ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -253-
அர்த்த லுப்தன் சம்சாரி
ஜ்ஞான லுப்தன் -ஸ்ரீ வைஷ்ணவன்
கைங்கர்ய லுப்தர் -முக்த நித்யர்
தாஸ்ய லுப்தர் -எம்பெருமான் –(வாஸூ தேவனே ஸர்வம் ஸூ துர்லபம் -ஆற்றங்கரைக் கிடைக்கும் கண்ணன்)
————————————————————————————
வார்த்தை -254-
பத்தன் தன்னை பிரகிருதி என்று இருக்கும்
விஷயீ தன்னை காமுகன் என்று இருக்கும்
கேவலன் தன்னை ஸ்வ தந்த்ரன் என்று இருக்கும்
சாஸ்த்ரி தன்னை சர்வஞ்ஞன் என்று இருக்கும்
கர்மீ தன்னை போக்தா என்று இருக்கும்
ஜ்ஞானி தன்னை வ்ரக்தன் என்று இருக்கும்
பக்திமான் தன்னை மோஷ சாதனன் என்று இருக்கும்
பிரபன்னன் தன்னை அசித் என்று இருக்கும் –(ஞானம் விபாகம் அஞ்ஞான தசை இது -முதலில் கேவல அஞ்ஞானி)
————————————————————————————-
வார்த்தை -255-
பக்தருக்கு சோறும் தண்ணீரும் தாரகம் -ஆஜ்ய ஷீராதிகள்(நெய் பால் போல்வன) போஷக த்ரவ்யம் –ஸ்ரக் சந்தநாதிகள் போக்கியம் –
முமுஷுவுக்கு ஜ்ஞானம் தாரகம் -ஆசார்ய வைபவம் போஷகம் —பகவத் குண அனுசந்தானம் போக்கியம் –
நித்ய முக்தருக்கு மிதுன அனுபவம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் —பகவன் முகோல்லாசம் போக்கியம்
(தாரகம்-வாழ் முதல் – போஷகம்-வளர் முதல் -போக்கியம்-மகிழ் முதல்)
———————————————————————————————
வார்த்தை -256
ஓர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே இரண்டு பேர் ஆஸ்ரயிக்க –
ஒருவர் ஜ்ஞாநாதிகராக ஒருவர் சம்பந்த மாத்ரமே யாய் இருப்பான் என் -என்னில்
பாபம் ஷீணம் ஆகாமை–அப்படியானால் ஆஸ்ரயிக்க கூடுமோ என்னில்
பாபம் தான் த்ரிவித மாகையாலே கூடும் -எங்கனே என்னில் -ஒரு ஸ்திரீக்கு மூன்று பிரதிபந்தகம் உண்டாமா போலே –அவையாவன -பாணி க்ரஹனம் பண்ண ஒட்டாத பாபமும்
பர்த்தாவோடு சம்ஸ்லேஷிக்க ஒட்டாத பாபமும் – புத்திரன் இன்றிகே இருக்கிற பாபமும் –
இவை பர்வ க்ரமத்தாலே போமா போலே அதிகாரிக்கும் சமர்பண விரோதி ஷயமும் -சாதன விரோதி ஷயமும் -ப்ராப்தி விரோதி ஷயமும் என்ற இவை மூன்றும் பர்வ க்ரமத்திலே போக வேண்டுமாகையாலே –
(இம் மூன்றும் ஆச்சார்யன் உபதேசம் -பகவத் பாகவத ஆச்சார்ய அபிமானம் முதலானவற்றை படிப்படியாக நீங்கும் -)
———————————————————————————————-
வார்த்தை -257-
வைஷ்ணவன் என்றும் -ஏகாந்தி என்றும் -பரமைகாந்தி என்றும் -ஆகாரம் மூன்று –
வைஷ்ணவன் ஆகிறான் -தேவதாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் சேஷத்வ ஜ்ஞானம் பிறந்தவன் –
ஏகாந்தி யாகிறான் -சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்த ஸாதனம் ஸ்வீகாரம் பண்ணினவன் –
பரமை காந்தி யாகிறான் -பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக பரம ப்ராப்ய ருசி பிறந்தவன் –
————————————————————————————————-
வார்த்தை -258-
வைஷ்ணவன் அக்ருத்யத்தை பாபம் என்று தவிரும் –
ஏகாந்தி அக்ருத்யத்தை ஸ்வரூப ஹானி என்று தவிரும் –
பரமை காந்தி அக்ருத்யத்தை ருசி இல்லாமையாலே தவிரும் –
அன்னமென்ன நடையினார் கலவியை அருவருத்த அஞ்சினாயேல் -பெரிய திருமொழி -9-7-2-என்னக் கடவது இறே –
மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-2-
————————————————————————————————-
வார்த்தை -259-
வைஷ்ணவன் க்ருத்யத்தை அதிகாரி சம்பத்திக்காக செய்யும் –
ஏகாந்தி க்ருத்யத்தை லோக சங்க்ரஹதயா கர்த்தவ்யம் என்று செய்யும் –
பரமை காந்தி க்ருத்யத்தை கிருபையாலே செய்யும் –
————————————————————————————————
வார்த்தை -260-
வைஷ்ணவன் கைங்கர்யத்தை சாதனம் என்று செய்யும் –
ஏகாந்தி கைங்கர்யத்தை கால ஷேபம் என்று செய்யும் –
பரமை காந்தி கைங்கர்யத்தை ராக ப்ராப்தி என்று செய்யும் –
————————————————————————————————
வார்த்தை -261-
சாந்தனுக்கு சத்வோத்ரேக ஹேது -சத்வோத்தரருடைய சரீராஹார நிரூபணம் பண்ணி சருகு திரட்டாத சம்யக் ஜ்ஞான நிஷ்டை –
ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்வ வர்ண அநு கூலமான ஸூஹ்ருத் தர்சனமே சர்வ அபேஷிதம் –
ஸ்வ ரஷணத்துக்கு பரேச்ச (ஈஸ்வர இச்சா)அநுகூலமான ஸ்வ சேஷத்வமே ஸ்வரூப உபாய உக்தம் —(நின் அருளே பார்த்து இருப்பேனே)
சத்வஸ்தனுக்கு ஸ லஷ்மீகாநுபவ சாதனம் சத்வஸ்த விஷய லஷ்மீகத சம்பந்த ஸார ஜ்ஞானமே -(புருஷகாரம் பண்ணுவிப்பவள் பிராட்டி சம்பந்த ஞானமே போதும்)
————————————————————————————————-
வார்த்தை -262-
சாந்தன் ஆகிறான் சதுர்வித அஹங்காரம் கழித்தவன் -அவை யாவன-1- தேகத்தில் அஹங்காரமும் – 2-ஸ்வரூபத்தில் அஹங்காரமும் – 3-உபாயத்தில் அஹங்காரமும் – 4-உபேயத்தில் அஹங்காரமும் –
தேகத்தில் அஹங்காரம் ஆவது -தேகத்தை தானாக நினைக்கையும் –
தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி பண்ணுகையும் –
தேகாந்தர அனுபவத்தில் புருஷார்த்த புத்தி பண்ணுகையும் –
——————————————————————————————–
வார்த்தை -263-
இது (தேகத்தில் அஹங்காரம்)கழிகை யாவது தேகத்தில் ஆத்ம புத்தி நிவ்ருத்தியும் -தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தி நிவ்ருத்தியும்-தேஹாந்தர அனுபவத்தில் புருஷார்த்த நிவ்ருத்தியும் –
ஸ்வரூபத்தில் அஹங்காரம் ஆவது -தேஹத்தை அண்டை கொண்டு ஸ்வரூபத்தை உறுமுதல் –ஸ்வரூபத்தை அண்டை கொண்டு தேகத்தை உறுமுதல் செய்கை(இவன் கேவலன்) –
இது கழிகையாவது -அவன் வடிவே வடிவாகையாலே பர ஸ்வரூபத்துக்கு உள்ளே ஸ்வ ஸ்வரூபம் விளங்குகை -(இருவரும் ஞானானந்த வடிவு தானே -இது அஹங்கார கர்ப்பமாகக் கூடாது – அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே)
உபாயத்தில் அஹங்காரம் ஆவது -ஸ்வகத ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணுகை –
இது கழிகையாவது -ஸ்வகத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத ஸ்வீகாரத்துக்கு விஷயனாகை –
உபேயத்தில் அஹங்காரம் ஆவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை
இது கழிகையாவது -தன் கையாலே தன் மகிரை வகிர்ந்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி கொண்டாட வேண்டாதாப் போலே-அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் -என்று இருக்கை .
———————————————————————————————
வார்த்தை -264-
பத்தன் அவித்யாதீநன்
சாஸ்த்ரி புண்ய பாபாதீநன்
கேவலன் ஸ்வ ஸ்வரூப அதீநன்
முமுஷு (பகவல்லாபார்த்தி இங்கு-சாதனாந்தர நிஷ்டன் -கீழே ப்ரபன்னனான் உள்ளபடியால்)பகவததீநன்
பிரபன்னன் ஆசார்ய அதீநன்
பிரபத்தி நிஷ்டன்(உறுதி குலையாமல் மஹா விஸ்வாஸம் கொண்டவன் -பாகவத அபிமானத்தில் ஒதுங்கியவன்) ததீய அதீநன் .
(அதீனன் அடக்கியவன் என்றும் அபிமானத்தில் ஒதுங்கினவன் என்றும்)
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply