திருவாய்மொழி-1-5-வள ஏழ் உலகின்– ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

வள ஏழ்  உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
கள வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கலவா என்பான் பின்னையும்
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இள வேரு ஏழும் தழுவிய எந்தாய் ! என்பன் நினைந்து நைந்தே–1-5-1
வளம் மிக்க அனைத்து லோகங்களுக்கும் தலைவன்–லீலா விபூதி நாயகன்

வானோர் இறை நித்ய சூரி நாயகன்
அவனை வெண்ணெய் திருடி-கள்வா என்பன் -இதுவே கோபி பாவம்-போக்கிரி-
ஏலா பொய்கள் உரைப்பானே
அகிலருக்கும் அந்தர்யாமி-சகே -எங்கள் நண்பனே
வானோர் இறை -கள்வா எனக்கு-
நவநீதா சொரன்-தொட்டு உண்ட -சேஷ்டைக்கு என்று -அவனை முறுவல் ஒன்றால் திருடிய கள்வி
கள்வி-ஏற்றவள்- நப்பின்னை-முல்லை கொடி போல்–வல்  ஆள் ஆயர் தலைவன் இவன்-ஆளுகின்ற –
அவனுக்கு பரிஷை வைத்து ஏழு ரிஷபம் தழுவினான்-
முன்பு வில் வளைத்து  பரிஷை இங்கு ரிஷபம் -அசுர வேஷம் கொண்ட எருதுகள் -அதை தழுவி முடிந்தால் இவளை
தழுவலாம்
எந்தாய்-இப்படி நீ செய்யலாமா -என் அப்பனே யசோதை பாவத்தில் கேட்கிறார் ஆழ்வார் -நினைந்து நைந்தார்
அழகிய மணவாளன் ஆக நீ இருக்க
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகை யோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள் கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ?  மாயோனே !—-1-5-2
தேவர் முனிவர் பலர் நிற்க -நினைந்து நைந்து இருக்கிறார்கள்

காப்பாற்றியதை நினைந்து
பாரி ஜாத மாலை கொண்டு இந்த்ரன்   /வருணன் நீரும் அக்னி தூபம் கொண்டு —
நித்யரே உன்னை தொடலாம்–பெருமாள் ஆலிங்கனம் பண்ண திரு அடி விலகி-நீச பாவம்
கண்டரும் தொட்டு-அனைத்தும் வித்து மூல காரணம்-சிதையாமல் இருகிறாய் —
பவித்ரத்தால் அனைவரும் பவித்ரம் ஆகுவாரா —
அந்தர்யாமியால் உனக்கு தோஷம் தட்டாமல் இருகிறாயே
 மாயோனி களாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளை படை என்று நிறை நான் முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்  திசைகள் எல்லாம் திரு அடியால்
தாயோன் எல்லா எவ் உயிர் க்கும் தாயோன் தான்ஓர்  ஒருவனே –1-5-3
தகுதி உடைய நான்முகனை படைத்தான்

பிர பஞ்ச ஸ்ருஷ்ட்டி-
அணியன் சேயன்
தூரச்தன்-திரு அடியாள் தாயோன்-எல்லா உயிர் க்கும் தாய்போல் -தானே காரணன்
தான் ஒரு உருவே தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் பெரு நீர் தன னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4
தான் எக்க– ஏகமேய அத்வீதியம் அகில காரணன் அத்புத காரணன் நிஷ் காரணன் –எல்லாம் தானே ஆனான்

பிரளய ஜலத்தில் யோக நித்தரை செய்யும் மா மாயன்-மாயைக்கு அதி பதி-ஸ்ரீ வைகுண்ட நாதனே என் பெருமான்
என்கிறார் ஆழ்வார் மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் ! மாதவா !

கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் ! கோவிந்தா !
வானார் சோதி மணி வண்ணா ! மதுசூதா ! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப் பாதம் சேருமாறு வினையேனே  –1-5-5
மான் போல் அழகிய -மான் போல் மட நோக்கி- மா தவன்-

கூனி கூன் போக -உபமாதா போல் பெற்ற தாய் போல கைகேயி
பால ராம சேஷ்டிதம்–நிமிர்ந்தாள்-கூனி பெயர் மட்டும் தான் இருந்ததாம்-
கோவிந்தா -கொண்டை கொண்ட -உள் மகிழ்ந்த நாதன் ஊர்-பெயர் சொல்ல வில்லை திரு மழிசை ஆழ்வார்
கண்ணனும் நிமிர்த்தான் தொட்டதுமே
மற்றோர் அவயவம் வாட்டம் இன்றி அனாயசமாக நிமிர்தான் பெருமாள்-இருந்தும் கூனி வஞ்சம்-
ஆஸ்ரிதரை அவத்யம் காணாமல் -விஷயீகரித்து போக்குபவன்  -புத்தி வாக்கு வக்கிரம்-போக்கி –
தீம்பு சொல்வது -செய்வது இல்லை- சொல்வது கண்ணன் தானே திரு ஆராதன பெருமாள்-பெரியவாச்சான் பிள்ளைக்கு
பெருமாள் தீங்கை அவன் பக்கல் இட்டு கோவிந்தா என்கிறார் -பெருமாள் என்று சொல்லாமல்-
சௌலப்யம் படுத்தும் பாடு -பெருமாள் சாது தர்மாத்மா பெயர் எடுத்தார்-கண்ணனோ கள்வன் திருடன்-ஏலா பொய்கள் உரைப்பான்
ஆத்மாநாம் மானுஷம்-போய் தானே பெருமாளும் சொன்னாரே –
கண்ணன் துரு யோதனன் கூட தான் சர்வேஸ்வரன் சொல்லி கொள்வான்
 யாருக்கும் மெய்யன் அல்ல -பல்லாயிரவர் இவ் வூரில் தீமைகள் செய்வார் கண்ணா உன்மேல் அன்றி போகாது செல்லமே வாடா பெரி ஆழ்வார்
வினையேன் வினை தீர் மருந்தானாய் ! விண்ணோர் தலைவா ! கேசவா !
மனை சேர் ஆயர் குல முதலே ! மா மாயனே ! மாதவா !
சினை யே தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் ! ஸ்ரீதரா !
இணையாய் ! இனைய பெயரினாய் ! என்று நைவன் அடியேனே –1-5-6
வினையேன் வினை தீர் மருந்தானாய்-நீயே மருந்து என் பிரதி பந்தம் நீக்கிகைங்கர்யம் கொடுக்க வேண்டும்
கூடாரம் போட்டு திரியும் -மனை சேர் ஆயர் -நிரந்தர மனை இல்லாதவர் -இவர்களுக்கு முதல்
மா மாயனே -மாதவா –
தேனும் பாலும் கலந்தது போல் பெருமாள் கண்ணன் விருத்தாந்தம் கலந்தே
பொருத்தம் உடைய நம்பி
நாராயணன் அவனுக்கு பொருந்தும்
தன்மை நினைத்து உருகி போகிறேன்
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தன் அம் துழாய் கன்னி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர் வுண்டே ?1-5-7
அவன் முன் அனைவரும் சிறிய ஞானத்தன்
கடல் போல் அவன் -கடல் கரை நின்று பார்த்த அளவு பேசலாம்
ஆழ்வார் நைச்ச்ய அனுசந்தானம்
மதி நலம் அருள பட்டவர் மெய் ஞானி இருந்தும்
பெருமாளும் நானும் முயற்சிக்கிறேன் சொல்லி கொண்டு வில் பிடித்தாரே மிதிலையில்
பரிமளம் கொண்ட துளசி மாலைதரித்து
செடி மண்டி கிடக்கும் சம்சாரம்-தீர்க்கும் -தன்னை அண்டியவர்களை
தன் திரு அடி கொடுத்து பிராக்ருத சரீரம் கொடுப்பவனை காண்பதற்கு அலற்றுவன்
இதனிம் மிக்க அயர்வு உண்டா -சமாதானம் ஆகாத

உண்டாய் உலகு எழ முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்த்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண்   மருந்தோ?  மாயோனே ! 1-5-8
உலகு அனைத்தும் உண்டாய் –உலகு உண்ட பெரும் வாயா —
மண் தின்ன பின்பு-வயற்றில் உள்ளோர் -பீர்-சோகை வருமே -சாம்பல் உண்டு சோகை வருமே
வயற்றில் உள்ளோர் சோகை வராத படி மண்ணை கரைய வைக்க நெய் உண்டாய்-மருந்து போல்
மாயோம் தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப் பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ் உயிர் க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே  -1-5-9
அவனை சார்ந்து மாய மாட்டோம்–
தீய புத்தி கொண்ட பூதனை அழியும் படி-
தூய குழவி-பவித்ரன்-உஅசொதைக்கு கொடுத்த பாக்கியம் கொடுத்தான்
நெஞ்சில் நினைத்தாலே நல்ல கதி கிடைக்குமே
பூதனை சரீரத்தில் மணம் வீசிற்றே
மாயன்-தனி தலைவன்-மைந்தன் நித்ய யுவா -யுவா குமாரன்
தனக்கு  தானே ஸ்வாமி-தம்மான்   எனக்கு ஸ்வாமி
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞான சுடராகி அகலம்  கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடு மாலே ! 1-5-10
ஆர்ந்த -அகண்டமான -பரி சேதம் இன்றி -அகலம் கீழ் மேல் -உபநிஷத் போல்- உருவத்தாலே வியாபித்து -அந்தர்யாமி-அருவாகி-
தாரக போஷகம் ஈஸ்வரன் தானே
அவன் இரு வல் வினைகள்-பாப புண்ய கர்மா நீக்கி-மாய பற்று அறுத்து தீர்ந்து
வீடு திருத்துவான்-ஆள் கொண்டான்-என்ன கைம்மாறு செய்ய –
மாலே ! மாயப் பெருமானே ! மா மாயனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்
பாலே ய்  தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –1-5-11
ஆச்சர்யகர சேஷடிதம்-செய்பவனே -அவனை விட்டு இல்லாத வஸ்து இல்லை
அவனிடம் பித்து பிடித்து -அவன் அருளாலே வாழும் ஆழ்வார்
உபஜீவனம்-மூவருக்கும் ஞானிகள் முமுஷுக்கள் அஞ்ஞானிகள் —
தமிழர் பற்று மட்டும் உள்ளவருக்கும்
புலவர்
இசை காரர் சங்கீதம்
பத்தர்-மனம் உருகி பக்தியால் -மூவருக்கும் பால் போல் இருக்கும்
ஆயிரத்தின் பால் பக்தர் ஆன இவர்களுக்கு உலக பாசம் நீங்கி அவன் இடம் பாசம் மிக்கு போகும்
வளம் மிக்க மால் பெருமை மன்னு உயிரின் தண்மை
உளம் உற்ற அங்கு கூட உருவ ஓர்ந்து –தளர் உற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து   -திருவாய் மொழி நூற்று அந்தாதி -5
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading