திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்- பூதத் ஆழ்வார்

பரிசு நறு மலரால்  பால் கடலான் பாதம் புரிவார் புக பெறுவர் போலாம் ..நல அமரர் கோமான் நகர்

நிகர் இல்லா பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி

அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படி நின்ற நீரோத மேனி நெடுமாலே நின் அடியை யார் ஓத வல்லார்அறிந்து

பேர் ஓதி ஏத்தும்  பெரும் தவத்தோர் காண்பரே கார் ஓத வண்ணன் கழல்

கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை ஓர் ஆழி நெஞ்சே ! உகந்து

புடை நின்ற நீர் ஓத மேனி நெடுமாலே !  நின் அடியை யார் ஓத வல்லார் அவர் ?

அவர் இவர் என்று இல்லை அரவு அனையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ? பவரும் செழும் கதிரோன் ஒண் மலரோன் கண் நுதலான் அன்றே ? தொழும்  தகையார் நாளும் தொடர்ந்து–12

தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம்புக்கு அஞ்சி படர் எடுத்த பைம் கமலம் கொண்டு –  அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்ததன்றே ?வானவர்  கோன்  பாழிதான் எய்திற்று பண்டு-13

வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது–21

ஜாலம் அளந்து அடி கீழ் கொண்டவன்-23

நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திரு மாலே–30

வராகத்து அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்-31

மகிழ்ந்தது சிந்தை திரு மாலே மற்றும் மகிழ்ந்தது உன் பாதமே போற்றி-32

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமை பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால்இனி..34..

பொருந்திய நின் பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு–37

திரு பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்..40

அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே  ! நினை-41

சரம்  துறந்தான் தாள் இரண்டும் யார் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே ? என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–43

அளவரிய வேதத்தான் வேங்கடத்தான்  விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று -45

மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின்-47

மனி வண்ணன் பாதம் மதி கண்டாய்–51

உரிமையால் ஏத்தினோம் பாதம்-57

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்–61

கையால் அணிந்தேன் உன் சேவடி-65

பூ மேவும் செம் கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும் தண் கமலம் யேய்ந்தார் தமர்–69

திசை அளப்பான் பூவார் அடி நிமிர்ந்த போது-71

உள்ளம் போது மணி வந்கடவன் மலர் அடிக்கி செல்ல-72

யானே இரும் தமிழ் நல மாலை இணை அடிக்கே சொன்னேன்  பெரும் தமிழன் நல்லேன் பெரிது-74

ஆதி கண் நின்ற அறிவன் அடி இணையே ஓதி பணிவது உறும்-76

உத்தமன் நல பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய் ஏத்தி பணிந்து அவன் பேர் ஈர் ஐன்சூறு எப்பொழுதும் சாத்தி உரைத்தல் தவம்–77

தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன்கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர் பெய்து அனைத்து பேர் மொழிந்து பின்–78

மிக கண்டேன் ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு–81

நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம கண் மா ஜாலத்து அமுது-84

இரு நிலத்தை சென்று ஆங்கு அளந்த திரு அடியை அன்று கரு கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திரு கொட்டி எந்தை திறம்-87

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுருவீர் முன்னால் வணங்க முயன்மினோ பல் நூல் அளந்தானை கார் கடல் சூழ் ஜாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி–91

அடியால் முன் காஞ்சனை செற்று-92

இமையோர் முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய் மா வடிவில் மண் கொண்டான் மால்-99

பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading