திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- சிற்றம் சிறு காலே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் திரு மகளார்

எம்மா வீடு தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
அவன் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம் சரம தசை -அடியவர் பாகவதர் விஷயத்திலும் இப்படி –
நெடுமாற்கு அடிமையில் தெரிவித்து –
2 பத்து பிராப்யத்தை நிஷ்கரிஷித்து சரம தசை எட்டாம் பத்திலும்
பயிலும் சுடர் ஒளி -பிராப்யமாக காட்ட வில்லை இதில்
ஜீவாத்மா ஸ்வரூபம் காட்டுவதாக இத்தை ஆச்சர்ய ஹிருதயத்தில் சேர்த்து
பிராப்ய ஸ்வரூபம் நெடுமாற்கு அடிமையில் சொல்லி –
செல்வ சிறுமீர்காள் பிள்ளாய் பாகவதர் முதலில் சொல்லி அத்தை போஷிக்க நிலை நாட்ட எம்மா வீட்டு
சொல்லியதை காட்டுகிறாள் ஆண்டாள் -பிராப்ய ருசி-ப்ராப்ய  த்வரை தெரிவிக்க
சிற்றம் சிறு காலை வந்து உன்னை சேவித்து -என்று அருளுகிறாள் –
ஆறி இருக்க மனம் இன்றி -வழி அல்லா வழியிலும் பெற துடித்து
காலை -சிறு காலை -சிற்றம் சிறு காலை -துடிப்பை காட்டி –
வந்து -வரக் கூடாத நாங்கள்
நீ வந்து அனுக்ரகம் செய்ய இருக்க
சேவித்து- உன்னால் பொறுக்க  முடியாத அஞ்சலியும் செய்தோம் –
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
சிறு பெண்கள் எழுந்து இருக்க ஒண்ணாத சிற்றம் சிறு காலையில் எழுந்து இருந்து –
சத்வம் தலை எடுத்த காலையில் -வேத அத்யயனம் செய்ய பிள்ளைகள் -கோபிகள் எழ வேண்டாமே
அநாதி அஞ்ஞான அதிகாரம் நீங்கி -சம்சார பரம்பரை பகவத் விஷய ஈடுபாடு செய்த காலம்
நாரணனைக் கண்டேன் பகல் கண்டேன் –
காணுவதற்கு முன்பு இரவு தானே
கண்ணனை சேர்ந்த காலம் காலே -காலைப் பொழுது சொல்லாமல் -காலை வேற்றுமை உறுப்பு இன்றி -காலே சொல்லியது –
ஜாதி பேச்சு இடைப் பேச்சு -வெட்ட  வெளியாலே விடியல் சொல்லாமல் –
ஆறாயிரப்படி -கண்ணனை  பார்க்க -இதுவே
நாயனார் ஆழ்வார் பாசுரங்கள் துணுக்கு கூட அறிந்து வியாக்யானம் –
உன்னை சிறு காலே கூட்டு மாடு மேய்க்க அனுப்பினேன் -யசோதை –
வேர்த்து பசித்து -பக்த விலோசனம் மாலை
எல்லியம் போதாக பிள்ளை வரும் –
உன்னோடு உடனே உண்பான் அப்பனும் உண்டிலன் -அனுஷ்டானம் செய்வான்
சோலைத் தடம் கொண்டு புக்கு -இரா நாளிகை மூவேழு சென்ற பின்வருவான் -21 நாழிகை -பின்பு தான் வருவான் –
இரவு இரண்டு மணிக்கு தான் வருவான்
சிறுகாலை புறப்பட்ட பின்பு -இப்பொழுது தான் வருவான்
வந்து அவன் வரவால் செதனருக்கு  பகவத் லாபம்
அன்குத்தைக்கு மிகுதியாக அவன் துடிப்பான் –
அபிமாகச்ய -தண்ட காரணிய ரிஷிகள் -இடம் பெருமாள் வார்த்தை –

கர்ம யோகம் யாகம் -யக்ஜம் சாதனம் கஷ்டம்
பகவத் விஷயம் சாதனமே இனிமையாக இருக்கும்
சாதனா காலத்திலேயே ரசிக்கும் பக்தி யோகம் சுசுகம் கர்த்தும் அவயவம்
த்யானம் ப்ரீதி உடன் செய்வதே ஆனந்தமாக இருக்கும்
அபிமத விஷயத்தை அனுபவித்து விட நினைப்பதே இனிமையாக இருக்குமே –
உன்னை சேவித்து -அதுவே ஆனந்தம்
பலம் முன்பு சீர் -சாதனமே -முதலில் பலம் அப்புறம் சாதனம் என்கிறார்
அஞ்சலியும் உண்டு அறுக்க மாட்டாத ஜீரணமே ஆகாதாம் –
தொழுது எழுவதே மிகை யாதலின் –
கை கூப்புவது உள்ளம் உருக வைக்கும் அம்  ஜலயிதி அஞ்சலி
உருகி போகிறானாம்
சமமாக கொடுக்க ஒன்றும் இல்லை
எல்லாம் கொடுத்தாலும் போதாது என்று திண்டாடுகிறானாம்
கருணா மூர்த்தி கருணை மிக்க பெரும் தெய்வம்
இதர தேவைதைகள் -காவடிதொழுது எழுவதே மிகை -இவனுக்கு -திரு உள்ளம் உருகுமே –
நமது புத்தி மாறாமல் அஹங்காரம் இன்றி இருக்க நித்யம் சேவிக்க வேண்டும் –
good morning நித்யம் ஒரே தடவை wish பண்ணுவது போலே –
நிச்சயமாக பண்ணிக் கொடுப்பீரோ கேட்டு -நம்பிக்கை இல்லையா -வெறுத்து செய்யவே மாட்டேன் கோபித்து கொள்வது போல்
அஹோபிலம் ஜீயர் ஸ்வாமிகள் -இந்த அர்த்தத்துக்கு உங்கள் சம்ப்ரதாயத்தில் பிறந்து இருக்க வேண்டும் என்று சாதித்தாராம்
கை கூப்பி பாரமாக -அது சுமந்தார்க்கு நம -எல்லாம் கடமை -பிராட்டி ஐஸ்வர்யம் அஷர  கதிம் பரம பதம்
அஸ்மை  கிஞ்சித்து உசிதம் ந கிருதம் என்று லஜ்ஜ்யதே பட்டர் வெட்கி தலை கவிழ்ந்து இருக்கிராளாம்
அத்தலை இத்தலையாவது
கோபிகள் திருவடியை தலையில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவானாம்
சுக்ரீவம் -புரா  லோக நாத -நாதம் இச்யாதி -சௌலப்யம் காட்டும் -பிரகாசிக்கும் இடத்தில நாங்கள் வந்து சேவித்தோம்
பொற்றாமரை அழகு தாமரை பொன்னால் ஆனதாம் -மகத் -போக்கியம் இரண்டும் -பிராப்ய பலம் திருவடி
அடியே போற்றி ஏவகாரம் -சர்வ விதத்தாலும் இத்தையே பலனாக கொண்டு இளைய பெருமாளைப் போலே
மன்னா மனிசரை பாடி பொருள் பெறுவது போல் இன்றி
போற்றும் -மங்களா சாசனம் பண்ணுவதே பலன்
மெய் மறந்து அந்ய பரனாய் இருந்தானாம்
கேளாய் -முக்கியமான வார்த்தை
அவனையும் நியமிக்க -ஆண்டாள் -அத்யாபயந்தி கற்ப்பிக்கிறாள் தெரிவிக்கிறாள்
அத்யயனம் டீச்சர் அத்யாபகர் ஆசார்யர் -கற்றுக்கொண்ட விஷய வைலஷண்யம் 30 அறிந்தும் சாஸ்திர ஞானம் வருவதால்
இவர்கள் பேச்சு அன்றோ கேட்டான்
பசுக்கள் மேய்க்கும் குலத்தில் பிறந்த நீ -குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது என்கிறாள்
நியமிக்கிறாள் இங்கும் -எவனால் -உண்டாக்கி காத்து லயிக்க பரப்ரமம் வேதம்
பிரம சூத்திரம் அதிகரணம் –
அனுமாணம் -பானை கொண்டு கர்த்தா -லோகம் பார்த்து கர்த்தா -ஈஸ்வரன் கூடாது வேத வியாசர்
நமது ஞானம் கொண்டு அறிய முடியாத -சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் –
பசுக்களை மேய்த்து -உனக் கடவதான இடைச்சாதியில் பிறந்து நாங்கள் அறிந்து கொண்டோம்
எங்களை அடிமை கோளாமல் இருக்க ஒண்ணாதே -பிறந்த பின்பு
உண்ணும்குலம் -பெற்றம் மேய்த்து ஜீவனம் செய்யும் குலம்
ரஷ்யமான பசுக்கள் மேய்த்து -பசு பட்டினி கிடந்தால் இடையர் உன்ன மாட்டார்
இடையர் காலில் முள் தேய்த்தால் இவனுக்கு சீழ் பிடிக்கும்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் மேயத பின்பு தான் உண்ணுவான்
கைங்கர்யம் கொள்ளாமல் போகாதே
உன் பிறப்பாலும் -நீ எங்கள் கார்யம் தலைக் கட்டியாகவே வேண்டும்
குற்றேவல் கிட்டியைடத்தில் அந்தரங்க
உசிதமான அடிமை
எங்களை -பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும் எங்களுக்கு வேறு கதி இல்லை
கொள்ளாமல் போகாது உனக்கு விகிதம்
உனது வடிவை காட்டி உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் காட்டிய பின்பு –
திவ்ய மங்கள விக்ரகம் காட்டி பித்து பிடிக்க வைத்த பின்
உண்டிட்டாய் இனி  உண்டு ஒழியாய் -ஆழ்வார்
குற்றேவலா என்ன புதிசாக பறை பறை என்று பல சொல்லி
நோன்புக்கு அங்கம் கேட்க்காமல் அடிமை தனம் கேட்பது எதற்கு
பறை கொடுக்க -இற்றை இன்று பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம்
ஸ்வரூப ஞானம் வந்த பின்பு
பறை சப்தத்தால் இந்த கைங்கர்யம் சொன்னோம்
தாத்பர்ய வருத்தி அறியாமல் இருக்கிறாயே
தண்ணீர் என்றால் தண்ணீரோ பொருள் -மாப்பிள்ளை பெண் -மாமியார் கதை போலே

லிங்காத் பிரகரனாத் அர்த்தம் கொள்ள வேண்டுமே வார்த்தைக்கு –
அபிதான வருத்தி வேற தாத்பர்ய அர்த்தம் வேற
இடையருக்கு அறியாமல் சொன்ன வார்த்தை
கோவிந்தா -பழகி பசுவின் புத்தி உனக்கும் -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலம் –
எற்றைக்கும் -உற்றோமே ஆவோம்
உனக்கே நாம்
எற்றைக்கும் -என்றும் -நாசா புன ஆவர்ததே -திரு நாட்டிலே இருக்கவுமாம் –
நீ பிறந்தால் நானும் பிறக்க வேண்டும்
இனி பிறவி யான் வேண்டேன் ஆழ்வார்கள்
ஆண்டாள் வேணும் -ஏழு ஏழு பிறவிக்கும் -ஆஸ்ரித சஜாதீயனாக கொண்டு சம்சாரத்தில் வந்தால்
பிராட்டி -தேவ தேவ யோநி -மனுஷ்ய யோநி –
நாட்டிலும் படை வீட்டிலுமாக அடிமை செய்த இளைய பெருமாள் போலே
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் பிறக்கும் பொழுதும் நீ சுவாமி நாங்கள் சொத்து
உனக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் உணர்ந்தே பிறக்க வேண்டும் –
சம்பந்தம் சித்தித்து இருக்க வேண்டும்
ஆத்ம சரீர உறவு போலே அறிந்து கொண்டு –
பிள்ளையாக பத்நியாக இன்றி எல்லா உறவும் நீயாகா
மாதா பிதா சர்வம் நாராயண
பார்த்தா பிதா ராகவா இளைய பெருமாள் -சுமந்த்ரன் -யார் தகப்பனார் -எனது தகப்பனார் இங்கே ராகவனை காட்டினது போலே
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல பாண்டவர்
மேலாய் தி தந்தையரும் அவரே
உனக்கும் எங்களுக்கும் ஆகிய இருப்பை தவிர்த்து
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
அஹங்கார கர்பமான புருஷார்த்தம் இன்றி
மாற்று -எங்களுக்கு என்று இருக்கும் காமத்தை மாற்று –

மற்றை நம் காமங்கள் மற்று
விசிறி கைங்கர்யம் செய்யும் சிஷ்யர் கதை -ஆசார்யர் ஜுரம் வந்தாலும் –
கட்டை கரைதேரும் -வீசினால்
யார் திருப்திக்காக செய்ய வேண்டும் –
இரண்டு சிஷ்யர் கால் பிடிக்க -திருவடி கைங்கர்யம் -சண்டை -வலது காலை நான் பிடிப்பேன் –
அவன் தொட்ட காலை தொட மாட்டேன் அது புழுத்து நாசமாக போகட்டும் என்றானாம்
ஆசார்யர் நியமிப்பதை செய்வதே கைங்கர்யம் –
நம்முடைய ஆனந்தத்துக்கு கைங்கர்யம் கூடாது
sugar patient கூடாரை புளியோதரை அமுது செய்வது போல்
உனக்கே உனக்காகவே உன்னுடைய ஆனந்துதுக்காகவே
அஹம் அன்னம் அஹமன்னம் அஹம் அன்னம் உண்ணப்படுகிற அன்னமாக இருக்கிறேன்
அனுபவிக்கிறவன் அவன் -வஸ்து நாம்
அசித் வத பாரதந்த்ர்யம் வேண்டும் -இஷ்ட விநியோக அர்க்யமாக இருக்க வேண்டும்
சைதன்யம் இருப்பதற்கு பலன் -என்ன என்னில் –
கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இரண்டும் உண்டே -கர்த்தா வானால் போக்தாவும் உண்டே என்றால் –
அறிவும் எம்பெருமான் ஆனந்தத்துக்கு
ரசம் போக்தா அனுபவத்துக்கு உருப்பாகுவது போலே –
ஆனந்தம் அதிகமாக சைதன்யம் -குழந்தை யை கொஞ்சும் பொழுதும் -பொம்மை யை கொஞ்சும் பொழுதும் -வாசி போலே
மரப்பாச்சி -வைத்து விளையாடுவோம் -இன்றோ பொம்மைக்கும் சைதன்யம் -எம்பெருமான் ஆனந்தம் பார்த்து நாம் ஆனந்த பட அதனால் மேலும் வளர
எதிர் விழி கொடுத்து விருத்தி செய்ய –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -கோழி காவலன் கோழி கோன் –
இவ் வரசும் நான் வேண்டேன் -அடியாரும் வானவரும் -இயங்கும் படியாக –
படியாய் கிடப்பேனே இல்லை பவள வாய் காண்பேனே –
கைங்கர்யம் செய்யும் பொழுது அசித் போலே –
திருப்பவளம் புன் முறுவல் -உனக்கே நாம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
மனப்பாங்கு வருவது கஷ்டம் -பிரகிருதி வஸ்யம்
தோன்றாது இருக்கும் படி அவனே செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்க
மற்றை நம் காமங்கள் மாற்று -நீ யே செய்து அருள வேணும் ஸ்பஷ்டமாக
மேம்பொருள் போக விட்டு பிரகிருதி ப்ராக்ருதன்கள் ஆசை விட்டு
மெய்ம்மையை மிக உணர்ந்து ஜீவாத்மா ஸ்வரூபம் உணர்ந்து
ஆம் பரிசு அறிந்து கொண்டு -கைங்கர்யமே புருஷார்த்தம்
நேராக சொல்லாமல்
ஐம் பொருள் அகத்தடக்கி -திரிய ஒட்டாமல் அடக்கி அர்த்தம் இல்லை இதற்க்கு
மேம்பொருள் போக விட்டு -சொல்லும் பொழுதே
கைங்கர்யம் செய்யும் பொழுது ஆனந்தம் நமக்கு கூடாது அடக்க வழி அவரும் சொல்ல வில்லை
மற்றை நம் காமங்கள் மாற்று ஸ்பஷ்டமாக நீயே போக்கித் தர வேண்டும்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் சொல்லிய பின்பு
அஹம் அன்னாத அஹம் அண்ணாத்த அஹம் அன்னாத –
அன்னமாக இருந்தபின்பு
அஹம் அன்னம் ஆனந்தம் அஸ்தி -மூன்றாவது வார்த்தை –
அவன் ஆனந்தம் பார்த்து நாம் ஆனந்தம்
அத்யாபயந்தி சுருசத சிரஸ் சித்தம் -அர்த்தம் -கடைசியில் சொல்லப் பட்ட அர்த்தம் –
நூற்று கணக்கான சுருதி இறுதியில் சொல்லப் பட்ட அர்த்த விசேஷம் –
போக்கு சொல்லாமல் மாற்று –
வாசி -அறிய வேண்டுமே –
அடியோடு போக்காமல் -எதிர் விழி கொடுக்க -மாற்ற சொல்லி பிரார்த்திக்கிறாள் –
நித்ய சூரிகள் வார்த்தை -மருந்தே எங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் பிதற்றும் பிரான்
மருந்து அழிக்கவும் உண்டாக்கவும் உண்டே –
எம்பெருமானையும் மருந்து என்கிறார்கள் -மருந்தும் பொருளும் அமுதமும் தானே
மகிழ்ச்சிக்கு மருந்து -அடக்கவா கிளப்பவா இரண்டுக்கும் தான் –
ப்ராப்ய விரோதியை போக்கி தர வேணும் –
நம பத அர்த்தம் த்வயத்தில் -இறுதி பத
களையாவது தனக்கு என்ன பண்ணுவது -அதை அறுப்பது
திரு மந்த்ரத்திலும் சரம பதத்தில் அன்வயித்து நாராயண நம இதே அர்த்தம்
சகல வேடன சந்க்ரகம் இந்த பாசுரம்
அவன் திரு முன்னே ஆண்டாள் விண்ணப்பிக்க –
திருப்பாவை -இந்த ஒன்றாவதையாவது அனுசந்திக்க
அனைத்து வேத சாரம் -அருளிச் செயல் சாரம் இது என்பதால் –
சுருதி சத -எண்ணிக்கை இல்லாத வேதங்கள்
முதல் பத்து நூறு நூறுகா இதன் அர்த்தங்களும் சுருதி சதச்
அந்தி தொழும்  சொல் இந்த அர்த்தம்
தொலைந்து போ -என்று கொடுக்காமல் உகந்து
திவ்ய பிரபந்தங்களின் சாரம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –
மேம்பொருள் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
திருப்பாவை யாகிறது இப்பாட்டு பகவத் விஷயத்தில்
நித்யம் முப்பதும் அனுசந்திக்க மாட்டாதவர் இதையாவது அனுசந்திக்க வேண்டும் -பட்டர்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading