ஸ்ரீ -செய்ய தாமரைத் தாளிணை வாழியே – பாசுர வியாக்யானம்–

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் அருளிச் செய்த செய்ய தாமரைத் தாளிணை வாழியே – பாசுர வியாக்யானம்

திருநட்சத்திரம் : ஆடி பூசம்
அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் (திருத்தண்கா -தீப பிரகாசர் சந்நிதிக்கு அருகில்)முடும்பை நம்பி திருவம்சத்தின் பரம்பரையில் ஹஸ்திகிரி நாதராகப் பிறந்த இவர், அண்ணா என்றும் அழைக்கப்பட்டு, பிரதிவாதி பயங்கரர் எனப் பிரபலமாக அறியப்பட்டார்.
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
-தனியன்:

–

செய்ய தாமரை தாளிணை வாழியே சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

–

செய்ய தாமரை தாளிணை வாழியே
சவுந்தர்யம் முதலான கல்யாண குணங்களின் இருப்பிடமான மணவாள மா முனிகளைப் பாதாதி கேஸமாக பரிவுடன் மங்களா ஸாஸனம் செய்து அருளுகிறார் ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள்–செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன் -என்றே ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகளுக்கு நிரூபகம்-

மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பொன்னடியாம் செங்கமலம் என்று அனைவரும் கூறுவர் –பிள்ளை லோகம் ஜீயர் பொன்னடியாம் செங்கமலப் போதுகள்-என்கிறார் –இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துதம் என்நெஞ்சமே -என்னும்படி அடியார்களின் திருவடிகளை ஸ்துதிப்பதே நிலை நின்ற ஸ்வரூபம் -இவர் மணவாள மா முனிகளின் திருவடிகளில் ஈடுபடும் படியாக அத்திருவடிகள் அழகும் நிறமும் கொண்டு போக்யமாய் உபாய பூர்த்தியையும் யுடையதாய் இருக்கின்றன –அடியைத் தொடரும்படி இவருக்கு ராக சவ் மனஸ்ய பத ஸவ்ப்ராத்ரங்கள் உண்டாயிற்று என்கிறார் ஜீயர் –திருவடிகள் ராகம் -சிவப்பு -பதம் -திருவடிகள் -ஸவ்ப்ராத்தம் -அவற்றின் சேர்த்தி –
அண்ணாவின் சொற்கள் -ராகம் -அன்பு -பதம் -அடி -சொற்கள் -ஸவ்ப்ராத்தம் -அவற்றின் சேர்த்தி அழகு -மணவாள மா முனிகளின் இணை யடிகளின் இணையில்லா அழகுக்கு ஏற்றவாறு இவரது அன்பு கூர்ந்த மங்களா ஸாஸன வாக்கியமும் அமைந்து பரிமளிக்கிறது –

சேலை வாழி திரு நாபி வாழி
திருவரையில் பாங்காக ஆஜங்கம் -முழங்கால் -தழைத்துடுத்த -திருப்பரிவட்டத்தின் அழகில் திரு உள்ளம் சென்று மங்களத்தை ஆஸாசிக்கிறார் –சந்திரனைச் சூழ்ந்த பரிவேஷம் போலே யாயிற்று திருவரைக்குத் திருப் பரிவட்டத்தோடே சேர்த்தி –ஸூதா நிதி மிவஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம் -என்னைக் கடவது இறே -என்கிறார் ஜீயர் –மணவாள மா முனிகளின் காஷாயம் அணிந்திருக்கும் அழகு சந்த்ரனைச் சுற்றி ஒளி வட்டம் சூழ்ந்து சோதி எங்கும் பரந்துள்ளது -என்கிறார் –
அந்தி போல் நிறத்தாடையும் என்றதும் உந்தி மேலதன்றோ என்று ஆழ்வார் பகவானிடம் ஈடுபட்டது போலே-சவுந்தர்ய சாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தால் போலே இருக்கிற திருநாபியின் வைலக்ஷண்யத்தைக் கண்டு சேலை வாழி திரு நாபி வாழியே -என்கிறார் –மடவார்களின் உந்தித் சுழியிலே சுழலும் மனஸ்ஸை மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்கால் படுத்த வல்லது மணவாள மா முனிகளின் திரு நாபி –

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூந்தரமாய் இருக்கிற திருமார்பையும் அதனோடு சேர்ந்த திரு யஞ்ஞா உபவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
மார்புக்குத் தூய்மை யாவது
நெஞ்சத்துப் பேராது நிற்கும் -பெருமானைக் கொண்டிருப்பது -அத்தால் ஹ்ருதயம் சவும்ய ரூபமாய் இருக்கிறது –கேசவன் முதலான பன்னிரு திருநாமங்களில் மாதவனின் இடம் -மார்பு –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி -என்றார் ஆழ்வார் -திருவுக்கு இடமாய்த்து பகவானின் திருமார்பு -திருமாலுக்கு இடமாய்த்து ஆசார்யரின் திரு மார்பு -ஆஸ்ரிதர்களுக்கு நன்மையையே சிந்திக்கும் திரு மார்பு -ஸோபிதம் யஞ்ஞ ஸூத்ரேண -என்று திரு மார்போடு சேர்ந்து இழுக்கும் யஞ்ஞ உபவீதம் -இதற்கு முந்நூல் என்று பெயர் -இதுவே மெய்ந்நூல் -இது பொய்ந் நூல்களையும் கள்ள நூல்களையும் உண்மையன்று என்றும் உணர்த்துகிறது -துய்ய மார்புக்கும் முப்புரி நூலுக்கும் பல்லாண்டு –

சுந்தரத் திருத் தோளிணை வாழியே
மந்த்ரம் நாட்டி மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்
-என்று ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஈடுபட்டார் –மறை பாற்கடல் கடைந்து மெய்ப்பொருள் உணர்த்தித் தத்துவப் பொருளைக் காட்டிய அழகிய மணவாள மா முனிவரின் தோள் அழகிலே ஈடுபட்டு அண்ணா சுந்தரத் திருத்தோளிணை வாழியே -என்கிறார் –தோள் கண்டார் தோளே கண்டார் என்னும்படி அழகு நிறைந்து கண்டவர் தம் மனம் கவரும் காண் தகு தோள் அண்ணல் மா முனிகள் –

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
அவ்வோ காலங்களில் ஸாஸ்த்ர ப்ரமாணங்களினால் உபய விபூதி நாயகனான ஸர்வ ரக்ஷகனையும் ரக்ஷிக்கும் திருத்தோள்கள் -சங்கு சக்கர அடையாளங்களால் விளங்கும் திருத் தோள்கள் -தொண்டக் குலத்துக்குத் தமிழ் வேதமான திருவாய் மொழியின் அர்த்தங்களை உபதேசித்து அருளும் பொழுது காட்டும் ஹஸ்த முத்ரை -ஞான முத்ரை -உந் நித்ர பத்ம ஸூபகாம் உபதேஸ முத்ராம் -என்ற உபதேஸ முத்ரையோடே கூடின திருக்கையும் -பாஷண்டிகளுக்கு வஜ்ர தண்டமாயும் -வேதாந்த ஸார ஸூக தர்சன தீப தண்டமாயும் இருக்கும் தத்வ த்ரயத்தை விளக்கும் த்ரிதண்டத்தைக் கையிலே யந்திய அழகும் பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களா ஸாஸனம் செய்யத் தூண்டி -கையும் ஏந்திய முக்கோலும் வாழியே -என்கிறார் –

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
ஸ்மயமான முகாம் போஜம் தயமாந த்ருகஞ்சலம்
-என்னும்படி -கருணை பொழியும் திருக்கண்கள் -அலர்ந்த தாமரைப் பூவில் இரண்டு வண்டுகள் அமர்ந்து இருப்பது போல் புன் முறுவலோடு கூடின தாமரை போன்ற முகத்தில் திரு உள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள் -கண்ணுக்கு அழகு கருணையுடன் காணல் -இவர் மணவாள மா முனிகளின் திருக் கண்களுக்குத் தோற்று-ஜிதந்தே புண்டரீகாக்ஷம் என்கிறார் –
கட் கண் என்றும் உட் கண் என்றும் கண்கள் இரு வகை – நேத்ரேண ஜ்ஞாநேந -என்று ஞான ஸஷுஸ்ஸூக்களைக் கொண்டவர் என்றும் பொருளாகும் -இதனால் ஸ்வரூப வைலக்ஷண்யமும் ஜ்ஞாத வைலக்ஷண்யமும் சொல்லப் பட்டதாயிற்று–

பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி
மா முனிகள் விஷயத்தில் சொன்னவை எல்லாமே எதார்த்தமானவை -காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -என்று ஆஸ்ரிதர்களை அஸத்வாதி தோஷங்கள் நெருங்காமல் இருக்கும்படி கடாக்ஷிப்பவர் –பொய்யிலாத -என்பது புத்திக்கு விசேஷணம் -இராமானுசன் மெய்ம் மதிக்கடலே —என்கிறபடியே உண்மை நல் ஞானமாகிய யதார்த்த மெய் ஞானத்தை யுடையவர் -என்று பொருள் -மணவாள மா முனிகளின் ஞானம் அதி விலக்ஷணம் -தத்வ த்ரயங்களையும் காண வல்லது –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –என்கிறபடியே ஸ்ரீ யபதியையே விஷயமாக உடையது –

புகழ் வாழி வாழியே
ஞான வைபவத்தால் வந்த புகழ் –தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்றபடி எல்லையில்லாத பேரொளியுடன் ஒரு குறையும் இன்றி வாழ வேண்டும் என்கிறார்-சரம பர்வரான மணவாள மா முனிகள் விஷயத்தில் மங்களா ஸாஸனம் செய்வதே நமது கர்த்தவ்யம்

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே
–பாதாதி கேச மாலை நிகமன பாசுரம் –

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில்
மணவாள மா முனிகளின் திருவடிகள் வாழியே
துவராடை வாழியே
இடை வாழியே
யஜ்ஜோபவீபம் விளங்கும் திரு மார்பு வாழியே
முக்கோல் ஏந்திய திருக் கை வாழியே
திருத்தோள்கள் வாழியே
பவளச் செவ்வாய் வாழியே
திருக்கண்கள் வாழியே
ராமானுஜ திவ்யோர்த்வ புண்ட்ரம் வாழியே
திரு நெற்றி வாழியே
திரு முடியே வாழியே
பொன் அரங்கின் மணவாள மா முனிகள் வாழியே –

—

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநயே விததே நம
யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வ ஸித்தீ நாம் அந்தராய நிவாரிணீ –
-யாவர் ஒருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கி விடுமோ அந்த ஸ்ரீமன் மணவாள மா முனிகளை வணங்குகிறேன்–

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -( தீ பக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜா மாதரம் முநிம் )
என்று தொடங்கி அருளிச் செய்த சேனை முதலியார் நாயனார் (சேனை முதலியாருக்கு நாயனார் ஸ்வாமி -நம்பெருமாள் ) ஜீயருடைய கல்யாண குணங்களிலே தோற்று அடிமை புக்க படியைப் பிரகாசிப்பிக்கிறராய் நின்றார்-அவர் தம் அடியரான இவரும் அக் குணங்களுக்கும் ஸுந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே ஈடுபட்டு பாதாதி கேஸ அந்தமாக அனுபவித்துத் தம்முடைய பரிவின் மிகுதியாலே மங்களா ஸாஸனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்

செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் -என்று இறே இவர்க்கு நிரூபகம்-இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர்-தம்முடைய சேஷத்வ அனுகுணமாக-உன் பொன்னடி வாழ்க -என்னுமாப் போலே (பாத இலச்சினை வைத்தார்– பண்டு அன்று பட்டினம் காப்பே –பெரியாழ்வார் -5-2-8-) பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையிலே ப்ரவ்ருத்தராகிறார் –

செய்ய தாமரை தாளிணை வாழியே சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே

செய்ய தாமரை தாளிணை வாழியே-பிரஜை முலையில் வாய் வைக்கும்-நாண் மலராம் அடித் தாமரை -திருவாய் -3-3-9-இவை யாய்த்து –உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது -திருவாய் -7-1-10- என்கிறபடியே-இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்-இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி -பெருமாள் திருமொழி -2-4-5-என்கிறபடியே வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்

செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும்படி (ராமானுஜ நூற்றந்தாதி -63)-ராக ஸுவ் மனஸ்ய பத ஸுப் ராத்ரங்கள் உண்டாயிற்று (ராகம் – சிவப்பு -அன்பு –பதம் -அடி -சொற்கள் –ஸுப்ராத்ரம் -சேர்த்தி )
அதாவது-அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமாரைப் பூப் போலே தர்ச நீயமுமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே சேர்த்தி அழகையும் யுடைத்தாய் உபாய பூர்த்தியையும் யுடைத்தாய்த்துத் திருவடிகள் இருப்பது

உன் மீலத் பத்ம கர்பேத்யாதி -உத்தர தினசர்யா –5-என்றும்

உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு
: || 6–மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்-சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப் பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,-உபரிமேற்பகுதியில், பாலின் திரட்சி போல் வெளுத்ததும், பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற (வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும் நகங்களின் நுனிப்பகுதிகளில், – சிறிது வளையையுடையதும்,- மிகவும் மெத்தென்றிருப்பதும்,அப்ராக்ருதமானதும், மிகச் சிறந்ததுமான,- (தமது) திருவடியிணையை, அடியேனுடைய தலையில், வைத்தருளவேணும்.

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரற வோட்டி -பாதாதி கேச மாலை -1-என்றும்-சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே -என்றும் இறே அடி அறிவார் வார்த்தை-இப்படி-இதனுடைய ஸுந்தர்யத்தையும் போக்யதா ப்ரகர்ஷத்தையும் அனுபவித்த இவர் மங்களா ஸாஸனம் பண்ணி யல்லது நிற்க மாட்டாரே –உன் சேவடி செவ்வித் திருக்காப்பு –திருப் பல்லாண்டு -1- என்னுமா போலே

அன்றியே
செய்ய –என்கிற இத்தால்-(சிவந்த என்ற பொருள் கொள்ளாமல் – செம்மை என்றும் பொருள் கொண்டு )
திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய் ஆஸ்ரிதர் அளவும் வந்து செல்லுகிற வாத்சல்யத்தை யுடைத்து என்கை-இது அண்ணராய சக்ரவர்த்திக்குப் ப்ரத்யக்ஷம்
( மா முனிகள் சரம தசையில் எழுந்து அருளி இருந்த போது அண்ணராய சக்ரவர்த்தி என்பவர் ஸேவித்து நிற்க மடங்கிக் கிடந்த மா முனிகளின் திருவடிகள் தாமே நீண்டு அவர் தலையிலே வைத்து அருள் புரிந்தமை இங்கு நினைக்கத் தக்கது )-வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே -என்கிறபடியே தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்தது திருவடிகளாயிற்று

திருக்கமல பாதம் வந்து -அமலனாதி பிரான் -1-என்றும்
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -பெரிய திருமொழி -7-3-5-என்றும் சொல்லக் கடவது இறே

இவர் இப்படித் தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது -அளவாய் இருக்கிற பொற் காலானது தன் சென்னித் திடரிலே ஏறும்படி அருளாலே வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய பாவனத்வ போக்யத்வங்களை அனுபவித்து அவற்றுக்குத் தம்மோட்டை ஸம்பந்தத்தாலே ஓர் அவத்யமும் வாராது ஒழிய வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுறார் ஆகவுமாம்

ஆகையால் இவருக்குப் ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அடி தானே யாய் இருக்கை

—

இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
மேலே – திருவரையோடே சேர்ந்து சிவந்து நிற்பதான திருப்பரி யட்டத்தில் அழகிலே சென்று
அச்சேர்த்திக்கு மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி
-என்று-கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே—திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி -என்று திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது —சந்த்ரனைச் சூழ்ந்த பரி வேஷம் (ஒளி வெள்ளம் )போலே யாயிற்றுத் திருவரைக்குத் திருப் பரியட்டத்தோடே சேர்த்தி–

ஸூதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம் ப்ரஸன்னார்க்க ப்ரதீகாஸ பரி வேஷ்டிதம் -பூர்வ தினசர்யா -3- (தேவரீருடைய இச்சையால் எடுத்துக் கொள்ளப் பட்ட அழகான தேவரீருடைய திருமேனி அமுதக்கடல் போல் குளிர்ந்த பிரகாசத்தை யுடைய ஸூர்யனுடைய ஒளியுடன் கொடியது போல் உள்ளது -) என்னக் கடவது இறே

ஈனமிலாத இள நாயிறாகும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -பாதாதி கேச மாலை –3-என்றும்-ஆதாம்ர விமலாம் பரம் -பூர்வ தினசர்யா -5- ( சிவந்துள்ள ஆடையுடன் கூடியவர் ) என்றும்
அத்யாச்சர்யமாய் இறே இருப்பது -இத்தால்-பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் -5-2-8-வந்தமை தோற்றுகிறது

—

அதுக்கு மேலே
கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து அவ்வழகுக்குப் போற்றி என்கிறார் – திரு நாபி வாழி -என்று–திருப்பரி யட்டத்துடனே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது—அந்தி போல் நிறத்தாடை -என்ற அநந்தரம்-உந்தி மேலது அன்றோ (அமலனாதி -5 )-என்று அருளிச் செய்கிறார்

அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய்-அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே (பாதாதி கேச மாலை)உந்திச் சுழி இருப்பது-ஸுந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதினுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே-இது தான் மடவார் உந்தித் சுழியிலே சுழலுகிற மனஸ்ஸை மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்கால் படுத்த வற்றாயும் இருக்கும் –

—

அநந்தரம்
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூ ந்தரமாய் இருக்கிற திரு மார்பையும்-அத்தோடே சேர்ந்த திரு யஜ்ஜோ பவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் —துய்ய மார்வும் புரி நூலும் -என்று–மார்வுக்குத் தூய்மை யாவது-ஹ்ருதயேந உத்வஹன் ஹரிம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-12-( மார்வில் ஹரியைத் தாங்கிக் கொண்டு ) என்று நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை -மூன்றாம் திருவந்தாதி -81-உடைத்தாகை–அத்தாலே-அவர்கள் ஹ்ருதயம் சவும்ய ரூபமாய் இருக்கும்

அவ்வளவும் அன்றியிலே
மார்வம் என்பதோர் கோயிலிலே மாதவன் என்னும் தெய்வம் -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
இவர் திரு உள்ளத்தைக் (ஜங்கம ஸ்ரீ விமானம் அன்றோ )கோயிலாகக் கொண்டு-அரவிந்தப் பாவையும் தானுமான -பெரியாழ்வார் -5-2-10- சேர்த்தி யுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது – -விசேஷித்து –வக்ஷஸ்தலம் மாதவ ஸ்தானம் ஆகையாலே (பன்னிரு திருமண் காப்புகளில் மார்வில் அணியும் திரு மண் காப்புக்குத் திரு நாமம் மாதவன் ஆகையால் ) உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து

மங்களம் மாதவ ஆராம மனஸ் பத்மாய மங்களம் -என்றும்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே ஸ்ரீ நிவாஸாய -ஸ்ரீ வெங்கடேச மங்கள ஸ்தோத்ரம் -என்றும் சொல்லக் கடவது இறே–அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆசார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களி மாய்த்து அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –

விண்ணாட்டில் சால விரும்புமே வேறே ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு -ஞான ஸாரம் -9-என்றும்–தன்னாரியன் பொருட்டாச் ஸங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -ஞான ஸாரம் -37-என்றும் சொல்லக் கடவது இறே

அந்த
1- அநந்ய ப்ரயோஜ நதையையும்
2- ஆச்சார்ய பரதந்த்ரதையையும் ஆய்த்து இங்குத் தூய்மையாகச் சொல்லுகிறது –

அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் -என்னும்படி-இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே-இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -ராமானுஜ நூற்றந்தாதி -106-என்கிறபடியே பரம ஹம்ஸரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்ம ஆஸனத்தை உடையதாயும் இருக்கும் –-ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே-அங்க ராக ரஞ்சிதமான இவருடைய ஹ்ருதயத்திலும் ஆஸ்பதியாய் அன்றி இரானாய்த்து-இப்படி இவன் எழுந்து அருளி இருக்கையாலே சவும்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம் அத்யந்த சவும்ய ரூபமாய் இருக்கும் என்கை

ஆகையால்
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -2- என்கிறபடியே
இவரும் இருவருமாக சேர்த்திக்கு இருப்பிடமான திரு மார்வைத்-துய்ய மார்வும் புரி நூலும் வாழி -என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் ஆகவுமாம்–

இவர் மானஸ வாஸியாய் இருக்கிறவனும்-புலம் புரி நூலவன் -பெரிய திருமொழி -9-9-9-இறே

அலர் மேல் மங்கை யுறை மார்பன் –திருவாய் -6-10-10- என்கையாலே-அம் மா ஒருத்திக்கு இடமுடையாய்த்து அம்மார்வு-இம் மார்வு இருவருக்கும் இடமுடைத்தாய் இருக்கும்

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையா மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திரு மாற்கு அரவு
-முதல் திருவந்தாதி -53-

மங்களம் பன்ன கேந்த்ராய என்றும்
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்றும் சொல்லக் கடவது இறே

அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மனஸா த்யாதம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28-நல்ல மனத்தினால் நினைக்கப்பட்டு -என்கிறபடியே ஆஸ்ரிதருடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுஹார்தத்தை யுடைத்தாகை

உரஸா தாராயாமாஸ-பாரதம் -அர்ஜுனன் மீது விடப்பட்ட பாணங்களைத் தன் மார்வில் கண்ணன் ஏற்றான் -என்றும்-நன் நெஞ்ச வன்னம் -பெரிய திருமொழி -7-2-7-என்றும் சொல்லுகிறபடியே
தீமையைத் தவிப்பதற்கும் நன்மையை உண்டாக்குவதற்கும் -இவை இரண்டுக்கும் – தானேயாய் இருக்கை-

துய்ய மார்பும்
ஏராரும் செய்ய வடிவு
-ஆர்த்தி பிரபந்தம் -30-என்னுமா போலே-இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்

மந்தர கிரி மதித மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பாண்டர ஸூ ந்தர ஸூ குமார திவ்ய விக்ரஹ—
மந்தர மலையாலே கடையப்பட்ட கடலில் இருந்து யுண்டான நுரையினுடைய வெண்மையின் அழகுடன் கூடிய மென்மையான திரு மேனி என்று இறே இருப்பது

ஆக-இவற்றால் சொல்லிற்றாய்த்து-பாஹ்ய ஆப் யந்த்ர ஸூசி என்கை-

—

இனித் திரு மார்வோடே சேர்ந்து இறே திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது–தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும் -பாதாதி கேச மாலை -5-துஷார கரகர நிகர விஸத தர விமலோ பவீத பரி ஸோபித விசால வக்ஷஸ்தல-சந்திரனுடைய கிரணங்களைப் போலே வெண்மையான பரி ஸூத்தமான முப்புரி நூலினால் ப்ரகாசிக்கின்ற விசாலமான மார்பு -என்கிறபடியே சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரம் ஆனால் போலே யாய்த்து திரு மார்வுக்குத் திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது –

ஸோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண -பூர்வ தினசர்யா -வெண் புரி நூலினால் அழகு பெற்று விளங்குகின்றவர் -என்னக் கடவது இறே-அன்றிக்கே-இம் முந் நூலான மெய்ந் நூலாலே இறே பொய்ந் நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம் (உண்மை) அன்று என்று கழிப்பது—வகுள தர தவள மாலா வக்ஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர ஸமய வாதச் சேதநம் —வெண்மையான மகிழ் மாலையை அணிந்த திரு மார்வை உடையவர் -வேதத்துக்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பவர் -என்னக் கடவது இறே-தம்முடைய ப்ரஹ்ம ஸூத்ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத்ரங்களைக் கழிப்பது

ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தாலே ஸிகா யஜ்ஜோ பவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன் ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன் ஆழ்வானைக் கண்டாய் யாகாதே -என்றான் இறே-பெரிய திருமொழி -8-1-வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருகிலும் ஐதிக்யம் இது-இது போல் அன்றோ மா முனிகளும் தம்மை சேவித்தவர்களைப் பவித்ரர்களாக்கி அருளுகிறார் என்றவாறு –

(ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன் புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய் பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  – கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –பிதாவானவன் ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –)

—

இனித் திரு மார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார் –
திருத் தோளிணை வாழியே-மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -1-என்னுமா போலே–ஸூந்தரத் திருத் தோளிணை–புஜ த்வய வித்ருத விசத தர சங்க சக்ர –சங்கு சக்ர சிஹ்னங்கள் விளங்கும் திருத் தோள்கள் என்றபடி லாஞ்சனங்களை உடைத்தாய்த்துத் திருத் தோள்கள் இருப்பது

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரன் -ஞான சாரம் -7-இறே அவன் தான்

சிங்கார மாலைத் திருத் தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும் –பாதாதி கேச மாலை -7- என்று அனுபாவ்யமாய் இறே இருப்பது-

தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான்
-பெரிய திருவந்தாதி -87-என்கிறபடியே
இவருக்குத் திருத் தோள்களானவை எப்பொழுதும் சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே
வலத்துறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும் -திருப்பல்லாண்டு -2- இங்கும் உண்டாய் இருக்கை

அன்றிக்கே
திருத்தோள்கள் தான் பகவ லாஞ்சனத்திலே ப்ரமாணமுமாய் அபவித்ரரை ஸூபவித்ரராக்கியும்
துர் வ்ருத்தரை வ்ருத்த வான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும் –

—

அநந்தரம்
திருத்தோள்களில் ஏக தேசமான திருக்கையையும்-அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு
அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார் —கையும் ஏந்திய முக்கோலும் வாழியே–வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு-அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டா விறே –

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் -நாச்சியார் -12-4- என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத் தாமரையிலே சேர்ந்து இருந்த தண்டும் -பாதாதி கேச மாலை -5-என்று இறே சேர்த்தி இருப்பது

இக் கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே –

அன்றிக்கே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே -என்கிறபடியே-தனது தொண்டக் குலம் சூழ இருக்க அவர்களுக்குத் தமிழ் வேதமான திரு வாய் மொழியினுடைய அர்த்தத்தை ஹஸ்த முத்ரையால் உபதேசிப்பது அருளுவதும் அநுபாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு–உந் நித்ர பத்ம ஸூ பகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி -25-அப்பொழுது அலர்ந்த தாமரையின் அழகுடைய ஞான முத்ரை என்றும்-எழில் ஞான முத்திரை வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -20- என்றும் சொல்லக் கடவது இறே –

ஏந்திய
பூ ஏந்தினால் போல் இருக்கை–கையும் ஏந்திய முக் கோலும் வாழியே–நின் கையில் வேல் போற்றி என்று நாச்சியார் கையில் ஏந்திய வேலுக்கு மங்களா ஸாஸனம் -செய்தால் போலே இவரும் மா முனிகள் கையில் ஏந்திய முக்கோலுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார்

அன்றிக்கே
கமல கர தல வித்ருத த்ரி தண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரிஹ்ருத நிஜா வசத-
தாமரை போன்ற திருக்கையில் தரித்த த்ரி தண்டத்தைக் கண்ட பாஷண்டிகள் அனைவரும் வெகு தூரம் ஓடும்படியான இருப்பிடத்தை யுடையவர் என்று ஒருக்கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும்-

—

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்

கண்ணால் கண்டு கொண்டு இருக்கும் போதே கை விட்டார் என்றும் கண்ணைக் கண்டவுடன் கையை விட்டு விட்டார் என்று சாடூக்தி -நயவுரை

கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே
–என்று திருக் கைக்கு அனந்தர பாவியாய்ப் பேசுவது திருக் கண்களை இறே–திருக் கைகளினாலே ஸ்பர்சித்து அருளின பின்பு இறே திருக் கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது

கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் (மதகு) இருக்கிற படி

நிரந்தர கருணாம்ருத தரங்கிணீ பிர் ஆர்த்தரித அபாங்கைர் அநுகூலம் அபி ஷிஞ்ச —
எப்பொழுதும் அமுதம் அன்ன கருணை யானது பெருகுகின்ற உமது கடைக் கண் பார்வையாலே அனுகூலனான என்னை நனைக்க வேண்டும் என்றார் இறே
இவரைப் போல் கண்ணுடையார் ஒருவரும் இல்லையே –இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண்-
கண் அருளாலே இறே எல்லாரையும் ரக்ஷித்து அருளுவது –

கண்ணினை
அலர்ந்த செவ்வித் தாமாரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்து இருக்குமா போலே யாய்த்து
திருக் கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி—ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம்–பூர்வ தினசர்யா -10-புன் முறுவலுடன் விளங்கும் தாமரை போன்ற திரு முகமும் —திரு உள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப் படுத்துகின்ற திருக் கண்களும்-என்று அன்றோ இவற்றின் சேர்த்தி இருப்பது –திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்தில் அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்

வாழி செவ்வாய் –பாதாதி கேசவ மாலை -10-என்றும்
வார் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே -என்றும்-அவற்றையும் திருநாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்–அத்தாலே அவை இரண்டையும் -கண்ணினை -மங்களா சாசனம் பண்ணி அருளினார்-இவர் ஜீயர் திருக்கண் மலரிலே யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –

—

இவ்வளவும் ஸூரூப வை லக்ஷண்யத்தை அனுபவித்து-மங்களா ஸாஸனம் பண்ணின இவர்-இனி ஸ்வரூப குணமான ஞான வை லக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா ஸாஸனம் பண்ணுவாராக அதிலே இழிகிறார்—கட் கண் என்றும் உட் கண் என்றும் -பெரிய திருவந்தாதி -28-
நேத்ரேண ஞாநேந -என்றும் ஞான சஷுஸ்ஸூக்கள் இரண்டுக்கும் தர்ச நத்வம் ஒத்து இருக்கையாலே ஒரு சேர்த்தி யுண்டு இறே அத்தாலே —பொய்யிலாத மணவாள மா முனி புந்தி -என்று ஞானத்தைப் பேசுகிறார் —

புந்தி -புலன் -புத்தி -ஞானம் —பொய்யிலாத-இவர் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக யுண்டு என்கை-இனிச் சொல்ல மாட்டாதார் குறையே யுள்ளது-அன்றிக்கே-ஆஸ்ரிதரானவர்களுக்கு அஸத்வாதி தோஷங்கள் வராமல் நோக்கிப் போருகிறவர் என்னவுமாம்

காமாதி தோஷ தரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -யதிராஜ விம்சதி -1-என்கிறபடியே
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பர் -பாதாதி கேச மாலை

மணவாள மா முனி
ரக்ஷகர் அன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையாலும் திரு நாம வைலக்ஷண்யத்தாலும் விட ஒண்ணாது இருக்கை

பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது
இராமானுசன் மெய்ம் மதிக் கடலே -இராமானுச நூற்றந்தாதி -58 என்கிறபடியே-உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை யுடையவர் என்கை-(ஸர்வம் ஞானம் ஸத்யம் -நம் ஸித்தாந்தம் -முத்துச் சிப்பியை வெள்ளி என்று பிரமிப்பதும் கிஞ்சித் ஸாம்யம் இருப்பதாலேயே அன்றோ )அதாவது
மெய் ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி -திருவாய் -3-2-7-என்கிறபடியே-ஸம்ஸார ஆர்ணவ மக்நரானவர்களை ஞானக் கையாலே -திருவாய் -2-9-2-உத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால்-கையாலும் காலாலும் இறே இவர் எடுத்து ரக்ஷித்து அருளுவது –

ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழியே-ஞானப் ப்ரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது –

தீ பக்த்யாதி குணார்ணவம் -தனியன் -என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே-ஞானம் சார பூத குணமாகையாலே அத்தைப் ப்ரதானமாகச் சொல்லக் கடவது ––தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் -என்கிறபடியே–ஸூத்த ஸத்வ மயமான விக்ரஹமாகையாலே உள்ளில் பிரகாசித்வம் என்ன -உள்ளுள் உள்ள வற்றை பிரகாசிப்பிக்க -என்னக் கடவது இறே

புந்தி என்று-ஞான மாத்ரத்தையும் சொன்னது பக்த்யாதிகளுக்கும் உப லக்ஷணம்-மங்களம் நிர்மலா ஞான பக்தி வைராக்ய ராஸயே -என்னக் கடவது இறே

வாழி
மங்களா ஸாஸனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம் –
என்னுமா போலே

அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானமும் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குரு -உபதேச -61-என்றும் இறே ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்தது-ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி ஸம்பந்த ஞானத்தை விளைவித்து கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போருவது எல்லாம் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே என்கை

மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தில் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயங்களையும் அலகலகாகக் காண வல்லதாய்
தாமாரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஸ்ரீ யபதியை விஷயமாக யுடைத்தாய்-அது தான்-ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்திலே நிலை நின்று போருமதாய் இருக்கும்-
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட ஸகல ஸாஸ்த்ர ஆச்சார்யர்
என்னக் கடவது இறே

ஆக
இவை எல்லா வற்றாலும் கீதையை அருளிய கண்ணன் என்கோ -திருவாய் -3-4-6- என்னும்படி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான -திருவாய் -6-8-6- கீதா உபநிஷத் ஆச்சார்யனோடே விகல்பிக்கலாம் படி ஞான நிதியாய் இருக்கிற இவருடைய ஞானமானது-கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் என்று வாழ்த்தி அருளினார் என்கை -கலி தோஷத்தாலே இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போருவது

இவர் பல்லவராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே –என்னக் கடவது இறே
கலி கன்றியான் -திருமங்கை ஆழ்வார் என்றும் நம்பிள்ளை என்றும் கொள்ளலாம் -அருளாலே உயர்ந்தவர் இறே இவர் தான்-இனி-இவர் இப்படித் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே ஞான விபாகமற–ஸகல சேதனரையும் ரஷித்துக் கொண்டு போருகையாலே வந்த புகழைச் சொல்லுகிறது –
ஞாலம் யுண்ட புகழ் போல் இருப்பதொரு புகழாய்த்து இது-தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி-அதாவது ஞான வைபவத்தாலே வந்த புகழானது
தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -இராமானுச நூற்று அந்தாதி -61-என்கிறபடியே நிரவதிக தேஜோ ரூபமாய் அப்ரதிஹதமாய் வாழ வேணும் என்கை

புகழ் வாழி -என்ற அநந்தரம் வாழி என்று இரட்டிப்பாய் இருக்கிறதுக்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்

அன்றிக்கே–நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே -பாதாதி கேச மாலை -10–என்கிறபடியே
கீழ்ச் சொன்ன யஸஸூக்கு ஆதாரமாய் அனுக்தமான ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யமும் அனவரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம் —அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை –

இத்தால் சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாஸனமே அனுகூலரானவர்க்கு அனவரத கர்த்தவ்யம் என்று-அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே
–பாதாதி கேச மாலை நிகமன பாசுரம் –

—————–

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

அடியார்கள் வாழ
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார்
-பெருமாள் திருமொழி -1-10-என்றும்
அரங்கன் மெய்யடியார் -பெருமாள் திருமொழி -2-1- என்றும்
திருமால் அடியார் -திருவாய் -5-6-11- என்றும் சொல்லப்படுகிற-ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் அபி வ்ருத்தமாய் வாழும்படிக்கு இவர் தான்
பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2-1- என்றாய்த்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவது –

அரங்க நகர் வாழ
அடியாருக்கு ஆவாஸ -இருப்பிடமான -அரங்க நகர் —அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -75- என்னும்படி இருக்கை—நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் -11-5-இறே–அந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடனே கோயில் வாழும்படிக்கும் கோயில் மணவாள மா முனியான இவர் தாம்-ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அநு பத்ரவாம் அநு தினம் ஸம் வர்த்தய –ஸ்ரீ ரெங்கச் செல்வமானது தடை ஏதும் இல்லாமல் நாளும் வளரட்டும் -என்றும்

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்களானி
|| -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-

(மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா
– உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக் கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ -வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்–ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.–அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.–ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.-என்று இறே மங்களா ஸாஸனம் பண்ணி அருளிற்று )

செல்வம் சிறக்கப் பெற்றதாய் பரம பதத்தில் உள்ள ஒளி போன்ற ஒளிக்கு இருப்பிடமானதாய் இதற்கு மேல் இல்லை என்னும்படி உயர்ந்த முதல் திவ்ய தேசமான ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரமானது தீது ஏதும் இன்றிச் சிறந்து விளங்கிடுக அந்த ஸ்ரீ ரெங்கத்தில் மண் மகளுக்கும் மலர் மகளுக்கும் மணவாளனாய் -அளவிடற்கு அரிய ஆனந்தத்தை உடையவனாக மனம் மொழிக்கு எட்டாத ஒரு பரம புருஷன் க்ஷேமம் யுடையவனாக எழுந்து அருளுக-அழகிய மணவாளனை உள்ளிட்ட பல ஆச்சார்யர்கட்க்கு ஆச்சார்யரான மணவாள மா முனிகள் எல்லாக் காலத்திலும் மங்களங்களை வேண்டுகின்றவராய் அப் பரம புருஷனுக்கு பரம பதத்தில் உள்ளது போன்ற ஐஸ்வர்யத்தைத் தந்து அருள்க என்றும் கூறியுள்ள படி மணவாள மா முனிகள் மங்களா சாசனம் செய்து அருளினார் ––பெரியோர்களோடும் பெரிய பெருமாளோடும் பெரிய கோயில் ஆழ்வார் வேணும் என்றாய்த்து பெரிய ஜீயர் மங்களா ஸாஸனம் பண்ணும் படி –-அத்தாலே இறே அபி விருத்தமாய்ச் செல்லுகிறது-அது தான் திருமால் கோயிலான திருவாளன் திருப்பதி -பெரியாழ்வார் -4-8-10-இறே

சடகோபன் தண் தமிழ் நூல் வாழ –
தொண்டர்க்கு அமுதாய்
-திருவாய் -9-4-9-
திருமாலவன் கவியான -திரு விருத்தம் -48-திருவாய் மொழியை-அஞ்சு வியாக்யானத்துடனே வளர்த்துப் போருமவராகையாலே திருவாய் மொழி வாழும்படிக்கும்

முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் -திருவாய் -7-2-11-என்னும்படி
பெரிய பெருமாள் விஷயமான திருவாய் மொழிப் பெருக்கத்தோடே வாழ வேணும் என்று-சடகோபன் இட்டத் தமிழ் பா இசை வாழியே-இயல் சாற்று – -என்றாய்த்து திருவாய் மொழியை வாழ்த்துவது –

கவிப்பா அமுதின் கறியின் சுவையொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் சடகோபன் -சட கோபர் அந்தாதி -7–பண் இசைகளாகிய கறியுடன் -மிகுதியாகப் பரிமாறி -என்றும்

வகுள பூஷண வாக் அம்ருத அஸநம் -என்றும் சொல்லுகையாலே-இருவருக்கும்-எம்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் – ஜீவனமாய் இருக்கும் -தொண்டர்க்கு அமுது அன்றோ–இப்படி-ஸ்வ -பர -ஜீவன மானத்தை வர்த்திப்பிக்க வேணும் இறே இவருக்கு–திருமால் அடியார்களைத் திருவாய் மொழியை முன்னிட்டு இறே பூசிப்பது-இப்படி பூசிக்கப் பட்ட மாதவன் பூதங்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் மண் மேல் பண் தான் பாடி நின்று ஆடப் பரந்து திரிகையாலே -திருவாய் -5-2-2–பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்யம் செய்ததே –பெரியாழ்வார் -4-1-6-என்று-பாத ஸஞ்சார பூதமாய் யாய்த்து அவர்களை யுஜ்ஜீவிப்பது –

மணவாள மா முனியே
லோகத்துக்கு எல்லாம் மா லோகம் போலே இருக்கிற அழகிய மணவாள ஜீயரே-அடியார் குல விளக்காய் அரங்க மங்கள தீபமாய் இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபமாய் அத்தாலே தமிழ் வேதம் துலங்கப் பண்ணினவராகையாலே

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
பல்லாண்டு பல்லாண்டு
-என்றபடி
நூற்றாண்டு என்று மனுஷ்ய ஆயுஸ்ஸை இட்டு உப லஷித்து
ஜீவேம சரதஸ் சதம் -நூற்று ஆண்டுகள் வாழ்வேனாக – என்றும்
பர சதம் சமா -பல நூற்று ஆண்டுகள் -என்றும்
கால தத்வம் உள்ளதனையும் வாழ்ந்து அருள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறது

அகல்பதத் பவது –அஸ்மத் குருர் வர வர ப்ரவரோ முனீ நாம் அந்தஸ் தமஸ் சமய தந்தத்வஸாம் யதீய த்யான பங்கஜ தளாரிண பாத யுக்மம் -என்னக் கடவது இறே

அடியார்கள் வாழ
செய்ய தாமரைத் தாளிணை வாழியே
-என்று தேவரீரை சூழ்ந்து இருந்து ஏத்துமவர்களாய்
பரி ஜநைஸ் ஸஹ வாஸிநம் -அடியார்களுடன் கூடி இருக்க வேணும் -என்று தேவர் விரும்பிப் போரும் வர வர முனி ப்ருத்யர்கள் வாழ்வாராக

அரங்க நகர் வாழ
திருவரங்கம் திருப்பதியை இருப்பாகப் பெற்றோம்
-ஆர்த்தி பிரபந்தம் -55-என்றார் அன்றோ
ரங்கே தாமநி ஸூகா ஸீநம் -பூர்வ தினசரி 1-என்னும்படியாக–தேவர் இனிதாக எழுந்து அருளி இருக்கும் அரங்க நகரானதும் வாழ்வதாக

சடகோபன் தண் தமிழ் நூல் வாழ்க
மாறன் கலை உணவாகப் பெற்றோம் –
ஆர்த்தி பிரபந்தம் -55-என்றபடி-தேவரீருக்குப் போக்யமாய்
வேத நூல் என்னும்படியான திருவாய் மொழி வைதிக பரிக்ரஹத்தோடே வாழ்வதாக

கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மண்ணுலகில் மனிசர் உய்ய
-பெருமாள் திரு மொழி -1-10—பார் உலகைப் பொன் உலகு ஆக்க வல்லோம் என்று பூதலம் எங்கும் பொன்னுலகு ஆக்கின படி வாழ்வதாக

அடியார்கள் நடுவும்
ஆழ்வார்கள் நடுவும்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் தொறும் எழுந்து அருளி இருக்கிற மணவாள மா முனியே
—இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்–எனையோர்-என்னைப் போன்றவர்கள் – உஜ்ஜீவிக்கவுமாம்

ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ்
–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –104-

உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.–வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும். -வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

கீர்த்தியினால் உயர்ந்து உலகம் மூன்றுக்கும் மங்களம் தரும் அணியான ஸ்ரீ ரெங்க நகரம் குறை ஏதும் இன்றி விளங்கிடுக–அந்த திவ்ய நகரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு ரத்ன ஆபரணமாய் மிகப் பெருமை படைத்த ஸ்ரீ ரெங்க நாதப்பெருமாள் வெகுகாலம் குறை ஒன்றும் இல்லாமல் விளங்கிடுக-அத்தகைய பெருமாளுக்கு அநேக மங்களங்களை கோயில் அண்ணனோடே கூடி ஆசா சனம் செய்து வளர்த்துக் கொண்டு மங்களா ஸாஸனம் என்கிற செல்வத்தை மிகப் படைத்த ராமானுஜரோடே அபின்னரான -வேறு படாத -மணவாள மா முனிகள் பூமியில் இறையும் குறையின்றி வாழ்ந்திடுக–என்றாய்த்து தேசமும் தேசிகர்களும் வாழ்த்திப் போருவைத்து —

——————–———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading