ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -277-288–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

வார்த்தை -277-
ஸ்ரீ வைஷ்ணவர்களை நெகிழ நினைத்தான் ஆகில் –
நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதாப் போலேயும் –
மலை முறிந்தால் தாங்க ஒண்ணாதாப் போலேயும் –
கடல் உடைந்தால் அடைக்க ஒண்ணாதாப் போலேயும்-
இதுவும்
அப்ரதி க்ரியமாய் இருப்பது ஓன்று –

————————————————————–

வார்த்தை -278-
நாட்டிலே இருந்து பெருமாளை சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம்
விஸ்லேஷ பீருக்களாய் போருகிறவர்கள் –
ஒருகால் ராக த்வேஷம் கொண்டாடி ஒருவன் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தேற வந்து மற்றவருடைய குற்றங்களை விண்ணப்பம் செய்ய

சேவித்து இருந்தவர்களில் சிலர் -அப்படி சொல்லலாமோ என்ன –

ஆச்சான் பிள்ளை –
அவர் சொல்லு கிடீர் தண்டல் படையினான யமன் -பரிஹரம் என்றான்
பிராட்டி- ந கச்சின் நாபராத்யாதி -யென்றாள் –
ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி –4-9-2-என்றான் –
ஆழ்வார்கள் -தமர் எவ்வினையர் ஆகிலும் – முதல் திருவந்தாதி -55-என்றார்கள் –
இப்படி இருக்க அவர் குற்றம் இவரை ஒழிய சொல்லுவார் யார் என்று அருளிச் செய்தார் –

(பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-14 -வெகுதூரம் விலகிப்போ
பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-ஸ்ரீ சீதாப்பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

———————————————–

வார்த்தை -279-

சோமாசி யாண்டானுக்கு அப்பிள்ளை (பட்டர் சிஷ்யர் இவர்) அருளிச் செய்தபடி –
ஆண்டான் தேவரீர் ஞான வ்ருத்தருமாய்  -வயோவ்ருத்தருமாய் -சீலவ்ருத்தருமாய் –
ஸ்ரீ பாஷ்யம் திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகராய் -எல்லாவற்றாலும்
பெரியவராய் இருந்தீர் -ஆகிலும்
சாத்தி இருக்கிற திருப் பரிவட்டத் தலையிலே பாகவத அபசார நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும் –என்று அருளிச் செய்தார் –

————————————————-

வார்த்தை -280-
எம்பெருமான் ஸ்வ விஷயத்தில் அபராதத்தை செய்யலாவது உண்டோ என்று பொறுக்கும்
பாகவத அபசாரமும் இவன்  சாபலத்தாலே வந்ததாகில் -சொல்லலாவதுண்டோ என்று பொறுக்கும் –
அசஹ்யா அபசாரம் ஒருபடியாலும் பொறான் –

சதாசார்யன் ஏறிட்டுக் கொள்ளும் ஆகில் அதுவும் பொறுக்கும் -இதுக்கு உதாஹரணம்
மயி த்வேஷ அனுபந்தோஸ் பூத் சம்ஸ்துதா வுத்யதே தவ -மத்பிதுஸ் தத் க்ருதம்
பாபம் தேவ தஸ்ய பிரணஸ்யது -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21- பிரஹலாதன் வார்த்தை -உன்னை ஸ்துதிப்பதால் என்னுடைய தந்தைக்கு நீண்ட காலம் த்வேஷம் ஏற்பட்டு இருந்தது -தேவனே அதனால் ஏற்பட்ட பாபம் நீங்கள் வேண்டும்) என்ன ஷமித்தான்-(ஹிரண்யன் சரீரம் போனாலும் அவன் செய்த பாப வினைகள் அவன் ஆத்மாவைப் பாதிக்கக் கூடாது -அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டான் -)-பிரகலாதன் வேண்டிக் கொண்ட படி ஷமித்தானே-கூரத் ஆழ்வான் பிரார்த்தித்த படி நாலூரானும் உய்ந்தானே

—————————————————–

வார்த்தை -281-

ஒருவனுக்கு பாகவத சேஷத்வம் ஸ்வரூபம்
பாகவத பிரசாதம் உபாயம்
பாகவத கைங்கர்யம் உபேயம்
பாகவத அபாசாரம் விரோதி
ஔபாதிக பாகவத விஷய ராகமும் -நிருபாதிக பாகவத த்வேஷமும்
ஒருவனுக்கு நிலை நின்ற தோஷம் –

(உபாதி -காரணம் நிமித்தமாக ராகமும் -காரணமே இல்லாமல் விரோதம் காட்டுவதும் நிலை நின்ற தோஷம்)

——————————————————-

வார்த்தை -282-
பிள்ளை வரம் தரும் பெருமாள் தாசர் வார்த்தை –
எம்பெருமான் வெறுக்கும் -மறக்கும் -பொறுக்கும் -ஒறுக்கும் –

பிரயோஜனாந்த பரரை கண்டவாறே நம்முடைய ரஷகத்வத்தை பறித்துக் கொண்டு போவதே என்று வெறுக்கும் –
தன்னளவிலே பண்ணின அபசாரத்தை மறக்கும் -(சர்வஞ்ஞன் தமது ஸத்ய ஸங்கல்பத்தால் இவற்றை மறக்கும்)
ஆஜ்ஞ்ஞாதி லங்கனத்தை பொறுக்கும் –
பாகவத அபசாரத்தை ஒறுக்கும் –

—————————————————————————————-

வார்த்தை -283-

நடாதூர் ஆழ்வான் (வரத விஷ்ணு -நடாதூர் அம்மாளின் பாட்டனார் -எம்பெருமானார் மருமகனார்)ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கையைப் பிடித்துக் கொண்டு போகா நிற்க
நடுவில் திருவீதியில் ஒரு திருக் குலத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அணுகி வர கைக் கொடுத்து
கொண்டு போகிற ஸ்ரீ வைஷ்ணவர்
அவரை ஜாதி நிரூபணம் பண்ணி -கடக்கப் போ – என்ன –

ஆழ்வான் அத்தைக் கேட்டு மூர்ச்சித்தார் –
மூர்ச்சை தெளிந்த பின்பு அருகு நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இது என் -என்ன –

திருக் குலத்தில் திரு வவதரித்து இரண்டு ஆற்றுக்கும் நடுவே வர்த்திகப் பெற்ற மஹானுபாவனா பறையன் –
நெடும்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்  திரிந்த நான் அன்றோ பறையன் -என்று அருளினார் –

—————————————————————————————

வார்த்தை -284-
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அடும் சோறு மூன்று -அடாச் சோறு மூன்று (அறுஞ்சோறு அறாச்சோறு என்றும் பாட பேதம் -ஜீரணமாகும் சோறு ஜீரணமாகாத சோறு என்றவாறு-அடுஞ்சோறு மூன்றையும் 286 வார்த்தையிலும் அடாச்சோறு இதிலும் அடுத்த வார்த்தையிலும் விவரிக்கிறார்-சமையாத சோறு ஜீரணமாகாமல் மனிதனை மரணம் அடையச் செய்வது போலே ஆத்மாவை நசிக்கச் செய்யும் என்று கருத்து -)

அடாச் சோறாவது -அனுகூலரை நெருக்கி ஜீவிக்கையும்
பிரதி கூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கையும் –
சாதனாந்தர புத்த்யா கைங்கர்யம் பண்ணி ஜீவிக்கையும்

அனுகூலரை நெருக்குகையாவது -சர்வேஸ்வரன் உயிர் நிலையிலே கோலிட்டடித்த மாத்ரம் –
ஆயர் கொழுந்தாய் –திருவாய்மொழி -1-7-3–
பத்தராவியை –பெரிய திருமொழி -7-10-1-/10-1-8–(ஞாநி து ஆத்மைவ மே மதம்–என்னது உன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோன்றும்)
நாஹமாத்மா ந மாசசே மத் பக்தைஸ் சாது பிரவிநா -மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உண்டாகையாலே –

இவ்வர்த்தத்தில் வடுக நம்பி வார்த்தை –
பகவத் அபசாரம் -எம்பெருமான் திருமேனியிலே தீங்கு நினைக்கை –
பாகவத அபசாரம் -அவன் திரு மார்பிலே -திருக் கண் மலரிலே -கோலிட்டடித்த மாத்ரம் –
யே பிரபன்னா மகாத்மாநஸ் தே மே நயன சம்பத –(மஹாத்மாக்களான ப்ரபன்னர்கள் எனக்குச் செல்வமான கண் போன்றவர்கள்)என்று உண்டாகையாலே –

இவ் வர்த்தத்தில் வானமாமலை யாண்டான் பணிக்கும் படி –
சாத்விகரை நெருக்குகையாவது -மிதுன போக்யமான ஸ்ரீ கௌஸ்துபத்தில் கரி இட்டுக் கீறின மாத்ரம்

வகுளாபரண சோமயாஜியார் -தெய்வ வாரி யாண்டானை -எம்பெருமான்
இங்கே வந்து அவதரிகைக்கு ஹேது என் என்ன –
பாகவத அபசாரம் பொறாமை என்றார் –
ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்க எம்பெருமான் நெஞ்சு உளுக்கும் –

பிரதிகூலர் பக்கல் சாபேஷன் ஆகையாவது -ராஜ மஹிஷி ராஜ சந்நிதியிலே அற்பன்
காற் கடையிலே நின்ற மாத்ரம் –

———————————————————

வார்த்தை -285-
த்ரிபுவன வீர தேவன் பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு –
நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போகீர் -என்று அபேஷிக்க –
பள்ளி கொள்கிறவர் கை மறுத்தால் உன்னுடைய வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –

இவ் வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் –
பெரிய ஜீயருக்கு(கூரநாராயண ஜீயருக்கு) நியஸ்த பரனானவன் உடுத்த புடைவைக்கு பிரதி கூலர் பக்கலிலே கஞ்சி அரிசி -சில -வேண்டி நிற்கையாவது –
படி பெற்று உண்ணும் பதி வ்ரதை  -மேல் அழிவுக்கு -பர பர்த்ரு ஸ்வீகாரம் பண்ணின மாத்ரம் -என்று அருளிச் செய்தார் –

சாதனா புத்த்யா கைங்கர்யமாவது –
பணி கொள்ளக் கூலி இன்றிக்கே பணி செய்து கூலி வேண்டுகை –

(போற்றும் பொருள் கேளாய் -ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்பும் ஆகும் செய்வேன் -கைங்கர்யம் கூடத்துக்கு கூலி கொடுக்க வேண்டுமே -கொடுத்துக் கொள்ளாமல் -இருக்க வேண்டுமே)

இவ் வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் கோபால ஜீயருக்கு அருளிச் செய்த வார்த்தை –
கைங்கர்யம் பண்ணி பலம் வேண்டுகை யாவது நாடும் ஊரும் அறிய
ஒருவனுக்கு கை கொடுத்த ஸ்திரீயானவள் தன் பர்த்தாவோடே ராத்ரி
சம்ஸ்லேஷித்து விடிந்தவாறே அதுக்கு கூலி தா வென்று அவனை மடி பிடித்து வளைத்த மாத்ரம் –

அது என் -கைங்கர்யம் பண்ணுமவனுக்கு ஜீவிக்க வேண்டாவோ -என்ன –

கொட்டை இட்டு பணி செய்யா நின்றால் -கொட்டின் வாய் தேய்ந்தால்
கொட்டுடையவன் இரும்பிட்டுக் கொள்ளும் இத்தனை யல்லது –
கொட்டு தானே இரும்பிட்டுக் கொள்ளக் கண்டிலோமே –

அப்படியே இவனைக் கைக் கொண்டு பணி கொள்ளும் அவனுக்கே அன்றோ
ஜீவனம் இடுகையும் பரமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –

(களைக்கொட்டு பூ பறிக்க உபயோகிப்பது -மழுங்கினால் -தானே சாணை இடுத்துக் கொள்ளாதே -அவனுக்காகவே ஆளாகி இருந்தால் -அசித்வத் பாரதந்தர்யமாக இருந்தால் பேணுவது அவன் பரமாகவே ஏறிட்டுக் கொள்வான் அன்றோ -இன்றும் பல திருக்கோயில்களில் ஒருவரே நிர்வாஹம் பண்ணுவதைப் பார்க்கிறோமே -அவனே பேணி கைங்கர்யம் வாங்கிக் கொள்கிறான் அன்றோ -)

———————————————-

வார்த்தை -286-
அடும் சோறாவன –
1-அனுகூலர் ஆதரத்தோடு இடுமதும் –
2-சிஷ்யன் இழவாளானாக கொடுக்குமதுவும் –
3-முஷ்டி புக்கு ஜீவிக்குமதும் –

இவ் வர்த்தத்தில் பிரபன்னர் அருளிச் செய்யும்படி –
போக்ய புத்தயா  கைங்கர்யம் பண்ணி ஜீவிக்குமதுவும் –
அனுகூலர் ஆதரத்தோடு கொடுக்குமதுவும் –
அவன் திருக்கை சிறப்பு –(அலம் புரிந்த நெடுங்கை அமரர் வேந்தன்)

ஸிஷ்யன் கொடுக்குமது கருவூலத்தார் கொடுக்கக் கொள்ளுகை –
முஷ்டி புகுந்தது அவன் பிறந்த (பிரித்த ) பேரளவிலே
தண்டிக் கொண்ட மாத்ரம் -அதிலும் பேர் இழிவிலே ப்ரீதி விஷாதம் பிறவாதோ என்ன –

பெறுவதும் ஒரு முஷ்டி இழப்பதும் ஒரு முஷ்டி யாகையாலே –
அப்போது உச்சரிக்கிற பகவத் நாமத்தோடே ஷமிக்கும் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

———————————————

வார்த்தை -287-

போஜன விரோதி யாவது –
ஒரு வைஷ்ணவன் ஆதரத்தோடே சோறிடப் புக்கால் உண்ணுமவன்
ஆஹார சௌஷ்டம் நிரூபிக்கையும் –
இடுமவன் இவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும் –

போஜ்ய விரோதியாவது -இட்டுக் கணக்கு எண்ணும் சோறு

ஸ்வரூப அனுரூபமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் –என்னது நான் இடுகிறேன் என்கிற போஜனத்தை தவிர்ந்து
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2-என்றும் –
நல்லதோர் சோறு -திருப் பல்லாண்டு -8-என்றும் –
உண்ணும் சோறு -திருவாய்மொழி -6-7-1-என்றும் இவற்றைப் புஜிக்கை –

————————————————–

வார்த்தை -288-
உடையவர் திருமலைக்கு எழுந்து அருளுகிற போது உத்தர நல்லூரிலே
எழுந்து அருளின அளவிலே –
வானமாமலை தாசர் என்று ஒரு கோபால ஸ்ரீ வைஷ்ணவர் -ஆய்க் குலத்தை சேர்த்தவர் –
பாலமுது காய்ச்சி கொண்டு வந்து உடையவருக்கு பாங்காக பரிமாற –
உடையவர் விரும்பி அமுது செய்ய –

மீண்டும் எழுந்து அருளுகிற போதும் அப்படியே பாங்காக கொண்டு வந்து பரிமாற –
இது நன்றாய் இருந்ததீ -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர் முன்பு விரும்பி அமுது செய்தவாறே இப்போதும் பாங்காக கொண்டு வந்தேன் -என்ன –

அங்கனேயோ -என்று ஒருநாள் உபவசித்து அருளினார் –

அஹங்காரம் த்வநிக்கையாலே எடுத்துக் கொண்டதுக்கு வருந்தி உபவாசம்
இருந்தார் என்று தாத்பர்யம்

(எம்பெருமானே உண்ணும் சோறு என்றும் இருக்கும் நாம் இத்தை விரும்பி உண்டேன் -என்று அவர் நினைக்கும் படி இதில் விருப்பம் வைத்தது அபசாரம் என்று திரு உள்ளம் பற்றி உபவாஸம் என்றுமாம்)

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply