அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் 1-4-6
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி 1-4-10
மரா மரங்கள் ஏழும் எய்தாய் ! ஸ்ரீதரா ! இனையாய் ! இனைய பெயரினாய் ! என்று நைவன் அடியேனே 1-5-6
அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால் அமுதிலும் ஆற்ற வினியன் நிமிர் திரை நீள் கடலானே 1-6-6
அறவனை ஆழிப் படை அந்தணனை 1-7-1
மரா மரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ ? 1-7-6
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே 1-8-9
பூவியல் நால் தடந்தோளன் பொறு படை ஆழி சங்கேந்தும் காவி நன் மேனி
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே 1-9-8
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே 1-10-1
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ 2-1-4
ஆழி பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே ? 2-1-6
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே 2-2-6
வான் இன் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிகின்ற மாயப் பிரான் 2-3-10
அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூலார முள 2-5-1
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே ! 2-9-3
விடலில் சக்கர தண்ணலே 2-9-11
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் 2-10-2
மழுங்காத வைநுதிய சக்கர நல வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான்
புள்ளூர்ந்து தோன்றினையே மழுங்காத ஜானமே படையாக மலருலகில் 3-1-9
சங்கு சக்கரத்தன் என்கோ ? சாதி மாணிக்கத்தையே 3-4-3
ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான் தன்னை தோளும் ஓர் நான்குடை
தூ மணி வண்ணன் எம்மான் தன்னை 3-7-2
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான் தன்னை 3-7-6
தூவி அம் புள் உடையாய் ! சுடர் நேமியாய் ! 3-8-7
சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் 3-9-9
சன்மம் பல பல செய்து வெளிப்பட்டு சங்கோடு சக்கரம் வில் ஒண்மை உடைய வுலக்கை ஒள் வாள் தண்டு
கொண்டு புள்ளூர்ந்து உலகில் வன்மை வுடைய அரக்கர் அசுரரை மாள படைபொருத
நன்மை வுடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறை விலனே 3-10-1
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கர தரியினை
அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே 3-10-4
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தன அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் நான் இதற்க்கு என் செய்கேன் ? நங்கைமீர் ! 4-2-8
சங்கென்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் இங்கனே சொல்லும் இரா பகல் என் செய்கேன் ? 4-2-9
மதிள் இலங்கை கோவை வீயச் சிலை குனித்தாய் ! 4-3-1
கண்ணன் எம்பிரான் அம்மான் கால சக்கரத்தானுக்கே 4-3-5
கால சக்கரத்தோடு வெண் சங்கம் கை ஏந்தினாய் 4-3-6
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை 4-5-4
கூன் நல சங்கத் தடக் கையவனைக் குடமாடியை வானக் கோனை
கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறும் உண்டே ? 4-5-9
போர் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைகின்றதே 4-6-1
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க 4-6-2
அப்பனே ! அடல் ஆழியானே ! ஆழ் கடலை கடைந்த துப்பனே !
உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடும் கொல் ? 4-7-5
தடுவுகின்றேன் எங்குக் காண்பன் என் சக்கரத்து அண்ணலையே ? 4-7-9
சக்கரத்து அண்ணலே ! என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப 4-7-10
அசுரர்களை நீறாகும் படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் 4-8-1
தட வரைத் தோள் அடல் ஆழி தடக் கையன் 4-8-2
இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன் 4-8-7
ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் 4-10-11
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே ! என்று என்று 5-1-1
நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் அறமுயல் ஆழி
அம் கை கரு மேனி அம்மான் தன்னையே 5-1-6
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ் விடத்தான் ? யான் ஆர் ? 5-1-7
தேவார் கோலத்தோடும் திருச் சக்கரம் சங்கினோடும் ஆவா ! என்று
அருள் செய்து அடியேனோடும் ஆனானே 5-1-9
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று
இவ் வுலகிற் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார் 5-2-6
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னை 5-3-7
எம் ஆழி அம் கைப் பிரான் உடை தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் 5-3-10
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் 5-4-3
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் 5-4-6
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் 5-4-7
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் 5-4-8
சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே 5-5-1
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே 5-5-6
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி நறிய நல மலர் நாடி 5-5-11
திங்கள் சேர் மணி மாட நீடு ஸ்ரீவர மங்கல நகர் உறை சங்கு சக்கரத்தாய் ! தமியேனுக்கு அருளாயே 5-7-2
எரியே ! பவளக் குன்றே ! நால் தோள் எந்தாய் ! உனது அருளே ! 5-8-7
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய் ! குடந்தை கிடந்த மா மாயா ! 5-8-8
திரு வல்ல வாழ் கழலின் மலி சக்கரப் பெருமானது தோள் அருளே 5-9-9
திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக்
கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினை யாட்டியேன் காதன்மையே 6-1-1
திரு வண் வண்டூர் உறையும் கறங்கு சக்கரக் கை கனி வாய்ப் பெருமானைக் கண்டு 6-1-3
திரு வண் வண்டூர் உறையும் ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானைக் கண்டு 6-1-6
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே 6-1-7
திண் சக்கர நிழறு தொல் படையாய் ! உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் ! 6-2-5
வென்றி நீள் மழுவா !வியன் ஜாலம் முன் படைத்தாய் 6-2-10
வலக் கை ஆழி இடக் கை சங்கம் இவை விடை மால் வண்ணனை
மலக்கு நாவுடை ஏற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே ? 6-4-9
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுருமே 6-5-1
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே 6-5-7
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு செங்கனி வாய்ச் செய்ய தாமரை கண்ணற்கு
கொங்கலர் தண்ணம் துழாய் முடியானுக்கு என் மங்கை இழந்தது மாமைநிறமே 6-6-2
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே 6-6-3
கற்பக காவான நல பல தோளர்க்கு ..தோற்றது மெய்யே 6-6-6
மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு ..இழந்தது கட்டே 6-6-10
கை அமர் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு மெய் அமர் காதல் சொல்லி 6-8-2
யாவையும் யாவருமே நின்ற மாயன் என் ஆழிப் பிரான் 6-8-7
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே 6-9-1
கூறாய் நீறாய் நிலனாகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா வெறியும் திரு நேமி வலைவா !தெய்வ கோமானே ! 6-10-2
ஆவா ! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா !
திரு மா மகள் கேள்வா! தேவா !சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே !
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே 6-10-4
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ ! 6-10-5
கடல் ஜாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேன் உடை வேதியனே ! 7-1-2
ஆர் மருந்து இனி ஆகுவார் ?அடல் ஆழி ஏந்தி அசுரர் வான் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் ! விண்ணுளார் பெருமானேயோ ! 7-1-5
என்னை வுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கை தொழவே அருள் எனக்கு
என் அம்மா !என் கண்ணா !இமையோர் தம் குல முதலே ! 7-1-8
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் 7-2-1
வட்டவாய் நேமி வலம் கையா ! என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் 7-2-4
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் ! என்னும் 7-2-6
கால சக்கரத்தாய் ! கடல் இடம் கொண்ட கடல் வண்ணா! கண்ணனே ! என்னும் 7-2-7
வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளை கடாகின்ற வாற்றை காணீர் 7-3-1
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் 7-3-3
தென் திரு பேரெயில் வீற்று இருந்த முழங்கு சங்கக் கையன் மாயத் தாழ்ந்தேன்
அன்னையர்காள் என்னை என் முனிந்தே ?! 7-3-4
திரு பேரெயில் மேய பத்தும் ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே 7-3-11
ஆழி எழ சங்கும் விலும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ
அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் வூழி எழ உலகம் கொண்ட வாறே .. 7-4-1
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே 7-4-7
புக்க அரி யுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கர செல்வன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே 7-4-11
சித்திர தேர் வலவா ! திரு சக்கரத்தாய் !அருளாய் 7-8-3
ஆர்வனோ ? ஆழி அம் கை எம்பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னை தன ஆக்கி என்னால் தன்னை சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே 7-9-8
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை உகிர் ஆண்ட வெங்கடலே 8-1-3
தோள்கள் ஆயிரத்தாய் ! முடிகள் ஆயிரத்தாய் !துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய அப்பனே 8-1-10
வெல் போர் ஆழி வலவனை ஆதரித்தே 8-2-4
ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் 8-2-5
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு 8-2-9
நேமியும் சங்கும் இரு கை கொண்டு …நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர் பாதம் அடைந்ததுவே 8-2-10
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது
அலற்றி அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய மகள் சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே 8-3-1
கரணப் பல் படை பற்ற அறவோடும் கனல் ஆழி அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே 8-3-2
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன் நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே 8-3-3
அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின் 8-3-6
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென் ?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான் ஓர் அடியான் உளன்என்றே 8-3-7
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே ! 8-3-8
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தை உளானே 8-4-7
படி சேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே 8-5-3
மின் ஆழிப் படையாய் ! 8-5-9
பிறந்த மாயா ! பாரதம் பொறுத்த மாயா !நீ இன்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே !
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெரு மாயா !
உன்னை எங்கே காண்கேனே ? 8-5-10
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கு கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன்உள்ளானே 8-8-1
புகழும் இவள் நின்று இராப் பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்பச் செழும கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரை பொன்று வித்தான்
திகழு மணி நெடு மாட நீடு திருப் புலியூர்வளமே 8-9-3
களிறு அட்ட பொன் ஆழிக் கை என் அம்மான் 8-10-6
தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐம் கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்க்கே 8-10-9
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் முடைமை வுண்டேல் அவனடி சேரத் துய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மதாதும் அவன் அன்றி மற்று இல்லையே 9-1-10
காய்சின வேந்தே !கதிர் முடியானே !கலி வயல் திரு புளிங்குடியாய் !
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் இடர் கடிவானே ! 9-2-6
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே !என் உடைய அமுதே ! கலி வயல் திருப் புளிங்குடியாய் !
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே 9-2-10
ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே 9-3-7
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே !
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா ! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே 9-4-1
பூந்துழாய் முடியார்க்குப் பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளங்குருகே ! திரு மூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே 9-7-9
நீல பனி இரும் குழல் களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ ! 9-9-3
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே 10–1-1
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம கண்ணா ! உன் கோலப் பாதம் 10-3-6
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே 10-4-1
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை வுடையம் ? மீள்கின்ற தில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே 10-4-3
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத் தண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத் தணையானே 10-4-5
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான் வூழியான் வூழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழியம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே ! மறவாது வாழ் கண்டாய் 10-4-8
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே ! வாட்டாற்றான் அடிவணங்கே 10-6-1
மெய் நின்று கமழ துளவ விரை ஏறு திரு முடியன் கை நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மை நின்ற வரை போலும் திரு வுருவ வாட்டாற்றாற்க்கு என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே ? 10-6-8
கோல மலர்ப் பாவைக்கு அன்பாய என் அன்பேயோ ! நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் ! நீலக் கடல் கடைந்தாய் !
உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ? 10-10-7
————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply