திருவாய்மொழி- 1-10-பொரு மா நீள் படை – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

இறைவனின் மாற்று உதவி அற்ற உதவியை அருளி செய்கிறார் இதில்
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தோடு
திரு மா நீள் கழல் எழ உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுள தாகுமே 1-10-1
தானே கொண்டான் என்னை–பொருத்தமான பஞ்ச ஆயுதம் கொண்டவன்-
 வாமனன்-தீர்த்தம் கொண்டு நிமிர்ந்தான் –திரு மா -எழ உலகும் தொழும் படி
கரு மாணிக்கம்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் ?
மண்ணும் நீரும் எரியும் நல வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே 1-10-2
பக்தி வந்ததும் -எதை செய்தாலும் பூஜை ஆகும்
பக்தி இல்லாமல் பூஜை செய்தாலும் பூஜை ஆகாது
அவன் உடன் சேர்ந்து -குடும்பத்தில் ஒருவன் –
கண்ணனுக்கு என்று அனைத்தையும் நினைத்து செய்ய வேண்டும்
ஐஸ்வர்யமும் அவன் கைங்கர்யத்துக்கு
அவன் கல்யாண குணம் சொல்லி கொண்டே
பக்தி -என்னில் வரும்-நினைத்தாலும் வரும் தானே கர்ம யோகம் வரும்
தபால் காரனும் ராதே கிருஷ்ணன் சொல்லி கொண்டே வருவானே பக்தன் வீட்டுக்கு
கிருஷ்ணா நாமம் சொல்லி கொண்டே -அன்பு -அதுவே பிருந்தாவனம் ஸ்ரீவைகுண்டம்
பக்திக்கு அனுகூலமான கொண்ட பெண்டிர்
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தன் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேர் இடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே !–1-10-3
நெஞ்சில் வியாபித்து இருப்பதை அருளுகிறார்
பரம்பரை எல்லாம் அவனுக்கு ஆள பட்டு
கோடி போன்ற பிராட்டி திரு மார்பில் கொண்டு-
எம்பிரான் இடத்திலே என் மனஸ் பொருந்தி இருக்க
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் ? இனி என்ன குறைவினம் ?
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4
நெஞ்சமே நல்லை நல்லை -உன்னை பெற்றால் -துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-
சொன்ன கார்யத்தை உகந்து செய்யும் சத் புத்ரனை உகந்து சொல்வது போல் சொல்கிறார்
மலராள் மைந்தன்-யுவ குமாரன்-அழகிய மணவாளன்
கண்டாயே நெஞ்சே ! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
என் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு எழும் ஓர் மூவடி
கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே –1-10-5
கரும பலன் கிடைக்கும்
கொடுத்தது எடுத்து வைக்கிறது
சத் சங்கம்/ஆச்சர்யா கடாஷம்/ஸ்ரீ ரெங்கம் விசேஷ கடாஷம் உண்டே
பலனும் அவன் தான் கொடுக்கிறான்
தானே வந்து சேருமே
நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே ! சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ் உலகினில்
வாயும் ஈசன்  மணி வண்ணன் எந்தையே –1-10-6
நெஞ்சு சேர்த்து கொண்டால் பலன்-
அனுகூல மனஸ் வேண்டும்
மனஸ் சத்ரு மித்திரன் ஆகுமே -கீதை
வேறு நோய் வராது –
எந்தையே ! என்றும் எம்பெருமான் ! என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை !எம்பெருமான் !என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7
எந்தை -சகஜமாக சொல்கிறேனே-நைச்ச்ய பாவம் மீண்டும் பண்ணுகிறார்
நித்யர் சொன்னால் தகும்
பாவியும் சொல்லாமோ-
செல்வத்துக்கு தக்க நித்யருக்கு
ஒப்பிலேன் ஆகிலும் வந்து அடைந்தேன் -வேறு கதி இல்லையே

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடை வீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8
செல்வ நாரணன்-செல்ல பிள்ளாய்-வாராய்-மடியில் -சம்பத் குமாரன் -நம்பி நாராயணன்
ஸ்ரிய பதி -கேட்டதும் கண்களில் கண்ணீர் பெருக -எங்கு எங்கு பறக்கும்-
பிரிந்தால் தானே தேட
அல்லும் பகலும் இடை வீடு இன்றி விடான்
நம்பிக்கை கொடுத்து நம்பி-பூரணன்
நம்பியை தென் குரும் குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ ?–1-10-9
தியானம் -கண்ணை மூடினாலும் வருமா
கல்யாண குண பூர்ணன்-சௌந்தர்ய பரி  பூர்ணன்-
மேலான வானவர்-நித்யர்
எம்பிரானை- மீண்டும்
என் சொல்லி மறப்பது-
உத்தவர் கீதை-கோபிகள் -மறக்க சொல்லி கொடும் முதலில்
மறந்தால் நிம்மதி -அப்புறம் தியானம்
என் செய்வேன் உலகத்தீரே
நடை அழகை மறப்பதா
வெள்ளை சிரிப்பை மறப்பதா
லீலை
கடாஷம்
சொல்லும் மதுர வார்த்தை
அனைத்தும் நெஞ்சில் புரள எப்படி மறப்பது -கோபிகள்
மறப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செம் தாமரை கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ ? இனி யான் என் மணியை–1-10-10
மறுப்பு அவித்யை ஞானம் விதியை -அவன் எது கொடுத்தாலும் உணரேன்
ஞானம் கொடு ஆசா பாசம் விலக குந்தி -சிரித்தான் கண்ணன்-
அஞ்ஞானம் கொடுத்தது யசோதை போல் சாப்பிட கூப்பிட -வந்தான்
எதுவானாலும் அவன் கிடைத்தால் போதுமே
29
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை தென் குருகூர் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிளர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11
பொரும் ஆழி சங்கு உடையோன் பூதலத்தே வந்து
தருமா றோரே துவறத் தன்னை திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பாதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading