யஷ பிரசன்னம்-3- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

முந்திய கேள்வி  ஸ்ரார்ததுக்கு உண்டான காலம் -விஷ்ணு புராணம் இது பற்றி நிறைய –நித்ய- நைமித்திக காம்ய ஸ்ரார்தம்–வருஷம் முழுவதும்/அமாவாசை நித்ய/12 மாத பிரவேசம் விஷ்ணு அயன புண்ய காலம் கிரகணம் நதி தீர்த்தம் ஆடும் பொழுதும் ஸ்ரார்தம்-வஸ்து கிடைத்த பின்/கயா பூமி தொடும் காலம் –அமாவாசை கூட அனுஷம் விசாகம் ரேவதி  சேர்ந்தால் 8 வருஷ புன்யமாம்..அமாவாசை/புனர்வசு நஷத்ரம் சேர்ந்தால்12 வருஷ புன்யமாம் //மாசி அமாவாசை தனி சிறப்பு–

/-83 கேள்வி -குணம் பழக்கம் பற்றி –எது தபஸ்- ஆலோசனை பண்ணுவது தபஸ் -அனைவருக்கும் வேணும் பிரமம் பற்றி ஆலோசனம் பண்ணுவதே சுய தர்மம் விடாமல் பண்ணுவதே தபஸ்–விதிக்க பட்ட தர்மம் விலக்காமல்-வர்ண ஆஸ்ரம தர்மம் நிலை நிற்பதே தபஸ்- ஸ்ரேயன் சுய தர்மம் பண்ணுபவன்-கீதை – முழுதாக பண்ணிய ஞான யோகம் விட குறைந்து பண்ணும் கர்ம யோகம் சிறந்தது -கீதை

மனஸ் அழுக்கு நீங்க கர்ம யோகம்–பழகியது கர்ம யோகம் தான்–மூன்று தியாகம் உடன் செய்ய வேண்டும்
84th எது தமம்-அடக்குதல்- மனஸ் அடக்குவது–இது திரும்ப திரும்ப கேட்டு புரிய வைக்கிறார் சஞ்சலமான மனஸ் என்பதால் –இந்த்ரியம் மூலம் வெளி போகும் மனஸ் -நியமித்து ஆத்மா வசத்தில் வைக்க வேண்டும்–நல்ல விஷயத்தை நோக்கி திருப்ப வேண்டும்..
85th கேள்வி-பொறுமை  பல வற்றில் எது மிக சிறந்த பொறுமை -துவந்த சகிப்பது இரட்டைகளை–சுக துக்கம் சீத உஷ்ணம் மானம் அவமானம் வெற்றி தோல்வி லாபம் நஷ்டம் –முக் குணம் அற்று இருக்க வேண்டும்–நிர் துவந்த மோஷம்–இரட்டை தாண்டுவதே மோஷம்-கீதை-பொறுப்பது தாண்டுவது-ஒன்றையே மற்றதாக நினைப்பது–நித்ய சத்வனாக இருக்க வேண்டும்- முக் குணத்தில் இரண்டை குறைத்து –சத்வம் வளர்த்து–ரஜோ தம குணம் குறைக்க -நிர் யோக ஷேம னாக இருக்க வேண்டும்—கிடைக்க ஆசை  யோகம்–கிடைத்தது தங்க ஷேமம்- -சத்வ குணம் வளர்க்க ஆத்மா குணம் வளர்க்க வேண்டும்..கிடைத்த பரமாத்மா ஞானம் தங்க வேண்டும்–துவந்தம் தாண்ட இதுவும்- ஆத்மவான் ஆகவும் வேண்டும்.. ஆத்மா சிந்தனை பண்ண பண்ண சத்வம் வளரும் –முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று-திரு மங்கை ஆழ்வார்–பகவத் பக்தி வளர்த்து

86th கேள்வி-வெட்கம் எது –முன்னோர் செய்யாதவற்றை செய்யும் பொழுது வெட்கி விலகுவதே -பரதன்-ராமன்-இஷ்வாகு குல பழக்கம் மூத்தவன் ஆள்வது முன்னோர் மொழிந்த முறை ..- தன நெஞ்சில் தோற்றுவதை மொழிந்து -இது சுத்த உபதேசம் என்றும் சொல்வார் மூர்கர் ஆவர் மா முனிகள்–மென் கிளி போல் மிழற்றும் பேதையே -எல்லே இளம் கிளியே /வளர்த்ததனால் பயன் பெற்றேன் -மட கிளியை கை கூப்பி வணங்கினாள் -மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்–செய்யாதன செய்யோம் —
87th கேள்வி—எது ஞானம் ஆக கொண்டாட படும் -தத்வ அர்த்தம் ஆராய்ந்து அறிவதே ஞானம்–யாதாத்மா ஞானம் உள் உரை பொருள்–கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ..ஞான மாயன் ஞானம் உடையவன்-மேல் எழுந்த -தேகமே ஆத்மா என்றால் அறியாதவன்-செருக்கு வரும் இது மட்டும் அறிந்தால்- சேஷத்வ பாரதந்த்ர்யா ஞானம் உள் உரை பொருள் யாதாத்மா ஞானம் சம சித்தம்- உயர்ந்தவன் தாழ்ந்தவன்- வித்யா வினைய சம்பந்தன் கேவல சம்பந்தன்- சூர்பணகை–முறம் போல நகம் கொண்டவள்- கூட நேர்மை பெருமாள் காட்டி –சிரிப்பு இங்கு வைத்தார் வால்மீகி–துர் முகி -இடுப்பு பெரிசு –சுகேசம் செம்பட்டை கேசம்–ஆர்ஜவம் சம சித்தை–லோக சரண்யன்

91st கேள்வி  -எந்த சத்ரு வெல்ல முடியாதவன்-கோபம் தான் அரிதான சத்ரு-குருவை கூட கொல்வான் கோப காரன்- கோபம் ஜெயித்தவன் வச பட்டவன் பெருமாள் 16 கல்யாண குணம் -சித குரோதக -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்குவார் –சினம் காக்க தன்னையே கொல்லும் சினம்–
92nd கேள்வி எந்த வியாதி முடிவு இல்லாதது -சம்சாரம் கிருபையால் முடியும் -லோபோ பேர் ஆசை முடிவு இல்லாத வியாதி –பிரவ்ருத்தி தூண்ட முயன்று கர்மம் சம்பாதிப்போம்-ஆதி சேஷன் பதாஞ்சலி ஆக -யோக சூதரம் அருளியவர்– யோகம் சித்தம் அடக்குவதே யோகம்–
93rd கேள்வி-சாது யார்- சர்வ பூத ஹிதம் கேட்பவர் -நன்மை நினைப்பவன்
என்னை  பெற்ற தாயாய்தந்தையாய் ஹிதம் பிரியம்-

94th கேள்வி–சாது அல்லாதவன் எப்படி பட்டவன்-தயை இல்லாதவன்-பிறர் கஷ்டம் பட்டு துடித்து ஓடி போய் உதவுதல் பிரதி பலன் பார்க்காமல் அவன் கேட்காமலே –தயை சிறந்த குணம்-தயா சதகம்-தேசிகன்-தோஷம் ஆகும் அவன் கல்யாண குணங்கள் இது மட்டும் இல்லாமல் இருந்தால்-ஞானம் கொண்டு பாபம் அறிந்து வீரம் கொண்டு தண்டிப்பார் தயை இல்லாமல் இருந்தால்–ராமன் அனைவருக்கும் முன் சுக துக்கம் –சர்வ பூத தயை–
95  கேள்வி எது மோகம் மயக்கம் -பகுதுஅறிவு இன்றி வர்ண ஆஸ்ரம தர்மம் இன்றி இருப்பதே —
96எது மானம் -அபிமானம் செருக்கு -துர் மானம் -முக் குறும்பு-கடந்து இருக்கும் -மொழியை கடக்கும் தான வித்யை குல –குரங்கு பைத்தியம் தேள் கொட்டி கள் குடித்தது போல் இவை சேர்ந்தால்..-ஆட்டி படுத்தும்
97 th கேள்வி–எது ஆலச்யம் -சோம்பல்-  வர்ண ஆஸ்ரமம் தர்மம் செய்யாமல் இருப்பது —
98th எது சோகம்-அறிவின்மை தான் மிக பெரிய சோகம்–ஞானம் இல்லாததே -மாசுச –
99th -தைர்யம் உறுதியாக நிலை நிற்பது எது -தம்தம் தர்மம் நிலை நிற்பதே –யுதிஷ்டிரன்-உறுதியாக இருந்தாரே சண்டையில்-அர்ஜுனன் தர்ம அதர்ம மயக்கம்-
100th கேள்வி எது தைர்யம் யார் தீரன்-இந்திரிய நிக்ரகம் வசப் படுதுவபவனே தீரன் –101 கேள்வி–எது மிக பிறந்த ஸ்நானம் மனஸ் அழுக்கை போக்கி கொள்வதே

102 தானம் எது பூத ரட்ஷனம் அபயம் சர்வ பூபேப்யோ விரதம் ஸ்ரீ ராமன் கிரக பெருமாளுக்கு அமுது செய்து சமர்ப்பிக்காமல் கல்யாண விருந்தினால் என்ன பலன்–சாமான்ய விசேஷ தர்மம்-பண்டிதன்-இரண்டையும் அறிந்தவன்

104 கேள்வி /105 கேள்வி ஒரே பதில் இரண்டுக்கும்..–நாஸ்திகன் யார் /யார் மூர்க்கன் -இரண்டுக்கும் -கேட்ட கேள்வியே பதில்..நாஸ்திகனே மூர்க்கன்.
தன நெஞ்சில் தொற்றினத்தை சொல்லி இது சுத்த உபதேச வார்த்தை என்பவர் மூர்க்கர் -ந அஸ்தி சொல்பவன்-பர லோகம் பர பிரம்மா ஆத்மா இல்லை சாஸ்திரம் வேதம் இல்லை என்பவன் நாஸ்திகன் அசத் ஆகி யே இருக்கிறான்-வேதம் பிரமம் இல்லை என்பவன் -விகல்பம்-கேள்வி உடைத்து-உண்டு ஒத்து கொண்டு தோஷம் இல்லை என்று தோஷம்- உண்டு என்பதை எந்த பிரமாணம் -பிரத்யட்ஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாது -வேதம் ஒத்து கொள்ள வேண்டுமே ..இல்லை என்றால் தோஷம் சொல்ல முடியாதே –

106 எது காமம் சம்சார ஹேது— காமம் வாசனை கர்மா காமம் சங்கிலி தொடர் –சுழல்-வெட்டி வெளி வர –கர்மம் தொலைக்க ஜன்மம் எடுத்து மேலும் கர்மா சம்பாதித்து -மேலும் சஞ்சிதகர்மாவில் கூட்டி –சஞ்சித பிரரார்ப்த கர்மா-இரண்டு வகை–கிருபை பலத்தால் ஒள் வாள் உருவி கிட்டி களைவான்-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி
எது பொறாமை-மற்றவர் வாழ்வு கண்டு–வைபவர் சொல்வதை கேட்காமல்-அவன் சேஷ்டிதம் நினைந்து–திசை திருப்பி-இதை மறக்க வேண்டும்–
108 எது அகங்காரம் பெரிய அக்ஞானம் – அகங்காரம் அர்த்த பஞ்சக ஞானம் இல்லை என்றால்  இதுவே அகங்காரம் வர காரணம் நீர் நேமது –வேர் முதல் வைத்து ஆழ்வார் –

109 கேள்வி –எது டம்பம் -செய்யும் தர்மம் பறை சாற்றி செய்வது டம்பம்–முடி சேர் அடி சேர் முடியர் ஆக தொழ இருக்காமல்–காலம் தாழ்க்காமல் கண்ணன் திரு அடி பற்றுங்கள்-
110 கேள்வி எது உயந்த தெய்வம் –தான பலமே மிக பெரிய தெய்வம் 111 கேள்வி –எதுபிசினம் — கோள் சொல்வது -பர தூஷணம் –கிரீடம் தேவ பெருமாளை காட்டி கொடுத்ததே  பராத் பரன் என்று -கூரத் ஆழ்வான் -பிசன சப்தம் இங்கும் -கோள் சொல்லி காட்டுமே –

112 கேள்வி– தர்மம் அர்த்தம் காமம் -மூன்றும் எப்படி சேர்ந்தன -தர்மம் வைராக்கியம் வேண்டுமே-பரஸ்பர விரோதிகள்- எப்படி சேர்ந்தன–மூவரும் தர்மமும் கை பிடித்த மனைவியும் ஓன்று சேர்ந்தால் கிட்டும்–ஆசை யாக கை பிடித்த மனைவி-காமம் தர்மம் சேர்ந்து -தர்மார்தம் பிரஜை வளர்க்க கை பிடிக்கிறோம்-கல்யாண மந்த்ரம்–தானே அர்த்தம் கொடுக்கும்-தான தர்மம் செய்தால்–கொண்ட பெண்டிர் –நல்ல கோட் பாடு –நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -பலன் சொல்லி –அனுகூல பெண்டிர் மக்கள் -அடுத்து சொன்ன கொண்ட பெண்டிர் –பிரதி கூல பெண்டிர் மக்கள்–பணத்தை கொடுத்து கொண்ட பெண்டிர்–எல்லாம் ஆக கொண்ட பெண்டிர்–இயம் சீதா மம சுதா சக தர்ம சரிதவ —

113 கேள்வி–அஷய நரகம்-திரும்பி வரதா நரகம் எது–மூன்று பதில்- கை முதல் இல்லா பிராமணரை கூப்பிட்டு இல்லை என்று ஏமாற்றுவது /வேத விஷயம் தர்ம சாஸ்திரம் பிராமணர் தேவர் பித்ரு பற்றி  பொய் பேசுபவர்/கை பணம் இருக்கும் பொழுது தானம் கொடுக்க அறியாமல் 114 கேள்வி-பிராமணர் எத்தால் -குலமா அனுஷ்டானமா கற்ற வேதத்தாலா அதன் அர்த்தம் அறிந்ததாலா -நான்கு கேட்டார் –பெரிய பதில்–வேத அத்யயனமோ அர்த்தமோ இல்லை அனுஷ்டானமே கொடுக்கும் -கற்ற பின் நிற்க அதற்க்கு தக-நாய் போலே வியர்த்தம் மேலே நிமிர்ந்து இருக்கும் ஈ ஒட்டாது மர்ம ஸ்தானம் மறைக்காது -வீண்-எதற்கு படைத்தான் உதாரணம் சொல்ல

115 கேள்வி பிரியமாக பேசுபவன் என்ன கிடைக்கும்-அனைவருக்கும் பிரியமாக இருப்பான்-கனி இருப்ப காய் கவர்ந்து -குயில் போல்-
116 -நன்றாக ஆராய்ந்து செய்பவன் கார்யம் வெற்றி பெரு வான்  -வாலி- ராவணனின் விரோதி விரோதி நண்பன்-சுக்ரீவன் இடம் நட்பு கொண்டார் பெருமாள்
117 நல்ல நண்பர் நிறைய இருந்தால் சுகம் பெறுவான் –இடித்து உரைத்து திருப்புவார்கள்
118 -தர்மத்தில் ஆசை உடையவன் எதை அடைகிறான்-தர்ம புத்ரா சொல்–என்ன நிலைனையிலும் பதில் சொல்கிறார்-தம்பிகள் இறந்து இருந்தும் -விசுவாசம் உடன் பதில்–ச கதிம் லபதே நல்ல கதி அடைகிறான் பதில்–அஸ்வத்தாமா சொல்ல வைத்த கஷ்டம் அறிவோம்
119 யார் ஆனந்த படுகிறான்-கடன் வாங்காமல்/பிழைப்பு தேடி வேர் இடம்  வேற தேசம் போகாமல்/மதியம் உணவு கீரை பிரசாதம் உண்டு முடித்தவன் 12 மணி முதல் 2 மணிக்குள்/
120 எது ஆச்சர்யம்-ஒன்பது துவாரம் திறந்து இருந்தும் ஆத்மா போகாதது
121எது பரம ஆச்சர்யம்–சேஷர்கள் மிச்ச பட்டவர்/ தூக்கி கொண்டு போகிறவனும் இவனை வைத்தே கணக்கு -சாஸ்வதம் என்று பிரமித்து -ஓட்டை மாடம் புரளும் பொது அறிய மாட்டீர் –121 -எது நல் வழிதர்க்கம் இல்லை/வேத வாக்கியம் நிறைய/ரிஷி பலர்/தர்ம தத்வம் மறைத்து சொல்லும் வேதம்//பூர்வர் முன்னோர் வழி படி-குறு பரம்பரை சிஷ்டாசாரம் –

122 -தினப் படி நடப்பது எது-சமையல் நடக்கிறது -பதில்-பூமி பாத்ரம் ஆகாசம் மூடி காலம் சமையல் காரன்/ஸ்தாவர ஜங்கமம் விறகுகள் வஸ்துகள் / அக்னி சூர்யன் மாசம் ரிது கரண்டி -சமையல் கூடம் இது-
123 கேள்வி புருஷன் இப் பொழுதும் கொண்டாட படுபவன் யார்-ஹிருதய புரத்தில் இருப்பவன் புருஷன்- கீர்த்தி வார்த்தை இருக்கும் வரை-நல்ல செயல் நீடித்து இருக்கும்–யச புகழ் பரவி
124 எல்லா தனமும் படைத்தவன் யார்–பிரியம் அப்ரியம் சுகம் துக்கம் போன வரும் காலம் பற்றி கவலை இன்றி ஆசை இன்றி சாந்தம் ஆக இருப்பவன் தர்ம மார்க்க சிந்தனை உடன் அனுஷ்டிப்பவன் தான் தனம் படைத்தவன்
பதில்களால் ஆனந்தம்-வேண்டிய வரம் கேள்– நீ யார் தர்ம புத்ரன்கேட்க-இயற்க்கை-எம தர்ம ராஜன்-உன் தகப்பன்-உன் தம்பிகளில் ஒருவனை-நகுலனை கேட்டார்-குந்தி தேவி/மாத்ரி தேவிக்கு நகுலன் /சந்தோசம் அடைந்து நால்வரையும் கொடுத்தான் வரம் என்ன வேணும் கேட்டதும் அரணி  கட்டை கேட்டான்

பிராமணர் கேட்டதால்-கடமை உணர்வு தான் தர்மம்–கொடுத்தான்
அக்ஜாத வாசம் யார் கண்ணிலும்-விராட தேசம் போக-இயற்க்கை உடன்போனாலும் கண்டு பிடிக்க மாட்டார்கள்-இரண்டாவது வரம்
மூன்றாவது தானம் தபஸ் சத்யம் வளர /லோபம் மோகம் கோபம் கூடாது–இதையும் கொடுத்தான்
பல சுருதி-கேட்டவர் படித்தவர் -இந்த்ரியம் ஜெயித்து தன சொல் படி கேட்க்கும் பிள்ளைகள் பெறுவார்-மித்ர பேதம் அதர்ம புத்தி போகாது –
தர்ம சிந்தனை மன ஷாந்தி கிட்டும் -தான தர்ம சீலன் ஆவான்
பொலிக பொலிக பொலிக –கடல் வண்ணனுக்கு ஆள் ஆகி மலிய பெறுவார்
வேத வியாசர் திரு அடிகளே சரணம்
அல்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading