இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்-2
பொருந்தியும் நின்று உலகம் உண்டு உமிழ்ந்தும் நீர் ஏற்றும் மூ அடியால் அன்று உலகம் தாயோன் அடி-4
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம்-5
அலர்மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்-6
கழல் தொழுதும் வா நெஞ்சே-7
கண்ணும் கமலம் கமலமே கை தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே-9
பண்டு உலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்-13
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் நால் பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பணிந்து -14
என்றும் இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -17
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்புமாளாகி அஞ்சாது இருக்க அருள் -18
இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கை தொழுது-19
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ் உலகம் ஈர் அடியால் பின் அளந்தது கோடல் பெரிது ஒன்றே ? -20
அரும்பும் புனம் துழாய் மாலையான் பொன் அம் கழர்க்கே மனம் துழாய் மாலை வரும்-23
பொருந்தும் சுடர் ஆழி ஓன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே ! தொழுது -24
வண்டு அறையும் தொங்கலான் செம் பொன் கழல் பாடி யாம் தொழுதும் கை-35
செய்ய படை பரவை பாழி பனி நீர் உலகம் அடி அளந்த மாயவர் அவர்க்கு-36
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை உடையாக கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்தகோ -41
பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து எண் நெஞ்சே ! புரி -44
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் -48
தாளால் சகடம் உதைத்து பகடுந்தி கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வதற்க்கு பெண் அகலம் காதல்பெரிது -54
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் தெளி -57
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப – சூழும் திரு மா மணி வண்ணன் செம் கண் மால் எங்கள் பெருமான் அடி சேரபெற்று -59
பெற்றம் பிணை மருதம் பே முலை மா சகடம் முற்ற காதூடு போய் உண்டு உதைத்து …பண்டு -60
குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நா தன்னால் உள்ள நலம் -73
ஆர்ந்த அடி போது நம்கட்க்கு அரண் -77
அரவு அனையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு-80
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினார் கேள்வியராய் சேர்ந்தார் -85
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -88
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய் அனந்தம் புலம்பிய தோள் எண் திசையும் சூழ இடம் போதாதென் கொலோ வண் துழாய் மால் அளந்த மண் -90
வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என் நெஞ்சே நினை-92
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியனதாகம் சுகிர்ந்து எங்கும் சிந்த பிளந்த திருமால் திரு அடியே வந்தித்து என் நெஞ்சமேவாழ்த்து -95
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடி தாமரையாம் அலர் -96
பேய் ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply