திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சோதி ஆகி,எல் லாஉல கும்தொழும்
ஆதி மூர்த்திஎன் றால்அளவு ஆகுமோ,
வேதி யர்முழு வேதத்து அமுதத்தைத்
தீதுஇல் சீர்த்திரு வேங்கடத் தானையே?

    பொ-ரை : ‘வேதங்களையறிந்த அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற அமிர்தம் போன்ற இனிமையையுடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பேரொளியுருவனாகி எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற வடிவையுடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ?’ என்கிறார். ‘ஆகாது’ என்றபடி.

    வி-கு : ‘சோதியாகி’ என்பதிலுள்ள ‘ஆகி’ என்னுமெச்சத்தை ‘இருக்கின்ற’ என்னும் வினையைக்கொணர்ந்து அதனோடு முடிக்க. அன்றி, எச்சத் திரிபாகக் கோடலுமாம்; ‘சோதியாகத் தொழப்படுகின்ற ஆதிமூர்த்தி’ என்க. ‘ஆகுமோ’ என்பதிலுள்ள ஓகாரம், எதிர்மறை.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘நித்தியசூரிகளுக்கும் தன்னைத் தந்தான் என்றது ஓர் ஏற்றமோ எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு!’

என்றார் மேல் பாசுரத்தில்; 1‘எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே இருக்கிறவனுக்கு?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    சோதியாகி – தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய். 2‘வன்மையுள்ள பேரொளிகளின் கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். 3‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும், நீவாரதானியத்தின் வால் போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால், அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ என்பது உபநிடதம்.. இதனால், சிரமத்தைப் போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப் போக்கும் வடிவு தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும். இத்தால், ‘ஒன்றையொன்று விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி. ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி, ‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும் கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின், இவரும் ‘சோதியாகி’ என்கிறார். எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவாகுமோ – இப்படிச்சொன்னால்தான்அவனுக்கு ஏற்றமாகப் போருமோ! ‘ஆயின், ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ?’ என்பதற்கு, முன்னர் ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி’ என்றாரோ?’ என்றது, என் சொல்லியவாறோ?’ எனில், ‘எண்ணில் தொல்புகழ் வானவ ரீசன்’ என்றவர், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்று அதனையே பின்னும் கூறியது போன்று, இங்கும் அவ்வாறு சொன்னாரோ?’ என்னில் என்றபடி. 1விழுக்காட்டாலே சொன்னார். ‘எங்ஙனே?’ என்னில், மேல், தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரேயன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்; மிகத்தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்; ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், ‘கீழ்ப்படி மூழ்கினமை’ சொல்ல வேண்டா அன்றே? 2‘கிருஷ்ணனிடத்தில் பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம் என்ற நினைவினைச் செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார். 3‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத் தக்கதான

பிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன, 1எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது. ‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, 2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும், 3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.

    இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர், 4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார் மேல்; வேதியர் முழு வேதத்து அமுதத்தை – 5‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே, வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை. 6‘பிரஹ்மம் ஆனந்தமானது’, 7‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய் இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள். இனி,எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 2‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும், 3‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’ என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல். தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை – குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது, ‘அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.

    ‘நன்று; மேல், 4‘எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில் ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்; அதைப்போன்று, ‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில் ஏற்றம் யாது?’ எனின், ‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு, 5‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க. இனி, பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக் குற்றமாமாதலின், ‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்; 1‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.

ஆதிமூர்த்தியாகையாலே – காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும்
தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார், ‘பிரஹ்மம்
அறியத் தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர்
மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை
அநுசந்திக்கையாவது, ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’
என்றருளிச்செய்தாராம், ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை
பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’
என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக்
குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.
இம்மணிமொழிகளை இங்கு நினைவு கூர்க.

வேதியர் முழுவேதத்து அமுதத்தை’ என்பதற்கு இரண்டு வகையில்
பொருள் அருளிச்செய்கிறார்: முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது
குணத்தில் இனிமை.

லோகத்தின் பொருள் முற்றும் வருமாறு :- ‘பிராஹ்மணன் பெற்றதற்கு
மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே, க்ஷத்திரியன் பெற்றதைக்
கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்; பொதுமகள்
நாணத்தையுடையவளாயின் நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை
விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது,

என்னிலும் தாழ நின்றவரை தேடி நிற்கிறவன்
மேலே சொல்கிறார் -த்வயத்தின் உத்தர வாக்ய விவரணம் இந்த திருவாய்மொழி –
இரண்டும் திருவேம்கடமுடையான் பற்றியே -ஒழிவில் -உலகம்
எனக்கு தன்னைத் தந்தான் என்பதுவும் ஏற்றமோ
என்னில் தாழ நின்றவர்களை தேடித் திரிகிறானே
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடரே -என்றார் முன்னம்
தாழ நின்றவர் கிடைக்காமல் என்னிடம் நின்று இதுவே பரத்வம் வேதியர் -வேதம் -பிராமணனாம் தனம் வேதம்
சோதியாகி எல்லா உலகும் தொழும் அதி மூர்த்தி -எனபது பெருமையோ –
தீதில் சீர் திருவேம்கடத்தான்
சோதியாகி நிரவதிக தேஜோ ரூபனாகி நீல தோயாத  மதயஸ்தா என்று நிற்க செய்தே
பீதபாக மஞ்சளாக பிரகாசிக்கும்
தேஜஸ் முட்டாக்கி இட்டு -பனி போர்வை சாத்தி இராப்பத்து திரு வல்லிக்கேணி -அனுபவம்
புகர் -முட்டாக்கு போட்டு காட்டும் -பிராட்டி தேஜஸ் முட்டாக்கு இட
திருக்கண்டேன் –அருக்கன் அணி நிறம் -அவள் தேஜஸ் சொல்லி பின்பு அவன் தேஜஸ்
இளித்துக் கொண்டு ஒன்றை ஓன்று விடாதே இரண்டும் நிரபேஷம்
நீலம் உள்ள மின்னனைய திருமேனி -ஆழ்வார்
விக்ரகம் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் -தேஜஸ் சாம் ராசி மூர்ஜிதம்
திருமேனி தேஜஸ் ஒன்றை ஓன்று அனுபவித்து நெய் தினிந்தது போலே
கருப்புக்கட்டி -சோதியாகி அர்த்தம் -தேஜஸே வடிவு எடுத்து
எல்லா உலகும் தொழும் -இது ஏற்றமோ எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் சொல்லி அது தேசமோ முன்பு அருளி –
ஐந்தாம் பாட்டில் அது அளவாகுமோ -எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி சொல்ல வில்லையே முன்பு -என்று கேள்வி வருவதாக கொண்டு –

விழுக்காட்டாலே சொன்னார் –ஸ்பஷ்டமாக சொல்ல வில்லை
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -தான் தொழுத பொழுதே எல்லா உலகும் விழுக்காட்டாலே
மறை முகமாக எல்லா உலகும் தொழும் என்பதை சொல்லிற்று ஆயிற்று எல்லா வற்றுக்கும்  மேல் படி அமிழ்ந்தது என்றால் கீழ் படி அமிழ்ந்தது சொல்ல வேண்டாம் இ றே –
தொழும் -சங்கல்பித்து கிடந்தார்களும் -பார்த்தால் தொழ வைக்கும் -ஈர்க்கும் சாமர்த்தியம் –
கண்ணபிரான் தூது -ஆசனம் இருந்த துரி யோதனன் தானே எழுந்து -யாரும் எழக் கூடாது
உத்தரவு பிறப்பிக்க -கண்ணன் வரும் முன் தேஜஸ் முன் வர -அவன் எழுந்ததும் அனைவரும் எழ -தன்னை பின்பு உணர்ந்தான் –

தேஜஸ் தொழும் படி -எழல உற்று மீண்டே இருந்து நோக்கும் துரி யோதனன் –

சேவிக்க மாட்டேன் என்பாரும் சேவிக்க
பிரம சூத்திரம் -பிரமத்தை பற்றிய விசாரம்
ஜென்மாதி -ஜகத் கரணம் லஷணம் -அறியப்பட வேண்டிய பிரமத்துக்கு
எல்லா உலகும் தொழும் -ஆதி மூர்த்தி சப்தம் உடனே சொல்லி
வருணன் உடைய ப்ருகு பிள்ளை -வருணன் இடம் கேட்டு -ஆஸ்ரேயன வஸ்து
உண்டாக்கி ரஷித்து லயித்து -காரணத்வம் அடையாளம் –
யோ ப்ரமாணாம் முமுஷுவை சரணம் அஹம் -அங்கும் ஜகத் காரண வஸ்து சரண்
தொழ வேண்டியது ஆதி மூர்த்தி வேதம் தமிழ் செய்த மாறன் ஆஸ்ரயேன வஸ்து –
அளவாகுமோ -சொல்லி விட்டு -தொழும் -எதோ வாசே நிவர்த்தந்தே
வேதியர் -செல்வம் வேதம் -அமிர்தம் -ஸ்ரீ -வேத தனரான பிராமணர்
போக்யதா -முழு வேதத்து அமுதத்தை -எல்லா வேத பாகமும்
சர்வே வேதாகா -யத்ர  ஏக -வேதைகி சர்வைகி அஹம் ஏவ வேத்ய -கீதை

வேதமே பிரமாணம் சாஸ்திர யோநித்வா சாஸ்த்ரம் ஒன்றாலே அறியப்படுபவன்
வேதம் சர்வைகி ஏவ எல்லா வேதங்களாலும் சொல்லப் படுபவன்
அஹம் ஏவ நானே
அஹம் வேத்ய ஏவ -தெரிவிக்க பட்டே தீரும்
ஆனந்தோ பிரம -அமுதம் -ரசோவை -தத –
வேதத்தை வேதத்தின் சுவை பயனை –
தீதில் சீர் -குற்றம் அற்ற குணங்களை உடையவன் இன்னார் ஆவார் இன்னார் ஆக மாட்டார்
பரிவதில் ஈசன் -குறை இல்லான்-அங்கேயே அருளி -சப்தம் இல்லை அர்த்தம் உண்டே -அதை விட பெருமை -எல்லா உலகும் தொழும்
என் கண் பாசம் வாய்த்த ஏற்றம் சொன்னோம் –
தீதில் சீர் என்றது ஏற்றம் -வாசி இன்றி -என்பதால் –
என்னில் தாழ்ந்தாரை தேடி கிடையாமல் பட்டினி விட்டு –
எதிவா ராமயா -சுமந்த்ரன் நின்று பார்த்து -திருப்பி வருவாரோ நைப்பாசை எதிர்பார்ப்பு
எம்பெருமானும் எதிர்பார்த்து அவசர ப்ரதீஷனாய் இருப்பவன்
காணாமல் நிற்கிறான்
குற்றத்தை குணமாக கொண்டு -இதை விட குற்றம் செய்தவரை தேடி
ரஷகனுக்கு ரஷத்திது போதும் என்ற எண்ணம் குற்றம் ரஷ்ய வர்க்கம் போதும் என்பதே குற்றம்

-சுபாஷித ஸ்லோகம் -அசந்துஷ்ட திருப்தி அடையாத பிராமணன் -த்ருப்தொச்மி சொல்லி -சந்துஷ்ட சத்ரியன்நஷ்ட -போதும் நினைத்தால் நஷ்டம் –

சீருக்கு தீது ஆஸ்ரித குண அகுண நிரூபணம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading