முதல் திரு அந்தாதி–31-60–ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

புரியொரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி

அரி வுருவும் ஆள் வுருவும் ஆகி -எரி வுருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ?  இமை -31
நரசிம்கர் அவதாரத்திலும் சங்கு சக்கரம் ஏந்தி –இவன் மேல் விழாமல் ஏந்தி கொண்டு–வரம் கேட்டு இருப்பதால்
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் -32

புத்தி போன படி அனுபவிக்காமல்-நமைச்சல் அரிப்பு போல் அல்ப சுகம் சொரியும்  போல் சுகம் அப்புறம் எரிச்சல் ஆக இருக்கும்..அடக்கி இருக்க வேண்டும்…பரம பதத்துக்கு உரியவர் ஆக நகரம் அருள் புரிந்து நான் முகற்கு பூ மேல்

பகர மறை பயந்த பண்பன் -பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி வுரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என் -33

நாபியையே வாசச்தானம் கொடுத்து..சந்தை சொல்லி வேதமும் சொல்லி கொடுத்து–வேத நாராயணன் –வாயாலே சொன்னால் போதும் மனசால் சிந்திக்காமல் திரு நாம பலன்..-த்யான பூர்வமாக -ஷத்ர பந்து மாட்டை நினைத்து கோவிந்தா சொல்லியும் பலன் பெற்றானே –அந்தி சாந்தி வாத்யானம் அவசியம் -பகவத் பக்தி இல்லாமல் செய்வதால் பலன் இல்லை..பட்டர் சந்திர புஷ்கரணி -அச்தனம் ஆனது தெரியாமல் பகவத் விஷயம்பேசிகொண்டு இருக்க காணாமல் கோணாமல் கண்டு பண்ண வேண்டுமே சிஷ்யர் நினைவு மூட்ட -பிராய சித்தம் உண்டே –சந்திக்கு..என் ஒருவர் மெய் யென்பர் எழ உலகு உண்டு ஆல் இலையில்

முன் ஒருவனாய் முகில் வண்ணா!  நின் உருகி
பேய் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர் கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறு -34

பூதனை விழுந்து கிடக்க–யசோதை பால் கொடுக்க மாட்டேன் என்று ஓட வில்லை..-பிரேமையில் பயம் இல்லை..

ஆறிய அன்பில் அடியார்  தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமா கொள்ளல் நீ -தேறி
நெடியாய் அடி அடைதற்கு அன்றே ஈர் ஐந்து
முடியான் படைத்த முரண் -35

ஆரா அமுதன் பிரேமையால் –கள்வா திருடா -யென்பர்–தோஷம் கொள்ளாதவன்–கற்பார் ராம பிரானை –மற்றும் கிருஷ்ண அவதாரம் எடுத்து சொல்வார் வியாக்யானம்–நிந்தை இல்லை நகி நிந்தா நியாயம் பிரேமா அதிசயத்தால் –அபசாரம் இல்லை–பிராட்டி பிரித்து வைத்தவன்-யதிவா ராவனசுயம்-முரண வலி  தொலைதர் காம் என்றே முன்னம்

தரணி தனதாக தானே இரணியனை
புண் நிரந்த வள உகிரால் பொன் ஆழி கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை -36
பலி சம்காரம் பண்ண வில்லை ஆத்ம குணம் பார்த்து தான் தாழ்ந்து இரங்கி போனான்.தோஷம் இருந்தாலும் அபயம் கொடுப்பேன்  என்கிறான் -குணம் இருந்தால் தான் இரங்கி அருளுகிறான்
வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேம்கடமே வெண் சங்கம்
ஊதிய  வாய் மால் உகந்த ஊர் -37

மால் வைகுந்த விட்டு ஆசை உடன் வந்து உறையும் திரு மலை–பரம பாகவதர்கள் வகை அறு–கர்ம யோகம் போன்ற உபயாந்தரங்கள் அறுத்து–வகை வகை யாக இருப்பதை அறுத்து–விவசாய புத்தி இன்றி–நம்பிக்கை உடன் நம்பியை நம்பி–நுண் கேள்வி–ஆய்ந்து தீர்மானம்–கைங்கர்யம் ஒன்றே பற்றி கொண்டு -புஷ்ப கைங்கர்யம் அனந்தாழ்வான் /தீர்த்த கைங்கர்யம் திரு மலை நம்பி ஸ்வாமி ராமானுஜர் போல..ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை

பேர வெறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேம்கடமே மேல் அசுரர்
எம்மென்னு மால் அது இடம் -38

கவி அலங்காரம்–மலை பாம்பு ஊற வரிகள் -.வரி ரேகை கொண்டு-சந்தன காடு என்பதால்–யானை மேயும்–விரட்ட மணியை ரத்னங்கள் வைத்து அடிப்பார்கள் குறவர்..பளிச்சு என்று மின்னும் யானை பார்த்து மேகம் ..மின்னல் இடி கண்டால் மயில் வந்துடும் பயம்–மேகமும் இல்லை மின்னலும் இல்லை பிராந்தி அலங்காரம்–பயந்தாவது திரு வேம்கடம் நுழைந்தது ..நாமும் சம்சார பயந்து வேம்கடம் போக வேண்டாமா ச்வாபதேச அர்த்தம் இடந்தது பூமி எடுத்தது குன்றம்

கடந்தது கஞ்சனை முன் அஞ்ச -கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேம்கடமே
பேரோத வண்ணர் பெரிது -39
வராக -திரு இட எந்தை–லீலைகள் சொல்லி–பெரிது வேம்கடத்தில்–பக்தர்களுக்கு
பெருவில் பகழி குறவர் கை செம் தீ
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழ கண்டு அஞ்சும் வேம்கடமே  மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான்குன்று -40
வில்லும் அம்பும் கொண்டு வேட்டை ஆட -யானை விரட்ட  தீ பந்தம் வைத்து -விண்மீன் -நட்ஷத்ரம் விழ யானை அஞ்சுகிறதாம் சம்பந்தம் இல்லாத கவிதை அலங்காரம் -சம்சார தீ உண்மையாக கொளுத்தினாலும் நாம் திரு வேம்கடம் போக வில்லையே

குன்று அனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்

இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான்
திறன் உரையே சிந்தித்து இரு -41
அபராத சக்கரவர்த்திகள் நாம் ..செய்ய சொல்வதை செய்யாமல்–செய்ய கூடாததை செய்தும்–கண்டிக்காமல்-மலை போன்ற குற்றம் -செய்தாறேல் நன்றே செய்தார் என்பானாம் –பரம பாகவதனுக்கு திரு அடி கொடுப்பதை விட அகல்யைக்கு  கொடுத்தால் போல ..துஷ்டனை கூட  வைப்பது பெருமை…பயந்தவர்கள் கிட்டே வருவார்கள்–தன மனசை பார்த்து சொல்லி கொள்கிறார்..பொன் ஆழி-அழகுக்கு தான் –அச்சோ ஒருவர் அழகியவா –புறன் உரை வெளி வேஷம் –இருந்தாலும்..–பாகவத வேஷம் -இருந்தாலும்–தோல் கன்றுக்கும் பால் சுரப்பது  போல்–கருணை சுரப்பான்–
திரு மகளும் மண் மகளும் ஆய மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்த வாறு என் கொல்? திரு மகள் மேல்
பாலோதம்  சிந்த பட நாகணை கிடந்த

மால் ஓத வண்ணர் மனம் -42அசூயை இன்றி-மூன்று தேவிமாருகளும் –காம கந்தம் இன்றி பிரேமை பரஸ்பரம் — திரு மகள் மண் மகள் ஆயர் மடமகள் -பங்குனி உத்தரம் பெரிய பிராட்டி சந்நிதானத்துக்கு உபய நாச்சியாரும் எழுந்து அருளி–மாலை மாற்றுதல் ஆண்டாள் இடம்–ஏக ஆசனம்-பெரிய பிராட்டிக்கு பிரதானம் கொடுத்தால் அனைவரும் மகிழ்வார் ..அங்கி அங்கம் போல–திரு மகள் மேல் மனம் சிந்த -பாலோதம்–பால் திவலைகள் பெரிய பிராட்டி யார் இடம் சிந்துகிறதாம்–தந்தை மகளுக்கு கொடுப்பது போல்..

மன மாசு தீரும் அரு வினையும் சாரா
தனமாய தானே  கை கூடும் புனமேய
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –43

கைங்கர்ய பரர்களுக்கு குடும்ப செயல் பகவானே நடத்துவான் ..பாக்கியம் கிட்டியது என்று இருப்பவர்களின் வினை தீரும்–ஐஸ்வர்யமும் கிட்டும்-எனபது  மட்டும் இல்லை தனம் =பக்தி நீங்காத செல்வம் தானே கை கூடும்..தமர் உகந்தது எவ் வுருவம் அவ் வுருவம் தானே

தமர் வுகந்தது எப் பேர் மற்ற பேர் தமர் வுகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம்-44
சக்கர பாணி தன பக்தர்களுக்கு தான் திரு மேனி –சிங்க பெருமான் பிரகலாதனுக்கு சக்கரவர்த்தி திரு மகன் திரு வடி உகந்த என்பதால் அபிமானம் கிருஷ்ணன் கோபிகள் உகந்ததிரு மேனி என்பதால்  -அனந்தன் -மூர்த்தி–தங்கம் வெள்ளி த்ரவ்யன்களால் பக்தர் செய்து எழுந்து அருளிய -தன உடைய அப்ராக்ருத  திவ்ய மங்கள விக்ரகம் போல் தானே ஆதரித்து…நம் உடன் பேசுவான்-எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்து அருளிய பொழுதுபிள்ளைகள் காலால் கீறி இது உங்கள் உடைய எம்பெருமான் என்று சொல்ல அதை நமஸ்கரித்து சேவித்தார்–தமர் உகந்த எவ் வுருவம் ஐதீகம்..வைதீகர் கொண்டு பிரதிஷ்டை பண்ணாமல் தூணில் தோன்றியது பக்தி -பிரகலாதன் -.மேல் கோட்டை செல்ல பிள்ளை மடியில் வந்து உட்கார்ந்தான் –அழகிய மணவாளன் புராண பெயர் இல்லை ஏற்றாலும் உகந்த திரு நாமம் தான் ..ஆரா அமுதன் ஈர சொல் ப்ரேமையால் -விட்டல் பாண்டு ரெங்கன்–வீட்டா செங்கல் மேல் நிற்ப்பதால் உபநிஷத் மேல் நின்றவன் செங்கல் மேல் நிற்கிறான் என்று கேட்டதும் அவன் உகக்கிறான் –நஞ்சீயர் -ஆயர் தேவு–கண்ணன் விக்ரகம் -எங்கள் ஆழ்வான் விஷ்ணு சித்ரர் திரு வெள்ளறை யில் இருந்த மகானியர் ஸ்ரீ விஷ்ணு புராணம் வியாக்யானம் அருளியவர் –அவர் சொபனத்தில் நாக பழம் கேட்டார் -நீ யார் என்றதும் ஜீயர் மகன் ஆயர் தேவு என்றானாம் நஞ்சீயர் பார்த்து உங்கள் பிள்ளை எங்களை குடி இருக்க விடாமல் -வாழ விட்டான் மது சூதனனே -உகந்த பெயர்..ஐதீகம்

ஆமே ?அமரர்க்கு அறிய அது நிற்க

நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே! -பூ மேய
மாதவத் தோன் தோள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாத மத்தால் எண்ணினான் பண்பு -45
பக்தி உடைய நல் நெஞ்சே–தேவர்களுக்கு துர் லாபம் -உதாரணம்–மாதவதொன் தாழ் பணிந்த பிரம்மா தேவன்–யுக கோடி சகஸ்ராணி ஆராதித்து பேட்ட பட்டம் -இருந்தும் பெருமாளின் பெருமை புரிய வில்லை..வரம் கேட்டான் ராவணன்..கொடுக்க நினைக்கும் பொழுது–சுக்ராசார்யார் போல் நேராக கொடுக்காதே சொல்லாமல் குழந்தை  ரூபம் கொண்டு தலையை பாத்ததால் எண்ணி காண்பித்தான் பத்து தலையும் கொய்ய போகிறேன் ஜாடை காட்டியும் பிரம்மாவுக்கு தெரிய வில்லை அமரர்க்கு அரியலாமே..
பண புரிந்த நான் மறையோன் சென்னி பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர -புண்  புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார்  கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார்-46
சிவன் தலை கிள்ளி-கபால கண்டியூர் -பத்ரிகாஸ்ரமம் -வேர்வை நீரால் போக்கி–புண் புரிந்த  ஆகத்தான் கீறி கொடுத்தான்–விஷ்ணு பிரசாதம்–அலங்கல் மார்பின் வாச நீர் கொடுத்து–
வாரி சுருக்கி மத களிரை ஐந்தினையும்
சேரி திரியாமல் சென்னிறீ இ கூரிய
மெய் ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் -47
கஜேந்த்ரனை காத்தவன் கழல்-கிட்ட ஐந்து முதலை இந்த்ரியங்கள் இழுத்த வழி போகாமல்-மதம் பிடித்த களிறு போல் திசை திசை இழுத்து போகும்..
சுழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும்
செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல

மருவாழி நெஞ்சே! மகிழ் -48

ஆழி நெஞ்சே பரந்த கடல் போன்ற நெஞ்சே–பலி சக்கரவர்த்தி இடம் இரந்து வந்தான்–நமுசி கண்டு-என்ன மாயம்–முன்னைய வண்ணமே அளந்து கொள் –வானில் சுழற்றின –அச்சோ அச்சோ..திரு அடி பிடித்தும் சுழல்கின்றான் பக்தி இன்றி வஞ்சனை என்பதால்..
மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிர் பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்

ஆதி காண்பார்க்கும் அரிது -49

மகிழ் அலகு  ஒன்றே போல்–கர்மாதீனம் –யாக்கை–மாறி மாறி வரும்..-அலுப்பு வந்து தோன்றினால் திரு அடி ஆஸ்ரித்து –மீளலாம்
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மா வலி பால் வன் கை நீர்
ஏற்றானை காண்பது எளிது -50

மனசை அடக்கி-இதற்க்கு  வழி கைங்கர்யம் செய்து–மனசை அடக்க-ஆர்வத்துடன் கைங்கர்யம் செய்தால் –எளிதாக திரு நாமம் சிந்தித்து திரு அடி பெறலாம் ..ஹிரண்யனை  சம்கரித்த நரசிம்கனை எண்ணி கொண்டு இருக்க வேண்டும்

எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலை கை தொழுவர் சென்று -52
முப்பது மூவர் தேவரும் அஷ்ட வசுக்கள் -ருத்ரர் ஆதித்யர் அஸ்வினி-அவர்களும் வழி பட –நாமும் பண்ண வேணும்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்

அணையாம் திரு மாற்கு அரவு -53சர்வ அவஸ்தையிலும் கைங்கர்யம்-சேஷன்-சொத்தை உடையவன் சேஷி-சேஷ பட்ட சொத்து எல்லாம் சேஷனுக்கு–குடையை ஸ்ரீ ரெங்கத்தில் கீழே வைக்க மாட்டார்கள் பட்டு துணியில் தான் வைப்பார்கள்– ஏழுமலையும் சேஷ கிரி-மரவடியாம்..பள்ளி கொள்ளும் தெப்பமும் இவனே -.தீபம் ரத்னம் பணா மண்டலங்களில் சர விளக்கு போட்டு திரு முக மண்டலம்காட்டும்..-புல்கும்  அணையாம்-மென்மை கந்தம் உடைய பூம் பட்டாம் –சேஷ பூதம் –சர்வ தேச கால அவஸ்தை கைங்கர்யம்-அகம் சர்வம் கரிஷ்யாமி-லஷ்மணன்..இளவரசு பட்டம் வேண்டாம் நீக்கி–கைங்கர்ய சாம்ராஜ பட்டாபிஷேகம் பண்ணி கொண்டவர்..ஸ்வாமி ராமானுஜரும்  இவர் போல –மந்திர புஷ்பத்தில் நித்ய அனுசந்தானம்

அரவம் அடல்  வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குட முலை மல் குன்றம் -கரவின்றி
விட்டு இருத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்தாடி உண்டு
அட்டு எடுத்த செம் கண் அவன் -54

எதா சந்க்யா அலங்கார பாசுரம்..அரவம் விட்டு-காளியனை போக விட்டான் அடல் வேழம் இருத்து கொம்பை முறித்து ஆண் மேய்த்து மாடுகளை குருந்தம் ஒசித்து மறுத்த மரம் புள் வாய் கீண்டு குரவை கோத்து குடம் ஆடி முலை உண்டு மல் அட்டு குன்றம் எடுத்து  சேர்த்து சேர்த்து அன்வயிக்க வேண்டும் அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எங்கோன்

அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராய பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேர் ஆயற்கு ஆட பட்டார் பேர் -55
பாகவதர்கள் பெயர் எங்கும் பரவி இருக்க –சித்ர குப்தன் புத்தகத்தில் பெயர் இருக்காது–
பேரேவரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க -நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக் கமலம் தன்னை அயன் -56

சிந்திக்காமல் -பேரே பிதற்றி–அனைத்தும் தெரியும் என்பவன் தெரியாதவன்..புரிய வில்லை என்பவன் புரிந்து கொண்டவன் ஆகிறான்–மூட பக்திக்கு மதிப்பு அதிகம்..என் பேரை சொன்னாய் ஊரை சொன்னாய் –அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி

உய நின் திருவடியே சேர்வான் -நயம் நின்ற
நல மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது -57
பசிக்கு திரு நாமம் சொன்னால் போதும் ருசிக்க வாயினால் பாடி மனசினால் சிந்திக்க வேண்டும்..அருகில் நின்ற கர்ம கண்டு அஞ்சும் பொழுது திரு நாமம் சொல்லி திரு அடி அடையலாம்
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுது மேலு வாலி ! நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றிலை அடை-58

மந்த்ரங்கள் வேத அத்யாயனமும் அவனுக்கு கைங்கர்யம் பண்ண தான் அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்

மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் -நுடன்கிடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன வில் அங்கை வைத்தான் சரண் -59
சீதை பிராட்டி மீட்டது போல் சம்சார சாகரத்தில் இருந்து மீட்டு அருள்வான்
சரணா மறை பயந்த தாமரையானோடு
மரணாய மன்னு உயர்கட்க்கு எல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த வுலகு -60
ஒரே பந்து -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அவன் ஒருவனே –பிரமனுக்கும் ஆயுசு உண்டு–அவன் திரு அடியே கதி–
பெரியவாச்சான் பிள்ளை  திரு அடிகளே சரணம் .
பொய்கை ஆழ்வார்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading