அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன்
இன் அருளால் செய்த கலை யாவையிலும் –உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப் போது–53
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிக கொண்டு கற்றோர் தம் உயர்க்கு -மின் அணியா
சேர சமைத்தவரே சீர் வசன பூடணம் என
பேர் இக் கலைக்கு இட்டார் பின்–54
ஆர் வசன பூடணத்தின் ஆழ பொருள் எல்லாம் அறிவார் ?
ஆரது சொல் நேரிலனுட்டிப்பார் ?–ஓர் ஒருவர்
உண்டாகில் அத்தனை கான் உள்ளமே! எல்லார்க்கும்
அண்டாத தன்றோ அது ?–55
உய்ய நினைவுடையீர் உங்களுக்கு சொல்லுகின்றேன்
வைய குரு முன்னம் வாய் மொழிந்த –செய்ய கலை
யாம் வசன பூடணத்தின் ஆழ பொருளை கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து -56
உய்ய நினைவு உடையீர்–ஆழ்ந்த பொருளை கற்று–அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் அறிந்து–விஷயம் தெரிந்து அனுஷ்டிக்க வேண்டு.விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்–கேட்டு அதன் படி அனுஷ்டிப்பார்..
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளை சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து –ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடனத்த்ன் வான் பொருளை
கல்லாதது என்னோ கவர்ந்து -57
என் நினைந்து போக்குவர் -இப் போது ஆழ்வார்..மேல் விழுந்து பசியன் சோற்றை கண்டது போல் கவர வேண்டும்..எதிரேக முகத்தால் அருளுகிறார்
சச் சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் உண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூடனத்துக் கற்ற
மதி உடையீர் ! மத்தியத்தராய்-58
ஆதாரத்துடன் வியாக்யானம் பிடித்து கொண்டு அதில் அற்று தீர்ந்தவறாய்–சச் சம்பிரதாயம்-குரு முகத்தால் அறிந்து கொண்டு..-மெச்சும் படி–ஸ்ரீ ராமாயணம் பலர் சொல்ல பலர் கேட்டார்கள் மிதிலை செல்வி –தனி கேள்வி–திரு வாய் மொழியோ இன்பம் பயக்க எழில் மிகு மாதரும் தானும் சேர்ந்து கேட்டார்கள்..பொன் கிடைத்தால் போல் பிடித்து கோல வேண்டும் -நித்தில தொத்து –வியாக்யானம் தா உண்மையான நிதி–தன் உடைய வியாக்யானம் -பிள்ளை லோகம் ஜீயர் அருளுகிறார்..ஆய ஜகன்னதாச்சர்யர் வியாக்யானமும் உண்டு..நாலூர் ஆச்சான் பிள்ளை அருளிய வியாக்யானமும் இருந்ததாம்..மத்யச்தராய் இருந்து கோல் தூக்கி பார்த்து ..-
சீர் வசன பூடணத்தின் செம்பொருளை சிந்தை தன்னால்
தேரிலும் ஆம் வாய் கொண்டு செப்பிலும் ஆம் –ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ
உம தமக்கு எவ் இன்பம் உளதாம் -59
போக்யமாய் இருக்கும் என்கிறார்..சிந்தையால் நினைத்தாலும் பேசினாலும்எப் பொழுதும் போக்கியம் தான்….எனக்கு-உங்களுக்கு எவ் வளவு இன்பம்–ஆரியர்காள்–உபன்யாசம் ஆரு பாசுரம் அருளி–மா முனி போன்ற ஸ்ரீ வசன பூடணம் அறிந்தவர்கள்–பொலிக பொலிக பொலிக -ஆழ்வார் பாசுரம் போல்-மங்களா சாசனம் திருந்தின அடியார்களுக்கு /ஸ்வேதா தீப வாசிகள் வந்தார்கள் இதை பார்க்க அவர்களுக்கு பல்லாண்டு பாடுகிறார்..அது போல் இங்கும் தன்னால் திருத்த பட்டவர்களை..செம் பொருள்–பத்துடை அடியவர்களுக்கு எளியவர் பிறர்களுக்கு அறிய வித்தகன் போல்..-சிந்தையினாலும் .தந்தை –அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன்–அது போல் ஸ்ரீ வசன பூஷணம் –கையார் சக்கரத்து –ஐயோ கண்ணா பிரான் விதி வாகின்றது காப்பார் யார்–பொய்யே கைம்மை சொல்லி–பொய் =ஜகத்தில் உள்ளோரை ஏமாற்ற —கைம்மை சர்வேஸ்வரனை ஏமாற்றுவது – விதி -ஈஸ்வரனின் நிர்கேதுக கிருபை..புறமே புறமே ஆடி–மெய்யே பெற்று ஒழிந்தேன்–கிடைத்தது பரம பதம்—காரணம் விதி வாய்கின்ற்றது-காப்பார் யார் -நிகேதுக கிருபை தலையில் விழுந்தது ..கைங்கர்யம் தடுக்க ஆள் இல்லை..ஈஸ்வரன் பிராட்டி நாம் மூவரும் தடக்கலாம் புறப் பட்டது அவன் இடம் இருந்து கிளப்பி விட்டது பிராட்டி தடுக்க சக்தி இல்லை நமக்கு–ஐயோ..–ஆழ்வார் பெயர் -சொன்னதும் அமுதூரும் ஏன் நாவுக்கே– மூன்றாவது தட்டு ஸ்ரீ வசன பூஷணம்-வேத வேதாந்தம் ஆழ்வார் பாசுரம் ரகஸ்ய த்ரயம் மூன்று தட்டுகள் போல்–ஸ்ரீ வசன பூஷனத்தில் ஈடு பாடு மா முனிகளுக்கு –உபதேசம் பண்ண நமக்கு இனிதாக இருக்கும் என்கிறார்- உம தமக்கு எவ் இன்பம் உளதாம் என்கிறார்..மா பாவம் விட அரக்கு பிச்சமை -கோபால கோளரி–உலகு எழும் சுத்தி திரியும் பெரியோன்-பெரிய பாவம்–சந்தார் தலை கொண்டு திரிந்தான்—-மா பாவம்-விட வேதாபகார குரு பாதக -வியர்வை கொண்டு-நரக நாசன் ஹர சாப விமோசனம் திரு கண்டியூர்….அது போல் ஆனந்தம் நம்மை பொறுத்து ..
பிள்ளை உலகரியன் அருளிய ஸ்ரீ வசன பூஷண மகிமை–இது வரை சொல்லி–பாவின் இன்சைஐஸ்வர்யம் தாண்டி/கைவல்யம்/பகவான்/சரணா கதி /பிரீத்தி கார்ய கைம்கர்யம் /ஆழ்வார் திரு நாமம் இனிக்கும்/பா/இசைப்பா இசைத்து பாடும்-இசை ஒன்றே போதும் பல படிகள் தாண்டி–
தன் குருவின் தாள் இணைகள் தன்னி லன் பொன்றில்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன் -இன்ப மிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான்
ஆதலால் நண்ணார் அவர்கள் நாடு –60
மேல் உள்ள 11 பாசுரங்களுக்கும் சந்க்ரகமான அர்த்தம் -சூத்திரம் படி அருளி செய்கிறார் பிரமாணம்/-அதிகாரி நிஷ்ட்டை இப் பாசுரம் கொண்டு அவர்களை சிரித்து இருப்பார் சரம பார்வை..மூன்று பாகம்-குரு தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்..-ஈஸ்வரன் இடத்தில் அன்பு செய்தாலும்–திரு மந்த்ரம்/திரு பிரிதிக்கு மந்த்ரத்திலும்/மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்து/குரு-பத்ரி நர நாராயணன்-இரண்டு பதிகம்–பகவானே அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அன்பன்–நித்யர் இடம் காட்டும் அன்பை/ தேவிமார் இடம் காட்டும் அன்பை ஆழ்வார் இடம்..-உடம்புடன் கூட்டி செல்ல ஆசை பட்டான் –24 கழித்து-இந்த்ரியங்கள் -ஐ ஐந்து முடிப்பான் சொன்னது திரு வாய் மொழி–ஞானியை விக்ரகதோடு ஆதரிப்பான்…வேறை மண் பற்று கழலாமல் சூடுவது போல் பக்தி வளர்ந்த திருமேனி என்று..-அருள் தருவான் அமைகின்றான் -அருள் பெறுவார் தம் அடியார் தம் அடியேன் –மற்ற பேர் தர்மம் பண்ணுவதை விட தன் வர்ணாஸ்ரம தர்மம் பண்ணுவது சிறந்தது..-அர்த்தம் இல்லை-யாரும் எதையும் பண்ணலாம் என்பதே கூடாது ஞான மார்க்கம் விட கர்மம் சிறந்தது என்கிறான் கீதையில்…தனக்கு என்று இருக்கும் ஆச்சார்யர் திரு அடியில் விழுவதே சிறந்தது…நலம் அந்தமில் நாடு-வேண்டி இரான்-கொடுக்க மாட்டான்-சரண் ஆகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் மோட்ஷ பிரதத்வம்–திரு கண்ண புரம் சௌரி பெருமாள்..செம் தழலே .–பாசுரம் ..நீர் இன்றி இருந்தால் –.உலர்ந்து விடும்–ஜலத்தில் இருந்தால் தான் அலர வைக்கும் கதிரவன் தாமரையை ….ஆச்சார்யர் சம்பந்தம் நீர் பசை போல்–அலர மாட்டான் மட்டும் இல்லை-உலர்த்துவான்..ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் ஈஸ்வரன் மோட்ஷம் கொடுப்பான்..ஞான விகாசம் செய்பவர் ஆச்சார்யர்–
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே வுடைய
னான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர் !
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் -61
உபாய அத்யாவசாயம்-பேரு தப்பாது என்று துணிந்தும் பேற்றுக்கு துவரிக்கை -இப் படி பட்ட ஞானம் -வழு இலா அடிமை செய்ய வேண்டும் துவயத்தை அனுஷ்டித்து/ இவை நல்லது தீயது விவேக ஞானம் மட்டுமே போதும் அடுத்து/ பற்றி விடுகையே அனுஷ்டானம்..வீடு முன் முற்றவும் வீடு செய்து –..புல்கு பற்று அற்றே –பாம்பு ரூப நாசம் இது சொரூப நாசம்–பிடிக்கும் முன் விட வேண்டும்….ஞானமும் வேண்டும் அனுஷ்டானமும் வேண்டும்.. நொண்டி குருடன் இருவரும் -மேல் உட்கார்ந்து தோளில்–அக்னி ஜுவாலை இருக்கும் காலம்..குரு-அஞ்ஞானம் கெடுத்து ஞானம் கொடுப்பவர் நாரதர்-நார நரன் உடன் சம்பந்த பட அஞ்ஞானம் தா கெடுக்கிறான்- ததாதி கொடுக்கிறார் ஞானம் கொடுக்கிறார் -அடைந்தக்கால்- நெடு மர களம் கரை அடைந்தது போல் –மா நிலத்தீர் -குருக்கள் இருக்கும் தேசம் காலத்தில் இருக்கும் பாக்கியம் உள்ளவர்கள்…தேனார் கமல திரு மா மழல கொழுநன்-தானே வைகுந்தம் தரும்..ஆச்சர்யனே வைகுந்தம் தரும் முதல் அர்த்தம்..திரு மால் இரும் சோலை –என் நெஞ்சு நிறைய புகுந்தான் விஷ்ணு சித்தர் கோவில் கொண்ட — அரவதமிளி யினோடும் பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் பட வந்து புகுந்தான்.. –ஏசல் கண்டு அருளுகிறான் ஆழ்வார் திரு உள்ளத்தில்..குழம்பு ஒலி கேட்கிறதே…அவனே வந்து சேர்ந்த பின் இவனே கொடுக்கிறான்..புருஷ கார பூதையும் உண்டே–கொழுநன் தானே–கொடுக்காமல் இருக்க முடியாது–கடகர் பட்சிகள்-தூது விடுவர்–செம்கால மட நாராய்–எம் காதல் தலை மகனுக்கு உரைத்தியாகில் செரப்பாரை பட்சிகள் ஆக்கி..சிறகுகள் ஞானம் அனுஷ்டானம்..அரு கால சிறு வண்டு–விரைந்து போக அரு கால்/தன் தலை மேல் பொருத்தி -ஆச்சார்யர் பத்னி குமாரர் தலை முழுவதும் கொள்ளலாமே…ஆரு பதத்தில் நிலை- துவயம் ஷட் பதம்–வைகுந்தம்-அவன் சொத்து பிடித்தவர்க்கு கொடுப்பன்..
உய்ய நினைவு உண்டாளில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் !–மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கை இலங்கு நெல்லி கனி -62
விண்ணாடு உங்களுக்குஎளிது-பட்சிகள் இடம் சொல்கிறார் ஆழ்வார்..கை இலங்கு நெல்லி கனி போல் பரம பதம் சம்சாரம் நஞ்சுக்கு நல் மருந்து பதினெட்டு ரகஸ்யங்கள்….61st பாசுரம் உயிர் பாசுரம்..-எல்லே இளம் கிளியே சிடம் சிறு காலே திரு பாவையில் உயிர் பாசுரங்கள்..–ஆச்சார்யர் பற்றின ராஜ குல மகாத்ம்யத்தால் பரம பதம் தானே கிட்டும்..–ஆச்சர்ய சம்பந்தம் நீர் பசை–கை இலங்கு நெல்லி கனி–உய்ய நினைவு மட்டும் போதும்– குருக்கள் பதத்தே அன்பு வையும்..-மெய்-சத்யம்–சத்யம் புனர் சத்யம்-பொய்யிலாத மணவாள மா முனிகள்-ராமன் பிரதிக்ஜை பண்ணினான்-சரணம் பண்ணினவனை விட மாட்டேன் ஏதத் விரதம் மம ..–நலம் அந்தமில் நாட்ட இருள் தரும் ஞாலம் இருக்கும் நமக்கே கொடுப்பான்..நடுவாக வீற்று இருக்கும்-பகலோக்கம் இருப்பவன் -பையரவில் மாயன்–மாயம் இவன் பண்ணுவது–அனுபவ ஜனித்த பிரீதி கார்ய கைங்கர்யம் கொடுப்பான்..தருவான்-கேட்டு பெற வேண்டாம் சொத்து நமது என்கிறார் அடுத்து கை இலங்கு நெல்லி கனி–தாதை – சொத்து -புதல்வர் தமக்கு எதிராசர் நமக்கு வாங்கி கொடுத்தார் ..ஆர்த்தி பிரபந்தம்–கை இலங்கு நெல்லி கனி..
ஆசார்யன் செய்த உபாகார மான் அவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்று மேல் –தேசாம்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் -63
உதவி பண்ணியதை சொல்கிறார்.–பகவான் பண்ணியது கிருபை-இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று புறம போக்க வைத்தாயே–மருவி தொழும் மனம் தந்தாய் தீ மனம் கெடுத்தாய்..-என் நெஞ்சில் திகழ் என் செய்தேன் நான்–விவேக ஞானம் கொடுத்து கிருஷி பலம்–அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டு இடும் தன்மை -ஆழ்வார்..அர்த்தம் தேடி தேசாம் தரத்தில் போனாலும் மனம் தான் இருக்க பொருந்த மாட்டாது–சரீரம் வேற மனம்–சித்தம் -சித்தாய் அல்லேன் என்று நீங்க –சித்தம் அசித் தத்வம் –செய்ததாக மாறி நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி போகும்-ஆழ்வார்..–அப்படி இருந்தால் அறியோம்–தோஷம் பேசுவது அழகு என்று அறியோம் என்கிறார்..
அவனே பிராப்யம் -கைங்கர்யம் பண்ண வேண்டும் அதனால் பிரிய மாட்டான் என்கிறார்.
.தன் ஆரியனுக்கு தான் அடிமை செய்வது அவன்
இந் நாடு தன்னில் இருக்கும் நாள் –அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனை
பிரிந்து இருப்பார் ஆர்? மனமே !பேசு -64
நெஞ்சை பார்த்து பேசுகிறார்–புருஷார்த்தம் இதுவே ..கைங்கர்யம் பண்ண வேண்டும்.. அங்கு பகவத் அனுபவம் தானே –இங்கு தான் நாம் கொடுப்பதை கொண்டு ஆச்சர்யர்ஜீவிப்பார்.. கிடாம்பி ஆச்சானை நியமித்தார் திரு கோஷ்டி யூர் நம்பிகள்…நம் பெருமாள் புறப் பாடி- உங்கள் தெய்வம் நீங்கள் சேவிக்க போகலாம் என் தெய்வம் நான் பால் காய்ச்சுகிறேன் மடப் பள்ளி மனம்…ஈஸ்வர கைங்கர்யம் மறந்தாலும் ஆச்சர்ய கைங்கர்யம் விட கூடாது ஆல வந்தார் சிஷ்யர் -தெய்வ வாரி ஆண்டான்-நஞ்சீயர் 4-3 வையம் மன்னி வீற்று இருந்து வான் கோலாச்சு வார்கள் விண்ணும் ஆழ்வார் மண் உள்ளே –ராமா நுஜரைபோல்–உன்ன போகும் சோறை கை விடுமா போல்-.பட்டர் பரம பதம் சீக்கிரம் எழுந்து அருள கைங்கர்யம் இழந்தேன்..முக்காடு போட்டு பின் பக்கம் போவாராம் இழந்த பின் விதவை போல்..-திரு வாய் மொழி பிள்ளை இடம் மா முனிகள் -சரணத்வம் சேஷத்வம் போக்யத்வம் பத த்ரயமும் பத துவயம் பாத இணைகளில் காட்டுவார் உபாய உபேயம் இரண்டுமே ஆச்சார்யர் திரு அடி இணைகளே ஆசார்யன் சிச்சன் ஆர் உயரை பேணும் அவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை –ஆசை உடன்
நோக்கும் அவன் என்னும் நுண் அறிவை கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்-65
ஆத்ம ரட்ஷனம் நோக்கு அவருக்கு -இவர் அவரின் தேக -சீர் வடிவில் நோக்கு-திரு மேனி ஒன்றிலே நோக்கு..கௌஸ்துபம் போல போக வஸ்து அஹம் அன்னம் அஹம் அன்னம்..ஈஸ்வரின் திரு உள்ளம் ப்ரீதிக்கு காரணம் இத்தால்…சொரூபம்-சொத்தை ஆச்சார்யர் திரு அடியில் சமர்பித்து நிர் பயமாக இருக்க வேண்டும்…கூரத் ஆழ்வான் சொர்ண பாத்ரம் எரிந்து ஸ்வாமி பாதமே சொர்ணம் என்றார் –கொள்ளில் மிடியனாம் –ஆச்சர்யர் ஏற்று கொண்டால் மிடியன் ..கொடுக்கில் கள்வனாம்..தன் சொத்து என்ற நினைவு இன்றி அவர் சொத்தை திருப்பி கொடுப்பதாக எண்ணி கொடுக்கணும்..சொத்தே ஆச்சார்யர் உடையது.. தன் சொத்து என்று நினைத்து கொடுப்பதை கொள்ளில் மிடியனாம் –ஆத்ம தத்வம் திறந்து இருந்தாலும் போகாதது ஆச்சர்யம் -பரம ஆசார்யம்-போவார் போகிறார் நாம் இருப்போம் என்ற நினைவு..-யக்ஜா பிரசன்னம்..-மாயை-விளக்க முடியாது ..–ஆர்க்கும் இந்நேர் நிற்கை அரிது– ஓர் இருவர் உண்டு..-அதை காட்டுகிறார் அடுத்து பின்பு அழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பதுவும் அற்று மிக்க வாசையினால் –நம் பிள்ளைக்கு
ஆனா அடிமைகள் செய் அந் நிலையை நல் நெஞ்சே !
ஊனம் அற எப் பொழுதும் ஓர் –66
மோட்ஷ சாம்ராஜ்யம் இழந்து ஆச்சார்யர் திரு மேனி இடமே ஆர்வம்–வேர்வை பரம்பின திருமுக மண்டல சேவை-சுற்றி சுற்றி சுழன்று பண்ணும் கைங்கர்யம் செய்வதே வேண்டும்.. -உயர்ந்த திவம்-என் மனம் ஏகம் என்னும் வைகுந்தம் வேணும் என்பர் ஆழ்வார் ..அதை விட்டு இதையே விருபினர்..-எம்பார் படுத்து பார்த்தார் படுக்கையில்-திரு மலை நம்பிக்கு இட்ட படுக்கை..-நரகம் கிடைத்தாலும் அவருக்கு முள் இல்லை உறுத்தாமல் இருக்கிறதா ..பார்த்தாராம் பாவ சுத்தி வடுக நம்பி நிலை பிரார்த்திக்கிறார் .அனைத்தும் ஆச்சர்யரே வகுத்த இடம்..பாட்டு கேட்க்குமிடமும் -கூப்பிடு கேட்கும் இடம் குதித்த இடம் -ராம கிருஷ்ணா -சாம கானம் கேட்க்கும் பரம பதம்..ஆர்த்த நாதம் வாராய் என் ஆர் இடரை நீக்க வாராய் –வளைத்த இடம் -அரச்சை எங்கும் போக விடாமல் வளைத்து பிடிக்க –ஊட்டும் இடம் உள்ளே பத்தி கிடந்தது இரா மேடம் ஊட்டுவார் போல் -விண் மீது இருப்பாய் ஐந்து பிரகாரம் இதம் பூர்ணம் சர்வம் பூர்ணம் –எல்லாம் ஆச்சார்யர் தான் என்று இருக்க வேண்டும்..-விஷ்ணு சித்தர் மனத்தே கோவில் கொண்ட கோவலன் –ஆண்டாள் இவரை பிடித்தால் போல்..
ஆச்சர்ர–உபாயம் உபேயம்-துவயம் –
ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் –பேசுகின்ற
வார்த்தைகளை கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ! சேர் -67
தெரியாதவர் சொல்வதை கேட்டு நெஞ்சே மருளாதே –பூர்வர்கள் இருந்த நிலையில் இருக்க வேண்டும் -மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்..சரம பார்வை நிஷ்ட்டை–புஷ்பிதாம் வாசாம் போலே பேசுவார்கள்-அலங்கார பேச்சு..கணிசியாதே….அடுத்து யார் பின் போக வேண்டும் என்று காட்டுகிறார்
நாத்திகரும் நல கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரும் ஆம் இவரை –ஓர்த்து நெஞ்சே !
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடு
சொன்னவரை நாளும் தொடர் -68
ஊர்த்து ஆராய்ந்து..உள்ளும் வெளியும் ஆத்திகர்..வேதம் பிரமாணம் என்று சொல்லி கொண்டு விபரீத அர்த்தம் சொல்பவர் ஆத்திகர் நாத்திகர்..அக்ஜனான விஷய பிரவனராய் இருப்பார்கள் –ஞான வானே இருந்தும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று இருக்காமல்.. நல கலை -பிர பத்தி சாஸ்திரம் நல நெறி -உபாய உபய அனுஷ்டானம்..உயர்ந்த சரம பார்வை நல கலை ஆழ்வார் பொன் அடி மேவி திரிவதே நல் நெறி –மூவரையும் பற்றி ஆராய்ந்து –ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–நடு சொன்னவர்-நடு சப்தம் சொல்ல வந்த -தேக ஆத்மா விவேகம் அறிந்தவர் பிரணவ அர்த்தம் அறிந்தவர்../விஷயாந்திர பிராவண்யம் ஒழிந்தவர்கள் நாராயணா சபத் அர்த்தம் அறிந்தவர் வாய்த்த திரு மந்த்ரம் மத்தியமாம்பதம்போல் நம சப்தம் அர்த்தம் அறிந்தவர்..நல்ல மணம் உள்ளது ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் உண்டாம் நயமது போல் –நல்ல
குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு -69
தீய கந்தம் உள்ள தொன்றை சேர்ந்து இருப்பது ஒன்றுக்கு
தீய கந்தம் ஏறும் திறமது போல் –தீய
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் செறிவு கொண்டு -70
கூடி இருப்பதால் பயனும்-கூடாமல் இருப்பதால் பயனும் இந்த இரண்டு பாசுரங்களால் அருளுகிறார் புஷ்பம் சூடி இருந்தால் சிக்கு மணம் மாறி வருவது போல்–ஆச்சான் பிள்ளை-பாகவத சம்ச்லேஷம்-நெடு மரத்தை கரை சேர்க்கும் அபாகவாத விச்லேஷம் தந்து பகவான் இடம் சேர்க்கும் –ஒரு செய் நீர் நிரம்ப பெற்றால்-வயல்-அசல் செய் பொசிந்து காட்டுமா போல் -பக்கத்தில் வயலும் பொசிந்து இருக்கும்..சம்பந்தத்தால் தாழ்ச்சி மீற கடவதாக இருக்கும்…மாலுக்கு வையம் அளந்த மணாளர் க்கு –கோல செம்தாமரை கண்னருக்கு -நான்கு லஷனம் -குழலி -திருஷ்டாந்தம் நான்கும் சொல்ல வேண்டும் –வேதாக பொன் போலே சம்பந்தம் நல்லவர்கள் உடன் சம்பந்தம் ரச வாதி கை குழிகை போல் அனைத்தும் நல்லதாக மாறும்-..ஆதித்யனால் வெளி இருள் நீங்கலாம் –அந்த காரம் விஷ்ணு பக்தன் சம்பந்தத்தால் போகும் –பசு மனுஷ்ய பக்சி வா -எச வைஷ்ணவ –ஒன்றினாலே தத் விஷ்ணு பரம பதம்–ஸ்ரீ வைஷ்ணவ சம்பந்தத்தால் பசுவோ பரப்பனவோ மனுசனோ மூவரும்–நடுவில் மனுச்யனை சொன்னதை ஞானமில்லததர்க்கும் இருப்பதற்கும் உஜீவனம் பாகவத சம்பந்தம் என்று சொல்ல ..பூண்டு வெங்காயம்-கந்தம் கூடுவது போல் தீயவர்கள் உடன் கூடினால் கிட்டும்-தத்வம் மூன்று–அசித் சித் ஈஸ்வரன்–௨௪ தத்வம் அசித்/ ஞானம் உள்ள ஆத்மா அசித் உடன் கூடினால்-சாம்யம்– ஞானம் உண்டு சித் ஈஸ்வர இரண்டுக்கும்/ அசித் சித் பகவானுக்கு அடிமை/ஈஸ்வர அசித் -சேர்ந்தால் அவனை தனக்கு சமமாக ஆக்கும்..ஞானம் கெடுத்துஞான சூன்யம் ஆக்கும்.
.சமன் கொள் வீடு தரும்தடம் குன்றம்..ஆனந்த மயனாக ஆக்கி விடும் தன்னைப்போல்–வீடு மின் முற்றவும் வீடு செய்து –புல்கு பற்று அற்றே கண்ணனுக்கே ஆம் அது காமம்..கருத்த மணம் ஒன்றும்வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை .அபாகவாத சேர்க்கை–அபாகவாத சம்ச்லேஷம் பாகவத விச்லேஷம் பகவான் விச்லேஷம் சொரூப விநாசம் கொடுக்கும்..மர கலம் தரை தட்டும்..
இது வரை ஸ்ரீவசன பூஷணத்தின் திரண்ட கருத்துகளை அருளி தலை கட்டுகிறார்
பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply