சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ கடல் அலை திரை கை எடுத்து ஆடின
எழ பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
மரணம் ஆனால் வைகுந்தம் தரும்-
பிர பத்தி பண்ண வேண்டும்
பகவத் விஷய கல ஷேமம் வேண்டும்
சபரி ஆச்சர்ய அபிமானத்தால் பெற்று உய்ந்தாள்
புல் பா எறும்பு ஒன்றும் இன்றி நல் பால் உய்தனன்
குற்றம் இருந்தாலும் -சர்வ பாபேப்யோ மோஷம் இஷ்யாமி
அனுகூல்ய சங்கல்ப்ய பிரதி கூல வர்ஜம்
சரணம் யுக்தி மாதரத்தில் அபயம் கொடுத்து விட்டேன் என்கிறானே
உபாயம் உபேயமும் அவன் –
பல பிறவி -ஆத்மா நித்யம்-
மிலேசர் ஆத்மா நிழல் போல்-என்பர்
சிசு-சிரிக்க ஹேது-அழுவது-பூர்வ ஜன்ம வாசனை தானே
குரங்கு மாடு பஷி-பால் குடிக்க -பரக்க -தாவ -பூர்வ ஜன்ம வாசனை தானே
அனுமானம் மட்டும் இல்லை
நினைவு இருந்து -பூர்வ ஜன்ம துன்பம் வேற வேண்டுமா
பால்ய நினைவே அறியாமல் இருக்கிறோமே
பிள்ளை தான வாசனை உண்டே
லோக பிதா -கிருபா சாகரம் –
வேத பிரமாணம் சரீரம் அழியும் ஆத்மா அழியாது
பகவான் விடாமல் திருத்தி மீண்டும் ஜன்மம் கொடுத்து கிருஷி முயற்சி செய்கிறான்
அவசர ப்ரதீஷணன் -ஒருவரையும் கை விடான்
செடி கோடி -உணர்வு உண்டு தண்ணீர் விட்டால் துளிர்க்கும்
முதல் படைப்பு
கொசு பூரான்
எலி அணில்
நாய் பன்றி
காட்டு மிருகம் குரங்கு
மனிதன்-பண்பு
தெய்வ வழிபாடு
வேத பிரமாணம் சத் சங்கம்-சரண் அடைந்து
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி
முன்னேற்றி தன் திரு அடியில் சேர்த்து கொள்கிறான்
இது ஒன்றே லஷ்யம் -ஜீவனுக்கு உரிமை -திரு அடி சொந்தம் நமக்கு
முக்தி வேண்டாம் -பிரேமை பக்தி தான் வேண்டும்
அங்கும் பக்தனாக இருக்க தான் வேண்டும்
திவ்ய சரீரம் சொரூபம் பிராப்தி
விஷ்ணு பக்தி இதை கொடுத்தே தீரும்
விசும்பு-ஆகாசம்-
மேகம் தேவ துந்துபி முழங்க
கடல் அலை மோதி ஹர்ஷம் காட்ட
சப்த தீபங்களும்
எம்பெருமானை ஆஸ்ரித தமரை கண்டு உகந்து
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே –10-9-2
உலகமே ஆனந்தம் அடைய
முகிலே பூர்ண கும்பம் எடுத்து
வாத்தியம் போல்கடல் அலை உகந்துஆட
பூமி மண்டலம் குளிர்ந்து
மலைகளில் சோலைகள் தோரணம்
உலகமே தொழ
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிரே –10-9-3
தூபம் காட்டி பூஜித்து அனுப்ப
பரம பதம் இருந்து வந்து கூட்டி போக
உபநிஷத் சொல்லும்
சாஷாத் கறித்து ஆழ்வார் அருளுகிறார்
ஆதி வாகர்கள்
பகல் சுக்ல பஷம்-உத்தராயணம்-அர்ச்சிராதி மார்க்கம்
தேவதைகள் கை பிடித்து கொடுக்க -பூ மழை பொழிந்து எழுந்து அருளுக
முனிவர்கள்- அனவரதம் மனனம் செய்து கொண்டு இருக்கும் முனிவரே -சம்மோதம்
கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று தொழுதனர்
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கை நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே’–10-9-4
கதிரவர்-பிரகாசம் உடையவர் -ஜோதிஸ் சொரூபம்-
தாண்டும் பொழுது அக்னி சூர்யன் சந்தரன் சுக்ரன் மின்னல் தேவன்-போல்வார்
வழி காட்டி போக
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –10-9-5
மக ஜன தப சத்ய லோகம்-மாதவன் தமர் என்பர்
பத்ம நாபன்-மகா பாரதம்-கதை -அழியாத தர்மம் –
தஷகன் நவ நாகம் சொல்வார்-அரண்மனை வந்து-பூஜை பண்ணி நாக பத்னி –
சூர்ய ரதம் நடத்த போய் இருக்கிறார் -என்றாள்
காத்து இருக்க-தபச்வியாக -கோப வசர் நாகர்- வந்ததும்-இந்த விஷயம் சொல்ல
சூர்ய நாராயணன் கைங்கர்யம் பண்ண போனதை சொல்ல
பூ லோக ஜோதிஸ் பார்த்தேன் –சூர்ய மண்டலம் கிட்டே வர சூர்ய தேவன் கை கூப்பி
பரம பதம் போகும் ஜீவாத்மா என்றார்-பற்றுதல் நீக்கி-உஞ்ச விருத்தி-பகவத் பிரபன்னன்
அறிந்து கொண்டேன் -உபாக்யானம்
இந்த்ரன் வருணன் பிரஜா பதி போல்வார் வர வேற்க –
வேள்வியில் மடுத்தலும் விரை கமழ நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –10-9-6
யாகம் பலன்-சமர்ப்பித்த போது
புண்யம் பலன் -சொர்க்கம் தானே
தண்ணீர் பந்தல் பூர்த தர்மம்
இஷ்ட தர்மம்-அஸ்வமேத யாகம் போல் –
இஷ்டா பூர்தம் பொதுவாக இரண்டையும் சொல்லி
உபாசனம்-தெய்வம் அடைந்து-சிவா லோகம்/பிரம லோகம்
தபஸ் வேணும் இவை அடைய
இரண்டையும் நீங்கி பரம பதம்-
ஸ்ரீ ராமாயணம் -சர பங்கர்
தேவ ராஜன் கூப்பிட்டு போக வர -தபோ பலத்தால் இந்திர பிரம லோகம்
பெருமாள் வந்ததும் பூஜை பண்ணி விட்டு வருவேன்
அனைத்தும் ஸ்ரீ ராம சந்திர அர்பணம்-ஆகரிஷ்யாமி-பெற்று கொண்டேன்
சரீரம் போக்கி ஸ்ரீ வைகுண்டம் போக வைத்தார் பெருமாள்
புண்யம் விநியோகம் பாபம் இங்கே அபசாரம் செய்தவர் இடம் போகும் –
சூஷ்ம சரிரம் -விரஜா நதி -நித்ய சொரூபம் அடைவார்
வேள்வியுள் மடுதலும் -இந்த அர்த்தம் எல்லாம் அருளுகிறார்
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே –10-9-7
திரு குடந்தை மங்களாசாசனம்
அனுப்புபவன் பெருமை-ஆச்சார்யர் கிருபை
அது போல் அர்ச்சை நினைவு இங்கு
ஆரா அமுதன் அடியார்க்கு வர வேர்ப்பு
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே –10-9-8
பரம பதம் வந்ததும்
கோபுரம்-சமீபம் வாசல்
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –10-9-9
பரம பத வாசல்-சந்திர புஷ் கரணி விரஜா நதி
பொன் ஆடைவிலக்கி வேற பொன் ஆடை வைஜயந்தி மாலை சாத்தி கொண்டு
பிரத் யஷம் பரமம் பதம்
பர வாசுதேவன் தமர்-தம் தம் திரு மாளிகை கூப்பிட
திரு மா மணி மண்டபம் -சதா பஸ்யந்தி சூரயா
பரம பாகவதர் அனுபவம் நித்தியரும் முக்தரும் விரும்பி
வரவேற்க சந்தோஷம் கொண்டு-ஒரே கோஷ்ட்டி
சம்சாரிகள் பரமபதம் புகுவதே விஸ்மயம் பட்டு
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –10-9-10
விதி வகை -பாக்கியம்
நல் வேதியர்-நித்ய சூரிகள்
வார்த்தை -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
இங்கு இவர்கள் புகுவது நாம் பெற்ற பாக்கியம் என்று நினைப்பார்கள்
பொருக்கி ஆசை பட்டு கூட்டி போக
பூர்ண கும்பம் கொடுத்து வைகுண்ட சுந்தரிகள்
மாலை வஸ்த்ரம் தீபம் கொண்டு சதம் சதம்
மதி முக மடந்தையர்
மலர் மகள் பூமி நீளா உடன் அமர் -ஸ்ரீ சடாரி கொண்டு-தாசி கணம்
உடன் வந்து -கைங்கர்யத்துக்கு பெண் உருவம் கொண்டு-
வேதியர்-சாதனா பூமி இல்லை- நித்ய சூரிகள்
புராணர் ரிஷிகள் தேவர்கள் என்பரை நித்திரையே
ஞானத்தால் பரி பூர்ணர்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே –10-9-11
திரு மா மணி மண்டபம் சேர்ந்து –
அந்தமில் பேர் இன்பம் –
அடியோரு இருந்தமை
அப் பொழுதைக்கு அப் பொழுது அரா அமுதம்
அனுஷன நவ நவ விஷய சுகம்
ஆசார்யன் திரு அடி- அங்கும் ஆச்சார்யர் கைங்கர்யம்
சபரியும் ஆச்சார்யர் சென்ற இடம் சென்றாள்-ஸ்ரீ ராமாயணம்
கோஷ்டி அங்கும் பிரியாது
பகவத் விஷய அனுபவம் உறவேல் நமக்கு இங்கும் அங்கும் ஓழிக்க ஒழியாது
திவ்ய தேசம் மறக்காமல் இங்கும் குருகூர் -சடகோபன் சொல்
வல்லார் முனிவர் ஆவார் -நித்ய சூரிகள் ஆவார்
அங்கும் கைங்கர்யம் சொரூப சித்தி -சாதனம் இல்லை -பிரேமை கைங்கர்யம் சொரூபம்
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து –வாழ்ந்து அங்கு
அடியார் உடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –99
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply