விஷயத்தில் சங்கம் விநாசத்தைப் பலிக்கும் இறே –

நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –
அத்தை தவிர்ந்து நல் வழி போகப் பார்க்கில் –
தன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக
மாலை இட்டு இருக்கிற அவனதான வதரியை வணங்குதுமே
நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading