எம்பெருமான் தன்னோடு கலந்து களித்த கலவியை
ஆழ்வார் அருளி செய்கிறார்
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவையும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திரு வின் மணாளன் என் உடை சூழல் உளானே 1-9-1
கிட்டி எட்டி இடையில் உள்ளவை உள்ளவர் எவையும் –எல்லாரும் -தானே ஆகி-ஆக்கி–நிலை நிறுத்தி ஆதாரம் போல் சித்ரதுக்கு சுவர் போல் நிர்வகித்து தாங்கி–தாரக போஷகன் இவனே–அண்டத்துக்கும் –காற்று வீச கடல் அலை வீச –சர்வ ஆதாரம்
தனி முதல்-விளையாட்டாக செய்கிறான் அனைத்தையும் –தான் அகப்படாமல்-நம் கண்ணன் தான் என் அமுதம்
சுவையன் -லீலை திவ்ய மங்கள விக்ரகம் -திரு நாமம் சொல்வதே அமுதம்-மதுரம்-16108 பட்ட மகிஷிகளும் வேண்டுமே இவனை அனுபவிக்க அந்த கண்ணன் -பிராட்டிமார்கள் விடாய் தீர்க்க பல் உரு கொண்டது போல் தானே பல ரூபம் கொண்டு
என்னை சூழ்ந்து இருக்கிறான் -விஸ்வ ரூபம் காட்டியது போல்- எங்கும் கண்ணன் -திவ்ய சஷு தந்து விடாய் தீர்த்து தன்னை அனுபவிக்க வைக்கிறான்
சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடைய அம்மான்
வேழா மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகல் இலானே -1-9-2
பல சூழ்ச்சிகள்–கபடம் பண்ணி ஷேமம் செய்கிறான்–தன் இடம் வராதவரையும் -காம்யார்த்த புத்தி மாற்றி தன்னை
கேட்க்கும் படி –குவலையா பீடம் முடித்தான் பத்து வயசில்-விண்ணவர்க்கு எண்ணல் அரியவன்–
பிரளய காலத்தில் ஆல் இலை பாலகனாய் தனியாக சயனித்து -அருகல்-அகலாமல் இருக்கிறான்
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல மேனி வண்ணன் செம் தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே 1-9-3
பிராக்ருதம் பரிமாணம் உடையது –
நித்ய அமுதம் ஸ்ரீ வைகுண்டம் ஒன்றே
விகாரம் இன்றி திவ்ய மங்கள விக்ரகம் கொண்ட நித்யர்
கரிய நீல மேனி வண்ணன்
செம்தாமரை கண்ணன்-
பாலா ராமன் வெள்ளை-
வெண்ணெய் திருட ஏற்ற உருவம் கண்ணனுக்கு
கருட வாகனம் உகந்து ஏறும்
ஏகாந்த வல்லபன்-பெரிய பிராட்டியாருக்கு
எல்லாம் எனக்கு கொடுத்தான்-
வீற்று இருக்கும் /திருவடி திரு தோள்களில் /பிராட்டி மார்கள் விஷயத்தில் திரு அடி திரு மார்பு
ஒவ் ஒரு அவயவம் ஏக தேசம்-ஆழ்வாருக்கு எல்லா வகையிலும் பரிமாறி-விடாமல் பூர்ணம்
பூரணமாக பூரணத்தை அனுபவிகிறார் இவர் ஒருவரே
உடன் அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி ஆல் இலை சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலை யானே 1-9-4
மூன்று தேவிமார்-கும்பகன்-நீளா தேவி–சத்ய பாமி -பூமி பிராட்டி/ ருக்மிணி ஸ்ரீ தேவி-
பூமி பாரம்நீக்க வந்ததால் பூமியே இவன் மகிஷி-
கருணை வடிவாம பெரிய பிராட்டி /சீதை ராஷசிகளை சரண் அடையாமலே ரஷித்து-பாபானாம் வா –தப்பு பண்ணாதவர் இல்லை
ராவணனுக்கே மித்ர பாவத்துடன் -சரணாக வத்சலன்-
பூ தேவி பொறுமையே வடிவாக கொண்டு–சகித்து கொண்டு-அகிர்தம் அனைத்தையும்
இருவரும் அருகில் -நீளா தேவி-அன்பே வடிவமாக -பிரேமை –தான் பெற்ற பிள்ளையை தாய் அடிக்கலாமே-பொறுமை இன்றி–கருணை பொறுமைக்கு ஆதீனம்–நம்மது பாசம் இருந்தால் தான் அன்பு இருந்தால் தான் பொறுமை- அன்புக்கு கருணை பொறுமை இரண்டுக்கும் ஆதீனம்- பிராட்டி ஐஸ்வர்யம் /அது விளையும் பூமி மண் மகள்- அதை புஜிகிற போக்தா –வடிவாலே துவக்கி அவன் திரு உள்ளத்தில் குற்றம் பார்க்காமல் இருக்க பண்ணுவாள்- பெரிய பிராட்டி கொஞ்ச வேண்டும் –மூவரும் இருக்க -ஆளும் உலகமும் மூன்றே -லீலா நித்ய விபூதி-லீலா விபூதி பூமி பிராட்டிக்கு/நித்ய விபூதி பெரிய பிராட்டியார் /மூன்றாவது உலகம் பக்தி பிரேமை-சம்சாரமும் வேண்டாம் ஸ்ரீ வைகுண்டமும் வேண்டாம்-நீளா தேவி-களங்கம் இல்லா அன்பு கொடுக்க -மூன்று சக்தியும் முக்கியம்-சந்தினிபெரிய பிராட்டி -கிரியா ஞான சக்தி பூமி இச்சா சக்தி -நீளா தேவி
அனைத்தையும் சேர்த்து ஆல் இலை சேர்ந்தான் -கண்ணன்-கடல் போல் ஆஸ்ரித சேஷ்டிதம்-ஒக்கலையில் இருக்கிறான்–அம்மா ஆனார் ஆழ்வார் இடுப்பில் கொண்டார் இவனை
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சினுள் உளானே 1-9-5
ஒக்கலை கொண்டு முலை பால் கொடுத்த பூதனை–முழு முதல் கடவுள்-மாயன்-நெஞ்சில் உளானே
மாயன் என் நெஞ்சினுள் உள்ளான் மற்றும் யாவர்க்கும் அக்தே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோளின் இணையானே 1-9-6
அனைவருக்கும் மனசில் இருக்கிறான்-சரீரமும் அவன் தான்
ஆத்மாவும் அவனே பஞ்ச பூதங்களும் அவனே
தூரச்தனும் கிட்டே இருப்பவனும் அவனே
தெரிந்த பின்பு கிட்டே -அறியாமல் தூரச்தன்
ஆச்சார்யர் காட்டிய பின்பு கிட்டே வருகிறான்
சிந்தித்து அறிய முடியாது-
இரண்டு தன்மை-துயக்கன் மயக்கன்
பவித்ரன் தூயன்
அதாதோ பிரம விசார -புரிந்து கொண்டேன்-முட்டாள்
புரியவில்லை என்று புரிந்து கொண்டால் புரிந்தவன் ஆகிறான்
அறிவுக்கு அப்பால் பட்டவன்
அனைத்தைக்கும் ஆதாரமான உணர்வு என்று புரிந்தால் ஞான சொரூபன் அறிந்தால் துயக்கன்
புத்தியால் அறிய முயன்றால் மயக்கன்
ஸ்ரீ பாதம் தூக்கி -சந்தோஷம்-ஆழ்வார் தோளில் உளானே
சுமந்த்ரனே தேர் ஒட்டி பெருமிதம் அடைந்தது போல்–
திக் விஜயம் நம் பெருமாள் பல வருஷம்-தோளில் கருட சேவை போல்
சர்வ அங்கங்களாலும் அனுபவிகிறார்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தன் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடைய நாவினுளானே 1-9-7
துளசியில் ஆசை போல் ஆழ்வார் இடமும்
தோள்/மார்பு /கிரீடம் /திரு அடி எல்லாம் சூடி கொண்டது போல்
கோடி பாக்கியம் புண்யம் ஒரு துளசி கொண்டு அர்ச்சித்தால்-
பச்சை துளசி மலை நிற்கிறான்
சர்வ அங்கங்களிளாலும் சர்வ அங்கங்களிலும் பொருந்தி
தன்னாகவே என்னை ஆக்கி கொண்டு நாவில் உளானே
நம் பெருமாளே திரு வாய் மொழி -அகலாமல் சான்னித்யம்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணின் உள் உளனே 1-9-8
ஞான கலைகள் எல்லா வற்றுக்கும் சரீரம் ஆவி ஆகியும் ஆக்கியும் –
நீல மேக சியாமளன்
கண்ணிலே உள்ளான்-நீங்காமல்
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண் நுதல னொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9
அவன் கண்ணால் ஆழ்வார் கடாஷிகிறார்
அஷ்ணி புருஷன் உபநிஷத்
ஆத்மா தான் கண்ணால் பார்க்கிறது இது ஜன்னல் தான்
அந்தர்யாமி-தியானம் பண்ண வேண்டும்
பஸ்யதாம் அஷிணி -இவ
கபடம் இன்றி-அமலங்களாக
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே 1-9-10
யோக தசை சாஷாத் கறித்து நெற்றில் உச்சியில் உள்ளான் என்கிறார்
உச்சி உள்ளே நிற்கும் தேவ தேவற்க்குக் கண்ண பிராற்கு
இச்சை யுள் செல்ல வுணர்த்தி வன் குருகூர் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11
விண்ணப்பம் செய்வார்-அருள பாடு-
கருணை பண்ணி-காரணம் இன்றி செய்த உபகாரம்
தானே வலிய வந்து ஆழ்வாரை ஆக்கி திரு வாய் மொழி அருள வைத்தான்
இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்து வந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொன் தாள் நம் சென்னி பொரும் -திரு வாய் மொழி நூற்று அந்தாதி -9
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply