ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -217-
சிஷ்யன் ஆசார்ய விஷயத்தில் அர்த்த முகத்தாலே (செல்வம் சமர்ப்பித்து)பிரதிபத்தி பண்ணும் இடத்து –அப்போது அங்குத்தைக்கும் அடி உண்டு இல்லை என்று நிரூபிக்க கடவன் அல்லன் –தன் சரீர தாரணத்தோ பாதியாகிலும் அங்குத்தைக்கு அம் முகங்களாலே ப்ரீதி பண்ணுகை ஸ்வரூபம்-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
————————————————————————————-
வார்த்தை -218-
நஞ்சீயர் பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாக தோளிலே தண்டை வைக்கப் புக –
உம்முடைய வேஷத்துக்கு விருத்தமாக செய்யலாகாது காணும் -என்று பட்டர் அருளிச் செய்ய –
இங்குத்தை கைங்கர்யத்துக்கு ஏகாந்தம் என்று வேஷ பரிக்ரஹம் பண்ணினேன் –
இது தானே இதுக்கு விரோதி யாகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் -என்றார் –
——————————————————————————————-
வார்த்தை -219-
வைஷ்ணவனுக்கு கரண த்ரயத்தாலும் கால ஷேபம் ஏது என்னில் –
ஆசார்ய கைங்கர்யம் – பகவத் கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் –
இவை மூன்றும் தன்னில் ஒக்குமோ -என்னில்
ஸ்வரூபத்தை உணர்ந்தவன்-ஆசார்ய கைங்கர்யமே பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் என்று இருக்கும் –
ப்ரபாவஜ்ஞன் -(சர்வேஸ்வரனுடைய பெருமையை மட்டுமே உணர்ந்தவன் )-பகவத் கைங்கர்யமே பிரதானம் என்று இருக்கும் –
உபயத்திலும் உணர்வு இல்லாதான் -(உபாய உபேய யாதாம்ய ஞானம் இல்லாதவன்) -மூன்றையும் தத் சமம் என்று இருப்பான் –
(பகவத் கைங்கர்யத்தை விட பகவான் உகக்கும் ஆச்சார்யர் கைங்கர்யமே ஸ்ரேஷ்டம் என்றும் ஆச்சார்யர் உகந்த பாகவத கைங்கர்யம் அதிலும் ஸ்ரேஷ்டம் என்றவாறு)
———————————————————————————————
வார்த்தை -220-
எல்லா ஆசார்யர்கள் உடைய அபிப்ராயமும் -எல்லா ஆழ்வார்கள் திரு உள்ளக் கருத்தும் – எல்லா வேதங்களுடைய கதியும் –எல்லா சாஸ்திரங்கள் உடைய நினைவும்- நிரூபித்த அளவில் –
ஆசார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனம் -என்று நஞ்சீயர் நம் பிள்ளைக்கு அருளிச் செய்தார் என்று வடக்கு திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர் –
(உண்ட போது ஒருவார்த்தை உண்ணாத பொது ஒருவார்த்தை -அல்லாமல் மதுரகவி நிலைப்படியே நிற்போம் -பெருமாளும் கிம் குரு -விசுவாமித்திரர் சொற்படியே நடந்து காட்டி –சத்ருக்னன் நிஷ்டை –வடுக நம்பி நிஷ்டை – ஆதி ஜட பரதர் -ஸ்ரீ பாத தூளியே பரம பாவனத்வம்-)
————————————————————————————————
வார்த்தை -221-
ஆசார்ய கைங்கர்யம் -தனக்கு பசி விளைந்து உண்ணுகை -(பரம போக்யம்-)
பாகவத கைங்கர்யம் தாய்க்கு சோறு இடுகை -(விலக்க ஒண்ணாத கடமை -)
பகவத் கைங்கர்யம் -ஒப்பூண் உண்ணுகையும் -(பலரில் ஒருவனாக உண்கை -)
மூப்புக்கு சோறு இடுகையும் –(வயசான ஏழை எளியவர்களுக்கு சோறு இடுகை –)
என்று வடுக நம்பி அருளிச் செய்வர் –
————————————————————————————————-
வார்த்தை -222
ஆச்சான் பிள்ளை தேவியார் -மடத்தில் பிள்ளையோடே (பெரியவாச்சான் பிள்ளை மடத்தை நிர்வகிக்கும் சிஷ்யனுடன்)பிணங்கி -வாரு கோலே போய்க் கிட – என்ன –
மடத்தில் பிள்ளையும் -வாழும் மடத்துக்கு ஒரு வாரு கோலும் வேணும் காணும் – இவ் வார்கோல் தலைக் கடையை விளக்கி – (பஹிரங்க கைங்கர்யம் செய்து-சென்றால் குடையாம் போல்)-திண்ணையிலே கிடக்கவோ –திருப் பள்ளி யறையை விளக்கி -(அந்தரங்க கைங்கர்யம் செய்து-புல்கும் அணையாம் போல்) -உள்ளே கிடக்கவோ -என்று விண்ணப்பம் செய்தார் –
———————————————————————————————–
வார்த்தை -223-
பகவத் பிரசாதம் பகவத் ருசியைப் பிறப்பிக்கும்–
பகவத் ருசி ஆசார்ய அங்கீகாரத்தை பிறப்பிக்கும்–
ஆசார்ய அங்கீகாரம் ஸ்வீகார ஞானத்தை பிறப்பிக்கும் –(எம்பெருமானை உபாயமாக பற்றும் அறிவு )- ஸ்வீகார ஞானம் பகவத் ப்ராப்தியை பிறப்பிக்கும்-
பகவத் ப்ராப்தி தத் கைங்கர்யத்தை பிறப்பிக்கும்-
தத் கைங்கர்யம் ததீய கைங்கர்யத்தை பிறப்பிக்கும் –
(திருக்கோயில்களில் பிரசாதம் ஏற்பாடும் இதற்காகவே தானே -பிரசாதம் அருள் என்றும் தளிகை பிரசாதமும் -)
———————————————————————————————-
வார்த்தை -224-
உடையவர் அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
ஒருவன் பிரபன்னன் ஆனால் – அவனுடைய தேக யாத்ரை கர்ம ஆதீனம் ஆகையாலே -கரைய வேண்டா –கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆம் இத்தனை –
ஆத்ம யாத்ரை பகவத் ஆதீனம் ஆகையாலே அதில் தனக்கு அந்வயம் இல்லை –
உண்டு என்று இருந்தான் ஆகில் -ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை –
ஆகையால் உபய யாத்ரையும் கொண்டு அந்வயம் இல்லை –
ஆகையால் கரண த்ரயங்களையும் கொண்டு வேண்டிற்று செய்து திரியவோ -என்னில் -அது ஸ்வரூபம் அன்று –இனி உபாயாந்தரத்தில் அந்வயம் இல்லா விட்டால் ப்ராப்யமான கைங்கர்யத்தில் அந்வயிக்கும் இத்தனை –
(சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-)
இங்கே இருக்கும் நாள் செய்யும் கைங்கர்யம் ஆறு -அவை யாவன –
1-நீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிக்கவும் -அதுவும் மாட்டிற்று ஆகில்
2-அருளிச் செயலை ஓதி ஓதுவிக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
3-உகந்து அருளின திவ்ய தேசங்களிலே அமுதுபடி சாத்துப்படி ஆராய்ந்து போரவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
4-திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டி இருக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
5-த்வயத்தின் அர்த்த அனுசந்தானம் பண்ணவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
6-என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் அபிமாநத்திலே ஒதுங்கி இருக்கவும் –
(நாரதர் தமது பூர்வ ஜென்மத்தில் ரிஷிகளுக்கு கைங்கர்யம் செய்து சேஷம் உண்டு பெற்றத்தால் கிடைத்த பேறு என்றார் அன்றோ)
இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவது மூன்று விஷயங்கள் உண்டு –
அவர்கள் ஆர் என்னில் –
அநு கூலரும் -பிரதி கூலரும் -அநு பயரும் –
இதில் அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதி கூலர் ஆவர் பகவத் த்விட்டுக்கள் -எம்பெருமானை த்வேஷிப்பவர்கள் –
அநு பயர் ஆவார் சம்சாரிகள்
இதில் அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -சந்தன குஸும தாம்பூலாதிகளைப் போலவும் – நிலாத் தென்றல் சந்தனம் போலேயும் –அபிமத விஷயம் போலேயும் -உகந்து வர்திப்பான் –
பகவத் த்விட்டுக்களைக் கண்டால் சர்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான் –
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே (கல் மண் கட்டைகளைப் போல்)உபேஷித்து வர்த்திப்பான்
இப்படி வர்த்திக்க ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம ப்ராவண்யம்
அர்த்த காமம் அடியாக அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமானம் பண்ணினால் –
ராஜ புத்ரனை அவமானம் பண்ணினால் ராஜ ஹ்ருதயம் புண் படுமா போலே தத் த்வாரா (ராஜாதி ராஜ ஸர்வேஸ்வரனான)எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் –
பிரதி கூலரான பகவத் த்விட்டுகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் -ராஜா சார்வ பௌமனாய் இருக்க – ராஜ மஹிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கலிலே மடிப் பிச்சை புக்கால் ராஜாவுக்கு அவத்யமாம் போலே- எம்பெருமானுக்கு அவத்யமாய் –தத் த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் –
அநு பயரான சம்சாரிகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாரைப் போலே நமக்கும் பிறர்க்கும் வாசி அறிந்திலன் -இவனுக்கு பிறந்த ஞானம் கார்ய கரமாக பெற்றிலோமே என்று இவன் அளவில் ஈஸ்வரன் உதாசீனனாய் போரும் –
——————————————————————————————-
வார்த்தை -225-
முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை
பிரபன்னன் யாவச் சரீரம் கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில்
தேகத்தில் ஆத்ம புத்தி தவிர்கையும்-தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி தவிர்கையும் – தேகாத்பரனான ஆத்மாவை தானாக நினைத்து இருக்கையும் -ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இருக்கையும் –
பாரதந்த்ர்யத்துக்கு எல்லை ஏது எனில் -ததீய சேஷத்வ பர்யந்தம் என்று இருக்கையும் ,
உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் கரண த்ரயத்தாலும் ஆனவளவும் அநு கூலராய் போரவும் -வருந்தியும் பிரதி கூல்யம் தவிரவும் (தவிர்க்க வேண்டியவை முக்கியம் -வருந்தியும் செய்ய வேண்டும் -ஆந்தனையும் கைகாட்டி ஆனவளாவும் அனுகூலராய் போக வேண்டுமே)
ஆசார்ய ருசி பரி க்ருஹீதமான த்வயார்தம் நெஞ்சில் பட அனுசந்திக்கையும் –
உகந்து அருளின நிலங்களிலே பலகாலம் புக்கு முகம் காட்டவும் –
அருளிச் செயலைக் கொண்டு போது போக்கையும் –
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தாலே ஷூந் நிவ்ருத்தி மாத்ரத்திலே பர்யாப்தி பிறக்கவும் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி பூர்வகமாக சம்சார பீதனாகையும் -பரதேவதா -பரனான பெருமாள் இடம் – பிரதிபத்தியும்-பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்யத்தில் ருசியும் -சாதனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாய வ்யவஸ்தையும் –
இவை இத்தனையும் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீ காரத்தாலும் ஸித்திக்கும் என்று அத்யவசித்து இருக்கையும் –ஆசார்ய சந்நிதி இல்லாத போது விடாய்த்தவன் தண்ணீர் பெற்றான் ஆகிலோ என்னுமா போலே யிருக்கவும் – பகவத் சந்நிதி இல்லாதபோது நடு வழியிலே பசித்தவன் ஊரைச் சேரப் போமா போலே இருக்கவும் –
இவ் வதிகாரிக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஜாதமான பிரஜைக்கு தாய் முலைப் பாலைப் போலே –
எம்பெருமானுடைய தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போலே –
ஆழ்வார்கள் அருளிச் செயல் அமிர்த பானம் போலே –
சாமான்ய சாஸ்திர ஸ்ரவணம் அநபிமத போஜனம் போலே
விவித பலங்களான நாநாவித பகவத் மந்திர ஜபாதிகள் வாஸனா பலத்தாலே வந்ததாகில் சம்சார தர்ம அனுவர்தனம் போலே –
த்வயர்த்த அனுசந்தானம் ப்ராப்ய தேச வாஸ ஸூக சமானம் என்னலாம் இத்தனை இறே -மற்றுச் சொல்லலாவது இல்லை –
———————————————————————————————-
வார்த்தை -226-
ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் -என்னில் -த்ருஷ்டத்திலே கர்மாதீனம் –
அங்கு ஏதேனும் சுருங்கிற்று உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது எம்பெருமானைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – எம்பெருமானை வெறுத்தோம் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் .
(த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்-த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –வார்த்தை -104
(தேஹ யாத்ரையாய் பெரிய பெருமாள் பொறுப்பு -ஆத்மயாத்ரை ஆச்சார்யர் பொறுப்பு என்றும் இருக்க வேண்டும் -தேஹ யாத்திரையில் கர்மம் அனுகுணமாக குறைகள் ஏற்படுவதற்கு ஆச்சார்யர் ஹேதுவாக மாட்டாரே -தேஹ யாத்திரையும் ஆச்சார்யர் என்றும் நினைப்பவனுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படலாம் -ஆச்சார்யராக வெறுத்தவனுக்கு பெருமாள் கை கொடுக்க மாட்டார்-பெருமாளை வெறுத்தால் ஆச்சார்யர் புருஷகாரம் செய்து கோபத்தை தணித்து கதி அருளப் பண்ணுவார் என்பதே இவ் வார்த்தையின் கருத்து -)
——————————————————————————————–
வார்த்தை -227-
எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரோடே பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அனர்த்தப் பட ஒண்ணாது என்று பெருமாள் திருவடிகளில் எழுந்து அருளி நிற்கச் செய்தே -அவனும் அங்கே
சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யம் இல்லை -நான் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள்
இவ்வாத்மாவுக்கு தஞ்சமாய் இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை -என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து
சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டரானார் –
(எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று –
பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அவனும் அங்கே சந்நிஹிதனாக –
வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் –
இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் –அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் -நூற்றஞ்சாம் வார்த்தை–)
——————————————————————————————-
வார்த்தை -228-
பட்டர் -த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ –என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அனுசந்திகைக்கு குறை இல்லை -ஆகிலும் இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறு ஒரு பாசுரத்துக்கு சுரவாது -என்று அருளிச் செய்தார் –
(பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ – என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –அதுக்கு குறை இல்லை –ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –-நூற்று ஆறாம் வார்த்தை)
———————————————————–——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply