திருவாய்மொழி- 1-8-ஓடும் புள்ளேறி – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

தேவதைகளின் அந்தர்யாமி -குணங்களால் ஈடு பாடு –
வேதம் அபகரித்து போனால் மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் கொண்டு கொடுக்க
பூமி உத்தாரணம் பண்ணி வராக பெருமான்-இன்றும் நிறுத்தி வைத்து கொண்டு இருக்கிறான்
கூர்மம் ஆக மந்தார மலை தாங்கி அமிர்தம் கொண்டு–அமிர்தம் கொடுத்து
கிருபை ஒன்றையே பாட  ஆழ்வார்கள்–தேவர்கள் பிரயோஜனாந்தர பரர்
இரந்தும் தன் சொத்தை- பெற்று மகா பலியையும் பெருமை படுத்தி- தர்மம் நிலை நாட்டி-கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-
அனந்த கல்யாண குணங்கள் –நிர் குணம்-  தோஷம் இன்றி-

ஓடும் புள்ளேறி

சூடும் தன் துழாய்
நீடு நின்று அவை
ஆடும் அம்மானே –1-8-1
சத்ய காமன் சத்ய சங்கல்பன்-சர்வக்ஜன் -ராமன்
கண்ணன் பூர்ண அவதாரம் –வைதீக பிள்ளை மீட்டு-தூது போய்-குணம் சொல்லி மீளாது
அனுபவம் இதில்
கருட வாகனம்-பறக்கும்-துழாய் சூட்டி கொண்டு-நீண்ட காலம்-நித்தியமாய் லோக வஸ்து லீலா கைவல்யம் -அகலகிலா விளையாட்டு உடையவன்-
அம்மானாய்ப் பின்னும்
எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட
செம்மா கண்ணனே –1-8-2
சர்வ ஸ்வாமி-பரமஸ்வாமி-
எல்லா உறவாகும் ஆவான்
தேர் ஓட்டும் அளவுக்கு நண்பன்
குதிரை ஆட்டம் ஆட முதுகை கொடுக்கிறான்
நாயகன் கோபிகள்
பிரபு
அந்தர்யாமி
தாயாய் தந்தையாய் -சர்வமும் –
கடிய கேசி குதிரை கீண்டவன் கேசி காட் -வெந்து போகும் படி –
கண்ணாவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேம்கட
விண்ணோர் வெற்பனே 1-8-3
அவனே லஷியம் கண்ணாவான்-
குளிர்ந்த மலை வேம்கடம்
இருவருக்கும் போது இரட்டை பிரஜை முலை கொடுக்க நடுவாக முகம் காட்டி-இருக்கிறான்-
நிலா தேவருக்கும்-வான் தேவருக்கும்
எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே-
சௌசீல்யம் சௌலப்யம் போன்ற குணம் பார்க்க –வருகிறார்கள்
பக்தி விசேஷம்
வெற்ப்பை ஓன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே  1-8-4
ஆயர் மக்களுக்கு குன்று எடுத்து காத்தானே
ஏழே வயசில்-
இடுப்பு வளையாமல் விரல் வளையாமல் -நாய் குடை போல்-இலகுவாக
கொடியேறு –வாடிற்றிலே -சுண்டு விரல் நுனி சிகப்பு மாறாமல்
ஏழு நாள் நிற்கும் அம்மான் சீர்
கிரிதரன் பெயர்-கிரி வாசி இங்கு-கோவர்த்தனம்- கோவிந்தா பெயர் கிடைத்தது-
அடிகோல் பாசுரம்
வைகலும் வெண்ணெய்
கை கலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே  1-8-5
எப் பொழுதும் வெண்ணெய் உண்பான்
வைகலும் -கண்ட பொழுது எல்லாம்
கை கலந்து உண்டான் அறியா பிள்ளை
இரண்டு கைகளால் அமுது செய்தான்
இடது கையால் சாப்பிட கூடாது தெரியாத பிள்ளை பருவம்
வெண்ணெய் என்றால் அதற்கும் விஸ்வ ரூபம் கொண்டு ஆயிரம் கை கொள்வான்

கலந்துஎன் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மானாய்
நிலம் கொண்டானே 1-8-6
வாமனன்-அத்புத அழகிய -புலன்கள் கொள்ளை கொள்ளும் படி
ரிஷிகள் அனைவரும் எழுந்து வியந்து-தரிசனம் கண்டு-
ஆவி கலந்தான்-ஆனந்த மயம்
கொண்டான் எழ விடை
உண்டான் எழ வையம்
தன் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே1-8-7
ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தான்-எண்ணம் போல் ஆனான்
நினைத்ததை-பிரார்த்திக்காமல் நினைத்து மேல் அனுக்ரகித்து
அக்ரூரர் குசேலர்-அணைத்து பரிமாற்றம்
எல்லை இல்லா அருள் புரிகிறான்
ஆனானான்  ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தானாய சங்கே 1-8-8
மாடு மேய்க்கும் ஆயன் ஆக ஆனான்
பசு நிறை மேப்பில் உகக்கிறான்
கன்று மேய்த்துஇனிது உகந்த காளை
மன்னார் -ஆயன்-மன்னார்குடி மன்னார் கோவில்
மீனோடு ஏனமும் ஆனான்-
எதுவானாலும் ஹேயம் இல்லை அவன் கொண்ட உருவத்தால்
சங்கை இன்றி -அவதாரங்கள் கணக்கில் அடங்காதவை -அசந்கேயமான அவதாரங்கள்
சங்கு சக்கரம்
அம் கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே 1-8-9
அச்சோ ஒருவர் அழிகிய வா
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டே
நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே 1-8-10
நாதன் அவன் தான் -லோக நாதன் மம நாதன்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
கடல் போல் பொங்கும் வேதத்தில் சொல்ல பட்ட நீர்மை உடையவன்
என் அம்மான் -பெருமை உடன் சொல்லி கொள்கிறார் ஆழ்வார்

அவன் குணங்களும் கடல் போல் எண்ணி முடிக்க முடியாது
நீர் புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இலையே –1-8-11
அணை கட்டி -கருணை பிரவாகம் -தடுக்க முடியாது
தன் உடன் கலந்த அவனை படியை  அனுபவிகிறார்
பாகவதர் திரு மேனியில் அவனுக்கு அசை
ஆழ்வார் உத்சவமும் அவனுக்கு தானே
ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதார் உடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடு அறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை  -திருவாய் மொழி நூற்று அந்தாதி -8
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading