இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார் மேல்
சூரணை -267-
மூவருடைய கர்மம் அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு பிராயச் சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு புருஷகார விநாஸ்யம் ––
அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவஸ்யம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம ஸூபாஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே-அவஸ்யம் தத் பலமுள்ளதை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே அனுபவ விநாஸ்யம் -என்கிறார்-
அனுக்ரஹத்துக்கு இலக்காகச் சொன்ன இருவரிலும் வைத்துக் கொண்டு உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே கர்மம் பிராயச் சித்த விநாஸ்யம் என்கிறார்
பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய் அவற்றை அடைய ஈஸ்வரன் பொறுக்கைக்கு உறுப்பாக பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம் பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே புருஷகார விநாஸ்யம் என்கிறார்-
—————————————–
இப்படி புருஷகார சாபேஷம் என்னில் உபாயத்தினுடைய நைர பேஷ்ய ஹானி வாராதோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
சூரணை -268-
உபாயம் ஸ்வீகார காலத்தில் புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும் –
கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் –
அதாவது
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் அபேஷித்து இருக்கும் –
ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற கார்ய காலத்தில்
புருஷனும் புருஷ காரமும் ஆகிற உபயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை –
கார்ய காலத்தில் ஸஹகாரி சாபேஷம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைரபேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து
——————————————–
ஸ்வ பிரயோஜன பரரை பிரதி கூலர் என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் தோற்றி இருக்கையாலே தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –
சூரணை -269-
ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –
நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —
————————————————————-
அத்தை பரிஹரிக்கிறார் –
சூரணை-270-
இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–
அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில் ஸ்வ பிரயோஜனம் என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை ஆஸ்ரய தோஷம் ஜன்யம் என்று ஒதுக்குகையாலே ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
(இது தன்னை விஷய தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–)
————————————–
இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –
சூரணை -271-
ஆகையாலே தோஷம் இல்லை –
அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட ஸ்வ பிரயோஜனம் ஆஸ்ரய தோஷ ஜன்யமாய்
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –
அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-இங்கு என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் -ஆகையால் தோஷம் இல்லை -என்று –
ஆகையால் என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை என்று இங்கனே யோஜிக்கவுமாம் –
—————————————————–
இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே விஷய தோஷ ஜன்யம் ஆனாலும்
ஸ்வரூப விருத்தமானது த்யாஜ்யமாய் அன்றோ என்ன அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -272-
விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —
அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய் ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படியான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால் வருகிற ஸ்வ பிரயோஜன பரதை தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம்
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும் விட அரிதாய் இறே -இருப்பது என்கை –
விஷய தோஷத்தாலே வருமது என்ற பாடமான போது ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –
—————————————-
விஷய தோஷத்தால் வரும் அதின் துஸ் த்யஜ்யத்வத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –
சூரணை -273-
ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்யதிச்ச்சதி-
மற்று இருந்தீர்கட்க்கு என்று தொடங்கி அத் தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும் க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண் நீ இங்கனே பதறலாகாது என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி ஸ்ரீ யபதி விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய் இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க அதுக்கு கால்நடை தாராதபடி இருக்கிற எனக்கு நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக நீங்கள் செல்லும் வார்த்தை
கேட்க்கைக்கு பரிகரம் இல்லாத செவிடரோடே சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே இருப்பது ஓன்று என்று ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –
தவாம்ருதச்யந்தினி என்று தொடங்கி வகுத்த சேஷியான தேவருடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு ஸூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு மது பரிபூரணமான தாமரைப் பூ வானது நில்லா நிற்கச் செய்தே அதின் சுவடு அறிந்த தான் கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில் சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –
விக்ரஹ வைலஷண்யம் கண்டு பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று தோற்றுகையாலே விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே
——————————————
ஆக -தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை விவரித்தார் கீழ் –
சதாசார்ய பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –
சூரணை -274-
இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜ்யம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —
இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –
1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் ஹிதைஷியாய் உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும் அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு அவனுக்கு உகந்த விஷயமாய் தன் பக்கலிலே விசேஷ கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்சயமும் அன்று – சம விகல்பமும் அன்று- ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே ஆசார்ய சந்நிதியை முற்பட அருளிச் செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்திதவ் மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –
2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும்
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டுத் தொடங்கி இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —
3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக (ப்ரபன்னனுக்கு இவை சாதனமாக அல்லவே -அனுபவ ரஸத்துக்காகவே)ரகஸ்யமாக அனுசந்தித்துக் கொண்டு போரப்படுமது -ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் – ஸ்வாச்சார்யவம் சோஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த -என்கிறபடியே-ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு தஞ்சமாக உபதேசித்த த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்துக் கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம் பிரகாரம் அருளிச் செய்கிற இடத்தில் த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம் வக்தா என்று இறே பெரிய பெருமாள் அருளிச் செய்தது –
(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ச ச –அந்த ஆளவந்தார் தாமும் நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-ச ச -அந்த நாதமுனிகளும் பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்–ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும் தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ)
4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் ஊற்று இருக்கைக்கு உறுப்பாக கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது நாத முனிகள் முதலாக இவ் வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
ஸூவ்யா ஹ்ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததச்ததா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சில ஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —
5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை
6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாரகனான ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேம பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும் தந் நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –
ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவ்ய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து இவற்றிலே நிஷ்டனாய் போருகை என்றது ஆயிற்று –
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply