ஸ்ரீ வசன பூஷணம்—-சூர்ணிகை–51/52/53/54/55/56/57/58/59/60–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

ஆக –
பிரபத்திய அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணம் காட்டினாராய் நின்றார் கீழ் —
இந்த த்ரிவித பிரதிபத்தியிலும் -பக்தி பாரவஸ்ய பிரதிபத்யே முக்கியம் என்று இறே கீழ் சொல்லிற்று –ஏவம் பூத பிரபத்தி நிஷ்டர் ஆனவர்கள் -தந் நிஷ்டை குலைந்து -பகவல் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூளுவது -அவன் வரக் கொள்ள அவனையும் உபேஷிப்பதாகிற இவற்றுக்கு நிதானம் ஏது என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே
இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –

பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறக்கை யாவது –
கரண சைதில்யத்தாலே ஸ்வ யத்ன ஷமர் அன்றிக்கே அவனே உபாயமாக அத்யவசித்து
அவன் வரவு பார்த்து இருக்கும் அவஸ்தை அளவு அன்றிக்கே –கண்ணாஞ் சுழலை இட்டு –
ஏதேனும் ஒருபடி ஆகிலும் -அவனை இப்போதே பெற வேண்டும் என்னும் அதி மாத்ர த்வரை அவஸ்தை விளைகை-
இது -என்று பிரபத்தியை சொல்லுகிறது –தாத்ருசாவஸ்தை பிறந்தால் பிரபத்தி குலைகையாவது -என்னான் செய்கேன் -என்று ஸ்வ பிரபத்தியில் அந்வயம் அற்று பகவதி நியஸ்த பரராய் இருக்கும் இருப்பு குலைகை–

————————————————

இப்படி பிரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் – அவஸ்தா பேதம் விளைக்கும் அத்தை அருளி செய்கிறார் –

சூரணை -52
தன்னைப் பேணவும் பண்ணும் –
தரிக்கவும் பண்ணும் –

தன்னை பேணப் பண்ணுகை யாவது –காறை பூணும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -3 -7 -8 – இத்யாதியில்  படியே-அவன் வரவுக்கு உடலாக தன்னை அலங்கரிக்கும் படி பண்ணுகை –
அதாவது பகவத் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூட்டும் என்ற படி – இது -மடல் எடுக்கை -முதலான வற்றிலே மூட்டும் அதுக்கும் உப லஷணம் –
தரிக்கப் பண்ணுகை யாவது -அரை ஷணம் அவனை ஒழிய தரிக்க மாட்டாமையாலே –
அவன் வரவுக்கு உடலாக ஸ்வ யத்னத்திலே மூளும்படி பண்ணுவது தானே –
அவன் வரக் கொள்ள விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பி –
கழக மேறேல் நம்பி —என்று அவனையும் உபேஷித்து தள்ளி தரித்து இருக்கும் படி பண்ணுகை –
ஆகை இவை இரண்டாலும் -என்னான் செய்கேன் -என்றும் —தரியேன் இனி -என்றும் –
இருக்கும் இருப்பு பிரதி கோடியை விளக்கும் என்றபடி –
ஆகையாலே பிரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வ பிரவர்த்தி யாதிகளில் இழிகைக்கு அடி
பக்தி யினுடைய அவஸ்தா பேதம் என்று கருத்து –

——————————————————

தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்று எம்பெருமான் வருகைக்கு உடலாக க்ருஷி பண்ணுகையும்-அவன்  வரக் கொள்ள அவனை உபேஷிக்கை-யுமாகிற பரஸ்பர விருத்த ஸ்வபாவங்களை விளைக்கும் படியை இறே சொல்லிற்று -இப்படி பக்தியானது ஸ்வ அவஸ்தா விசேஷங்களாலே சேதனருக்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள் தத் விஷய மாத்ரத்தில் அன்றிக்கே -தத் சம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும்
காணலாம் என்கிறார் மேல் –

சூரணை -53
இந்த ஸ்வபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திரு குழல் ஓசையிலும்
காணலாம் –

இந்த ஸ்வபாவ விசேஷங்கள் -என்று -கீழ் சொன்னவை தன்னையே சொல்லுகிறது அன்று  –
இப்படி பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -என்றபடி –
அவை யாவன -அநு பாவ்ய விஷயம் ஒருபடி பட்டு இரா நிற்க செய்தே -அத்தை அநு பவிக்கிறவர்களுக்கு தாரகமாய் தோற்றுகையும்- பாதகமே தோற்றுகையும்
கல்யாண குணங்கள்-இத்யாதி –கோவிந்தன் குணம் பாடி யாவி காத்து இருப்பேனே —நாச்சியார் திரு மொழி – 8- 3- -என்று தாரகமாகவும் –
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திரு வாய் மொழி – 8- 1- 8-என்று-பாதகமாகவும் -சொல்லுகையாலும்-கல்யாண குண விஷயம் ஆகவும் –
சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –பெரிய திரு மொழி -7 -3 -4-என்று தாரகமாகவும் –
சரங்களே கொடியதாய் அடுகின்ற-என்று பாதகமாகவும் –பெரிய திருமொழி -10- 2- 9-என்று சொல்லுகையாலே திருச் சர விஷயம் ஆகவும் –
திரு மாலை பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி  வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14 -என்று தாரகமாகவும் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -திரு வாய் மொழி -9 -5 -8 என்று பாதகமாகவும் -சொல்லுகையாலே திரு நாம விஷயம் ஆகவும் –
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத வுன் குழலின் இன்னிசை போதராதே –பெருமாள் திரு மொழி -6 -9 -என்று தாரகமாகவும் –
அவனுடை தீம் குழலும் ஈருமாலோ -திரு வாய் மொழி -9 -8 -5 -என்று பாதகமாகவும் சொல்லுகையாலே –திரு குழலோசை விஷயமாகவும் காணலாம் என்றபடி –

என்றும் ஒக்க போக்யங்களாய் இருந்துள்ள கல்யாண குணாதிகள் தாரகமாக தோற்றுவது பாதகமாக தோற்றுவது ஆகிறது –அது போக்தாக்களான இவர்களுடைய பிரேம ஸ்வாபவ விசேஷங்களாலே இறே -அல்லது குணாதிகளின் ஸ்வரூப பேதத்தால் அன்றே -ஆகையால்-பகத் த்வய அவஸ்தா பேத ஜநிதங்களான ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துகள் விஷயமாகவும் காணலாம் என்கிறது –

குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிற இடத்தில்-இரண்டும் ஒருவர் பேச்சு அன்றிக்கே இருந்ததே ஆகிலும் –ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரகிருதிகள் ஆகையாலும் – எல்லாருடைய பக்தியும் -பகவத் பிரசாத லப்தை யான பர பக்தி ஆகையாலும் -அந்த பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே இவ்விடத்தில்-அபேஷிதம் ஆகையாலே விரோதம் இல்லை –

சரங்களே கொடிதாய்  அடுகின்ற -என்கிற இது பராஜித ராஷசர் பாசுரம் அன்றோ -அத்தை
சரங்கள் ஆண்ட-என்கைக்கு பிரதி கோடியாக சொல்லாமோ என்னில் –ராம விஜயம் தனக்கு இஷ்டம் ஆகையாலே-அந்த விஜயத்துக்கு இலக்காய்-தோற்ற ராஷசர் தசை பிறந்து -பிராட்டிமார்  தசை பிறந்து பேசுமாப் போலே தாமான தன்மை தோற்றாதே தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் என்று இறே இத் திரு மொழிக்கு வியாக்யானம் பண்ணி அருளுகிற ஆச்சார்யர்கள் அருளி செய்வது –
ஆகையால் தம்முடைய பிரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபன்னமான பின்பு -திரு சரங்கள்
பாதகமாய் ஆய்த்தும் தமக்கே யாய் தோற்றி பேசுகையாலே அப்படி சொல்லக் குறை இல்லை –

அதவா –
தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் –என்ற இவை இரண்டாலும் –
அவன் தானே வரும் அளவும் தரியாமல் வரவுக்கு உடலாய் யத்னிக்கப் பண்ணுவது –
வரக் கொள்ள ப்ரணய ரோஷத்தால் தள்ளித் தரித்து இருக்கப் பண்ணுவதாம் படியை  இறே சொல்லிற்று –
இப்படி விருத்த ஸ்வபாவங்களை ஓன்று தானே செய்கிறார் –இந்த -என்று தொடங்கி –
அதாவது -இப்படிப் பட்ட  ஸ்வபாவ விசேஷங்கள் –கோவிந்தன் குணம்  பாடி -என்று தொடங்கி –
கீழ் சொன்ன படியே -ஒரு தசையில் தாரகமாக பேசுவது-ஒரு தலையில் பாதகமாக போவதாம் படி –இவர்களுக்கு தரிப்பும் பாதையும் ஆகிற விருத்த ஸ்வபாவங்களை விளைவிக்கிற கல்யாண குணாதிகளிலேயும் காணலாம் என்கை –

ஆக
பிரபத்திக்கு –சூரணை – 23-என்று  தொடங்கி இவ்வளவாக
பிரபத்தி வைபவத்தையும்–23-33-
தத் (பிரபத்தி)விஷய வைபவத்தையும்-34-40-
தத் அதிகாரி த்ரை வித்யத்தையும்-41-47-
த்ரிவித பிரபத்தியிலும்  பக்தி பாரவச்ய ஹேதுக பிரபத்தி யினுடைய முக்யதையும்–48-50-
அது தனக்கு ஸ்வ ஹேது பூத பக்த்ய அவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும்–51-
அந்த பக்த்யா அவஸ்தா பேதம் செய்விக்கும் சங்கை களையும்-அம்சங்களையும்-52-53-
அருளிச் செய்தார் –

——————————————–

இப்பிரபத்தி  தனக்கு -தர்ம புத்ராதிகளும்-என்று தொடங்கி -கீழ் உக்தரான அதிகாரிகள்
பக்கலிலே -சாதன தயா அனுஷ்டானம் காண்கையாலும்-கர்ம ஞான பக்தி பிரபத்திகள் -என்று உபாயங்களோடே சக படிதமாய் போருகையாலும் –
யத் யேன காம காமேன ந சாத்யம் சாதனந்தரை முமுஷூணா யத் சாங்க்யேன யோகேன  நச பக்தித ப்ராப்யதே பரமம் தாம யதோ நவர்த்ததே புன தேன தேனாப்யதே தத் தந்ந்த்யா சேனைவ மகாமுனே பரமாத்மாச தேனைவ சாத்யதே புருஷோத்தம -என்றும் –
இதம் சரணம் அஞ்ஞானம் -என்றும்
இப்படியே சாஸ்த்ரங்களில் இத்தைச் சாதனமாக சொல்லுகையாலும் –
உபாயத்வ பிரதிபத்தி யோக்யதை உண்டாகையாலே -அத்தை வ்யாவர்த்திக்கைக்காக –
அதுக்கு உடலான பலவற்றையும் அருளிச் செய்கிறார்-மேல் –
அதில் -பிரதமத்திலே -இப் ப்ரபத்தியை உபாயமாக கொண்டால் – வரும் அவத்யத்தை தர்சிப்பிக்கிறார் –

சூரணை -54
இது தன்னைப் பார்த்தால்
பிதாவுக்கு புத்ரன்
எழுத்து வாங்குமாப் போலே
இருப்பது ஓன்று –

இது தன்னை பார்த்தால் -என்றது-இச் சேதனர் ஈஸ்வர விஷயத்தில் பண்ணும் இப் பிரபத்தி
தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்றபடி -ஈஸ்வரன் தன்னை ரஷிக்கைக்கு ஹேதுவான இச் சேதனன் பண்ணும் இப் பிரபத்தி தன்னை நிரூபித்தால் என்று இங்கனே அனத்யாஹாரேன யோஜிக்கவுமாம் -அப்போதும் அர்த்தம் ஒக்கும் இறே –
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று -என்றது –உத்பாதகன் ஆகையால் -ஹிதைஷியாய் -தான் அறியாத தசையிலும் -தன்னை ரஷித்துக் கொண்டு போரும் தம் அப்பனுக்கு  புத்ரன் ஆனவன் -தான் அறிந்த தசையிலே நீ என்னை ரஷிக்க வேணும் என்று எழுத்து வாங்கினால் -இரண்டு தலைக்கும் உண்டான உறவு கொத்தை யாம் போலே -சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி —எழுத்து வாங்குகையாவது-ரஷகன் பேரை தந் மார்பில் எழுதிக் கொள்ளுகை

————————————-

ஆனால் இது தனக்கு ஸ்வரூபம்  ஏது என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -55
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னைப் பொறாது
ஒழிகை –

இது தனக்கு ஸ்வரூபம் -என்றது –இப் பிரபத்தி தனக்கு அசாதாராண ஆகாரம் என்றபடி –
தன்னைப் பொறாது ஒழிகையாவது-உபாய வரண ஆத்மகமான தன்னை -உபாயம் -என்ன-சஹியாத படியாய் இருக்கை –
அதாவது – ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் -ஸ்வஸ்மின்நுபாயத்வ பிரதி பத்திக்கு யோக்யமாக மாட்டாத படி இருக்கை -என்றபடி –
அன்றிக்கே – தன்னைப் பொறாது ஒழிகை -என்கிற இடத்தில் -உபாயத்வேன ப்ரதீதிமான தன்னைப் பொறாது ஒழிகை என்று அநத்யா ஹாரேன யோஜிக்கவுமாம் -இப்படிச் சொன்னாலும் ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதிபத்தி அசஹத்வமே பொருளாம் இறே –

——————————————–

சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  -இது தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -56
அங்கம் தன்னை
ஒழிந்தவற்றை
பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –

தன்னை ஒழிந்தவற்றை பொறது ஒழிகை யாவது -ஸ்வீகார ரூபமான தன்னை
ஒழிந்த சேதன பிரவ்ருத்திகள் ஒன்றையும் சஹியாத படி இருக்கை –
சாதன ரூப சகல பிரவ்ருத்திகளின் உடையவும் சவாசன த்யாகமிறே இதுக்கு அங்கம் –
யத் யத் சாங்கம் –என்கிற இடத்தில் -பிரவ்ருத்தி  ரூப அங்க சஹிதமனவற்றை  இறே
சாதனமாக சொல்லுகிறது –
அப்படி இன்றிக்கே –
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி ரூபம் ஆகையாலே -இது தானே இதனுடைய
அனுபாயத்வ ஸூசகம் என்று கருத்து-

———————————————

இதனுடைய அனுபாயத்வத்தை  த்ருடீகரிக்கைக்காக -சித்த சாத்திய உபாயங்களின்
படிகளைச் சொல்லி -அவை இரண்டையும் பற்ற -இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
அருளிச் செய்கிறார் -மூன்று சூரணைகளால்–இது -பிரபத்தி-அதிகார விசேஷணமாய் ஸ்வீகார வர்ணம் 

சூரணை -57
உபாயம் தன்னை பொறுக்கும்-

உபாயம் தன்னைப் பொறுக்கும் -என்றது – சித்த உபாயமான சர்வேஸ்வரன் -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும் ஸ்வயமேவ நிர்வாகன் ஆகையால் –தன்னை உபாயம் என்றால் -அதுக்கு தகுதியாய் இருக்கும் -என்றபடி –
உபாய உபேயத்வ ததிஹா தவ தத்வம்  நது குநௌ-என்று -ஸ்ரீ ரெங்கராஜஸ்த்வம்-87-உபேயத்வோபாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாய் இறே உபாயத்வமும் இருப்பது –
ஏச வேதவிதோ விப்ரா யோசாத் யதமவிதோ ஜனா
தே வதந்தி மகாத்மானாம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -பாரதம் -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வமாகூர்  திவ்யா மகார்ஷய
அம்ருதம் சாதனம் சாத்யம் சம்பச்யந்தி மநீஷிணா-என்னக் கடவது இறே
தன்னைப் பொறுக்கும் -என்கிற இவ்வளவே சொல்லி விடுகையாலே – தன்னை ஒழிந்தவற்றைப் பொறாமை அர்த்தாத் சித்தம் -இந்த சித்த உபாயம் சஹாயாந்தர  சம்சர்க்க அசஹமாய் இறே இருப்பது –
இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே
அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத ஸ்வேதம் போலே
சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளிச் செய்தார் இறே

————————————————–

சூரணை-58
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

சித்தோ உபாய தரமான சாத்திய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யா ஞான ரஹீதராய் –
ஸ்வ யத்ன பரராய் இருப்பார்க்கு -மோஷ சாதன தயா -சாஸ்திர விகிதம் ஆகையாலே –
ஸ்வ ஸ்மின் உபாயத்வ பிரதி பத்தி சஹமூகமாய் ஸ்வோத் பத்யாதிகளில்
பிரவ்ருத்தி ரூப அங்க சாபேஷம் ஆகையாலே ஸ்வ வ்யதிரிதக்தங்களையும்
சஹிக்குமதாய் இருக்கும் என்ற படி –
பக்த்யா லப்யஸ் தவ நன்யயா –
உபாய பரிகர்மித  ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக  பக்தி யோகைக லப்யா-
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே —என்னக் கடவது இறே-

—————————————–

சூரணை -59
இது (பிரபத்தி உபாய வர்ணம்)இரண்டையும் பொறாது

இது இரண்டையும் பொறாது -என்றது--சித்தோ உபாய வர்ண ரூபமாய் -நிவ்ருத்தி சாத்திய ரூபமாய் -அதிகாரி விசேஷணமாய்-ஸ்வரூப அனதிரேகையாய் – இருக்கிற இந்த பிரபத்தி-உபய அசஹமாய் இருக்கும் என்ற படி -ஆகையால் சித்த சாத்திய உபாய வ்யாவிருத்த வேஷையாய் இருக்கிற இந்த பிரபத்திக்கு உபாயத்வம் அசம்பாவிதம் என்றது ஆய்த்து-

அன்றிக்கே –
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதிக்கு -ஆனால் சாங்கமாக சாஸ்திர விஹிதமான இந்த பிரபத்திக்கு ஸ்வரூபம் எது -இதுக்கு சொல்லுகிற அங்கம் தான் என்ன -அவை இரண்டையும் அடைவே அருளிச் செய்கிறார் –இது தனக்கு -இத்யாதி வாக்யத்தாலே
ஆனால் தன்னை பொறுப்பது எது என்ன அருளி செய்கிறார்-உபாயம் -இத்யாதி –
தன்னையும் தன்னை ஒழிந்தவற்றையும் பொறுக்கும் அது எது என்ன அருளிச் செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதி- இந்த சித்த சாத்திய உபாயங்கள்  இரண்டிலும் -இப் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தை நிகமிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதி – என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
அதவா –
இதன் அனுபாயத்தை சாதிக்கைக்காக இதனுடைய ஸ்வரூப அங்கங்கள் இரண்டையும்
தாமே அருளிச் செய்கிறார் -இது தனக்கு-இத்யாதி வாக்யத்வயத்தாலே-
இதன் அனுபாயத்வத்தை ஸ்புடம் ஆக்குகைக்காக சித்த சாத்திய உபாயங்களின் படிகளை
தர்சிப்போம் என்று திரு உள்ளம் பற்றி -பிரதமம் சித்த உபாயத்தின் படியை அருளிச்
செய்கிறார்-உபாயம்-இத்யாதியால் –
அநந்தரம்-சாத்திய உபாயத்தின் படியை அருளிச் செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதியால்
இவை இரண்டிலும் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதியால்-என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்- இவ் உபய சங்கதிக்கும் வாக்யங்களுக்கும் அர்த்தம் பூர்வவத் –

————————————————

இப்படி இப் பிரபத்தி உபாயம் அல்லவா விட்டால் பல சித்திக்கு இவன் பக்கலிலும் சில வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -60
பலத்துக்கு ஆத்ம ஞானமும்
அப்ரதிஷேதமுமே
வேண்டுவது –

பலத்துக்கு -என்றது -பல சித்திக்கு -என்றபடி –
ஆத்ம ஞானம் ஆவது -ஸ்வ ஸ்வரூப ஞானம் -அதாவது தத் ஏக சேஷத்வ-தத் ஏக ரஷத்வங்களை அறிகை-
அப்ரதிஷேதம் ஆவது -நிருபாதிக சேஷியாய்-நிருபாதிக ரஷகன் ஆன அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காமை-அதாவது ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வய நிவ்ருத்தி –
அவதாரணத்தால்-இவை இரண்டும் ஒழிய பின்னை ஒன்றும் வேண்டாதபடி —சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொலுகிற ஆத்ம ஞானமும் -மத்யம பதத்தில் சொல்லுகிற அபிரதிஷேதமும் இறே வேண்டுவது..

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading