கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தியினுடைய படியை -விஸ்தரேண அருளிச் செய்கிறது மேல் -அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால விசேஷம் பாராமல் -ஸ்நாநாதிகளும் இன்றிக்கே இருக்க -உபதேசிப்பான் என் – இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -23
பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-
பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும் அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் -அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாள நாதி பூர்வகமாக செய்ய வேணும் -பிரகாராந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை வர்ணிகராக வேணும் -அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் – அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
1-தேச கால சாத் குண்யாவை குண்யங்கள் அடியாக வரும் அதிசய அனதிசயங்களை
உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் -2-தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே ஸ்வயமேவ பவித்ரமாய் சுத்த அசுத்த விபாகம் அற தன்னோடு அன்வயிக்கலாம் படி இருக்கையாலும் –
3-வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் -4-சேதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்று ஆகையாலும் -இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே
———————————————-
இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -24
விஷய நியமமே உள்ளது –
அதாவது-இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி -இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே
இதுக்கு இவை ஒன்றும் இல்லை யாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை-25
கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம் வ்யவஸ்திதங்களாய் இருக்கும் –
கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவனதயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச் சுக்ல கிருஷ்ண பஷ பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களைச் சொல்லுகிறது –
வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்வத் பிரகாரங்களான ஸௌசாமசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களான -அவ்வவ பிரகாரங்கள் –
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி அதிகாரிகளான வர்களுக்கே வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே – இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்த த்வாதிகளுக்கும் உப லஷணம்-
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-
——————————————–
பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம் தேச கால -நியம ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –
சூரணை -26
ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –
பத்த வைராச்ச பாபச்ச ராஷசேந்தராத் விபீஷண அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி –
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி ச ஏஷ கால தேச காலச்ச பவதீஹ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி தவ் ராத்மயம் ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச ததா த்வயி யுக்தம் ஆகமனம் தஸ்ய சத்ருசம் தஸ்ய புத்தித -என்று ராவண னாலே அவமாநிதனாய் ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று தேவருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது இந்த பஷத்திலே விசேஷித்து எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும் யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்ய கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில் –
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரையான ராவணனில் காட்டில்
சத்வோத்தர் ஆகையாலே -பர ரஷணம் யாத்ரையாய் இருக்கிற தேவரீரை பிராப்யராக புத்தி பண்ணி அப்படியே அவனை விட்டு போராது ஒழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு சஹகாரியாய்-அந்த ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகிற தோஷத்தையும் -தார்மிகரான தேவரீர் உடன் கூடப் பெற்றால் தத் பலமாக தேவரீர் உடைய திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகை யாகிற நன்மையையும்-புத்தி பண்ணி
அப்படியே தேவரீர் திரு உள்ளத்தில் புண் படும் படி குற்றத்தை தீரக் கழிய செய்து நிற்கிற ராவணன் தவ் ராத்மத்தையும் -துராத்மாக்களை அநாயேசன அழிக்க வல்ல தேவரீர் ஆண் பிள்ளைத் தனத்தையும் கண்டால் விசேஷ ஞானன் அவனுக்கு இவ் வரவு பிராப்தம் –
நியாயத்திலே சஞ்சரிக்கும் அவனுடைய புத்திக்கும் இது சத்ருசம் என்றான் இறே-
ஆக இப்படி பாவ சுத்தியை உடையனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் என்று வந்த
தேச காலங்களில் குறை பார்க்கக் கடவது அல்ல -அவன் வந்த அதுவே தேசமும் காலமும்
என்று சரணாகதி தர்மஜ்ஞனான திருவடி நிர்ணயிக்கையாலே பிரபத்திக்கு தேச கால நியமம் இல்லை என்கை-
—————————————————–
இது தான் பிரபத்திய அனுஷ்டான ரூபமான த்வ்யத்தில் பிரதம பதத்தில் காணலாம் என்கிறார் –
சூரணை-27
இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்
அதாவது
சகல உபநிஷத் சாரமாய்–சர்வாதிகாரமாய் – -அவிளம்ப்ய பல பிரதமாய் -சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய் -சர்வ மந்த்ர உத்க்ருஷ்டதயா-என்கிறபடியே மந்திர ரத்னாக்க்யமாய் இறே த்வயம் இருப்பது -அந்த வைபவம் தோற்றுகைகாக-மந்திர ரத்னம் என்கிறார் -த்வயம் – என்னாதே-அதில் பிரதம பதத்தில் மதுப் அர்த்தமான -புருஷகார உபாய நித்ய யோகத்துக்கு பிரயோஜனம் -ஏதேனும் ஒரு தேசத்தில் -ஏதேனும் ஒரு காலத்தில் -ஒரு சம்சாரி சேதனனுக்கு சமாஸ்ராயண ருசி விளைந்தால் –
சஞ்சலம் ஹி மன –
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-என்கிற படியே சூறாவளி காற்று போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து க்ஷண பங்குரையான ருசி தீருவதற்கு முன்னே -தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிகலாய் இருக்கை இறே-
ஆகையாலே பிரபத்தி யினுடைய தேச கால நியம ராஹித்யம்-அந்த பதத்தில் நன்றாக தோற்றும் என்கிறார்-
———————————————
பிரகார நியம ராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –
சூரணை-28
பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –
எங்கும் காணலாம் -என்றது -இத்தை அனுஷ்டிப்பார்-ஸ்ரவிப்பார் – எல்லார் பக்கலிலும் காணலாம் என்ற படி –
——————————
அது எங்கே கண்டது என்ன -பூர்வ பிரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார் –திரௌபதி இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே
சூரணை-29-
திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –
ஸ்நாததையா ரஜஸ் வலைக வச்த்ராஹம் நது மாம் நேது மர்ஹசி குரூணாஞ்ச புரஸ் ஸ்தாதும் சபாயாம் நாஹா முத்சஹே-என்னும் படி அசுத்தையாய் இருக்கிறவள் ஸ்நானம் பண்ணி அன்றே பிரபத்தி பண்ணிற்று என்றபடி
இத்தால் பிரபத்தி பண்ணுவார் பிரயதராய் பண்ண வேணும் என்னும் நியதி இல்லாமை காட்டப் பட்டது –
நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது -என்ற இடத்தில்-நீசர் என்கிறது –நெடும் தகையை நினையாதார் நீசர் –பெரியதிரு மொழி -11 -6 -8 -ஆழ்வார் அருளிச் செய்த ஸௌரி சிந்தா விமுகரான ஹேயரை–விஷ்ணு பக்தி விஹிநஸ்து யதிச்ச ஸ்வபசாதம விப்ராத் த்விஷட்குனயுதா தரவிந்த நாப பாதாரவிந்த விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம் -என்று
பகவத் விமுகரை ஸ்வபசதமராக சொல்லிற்று இறே –
அதுக்கு மேல் சரணாகதையை பரிபவித்தும் சரணா கதரான பாண்டவர்கள் திறத்திலே
தீங்குகளை செய்தும் போருகையாலே –சத்யஸ் சண்டாலதாம் வ்ரஜேத் -என்கிற கர்ம சண்டாளர் இறே கை கலந்து நிற்கிறது –
நீசர் நடுவே என்கையாலே நீசஸ் ப்ருஷ்டியால் இவனுக்கு உண்டான அசுத்தியும்
நீச சகாசத்திலே என்னும் இடமும் தோற்றுகிறது-
இத்தால் பிரபத்தி ஸ்ரவணம் பண்ணும் போது-நீசர் மத்யத்தில் ஆகாது என்னும் நியதி
இல்லாமை காட்டப் பட்டது-
—————————————————
இத்தால் பலித்ததை சொல்லா நின்று கொண்டு இவ் அர்த்தத்தை நிகமிக்கிறார் –
சூரணை -30
ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –
ஆகையால் -என்றது -அனுஷ்டான தசையிலும் ஸ்ரவண தசையிலும் இவர்கள் இருவரும் இப்படி செய்கையால் என்றபடி –
சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –என்றது -பிரபத்தியில் அன்வயிக்கும் அளவில்
அசுத்தனாய் இருக்கும் அவனுக்கு சுத்தி சம்பாதிக்க வேண்டா -சுத்தனாய் இருக்கும் அவனுக்கு அசுத்தி சம்பாதிக்க வேண்டா என்றபடி –
அசுத்தி தேட வேண்டாம் என்றது -கீழ் சொன்னவர்கள் இருவரும் அசுத்தமான தசையில்
பிரபத்தியில் அன்வயித்தமை சொல்லுகையாலே -அசுத்தி தான் இதுக்கு வேணும் என்று
சங்கியாமைக்கு-
இருந்தபடியே அதிகாரி யாம் இத்தனை -என்றது -பிரபதன காலத்தில் அசுத்தனாய் ஆதல் –
சுத்தனாய் ஆதல் -யாதொரு படி இருந்தான் -இருந்ததொரு பிரகாரத்திலே -இதுக்கு
அதிகாரி யாம் இத்தனை என்றபடி
திரௌபதியும் அர்ஜுனனும் -பிரபத்தி அனுஷ்டான -தத் ஸ்ரவண தசைகளில் -தத் அங்கமாக சுத்தி சம்பாதியாதவோபாதி அசுத்தியும் சம்பாதித்து கொண்டமை இல்லை இறே -இருந்தபடியே அதிகாரிகளான இத்தனை இறே –
————————————————
இவ் அர்த்த விஷயமாக ஆப்த வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –
சூரணை -31
இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-
அதாவது -வேல் வெட்டி பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில் பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே -இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய் இருக்கையாலே – தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் – இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் -ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளிச் செய்த வார்த்தை –
———————————————–
அநந்தரம்-அதிகாரி நியம அபாவத்தையும் உபபாதிப்பதாக -தத் -ஞிஜ்ஜாஸூ பிரச்னத்தை அனுவதிக்கிறார் -அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் -என்று –
அதுக்கு உத்தரம் அருளி செய்கிறார் -தர்ம புத்ராதிகளும் -என்று தொடங்கி-
சூரணை -32
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –
அதாவது
திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம்-என்று ஷத்ரியரான தர்ம புத்ராதிகளும் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்த புண்டரீகாஷம் ரஷமாம் சரணா கதாம் -என்று ஸ்திரீயான திரௌபதியும் –
ச பித்ராச பரித்யக்தஸ் ஸூரைஸ் ச ச மஹர்ஷிபி த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத-என்று தேவ ரூபத்தை மறைத்து வந்து மகா அபராதத்தை பண்ணின காகமும் –
சோஹந்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் நச சாமர்த்யவான் க்ருபா மாத்ர மனோ வ்ருத்தி ப்ரசீத மே-என்று-திர்யக் யோநி ஜனாய் பிரதிகூலனுமான காளியனும் –
பரம பதமா பந்தோ மனசா சிந்தயத் ஹரிம் சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண -என்று திர்யக் ஜன்மாவாய் அனுகூலனுமாயும் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும் –
சோஹம் பருஷிதஸ் தேன தாச வச்சாவமா நித த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத -என்று-ராக்ஷஸ சஜாதீயனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் –
பாஹும் புஜக போகாப முபதாயாரி சூதன அஞ்சலிம் பிரான்முக க்ருத்வா பிரதிசிச்யே மகோததே -என்று-சர்வ சரண்யரான பெருமாளும் –
ச ப்ராதுஸ் சரணவ்காடம் நிபீட்ய ரகு நந்தன சீதா முவாசா தியசா ராகவஞ்ச மகா வரதம் -என்று அக்கரையராய் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாளும் –
தொடக்கமானவர்கள் -என்கையாலே-
சோஹம் த்வாம் சரண மபார மப்ரமேயம் சம்ப்ராப்த பரமபதம் யதோ ந கிஞ்சித் சம்சார ஸ்ரம பரிதாப தப்த செத்தா நிர்வானே பரிணததாம் நி சாபிலஆஷா -என்ற முசுகுந்தனும் –
மூடோய மல்பமதி ரல்ப விசேஷ்டி தோயம் க்லிஷ்டம் மனோச்ய விஷயர் நமயிப்ரசங்கி
இத்தம் க்ருபான் குரு மயிபிரண தே கிலேச தவாம் ஸ்தோது மம்புஜ பவோபிஹி தேவ நேச -என்று ஷத்ர பந்துவும் –
பகவந்தம் பிரபன்நாஸா பகவன் தமவாப ஹ என்று மாதவியும் –
தம் பிரபன்ன சிரோக்ரீவம் ஆச்யேப்ய ஸ்ருத சோணிதம் விலோக்ய சரணம் ஜக்முஸ்
தத் பத்ன்யோ மதுசூதனம் -என்று காளிய பத்நிகளும் –
பிரணாம பரவண நாத தைத்ய சைனா பராஜித சரணம் த்வா மனு பிராப்தாஸ் சமஸ்தா தேவதா தேவதா கணா-என்று இந்திராதி தேவர்களும் –
ராஷசைர் வைத்திய மாநானாம் வாநாரானாம் மகாசமூ சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் –என்று ஸ்ரீ வானர சேனையும் முதலாய் உள்ளவர்கள் எல்லாரும் சரணம் புகுருகையாலே – பிரபத்திக்கு இன்னார் அதிகாரிகள் என்ற ஒரு நியதி இல்லை –
ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் என்கை-
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply