முதல் திரு அந்தாதி–81-100–ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

ஆள் அமர்  வென்றி ஆடு களத்து உளம் ஞான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீள் அரவை
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை

பற்றி கடத்தும் படை -81

அமிர்த  நினைவு பின்னாட்ட-வரை மந்தர மலை நட்டு வாசுகியை சுற்றி கடைந்தான்–தானே எல்லாவாக உழைத்து –அவன் திரு நாமம் சொல்வதே ஹரி நாம சங்கீர்த்தனம் -நரகம் கிட்டாது–அஜாமலன் உபாயாக்யானம்…
படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூ
தொடையலோடு ஏந்திய தூபம் -இடை இடையில்
மீன் மாய மாசூனும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய வெய்தான் வரை -82
வேம்கட ராமன்-மாரீசனை எய்தானே ஸ்ரீனிவாச ராகவன்–குற மகள்-கண் வாள் வில் போன்ற கண்கள்–புருவம் வில் கண் அம்பு கண்ணால் வெட்டுவார்களாம் அவன் இடமே பக்தி கொண்டவர்கள் புருஷோதமனையே பார்க்கும் கண்கள்-துவாதசி–பாராயணம் செய்யும் நாள் பாரசி நாள்/–அழகிய பூ பரித்துமாலை சமர்ப்பித்து தூபம் காட்டி–மீன் மாய-விண் மீன் மறையும் படி புகை மண்ணடி கிடக்கும் வேம்கடம்–
வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை எழ செற்ற வாறு என்னே -உரவுடைய
நீர் ஆழி உள் கிடந்தது நேரா நிசாசரர் மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் -83

உரவு உடைய பாம்பு-நிசாசரர் மது கைடபர் –சேஷ பர்யங்கம்-வரை குடை -கோவர்த்தனம்–திரு கை காம்பாக பிடித்து–கோபாலன்–ஆநிரை காத்து நிரை விடை-சப்த சால விருஷம் ராமன் எழு காளை அடக்கி கண்ணன்–உனக்கும் பரிஷையா -கும்பன்-கண் கூடாக கோவர்த்தன லீலை பார்த்தும் -என்னே-பிரான் உன் பெருமை யார் அறிவார்…

பிரான்!  உன் பெருமை பிறர் யார் அறிவார் ?
உராய் உலகு அளந்த ஞான்று -வராகத்
தெயிற்று அளவு போதாவாறு என்கொலோ எந்தை
அடிக் களவு போந்த படி -84
உலாவு-மருவி உராவு-உலாவ ஆரம்பித்து உலகு அளந்து உரசி-திரு மேனி தீண்ட ஆசை பட்டவர்களை உராச உலகு அளந்தான் சர்வ அந்தர்யாமி உரசுவதே அனுபவம் .கோட்டு நுனியில் ஒட்டி கொண்டதை அளந்தது பெரிசா — எயற்று அளவு கூட இருக்க வில்லையே அண் கடாசம்
படி கண்டு அறிதியே?  பாம்பனை யினான் புள்
கொடி கண்டு அறிதியே?  கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே!  நீ-85
இருந்த படி கண்டு –ஆதிசேஷனில் பள்ளி கொண்ட படி–கருடன் மேல் இருந்த படி கண்டாயா
நீயும் திரு மகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா! வாசல்
கடை கழியா வுள் புகாக் காமர் பூம் கோவல்
இடை கழியே பற்றி இனி -86

தாயாரை முன் இட்டு கண்ணன் ஆயன் கோபால புரி கிருஷ்ண பத்ரா நதி கிருஷ்ணாரண்யம் காடு கண்ணனே மார்கண்டேயருக்கு உலகு அளந்த பெருமாளாக காட்சி கொடுத்தார்.. நீயும் திரு மகளும் நின்று நெருக்கி விட்டாயே –உள்ளும் போகாமல் வெளியில் போகாமல் நெருக்கி கொண்டே இருந்தாயே–இடை கழியே பற்றி இருந்தாயே –பெருமாள் காட்சி கொடுத்ததற்கு பிரமாண பாசுரம் இது

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின்  -கனிசாய
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு -87
இனி யார் வருவார்–புல் என்று ஒழிந்தன –துந்து போனதாம் தாள் போட்டு விடுங்கோ–ஆழ்வார் திவ்ய பிற பந்தம் நடம் ஆடும் இடம்நாடு-குலம் தரும் -நமோ நாராயணா அனைவரும் அறிந்து கொண்ட பின்–
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள் தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன் னொளி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்க்கு
என் ஆகில் என்னே எனக்கு-88நாட்டம் உன் திருவடி ஒன்றே–பாடுவதும் உன் பாட்டு தான்–தலையில் சூடுவதும்-சந்நிதானம் சடாரி கொள்ளத்தான்–நமால்வார் சொரூபம்–எனக்கு நிகர் யார்
எனக்காவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனகாவான் தானே மற்று அல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதிய விழும் பூவை பூ
மா மேனி காட்டும் வரம் -89

வண்ணம்-பூவை பூ வண்ணா எதை பார்த்தாலும் அவனை நினைவு கூறும் மேகம் காயாம்பூ-மான் கிருஷ்ண சாரம்-ஹரிணி- புராண சகரவர்திக்கே இந்த நினைவு–உனக்கு நிகர் உண்டு எனக்கு இல்லை.. என் பாக்கியம் பெரிசு–எனக்கு நீர் இருப்பதால்–உனக்கு யார் இருக்கிறார்–புரந்தர தாசர்–ஒப்பார் இல்லா அப்பன்–உமக்கு நிகர் நீர் தானே -தனக்கு ஆவான் தானே -உனக்கு நீ நிகரஎனக்கு நிகர் யார்–எனக்கு நீர் இருகிறீர்

வரத்தால் வலி நினைந்து மாதவ ! நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே ? உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஓர் அரியாய் நீ இடந்த தூன்-90
வரம் வாங்கிய திமிரால் உன்னை அறியாமல்-ஸ்தம்பம் வெடித்து வர-நேராக பார்த்தும் திரு அடியில் விழாமல்-ஆணவம்–கிழித்து போட்டாலும் சேவிக்க மாட்டேன்–ஈர்க்கின்ற அரியாய்–நேர் வலியன்-எதிர்த்து போர் புரியும்–ஓர் அத்வதீயம்–நீ இடந்தது ஊன்-
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞான சுடர் கொளீ இ நாள் தோறும் -ஏனத்
துருவாய் வுலகு இடந்த ஊழி யான்  பாதம்
மருவாதார்க்கு உண்டாமோவான் ?-91
அல்ப சரீரம்-ஞான சுடரை சம்பாதிக்க தானே உடல்–அதை பண்ண வேண்டாமோ-ஞான பிரான்-பாதம் ஆச்ரயித்து பெற வேண்டும்
வானாகி தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திரு மாலே !ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே ? முன் ஒரு நாள்
மண்ணை வுமிழ்ந்த வயிறு -92

 பஞ்ச பூதமும் அரு சுவையும் அவனே -உண்டு உமிழ்ந்து -வயிறு நிரப்ப வெண்ணெய் உண்டான்-உலகம் கொண்ட பெரு வாயா இன்னும் இருந்தால் உகப்பன் என்று எல்லாம் விழுங்கி போந்தான்

வயிறு அழலவாள் வுருவி வந்தானை அஞ்ச
எயறிலக வாய் மடித்தது என் நீ -பொறி உகிரால்
பூவடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா! நின்
சேவடி மேல் ஈடழிய செற்று -93
மறு படியும் நரசிம்க அனுபவம்–அபசாரம் பக்தர் மீது பண்ணினால் பொறுக்காதவன்–பிரகலாதன் மேல் கை வைத்ததும் –தொடை எத்தகையது இந்த பயலை பூ போன்ற மெல் அடியில் போட்டு கொள்ள வேண்டுமா –ஆத்திரம் -ரத்தம் குடிக்க வில்லை கிழித்து எரிந்து குடலை மாலையாக போட்டு கொண்டான் –பிரக லாதனுக்கு உறுமி-மடியில் வைத்து கொண்டு உச்சி முகந்து மகிழ்ந்தான் குழந்தையை
செற்று எழுந்து தீ விழித்து சென்று அவிந்த ஏழுலகும்
மற்று இவை ஆ வென்று வாயம் காத்து -முற்றும்
மறையவற்க்கு காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94

வியாசருக்கு சஞ்சயனுக்கு விஸ்வ ரூபம் தெரிந்தது வியாசர் சிஷ்யர் என்பதால் மறையவருக்கு மார்கண்டேயருக்கு மாயை காட்டினான் -பிரளயம் மீண்டும் காட்டி ஆல் இலையில் சயனித்து -கல் கட்டை விரலை வாயில் வைத்து -பிரளய ஜாலம் உறிஞ்ச மார்க்கண்டேயரும் உள்ளே போனாராம்–இது ஒரு விஸ்வ ரூபம்–

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே -மூவாத
மாக் கதிக் கண் செல்லும் வகை உண்டே என் னொருவர்
தீக் கத்திக் கண் செல்லும் திறம் -9
யம தர்மர் கேட்டார் நாராயணா நாமம் சொல்லாமல் வந்தீர்களே -ஸ்ரீ பாகவத கதை–நரகம் புக முடியாதே சொல்லி இருந்தால் ஒரே சொல் நமோ நாராயணா சொல்லி–
திறம்பாது என் நெஞ்சமே ! செம் கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் -புறந்தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தான்
கண்டாய் கடை கட  பிடி -96
தன் நெஞ்சுக்கு சொல்லி கொள்கிறார் குரங்கு பிடி போல்-அவனை–ஹனுமா பெருமாளை கொண்டது போல் கொள்ள வேண்டும் கடைசி வரை கடை கண் பிடி–புண்டரீகாட்ஷன் தாமரை கண்ணனின் திரு அடியைகேட்டியாக பிடித்து கொள்–புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்–தன் உச்சியில் வைத்து கொள்வான்
பிடி சேர் களிறு அழித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -போடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மெல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் -97
பிர பத்தி சொல்கிறார் இதில்–யானை ஆழ்வான்-பெண் யானை உடன் அபகர்ஷம் சொல்லி-பிடி சேர்-ஆதி மூலமே சொன்னத்தால் திரு நாமம் காத்தது–கங்கை வாசகத்தால் புனிதம்-சங்கரன் தலை மெல் கொண்டான் -கங்காதரன் பெயர் உடன் விளங்குகிறான் –அவனை பிடித்து கொள்ள வேண்டும் என்று முந்திய பாசுரத்துடன் அன்வயம்
பொன் திகழு மேனி புரி சடையம் புண்ணியனும்
நின்று உலகம்  தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவனங்க தென்றும் உளன்-98
பொன்னார் மேனியனே-சடை முடி கொண்டவன் சிவனை –தாவி அலைந்ததால் நெடு மால் என்று பெயர் பெற்றான்–இருவர் அங்கத்தால் திரிந்தாலும் –ஒருவரே துவேஷம் இன்றி நாராயணனே பரன்–கற்பு–அடுத்தவன் உண்டு காண்பதும் கற்புக்கு பங்கம் சிவனுக்கும் ஆத்மா நாராயணன் தான் –
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -99
இதே போன்ற பாசுரம் பிர பந்தங்களில் மீண்டும் மீண்டும் வரும் –பிரகலாதன் போல் எங்கும் உளன் கண்ணன் என்று ஆழ்ந்த நம்பிக்கை விஷம் நெருப்பில் எங்கும் கண்டான் சத்யம் காண்மின் ஐயா இலங்கையை செற்ற தேவனே தேவன் -சத்ய சொரூபன் சத்யத்தாலே சத்தியத்தை நிரூபிக்க முடியும்–அச்த்யவசயம் உணர்ந்து -நெஞ்சு-கொண்டாடுகிறார்–இருக்கிறான் என்று நம்பினவர்   ஏமாந்தது இல்லை –பரம பதத்தில் பால் கடலில் அந்தர்யாமி அர்ச்சை விபவம் எல்லாம் ஒருவனே
ஓர் அடியும் சாட் உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே !-ஓர் அடியின்
தாயவனை கேசவனை தன் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100காண முடியும்–காண அதிகாரம் வேண்டும் –மனத்து வை ஆசை ஒன்றே போதும்–சகாடாசுரனை சாடிய திருவடி–ஒன்றுக்கு அடுத்தது தான் ஒப்பு–ஆசைப் பட்டதால் -உலகு அளந்தவனை காணலாம்–தன் துழாய் மாலையும் வளர்ந்ததாம் —
பெரியவாச்சான் பிள்ளைதிருவடிகளே சரணம் ..
பொய்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் …

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading