திரு விருத்தம் – பத்தாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

(மதி உடன் படுத்தம் துறை
தலைமகன் -தான் அவள் இடம் பெரும் விருப்பம்கொண்டவன் என்று
அவள் மனதில் திண்ணமாக உரைக்கிறான்
அகத்துறையில் தோழி இடம் சொல்லி அவளைத் தலைமகள் இடம் சொல்வதாக தமிழ் மரபு என்றபடி யாகவும்
வட திருவேங்கட நாட -இருப்பிடமாகக் கொண்ட தோழிகள்
வல்லி கொடிகாள் -பலர் உண்டே
விபீஷணன் எல்லா முதலிகள் இடம் சொன்னது போல் அனைவர் இடமும் சொல்கிறான் தலைமகள்
மாயோன் -பரிபாடல்-சங்கத்தமிழ் பழைமை -இதே வாசனை யுடன் இங்கு அருளிச் செய்கிறான்
நானும் கிளி கூட உங்கள் வாயைப் பார்த்து வெட்கப்பட்டு ஈடுபடுகிறோம்
ஆயோ -வார்த்தை கேட்டு ஈடுபட்ட படி
தொண்டைப்பழம் போல் சிவந்து
அறையோ -வெற்றி -நாவல் -தெரிந்து கொள்ள இயலாமைக்கு -வெற்றி என்றபடி )

———

அவதாரிகை –
துறை -மதி யுடன் படுத்தல் –
தலைமகள் தோழி மாரும் தானுமாய் புனத்திலே இருக்க
தலைமகன் சென்று
இரண்டாம் காட்சி யாகையாலே தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –

(தடாவிய அன்பும் -கீழே பார்த்தோம் முதல் காட்சி
தொட்டும் தொடாமல் கலந்து போனது )

மதியுடன் படுத்தல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில்
அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் -நெடுமாற்கு அடிமை -8-10–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

—-

அப்பிள்ளை உரை

புனம் நோக்கி தலைமகளும் தோழிகளும் இருக்க
அங்கு சென்று அவர்களை சில வார்த்தைகள் கேட்டு
அங்கு பதில் இல்லாமல் -தன்னைக் குறித்து மறு மாற்றம் பெறாமல் ஒழிய
இவளது சவுந்தர்யாதிகளில் நலிந்து தான் ஈடுபட்டு இருப்பதை அறிவிக்க
இவள் அந்நிய பரராய் இருக்க
குருவி நெல்லை சாப்பிடாமல் இருக்க -ஓட்ட- ஆயோ -என்கிறார்கள் –
நேராகப் பேசாமல் இருக்க
தோழிமார் இடம் தலைமகன் சொல்லும் வார்த்தை

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
ஆச்சர்யமான பூதனான வடக்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திருமலையில் வல்லி போன்றவர்களே

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
ஆர்த்தியை நானே அறிவிக்கிலும் கேளாமல் உள்ளீர்
ஸர்வேஸ்வரன் நியாமகன் என்று அறிந்தும் பேசாமலும் கேட்க்காமலும் உள்ளீர்களே
எனது ஆற்றாமையே நானே சொல்லிக் கொள்ளும்படி உள்ளதே

நுமது வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—
வாயா -சொல்லிலே தோற்கும் படி
நானும் கிளியும் லஜ்ஜிக்கும் படி சிவந்த தொண்டைப்பழம் போன்ற வாய்
ஆயோ என்ற சொல்லோ
அதரம் மாத்ரமோ
அறிய அரியதாய் உள்ளதே
அடும்
துன்பப் படுத்துகிறதே

ஸ்வா பதேசம்
இவருடைய
சவுந்தர்யாதிகளும் யுக்தியும் வாசி இன்றியே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்லாக்யமாய் இருக்கும் படியைச் சொன்னபடி

——-

வியாக்யானம் –

மாயோன் –
இந்த ஆச்சர்ய மான பதார்த்தங்களை உடையான் ஆவதே –
பரமபதத்தை இருப்பிடமாக உடையவன் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -நான் முகன் திருவந்தாதி -47-என்னும்படி
இங்கே வந்து நின்ற நீர்மையில் ஏற்றம் என்றபடி

வட திருவேங்கட நாட –
திருமலைக்கு அவ்வருகு நாடு இல்லை -என்று இருக்கிறார் –

(ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் பாடல் நடையாடும் இடங்களே நாடு -தேசம் என்று இருக்கிறார் )

வல்லிக் கொடிகாள் –
வல்லி -என்றது –
ஆணறுத்து –ஆண் நாறிற்று -என்றபடி
ஸ்த்ரீத்வத்தின் அதிசயத்தை சொல்லுகிறது

கொடிகாள் -என்றது உபக்நத்திலே அணைந்து நிற்க வேண்டி இருக்கிறபடி
பதி சம்யோக ஸூலபம் -இத்யாதி
கொள் கொம்பு ஒன்றாய்
கொடி பலவாய் இருக்கிறபடி –

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர்-
நோயோ -முடியவும் ஒட்டாதே -ஜீவிக்கவும் ஒட்டாதே இருக்கிறபடி –

நோயோ யுரைக்கிலும் ஒ கேட்கின்றிலீர்-என்றும்
நோய் கொள்வேனும் நானேயாய்
வருவானும் நானேயாய்
சொல்லுவேனும் நானேயாய் யானாலும்
கேட்கை அரிதாக வேணுமோ –
அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே அமையும்

உரையீர் –
கேளாதவர்களைச் சொல்லீர் என்றது -ஆசையின் மிகுதி இருந்தபடி –

நோய் அறிந்தீர் ஆகில் நாங்கள் இனிச் சொல்லுவது என் என்ன

நோய் கொண்டமை அறிந்தேன் அத்தனை
நோய்க்கு நிதானம் அறிந்திலேன் –

நுமது வாயோ –
உம்முடைய முக விகாசமோ –

அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ –
அதில் ஏக தேசமான ஆயோ என்கிற சொல்லோ –
(வாயில் ஏக தேசத்தாலே வந்த சொல்லே ஆயோ )

கிளியும் எள்கும் –
இவள் சொல்லைக் கேட்டு சப்த க்ரஹணத்தாலே புறம்புள்ளத்தை
விட்டுக் கிடக்கிறபடி –

எள்குதல் -ஈடுபடுதல் -என்ற போது-
இச் சொல்லைக் கேட்டு துவண்டு கிடக்கிற படி –

வல் வினையேனும் –
அவற்றைப் போல் அன்றியே
சப்த க்ரஹணத்தாலும்
ரூப கிரஹணத்தாலும்
ஈடுபட்ட படி –

அடும் தொண்டையோ –
அதரமோ

அடும்-
முடிக்கிறபடி உண்டாய் இருந்தது –

அறையோ விதறிவரிதே –
இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்
அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ –
நாவலோ நாவல் -என்றால் போலே –

இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு
தேக குணங்களோடு
அவற்றில் ஏக தேசத்தோடு
வாசி அற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –

வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே
திவ்ய தேச வாசமும்
சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading