உலகும் உலகி இறந்த வஊளியும் ஒண் கெழ்
விலகு கரும் கடலும் வெற்ப்பும் -உலகினில்
செம் தீயும் மாருதமும் வானும் திரு மால் தன
புந்தி இளைய புணர்ப்பு -61
சர்வ லோகமும் அவனின் படைப்பு–சங்கல்பம் பகுச்யாம்–நானே எடுத்து கொள்வேன் —
புனர் மருதினூடு போய் பூம் குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை எழ செற்று -கணம் வெருவ
எழ உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் .
சூழ் அரவ பொன் கணையான் தோள்-62
மரத்தை தள்ளி போனான்–தோள்களின் லீலைகளை அருளுகிறார்
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டு இருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் -63
கேட்க்க தக்க அவன் குணமே கேட்டு இருக்கும் -சரணவ் சரணம் பிர பதயே என்று அவன் திரு அடியே -வெட்க்கம் அடைவோம் இவனை அறிந்த பின்பு–
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம் மேல் வினை?-64
பேசுவதும் பாகவதர்கள் உடன்தான்-.லோகோ பின்ன ருசி–எனக்கோ திரு மால் ஒருவனே–மற்றோர் தெய்வம் உளன் என்பரோடு உற்றிலேன் பதி விரத்தை போல்..
வினையால் அடர் படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீ கதி கண் செல்லார் -நினைத்தற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செம்கண்
கரியானை கை தொழுதக் கால் -65
அஞ்சலி ஒன்றே போதும்–பரமாக கொள்வாள் பிராட்டி அஷர கதி பரம பதம் ஐஸ்வர்யம்–கர்ம பலன் கிட்டாது வினையால் அடர் படார்–தர்ம புத்ரனுக்கு நரக தர்சனம் பிராப்தி ஆனது அது கூட கிட்டாது -தினைஎனும்தீ கதி கண் செல்லார்
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலை தலை மறையோர் வேட்பனவும் -வேலை கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர் -66
ஒர்ப்பனவும்=சொல்வது ஹரி என்ற பேர் அரவம் கேட்டிலையோ–திரு நாமம் ஒன்றே கற்று கொள்ள வேண்டியது ..வேத பாராயணம்-உச்சி மேல் ஹரி ஓம்-இருக்கிறது–வேட்பபு=ஆர்வம் —
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வான்
ஒருவனையே நோக்கும் உணர்வு..-67
நதி சமுத்ரம் நாடுவது போல் ஸ்ரீநிவாசன் ஒருவனையே நோக்கும்
.உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோர் ஊழி
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை?- உணர்வார் யார் ?
விண்ணகத்தாய் மண்னகத்தாய் வேம்கடத்தாய் நால் வேத
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் -68
சொரூபம் யாருக்கு புரியும் தனக்கே தன பெருமை தெரியாததாம் ..ஏதோ பிரதான சில சொல்லுகிறேன் என்கிறான் கீதையில்..இல்லைத்தை தெரியா விடில் குற்றம் இல்லை மகிமைக்கு எல்லை இல்லை தெரியாதது குற்றம் இல்லை…கருணை அழகு ஒன்றை கூட அளக்க முடியாது–சக்கரை பொம்மை கடலைஅளக்க போக நீராய் அலைய கரைந்து உருகும்–சயனித்த தன்மை யார் அறிவார் பாலன் தனது உருவாய் எழ உலகு உண்டு ஆல் இலை யின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு-69
திரு மாலே கட்டுரையே–ஆழ்வார் கேட்டது போல பால முகுந்த சொரூபம்..-சித் ஆல் ஆனந்தம் கிருஷ்ணம் சத் சித் ஆனந்தம் இது–லீலையாகிய விஷய சுகம் தள்ளி –சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திரு மாலை நல் இதழ்
தாமதத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்த்திரத்தால்
நாமத்தால் ஏத்து திரேல் நன்று -70
சொல்லும் முடியும் அளவும் சொல்லுங்கோ–சேவித்து கொண்டு இருக்க வேண்டும்.. உடம்பு விழும் வரை-துளசி -தாமம்=மாலை மந்திரம் வைதிக பூஜை தந்திரத்தால் ஆகம பூஜை–பிரேம பூஜை நாமத்தால் சபரி போல்-விதுரர் போல்-நிகமம்=வேதம் அனுமதி வாங்கி செய்வது ஆகமம்- ஆக்ஜையை நிறை வேற்றுவது–ஆக்ஜை இட்டு செய்வது சரத்தை உடன் ஆகமம் பிரதானம் ஆலயத்தில் ஆகலாமா விதி—நாமத்தால்-பிரேமை -விதுரர் சபரி ஆய்ச்சிகள் போல்வார்-பரம்பரை அர்ச்சகர்–அர்ச்சகர் முகேன பேசுவார் –தஸ்மாத் சாஸ்திரம் பிரமாணம்–உத்திஷ்ட அரங்கத்தம்மா எழுந்து அருளாயே செல்ல கண்ணா எழுந்து அருளாய்-குழந்தை போல அணுகி–
-நன்றுபிணி மூப்பு கையகற்றி நான் கூழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் -என்றும்
விடல் ஆழி நெஞ்சமே ! வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான் மாட்டன்பு..-71
நான்கு வித பிரளயம்-நித்ய பிரளயம் இறப்பும் பிறப்பும்–நான்கு ஊழி –நைமித்திக பிரளயம்-பிரம்மா ஆயுசில் பகல் இரவு-சதுர் யுகம் 1000 ஆனா பின்பு ஒரு பகல் ..100 வயசானபின்பு-மூன்று உலகம் அழியும்-ஜன தபோசத்ய லோகம் இருக்கும் –அங்கு இருந்து பார்க்கலாம்–மகா பிரளயம் சர்வமும் அழியும் -அனைத்தும் அவன் இடம் லய ஆத்யந்திக பிரளயம் மோட்ஷம்–அழிவு இல்லை சாகா- அந்தமில் பேர் இன்பம் -நெஞ்சமே உன்னை வேண்டி கொள்கிறேன் வைபவம் வேண்டாம் என்று சக்கர பாணி பால் அன்பு விடாமல் இருக்க வேண்டாம் அவனின் பக்திஒன்றே வேணும்..
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன
பண பாழி தோள் பரவி ஏய்த்து என்னும் -முன் பூழி
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் -72
அன்புக்கு-ஒரே இடம் சக்கர பாணி ஒருவனே –என் உடையது நித்யம் எம் பெருமான் ஒருவனே நம் இடம் ஆத்மா போல் உள்ளே பத்தி கிடக்கிறானே ..புலன்கள் எல்லாம் அவனுக்கு தானே–விவேகத்தால் அவன் குணம் சம்பந்தம் அறிந்து -இருக்க விடில்–நாயிலும் கேவலம் மனிசனாய் இருந்து நாய் போல இருந்து என்ன பயன் பகவத் பக்தி பண்ணினால் தெய்வம் ஆகிவிடுவோம்
புகழ் வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே ! திகழ் நீர்
கடலும் மழையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயரும் ஏற்றான் -73
இரு=விஸ்தாரமான -எல்லாம் தானே-இகழ்ந்தாலும் லஷியமாக கொண்டாலும் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அஸ்தி நாஸ்தி -அறிவுக்கு அகப் படாதவன் புகழ்வதால் லாபமோ இகழ்வதால் நஷ்டமோ இல்லை..பக்தன் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் பிரீத்தி -புரந்தர தாச்கிருபை இன்றி இருகிறாயே அஜாமிளன் அண்ணனோ விபீஷணன் தம்பியா யான் அந்நியனா –கர்மா தான்–அதே புரந்தர தாசர் சொல்கிறார் அடுத்து..பக்தனுக்கு இரண்டும் ச்வாபம்..புரந்தர தாசர் நம்பினவனை கெடுக்கலாமா -நிந்தை அவசரத்தில்–தியாகராஜர் தந்தை தாய் சகோதரர் மனைவி உன்னை நம்பி கேட்டார்களே கிருபாளூ இப்படியும் அப்படியும் பாடுவார்..தீன தயாளு -என்பர் அடுத்து உரிமையுடன்–அமா குழந்தை உறவு போல் பக்தனை கட்டி மாரு அடிப்பது சுகம் அவனுக்கு ..
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்று ஒரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு -74
கங்கா ஜனகன் கங்கா தரன் -இருவரையும் விவரிக்கிறார் காப்பு உன்னை கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னை
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி-75
சர்வேஸ்வரன் ஒருவனே ரட்ஷகன்-காப்பு என்று இருந்தால் அரு வினைகள் கழியும்….ஆப்பு சம்சார பந்தம்–மார்கண்டேயர் என்றும் 16 வயசாக –பகவத் பக்தர் கைங்கர்யம் இருப்பதால் மூப்பு இல்லை–
வழி நின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திரு வேம்கடமே -76
வழி நின்ற நின்னை=பக்தி மார்க்கம் வழுவா மொழி-வேதம்..வீடு வைகுண்டம்–பழுது வாராமல்-கைவல்யம்-இன்றி —
வேம்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் -நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் -77யோகம் -பரி பக்குவம் எதிர் பார்கிறான் ஞான பக்தி வைராக்கியம் பூர்த்தி அடைய சரணம் அடைந்தவர்களுக்கு அதே ஜன்மத்தில் அஹம் ஸ்மராமி -கொண்டு அதே ஜன்மத்தில் முக்தி கொடுக்கிறான்–அக்காத =மாறாத /யுகம் தோறும் செழிப்பு கொண்ட -பூம் கோதை புஷ்ப வல்லி தாயார் /பொன் நகர் ஸ்வர்ண புரி திரு கோவலூர் –எதா சங்கா அலங்காரம் வேம்கடமும் நின்றான் விண்ணகரில் இருந்தான் ஸ்ரீ வைகுண்டத்தில் வெக்காவில் சயனம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவலூரில் நடந்தான்..இதை நினைந்து கொண்டு இருந்தால் இடர்கெடும் –மண்டினார்க்கு அல்லால் மற்று யாருக்கு உய்யலாம் —
இடர் யார் படுவார் ? எழு நெஞ்சே !வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைம் நாக பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய் நாகம் பூம் பொது கொண்டு-78
எதுவும் முடியும் உத்சாகம் கொண்டு எழு–கொடிய முதலை-தொடர்ந்து வரும் முதலை–ஆசை மட்டும் பட்டால் போதும்–புன்நாகம் நாக பூ புன்னை ஸ்தல விருஷம் ஸ்ரீ ரெங்கத்தில்–
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண் தா என இரந்து மா வலியை -ஒண் தாரை
நீர் அம கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து -79
வஞ்சனை செய்தான் என்பர்–இவர் சொத்தை அவன் சுவாதீனம் படுத்தி மன்னன் என்று இருந்தான் –ராவணன் ஸ்ரீ தேவியை பிடித்தது போல்-பூ தேவியை பிடித்தான் வாமனன் மண் இது என்னும்..உதக தாரை தீர்த்தம் -ஒண் தாரை –நிமர்ந்து இருந்தீரே–பக்த பிரியத்தால் பூரித்து மண்ணை கொடுத்தான் நீரை கொடுத்தான் என்ற பூரிப்பில்நிமிர்ந்தான் ..தேவர் தொடும் படி வளர்ந்தானாம் -அளந்தது தற்செயல் தான்..
அடுத்த கடும் பகைக்ஜற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் -80
சரித்ரம்–
கருடன்–மாதலி தேவ சாரதி –பெண் குண கேசி–வாசுகி -அஷ்ட நாகர்களின் ஒருவர் -பிள்ளை சுமுகன்–மத் பாத லாஞ்சிதம்-திரு அடி சம்பந்தத்தால் சுமுகன் பாகவதன் ஆனதால்–சுந்தர ராஜ நாகை பெருமாள் திரு கல்யாணம் பண்ணி வைத்தாராம் சுமுகனுக்கு –விடத்து அரவு- வல்லாளன்-கருடன் கை கொடுத்து மா மேனி மாயவன்–இவனுக்கு தான் ஆள் பட்டு இருக்க வேண்டும்..
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ..
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..
Leave a Reply