விண் மீது இருப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மேல் உழல்வாய் மலை மேல் இருப்பாய் -அர்ச்சை -இதம் பூர்ணம்-பகல் விளக்கு பட்டு இருக்கும் –குற்றம் புரிந்தவர்கள் அங்கு இல்லை..குணம் காட்ட அர்ச்சை ஒன்றே -பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு-அவாப்த சமஸ்த காமன்-கை பார்த்து இருக்கிறான்..–அர்ச்சக பராதீனாக இருக்கிறான்..-நாம் இருக்கும் தேசத்தில் காலத்தில்–புறம்பு உண்டான பற்றுகள் தொலைத்து ..பேரு தப்பாது துணிந்து.. பேற்றுக்கு துவரிக்கையும்….உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் குணா அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காய் கொண்டு..திவ்ய தேசத்துக்கே பிரதாண்யம் திரு வேம்கடம் உடையான் –திரு அரங்கத்து அம்மான் –கண புரத்து கனி மணியே….பாக்ய சாலிகளே திவ்ய தேச அனுபவம் பெறுவார்..அயோதியை மதுரா..பகவான் அவதரித்த திவ்ய தேசம். சீரார் திரு வேம்கடம்..ஆராமம் சூழ்ந்த அரங்கம்..நான்கு பாசுரங்களால் ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசங்கள் அருளுகிறார்
எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணன் ஊர்..-30
மண்ணி என்கிற நதி நீர் தேங்கும் குறையலூர்..
எண்ணி தலை கட்ட முடியாத சீர் ..எண் பெரும் அன் நலத்து ஒண் பெரு சீர்..உலப்பில் கீர்த்தி அம்மானே-எல்லை இல்லா கீர்த்தி–எண்ணரும் சீர் ஆழ்வார்கள்..-பேசி தலை கட்ட முடியாது–கூறுதலும் . நாராயா குடக் கூத்தாடும் -அம்மானே –இதை சொல்லி முடிக்க முடியாது தாமோதரனை ஆமா தரம் அறிய..நஞ்சீயர் எட்டி பார்த்த ஐதீகம்…கண்ணி குரும் குயிற்றால் கட்டு உண்டான் காணேடி–சாழல் பதிகம்–கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு தலைவன்..சௌலப்யம் பரத்வம்.. மேலாப் பறப்பான் வினதை சிறுவன் -ஆண்டாள்…வண்மை மிகு கச்சி–அலங்காரம்-பூஷணம் போல்-ஒவ்தார்யதுடன் கிடந்த திரு வெக்கா பொய்கை ஆழ்வாரையும் கொடுத்த வண்மை..-வரதன் அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம் இல்லை ..தன்னையே கொடுப்பான். எம்பெருமானரையே அரங்கனுக்கு ஈந்த வைபவம் அதனால் வண்மை நகரில் காஞ்சியாக கண்ணன் சொல்லி கொள்கிறான்..திரு கடல் மல்லை..கடல் மல்லை தல சயனத்து–புஷ்பம் சாத்த புண்டரீகர் கைகளால் இறைக்க –திரு அன தாழ்வானை துறந்து -மயிலை மாட மா மயிலை திரு வல்லிக்கேணி–மண்ணியில் பொங்கு புனல் மண்ணி குறையலூர்-சீர் கலியன்-ஞான பக்த வைராக்யங்களால் வந்த கைங்கர்ய சீர்மை ஆறு பிர பந்தம் அருளிய வைபவம் அர்ச்சைக்கு இட்டு பிறந்தவர்.வாள் வழியால் மந்த்ரம் கொண்ட வைபவம்..-சீதை கணை ஆழி பெற்று ராம விருத்தாந்தம் -திரு மந்த்ரம் கணை ஆழி பெற்று தன் விருத்தாந்தம் அறிய வைத்தான் -வயலாலி மணவாளன் –இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –ஓலை நீட்டி ஓம் காரம் நீர் சொத்து –சங்கீதம் இசைவார்களே –நைவளமும் நாராயா நம்மை நோக்கா -நோக்கி பார்த்தான்..–இறையே நயங்கள் பின்னும் செய்யும் அளவில்–உமக்கு நான் அடியேன் என்றான்–என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அனைய இப் பால்கி வளையும் மேகலையும் காணேன் -கண்ணில் பட்டவை பட வில்லை சொரூபமும் ரூபமும் பார்த்தார்.. கை வளை -ஜீவாத்மா மேகலை சரீரம் பிரகிருதி கைவல்யமெஇஸ்வர்யம் தொலைந்தார்.. கண மகர குழை இரண்டும் நான்கு தோளும் கண்டார்.எவ்வவளவு கேட்டதும் –இது அன்றோ எழில் ஆலி-நிற்கும் இடத்தில் காட்டி/குறையலூர் ஆலி பாகவதர் இருக்கும் இடமே ஆலி..-கட்டை விரலை தொட்டு இது அன்றோ எழில் ஆலி என்றான்..திரு குறையலூரின் வைபவம்….ஓங்கும் உறையூர் –திரு பாண் ஆழ்வார -சேஷத்வ ஞானத்தில் உயர்ந்த குலம்–பிராட்டிக்கு வைபவம் நாச்சியார்-உடன் சேர்த்தி -ஓங்கு–மிதுளா புரி–ஏக சிம்காசசனம் -திவ்ய கடாஷத்துக்கு -திரு முக துறைக்கு நேராக உள்ளதால் ஓங்கு கடாஷா தயா பாத்ரம்..பகவத் குண தர்ப்பணம் கண்ணாடி போல் குணம் காட்டும் வியாக்யானம்—ஆரு மகா பாரத சாரம் ரிஷிகளால் வியாசரால் பீஷ்மரால் தம் மதம் ஆதாரம் பெரியோர் கீதை அர்த்தம்..-கண்ணனே அமர்ந்து கேட்ட வைபவம் ஏழாவது சிறந்தது..
தொண்டர் அடி பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மந்தம் குடி என்பர் மண்ணுலகில் -எண் திசையும்
ஏத்தும் குலசேகர னூர் என வுரைப்பர்
வாய்த்த திரு வஞ்சி களம் -31
தொல் புகழ்–தொன் நகரம் –தனியன்-தொன்ம பழைய -புகழ் கொண்ட தேசம்..திரு குறையலூர் திரு ஆலி திரு நகரி/ புல்லாம் பூதம் குடி ஆதனூர் அருகில் திரு மண்டம் குடி திரு வஞ்சி களம் -திர்யக் ஸ்தாவர -பிறப்பாக ஆசை பட்டாரே -திரு வித்துவ கோடு அருகில்
மன்னு திரு மழிசை மாடத் திரு குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் –நன் நெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் வகை -32
மன்னு திரு மழிசை-மகீசார ஷேத்ரம்-திரு மழிசை சகத்திலே உயர்ந்த தேசம்–ப்ருகு மகரிஷி-பிள்ளை-பார்கவர்—நன் நெறி-பாகவதர் ஆச்சார்யர் திருவடி பற்றினவர்..
சீராரும் வில்லி புத்தூர் செல்வா திரு கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு -33
ஆழ்வார்கள் ஏற்றம் அருளி செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் -எழ பாரும்
உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறிய பகர்வோம் வாய்ந்து -34
ஆழ்வார்களையும் அருளி செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே ! எப் பொழுதும் நீ அவர் பால்
சென்று அணுக கூசி திரி -35
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் யார் ?
அருளி செயலை அறிவார் யார் ?–அருள் பெற்ற
நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே ! உண்டோ பேசு -36
குருவி பிணைந்த கூட்டை கூட பிரிக்க முடியாது..அவனால் தான் வெளி வர முடியும்.அது போல் தேசிகரை பற்றி தான் அறிய முடியும்..ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு.-நதி கடலை/பூ கதிரவனை/போல அருள் பெற்ற -நம் ஆழ்வார் அருள்/காட்டு மன்னார்கோவில் அருள் பெற்ற ..விண்ணுலாரிலும் சீரியர் ஆழ்வார்கள்..
ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் –பார் உலகில்
ஆசை வுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் ! கூறும் என்று
பேசி வரம்பு அறுத்தார் பின் -37
பேசி வரம்பு அறுத்தார் …ராமானுஜர்.. திரு அடி கைங்கர்யம் பண்ணியே பெற்றனர்முன்.. எம்பெருமானார் வைபவம் திரு வாய் மொழி வைபவம் சொல்ல போகிறார் அவதாரிகை- துவய அர்த்தமும் அதின் அர்த்தம் விவரித்த திரு வாய் மொழி –சொரூப ரூப குணத்தால்-ஏரார்–வைபவம்–திவ்ய மங்கள விக்ரகம் சேவித்து அறியலாம்..நாகை அழகியார் அச்சோ ஒருவர் அழகிய வா -திரு மங்கை ஆழ்வார் /எம்பெருமானார் மூவரும் அழகிய திரு மேனி–முதுகில் வழியும் வேர்வை சேவிக்க மோட்ஷம் வேண்டாம் என்பாராம் எம்பார்.–ஆரியர்காள்-வைபவம் இருக்க வேண்டும் குணங்களால் எண்ணம் சித்தம் கொண்டு போக கூடியவர்கள்..ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்..பரிட்சை பண்ணாமல் கொடுக்க வேண்டாமா –ச்வாதந்த்ராயம் குலைத்து கல்யாண குணங்கள் தலையெடுக்க விடுவது போல் எம்பெருமானார் வரம்பு அறுத்த பின்..அனுமதி கொடுத்தார் –74 சிம்காதி பதிகளுக்கு -ராமன்-வரம்பு அறுத்தார் பிராட்டி பிரித்த் பாவி தம்பி -என்ற வரம்பை அறுத்தது போல்..ராஜ பாட்டியாகி எதை ராஜர் அமைத்து கொடுத்தார்விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி..பத்துடை அடியவர்க்கு எளியவன்-விலக்காமை ஒன்றே பக்தி–அது போல் எம்பெருமானாரும் ஆசை உடைவதே அதிகாரம் என்கிறார்
ஸ்ரீ ராமாயணம் சீதை சரித்ரம் ராவண வதம் பரத வைபவம்..ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்-லஷ்மி நாதா -எதி சேகர மத்யமாம்-நாத யாமுன -மத்யமாம்-நாடு நாயகம் எம்பெருமானார்…வைதிக மதம்-எம்பெருமானார் தரிசனம்–ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து–வளர்த்தவள் தாயா பட்டர் இடம் சிஷ்யர் கேட்க–வளர்த்தவளுக்கு மகன் சொல்லலாம் தேவகிக்கு சொல்லலாமா என்று கேட்க்கணும்–வாசு தேவன் பெற்றிலனே–வாசு தேவன்-பணம் காசு இருகிறவன் நந்த கோப -ஆனந்தம் உடையவன்
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம் பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார் –அம் புவியோர்
இந்த தரிசனத்தை எம் பெருமானார் வளர்த்த
அந்த செயல் அறிக்கைக்கா -38
அர்ஜுனன் இடம் அனைத்தையும் கொடுத்தான் கீதாசார்யன்–அது போல் ஆசை உள்ளோர் அனைவரும் உஜ்ஜீவிக்க வழி வகுத்தார் எம்பெருமானார்–வளர்த்த இத தாய் ராமானுசன் திரு வாய் மொழிக்கும்..ஈன்ற தாய் சடகோபன்..பேர் இட்டு நாட்டி வைத்தார்.. ஆணை இட்டு நாட்டினான்..திரு கோஷ்டியூர் நம்பி மூலம் நாட்டுவித்தார்–திரு கோஷ்டியூர் நம்பி மூலம் -அவர் தானே எம்பெருமானார் பெயர் வைத்தார்..ரகஸ்ய பிரஸ்தானம் சூத்திர பிரஸ்தானம் கீதா பிரஸ்தானம் ஸ்ரீ பாஷ்ய பிரஸ்தானம்..திரு வாய் மொழி பிரஸ்தானம்-வியாக்யானம் இட்டு அருளி செய்ய வைத்தார்..உபதேசம் இவை–அனுஷ்டிக்க வேண்டியதை -செய்தும் காட்டினார் சரண் அடைந்து கத்ய த்ரயம் அருளி…எதிராஜ சப்ததி தேசிகன் எதிராஜ விம்சதி மா முனிகள்..–உரை கல்லில் ஈசி பார்த்து -வேதமே உரை கல்-சம்ப்ரதாயம் அநாதி எனபது தெரியும்..நாம் பரி தவிக்க -அவனும் நம்மை இழந்து தவிக்க –வாளும் வில்லும் எடுத்து போக -பின் செல்வார் மற்று இல்லை–ஒருவர் மட்டும்–தனியன் -புத்ரனை விட்டு பிரிந்தபிதாவையும் புத்ரர்களையும் சேர்க்க தான் வளர்த்தார் ..
பாக்யர் வேதம் இல்லை என்பர் குதிர்ஷ்டிகள் வேதம் தவறாக அர்த்தம் கொள்பவர்கள்..–முதலாம் திரு உருவம் மூன்று என்பர்–ஒன்றே முதலாம் மூன்றுக்கும் என்பர் –நாபியில் பூவை மறந்து இருப்பார்..நாராயணன் நான் முகனை படைத்தான்–முழு முதல் கடவுள்…சங்கரரும் நாராயணனே என்பார்..சப்தமே -ஈசன் நாராயணனே காட்டும்–நியமன சாமர்த்தியம் கொண்டவன்…வரஸ் -ச்வாபிகமாக கல்யாண குணம் கொண்டவன்–ஸ்ரீ வைஷ்ண மதம் தான் மூன்றும் அத்வைதம்/ விசிச்டாத்வைதம்/துவைதம்…வழியில் தான் வாசி..கைங்கர்யம் அவன் இடம் தான்ஞானத்தால் மோட்ஷம் சங்கரர்–எம்பெருமானாரும் ஒத்து கொண்டார்–அவர் சொல்லும் ஞானம் வேற இவர் பக்தி ரூபமான ஞானம்–தோளில் சாவி போட்டு மறந்தவர்–வார்த்தை காதால் கேட்டதும் ஞானம்-பிரமை- ஏக தத்வ வாதம்–பூ பறிக்கும் பொழுதும் ஏக்கம் ஏக்கம் என்றே எண்ணுவார் சங்கரர்..இரண்டாவது தத்வமே கண்ணில் படாது..-அஞ்ஞானம் சாவி இருக்கும் இடம் சொன்னதும் போனது–தத்வ மஸி ச்வாதேகேது தத் தும் அஸி-அது நீ இருகிறாய் நீ அதுவாக இருகிறாய்..–வாக்ய ஜன்ய ஞானம்-சாவீருகிறது நீ அவனே ஞானம் என்பர்..எம்பெருமானார்-பக்தி உடன் சேர்ந்த ஞானம் –அகில ஜன்ம -ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகம்..அகில புவன ஜன்ம -பக்தி ரூபா ஸ்ரீநிவாசன் இடம் பிரார்த்திக்கிறார் பக்தி ரூபஞானத்தை..தத்வம் மூன்று—அசித்/சித்/ஈஸ்வரன்-ஓன்று-சங்கரர்–நசிக்க- கூடியவை -ஒரு படி இருக்காது அசித்-மாறுதல் இல்லாதது சித்..பாலன் யுவன் மூப்பு உடலுக்கு தான்–
பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் …
Related
This entry was posted on August 7, 2011 at 4:14 am and is filed under உபதேச ரத்ன மாலை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply