திருவாய்மொழி 1-6-பரிவதில் ஈசனை பாடி – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

பரிவதில் ஈசனை பாடி
விரிவது மேவலுருவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்
புரிவதுவும் புகை பூவே  1-6-1
முகுந்தன்-முக்திம் ததாதி -முகுந்தன் -ஸ்ரீ வைகுண்டமே பரம பதம்
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஆராதனைக்கு எளியவன்
துளசி தமம்-தன்னை விலை பேசி கொடுத்துவிடுகிறான் –
குணம் தக்க படி-சத்வ குணம் –
ஹிருதயத்தில் ஆராதிக்கும் பொழுது நாமே -விராட் தானே -அனைத்தும் அவன் சரீரம் -சூர்ய திரு கண்
சந்தரன் மனஸ்–
வருணன் நாக்கு -அக்னி வாக்கு அஸ்வினி தேவதை மூக்கு இந்த்ரன் புஜம்
சர்வ பூதங்களும் பாதம் சத்ய லோகம் கிரீடம் விஸ்வ ரூபம் காட்டினான் அனைத்தையும் ..
திரு நாம சங்கர்தனத்தாலே -யாகம் -நம்பாடுவான் காலில் விழுந்து உத்தாரணம் பெற்றான் மாதங்கன் –
யாகம் யக்ஜம் க்ரமம் படி செய்ய வேண்டும் தீஷை முக்கியம் –
சுருதி மீறினவன் மம துரோகி என்கிறான்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்

பஷ பாதம் இல்லாதவன்-
அன்பு கொண்டவர்கள் அனைவர் இடத்திலும்
சர்வருக்கும் ஆள் ஆகுவான்
விபீஷணன் பெற்று உய்ந்தான் -ரிஷி போல்வாரும் குகன் சபரி போல்வாரும்
விதுரர் /கண்டா கர்ணன் ஜடாயு பசு கன்றுகள் /ஸ்ரீ பாத சேவை தாயாரும் நாமும் -யசோதை
பூதனை இருவர் இடமும் பால் குடிக்கிறான் –

சுக தேவர் கிருகம் போனானே ராஜாக்கள் சூழ -வசிஷ்டர் வாம தேவர் காச்யபர் மார்கண்டேயர் -அடியே-கூப்பிட -ஏழை பிராமணர்-
அனுசூயை ஜன்னல் வழியாக பெருமாளையும் பிராட்டியையும் பார்த்தது போல் -பக்தி நிறைய கைங்கர்ய ஹானி வரும்-
ஸ்ரீ பாத தீர்த்தம் பிரோஷித உடன்-அபிஷேகம் பண்ணி கொண்டு -சத்து மா அமுது-பரவசம்-உங்கள் அனுக்ரகம் வேண்டும் என்று நான் இருக்கிறேன் -ரிஷிகளை பூஜிக்க -பிரம வித்யை உபதேசிக்கததும் சுத கீதை உபதேசம் செய்தான் –பஜாம்  அஹம் பக்தனை புஜிகிறான்–மனோ பாவம் படி உபதேசம் பண்ணுகிறான்விரிவது மேவல்-மகிழ்ச்சி-அந்தமில் பேர் இன்பம் பெறுவீர்

ஆகாரம் சங்கம் பொறுத்து குணம்-
சத்ய குணம் -பிரிவகை இன்றி -வேறு வகை வேண்டாம்
தூப கைங்கர்யம்/தீர்த்த கைங்கர்யம் செய்து -உரிமை ஆசை உடன் செய்து
மதுவார் தன் அம் துழாயான்
முது வேத முதல்வனுக்கு
எதுவேது ?என் பணி ?என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே  1-6-2
தேன் மணக்கும் துழாய் அணிந்து -அஷ்ட மகிஷிகள் கண்ணன் வீட்டில் துடப்பமாக இருந்தாலே போதும் -எது எது என் பணி –

எது தேவையோ அதை செய்து –அனைத்தும் அவனுக்கு தகும்-வெட்கம் இன்றி கிடைத்த கைங்கர்யம் செய்து —
நம்பிள்ளை ஈடு காலஷேபம் -திரு விளக்கு பிச்சன் முதுகை அமுக்கி எட்டி பார்த்தான் பெரிய பெருமாள் –கிடைத்த பாக்கியம் அவனுக்கு –
பெருமாள் சம்பந்தம் பெற –எந்த கைங்கர்யமும் பொருந்தும்
ஈடும் எடுப்புமில் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவள் பாடல்
ஆடும் என் அனங்கம் அணங்கே  1-6-3
ஈசன் இடத்து-ஈடு இணை இல்லாதவனுக்கு -சொரூபம் கைங்கர்யம் –

கீர்த்தனம் கைங்கர்யம்-நா பாடும் –அவன் பாடல்-அரங்கத்து அரவணை பள்ளியானே -தாலாட்டு வரை நீராட அமுது உண்ண அனைதைக்கும்
பாடி ஆடி-அனுபவித்து -தேவ தாசி போல்-அணங்கு-ஆவேசம் -பிரேமை
அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணம் கெழு கொள்கை யினானே -1-6-4
பஜனை பண்ணும் பொழுது அங்கம் எல்லாம் ஆடும்

ஆவேசம் வந்தது போல் –வந்தனம்-நவ லஷண -அரசனம் கீர்த்தனம் முன்பு சொல்லி
பூர்வர் இருந்த திவ்ய தேசம் என்ற அபிமானத்துடன்
அமரர் பிதற்றும்-அவனை புரிந்தவர் யாரும் இல்லையே
பிணங்கி-தர்க்கம் பண்ணி-மத்யஸ்தன் அவன்
அஸ்தி நாஸ்தி என்பதால் உள்ளது அழியாது இல்லாதது உருவாகாது –
அர்க்யம் கொடுக்கும் பாக்கியம் பெற்றோம் நமக்கு-அனைத்தும் அவன் அருள்
தர்க்கத்தால் அடைய முடியாது குணங்கள் எண்ண முடியாது
கொள்கை கொளாமை இலாதான்
எல்களை ராகமிலாதான்
விலகி வில்லாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே 1-6-5
எதையும் விரும்பாதவன்-

அவாப்த சமஸ்த காமன் –
பக்தி ஒன்றே வேண்டும்-தன்னாலே பிறர்க்கு எண்ண பிரயோஜனம்
விஷம் கொடுத்தாலும் உய்ந்து போனாள்–அமிர்தம் பெற்றாள்.
பற்றுதலோ நெகிழ்ச்சியோ இல்லாதவன் -ராகமோ எளகளோ இல்லாதவன்
விட்டு போவதோ விட்டு போகாததோ இல்லாதவன்
அவன் உடன் கலந்த வர்க்கு அவனே அமுது போல்
விதுர போஜனம்-விரும்பி உண்டானே –ஆராதனைக்கு எளியவன்
அமுதம் அமரர் கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே –1-6-6
தேவர்களுக்கு அமுதம் கொடுத்தவன்-
எங்கும் உள்ளவனுக்கு எங்கு ஆசனம் எங்கு ஆதாரம்
பரம பவித்ரனுக்கு எப்படி திரு மஞ்சனம்
பற்று இல்லாதவன்
சர்வ கந்தன் புஷ்பம் சந்தனம் எப்படி சமர்பிகிறது
அகண்ட வியாபகன் எப்படி பிரதஷினம்
வாக்குக்கு எட்டாதவனை எப்படி ஸ்தோத்ரம்
பர பிரமம் நினைத்து முடியாது
பால கிருஷ்ணன் என்று நினைத்து வெண்ணெய் அமுது செய்யவோ நீராட்டவோ முடியும் தாய் பாவத்தில்
அமுதமாய் இருக்கும் அவன் தன்னை நமக்கு கொடுத்தான் -ஆரா அமுதம்

சுடர் விட்டு பிரகாசிக்கிறான் -தன்னை கொடுத்து நாம் அனுபவித்தும்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்

தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள் கடலைக் கழிமின் 1-6-7
ஜல கிரி வன துர்கம் கொண்ட இலங்கை முடித்தான்
அபயம் சர்வ பூதேப்யோ-சக்ருதேவ -ஒரு தரம் -அவன் சொல்ல
ஆழ்வார் நாள் கடலை கழிமின் -நம் ஆசைக்கு -செய்து கொண்டே இருக்க வேண்டும்
மோஷதுக்கு ஒன்றே போதும் -அவனை அறியாத முன்பு இனிக்கும் அறிந்த பின் கடல் போல் இருக்குமே சம்சாரம்
தேக அவாசானே –பொழுது போக்க கால ஷேபம்-கர்த்தவ்யம் ஹரி கீர்த்தனம் –பக்தி பொழுது போக்கு -கழிமின் தொண்டீர்காள் கழித்து

தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல் வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே 1-6-8
தொண்டீர்காள்-கைங்கர்யம் செய்து கொண்டே

ஆசை பட்டாலே போதும் -அவனேகொடுத்து விடுவான்-அவன் கார்யம் ஒழிந்து தானே வாழ்க்கை விஷயம்
விரோதம் பிரதி பந்தகம் கழிப்பான்
அவனுக்கு எழுத பட்ட பின்பு அவன் சொத்து தானே இது தானே சொரூபம் நமக்கு

தரும வரும் பயனாய
திரு மகளார் தனி கேள்வன்
பெருமை வுடைய பிரானார்
இருமை வினை கடிவாரே 1-6-9
தருமத்துக்கு பலன்-ஹரி பக்தி இருக்க வேண்டுமே
கோபிகள் அனுபவித்தார்களே
அவனை விட அடைய வேண்டிய ஒன்றும் இல்லை
கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக் கண்
கொடியா வடு புள் ளுயர்த்த
வடிவார்மாதவனாரே  1-6-10
அடு-அசுரர் அழிக்க அழகிய சௌந்தர்யம் கொண்ட மாதவன்-ஸ்ரிய பதி

மாதவன் பால் சடகோபன்
தீதவமின்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே  1-6-11
ஏதம்-குற்றம்
உபசாரம் -பண்ண வந்து -அபசாரம்
எச்சில் வாய் கொண்டு உன்னை பாடவா தீதிலா வார்த்தை கொண்டு
அவன் பெருமைக்கு வராமல் இருக்க அவன் அருளால் பாட வேண்டாம்
என்னை தன்னால் இன் கவி பாட வைக்கிறான் –
இந்த பத்தை பாடினால் பிறவாரே –
பரிவதில் ஈசன் படியை பண்புடனே பேசி
அரியன் அலன்  ஆராதனைக்கு என்று –உரிமை உடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ் உலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு -திருவாய் மொழி நூற்று அந்தாதி -6
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading