ஞான சாரம்-15/16/17/18-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

மடி தடவாத சோறு–விதுரன்  -சுருள் நாறாத பூ -மாலா காரர் -சுண்ணாம்பு கலவாத சந்தனம் –கூனி

கண்ணனுக்கு சமர்பித்தார்கள் -தூய பக்தி -பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அநந்ய பிரோஜன நிஷ்டர் –
வஸ்த்ர சந்தன புஷ்ப அலங்காரம் யுத்த பூமிக்கு போகும் பொழுது அனைத்தும் கல்யாணம் தானே அவனுக்கு
வண்ணான் அபசாரம்-ஸ்வாமி-இவனுக்கு ஆக மூதாதையர் அபராத ஷாமணம் பிரார்த்திக்க -காரேய் கருணை –

குடியும் குலமும் எல்லாம் கோகனகை  கேள்வன்

அடியார்க்கு  அவன் அடியே  ஆகும்  –படியின்  மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியை சேர்ந்து இடம் ஆய்ந்து அற்று –15வரண பேதம்-ஜாதி வாசி நிறம் பேதம் கொண்டு ஆறுகள் கடலில் கலந்த பின்பு நதி தனி தன்மை கேட்டு நாம ரூபா பேதம் ஒழியும்

அதுபோல் அவன் திரு அடி -கடல் அடைந்த பின்பு -குடியும் கிராமம் -குலமும் கோத்ரமும் சூத்ராதிகளும் கோ கனகம் -தாமரை -அனைவரும் அவன் தாசர்கள் –ஒரே சம்பந்தம் –திரு அடிக்கு அடிமை-அவை வந்தேறி-இது தான் ஸ்வாபம் –எப் பிறவி எடுத்தாலும் மாறாது  –ஆர் கலி ஆர்கின்ற ஒலிக்கின்ற கடல் கோ கனகை பங்கஜம் போல் புது பெயர்கள் –பேரும் நிறமும் அற்று மாய்ந்திடும்-படி பூமியில் காணும் படி ஓடின நதிகள் –புண்ய நதி பெயரை சொல்லலாம் ஒப்பிட்டு அதற்க்கு உசத்தி இதற்க்கு தாழ்வு பார்க்க கூடாது –அவன் இடம் அடிமை தனம் ஒன்றே அடையாளம்..–உதாரணத்துடன்-விப்ரர்க்கு-பாராசர பராசர போல் -கூடஸ்தர் -பராங்குச பரகால யதிராஜ -ஆத்மா சம்பந்தம் ஆண் அல்லன் -பெண் அல்லன் -அல்லா அலியும் அல்லன் -அவன் -பெருமாள் திரு அடி தான் பராங்குசர்–வேதாந்தம் அந்வயம் இன்றி திரு வாய் மொழி அந்வயம் இன்றி -ஸ்ரீ சடாரி வாங்கி ஆழ்வார் சம்பந்தம் பெற்று மோஷம் அடைய –கோ கனகம் ஆவது தாமரை–சேஷன்–பரகத அதிசய ஆதாநேசய-உபாதேய -அவன் பெருமைக்கு அனைத்து முயற்சி செய்பவன்- தனக்கு ஒன்றும் பண்ணி கொள்ளாமல்–குலம் கோத்திரம் வந்தேறி சேஷ சேஷி தொடர்பு நித்யம் இயற்க்கை-வாசல் காப்பான் சுந்தர பாண்டியன் தாங்குவான்-திரு கரக கையெல் -கைங்கர்யமே அடையாளம்..விஷ்ணு சம்பந்தம் இட்டே -சமுத்ரம் சேர்ந்த பின்பு நாம ரூபம் தொலைப்பது போல்-அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை–போக மாதரம் -அனுபவத்தில் திளைத்து சக்தி ஞானம் உண்டு -சிருஷ்டி கூட பண்ண முடியும் -பண்ண மாட்டான் –படி=பூமி ஆர் கலி =-மிடுக்கு உடைய சப்திக்கும் கடல்-சேஷத்வ ஞானம் வந்த உடனே இங்கேயே பேதம் நீங்கும் -என்கிறார்-தேவர் மனிசர் திர்யக்கு தாவரமாம்

யாவையும் அல்லன் இலகும் உயிர் -பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாள்க்கே அடிமை நான் –15
ஆத்மா பிரத்யக் -மயில் அகவும் -நாய் குறைக்கும் -மயில் உடம்பை கொண்டதால் -அனைவரும் ஆத்மா நீ யார் சேஷ பூதன்-அனைவரும் இதே பதில்–நான் பெருமானுக்கு அலகு இடுபவன் பாசுரம் சேவிப்பவன்-கைங்கர்யம் கொண்டு பெயர்– ஆளும் ஆளார்—- வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க நீ கூவுதல் வருதல் செய்யாயே –ஒவ் ஒன்றிலும் கூட்டம் கூட்டமாக கைங்கர்யம் செய்யலாமே ..உயிர்= ஆத்மா தேவர் மனுஷன் இல்லை அவன் தாள்க்கே அடிமை

நீ யார்-பதில்-மனிதன் உடலை கொண்ட ஆத்மா -அகங்காரம் அஹம் பாவம் தேக ஆத்மா விவேகம் இன்றி–அஹம் சப்த கோசரம் ஆத்மா என் உடைய சரீரம் போல் என் உடைய சரீரம்–விவகாரம் வழக்கு  பேச்சு வார்த்தையில் -உபயோகிக்கும் -தேவன் மனித சப்தம் சரீரம் தான் குறிக்கும் -ஆரணங்கு-தெய்வ பெண்-அமலன்-ஹேய பிரதி படன் அறிவே வடிவாம் ஞான ஆனந்த சொரூபன்–இலகு =விளங்கும் திரு அடி தாமரை அடைந்து கைங்கர்யம் பண்ணி ஒளி விடுகிறான் பரம் ஜோதி தானே அவன்–உடம்பில் இருக்கும் பொழுது ஒளி தெரியாது -சொரூப யாத்தாத்மா ஞானம் புரிந்தவன் பாகவத பர்யந்தம்–கர்ம பேதத்தால் இந்த தேவாதி-தேவன் மனுஷ்ய  வகை—-அவித்யை ஜன்மம் கர்ம வாசனை ருசி–ஐந்தும் தெரிந்து கொள்ள வேண்டும்–

அவித்யை–ஞான அனுதயம் பிறக்க வில்லை-விபரீத ஞானம் ஒன்றை மாற்றாக நினைத்தால்–கயிறு பாம்பு பிரமம் போல் சரீரம் ஆத்மா விவேகம் இன்றி இருத்தல் அடுத்து -அன்யதா ஞானம் பர தந்த்ரன் பண்பை சவா தந்த்ரம் என்று நினைத்தது–இந்த மூன்றுமே அவித்யை தாய் போல்
இதனால் -புரிந்த படி நடவடிக்கை-கர்ம -பாப புண்ய -சாஸ்திர ரூப நடவடிக்கை- விதித்ததை செய்யாமல் பாபம்-
கர்ம தொலைக்க பிறவி- வாசனை -பதிவு சம்ஸ்காரம்-பழக்கம் -ருசி-ஈடுபாடு-தப்பு வழியில் போவதற்கு ..-க்ருத்ய அகர்ணம் அகிருத்ய கரணம்–தூண்டுதல் தப்பு வழியில் போக அது தான் ருசி–நெருங்கின துக்க சுழல்-இவை– இப் படி பல யோனி எடுத்து தேகத்தில் அஹம் புத்தி பண்ணி–ஆத்மா சொரூப ஞானம் ஏற்படும் முன் –இயற்க்கை தன்மை தான் சொரூபம்–ஞான மயம் அணு-சூஷ்மம் – ஆனந்தம் நித்யம் சேஷ பூதன் -பூவின் மிசை -மலர் மேல உறைவாள்- உறை மார்பினன்–அணங்கு =தெய்வ பெண் //அமலன் -குற்றம் இன்றி மலத்துக்கு எதிர் தட்டு //நாரணன்-அனைத்துக்கும் ஆச்ரயமாய் பிரகாரியாய்–வர்ணமும் இல்லை ஆஸ்ரமும் இல்லை பிராமண வாக்கியம் தாசத்சத தாசன் புவன பாவனா ஸ்திதி –அடியார் அடியார்–அடியவன் தான்–ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக

என்றும் இறவாது இருந்திடுக –இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தத் தெளிந்த பின் –17
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்..-சொரூப ஞானம் அறிந்தவன் நிலை முன்பு விளக்கினார்
ஐஸ்வர்யம் –வந்து போகும் –நித்ய அபாயம் அன் அபாயம் நித்ய அனபாயிநிம் -ஆயுசு ஸ்திரம் அஸ்திரம் -இவற்றால் துன்பம் பட போவது இல்லை -எங்கு வைத்து கைங்கர்யம் பண்ணினால் என் -கர்வம் கிலேசம் சொரூப ஞானம் உள்ளவர்க்கு இல்லை-தன்னை தெளிந்த பின்–சொரூப ஞானம் வந்த பின்-யானே என்னை அறிய கில்லாதே –யானே நீ என் உடைமையும் நீ – இந்திர செல்வம் கேட்காமல் வந்தாலும்-பழம் நழுவி பாலில் விழுந்தாலும் — போனாலும் –ஐஸ்வர்யம் வந்து போனாலும் —என்றும் இறவாமல் இருந்தாலும்-பீஷ்மர் ஆசை பட்ட அன்று இறக்கலாம்–நடக்க நம்மால் சங்கல்பிக்க முடியாதே –ஆசை மாறும் மந்தி பாய் வட வேம்கட மா மலை-இன்றே இறக்க -இவற்றால்-களிப்பும் கவரவும் -கிலேசம்– களிப்பும் கவரவும் அற்று ஆழ்வார் பாசுரம்–நீண்ட ஆயுள் சரீரத்துக்கு தானே -ஆத்மா நித்யம் தானே -வெட்டுவதோ உலர்துவதோ நனைப்பது இயலாது–சரீரம் அவனுக்கு என்ற எண்ணம் வந்தால் எப்பொழுது  திரு அடியில் சேர்த்து கொண்டாலும் களிப்பும் கிலேசமும் இல்லை–நல குரவும் செல்வமும் -விடமும் அமுதமும்-இரட்டை தாண்டனும் வெற்றி தோல்வி –போல் -இங்கும் -நம் ஆழ்வார் 16 ஆண்டுகள் பேசாமல் /பராசர பட்டர் இனி இருந்தால் படி கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டம்.செல்ல–தன்னை தெளிந்த பின் ஸ்வ சொரூப ஞானம் தானான ஆத்மா சொரூப ஞானம் சேஷ பூதன் பரதந்த்ரன் சூஷ்ம நித்ய ஞான ஆனந்த மயன்

திவி வா புவி வ நரகே வா -குலசேகரர்-முகுந்த மாலை-நரகம் தொலைத்தவனே கூப்பிட்டு அருளுகிறார் திரு அடி மறக்காமல் இருந்தால் போதும் என்கிறார்-பாவியேன் என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்து -ஆழ்வார் -பாவி சொல்ல முடியாதே சத்யன்-அவன் கடாஷத்தால் பாபம் ஒழிந்தது  –
சர்வேஸ்வரன் -தன் பக்கல் பக்தி மான் -ஆனாலும்-சம்சாரிகள் சம்பந்தம் கொண்டவர்கள்-ஒரு கோஷ்ட்டி-தொடர்பு இல்லாதவர்களுக்கு எளியவன்-இருவரும் பக்தர் தான்–அபக்தன் தொடர்பு அறுக்க வேண்டும்
ஈன மிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும் –தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதவர்க்கு அறவு அரியன்
மட்டார் துழாய் அலங்கல் மால் –18
சௌரி சிந்தா விமுகர்-ஆபிமிக்யம் ஈடு பாடு கொண்டவர்-சௌரி ராஜா சிந்தை சொல்லாமல் சௌரி -இன்றி அமையாத அடையாளம்- -ரெங்க நாத முனி நாத முனி-சத்யா பாமை பாமை-சரண்ய முகுந்தத்வம் பிரசித்தம்–மை வண்ண நறும் குஞ்சி-கலை இலங்கு -கண-கை வளை கொள்வது தக்கதோ–அவனையே நினைந்து -முமுஷு–சரணம் –மரணம் அடைந்தால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–நினைக்காதவர் சம்சாரி–உடன் சம்பந்தம் கொண்டால் நம்மை அவர்கள் பக்கல் இழுத்து விடுவார்-முமுஷு உடன் தொடர்பு கொண்டால் அவர்கள் போல் ஆவோம்..நானும் சொன்னேன் நமரும் அறிய –ஊரார் உமக்கு அறிய சொல்வேன் என்கிறார்–சன்யாசி தியாகி-திரிவித பரித்யாகம் பண்ணினவர் கீதை-

மட்டு =தேன் வெள்ளம் இடும் -மால் பித்தன் -கோஷ்டி பிரித்து விடுகிறான் -சம்பந்தி சம்பந்தி அளவில் போகிறானே –பரிஷை பண்ணாமல்–
எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்பு ஆக நின்றோர் அக் குற்றம் இவ் இயல்பு என்னை ஆள் கொள்ளும்-சம்பந்தம் ஏற் பட்ட பின்பு இல்லை-சம்பந்தம் ஏற்பட்டால் தீயவன் ஆக மாட்டான் சரணா கதி மானசீகம்- செயல் பாகம் இல்லை ஞானம் தான் தெளிவு வேண்டும் –ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் எனபது போல்-அறுத்து கொள்ள வேண்டும் விபீஷணன் செய்தான் கர்ணன் செய்ய வில்லை–செஞ் சோற்று கடன்-தப்பாக சொல்வார்— தர்மர் பேரிலும் தப்பு கோவிந்தா புண்டரீகாஷா சொன்னதும் சொத்து கண்ணன் உடையது தானே என்ற எண்ணம் வரவில்லையே

நேராக வந்தால் முதலில் பாண்டவர் பீஷணர் துரோணர் முடித்து இருப்பன் –கர்ணன்-தவறான சம்பந்தம் கொண்டவன் -ஒரு பாசுரம் இல்லை இவன் மேல—செல்வ விபீசணன்-என்பர்-தேக பந்து விட்டு ஆத்மா பந்து பற்றினான் –பழுது அற்ற பிரேமம் கொண்ட அன்பர்–எய்திலா மானிடர்= பிரதி கூல -வணத்தாலும் =முறைகளிலும் -தான் அறிய -சர்வக்ஜன் அறிய –விட்டார்க்கு சுலபன்
ஈனம் =பொல்லாங்கு –அநந்ய பக்தி ஒன்றாலேயே அடைய படுகிறேன்-கீதை –ஆன் விடை அன்று அடர்த்தார்க்கு ஆளாதானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தில் வைத்தேன்-திரு மங்கை ஆழ்வார்–செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -அவனுக்கே பித்தாராவர் பித்தர் அல்லர் மற்றவர் பித்தர்-ஞானிகளில் அக்ரேசர் இகழும் படி –எய்திலர் ஆம்-பிரதி கூலர் ஆவார்-எல்லா வண்ணத்தாலும் விட வேண்டும் சக வாசம்-சேர்ந்து வாழ்தல்–சத் காரம்-கொடுக்கல் வாங்கல்- சம்பாஷணம் -பேச்சு வார்த்தை ஆகியவை எதுவும் கூடாது ..
தான் அறிய விட்டாதார்க்கு -நாம் அறிந்த  வைஷ்ணவன் இல்லை–நாடு அறிந்த  வைஷ்ணவன் இல்லை– நாரணன் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆக -உள்ளுவார் உள்ளத்தில் இருந்து உடன் அறியும் அவன் அறியும் படி-தான் அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாடு அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாரணன் அறிந்த வைஷ்ணத்வம் —ஆச்சான் பிள்ளை அருளி செய்தார் இறே பெரிய வாச்சான் பிள்ளை வாக்கியம் –இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை-குலசேகரர் — உண்டியே உடையே –மண்டலோதொடும் கூடுவது இல்லை–துழாய் மாலை ஆனா பின்பு திரு மேனி ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று மது ஒழுக -சர்வேஸ்வர சூசுகம் —காட்டி கொடுக்கும் முழு முதல் கடவுள்-உலகோர் தொடர்பு அற்று இருந்தால் தான் முக்தி கிட்டும்-

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading