ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம்-

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம்-ஸ்ரீ உ வே திருநாங்கூர்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணங் கராசார்ய ஸ்வாமிகள் அநுக்ரஹித் தருளிய விவரணம்‌ -மற்றும்‌ ஸ்ரீ உ வே திருக்கண்ணபுரம்‌ ஸடகோபாசார்ய ஸ்வாமிகள் எழுதிய பதவுரை-

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
–

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

ஸ்ரீ மணவாள மா முனிகள் திருவடிகளில் ஆஸ்ரயித்து-அவரால் ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபி ஷிக்தராய்-அவருக்கு ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த பிரவர்த்தந கைங்கர்யங்களில் உசாத் துணையாய்
அவருடைய கருணா கடாக்ஷ விசேஷ லஷ்ய பூந்தராய்-யதீந்த்ர ப்ரவணரான அவர் திறத்தில் ப்ராவண்ய அதிசயத்தை உடையராய் மா முனிகளுடைய ஸ்வரூப ரூப குண விபாவங்களையும் ஸ்ரீ ஸூக்தாதிகளையும் அனுபவித்து அவ்வநுப ஜெனித ப்ரீதிக்கு போக்கு வீடாக சத முகமாக அவரது வைபவங்களை இந்த ஸ்தோத்ர முகமாக வெளியிட்டு அருளுகிறார் –ஆச்சார்ய வைபவ கீர்த்தனம் ஸச் சிஷ்ய காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேது-மா முனிவர்கள் அடியோங்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக உல்லாசத்துக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஹேது ஆகும்-

நம்முடைய பூர்வாசார்யர்களிலே நம்‌ ஸ்வாமி எம்பெருமானார்‌ திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த ஸாரதி எம்பெருமானுடைய திருவவதார-விசேஷம்‌ என்றும்‌ , ஸ்ரீபெரியவாச்சான்‌ பிள்ளை திருக்கண்ணமங்கை எம்பெருமானான கண்ணனுடைய திருவவதார-விசேஷம்‌ என்றும்‌ , ஸ்ரீவேதாந்தாசார்யர்‌ திருவேங்கடமுடையானுடைய திருவவதார-விசேஷம்‌ என்றும்‌ , ஸ்ரீவாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திருநாராயணபுரம்‌ செல்வப்பிள்ளையின்‌ திருவவதார விசேஷம்‌ என்றும்‌ , ஸ்ரீபிள்ளை லோகாசாரயர்‌ ஸ்ரீகாஞ்சீ தேவாதி ராஜனுடைய திருவவதார- விசேஷம்‌ என்றும்‌ , அவர் தம்‌ திருத் தம்பியரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ திருவரங்க ராஜனான அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவவதார-விசேஷம்‌ என்றும்‌ கொள்வது மரபு. இதைப் போன்று ஸ்ரீகாஞ்சீ பேரருளாளனே ஸ்ரீஹஸ்திகிரி நாதரண்ணாவாக – அதாவது ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணனாகத்‌ திருவவதாரம்‌ செய்தனன்‌ என்பதும்‌ ஸம்ப்ரதாயம்‌. ஸ்ரீமணவாளமாமுநிகள்‌ நம்‌ ஸ்வாமி எம்பெருமானாருடைய புநரவதார விசேஷமாவார்‌ என்‌பதைப்‌ போன்று ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணா நம்‌ கூரத்தாழ்வானுடைய புநரவதார விசேஷம் –

அர்ச்சாவதார எம்பெருமான்களில்‌ ஒருவனான திருவரங்கச் செல்வனும்‌ மற்றொருவனான தேவாதி ராஜனும்‌ ஸ்ரீஅழகிய மணவாள மா முநிகளை ஆசார்யராகப்‌ பற்றினார்கள்‌ என்றும்‌ -இப்படி இரு பெரும்‌ எம்பெருமான்களால்‌ ஆஸ்ரயிக்கப்பட்ட தனிப் பெருமையை மா முநிகள்‌ பெற்று விளங்குகிறார்‌ என்றும்‌ நாம்‌ அறியலாம்‌. இந்த இரண்டு எம்பெருமான்களும்‌ மாமுநி களை ஆஸ்ரயித்தாலும்‌ இவர்களுக்கிடையே நெடு வாசி யுண்டு. திருவரங்கராஜன்‌ தான்‌ பரத்வம்‌ தோற்ற நின்ற நிலையிலேயே – அதாவது தன்னுடைய அர்ச்சாவதார நிலையிலேயே – ஸ்ரீஅழகிய மணவாளமாமுநிகளை ஆசார்யனாகப்‌ பற்றினான்‌. ஸ்ரீகாஞ்சீ பேரருளாளனோ பரம ஸெளலப்ய பரிபூரணனாய்‌ ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில்‌ உயர்ந்ததான முடும்பை வம்ஸத்தில்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணனாக விபவாவதாரம்‌ கொண்டு – மாமுநிகளை ஆஸ்ரயித்துப்‌ பெருமை பெற்றான்‌-இதுமட்டுமன்று-அழகிய மணவாளப் பெருமாளோ ஒரு வருஷ காலம்‌ மட்டுமே மாமுநிகளிடம்‌ அர்த்த-க்ரஹணம்‌ பண்ணியவன்‌. ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவோ மாமுநிகளுடன்‌ தமக்‌குண்டான ஸம்பந்த பரிமாற்றங்களினுடைய ரஸாநுபவத்திற்குப்‌ பாங்காக பல வருஷங்களாகிற ஒரு கால விசேஷம்‌ மாமுநிகளை ஆஸ்ரயித்திருந்தார்‌. மாமுநிகள்‌ விஷயமாக திருவரங்கராஜன்‌ அருளிச்செய்ததாக ஸ்ரீசைலேஸ தயா பாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்த்‌ர ப்ரவணம்‌ வந்தே ரம்யஜாமாதரம்‌ முநிம்‌ ||
என்னும்‌ ஒரு ஸ்லோகம்‌ மட்டுமே உள்ளது. மாமுநிகளை அவர் தம்‌ ஆசார்ய பக்திக் குண்டான பெருமையை இட்டு* ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம்‌ * * யதந்தர ப்ரவணம்‌ * என்றும்‌ அவர்‌ தம்‌ ஆத்ம குண பூர்த்தியை இட்டு *தீ பக்த்யாதி, குணார்ணவம்‌ * என்றும்‌ இந்த ஸ்லோகத்திலே அநுபவிக்கிறான்‌ திருவரங்க ராஜன்‌.

ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவோ மாமுநிகளுக் குண்டான ஆழ்வார்கள்‌ ஆசார்யரகளுடைய ஸம்பந்தம்‌ என்ன , ஆத்ம குண பூர்த்தி என்ன , வைதுஷ்ய பூர்த்தி என்ன , அவர் தம்‌ ஸ்ரீஸூக்திகளுக் குண்டான வைபவம்‌ என்ன , இவை அனைத்துக்கும்‌ ப்ரகாஸகமாய்‌ இருக்கும்‌ அவர் தம்‌ திருமேனிக் குண்டான பெருமை என்ன , எல்லாவற்றுக்கும்‌ மேலாக அவர் தம்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ ஆஸ்ரயித்திருந்த அடியார்களுடைய வைபவம்‌ என்ன என்று இப்படிப்‌ பலவகைப்‌ பட்ட அவர் தம்‌ வைபவங்களைத்‌ தாமும்‌ , வாழையடி வாழையாக மற்றவர்களும்‌ விசேஷமாகவும்‌ விஸ்தாரமாகவும்‌ அநுபவித்து ஆநந்தாநுபவம்‌ பண்ணி காலங் கழிக்கப்‌ பாங்காக
வரவரமுநிஸதகம்‌
வரவரமுநி ஸுப்ரபாதம்‌
மாமுநிகள்‌ வடிவழகு
செய்ய தாமரைத் தாளிணை வாழியே என்னும்‌ வாழித் திருநாமம்‌
மாமுநிகள்‌ அவயவ ஸோபை
மாமுநிகள்‌ விஷயமான மங்கள ஸ்லோகம்‌ போன்ற (ஸப்த-ரஸம்‌ அர்த்த-ரஸம்‌ பாவ-ரஸம்‌ அனைத்தும்‌ பொருந்திய) பல நூல்களை அருளிச் செய்துள்ளார் –

ஆக மா முனிகளை சரம பர்வமாக ஆஸ்ரயித்ததனால் வந்த ஏற்றம் -அதிலும் அவரைப் பல வருஷங்கள்‌ ஆஸ்ரயித்திருந்ததனால்‌ வந்த ஏற்றம்‌, அவர் தம்‌ அநுக்ரஹத்தால்‌ ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநத்தில்‌ அபி ஷிக்தராய்‌ அவருக்கு ஸ்ரீபாஷ்மாதி க்ரந்த ப்ரவர்த்தநத்தில்‌ உறு துணையாய்‌ எழுந்தருளி இருந்த ஏற்றம்‌ , அவர் தம்‌ வைபவாநுபவ பரமாக பல க்ரந்தங்களை அருளிச்‌ செய்ததனால்‌ வந்த ஏற்றம்‌ , அவர் தம்‌ அடியார்களுடன்‌ புரையறக்‌ கலந்து அந்தமில் பேரின்‌பத்துக்கு ஸத்ருஸா நுபவம்‌ பண்ணியதால்‌ வந்த ஏற்றம்‌ – ஸிஷ்யத்வ பூர்த்தி -ராஸிக்ய பூர்த்தி முதலானவற்றால்‌ வந்த ஏற்றம்‌ என்று பல விதத்திலும்‌ சிறப்புற்று விளங்கினார்‌ ஸ்ரீகாஞ்சீ பேரருளாளனுடைய திருவவதார விசேஷமான ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணா. இவர் தம்‌ வழித் தோன்றல்‌களான ஆசார்ய புருஷர்கள்‌ இன்றளவும்‌ ஸ்ரீவைஷ்ணவ சிறப்புற விளங்குகிறார்கள்‌–இந்த க்ரந்தத்தில்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணா ஸ்ரீமணவாள மா முநிகளையோ -அல்லது அவர் தம்‌ ஸ்ரீஸூிக்திகளையோ -அல்லது அவர் தம்‌ அடியார்களையோ ப்ரஹ்மா முதலான தேவர்‌களுடனும்‌ – புண்ய நதிகளுடனும்‌ -திருவவதார எம்பெருமான்களுடனும்‌ ஒப்புமை காட்டியும்‌ மற்றும்‌ ஆழ்வார்களுடனும்‌ ஆசார்யர்களுடனும்‌ அத்யந்த ஸம்பந்தம்‌ காட்டியும்‌ மிகச் சிறப்பாக ஸ்லோகங்களை அருளிச் செய்திருக்கிறார் – இதற்கு பெரும்பாலும்‌ ஸ்லேடையை பயன்படுத்தி இருக்கிறார் –

ஸ்ரீமணவாளமாமுநிகளுடைய திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தவராய்‌ , அவரால்‌ ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநத்தில்‌ அபிஷிக்தராய்‌ , அவருக்கு ஸ்ரீபாஷ்யாதி கிரந்த பிரவர்த்தந கைங்கர்யத்தில்‌ உஸாத் துணை யாக இருப்பவராய்‌ , அவருடைய கருணா-கடாக்ஷ-விஸேஷ-லக்ஷ்ய பூதராய்‌ யதீந்த்ர ப்ரவணரான அவர் தம்‌ திறத்தில்‌ ப்ராவண்யாதிஸயத்தை உடையவராய்‌ இருக்கும்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணா , மா முநிகளுடைய ஸ்வரூப-ரூப-குண-விபவங்களையும்‌ ஸ்ரீஸூக்த்யாதிகளையும்‌ அநுபவித்து அவ் வநுபவ ஜநித ப்ர்திக்குப்‌ போக்கு வீடாக ஸதமுகமாக அவருடைய வைபவங்களை * வரவரமுநி ஸதகம்‌ * என்கிற ஸ்தோத்ர க்ரந்தத்தின்‌ மூலமாக வெளியிடுகிறார்‌. ஆசார்ய வைபவ கீரத்தநம்‌ ஸச் சிஷ்யனுக்குக்‌ கால க்ஷேபத்திற்கும்‌ போகத்துக்கும்‌ ஹேதுவாகக்‌ கரத்தவ்யமாம்‌. மாமுநிகள்‌ அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய முகோல்லாஸத்திற்கும்‌ உஜ்ஜீவநத்துக்கும்‌ ஹேதுவாக இருக்கும்‌ இந்த ஸதகம் –

–

மூலே அவதீர்ண மிஹ மூலம் அநு உதிதார்த்த தத்வ
அவபோத ஸூகி தாம் வஸூ தாம் விதா தும்
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ரு யமிநம் சரணம் ப்ரபத்யே
– 1-நமஸ்கார ரூபமான மங்களா சாசன ஸ்லோகம் இது –

வஸூ தாம்-பூமியை (பூமியில்‌ உள்ளவர்களை)
மூலம் அநு உதிதார்த்த தத்வ அவபோத-மூல மந்த்ரமான திருமந்த்ரத்தில்‌ சொல்லப்பட்ட அர்த்தத்தின்‌
உள்ளது உள்ளபடியான ஜ்ஞாநத்தால்‌
ஸூகி தாம் விதா தும்--ஸுகத்தை உடையவர்களாக செய்வதற்காக
மூலே அவதீர்ண மிஹ-இந்த உலகத்தில்‌ திருமூல நக்ஷத்திரத்தில்‌ திருவவதரித்தவரும்‌
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்-நம்‌ ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ சஞ்சரிக்கும்‌ வண்டு போன்றவருமான
ரம்யோ பயந்த்ரு யமி நம் சரணம் ப்ரபத்யே–ஸ்ரீ அழகிய மணவாள மா முநிகளை ஸரணமாகப்
பற்றுகிறேன்

பூமி வாசகமான * வஸுதா * ஸப்தம்‌ பூமியில்‌ உள்ளவர்களைக்‌ குறிக்கிறது- இம் மண்ணுலகத்தில்‌ உள்ளவர்களை மூல மந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தின்‌ அர்த்தங்களை உள்ளபடி யறிந்ததனால்‌ உண்டாகும்‌ விலக்ஷண ஸுகத்தை உடையவர்களாகச்‌ செய்யும்‌ பொருட்டு (ஸாதாரண வருஷத்தில்‌ ஐப்பசியில்‌) திரு மூலத்தில்‌ இவ் வுலகத்தில்‌ திரு வவதரித்தவராய்‌ , ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ வண்டாக ஈடுபட்டிருக்கும்‌ அழகிய மணவாள மா முநிகள்‌ என்று ப்ரஸித்தரான பெரிய ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்‌ – என்றபடி -இத்தால்‌ க்ரந்த ஆரம்பத்தில்‌ கரத்தவ்யமான நமஸ்கார ரூபமான மங்களத்தை ஆசரிக்கிறார் -‌

ஆலம்பனம் -ச துலம் –துலா மாச மூலம் –சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் –-அனைத்துக்கும் மூலம் –சடாரி முக -தொடக்கமான ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் அறியும் மூலம் –பிறவி பயன் பெற மூலம்–ஸ்ரீ எறும்பி அப்பாவும் இதே போல் அருளிச் செய்கிறார் அன்றோ-

—

யத் அவதரண மூலம் முக்தி மூலம் ப்ரஜா நாம்
ஸடரிபு முனி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷ மூலோந் மூலநே மூலமிந்தே ச
பவது வர யோகீ நஸ் ஸமஸ்த அர்த்த மூலம்
–2-

யத் அவதரண மூலம் -எந்த ஸ்ரீ மணவாள மா முனிகள் திரு அவதரித்த திரு மூல நக்ஷத்ரம்-செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
முக்தி மூலம் ப்ரஜா நாம் -மக்களுடைய மோக்ஷத்துக்குக் காரணமாக இருக்கிறதோ-மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்ந்திடும் நாள்
ஸடரிபு முனி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் -ஸ்ரீ நம்மாழ்வாரால் பார்க்கப்பட்ட -வெளியிடப்பட்ட –
வேத ஸாம்ராஜ்யத்துக்குக் காரணமாக இருக்கிறதோ-கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்-சகல வேதாந்த ரஹஸ்யங்கள் அர்த்தங்கள் சித்திக்க மூல ஹேதுவே மா முனிகள் என்றவாறு
கலி கலுஷ மூலோந் மூலநே மூலமிந்தே –கலியினுடைய தோஷங்களை வேரோடு அழிக்கும்
நெருப்பின் காரணமான அந்த
ச பவது வர யோகீ நஸ் ஸமஸ்த அர்த்த மூலம்-வர வர முனிகள் நம்முடைய சகலபுருஷார்த்தங்களுக்கும் காரணமாக இருக்க வேணும் –

எந்த – மாமுநிகளுடைய திருவவதார திருநக்ஷத்ரமான – திருமூலமானது உலகத்தாரான சேதநர்களுடைய மோக்ஷத்திற்கு மூல காரணமாக அமைந்திருக்கிறதோ , எந்த திருமூல நக்ஷ்த்ரமானது ஸ்ரீஸடகோபரான நம்மாழ்வாரால்‌ ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட த்ராவிடவேதத்தை ப்ரமாண ஸாம்ராஜ்யத்தில்‌ அபிஷிக்தமாக்குகைக்கு ஹேதுவாக விளங்குகிறதோ , எவர்‌ கலி தோஷத்தை வேரோடு களைந்தெடுத்து எரிப்பதற்குக்‌ காரணமாய்‌ விளங்குகிறாரோ , அப்படிப்பட்ட ஸ்ரீமணவாளமாமுநிகள்‌ தாஸ பூதர்களான நம்முடைய ஸகல புருஷார்த்த ஸித்திகளுக்கும்‌ காரணமாக வேணும்-

நம்முடைய ஸகல வேதவேதாந்த ரஹஸ்யார்த்தங்களின்‌ ஸித்திக்கும்‌ மாமுநிகள்‌ மூல ஹேதுவாகக்‌ கடவர்‌ -. மாமுநிகளுடைய கடாக்ஷ விஸேஷத்‌தாலே நமக்கு ஸமஸ்த ஸாஸ்த்ரார்த்தங்களும்‌ தெளிவாக விளங்கட்டும்‌-என்றபடி-

—

ஜனி விபத பவாதவ் யஸ்ய பாதவ் விதந்த
ஸததமபி மஹாந்த ஸ்வாந்த ஏவோத் வஹந்தி
ச ஜயதி பஜ தந்தர்த் வாந்த கல்பாந்த பாநு
நிரவதி குண காந்தோ ஹந்த காந்தோ பயந்தா
–3-

ஜனி விபத பவாதவ் யஸ்ய பாதவ் விதந்த -எவருடைய திருவடிகளை பிறப்பு இறப்பு சூழலாகிற
சம்சாரத்துக்கு எதிர் தட்டானவையாக
ஸததமபி மஹாந்த ஸ்வாந்த ஏவோத் வஹந்தி -அறிகின்ற பெரியோர்கள் அவற்றை எப்போதும்
தங்கள் திரு உள்ளத்தில் தரித்து இருக்கிறார்களோ
ச ஜயதி பஜ தந்தர்த் வாந்த கல்பாந்த பாநு -ஆஸ்ரிதர்களுடைய அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் போக்கும் பிரளய காலத்து ஸூர்யன் போன்றவரும்
நிரவதி குண காந்தோ ஹந்த காந்தோ பயந்தா –எல்லையற்ற கல்யாண குணங்களால் விரும்பப்படுவராக இருக்கும் அழகிய மா முனிகள் சிறந்து விளங்குகிறார் -அத்புதம் –

பெரியோர்கள்‌ எந்த மாமுநிகளுடைய திருவடிகளை ஸம்ஸாரத்தின்‌ பிறப்‌பு முதலான ஆபத்துக்களுக்கு நிராஸகங்களாக அறிந்து கொண்டு தங்களுடைய திரு உள்ளத்தில் எப்போதும் அத் திருவடிகளையே ஆதரத்தோடு பேணித்‌ தரிக்கிறார்களோ – மாமுநிகளுடைய திருவடிகளையே தியானிக்கிறார்களோ என்றபடி – தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆந்தரமான அஜ்ஞாந-அந்த காரத்தை நிரஸிப்பதில்‌ (உள்‌-இருளான அஜ்ஞாநத்தைப்‌ போக்குவதில்‌) ப்ரளயகால ஸூரியனாக விலங்குகிறவரும்‌– இப்படிப்பட்ட மேன்மை இருந்தும்‌ எல்லையிலாத தம்முடைய ஸம தமாதி கல்யாண குணங்களாலே அபி ராமராய்‌ – அதி மநோஹரராய்‌ – இருக்கும்‌ அழகிய மணவாள மா முனிகள் ஸர்வோத்க்ருஷ்டராக விளங்குகிறார்‌ . இதில்‌ பூர்வார்தத்தில்‌ மா முநிகளுடைய திருவடிகளின்‌ பெருமை பேசப் பட்டது. உத்தரார் தத்திலே மா முநிகளுடைய பெருமை பேசப் பட்டது –

—

இந்தே வாக்ய விபூஷணஸ்ய மஹதோ யத் பாஷணம் பூஷணம்
யத் பதாம்புருஹ த்வயம் ஸூ மனஸாம் மூர்த்நஸ் ஸதா பூஷணம்
யத் பக்த அங்க்ரி ரஜஸ் கண அவிதநுதே துக்கோ ததேஸ் சோஷணம்
வந்தே காந்த வரம் முனிம் தம நகம் நித்யம் கலேர் பீஷணம்
–4-

இந்தே வாக்ய விபூஷணஸ்ய மஹதோ யத் பாஷணம் பூஷணம் -ஒளி மிக்கதும் சிறந்ததுமான
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு எவருடைய வியாக்யானம் அணி கலனாக அமைந்ததோ-ஸ்ரீ வசன பூஷணத்துக்கே இவரது வியாக்யானம் மஹித பூஷணம் என்பது சாலப் பொருந்தும் –
யத் பதாம்புருஹ த்வயம் ஸூ மனஸாம் மூர்த்நஸ் ஸதா பூஷணம் -எவருடைய திருவடித் தாமரைகள்
பெரியோர்களுடைய சிற்பங்களுக்கு எப்போதும் ஆபரணமாகத் திகழ்கின்றதோ
யத் பக்த அங்க்ரி ரஜஸ் கண அவிதநுதே துக்கோ ததேஸ் சோஷணம் -எவருடைய பக்தர்களின்
திருவடித் தூளியின் துகள்கள் லேசமே சம்சார சாகரத்தை வற்றச் செய்கின்றதோ
வந்தே காந்த வரம் முனிம் தம நகம் நித்யம் கலேர் பீஷணம்–பாபம் அற்றதும் —எப்பொழுதும்
கலி புருஷனுக்கு பயங்கரமாக இருப்பவருமான அந்த மணவாள மா முனிகளை வணங்குகிறேன் –

ஸ்ரீபிள்ளை லோகாசாரயர்‌ அருளிச் செய்த ஸ்ரீ வசந பூஷணமாகிற திவ்ய ஸாஸ்த்ரத்துக்கு எந்த மாமுநிகள்‌ அருளிச் செய்த வ்யாக்யாநமானது பூஷணமாக விளங்குகிறதோ – பாட பேதத்தில்‌ ஸ்லாக்யமான பூஷணமாய்‌ அமைந்திருக்கிறதோ என்று பொருள்‌- எந்த மாமுநிகளுடைய திருவடித் தாமரை யுகளம்‌ (இரண்டும்‌) எப்போதும்‌ வித்வ ஜ்ஜந-மஸ்தக-பூஷணமாகத்‌ திகழ்கிறதோ , எந்த மாமுநிகளுடைய பக்தரான அடியார்களுடைய திருவடிப் பொடியின்‌ ஒரு துளியே து: க்க ஸாகரத்தை ஸோஷிக்க (வற்ற)ச்‌ செய்கிறதோ -கலி புருஷனுக்குப்‌ பயங்கரராய்‌ திருக் கல்யாண குண யுக்தராய்‌ விளங்கும்‌ அந்த மா முநிகளை நித்யமும்‌ ஸேவிக்‌கிறேன்‌ அடியேன்‌ – என்றபடி-ஸ்ரீ வசந பூஷணத்தின்‌ பெருமையை மா முநிகள்‌ உபதேச ரத்தின மாலையில்
அன்ன புகழ்‌ முடும்பை யண்ண லுலகாசிரியன்‌
இன்னருளால் செய்த கலை யாவையிலும்‌ -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக் கில்லை
புகழல விவ் வார்த்தை மெயிப்போது
-(53) என்று தொடங்கி ஏழு பாசுரங்களில்‌ பரக்க அருளிச் செய்திருக்கிறார்‌-
ஸ்ரீ வசந பூஷணத்‌தின்‌ அர்த்தங்கள்‌ தமக்கு இனித்த ப்ரகாரத்தை –
சீர் வசன பூடணத்தின்‌ செம் பொருளை சிந்தை தன்னால்‌
தேரிலுமாம்‌ வாய் கொண்டு செப்பிலுமாம்‌ ஆரியர்காள்‌ !
என் தனக்கு நாளு மினிதாக நின்றதையோ
உந்தமக்‌ கெவ்வின்பமுளதாம்‌ !
–(59) என்கிற பாசுரத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌ –
ஸ்ரீ வசந பூஷணத்துக்கு விஸதவாக்‌ ஸிகாமணியான மாமுநிகள்‌ அருளிச் செய்த வ்யாக்யாநத்தை -மஹிதம்‌ பூஷணம்‌ -என்பது நன்கு பொருந்தும்‌. மேலும்‌ –
ஆர் வசன பூடணத்தின்‌ ஆழ் பொருளெல்லா மறிவார்‌
ஆரது சொன்னேரிலனுட்டிப்பார்‌
ஒரொருவருண்டாகில்‌ அத்தனை காணுள்ளமே எல்லார்க்கும்‌
அண்டாத தன்றோ வது-
-(55) என்று அருளிச் செய்திருப்பது மாமுநிகள்‌ திறத்தே நன்கு பொருந்தும்‌ –
இவரே ஸ்ரீ வசந பூஷணத்தின்‌ அர்த்தத்தை உள்ள படி அறிந்து அதன் படி நிஷ்டையை உடையவர்‌ என்று கண்டு கொள்வது –

–

யத் பதாம் புஜ ஸம்ஸ்ர யேண விமலா யல் லப்த போத உஜ்ஜ்வலா
யத் சேவ ஏக ரஸாஸ் ஸ்வ சிஷ்ய நிவஹ வ்யாப்த அகிலா சாந்தரா
ப்ரக்யாதா ஹி வர ப்ரத ப்ரப்ருத யஸ்தே நித்ய ஸித்தோபமா
தஸ்மாத் காந்த வராந் முநேரநு பமாத் தைவம் பரம் நாத்ரியே
–5-

யத் பதாம் புஜ ஸம்ஸ்ர யேண விமலா -எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளை ஆஸ்ரயித்து தூய்மை பெற்றவர்களாய் –
யல் லப்த போத உஜ்ஜ்வலா -எந்த மா முனிகளால் பெற்ற ஞானத்தால் பிரகாசிக்கிறவர்களாய்
யத் சேவ ஏக ரஸாஸ் –எந்த மா முனிகளுடைய கைங்கர்யத்தில் மட்டுமே ருசியை உடையவர்களாய் –
ஸ்வ சிஷ்ய நிவஹ வ்யாப்த அகிலா சாந்தரா ப்ரக்யாதா ஹி வர ப்ரத ப்ரப்ருத யஸ்தே நித்ய ஸித்தோபமா –எல்லா திக்குகளிலும் பரவி இருக்கும் தங்கள் சிஷ்ய கணங்களை உடையவர்களாக அந்த வரத நாராயண குரு என்னும் கோயில் கந்தாடை அண்ணன் முதலானவர்கள் நித்ய ஸூரிகளையும் சித்தர்களையும் ஒத்த ப்ரஸித்தர்களாக விளங்குகிறார்கள் –
தஸ்மாத் காந்த வராந் முநேரநு பமாத் தைவம் பரம் நாத்ரியே –ஒப்பற்ற இந்த மணவாள மா முனிகளைக் காட்டிலும் மேலான தெய்வத்தை மதியேன் –அவரே சரம பர்வமாய் -ப்ராப்யமாகவும் பிராபகமாகவும் இருப்பர் என்கிறார் –

எந்த மா முநிகளுடைய திருவடித் தாமரைகளில்‌ ஆஸ்ரயித்தபடியாலே நிர்மலர்களாய்‌ , எந்த மாமுநிகளுடைய திருவருளினால்‌ கிடைத்த ரஹஸ்ய த்ரயாதிகளின்‌ அர்த்த ஜ்ஞாநத்தால்‌ விளங்குகிறவர்களாய்‌ , எந்த மா முநிகளுடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யம்‌ செய்‌வதையே ஆநந்தமாகக்‌ கொண்டிருக்கிறவர்களாய்‌ , எல்லா திக்குகளிலும்‌ வ்யாபித்த (பரந்த) ஸிஷ்யர்களை உடையவர்களாயும்‌ இருக்கும்‌ ஸ்ரீவரத நாராயண குரு (கோயில்‌ கந்தாடை யண்‌ணன்‌) முதலான மஹான்கள்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ , ஸ்வேத த்வீபவாஸிகளுக்கும்‌ ஸமாநர்களாய்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இப்படித்‌ தமக்கு நிகரில்லாத அந்த மாமுநிகளைத்‌ தவிர மற்றொரு தெய்வத்தை அடியேன்‌ ஆதரிக்கிறேனல்லேன்‌ ! என்கிறார்‌. அதாவது மாமுநிகளே தமக்கு சரம பர்வமாய்‌ (ப்ராப்யமாகவும்‌ ப்ராபகமாகவும்‌) இருப்பர்‌ என்கிறார் –

—

யத் ஸூக்தி ஏக ரஸா யத் அங்க்ரி யுகலீ ஸேவ ஏக அவகாஹிநோ
யத் வாத்சல்ய தயாதி ஸத் குண கணா கூபார மக்நாசயா
மந் யந்தே ந பரம் வி முக்தி கரணம் ஸந்தோ யதா லோக நாத்
தந்யாந் நஸ்ஸ ஸூப அந்ய வேல மஹிமா காந்தோ பயந்தா முனி
–6-

யத் ஸூக்தி ஏக ரஸா யத் -எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகளிலேயே ருசி உடையவர்களாயும்
அங்க்ரி யுகலீ ஸேவ ஏக அவகாஹிநோ -எந்த மா முனிகளின் திருவடிகளிலே கைங்கர்யங்களிலேயே
ஆழ்ந்து இருப்பவர்களாயும்
யத் வாத்சல்ய தயாதி ஸத் குண கணா கூபார மக்நாசயா -எந்த மா முனிகளுடைய வாத்சல்யம் தயை முதலிய நற் குணங்கள் ஆகிற கடலிலே மூழ்கி இருக்கும் திரு உள்ளம் கொண்டவர்களாகவும் உள்ள ஸத் புருஷர்கள்
மந் யந்தே ந பரம் வி முக்தி கரணம் ஸந்தோ யதா லோக நாத் -எந்த மா முனிகளுடைய கடாக்ஷத்தைக் காட்டிலும் மற்ற வேறு ஒன்றை மோக்ஷம் தருவதாக எண்ணுவது இல்லையோ
தந்யாந் நஸ்ஸ ஸூப அந்ய வேல மஹிமா காந்தோ பயந்தா முனி –எல்லை அற்ற மேன்மையை உடைய
அந்த அழகிய மணவாள மா முனிகள் நமக்கு எல்லா நன்மைகளையும் கொடுத்து அருள வேணும் –

ஸத் புருஷர்கள்‌ அதி மதுரமாய்‌ இருக்கையினாலே எந்த மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தியைக்‌ கேட்பதையும்‌ அநுஸந்திப்பதையுமே எப்போதும்‌ ரஸிக்கிறரகளோ , மேலும்‌ எந்த மாமுநி களுடைய திருவடிகளை ஸேவிப்பதற்கே (திருவடிக் கீழ்‌ குற்றேவல்‌ புரிவதற்கே) குதூஹலம்‌ உடையவர்களாய்‌ இருக்கிறார்களோ , எந்த மாமுநிகளுடைய வாத்ஸல்யம்‌ , க்ருபை முதலான ஸத் குண கண ஸாகரத்தில்‌ மூழ்கின நெஞ்சை யுடையவராய்‌ இருக்கிறார்களோ எந்த மாமுநிகளுடைய க்ருபா கடாக்ஷமொழிய மற்றொன்றை மோக்ஷத்துக்கு உயர்ந்த காரணமாகக்‌ கருத வில்லையோ, எல்லை யிலாத மஹிமையை உடைய அந்த மாமுநிகள்‌ நமக்கு எல்லா நன்மைகளையும்‌ மேன் மேலும்‌ கொடுத்தருள வேணும்‌! என்று ப்ரார்த்திக்கிறார் –

—

யத் வாணீ சட வைரி ஸூக்தி தருணீ மாங்கல்ய தீபா வளி
யத் வீஷா ஸ்வ ஸரவ்ய ஸர்வ ஐநதா ஸர்வார்த்த சிந்தா மணி
யந் மூர்த்திர் பஜதார்தி பஞ்ஜந சணம் ஸூ க்திம் வி வக்த்யஞ்ஐஸா
பூயாந் நஸ் சததம் ச மே ஹ்ருதி குரு காந்தோ பயாந்தா முனி
–7-

யத் வாணீ சட வைரி ஸூக்தி தருணீ மாங்கல்ய தீபா வளி –எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகள்
நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற யுவதிக்கு மங்களத்தைத் தரும் தீப வரிசையாக உள்ளதோ
யத் வீஷா ஸ்வ ஸரவ்ய ஸர்வ ஐநதா ஸர்வார்த்த சிந்தா மணி -எவருடைய கடாக்ஷமானது
தனக்கு இலக்கண ஸமஸ்த ஜனங்களுக்கும் சகலார்த்த பிரதனமான சிந்தா மணியோ
யந் மூர்த்திர் பஜதார்தி பஞ்ஜந சணம் ஸூ க்திம் வி வக்த்யஞ்ஐஸா -எவருடைய திரு மேனியானது
ஆஸ்ரயித்தவர்களுடைய துக்கங்களை அப்போதைக்கு அப்போது அழிக்க வல்லதான ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்கிறதோ–ம்ருத மதுர ஸ்ரீ ஸூ க்திகளால் யதார்த்தமாக திருவாய் மலர்ந்து அருளி போக்கி அருளுகிறார் என்றபடி –
பூயாந் நஸ் சததம் ச மே ஹ்ருதி குரு காந்தோ பயாந்தா முனி –அடியேனுடைய ஆச்சார்யரான மணவாள மா முனிகள்-அடியேனுடையஹ்ருதயத்தில் இடைவிடாமல் எழுந்து அருளி அருள் பாலிக்க வேண்டும் –

எந்த மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தியானது ஸ்ரீஸடகோபருடைய ஸ்ரீஸூக்தியாகிற தருணி (பெண்‌மணி)யின்‌ ஸெளபாக்யத்திற்கு ப்ரகாஸகமாய்‌ மங்களகரமான தீப பங்க்தி(வரிசை)யாக விளங்குகிறதோ , எந்த மாமுநிகளுடைய கடாக்ஷமானது தனக்கு இலக்கான ஸர்வ ஐநங்களுக்கும்‌ ஸகலார்த்த ப்ரதமான சிந்தாமணியாகத்‌ திகழ்கிறதோ , எந்த மாமுநிகளுடைய திருமேனி யானது தன்னை ஆஸ்ரயித்திருக்கிற ஸர்வ ஜநங்களுடைய ஸர்வது : க்கங்களையும்‌ போக்கடிக்க ஸமர்த்தமான (வல்லதான ) ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாகவே திருவாய் மலர்ந்தருளுகின்றதோ – மாமுநிகள்‌ தம்முடைய ம்ருது மதுர ஸ்ரீஸூக்திகளாலே தம்மை ஆஸ்ரயித்தவர்களுடைய து:க்கங்களை அப்‌ போதைக்கப் போது போக்கி யருளுகிறார்‌ என்றபடி-இப்படிப்பட்ட ப்ரபாவமுடைய ஆசார்யரான மா முநிகள்‌ எப்போதும்‌ அடியேன்‌ மனத்திலே க்ருபாவானாக எழுந்தருளி இருக்க வேணும்‌ என்கிறார்-

—

அ வாக் பூஷா ஜூஷ்டைர் அ புவந குரு ப்ரேம பரிதை
அ மூலர்ஷ உத்பூதைர் அ வரத குரு உபாசிதபதை
க்ருதம் தைஸ் தைஸ் ஸர்வைர் குருபிர் அ மஹா யோகி பிரீதி
வ்யவஸ் யந்தஸ் ஸந்தோ ஹ்ருதி மமல சந்து ப்ரதி கலம்
-8-

அ வாக் பூஷா ஜூஷ்டைர் -ஸ்ரீ வசன பூஷணம் அல்லாதவற்றில் திருப்தி அடையாதவர்களாயும்
அ புவந குரு ப்ரேம பரிதை -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அல்லாத ஆச்சார்யர்கள் இடம் ப்ரீதி நிறைந்தவர்களாயும்
அ மூலர்ஷ உத்பூதைர் -திரு மூலம் அல்லாத நக்ஷத்திரத்தில் தோன்றினவர்களாயும்
அ வரத குரு உபாசிதபதை -ஸ்ரீ வரத குரு அல்லாத வர்களால் உபாசிக்கப்பட்ட திருவடிகளை உடையவர்களாயும்
க்ருதம் தைஸ் தைஸ் ஸர்வைர் குருபிர் அ மஹா யோகி பிரீதி -ஸ்ரீ வர வர முனியைத் தவிர மற்ற –
மஹா யோகிகள் அல்லாத -ஆச்சார்யர்களாகவும் உள்ள அந்த அந்த ஆச்சார்யர்களால் செய்யப்பட்டவை
போதும் என்று மணவாள மா முனிகளையே –-மஹா யோகிகள் அல்லாத -பெரிய ஜீயர் அல்லாத அவர யோகிகள் –என்றவாறு –
வ்யவஸ் யந்தஸ் ஸந்தோ ஹ்ருதி மமல சந்து ப்ரதி கலம் -அத்யவசித்து இருக்கும் ஸத் புருஷர்கள் அடியேனுடைய உள்ளத்தில் ஒவ் ஒரு வினாடியில் சிறு பகுதியிலும் -இடை விடாது – ஒளி வீசட்டும் –
கீழே மா முனிகள் திரு உள்ளத்தில் ஒளி வீச பிரார்த்தனை – இதில் மா முனிகளின் அடியார்கள் திரு உள்ளத்தில் ஒளி வீச பிரார்த்தனை –

முன்‌ ஸ்லோகத்தில்‌ மாமுநிகள்‌ தம்‌ திருவுள்ளத்தில்‌ எப்போதும்‌ விளங்க வேணுமென்றார்‌ . இதில்‌ வரவரமுநி-ப்ருத்யர்கள்‌ (அடியார்கள்‌) தம்‌ திருவுள்ளத்தில்‌ ப்ரதி க்ஷணமும்‌ விளங்கக்‌ கடவர்கள்‌ என்கிறார்‌ -ஸ்ரீவசநபூஷணத்தை ப்ரிதியோடு ஸேவிக்காதவர்களாகவும்‌ , ஸ்ரீபிள்ளை லோகாசார்யர்‌ திறத்தில்‌ நிறைந்த ப்ரேமமற்றவர்களாகவும்‌ , திருமூலத்தில்‌ அவதரிக்காதவர்‌ களாகவும்‌ , வரத நாராயண குருவால்‌ ஸேவிக்கப்பட்ட திருவடிகளை உடையவரல்லாதவர்களாகவும்‌, மஹா யோகிகளல்லாதவர்களாகவும்‌ இருக்கும்‌ மற்ற ஆசார்யர்களால்‌ ஒன்றும் குறை விலம்‌ ; அவர்கள்‌ இருக்கட்டும்‌ ; மா முநிகளே நமக்குத்‌ தஞ்சம்‌ என்று அத்யவஸித்திருக்கும்‌ மாமுநிகளுடைய அடியவர்களான ஸத் புருஷர்கள்‌ தம்‌ திருவுள்ளத்தில்‌ எப்போதும்‌ விளங்கக்‌ கடவர்கள்‌ என்று வரவரமுநி ப்ருத்யர்களிடத்தில்‌ தமக்கிருக்கும்‌ ப்ராவண்யத்தை வெளி யிடுகிறார்‌-வர யோகி – தலைசிறந்த யோகியான மாமுநிகள்‌ -மஹா யோகீ – பெரியஜீயர்‌ ; பெரிய ஜீயரல்லாதவர்கள்‌ அவர யோகிகள்–

–

ந கல்வ வர யோகி நாம் பஜத பல ஸ்யோத் பவ
ததன்ய வி முகாஸ் ஸதா வர முனிம் பஜத்வம் ஐநா
தத் அங்க்ரி பஜநம் ஸக்ருத் க்ருதம் அசேஷதோ துஷ் க்ருதம்
நிவாரயதி பூய ஸீம் ஸ்ரீயம் அநுத்தமாம் புஷ்யதி
–9-

ந கல்வ வர யோகி நாம் பஜத பல ஸ்யோத் பவ –தாழ்ந்த ஆச்சார்யர்களை ஆஸ்ரயிப்பதால்
பிரயோஜனம் ஏற்படாது –
ததன்ய வி முகாஸ் ஸதா வர முனிம் பஜத்வம் ஐநா –ஜனங்களே -மற்ற ஆச்சார்யர்களை விட்டு
மணவாள மா முனிகளையே ஆஸ்ரயியுங்கோள் –
தத் அங்க்ரி பஜநம் ஸக்ருத் க்ருதம் அசேஷதோ துஷ் க்ருதம்–அவரது திருவடிகளை ஒரு முறை
ஆஸ்ரயித்தாலும்-அது பின்று விடாமல் அனைத்து கெட்ட செயல்களையும் போக்கி அருளுகிறது –
நிவாரயதி பூய ஸீம் ஸ்ரீயம் அநுத்தமாம் புஷ்யதி –தனக்கு மேம்பட்டது இல்லாததும் நிறைந்ததுமான ஸ்ரீயை வளர்க்கிறது –
ஸக்ருத்தே அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அளிக்கும் என்றாலும்-ஸ்வயம் போக்யமாக எப்பொழுதும் சேவிக்க வேணும் -என்று உபதேசித்து அருளுகிறார் –

வாரீர்‌ ஜநங்களே ! மற்ற யோகிகளை ஸேவிப்பதால்‌ பயன்‌ ஏற்படாது -ஆகையால்‌ அவர்களை விட்டு வர(தலை சிறந்த) யோகியான மணவாளமாமுநிகளையே எப்போதும்‌ ஸேவியுங்கோள்‌ ! அவர(தாழ்ந்த)யோகிகளை அடிக்கடி ஸேவித்தாலும்‌ வேண்டியது கிடைக்காது . வர யோகியான பெரியஜீயருடைய திருவடிகளை ஒருமுறை ஸேவித்தாலும்‌ அதுவே ஸமஸ்த பாபங்களையும்‌ போக்கடித்து மிகவும்‌ உயர்ந்த ஸம்பத்தை மேன்மேலும்‌ பெருகச்‌ செய்கிறது என்று உலகத்தாரைக்‌ குறித்து உபதேஸித்தாராயிற்று -இந்த ஸம்பத்தே உத்தமமான ஸ்ரீயாவது . ஸக்ருத்‌ ஸேவநமே (ஒருமுறை ஸேவிப்பதே) அநிஷ்ட நிவ்ருத்திக்கும்‌ இஷ்ட ப்ராப்திக்கும்‌ போதுமானது . ஆனாலும்‌ ஸ்வயம் போக்யமாகவே வர யோகியை எப்போதும்‌ ஸேவிக்க வேணும்‌ என்று உபதேஸிக்கிறார் –

—

ஸூர ஆஹாரா சாரீ கரண சணயத் ஸூ க்தி லஹரீ
கரீ யஸ்தாம் ஸ்தோ தும் ப்ரபவதி ந வாஸஸ்பதி ரபி
ஸ நஸ்தந் யாதந் யாத்ருஸ மஹிம ஸா லீ வர வரோ
முனீந்த்ரோ நிஸ்தந்த்ர குசல மநு வேலம் குரு வர
-10-

ஸூர ஆஹாரா சாரீ கரண சணயத் ஸூ க்தி லஹரீ –மாதுர்யாதி குண யோகத்தால் -தேவர்களுடைய உணவான அம்ருதத்தையும் -சாரம் அற்றதாகச் செய்யும் பெருமை யுடைய ஸ்ரீ ஸூ க்தி ப்ரவாஹம் புகழை உடையது –
கரீ யஸ்தாம் ஸ்தோ தும் ப்ரபவதி ந வாஸஸ்பதி ரபி -அத்தை ஸ்தோத்ரம் செய்வதற்கு தேவ குருவான ப்ருஹஸ்பதியும் சக்தி அற்றவர்
ஸ நஸ்தந் யாதந் யாத்ருஸ மஹிம ஸாலீ வர வரோ -வேறே எங்கும் காணாத மேன்மையை யுடைய குரு ஸ்ரேஷ்டரான அந்த மணவாள மா முனிகள்
முனீந்த்ரோ நிஸ்தந்த்ர குசல மநு வேலம் குரு வர – சோம்பல் இன்றி ஒவ் ஒரு சமயத்திலும் நம்முடைய க்ஷேமத்தை உண்டு பண்ண வேணும் –தந்த்ரை-ஆலஸ்யம் -சோம்பேறித் தனம் -சோம்பல் இல்லாமல் கர்தவ்யமான தர்மங்களைப் பண்ணுபவர் –-ஞானம் இருந்தாலும் அனுஷ்டானம் இல்லாமல் இருந்தால் பயன் இல்லையே-இப்படிப்பட்ட இவரது திருவடி சம்பந்தத்தால் நமக்கு பரமபதம் நிச்சயம்
மன்னுயிர் காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்
-ஸ்ரீ எறும்பி அப்பா-

மாதுர்யாதி குண யோகத்தாலே தேவர்களுடைய உணவான அம்ருதத்தையும்‌ அஸாரமாக்க வல்ல எந்த மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தி-ப்ரவாஹத்தினுடைய மிக்க பெருமையை தேவ குருவான ப்ருஹஸ்பதியும்‌ துதிக்க ஸமர்த்தரல்லரே ! லோக விலக்ஷண மஹிமையோடு கூடினவராய்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டருமான அந்த மாமுநிகள்‌ ஆலஸ்ய மற்றவராய்க்‌ கொண்டு நமக்கு ப்ரதி க்ஷணமும்‌ மேன் மேலும்‌ குஸலத்தை – க்ஷேமத்தை – உண்டு பண்ணட்டும்‌! என்று ஆஸ ஸிக்கிறார்‌ -தந்த்ரை என்பது ஆலஸ்யம்‌ – சோம்பேறித்தனம்‌ – சோம்பாமல்‌ கர்த்தவ்யமான தரமங்களைப்‌ பண்ணுமவர்‌ என்றபடி. ஜ்ஞாநம்‌ இருந்தும்‌ அநுஷ்டாநம்‌ இல்லை என்றால்‌ பயனில்லை-

ஞானமனுட்டானமிவை நன்றாகவே உடைய
னான குருவை யடைந்தக்கால்‌ மாநிலத்தீர்‌!
தேனாரகமலத்‌ திருமாமகள்‌ கொழுநன்‌
தானே வைகுந்தம் தரும்
–(61) என்று மாமுநிகளே உபதேச ரத்தின மாலையில்‌ அருளிச் செய்தாரிறே ! அப்படிப்பட்ட ஜ்ஞாநஅநுஷ்டான ஸம்பந்நரான குரு நமக்கு மாமுநிகளே ! அவர்‌ திருவடி ஸம்பந்தம்‌ பெற்றால்‌ பரம பதம்‌ நமக்கு நிஸ்சயம்‌ என்றும்‌ பொருள்‌ தேறுகிறது –

—

கலா நிதி ஸிரோ மணிர் ஜித மநோ பவோ யத் வசஸ்
ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர
–11-

கலா நிதி -கலைகளை நிதியாக உடைய சந்திரனை
ஸிரோ மணிர் -தலைக்கு அணியாக உடையவரும்
ஜித மநோ பவோ -மன்மதனை ஜெயித்தவரும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -அமுதம் உண்ணும் தேவர்கள் நதியாகிய
கங்கையை எப்பொழுதும் தரித்து இருக்குமவரான
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக -சிவபெருமானாக இருந்தாலும் –
மூன்று கண்கள் இருப்பதால் -எல்லாரையும் சமமாகப் பார்ப்பதில் இருந்து விலகி உள்ளார் –

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சிஷ்யனோ எனில்
கலா நிதி ஸிரோ மணிர் -கலைகளை நிதியாக உடைய வித்வான்களுள் தலை சிறந்த வனாகவும்
ஜித மநோ பவோ -காமத்தை வென்றவனாகவும்
யத் வசஸ் ஸூதாஸந தரங்கி ணீம் தத த நாரதம் மூர்தநி -மா முனிகளுடைய அமுதம் போன்ற ப்ரவாஹதமான ஸ்ரீ ஸூக்திகளை -தலையில் -புத்தியில் -எப்பொழுதும் தரித்து இருக்கிறானோ
சிவோ அபி யதோ பாஸ்ரிதோ விஷம த்ருஷ்ட்டி தா தூரக –இப்படி அவன் சிவனாக இருந்தும்-
பவித்ரனாக மங்கள ஸ்வ பாவனாக இருந்தாலும் – பக்ஷ பாதம் உள்ள பார்வையில் இருந்து விலகி இருக்கிறான்
ச மே தி சது மங்கலம் வர வரோ முநீ நாம் வர –முனிவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மணவாள மா முனிகள் மங்களமான வற்றைக் கொடுத்து அருள வேணும் –

மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் காம க்ரோதாதிகள் இல்லாமல் பரி ஸூத்தர்களாய் -பக்ஷபாதம் அற்று விளங்குவதை ஸ்லேஷ அலங்காரமும் விரோத ஆபாஸ அலங்காரமும் கொண்டு அருளுவதை இந்த ஸ்லோகத்தில் காணலாம் –-இதே போல் மேல் ஸ்லோகங்களிலும் காணலாம் –

இது முதலான ஸ்லோகங்களில்‌ பஹுமுகமாக மாமுநிகளின்‌ வைபவத்தை வர்ணிக்கிறார் – எந்த மாமுநிகளை ஆஸ்ரயித்தவன்‌ ஸிவனாயிருந்தும் விஷம த்ருஷ்ட்டி இல்லாமையினால் சிவனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்கிறானோ – முநிவர்களில்‌ ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகள் எனக்கு மங்களத்தைக்‌ கொடுக்கட்டும்‌! என்கிறார்‌. மாமுநிகளை ஆஸ்ரயித்தவன் எப்படி சிவன் ஆகிறான்‌? என்றால்‌ – சிவன்‌ கலா நிதியான சந்த்ரனை சிரோ பூஷணமாகச்‌ கொண்டு இருக்கிறார்‌. மாமுநிகளை ஆஸ்ரயித்தவனும்‌ கலைகளுக்கு நிதியாயிருக்கிற வித்வானகளுக்கு மணியாக – வித்வச் சிரோமணியாக விளங்குகிறான்‌. மேலும்‌ சிவபெருமான் ஜிதோ மநோ பவன்‌ – காம தேவனை – மன்மதனை ஜயித்தவன்‌ . இவனும்‌ காமத்தை வென்றவன் -சிவன் ஆகாச கங்கையை சிரஸ்ஸில்‌ தரிக்கிறார்‌ . ஸுதாஸந தரங்கிணீ – ஆகாச கங்கை- ஸுதாஸநர்கள்‌ – அம்ருதத்தை உண்கிற தேவர்கள்‌. தரங்கிணீ – நதி – தேவநதி. அதாவது ஆகாச கங்கை- இவனும்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தியாகிற அம்ருத ப்ரவாஹத்தை தலையிலே ஏற்கிறான்‌ . மாமுநிகளுடைய அமுத மயமான ஸ்ரீஸூக்திகளைத்‌ தலைவணங்கி ஏற்றுக்‌ கொள்கிறான்‌ என்றபடி –

இவ் வகையில்‌ சிவபெருமானோடு ஸாம்யத்தினால்‌ சிவனாகிலும்‌ விஷமத்ருஷ்டி இல்லாதவன்‌ என்கிறது . இதில்‌ விரோதம்‌ தோற்றுகிறது . ஸிவன்‌ முக்கண்ணனாகையால்‌ விஷம த்ருஷ்டியாய்‌ இருக்கிறான்‌ . மாமுநிகளை ஆஸ்ரயித்தவனோ சிவன்‌ – மங்கள ஸ்வரூபன்‌ – பரிஸூத்தன்‌ ஆகிலும்‌ விஷமத்ருஷ்டி – பக்ஷபாத த்ருஷ்டி இல்லாதவன்‌ . எல்லாரையும்‌ ஸமமாகப்‌ பார்க்‌கிறவன்‌ ஸம த்ருஷ்டி என்று விரோத பரிஹாரம்‌ கண்டு கொள்வது .

ஸ்லேஷாலங்காரமும்‌ விரோதாபாஸாலங்காரமும்‌ இந்த ஸ்லோகத்தில்‌ காணப்படுகன்றன இப்படி மேல்‌ ஸ்லோகங்களிலும்‌ கண்டு கொள்வது. மாமுநிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ உயர்ந்த வித்வான்‌௧ளாய்‌ காம க்ரோதாதிகளை ஜயித்தவர்களாய்‌ ஆசார்யன்‌ நியமித்தபடி வர்த்திக்கிற வர்களாய்‌ பரிஸூத்தர்களாய்‌ நற்குண ஸீலர்களாய்‌ பக்ஷ பாத மற்றவர்களாய்‌ விளங்குகிறார்கள்‌ . இப்படிப்பட்ட ஸச் சிஷ்யரகளுக்கு ஸேவ்யமானர்களாய்‌ விளங்குகின்ற மாமுநிகள்‌ அடியேனுக்கு ஸூபத்தைக்‌ கொடுத்தருள வேணும்‌! என்கிறார் –

—

கல்யாண அசல தர்ம பாக குர்யத் ஸம்ஸ்ரிதோ பூதிமாந்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம்
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே
ஸோ அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி
–12-

கல்யாண அசல தர்ம பாக குர்யத் –பொன் நிறமான மேரு மலையின் பண்பான சிவந்த நிறத்தை உடையவரும்-பொன் திகழு மேனி புரி சடை யம் புண்ணியன் -அன்றோ-
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் பிப்ரத் ரஸ்ய -ஒப்பற்ற நந்தியை வாகனமாக உடையவரும் -விபூதியை அணிந்தவரும் –
கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் – சந்திரனுடைய குறை யற்ற கலையை நன்கு சிரஸ்ஸால் தாங்குகிறவரும்-
க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே –பொருத்தம் உள்ள பாம்புகளை அணிகலனாக உடையவரும் –
மன்மதனை வென்றவருமான சிவபெருமானுடைய சமான நிலையை –

கல்யாண அசல தர்ம பாக குர்யத் -விவேகாதி சப்தகங்களில் சத்யம் முதலியவற்றைக் குறிக்கும்
கல்யாணத்தில் அசையாத நிலையை உடைய பண்பாளராய்
ஸம்ஸ்ரிதோ பூதிமாந் -ஒப்பற்ற வாக் வன்மையை உடையவராய்
பிப்ரத் ரஸ்ய கலா நிதே கில கலாம் மூர்த் நாப் ருசம் நிர்மலாம் க்லுப்தா ஹீந விபூஷண ஸ்மரஜி-கைங்கர்ய ஸ்ரீ யாகிய செல்வத்தை உடையவராய் -பலமான குறைவற்ற சமதமாதிகளை ஆபரணமாக உடையவராய்
தஸ் ஸா யுஜ்ய மாடீ கதே ஸோ -சிவன் பூதி மான் -விபூதி உடையவன்-மா முனிகளை ஆஸ்ரியத்தவர்களும் பூதி மான் -கைங்கர்ய ஸ்ரீயை உடையவர் –
சிவன் சந்த்ர கலையைத் தரிக்கிறான் -இவர்களோ நிர்மலமான ஞான ரூபமான கலைகளைத் தரிக்கிறார்கள் –
தலை வணங்கி நிர்மலமான ஞான ஒளியைப் பெறுகிறார்கள்
சிவன் நாக பூஷணம் தரித்தவன் -இவர்களோ ஆத்ம குண பூஷண தாரிகள் –
அவ்யாந் நஸ் ஸததம் முனிர் வர வரோ அநந்யார்ஹ தேஜோ நிதி -எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர் அடைகிறார்களோ அந்த வேறு ஒருவருக்கும் தகுதி இல்லாத தேஜஸ்ஸின் நிதி போன்ற அழகிய மணவாள மா முனிகள் எப்பொழுதும் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

எந்த மாமுநிகளை ஆஸ்ரயித்தவன்‌ ஸிவ ஸாயுஜ்யத்தை உடையவனுக்கு ஸமாநவனாய்‌ இருக்‌கிறானோ இதர துர்லபமான விலக்ஷண தேஜோ நிதியான அந்த மணவாளமாமுநிகள்‌ நம்மை எப்போதும்‌ ரக்ஷித்தருள வேணும்‌ – என்கிறார்‌. ஸிவன்‌ புதிமான்‌ – விபூதியைத்‌ தம்‌ ஸ ரீரத்தில்‌ பூசி யிருப்பவர்‌-மாமுநிகளை ஆஸ்ரயித்தவனும்‌ புதிமான்‌ – கைங்கர்ய ஸம்பத்தை உடையவன்‌ -ஸிவன்‌ கலாநிதியான சந்த்ரனுடைய நிரமலமானதொரு கலையைத்‌ தலையில்‌ தரிக்கிறார்‌. இவனோ ஸகல கலைகளுக்கும்‌ நிதியான மாமுநிகளுடைய நிர்மலமான ஜ்ஞாந ரூபமான கலையைத்‌ தலையில்‌ தரிக்கிறான்‌ – தலை வணங்கி நிரமலஜ்ஞாந ஒளியைப்‌ பெறுகிறான்‌ என்றபடி . ஸிவன்‌ உயர்ந்த நாகத்தை பூஷணமாகக்‌ கொண்டிருக்கிறார்‌. மாமுநிகளுடைய அடியவனும்‌ குறைவற்ற பூஷணங்களைப்‌ பூண்டிருக்கிறான்‌ . ஸமதமாதிகளான (உள் வெளி இந்த்ரியங்களை அடக்குவதான) ஆத்மகுணங்களை குறைவற்ற பூஷணமாகச்‌ சொல்கிறார்‌. புதியென்பது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைக்‌ குறிக்கிறது. இந்த விஸேஷண ஸப்தங்கள்‌ ஸ்லேஷோலங்‌ காரத்தினால்‌ ஸிவனுக்கும்‌ மாமுநிகளுடைய அடியவர்களுக்கும்‌ பொருந்துகின்றன. ஸ்மரஜித்‌ – காமனை ஐயித்த ஸிவன்‌ . அவருடைய ஸாயுஜயத்தை – பெருமையை உடையவனாகிறான்‌ .
மாமுநிகளுடைய அடியவன்‌ நன்மையைப்‌ பயக்கும் ஸ்திரமான ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தைப்‌ பற்றி யிருக்கிறான்‌ –கோ ஸப்தம்‌ வாக்குக்கும் வாசகம்‌ ; ஒப்புயர்வற்ற வாக்‌ வன்மையை உடையவன்‌ . ஒப்புயர்வற்ற வாக்கை உடையவன்‌. ஸிவன்‌ பக்ஷ்த்தில்‌ கல்யாண ஸப்தம்‌ ஸுவர்ணத்துக்கும்‌ வாசகம்‌, பொன் மயமான மேரு பர்வதத்தின்‌ தர்மமான சிவந்த வர்ணத்தை உடையவர்‌ ஸிவபெருமான்‌. * பொன்‌ திகழுமேனி புரிசடையம்‌ புண்ணியன்‌ என்று சொல்லக்கடவதிறே .-பலத்தில்‌ ஒப்பில்லாத நந்தியை வாஹநமாக உடையவர்‌ ஸிவன்‌ . கோ ஸப்தத்தை நேத்ரேந்திரிய வாசகமாகக்‌ கொண்டால்‌ ஒற்றைப் படையான நேத்ரத்தை(கண்ணை) உடையவர்‌ என்று அர்த்தம்‌. முக் கண்ணனிறே ! மாமுநி பக்த விஷயத்தில்‌ வாக்கில்‌ வல்லவன்‌ – பேச வல்லவன்‌ என்று பொருள் -இப்படி ஸிவபெருமானுடன்‌ ஸாம்யத்தை மாமுநிகளுடைய அடியவனுக்கு நிரூபித்தபடி .

இதற்கு வேறு விதமாகவும்‌ சொல்லலாம்‌. எங்ஙனேயென்னில்‌ – சாதன சப்தகங்களான விவேகம்‌, விமோகம்‌ , அப்யாஸம்‌ , க்ரியை , கல்யாணம்‌ , அநவஸாதம்‌ , அநுத்தர்ஷம்‌ என்கிற உபாஸந-உபயோகி களான தர்மங்களில்‌ கல்யாண ஸப்த வாச்யமான ஸத்யம்‌ , ஆர்ஜவம்‌ தயை தாநம்‌ , அஹிம்ஸை , அநபித்யை (நிஷ் பல சிந்தை யின்மை) என்கிற தர்ம குணங்களில்‌ ஸ்திரமான நிஷ்டையை உடையவன்‌ மாமுநிகளுடைய அடியவன்‌ . கல்யாணம்‌ என்பது: ஸாதந ஸப்தகம்‌ அனைத்தையுமே உப லக்ஷண முறையில்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌ –

தல்லப்‌திர்‌ விவேக விமோக அப்‌யாஸ-க்ரியா-கல்யாண :அநவஸாத -அநுத்‌தர்ஷேப்ய : ஸம்பவாந் நிர்வசநாச் ச –என்னும்‌ வாக்யகாரருடைய வாக்யத்தின் படி ஸ்வாமி எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷ்யத்தில்‌ லகு ஸித்தாந்த ப்ரகரணத்தில்‌ ஸாதந-ஸப்தகத்தை – ப்ரஹ்மவித்யா நிஷ்டனுக்கு ( பக்தி யோக நிஷ்ட னுக்கு) இருக்க வேண்டிய அடிப்படையான தன்மைகளை நிரூபணம்‌ பண்ணி யருளுகிறார்‌. ஆசார்ய ஹ்ருதய (மூலம்‌ – 99) வ்யாக்யாநத்திலே மணவாளமாமுநிகளும்‌ இவற்றைக்‌ காட்டி யருளுகிறார்‌. மாமுநிகளுடைய வ்யாக்யாந பங்க்திகள் –

இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )

இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காய சுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் ) என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள அன்னத்தால் உண்டான காய சுத்தி -(காயம் -அந்தக்கரணம் -மனஸ் )
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் -பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )-ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்
–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில் ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது ) என்றும் சொல்லுகிற இடங்களிலும் –சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..

விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..-யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் — காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –

அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –-ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி–இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )

கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் – சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே-பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –

கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே – சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –-இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –( தன் நலம் அற்று பிறர் துன்பம் பொறாமை )
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல்
அன்றிக்கே-நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .அது இல்லாமை- அநபிதியை
–

அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத
-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில் அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –-சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —-அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–(அவஸாதமாவது : – தேஸ -காலங்‌களினுடைய குணக் கேட்டினாலும்‌ , ஸோகத்துக்கும்‌ அச்சத்துக்கும்‌ காரணமாக உள்ள பொருள்‌களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌ உண்டான தைந்ய மாகிற மனத் தெளிவு இல்லாமை.)

அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –-அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு –அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது
என்றபடி )(அநுத்தரஷமாவது =-உத்தர்ஷம்‌ இல்லாமை. உத்தரஷமாவது – தேஸ காலங்களினுடைய அநுகூலத்தாலும்‌ , ப்ரியமான பொருள்களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌ உண்டான மகிழ்ச்சி. எனவே மகிழ்ச்சிக்குக்‌ காரணங்கள்‌ உளவானாலும்‌ அவற்றைக்‌ கண்டு கழிபேருவகையன் ஆகாது ஒழிகை என்றபடி -)

இனி–சமாதிகளில் – -அதாவது –-சமம் ஆவது அந்த கரண நியமனம் –-தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்-சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்-தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் – என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..-ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும் சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே , உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..-மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

உபாஸநம்‌ ஸ்யாத்‌ த்‌ருவாநுஸ்ம்ருதி : என்பதனாலே அது உண்டாவதற்கு (1) விவேகம்‌ (2) விமோகம்‌ (3) அப்யாஸம்‌ (4) கல்யாணம்‌ (5) க்ரியை (6) அநவஸாதம்‌ (7) அநுத்தர்ஷம்‌ என்று ஏழு ஸாதநங்களைக்‌ கூறுகிறார்‌ வாக்யகாரர்‌-
தல்‌ தல்லப்‌திர்‌-விவேக-விமோக-அப்‌யாஸ-க்ரியா-கல்யாண
அநவஸாத-அநுத்‌தர்ஷேப்ய : ஸம்பவாந் நிர்வசநாச் ச
– ” என்பது வாக்யகாரருடைய வாக்யம்‌. இவற்றில்‌ க்ரியை எனப்படுபவை தான்‌ யஜ்ஞாதி கர்மங்கள்‌. விவேகம்‌ என்பது காய ஸூத்தி.

ஜாத் யாஸ்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத்‌ காய ஸூத்‌தி விவேக: -என்கிறார்‌ எம்பெருமானார்‌. ஜாதியினாலும்‌ , ஆஸ்ரயத்தினாலும்‌ , நிமித்தத்தினலும்‌ தோஷம்‌ இல்லாதிருப்பதான அந்நத்தினால்‌ ஏற்படும்‌ தேஹ ஸூத்தி விவேகம்‌ எனப்படும்‌. ஜாதி தோஷம்‌ , ஆஸ்ரய தோஷம்‌ ச நிமித்த தோஷம்‌ இவைகள்‌ இல்லாத அந்நத்தாலே காயத்தை ஸூத்தி பண்ணுதல்‌ விவேகம்‌ ஜாதிதோஷம்‌ – வெங்காயம்‌ , பூண்டு , நாய்க் குடை முதலானவை இயற்கை யாகவே தோஷமுடைய பதார்த்தங்கள்‌- இவைகளுக்கு மருத்துவ ஸக்தி உண்டு ; இவை இரத்தத்தை ஸூத்திகரிக்க வல்லவை என்றெல்லாம்‌ இக் கால மருத்துவர்கள்‌ சொல்லுகிறார்‌கள்‌. இவை தேஹ ஆரோக்யத்துக்குச்‌ சிறந்தவைகளாக இருக்கலாம்‌. ஆனால்‌ இவற்றை உட்‌கொண்டால்‌ ஸத்வ குணம்‌ அழிந்து ரஜஸ்‌ , தமோ குணங்களே ஒருவனிடத்தில்‌ மேலோங்கி இருக்கும்‌. இவை ஆத்மாவுக்கு கேடானவை என்பதை இட்டு இவற்றை விலக்குதல்‌ அவஸ்யம்‌.

ஆஸ்ரய தோஷம்‌ என்பது பதார்த்தங்களுக்கு யஜமானனாக இருக்கிறவன்‌ அபிசஸ்தனாகவோ சண்டாளனாகவோ பதிதனாகவோ இருந்தால்‌ அவன்‌ ஸம்பந்தத்தை இட்டு வரும்‌ தோஷமாகும்‌. மஹாபாதகி , வேத மார்க்கத்துக்குப்‌ புறம்பானவன்‌ , தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களை விட்டவன்‌ போன்றவர்களுடைய த்ரவ்யங்களை ஸ்வீகரித்தல்‌ என்பது தகாது. பக்வம்‌ பண்ணப்‌ படாத பதார்த்தங்களை – காய்கறிகள்‌ போன்றவற்றை – பணம்‌ கொடுத்து வாங்கிக்‌ கொள்வதில்‌ (க்ரயஸூத்தி ஏற்பட்டு விடுவதால்‌) தோஷம்‌ இல்லை. பஞ்ச ஸம்ஸ்காரங்கள்‌ பண்ணிக்‌ கொள்ளாத வர்களுடைய க்ருஹங்களிலே (அவர்கள்‌ ப்ராஹ்மணர்களாக இருந்தாலும்‌) உணவு உட்‌ கொள்ளுதல்‌ தகாது. த்ரிவித தோஷமும்‌ இல்லை யென்றாலும்‌ பகவந் நிவேதிதமல்லாத வஸ்துவும்‌ துஷ்டமே-
யஜ்ஞ ஸிஷ்டாஸிந : ஸந்தோ முஞ்சந்தே ஸர்வகில்பிஷை : |
தே த்வகம்‌ பு,ஞ்ஜந்தே பாபா யே பசந்த் யாத்ம காரணாத்‌ |
| (3-13) [பரமபுருஷனுடைய திருவாராதநமான ) யஜ்ஞத்தில்‌ எஞ்சி யுள்ளதை புஜிப்பவர்‌களான ஸத் புருஷர்கள்‌ (ஆத்ம தர்ஸநத்துக்குத்‌ தடையாக இருக்கும்‌) அனைத்து பாபங்களில்‌ இருந்தும்‌ விடுபடுகிறார்கள்‌. எவர்கள்‌ தங்களுடைய பசியை போக்கிக்‌ கொள்வதற்காக மட்டுமே சமைத்து உண்கிறார்களோ அவர்கள்‌ பாபத்தையே புஜிக்கிறார்கள்‌]
யஜ்ஞஸிஷ்டாம்ருத புஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்‌ (4-31) (யஜ்ஞத்தில்‌ எஞ்சிய அந்நம்‌ முதலான அம்ருதத்தை புஜிப்பவர்கள்‌ பழையதான ப்ரஹ்மாத்மகமான ரூபத்தை அடைகிறார்கள்‌) என்றும்‌ கீதா வசநங்கள்‌. பகவானைத்‌ தவிர இதர தேவதைகளுக்குப்‌ படைக்கப்பட்ட அந்நமும்‌ ஸ்வீகரிக்கத் தக்கதன்று. சில பதார்த்தங்கள்‌ ஜாதி தோஷம்‌ ஆஸ்ரய தோஷம் இல்லாமல் இருந்தாலும் கூட அந்தப் பதார்த்தங்களில் தலை மயிர்‌ எச்சில் போன்ற நிஷித்த வஸ்துக்கள் சேர்ந்து விட்டன வென்றால் அவை நிமித்த தோஷத்தை உடையனவாய் ஆக விடுகின்றன – ஸ்ரீ பெரும்பூதூர் ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி பற்றிய சரித்‌ரம் ஓன்று சொல்லப்படுகிறது -ஜீயர் ஸ்வாமி மடத்தில் எழுந்தருளி இருக்கிறார் -ஸந்நிதியில் ஸ்வாமிக்கு (எம்பெருமானாருக்கு) கண்டருளப்‌ பண்ண வேண்டும்‌ என்று விஸேஷமாக சர்க்கரைப் பொங்கல்‌ தளிகை ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள்‌-மடத்‌திலிருந்து ஒருவர்‌ மூலம்‌ மடைப்பள்ளி அதிகாரிகளுக்கு அந்த சரக்கரைப் பொங்கலை எம்பெரு மானாருக்கு கண்டருளப்‌ பண்ண வேண்டாம்‌ என்று செய்தி அனுப்புகிறார்‌ ஜீயர்‌ ஸ்வாமி. அவர்களும்‌ ஸித்தமாக்கி வைத்திருந்த தளிகைப்‌ பாத்ரத்தைத்‌ திறந்து பார்க்க அதில்‌ பல்லி விழுந்திருந்ததைக்‌ கண்டனர் -இது நல்ல பதார்த்தங்களைக் கொண்டு கொண்டு நல்ல வ்யக்திகளாலே பக்வம்‌ பண்ணப்பட்டாலும்‌ ஒரு காரணத்தை ( நிமித்தத்தை)க்‌ கொண்டு வந்து சேர்ந்துள்ள தோஷத்தினால்‌ உபயோகப்படுத்தக் கூடிய யோக்யதையை இழந்து விட்டது. இப்படி மூன்று வகையான தோஷங்களும்‌ இல்லாத அந்நத்தினாலே தேஹத்தை தரித்தல்‌ , வளர்த்தல்‌ காய ஸூத்தி எனப்படும்‌–

அத்ர நிர்வசனம்
ஆஹார ஸூத்‌தெள ஸத்த்வ ஸூத்‌தெள : |
ஸத்த்வ ஸூத்‌தெள த்‌ருவா ஸ்ம்ருதி : |
(ஸ்ம்ருதி லம்பே, ஸர்வ க்‌ரந்தீ,_நாம்‌ விப்ரமோக்ஷ்‌ : ||)

(பரிஸூத்தமான ஸாத்விக ஆஹரத்தை உட் கொண்டால்‌ மனம்‌ அழுக்கற்றதாகிறது. மனம்‌ ஸூத்தமானால்‌ நிலையான நினைவான ஆத்ம த்யாநம்‌ விளைகிறது. அது விளைந்த வளவில்‌ அஜ்ஞாநம்‌ விருப்பு வெறுப்பு முதலிய சிக்கல்கள்‌ நீங்குகின்றன)(சாந்‌ 7-26-2) என்கிறார்‌ எம்பெருமானார்‌. ஆஹார ஸூத்தி இருந்தால் தான்‌ மனம்‌ ஸூத்தமாக இருக்கும்‌. மனம்‌ ஸூத்தமாக இருந்தால் தான்‌ பகவானைப்‌ பற்றிய நிலைத்த நினைவு உண்டாகும்‌.
நிர்வசநம்‌ – நிஷ் க்ருஷ்ட வசநம்‌ , அப்ரமாணேப்யோ நிஷ் க்ருஷ்டம்‌ ப்ரமாண பூ,தம்‌ வசநம்‌ இத்யர்த்த-
( அப்ரமாணங்களிலிருந்து நிஷ்க்ருஷ்டம்‌ – ப்ரமாண பூதமான வசநம்‌ என்று அர்த்தம்‌) என்று விளக்கம்‌ அநுக்ரஹித்துள்ளார்‌ ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர் –
பிணச் சோறும்‌ , மணச் சோறும்‌ , விலைச் சோறும்‌ , புகழ்ச் சோறும்‌ , பொருட் சோறும்‌ , எச்சிற்‌ சோறும்‌ இவை ஆறும்‌ த்யாஜ்யம்‌ மற்றைச்சோறிறே வைஷ்ணவன்‌ உண்ணும்‌ சோறு என்று தீரத்தங்குடி ஜீயர்‌ அருளிச்செய்வர்‌ * என்று வார்த்தாமாலை (292-வார்த்தை )

விமோகம்‌ என்பது காம க்ரோதங்களினால்‌ விகாரம்‌ அடையாமல்‌ இருத்தலைக்‌ குறிக்கும்‌.
ஸாந்த உபாஸீத- (ராக த்வேஷங்கள்‌ அற்றவனாய்‌ உபாஸிக்க வேண்டும்‌) (சாந்‌ 3-14-1) என்பது இதற்கு ப்ரமாணம்‌-

ஆரம்பண ஸம் ஸீலநம்‌ புந : புந : அப்‌,யாஸ :மனஸ்ஸுக்கு ஒரு பற்றுக் கோடாக பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைத்‌ திரும்பத்‌ திரும்ப நினைத்தல்‌ அப்யாஸம்‌ எனப்படும்‌. இதற்கு ப்ரமாணமாக -ஸதா தத்பாவ பாவித: (எப்பொழுதும்‌ ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய நினைவை உடையவனாய்‌ இருக்க வேண்டும்‌) என்னும்‌ கீதா வசநம்‌ (8-3) த்ரமிட பாஷ்யகாரரால்‌ எடுக்கப்பட்டுள்ளது. பகவான்‌ கீதையிலே தான்‌ எந்தெந்த குணங்கள்‌ உடையவனாக உபதேஸம்‌ செய்தருளி இருக்கிறானோ , அந்தந்த குணங்களை உடையவனாக அவனை பற்றிய சிந்தநத்துடன்‌ எப்போதும்‌ இருக்க வேண்டும்‌. இதற்கு அப்யாஸம்‌ என்று பெயர்‌. இது த்யாநம்‌ அன்று ; இது த்யாநத்துக்கு அங்கமாகும்‌. (பூர்வமாக இருப்பதொன்றாகும்‌)–

பஞ்ச மஹா யஜ்ஞங்களையும்‌ மற்ற நித்ய நைமித்திக கர்மங்களையும்‌ யதா ஸக்தி அநுஷ்டித்தல்‌ க்ரியை எனப்படும்‌. தேவ யஜ்ஞம்‌ , ப்ரஹ்ம யஜ்ஞம்‌ , பித்ரு யஜ்ஞம்‌ , மநுஷ்ய யஜ்ஞம்‌ , பூத யஜ்ஞம்‌ என்பவை பஞ்ச மஹா யஜ்ஞங்களாகும்‌.
க்ரியாவாநேஷ ப்‌ரஹ்ம விதாம்‌ வரிஷ்ட, :
(முண்டகம்‌ 3-1-4) (ப்ரஹ்ம வித்துக்களிலே க்ரியையை உடையவனானவன்‌ ஸ்ரேஷ்டன்‌ (பெருமை வாய்ந்தவன்‌),-தமேதம்‌ வேதாநு வசநேந ப்‌ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந (ப்ருஹ 6-4-22) (அத்தகைய இந்த பரமாத்மாவை ப்ரஹ்ம ஜ்ஞாநிகள்‌ வேதாத்யயநத்தாலும்‌ யஜ்ஞத்தாலும்‌ தாநத்தாலும்‌ உபவாஸ ரூபமான தபஸ்ஸாலும்‌ அறிய விரும்புகிறார்கள் -என்னும்‌ வேதாந்த வாக்யங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள க்ரியைகள்‌ அனைத்தும்‌ ப்ரஹ்ம உபாஸநத்துக்குஸஹகாரி யாகின்றன.

ஸத்ய ஆர்ஜவ தயா தாந அஹிம்ஸ அநபித்‌,யா : கல்யாணாநி (ஸத்யம்‌ , ஆர்ஜவம்‌ , தயா, தாநம்‌ , அஹிம்ஸா , அநபித்யை முதலான நற் குணங்கள்‌ கல்யாணங்கள்‌ )
ஸத்யம்‌ பூத ஹிதம்‌ ப்ரோக்தம்‌ * என்பது மநு வசநம்‌. –ஸத்யம்‌ – பூத ஹிதம்‌ என்கிறார் ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர்‌. பூத ஹிதமான வசநங்களையே சொல்லுதல்‌ ஸத்யம்‌ எனப்படும்‌. மஹா பாரதத்திலே ஒரு சரித்ரம்‌ சொல்லப்பட்டுள்ளது. ஒரு ரிஷியினுடைய ஆஸ்ரமத்துக்குள்‌ ஒரு பசு வந்து புகுந்து விட்டது. அதை ஹிம்ஸிக்கும்‌ நோக்கத்துடன்‌ துரத்தி வந்த வேடன்‌ ரிஷியைப்‌ பார்த்து * இங்கே பசு வந்ததா? * என்று கேட்கிறான்‌. அவர்‌ * இங்கு பசு வர வில்லை * என்று சொல்லி விட்டார்‌. அவர்‌ இப்படிச்‌ சொன்னது ஸத்யமா? அஸத்யமா? என்றால்‌ ஸத்யமே ! தஸரதன்‌ பெருமாளைக்‌ கை விட்டுத்‌ தன்‌ வசநத்தை நிலை நாட்டினது அஸத்யமே! – ஆபாஸ (போலியான) தர்மமே என்கிறார்கள்‌ நமதாசார்யர்கள்‌ .

ஆர்ஜவம்‌ என்பது சிந்தையாலும்‌ , சொல்லாலும்‌ , செயலாலும்‌ ஒருபடிப் பட்டிருப்பதாகும்‌ உயர்ந்த விஷயத்திலே இப்படி இருப்பது தான்‌ ஆர்ஜவம்‌ எனப்படும்‌. தகாத விஷயத்தில்‌ சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செயலாலும்‌ ஒருபடிப்பட்டிருப்பது என்பது குடில பாவமாகும்‌. மநோ வாக்காயங்களினுடைய ஐகரூப்யம்‌ எதில்‌ பர்யவஸிக்கும்‌?
சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌ தேவபிரானையே தந்தை தாய்‌ என்றடைந்த வண்குருகூரவர்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 6-5-11) என்று தன்னைப்‌ பற்றிச்‌ சொல்லிக்‌ கொள்கிறார்‌ ஆழ்வார்‌. சூர்ப்பணகை ஸ்ரீராமனைப்‌ பார்த்து * நீ யார்‌? * என்று கேட்கிறாள்‌. உடனே நேர்மையுடன்‌ தம்‌ சரித்ரம்‌ முழுவதையும்‌ சொல்லுகிறார்‌ பெருமாள்‌. நமதாசார்யர்கள்‌ பெருமாளுடைய ஆர்ஜவ குணத்தை நன்கு அநுபவித்திருக்கின்றனர்‌.

ஸ்வார்த்த நிரபேக்ஷ பரது: க்க, அஸஹிஷ்ணுத்வம்‌ – தயை என்று காட்டுகிறார்‌ ஸ்ருதப்ரகாஸிகாசார்யர்‌. பிறருடைய துக்கத்தைப்‌ பொறுக்காமல்‌ இருத்தல்‌ ; இப்படி இருக்கும் போது அதனால்‌ தனக்கு ஒரு ப்ரயோஜநத்தை (புகழையோ பெருமையையோ) கருதாதிருத்தல்‌ தயை எனப்படும்‌.

கரண த்ரயேணாபி பரபீடா நிவ்ருத்தி : – பரஹிம்ஸையிலிருந்து கரண த்ரயத்தாலும்‌ விலகி இருத்தல்‌ அஹிம்ஸை எனப்படும்‌.

தாநம்‌ – *லோப ராஹித்யம்‌ * என்று அர்த்த மருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ருதப்ரகாஸிகா சார்யர்‌. இது மனத்தினுடைய இளகிய தன்மையை (மனம்‌ இருக்க வேண்டிய நிலையை )க்‌ குறிப்பதாகும்‌. தன்னிடம்‌ இருக்கும்‌ அல்லது தனக்கு வரும்‌ தநத்தைத்‌ தனக்காகவே சேர்த்து வைத்துக்‌ கொள்ளும்‌ கருமியாக (கஞ்சனாக) இல்லாமலிருக்க வேண்டும்‌. ஆராதிக்கப்பட வேண்டிய பூதங்கள்‌ வந்தால்‌ உடனே தன்னிடம்‌ இருப்பதைக்‌ கொடுக்கும்‌ ஸாமர்த்யம்‌ உபாஸகனுக்கு இருக்க வேணும்‌. செல்வந்தர்கள் தான்‌ இத் தன்மையை உடையவரகளாக இருக்க முடியும்‌ என்பதன்று-

அநபித்‌யை – அபித்‌யை என்கிற தன்மை இல்லாமலிருப்பது அநபித்‌ யை எனப்‌படும்‌. அபித்‌ யை என்றால்‌ என்ன? இதை -(1) * பரகீயே ஸ்வத்வ புத்‌தி, : * (பிறருடைய வஸ்துவினிடத்தில்‌ தன்னுடையது என்கிற புத்தி) என்றும்‌ (2) * நிஷ்பலசிந்தா * (லோகத்திலுள்ள அஸாரமான, வேண்டத் தகாத விஷயங்களைப்‌ பற்றிச்‌ சிந்தித்தே தன்‌ மனத்தையும்‌ பாழ்படுத்திக்‌ கொள்ளுதல்‌ – எதற்கும்‌ உபயோகமில்லாத சிந்தை) என்றும்‌ (3) * பர க்ருத அபகார சிந்தா (அந்யனால்‌ செய்யப்பட்ட அபகாரத்தை சிந்தித்தல்‌) என்றும்‌ மூன்று விதமாக அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர்‌. இக் குணங்கள்‌ இல்லாதிருத்தல்‌ அநபித்‌யை எனப்படும்‌ நிஷ்டையில்‌ – பகவானைப்‌ பற்றிய சிந்தநத்தில்‌ – உயர்ந்து கொண்டே போகிறவனுக்கு சஞ்சல புத்தி இருக்காது

ஸத்யேந லப்‌,ய: * *தேஷாமேவைஷ விரஜோ ப்‌ரஹ்ம லோக : (ப்ரஸ்ந 1-15-11)(அவர்களுக்கே ரஜஸ் தமஸ்ஸுக்களால்‌ விடுபட்டிருக்கிற இந்த ப்ரஹ்ம லோகமானது ஸத்யத்தினால்‌ அடையத் தக்கது) என்பது நிர்வசநம்‌.

அநவஸாதம்‌ என்பது அவஸாதம்‌ (துக்கம்‌) இல்லாமை. து :க்கப்படுவதற்கு காரணங்கள்‌ இருந்தாலும்‌ து:க்கப்படாமல்‌ இருத்தல்‌ அநவஸாதம்‌ எனப்படும்‌ தேஸ கால வைகுண்‌யத்தாலும்‌ (தேஸ காலங்கள்‌ கெட்டு இருக்கின்றனவே என்று நினைத்திருத்தல்‌ ) , ரோக நிமித்தமான வஸ்து முதலியவைகளை (புத்ர மரணாதிகளை) நினைத்தல்‌ போன்ற காரணங்களால் மனதில்‌ ஏற்படும் ப்ரகாசமின்மை அவஸாதம்‌ எனப்படும்‌. இதை வெற்றி கொள்வதற்கு மனதில் பலம் வேண்டும் –நாயமாத்மா பல ஹீநேந லப்‌, ய: (முண்டகம்‌ 4-2-4) (இந்த பரமாத்மா மநோ பலம்‌ அற்றவனால்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌) என்கிறது ஸ்ருதி. லோகத்திலே பல விபரீதங்கள்‌ ஏற்படக் கூடும்‌. இவற்றை நம்மால்‌ தடுக்க முடியாது. ஆனால்‌ இந்த விபரீதங்களினால்‌ மனதில்‌ தைந்யம்‌ (அபாஸ்வரத்வம்‌ – மனத் தெளிவு இன்மை) வந்து சேரக் கூடாது. அவஸாதம்‌ என்பது மனதில்‌ ஏற்படக்‌ கூடிய கலக்கத்தைக்‌ குறிக்கும்‌. இப்படிப்பட்ட அவஸாதம்‌ இல்லாதிருப்பது அநவஸாதமாகும்‌.

அநுத்‌தர்ஷம்‌ என்பது மனதில்‌ அதிக ஸந்தோஷ மின்மையைக்‌ குறிக்கும்‌. ஸந்தோஷப்‌ படுவதற்குக்‌ காரணங்கள்‌ இருந்தாலும்‌ மனதில்‌ அதிக ஸந்தோஷத்துடன்‌ கூடி யிருக்கும்‌ தன்மையும்‌ விரும்பத் தக்கதன்று. ஏனென்றால்‌ விஷயாந்தரங்களைப்‌ பற்றிய இத் தன்மையும்‌ பகவானைப்‌ பற்றிய த்யாநத்தைக்‌ கெடுக்கும்‌. மனதில்‌ அதிக ஸந்தோஷத்துடன்‌ கூடியவனாக இல்லாதிருத்தல்‌ அநுத்தர்ஷம்‌ எனப்படும்-

—

யத் பக்தோ நாபி பூதோ மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி
நாலீ கஸ்தோ க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா மேததே சத்ய தாமா
ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ
–13-

யத் பக்தோ நாபி பூதோ -எந்த மாமுனிகளுடைய பக்தனாக இருப்பவன் உள் வெளி சத்ருக்களால்
பாதிக்கப் படாமல் இருப்பவனும்
மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -சப்தாதி விஷயாந்தர காமத்தை வென்றானாகவும்
வாக் வந்தமைக்கு ஒரே பாத்திரமாகவும்
நாலீ கஸ்தோ -சத்தியத்தில் உறுதியாக இருப்பவனும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் யத்வ ஸம் ப்ராப்த பூமா -அபவ்ருஷேயமான வேதத்தை வியவஹரிப்பதில் திறமை மிக்க வாக் வன்மையினால் பெற்ற பெருமையை உடையவனாயும்
சாம் ப்ராப்ய -சத்யத்தினால் பெற்ற காந்தியை உடையவனாயும் இருக்கிறானோ அவன் –

மத நமத நக்ருத் வாக் விலாஸைக பூமி -மன்மதனை அழித்தவனை புத்ரனாகப் பெற்றவரும் -தனது பத்தினியான சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிப்பவரும்
நாலீ கஸ்தோ -நாபீ கமலத்தில் இருப்பவரும்
க்ருதோக்தி வ்யவஹ்ருதி சதுராஸ் -யத்வ ஸம் ப்ராப்த பூமா –நான்கு வேதங்களை ஓத நான்கு முகங்களைப் பெற்ற பெருமையை உடையவரும்
மேததே சத்ய தாமா-சத்ய லோகத்தை இருப்பிடமாகக் கொண்டவருமான
சாம் ப்ராப்ய அநந்ய லப்யாம் கமல பவ துலா -வேறு எவருக்கும் கிடைத்தற்கு அரிய ப்ரம்மாவுடன் ஒப்பிட்டுச் சொல்லும்படியான தன்மையைப் பெற்று பிரகாசிக்கிறான்-

ஸோ அவ்யாந்ந ஷாந்தி சிந்துர் நிரவதி மஹிமா ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -பொறுமைக் கடலாக எல்லை அற்ற பெருமை யுடைய அழகிய மணவாள மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

மா முனிகள் அடியார்கள் சிவனைக் காட்டிலும் வி லக்ஷணர்கள் என்பதை கீழ் இரண்டு ஸ்லோகங்களில்-இதில் நான்முகனுடன் ஒப்பீடு-ந அபி பூத -பாஹ்ய ஆந்த்ர சத்ருக்களால் பரிபவம் இன்றிக்கே -விஷயாந்தர காமம் அற்று –-ஸ்ரீ ஸூ க்திகள் விலாஸத்துக்கு ஆசிரமாயும் அவற்றை ரசமாக எடுத்திப் பேசுபவராகவும் இருப்பார்கள்-அ லீகம் -பொய்ச் சொல் -அப்ரியமான சொல்-சதுர ஆஸ்யத்வ-நான் மறைகள் ஒதுவதில் சமர்த்த வாக் வன்மை கொண்டவர்கள் –-சத்தியத்தில் நிலை நின்றவர்களாயும் இருப்பார்கள்

அயனோ –நாபி பூதன் -உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் –-மதன மதன க்ருத் -காமனைத் தகித்த அரனை உண்டாக்கியவன் –-வாக் தேவியான சரஸ்வதியின் விலாசங்களை அனுபவிக்கிறார்
நாலீ கஸ்த-நாலீகம் -கமலம் -அதில் இருப்பவர்-சதுர் ஆஸ்யத்வ -நான்கு முகங்கள் கொண்டு நான்மறைகள்-சத்ய தாமா -சத்யலோகத்தில் இருப்பவர்-

மா முனிகளின் அடியார்கள் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யாலே வந்த காந்தியும் ப்ரபாவத்தையும் கொண்டவர் என்றபடி –

அபகத மத மாநை அந்திம உபாய நிஷ்டை
அதி கத பரமார்த்தை அர்த்த காமாநபே ஷை
நிகில ஜன ஸூஹ்ருத்பி நிர்ஜித க்ரோத லோபை
வர வர முனி ப்ருத்யை அஸ்து மே நித்ய யோக
—கர்வம் அஹங்காரம் அற்று-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் சரம நிஷ்டையில் உறுதி கொண்டவர்கள்-பூர்ணமாக ஆச்சார்ய கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பவர்களாயும்-உபயாந்தரங்களை ச வாசனமாக விட்டவர்களாயும் பக்ஷ பாதம் இன்று அனைவருக்கும் ஸூ ஹ் ருதத்தையே அளிப்பவர்களாயும் இரட்டைகளை வென்றவர்களாயும் இருப்பார்கள் என்பது அர்த்த வாதம் இல்லையே –-கோயில் கந்தாடை அண்ணன் -பஞ்சு மெத்தை
வானமா மலை ஜீயர் -திருப்பாத ரேகை-இவர்கள் போல்வாருடன் நித்ய சம்பந்தம் வேணும் என்று பிரார்த்தனை இதில்-

இத்தனை நாட்கள்‌ தீயவர்களோடு எப்போதும்‌ சேர்ந்திருந்த அடியேனுக்கு -(1) * நாமே உயர்ந்தவர்கள்‌ * என்ற கர்வம்‌ , பெரியோர்களை அவமதிக்கும்‌ அளவுக்கு வளர்ந்த அஹங்காரம் முதலானவை சிறிதும்‌ இல்லாதவர்களும்‌ -2-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்‌ என்கிறபடியே ஆசார்யனுடைய சீரிய அபிமானத்‌துக்கு இலக்காகையாகிற மோக்ஷோபாயத்தில்‌ நன்றாக நிலை நின்றவர்களும்‌ -3-பூர்ணமாக அடையப்பட்ட ஆசார்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தை உடையவர்களும் -4-மற்ற உபாயங்களையும்‌ மற்ற பலன்களையும்‌ விரும்பாதவர்களும்‌ (5) வேண்டியவர்கள்‌ வேண்டாதவர்கள்‌ இவ்விருவருமல்லாத நடுவர்கள்‌ ஆகிய அனைத்து மனிதர்களுக்கும்‌ நன்மைகளைத்‌ தேடும்‌ நல்ல மனமுடையவர்களும்‌ (6) கோபத்தையும்‌ உலோபித்தனத்தையும்‌ நன்றாக வென்றவர்களுமான ஸ்ரீமணவாளமாமுநிகளுடைய அந்தரங்க ஸிஷ்யர்களான கோயில்‌ கந்தாடை யண்ணன்‌ வானமாமலை ஜீயர்‌ முதலியவர்களோடு (திருவடிகளைத்‌ தாங்கும்‌ பஞ்சு மெத்தை திருவடி ரேகை ஆகியவற்றைப்‌ போன்று) நித்யமான ஸம்பந்தமானது அடியேனுக்கு உண்டாக வேணும்‌ ! என்ற ஸ்லோகத்தில்‌ சொல்லப்படும்‌ ப்ரபாவங்கள்‌ அனைத்தும்‌ ஸத்யமானவையே ! வெறும்‌ புகழ்ச்சியல்ல என்றபடி. பரம ஸாத்விகர்களான வரவரமுநி-தாஸர்களுக்கு ராஜஸ தாமஸர்‌ களான பிரமன்‌ ஸிவன்‌ ஆகிற இவர்களோடு ஸாம்யம்‌ சொல்லுவது தகாது என்று நினைக்க வேண்டா – அவர்களுக்கும்‌ ஒரோர்‌ வகையில்‌ ஏற்றமுண்டு . அந்த ஏற்றம்‌ மாமுநிகளுடைய தாஸர்களுக்கும்‌ உண்டு என்று சொல்லுகிறவித்தனை –

சிவனே அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
அன்று அயனும் அயன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம்
அமர்ந்த செழும் குன்றை
–என்று திவ்யதேஸ வாஸிகளான ஸ்ரீவைஷ்ணவ மறையோர்களுக்கு உபமானமாக அயன்‌ முதலானாரை ஆழ்வாரும்‌ அருளிச்‌ செய்துள்ளார் அன்றோ –

க்ஷாந்தி – க்ஷமை -பொறுமை -க்ஷமா ஸமுத்ரமாய்‌ , எல்லை யில்லாத மஹிமையை உடையவரான அழகிய மணவாள மாமுநிகள்‌ நம்மை ரஷிக்க வேணும்‌ என்று ப்ரார்த்திக்கிறார் –

—

சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத்
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம்
–14-

சிரஸி வஹதாம் யத் பாதாம்ப கலா நிதி மௌளிதா –ஓங்கி உலகத்த யுத்தமானது ஸ்ரீ பாத தீர்த்தமான
கங்கையை திருமுடியில் தாங்கும் பரமசிவன் கலா நிதி மௌலியாய் சந்த்ர சேகரனாய் இருக்கிறார் –
ஜயதி வரதாச்சார்யா தீ நாம நந்ய சமாஸ்ரயா -மா முனிகளின் அநந்யார்ஹராய் இருக்கும் வரத குரு
போல்வாருக்கு எல்லாக் கலைகளையும் கற்று அறிந்த தன்மை விளங்குகிறது -வித்வத் சிகாமணிகள் அன்றோ
ஸ ஹி வர முனிஸ் ஸாஷாந் நாராயணஸ் தத ஏவ தத் -மா முனிகளும் ஸாஷாத் நாராயணனே –
பீதகவாடைப் பிரானார் பரம குருவாக வந்து-ஸாஷாத் நாராயணோ தேவ கிருத்வா மர்த்ய மயீம் த நு ம்
மக் நா நுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணி நா-தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா
-(ஸாக்ஷாத்‌ பரமபுருஷன்‌ தன்‌ கருணையாலே (ஆசார்யனாகிற) மகித உருவை எடுத்துக்‌ கொண்டு ஸாஸ்ஸ்த்ரங்களாகிற கைகளாலே (ஸம்ஸாரக்‌ கடலில்‌ மூழ்கியிருக்கும்‌ உலகங்களைக்‌ கை தூக்கி விடுகிறான்‌. ஆகையால்‌ ஸம்ஸாரக்‌ கடலைக்‌ கண்டு பயந்தவன்‌ குருவிடம்‌ பக்தி செய்ய வேண்டும்‌] (ஜயாக்‌ய ஸம்ஹிதை-ஸாண்டில்ய வசநம்‌) என்றும்‌ ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யனாக வந்து சேதநர்களை உஜ்ஜீவிப்பித்தருளுகிறான்‌ என்று சொல்லப்பட்டதி)அதனாலேயே
சரண சரணஸ் சர்வே அப் யுர்வ்யாம் தரந்தி பவார்ணவம் –அவருடைய திருவடி சம்பந்திகள் அனைவரும் சம்சார ஆரணவத்தை எளிதில் கடக்கிறார்கள் –

இதில்‌ அம்மூவருள்ளும முதலாவான்‌ முன்நீர் வண்ணனாய்‌ மூவரில்‌ முன் முதல்வனான ஸ்ரீமந்‌ நாராயணனே ஸாக்ஷாத்‌ மணவாளமாமுநிகள்‌ என்று ௮றுதி யிடுகிறார்‌ . எங்ஙனேயென்னில்‌ – ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையை ஸிரஸ்ஸில்‌ தரிக்கிற ஸிவன்‌ கலாநிதி மெளளியாய்‌ சந்த்ரஸேகரனாய்‌ இருக்கிறார்‌. மாமுநிகளுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத்‌ தலையில்‌ தரிக்கும்‌ வரதநாராயணகுரு முதலானவர்கள்‌ பலரும்‌ கலாநிதி மெளளிகளாக விளங்குகிறார்‌கள்‌ – ஸகல கலைகளையும்‌ களையறக்‌ கற்ற வித்வத்‌-ஸிகாமணிகளாய்‌ விளங்குகிறாரகள்‌ என்ற படி . இவர்களுடைய கலாநிதி மெளளியாம்‌ தன்மை ஸிவனுக்கும்‌ பெற அரிதாயிருக்கும்‌ . மேலும்‌ பூமியில்‌ மணவாளமாமுநிகளுடைய திருவடிகளைச் ஸரணமாகப்‌ பற்றின எல்லாரும்‌ ஸம்ஸார மாகிற கடலைக்‌ கடந்து அக்கரைப் படுகிறார்கள்‌ . ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை முமுஷுவாகப்‌ பற்றின சேதநனும்‌ ஸம்ஸார ஸமுத்ரத்தைக்‌ கடக்கிறான்‌ . ஆகையால்‌ மாமுநிகள்‌ ஸாஷாத்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று அறுதி யிட்டாராயிற்று –

–

ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத்
மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர
–15-ஜலஜ -நிலய -ஏகாந்த -பாட பேதம் –பத்மாசினிக்கு அசாதாரணமான பதி-

ஜலஜ நிலயா காந்தோ அனந்தத் விஜோத்தம சேவித -ஜலஜம் -சங்கம் -எண்ணற்ற உயர்ந்த
ப்ராஹ்மணர்களால் சேவிக்கப்படுபவரும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் தம்மை ஆஸ்ரயிக்க வரும் நல்ல மனம் உடையவர்களுக்கு சங்க சக்ர இலச்சினை ப்ரசாதித்து ஆள் கொள்பவரும்-தாமரை போன்று விளங்கும் திருக்கைகள் என்றுமாம் -நித்யமாகக் கைப்பட்ட நல்ல தர்சனங்களை உடையவர் என்றுமாம் –
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத் மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர –அவர்களது சத்ருக் கூட்ட கர்வங்களை அழிப்பவராயும் உள்ள மா முனிகள்-

ஜலஜ நிலயா காந்தோ –தாமரையாள் –ஜலஜம் -பத்மம் -பெரிய பிராட்டியாருக்கு இடமாகக் கொண்ட
அனந்தத் விஜோத்தம சேவித –ஆதி சேஷன் பக்ஷி ஸ்ரேஷ்டரான திருவடி போல்வாரால் சேவிக்கப் படுபவனும்
ஜலஜ விலஸத் பாணி நித்யம் கரஸ்த ஸூ தர்சன -ஜலஜம் -சங்கம் -எப்பொழுதும் சங்கு சக்கரம் தரித்த
திருக்கைகள் உடையவனாயும்
ஸகல ஸூ மநோ வைரிவ் ராதாவலேப விலோ பக்ருத் மது ரிபு துலா காந்த காந்தோ பயந்த்ரு முநீஸ்வர-தேவர்களின் சத்ருக்களான அசுரர் வர்க்க கர்வங்களை அடக்கி – பெரிய பிராட்டியார் உகப்புக்கு தக்க கைங்கர்ய ஸ்ரீ யை உடையவரும் மது கைடபர்களை அழித்த எம்பெருமானுக்கு சமமாக விளங்குகிறார்

ஜடமான சம்சாரத்தை அழிக்கும் அசாதாரணமான பெரிய ஜீயர் -யதாஜாதரையும் திருத்திப் பணி கொள்ள வல்லவர்

இந்த ஸ்லோகத்திலுள்ள விஸேஷணங்கள்‌ எம்பெருமானுக்கும்‌ மாமுநிகளுக்கும்‌ பொருத்தமாய்‌ அமைக்கப் பட்டிருக்கின்றன -எம்பெருமான்‌ பத்ம நிவாஸிநியான ஸ்ரீக்கு வல்லபன்‌ -திருவநந்தாழ்வான்‌ , பஷி ராஜனான கருடாழ்வான்‌ முதலானவர்களால்‌ ஸேவிக்‌கப்படுபவன்‌ ; ஜலஜமென்று பத்மத்திற்குப்‌ பெயர்‌ , ஸங்கத்திற்கும்‌ ஜலஜமென்று பெயருண்டு. அப்போது இடது கையில்‌ விளங்குகிற ஸங்கத்தை உடையவன்‌ என்று பொருள்‌ – நித்யம்‌ கரஸ்த- ஸுதர்ஸந : எப்போதும்‌ கை கழலா நேமியான்‌-கையிலங்காழி சங்கன்‌ சுடராழி சங்கிருபால்‌ பொலிந்து தோன்ற வலக்கை யாழி யிடக்கைச்‌ சங்க மிவை யுடைமால்‌ வண்ணனை – என்னக் கடவதிறே -தேவ விரோதிகளான ஸகல அஸுரர்‌ குழாத்தின்‌ கர்வத்தை – கொழுப்பை ஒழித்தருளுகிறான் –

மாமுநிகள்‌ பக்ஷத்தில்‌ விஸேஷணங்களை யோஜிக்கிறபடி : – பெரிய பிராட்டியாருடைய திருவுள்ள உகப்புக்கு உரித்தான கைங்கர்ய ஸ்ரீயை உடையவராய்‌ இருப்பதால்‌ பெரிய பிராட்டியாருக்கு இனியவராய்‌ இருப்பவர்‌ – அநந்தரான – அஸங்க்யாதரான ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாலே ஸேவிக்கப் படுபவர்‌ ; தம்மை ஆஸ்ரயிப்பதற்காகக்‌ காத்திருக்கும்‌ முமுஷு சேதநர்களுடைய உஜ்ஜீவநத்துக்கு உறுப்பாக அவர்களுக்குத்‌ திரு விலச்சினை ஸாதிப்பதற்காக ஸுதர்ஸந பாஞ்சஜந்யங்களைத்‌ திருக் கையில்‌ தரிப்பவர்‌ ; அன்றிக்கே ஜலஜவிலஸத்பாணி -தாமரை போன்று விளங்குகின்ற திருக் கைகளை யுடையவர்‌ -நித்யம்‌ கரஸ்த ஸுதர்ஸந : நித்ய மாக கைப்பட்ட நல்ல தர்ஸநார்த்தங்களை உடையவர்‌ -ஸுதர்ஸந ஸப்தம்‌ ஸத் தர்ஸநத்தைச்‌ சொல்லுகிறது . எம்பெருமானார்‌ தர்ஸநமே ஸுதர்ஸநம்‌. அது கைப்பட்டிருப்பவர்‌ . எம்பெருமானார்‌ காட்டி யருளிய அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ தமக்கு விதேயமாக்கிக்‌ கொண்டிருப்பவர என்று பொருள்‌ . அன்றிக்கே இந்த இரண்டு விஸேஷணங்களைக்‌ கொண்டு ஸங்க சக்ர ரேகைகளைத்‌ திருக் கைகளில்‌ உடையவர்‌ என்றும்‌ சொல்லலாம்‌. ஸங்க சக்ர ரேகைகள்‌ மஹா புருஷ லஷணமாக ஸாமுத்ரிகா ஸாஸ்த்ரத்தில்‌ சொல்லப் பட்டிருக்கின்றன
(ஜலஜ-நிலய-ஏகாந்த :
) என்றும்‌ பாடம்‌ காண்கிறது . அப்போதும்‌ எம்பெருமான்‌ பக்ஷத்தில்‌ பத்மாஸிநியான பிராட்டிக்கு அஸாதாரணமான பதி என்று பொருள்‌ . மாமுநிகள்‌ பக்ஷத்தில்‌ (ஜலஜ நிலய ஏகாந்த : ) ஜடமான பிறப்பு முதலான ஸம்ஸாரத்தின்‌ அழிவைச்‌ செய்வதையே அஸாதாரணமாகக்‌ கொண்டவர்‌ – யதாஜாதரையும்‌ திருத்திப்‌ பணி கொள்ள வல்லவர்‌ என்றபடி -தேவர்களுக்கு விரோதிகளான ஸமஸ்த அஸுர-ராக்ஷஸர்களுடைய ஸமூஹத்தின்‌ கர்வத்துக்கு பங்கத்தை (அழிவைப்‌ பண்ணுமவன்‌ எம்பெருமான்‌ ; மாமுநிகளோ த்ரை வித்ய வ்ருத்தரான பெரியோர்களுக்கு விரோதியான ஆஸுர ராக்ஷஸ ப்ரக்ருதிகளின்‌ கர்வத்தை நிரஸிப்பவர்‌. இப் புடைகளில்‌ எம்பெருமானோடு ஒத்த பெருமையை உடையவர்‌ மாமுநிகள்‌ என்கிறார் –

—

மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம்
பத்மா வாஸா ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை
காந்த்யா காந்தம் ச ஜயது மஹா யோகி காந்தோ பயந்தோ
–16-

பத்மா வாஸா -தாமரையாள் -பெரிய பிராட்டியார்
ஷிதிதர ஸூ தா வாக் சஸீ காந்த பூதை -ஹிமவான் புத்ரி சரஸ்வதி சசி தேவி இவர்களின் நாயகர்கள்
மது ஜித -மது சூதனனான நாராயணன்
தநுச் சேதி -சரீரம் அற்ற மன்மதனை அழித்த பரமசிவன்
நாலீக வாஸ -தாமரையில் வசிக்கும் ப்ரம்மா
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் -தேவர்களால் பிரியத்தோடே ஸேவிக்கப் படுகிற இந்திரன்-

மது ஜித தநுச் சேதி நாலீக வாஸ –பிரகாசத்தினால் தேனை வென்ற இனிமையை யுடையதாய் -காம க்ரோதாதிகளை அழிக்க வல்லதாய் –ந அலீகஸ்தம் -பொய் கலவாத இன் மொழிகளால் -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிப்பதாய் விளங்கும்-யத் வாக் ஜாலம்– தெளிவாலும் காந்தியால் மனோஹரமான மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகள்
உத்க்ருதோத் வ்ருத்தா ஸூர ஸூர வரை சாதரம் ஸேவ்ய மாநம் காந்த்யா காந்தம் ச ஜயது -மஹா லஷ்மீ பார்வதி சரஸ்வதி சசி தேவிமார் ஆகியவர்களின் நாயகர்களான தேவ ஸ்ரேஷ்டர்களால் பிரியத்துடன் ஸேவிக்கப் படுகின்ற
உத்க்ருத்த -நிரசிக்கப்பட்ட
உத் வ்ருத்த -துர் மார்க்கஸ்தர்-நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த –
மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள் இவர்கள் உடன் சாம்யம் இத்தாலே என்றபடி
மஹா யோகி காந்தோ பயந்தோ –மஹா யோகியான மணவாள மா முனிகள் எல்லாரையும் விட சிறந்தவராக விளங்கட்டும்-

இது முதல்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளின்‌ பெருமையை பஹுமுகமாகக்‌ காட்டி யருளுகிறார்‌-தெளிவாலும்‌ காந்தியாலும்‌ மநோ ஹரமான எந்த மாமுநிகளுடைய வாக் ஜாலம்‌ (ஸ்ரீஸூக்தி ஸமூஹம்‌) மதுஜித்‌ மதுஸூதநனான நாராயணன்‌ ; நாலீகவாஸ = கமலத்தில்‌ வஸிக்கிற பிரமன்‌ ; அதநுச்சேதி – அநங்கனான மன்மதனைச்‌ சிதைத்த ருத்ரன்‌ ; உத்க்ருத்தோத்‌ வ்ருத்தாஸுர -வ்ருத்ராஸுரனை வஜ்ராயுதத்தால்‌ துண்டித்த இந்த்ரன்‌ இவர்களாகிற தேவ ஸ்ரேஷ்டர்களாலும்‌ ஆதரத்தோடு அநுஸந்திக்கப் படுகிறதோ , அந்த மஹா யோகியான மாமுநிகள்‌ ஸர்வோத்க்ருஷ்டராக விளங்கட்டும்‌! என்கிறார் –

யாவரொரு மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தி ப்ருந்தமானது மலர் மகள்‌ , ஸரஸ்வதி , மலை மகள்‌ , இந்திராணி இவர்களுக்கு முறையே நாயகர்களா யிருக்கிற ஸ்ரீமஹா விஷ்ணு , பிரமன்‌ , ஸிவன்‌ , இந்த்ரன்‌ இவர்களோடு ஸாம்யத்தை அடைந்ததாக இருக்கிறதோ , விலக்ஷண தேஜஸ்ஸால்‌ விளங்குகிற அந்த அழகிய மணவாள மா முநிகள்‌ ஸர்வோத்‌கர்ஷராய்‌ விளங்கட்டும்‌ !

ஸாம்யத்தை நிரூபிக்கிறது மேலே. ஸ்ரீமந் நாராயணன்‌ மதுஜித் மதுவென்னும அஸுரனை வென்றவன்‌ ; மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளோ இனிமையில்‌ தேனையும்‌ வென்றிருக்கின்றன . பிரமன்‌ நாலீக வாஸன்‌ – கமலவாஸி – மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தியும்‌ பொய்யிலாத மணவாள மாமுநியின்‌ புந்தி (ஜ்ஞாநம்‌) அடியாக உதித்ததாகையாலே ந அலீகஸ்தம்‌ – பொய்‌ கலவாத மெய்மொழியாய்‌ இருக்கும்‌ – ஸிவன்‌ அதநுச்சேத்‌ – அநங்கனான காமனை அழித்தவர்‌ ; மாமுநி களுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ காம க்ரோதாதிகளை நிரஸிக்க வல்லவை -உத்க்ருத்த – நிரஸிக்‌ கப்பட்ட, உத்வ்ருத்த – துர் மார்க்கஸ்தர்களான அஸுர ஸமூஹத்தை உடையவனா யிருப்பவன்‌ இந்த்ரன்‌. மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ பாஹ்ய குத்ருஷ்டிகளான ஆஸுர ப்ரக்ருதிகளை நிரஸித்திருக்கும்‌ -நண்ணா வசுரர்‌ நலி வெய்த நல்ல வமரர்‌ பொலி வெய்த என்னும்படி இருக்கும்‌. ஆக இவ் வகைகளால்‌ லக்ஷ்மி , ஸரஸ்வதி , பார்வதி , இந்திராணியான ஈரி இவர்‌ களுக்குப்‌ பதிகளான ஸ்ரீமஹாவிஷ்ணு , பிரமன்‌ , ஸிவன்‌ , இந்த்ரன்‌ ஆகிற தேவர்களுடன்‌ ஸாம்யம்‌ பெற்று விளங்குகிறது மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தி ஜாலம்‌ என்றதாயிற்று –

–

ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம்
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி
–17-

ஹ்ருத்யா யஸ்ய ஸரஸ்வதீ ஸூவி மலா தாபாந சேஷா நபி -எவருடைய ஸ்ரீ ஸூ க்தியானது –
சரஸ்வதி நதி போல் மநோ ஹரமானது –மிகத் தூய்மையானது -ஓன்று விடாமல் எல்லா தாபத்ரயங்களையும் சீக்கிரமாக வேரோடு அழிக்கிறது
த்ராகுந் மூல யதி ஸ்ருதா அபி பவிநாம் ஸூத்திம் விதத்தே பராம் -காதல் கேட்கப்பட்டாலும் சம்சாரிகளுக்கு மேலான ஸூ த்தியை அளிக்கிறது –
பங்க நைதி கதா அபி குத்ர சித் அபி ப்ராப்தா அபி கம்பீ ரதாம்-மிக கம்பீரமானது –
ஸோ அவ்யாந் மா மதி வேல வைபவ நிதி காந்தோ பயந்தா முனி –எவ்விடத்திலும் எப்பொழுதும் பழுது போவது இல்லை —-எல்லையற்ற பெருமைகளுக்கு நிதியான அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்-கம்பீரமான ஆழமான சரஸ்வதி நதியோ சில இடங்களில் பங்கத்தை -அலை எறிதலை -அடையும்
மா முனிகளின் ஸ்ரீ ஸூ க்திகளோ பங்கத்தை -பரிபவத்தை ஒரு போதும் ஓர் இடத்திலும் அடைவது இல்லையே ஆகவே உத்க்ருஷ்டமானது

இனி மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கு புண்ய நதிகளைக்‌ காட்டிலும்‌ ஏற்றம்‌ நிரூபிக்கப்படுகிறது . இதில்‌ ஸரஸ்வதி நதியைக்‌ காட்டிலும்‌ ஏற்றம்‌ தோற்றப்‌ பேசப்படுகிறது . ஸரஸ்வதீ ஸப்தம்‌ ஸரஸ்வதி நதிக்கும்‌ ஸ்ரீஸூக்திகளுக்கும்‌ வாசகமாகக்‌ கடவது . மிகவும்‌ நிர் மலமான எந்த மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ ஹ்ருத்யா – மநோ ஹரமாய்‌ – ஹ்ருதயத்தில்‌ தரித்து அநுஸந்திக்கக் கடவதாய்‌ இருக்கின்றன . ஸாம்ஸாரிக-தாபங்கள்‌ அனைத்தையும்‌ சீக்கிரத்தில்‌ அடியோடு போக்கடிக்கின்றன . செவியால்‌ கேட்கப்பட்ட மாத்ரத்தில்‌ ஸம்ஸாரிகளுக்கு மேலான ஸூத்தியை (அதாவது ஸ்வரூப விளக்கத்தை)ப்‌ பண்‌ணுகின்றன . இவை மிகவும்‌ கம்பீரமானவை. ஓரிடத்திலும்‌ ஒரு காலத்திலும்‌ பங்கத்தை அடைவதில்லை இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்தி வைபவத்தை யுடைய மாமுநிகள்‌ அடியேனைக்‌ காப்பாற்றட்டும்‌ ! கம்பீரமான (மிக ஆழமாக வுள்ள ) ஸரஸ்வதி நதி சிலவிடங்களில்‌ பங்கத்தை (அலை யெறிதலை) அடைகிறது . இவருடைய ஸரஸ்வதீ – ஸ்ரீஸூக்திகளோ பங்கத்தை – பரிபவத்தை – ஒரு போதும்‌ ஓரிடத்திலும்‌ அடைவ தில்லை. ஆகவே இவை ஸரஸ்வதி நதியிலும்‌ உயர்ந்தவை என்கிறார் –

ஸாம்ஸாரிக-தாபங்கள்‌ – தாப த்ரயம்‌ ஸாம்ஸாரிக-தாபங்களை ஸ்ரீபராஸர பகவான்‌ மூன்று வகைகளாகத்‌ தொகுத்தளிக்கிறார்‌ இவை தாப த்ரயம்‌ எனப்படுகின்றன. தாப த்ரயம்‌ – ப்ரக்ருதி ஸம்பந்தமடியாக வரும்‌ ஆத்‌யாத்மிகம்‌ , -ஆதி,பெ,ளதிகம்‌ ஆதி, தைவிகம்‌ என்னும்‌ மூவகைப்பட்ட துன்பங்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே தாப த்ரயத்தைப்‌ பற்றி ஸ்ரீபராஸர பகவான்‌ மைத்ரேயருக்குச்‌ சொல்வதாக அமைந்திருக்கும்‌ ஸ்லோகங்கள்-

ஆத்யாத் மிகாதி மைத்ரேய ஞாத்வா தாப த்ரயம் புத உத் பன்ன ஞான வைராக்ய ப்ராப் நோத் யாத் யந்திகம் லயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-1-[மைத்ரேயரே ! ஆத்யாத்மிகம்‌ முதலான மூன்று (வகைப்பட்ட) தாபங்களைப்‌ பற்றியும்‌ அறிந்த வித்வானானவன்‌ ஜ்ஞாந-வைராக்யங்கள்‌ உண்டாகப்‌ பெற்றவனாய்‌ மோக்ஷமடைகிறான் -)ஆத்யாத்மிக அபி த்வி வித சாரீரோ மாநஸஸ் ததா சாரீரோ பஹு பிர் பேதைர் பித்யதே ஸ்ரூயதாம் ச ச -6-5-2-(ஆத்‌ யாத்மிகமானது – ஸரீரத்தில்‌ உண்டாவது (வ்யாதி-உடல்‌ நோய்‌) என்றும்‌ மனத்தில்‌ உண்டாவது (ஆதி, – மன நோய்‌) என்றும்‌ இருவகைப்படும்‌-ஸரீரத்தில்‌ உண்டாகும்‌ வ்யாதி யானது பல பிரிவுகளை உடையது. அதைக்‌ கேட்பீராக)-ஸிரோ ரோக பிரதிஸ்யாய ஜ்வர ஸூல பகந்தரை குல் மார்சஸ் ஸ்வயது ஸ்வாஸ் சர்ச்ச்யாதி பிர் அநேகதா -6-5-3- தத் அஷி ரோகாதி சார குஷ்ட அங்கா மய ஸம் ஜ்ஜிதை பித்யதே தேஹஜஸ் தாபோ மாநஸம் ஸ்ரோதும் அர்ஹஸி -6-5-4-[தலைவலி , ப்ரதிஸ்யாயம்‌ ( பீநஸம்‌) ஜ்வரம்‌ , ஸூலம்‌ , படகடிந்தரம்‌ , குதல்மார்ஸம்‌ , ஸ்வயது (ரோபம்‌) , ஸ்வாயச்சர்த்தி, முதலான பலவகைப்‌ பட்டது. அப்படியே கண் நோய்‌ குஷ்டம்‌ , அங்க வ்யாதி , என்னும்‌ பல பெயர்களுடன்‌ வ்யாதி யானது வேறுபடுகிறது)காம க்ரோத பய த்வேஷ லோப மோஹ விஷாத ஜ சோக அஸூய அவமான அர்ஷ்யா மாத்சர்யதி மய ஸ் ததா –6-5-5- மானஸோபி த்விஜ ஸ்ரேஷ்ட தாபோ பவதி நைகதா இத்யேவ மாதி பிர் பேதைஸ் தாபோ ஹ்யாத் யாத்மிக ஸ்ம்ருத –6-5-6-[காமம்‌-கோபம்‌-பயம்‌-த்வேஷம்‌-பேராசை-துன்பம்‌ ஆகியவற்றால்‌ உண்டாகும்‌ கவலை , அஸூயை , அவமானம்‌ , பொறாமை , மாத்ஸர்யம்‌ முதலானவைகளாக மனஸ்ஸில்‌ உண்டாகும்‌ தாபங்களும்‌ பலபடிப் பட்டிருக்கின்றன. ஆத்யாத்மிக தாபமானது இப்படிப்பட்ட பேதங்களை உடையதாகச்‌ சொல்லப்படுகிறது )பஸூ பக்ஷி மநுஷ்யாத்யை பிசாசா அரக ராஸசை-ஸரீ ஸ் ருபாத் யைஸ் ச ந்ரூணாம் ஜாயதே ச ஆதி பவ்திக –6-5-7-(ப்ராணிகள்‌ , பக்ஷிகள்‌ , மநுஷ்யர்கள்‌ முதலியவற்றாலும்‌, பிஸாசம்‌ , பாம்புகள்‌ , ராக்ஷஸர்கள்‌ முதலியவற்றாலும்‌ ஊர்வன முதலியவற்றாலும்‌ மனிதர்‌ களுக்கு ஆதி பெளதிகமான தாபம்‌ உண்டாகிறது)-ஸீதவா தோஷ்ண வர்ஷாம்பு வைத் யுதாதி ஸமுத் பவ
தாபோ த்விஜ வர ஸ்ரேஷ்டை கத்யதே ச ஆதி தைவிக
–6-5-8-(குளிர்‌ , வெப்பம்‌ , காற்று , மழை , ஜலம்‌ , மின்னல்‌ முதலான வற்றால்‌ உண்டாகும்‌ தாபம்‌ ஆதி தைவிகம்‌ என்று ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களால்‌ சொல்லப்‌ படுகிறது)

இந்த ஸ்லோகத்திலே மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ ஒன்றுவிடாமல்‌ எல்லா ஆத்யாத்மிக ஆதிபெளதிக ஆதிதைவிக தாபங்களையும்‌ சீக்கிரமாக வேரோடு அழிக்கின்றன என்றும்‌ மேலான முத்தியை அளிக்கின்றன என்‌றும்‌ அருளிச் செய்துள்ளார்‌ அண்ணன்‌. ஸம்ஸார தாபங்கள்‌ அழிவது * அநிஷ்ட நிவ்ருத்தி * என்றும்‌ மேலான முத்தி என்பது * இஷ்டப்ராப்தி * என்றும்‌ வழங்கப்படுகின்றன. ஸ்வரூப விளக்கம்‌ பெறுவது தான்‌ ஆத்மாவுக்குண்டான மேலான ஸூத்தி. ஸம்ஸார தஸையில்‌ அவித்யாதி தோஷங்கள்‌ ஆத்ம-ஸ்வரூபத்தை விளங்கப்‌ பண்ணுவதில்லை. மோக்ஷ தஸையில்‌ ஆத்மா ஸ்வரூபத்தை மறைக்கும்‌ அவித்யாதி தோஷங்கள்‌ நீங்கப்‌ பெற்று ஜீவாத்மா தன்‌ ஸ்வரூப விளக்கம்‌ பெற்று ப்ரகாஸிக்கிறான் –ய ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக
விஜிகத்ச அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
-சாந்தோக்யம் –8-7-1-(இந்த ஜீவாத்மா பாபமற்றவன்‌ ; கிழத்தனம்‌ அற்றவன்‌ ; மரணமற்றவன்‌ ; வருத்தமற்றவன்‌ ; பசியற்றவன்‌ ; தாகமற்றவன்‌ ; தடையற்ற விருப்பங்களை உடையவன்‌ ; வீணாகாத ஸங்கல்பங்களை உடையவன்‌ ) என்னும்‌ ஸ்ருதியின்படி நிர்மலமான ஆத்ம ஸ்வரூபம்‌ விளங்குவது பரமபதத்திலே. இதை ஸ்வரூப ஆவிர்ப்பாவம்‌ என்பர்‌. இது தான்‌ இந்த இடத்திலே * பராம்‌ ஸூத்திம்‌ * என்னும்‌ பதத்தால்‌ குறிக்கப்படுகிறது –

அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்தி இரண்டிற்கும்‌ பகவான்‌ ஒருவனே காரணமாவான்‌ என்பது ஸாஸ்த்ர ஸித்தமாய்‌ இருக்க , பகவான்‌ ஒருவனுக்கே உண்டான இந்தப்‌ பெருமை பிராட்டிக்‌கும்‌ கூடக்‌ கிடையாது என்னும்‌ உண்மையும்‌ ஸாஸ்த்ர ஸித்தமாய்‌ இருக்க , இந்த ஸ்லோகத்‌திலே இந்தப்‌ பெருமையானது மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கு சொல்லப்படுகிறதே ! இது ஸாஸ்த்ர விரோதமாகத்‌ தோன்றுகிறதல்லவா? இதற்குப்‌ பரிஹாரமாவது என்ன? இப்படிச்‌ சொல்லுவது பொருந்துமாறு எங்ஙனம் என்னில் –நம்‌ ஸ்வாமி எம்பெருமானாருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு மோக்ஷ ப்ரதத்வமாகிற வைபவம்‌ உண்டு என்பதை வேதாந்தாசார்யர்‌ யதிராஜ ஸப்ததியில்‌ காட்டி யருளுகிறார்‌. மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ நம்‌ ஸ்வாமி எம்பெருமானாருடைய ஸ்ரீஸூக்திகளைப்‌ போன்று அனைத்து ஸாஸ்த்ரங்களின்‌ ஸங்கமமாக விளங்குகின்றன. வேத வேதாந்தங்கள்‌ என்ன , ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்‌ என்ன , பாஞ்சராத்ரமென்ன , ஆழ்வார்களுடைய திவ்ய ஸூக்திகள்‌ என்ன , பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள்‌ என்ன – இவற்றின்‌ ஸாப்த-ரஸம்‌ (சொற்களின்‌ இனிமை) , அர்த்த-ரஸம்‌ (அர்த்தங்களின்‌ சீர்மை) , பாவ-ரஸம்‌ (தாத்பர்ய-விஸேஷம்‌ – உள்நோக்கு) சிறிதும்‌ குன்றாமல்‌ இவற்றை உள்ளடக்கியும்‌ இவற்றின்‌ ஸங்கமமாகவும்‌ விளங்குபவை மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌. இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்திகளை நம்‌ ஸ்வாமி எம்பெருமானாரைப்‌ போன்று அவருடைய புநராவதார பூதரான மாமுநிகளாளன்றோ அருளிச் செய்ய முடியும்‌ ! ஸாஸ்த்ரத்தை பகவானாக ஸாஸ்த்ரமே கூறுகிறது. பகவானே ஸப்த-ரூபியாக ஸாஸ்த்ரத்தில்‌ விளங்குகிறான்‌. மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ ஸாஸ்த்ர பரமாக இருப்பதால்‌ இவற்றிலும்‌ பகவான்‌ ஸாப்த ரூபியாய்‌ எழுந்தருளி இருக்கிறான்‌ என்று கொள்ளக்‌ குறை யில்லை. இப்படி மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுடன்‌ அநந்யத்வம்‌ தோற்ற பகவான்‌ விளங்குகிறான்‌ என்பதால்‌ பகவானுக்குண்டான பெருமையை மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கும்‌ கொள்வது பொருத்தமுடையதே !

அன்றிக்கே மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கு பகவானுடன்‌ உள்ள அத்யந்த ஸம்பந்தத்தைப்‌ பற்றியும்‌ இவற்றுக்கும்‌ பகவானுக்கும்‌ அநந்யத்வம்‌ கொள்ளலாம்‌. எப்படி பகவான்‌ ஸ்ரீக்ருஷ்‌ணன்‌ யமுநா நதியில்‌ குடைந்து நீராடி விளையாடி இன்புறுகிறானோ , அப்படியே மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்தி ப்ரவாஹத்திலும்‌ குடைந்து நீராடி மகிழ்ந்து வர்த்திக்கிறான்‌ என்பதை அண்ணாவே மேலே அருளிச் செய்கிறார்‌. இப்படி மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கு பகவானுடன்‌ உண்டான அத்யந்த ஸம்பந்தத்தைப்‌ பற்றி அவனுக்குண்டான பெருமையை இவற்றுக்கும்‌ அருளிச் செய்‌கிறார்‌ அண்ணன்‌ என்றும்‌ நாம்‌ கொள்ளலாம்‌. இனி இந்த இடத்திலே நாம்‌ த்ருஷ்டாந்த பரமாக அறிய வேண்டிய இரண்டு விஷயங்களைக்‌ காண்போம்‌.
மாதா பிதா ப்‌ராதா நிவாஸ : ஸரணம்‌ ஸுஹ்ருத்‌, கதிர்‌ நாராயண : (ஸுபாலோபநிஷத்‌ 6) (நாராயணனே தாயாகவும்‌ , தந்தையாகவும்‌ , உடன்பிறந்தவனாகவும்‌, தங்குமிடமாகவும்‌ , மோக்ஷோபாயமாகவும்‌ , நண்பனாகவும்‌ , மோக்ஷத்தில்‌ அடையப்படு பவனாகவும்‌ இருப்பவன்‌ ) என்றும்‌ ,
பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌ | ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌ருஹாணி ச || ஸர்வ த,ர்மாம்ஸ் ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌ | லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே அவ்ரஜம்‌ விபோ || (விஹகேஸ்வர ஸம்ஹிதை) (பகவானே ! தந்தையையும்‌ , தாயையும்‌ , மனைவியையும்‌ , பிள்ளைகளையும்‌ , உறவினர்களையும்‌ , நண்பர்களையும்‌ , ஆசார்யர்களையும்‌ , ரத்நங்களையும்‌ , தந தாந்யங்களையும்‌ , வயல்களையும்‌ , வீடுகளையும்‌ , எல்லா உபாயங்களையும்‌ , கைவல்யம்‌ உள்ளிட்ட எல்லா ப்ராப்யங்களையும்‌ வாஸனையோடு விட்டு , திருவுலகளந்த உன்னுடைய திருவடிகளை ஸரணமடைகிறேன்‌ ) என்றும்‌ உள்ள ஸாஸ்த்ர வசநங்கள்‌ பகவான்‌ நமக்கு இயற்கையாகவே எல்லா வித உறவாகவும்‌ இருக்கிறான்‌ என்னும்‌ உண்மையை எடுத்துரைக்கின்றன.
-ப்‌,ராதா பர்த்தா ச பந்து ச பிதா மம ராக வ: என்று இளைய பெருமாளும்‌ பெருமாளே தமக்கு ப்ராதாவும்‌ , ஸ்வாமியும்‌ , பந்துவும்‌ , தகப்‌பனும்‌ ஆவார்‌ என்று ஸுமந்த்ரன்‌ மூலமாக தஸரதனுக்குச்‌ சொல்லி யனுப்பி இந்த அர்த்தத்தை அநுஷ்டித்துக்‌ காண்பித்தார்‌. ஆழ்வார்களில்‌ தலைவரான நம்மாழ்வாரும்‌ –சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ்செல்வமும்‌ நன் மக்களும்‌ மேலாத்‌ தாய் தந்தையும்‌ அவரே யினி யாவாரே (திருவாய்மொழி 5-1-8) என்று அருளிச் செய்துள்ளார்‌-எம்பிரானெந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ எனக்கரசென்னுடை வாணாள்‌ –-எம்‌ அண்ணல்‌ (பெரியதிருமொழி 1-1-6) என்று திருமங்கையாழ்வாரும்‌ அருளிச் செய்துள்ளார் -ஸாஸ்த்ர ரீதியிலான இந்த அர்த்த விஸேஷத்தை பரமாசார்யரான ஸ்ரீஆளவந்தார்‌ நம்மாழ்வார்‌ பக்கலில்‌ அநுபவிக்கிறார்‌-மாதா பிதா யுவதயஸ்‌ தநயா விபூதி:ஸர்வம்‌ யதேவ நியமேந மதந்வயாநாம்‌ | ஆத்‌யஸ்ய ந: குலபதேர்‌ வகுளாபிராமம்‌-ஸ்ரீமத்‌, ததங்க்‌ரியுக,ளம்‌ ப்ரணமாமி மூர்த்‌நா || என்று ஸ்ரீஆளவந்தார்‌ அருளிச் செய்துள்ளபடி ப்ரபந்ந ஜந கூடஸ்தராகவும்‌ நமக்கு எல்லா வித உறவாகவும்‌ இருப்பவர்‌ நம்மாழ்வார்‌. அவரது திருவடி ஸம்பந்தமும்‌ , அவர் தம்‌ திறத்தில்‌ அவரது ஸம்பந்தமடியாக ஸித்திக்கும்‌ கைங்கர்யச்‌ செல்வமுமே நமக்குப்‌ பரம புருஷார்த்த மாகும்‌. இந்த ஸ்லோக வ்யாக்யாநத்தில்‌ ஸேஷித்வ ப்ரதிபத்திக்கு விஷய பூதர்‌ நம்மாழ்வார்‌ என்று ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்தை ஸங்க்ரஹித்தார்‌

ஸ்ரீமத்பகவத்கீதையிலே பகவான்‌ பதினெட்டு அத்யாயங்களில்‌ பூர்வபக்ஷ விசாரம்‌ செய்து (அதாவது கர்ம, ஜ்ஞாந , பக்தி யோகங்களை விசாரித்து) பதினெட்டாவது அத்யாயம்‌ அறுபத்‌ தாறாவது ஸ்லோகத்திலே தனது ஸித்தாந்தத்தை அருளிச்‌ செய்திருக்கிறான்‌. ஆக பகவத்கீதை யிலே சரம ஸ்லோகத்துக்கு முந்தியவை எல்லாம்‌ பூர்வ பக்ஷம்‌ என்றும்‌, சரம ஸ்லோகம்‌ ஸித்தாந்தம்‌ என்றும்‌ அமைந்துள்ளன. ஆண்டாள்‌ இதை – வார்த்தை – பெரு வார்த்தை மெய்ம்மைப்‌ பெரு வார்த்தை என்று கொண்டாடுகிறாள்‌. ஸித்தாந்த பரிபாலநம்‌ பண்ணுவது சரம ஸ்லோகம்‌. சரமமான உபாயத்தைக்‌ காட்டுவதால்‌ சரம ஸ்லோகம்‌-இது ஸாஸ்த்ர ரீதியிலானது. ஆனால்‌ ஸம்ப்ரதாயத்திலே நமதாசார்யர்கள்‌ சரமோபாயமாகக்‌ காட்டித் தருவது ஸ்ரீராமாநுஜ சரணார விந்த ஸம்பந்தத்தைத் தான்‌. ஸ்ரீராமாநுஜரே நமக்குப்‌ பரமோபாயம்‌. பகவானுக்கு அச்சுதன்‌ என்று ஒரு திருநாமம்‌. அச்சுதன்‌ என்பதற்கு தன்னை ஆஸ்ரயித்தவர்களை நழுவ விடாதவன்‌ என்று அர்த்தம்‌. இப்படிப்‌ பேர்‌ பெற்ற அவன் கூடச்‌ சிற்சில ஸமயங்களில்‌ சேதநனை நழுவ விடுகிறான்‌. ஆனால்‌ நம்‌ ஸ்வாமி எம்பெருமானாருடைய வைபவம்‌ இப்படியன்று. இவர்‌ அச்சுதத்வ பூர்த்தி படைத்தவர்‌. இவர்‌ யாரையும்‌ நழுவ விடுவதில்லை. இது தான்‌ ஸம்ப்ரதாய ஸாரம்‌. நம் போல்வார்க்கு வாழ்ச்சி ஏற்பட வேண்டுமானால்‌ அது ஸ்வாமி க்ருபை யடியாகத் தான்‌ ஏற்பட வேண்டும்‌ என்பது ஸத் ஸம்ப்ரதாய ஸாரார்த்தம்‌-இப்படி பகவானைப்‌ பற்றிய சீரிய ஸாஸ்த்ராத்தத்தை ஸ்ரீஆளவந்தார்‌ நம்மாழ்வார்‌ பக்கலிலே அநுஷ்டித்ததைப்‌ போலவும்‌ , அவனைப்‌ பற்றிய மற்றொரு உண்மையை நமதாசார்யர்கள்‌ நம்‌ ஸ்வாமி எம்பெருமானார்‌ விஷயத்தில்‌ அநுபவித்ததைப்‌ போலவும்‌ , அவனுக்குண்டான தொரு மற்றொரு தனிப் பெருமையை இங்கே அண்ணன்‌ மாமுநிகளுடைய திவ்ய ஸூக்திகள்‌ விஷயத்தில்‌ அநுஸந்திக்கிறார்‌ என்பதை நாம்‌ அறியலாம் –

—

ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம்
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர
-18-

ஸமிந்தே யத் ஸூ க்திஸ் ஸகல ஸூ மநோ மௌளி வித்ருதா -எவருடைய ஸ்ரீ ஸூக்திகள் எல்லா
நல்லார்களுடையவும் -தேவர்களுடையவும் சிரஸ்ஸால் தரிக்கப் பட்டு பிரகாசிக்கின்றனவோ
சிவத்வம் ஸர்வேஷாம் அபி விதததீ ஸ்வாந் வயவதாம் -தம்முடைய சொற்களின் பொருள் அறிந்தவர்கள் அனைவருக்கும் தூய்மையான -மங்களமான தன்மையை -அளித்துக் கொண்டு
விதோ ரத்யா ஸன்நா நிரவதிக பூர்த்யா விலசத-இதுக்கு மேல் எல்லை என்னும் படியான பூர்ணமான
தன்மையினால் சந்திரனை விட பிரகாசிக்கின்றதால்
ஸதா கங்கா உத்துங்கா ஜயதி ச முனிஸ் ஸூந்தர வர –எப்பொழுதும் கங்கையைக் காட்டிலும்
மேன்மை பெற்றவராக –ஸர்வ உத்க்ருஷ்டராய் -மணவாள மா முனிகள் விளங்குகிறார் –

இந்த ஸ்லோகத்தில்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ கங்கையைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தவை என்பது நிரூபிக்கப்படுகிறது . கங்கையானது ஒரு தேவனால்‌ ஸிரஸ்ஸில்‌ தரிக்கப்பட்டு அவனொருவனுக்கே ஸிவத்வத்தைக்‌ கொடுக்கிறது ; கங்கை கலா மாத்ரமான சந்த்ரனுக்கே ஸமீபத்தில்‌ இருக்கிறது . மாமுநிகளுடைய ஸ்ரீ ஸூக்திகளாகிற கங்கையோ பூர்ண சந்த்ரனுக்கு அதி ஸமீபத்தில்‌ இருக்கிறது . அதாவது பூர்ண கலையோடு கூடின பூர்ண சந்த்ரனைப்‌ போன்று குளிர்ந்த ப்ரகாரத்தை உண்டு பண்ணுகிறது என்றபடி-ஸுமந : என்கிற ஸப்தம்‌ தேவரையும்‌ வித்வானையும்‌ குறிக்கும்‌ . மாமுநிகளின்‌ ஸ்ரீஸூக்தியானது ஸகல வித்வான்களாலும்‌ ஸிரஸால்‌ தரிக்கப்படுகிறது -ஸைத்ய மார்தவ ப்ரகாஸ குண யோகத்தாலே எல்லாராலும்‌ ஸ்லாகிக்கப்படுகிறது . மேலும்‌ தன்னோடு ஸம்பந்தம்‌ உடைய எல்லாருக்கும்‌ ஸிவத்வத்தை – மங்களத்தைக்‌ கொடுக்கக் கடவதாய்‌ இருக்கிறது. ஆகையால்‌ கங்கையைக்‌ காட்டிலும்‌ மேலானது . இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்தி வைபவத்தை உடைய மாமுநிகள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்‌ விளங்குகிறார்‌ என்றபடி –

—

ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே
வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம் தாவதா ஸ்யாத ஸமா
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா
–19-

ஸூர்ய ஆனந்த விதாயிநீதி யமுனா காந்தோ பயந்துர் முநே வாணீவ வ்யவஹார பாக் பவது சாகிம்
தாவதா ஸ்யாத ஸமா
-ஸூர்யனுடைய மகளான யமுனா நதி ஸூர்யனுக்கு ஆனந்தம் கொடுப்பது போல் என்பதால் நித்ய ஸூரிகளுக்கு ஆனந்தம் அளிக்கும் மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகளைப் போல் வ்யவஹரிக்கத் தக்கதாக ஆகட்டும்-இவ்வளவாலே அந்த நதி இவற்றுக்கு சமமானதாக ஆகக் கூடுமோ
ஸூத் தேயம் ந ஹி சா ஸ்வகம் ஸ்ரித வதாம் தாபா ந சேஷா நியம -இவை பரி ஸூ த்தமானவை –
ஆஸ்ரிதர்களுடைய அனைத்துத் தானங்களையும் போக்கி
ஸர்வேஷாம் வி நிவார்ய கர்து மமிதம் ஸ்ரேயஸ் ஷமா நைவ ஸா –அபரிமிதமான ஆத்ம நன்மையை அடைவிக்கும்-இதற்கு அந்த தூய பெரு நீர் யமுனை நதி கூட சக்தி உடையவள் அல்லவே-

இந்த ஸ்லோகத்தில மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ யமுனையைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தவை என்பது நிரூபிக்கப்படுகிறது. என்றது ஸ்லிஷ்ட ப்ரயோகம்‌ . யமுனை ஸூர்யனுடைய புத்ரி யாகையால்‌ அவனுக்கு ஆநந்தத்தைக்‌ கொடுக்கிறது . மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளோ ஸூரிகளுக்கு அதாவது – விலக்ஷண ஜ்ஞாநத்தை உடைய வித்வான்‌௧ளான நித்ய முக்தர்களுக்கு ஆநந்தத்தை உண்டு பண்ணுகின்றன. மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ போலே ஸூர்யாநந்த விதாயிநீ என்று யமுனையும்‌ வ்யவஹரிக்கப்படட்டும்‌ -மணவாளமாமுநி களுடைய ஸ்ரீஸூக்திகள்‌ பரிஸூத்தமானவை என்பதைப்‌ போன்று யமுனையும்‌ தூய்மை யானது.- தூயபெரு நீர் யமுனை (திருப்பாவை 5) என்கிறாள்‌ ஆண்டாள்‌. இவ் விடத்திலே யமுனைக் குண்டான தூய்மையைப்‌ பலவாறாக நிரூபிக்கிறார்கள்‌ நமதாசார்யர்கள்‌, யமுனையை விரஜா நதிக்கு ஸமமாகவே அருளிச் செய்கிறார்கள்‌ நமதாசார்யர்கள்‌. இருப்பினும்‌ அது மாமுநி களுடைய ஸ்ரீஸூக்திகளுக்கு ஸமமாக ஆக மாட்டாது –மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ விஸூத்த மநஸ்ஸை உடைய ஸிஷ்டர்களாலே ஸேவிக்கப் படுகின்றன. மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ இவற்றை ஸேவிக்கும்‌ எல்லாருடைய ஸகல தாபங்களையும்‌ போக்கடித்து அவர்களுக்கு அளவு கடந்த ஸ்ரேயஸ்ஸை மோக்ஷ பர்யந்தமாக அடைவிக்கின்றன. யமுனைக்கு இந்த வைபவம்‌ இல்லை என்பதால்‌ அதைக்‌ காட்டிலும்‌ இவை உயர்ந்தவை எனத்‌ தட்டில்லை-

—

விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே
வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம்
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம்
நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம்
–20-

விஹரிதி யமுநா யாஸ் ஸ்ரோத ஸீவாதி ஹ்ருத்யே வஸஸி மனசி ச ஸ்ரீ மாதவோ யஸ்ய நித்யம் -யமுனை நதியின் மிக்க மனோஹரமான பிரவாகம் போல் கண்ணபிரான் எப்பொழுதும் எல்லாருடைய உள்ளத்திலும் ஸ்ரீ ஸூ க்திகளிலும் விளையாடுகிறானோ -இவையும் கிரீடா ஸ்தானமாகவே இருக்குமே
நிருபம மஹி மாநம் யோகிநம் தம் மஹாந்தம் நிரவதி குணை காந்தம் சிந்தய ஸ்வாந்த்ய நித்யம் ஒப்பற்ற மேன்மையை உடையவரும் –எல்லை யற்ற மனோ ஹரமான குணங்களை உடையவரும் மஹாத்மாவுமான மா முனியை மனமே எப்போதும் சிந்தித்து இரு –

மாதவனான ஸ்ரீக்ருஷ்ணன்‌ அதி மநோ ஹரமான யமுனையினுடைய ப்ரவாஹத்தில்‌ போலவே எந்த மாமுநிகளுடைய திருவாக்குகளிலும்‌ திருவுள்ளத்திலும்‌ நித்யமும்‌ க்ரீடிக்கிறானோ ! மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ திருவுள்ளமும்‌ யமுனையைப் போலே ஸ்ரீய : பதிக்கு விளையாடும்‌ ஸ்தாநமாக இருக்கின்றன- உயர்ந்த மஹிமையை உடையவரும்‌ எல்லையற்ற குணங்‌களால்‌ அதி மநோ ஹரராகவும்‌ இருக்கிற மஹாத்மாவான அந்த மாமுநிகளை ஹே! மனமே! நீ நித்யமும்‌ சிந்திக்கக்‌ கடவாய்‌ ! என்கிறார் –

—

க்ருத அவகாஹா ஜனதா யதீய சாரஸ் வதஸ் ரோதஸி துங்க பத்ரா
ஸம் ஸேவ்ய மாநா கவி பிஸ் ஸமிந்தே பாயாத் ஸ ந காந்த வரோ முனீந்திர
–21-

எவருடைய வாக் வர்ஷ ப்ரவாஹத்தில்‌ தீர்த்தமாடின ஸிஷ்ட ஜந ஸமுதாயம்‌ உயர்ந்த நலமுடையதாக வித்வத்‌ ஜநங்களால்‌ ஸேவிக்கப்பட்டு விளங்குகிறதோ அந்த அழகிய மணவாளமாமுநிகள்‌ நம்மை ரக்ஷித்தருள வேணும் –

துங்க பத்ரை -உயர்ந்த நன்மை -சஞ்சன ஸமூஹமும் -துங்க பத்ர நதிக்கு சமானம் – நதியின் பக்ஷத்தில் கவி -நீர்ப் பறவை ஜலசர பஷிகளால் ஸேவிக்கப் படுகிறது என்று பொருளாகக் கடவது –எவருடைய உபந்யாஸ ஸ்ரீஸூக்தி ப்ரவாஹத்தில்‌ மூழ்கி தீரத்தாமாடின ஸிஷ்டஜந ஸமூஹமானது துங்கபத்ரையாய்‌ – உயர்ந்த நன்மை – நலமுடையதாய்‌ வித்வஜ் ஜநங்களால்‌ ஸேவிக்கப்பட்டு விளங்குகிறதோ – அந்த அழகியமணவாளமாமுநிகள்‌ நம்மை ரஷித்தருள வேணும்‌! என்று பொருள்‌ . துங்கபத்ரா என்று நதி விஸேஷத்திற்குப்‌ பெயர்‌. மாமுநி களுடைய ஸ்ரீஸூக்திகளைக்‌ கேட்டு அநுபவிக்கும்‌ ஸஜ்‌ ஜந ஸமூஹமானது துங்கபத்ரை நதிக்கு ஸமாநமாய்‌ விளங்குகிறது என்றும்‌ பொருள்படுகிறது.

—

யத் வாணீம் மதுரா மவாப்ய ஸூதி யஸ் சாகேத தாமாத் யஜஸ்
மாயா சங்க விதூ ரகாஸ் ச ஸூத ராம் ஸந்த்யக்த காஸ்யாஸ் ரயா
காஞ்ச்யாதிஷ் வபி நிஸ் ஸ்ப்ருஹாஸ் ச ஸததம் ராமானுஜ ஏக காந்தி ந
ராஜந்தே ச தநோது ஸூ ந்தர வரோ யோகீஸ் வரோ நஸ் ஸூ பம்
–22-

நல்ல ஞானம் உடையவர்கள் -திரு அயோத்யா -ஸ்ரீ மாயாபுரி நகர் -ஸ்ரீ காஸீ -ஸ்ரீ காஞ்சீ -நகரங்களை எல்லாம் விட்டு ஸ்ரீ வடமதுரா நகரை அடைந்து எப்பொழுதும் நம்பி மூத்த பிரானுடைய அனுஜனான ஸ்ரீ கிருஷ்ணன் இடத்தில் மட்டுமே ஈடுபாடு கொண்டு விளங்குகிறார்களோ – அப்படியே நல்ல ஞானம் உடையவர்கள் எவருடைய இனிமையான வாக்கிலேயே ஈடுபட்டவர்களாய் விளங்குகிறார்களோ அப்படிப்பட்ட அழகிய மணவாளர் ஆகிய யோகீஸ்வரர் நமக்கு மங்கலத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –

நல்ல ஞானம் உடையவர்கள் எவருடைய இனிமையான ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டு-சிறந்த மாட மாளிகைகளில் ஆசை அற்றவர்களாய் -மாயையின் சம்பந்தத்தை விட்டு விலகியவர்களாய் –
காசியில் உள்ள தேவதாந்த்ரங்களை விட்டவர்களாய்-பொன் அரை நாண் முதலான ஆபரணங்களில் ஆசை அற்றவர்களாய் எம்பெருமானாரையே ப்ராப்ய ப்ராபகமாய் கொண்டவர்களாய் பிரகாசிக்கின்றார்களோ அப்படிப்பட்ட அழகிய மணவாள யோகீஸ்வரர் நமக்கு மங்களத்தைத் திரு உள்ளம் பற்ற வேணும் –

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாராவதீ சேதி சப்தைதா மோக்ஷ தாயிகா –
மன்னு வட மதுரை
-பகவத் சம்பந்தம் மாறாத ஏற்றம் உண்டே –-மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா யஸ்யாம் ஜாதோ ஜகந்நாத ஸாஷாத் விஷ்ணு ஸநாதன –-கோகுலம் கோவர்த்தனம் பிருந்தாவனம் இவற்றுக்கும் உப லக்ஷணம் –

கங்கை , யமுனை , ஸரஸ்வதி யாகிற புண்ய நதிகளுக்கு ஒப்பாகவும் மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகள்‌ விளங்குகின்றன என்பதை கீழ்‌ ஸ்லோகங்களில்‌ விளக்கி யருளினார்‌ . இதில்‌ வடமதுரை யாகிற புண்ய நகரத்துக்கு ஒப்பாக அவற்றை நிரூபிக்‌கிறார் –

அயோத்‌யா மதுரா மாயா காஸீ காஞ்சீ-அவந்திகா | புரீ த்‌வாரவதீ சேதி ஸப்தைதா மோக்ஷ தாயிகா : || என்று அயோத்யா வட மதுரை காஸி ஹரித்வார்‌ (அல்லது மாயாபூர்‌ என்றும்‌ சொல்வர்‌) காஞ்சீ உஜ்ஜயிநீ முதலான ஏழு நகரங்களை முக்தி தரும்‌ நகரங்களாக முநிகள்‌ போற்றுகிறார்கள்‌ . இவைகளிலும்‌ மதுரைக்கு ஏற்றம்‌ உண்டு. ஸ்ரீவாமந பகவான்‌ தபஸ்‌ செய்த ஸித்தாஸ்ரமம்‌ அமைந்த இடமாகும்‌ இது. ஸ்ரீராமாவதார காலத்தில்‌ யாக ஸம்ரக்ஷணத்தின்‌ பொருட்டு பெருமாளும்‌ இளைய பெருமாளும்‌ விஸ்வாமித்ரருடன்‌ இவ் விடத்துக்கு எழுந்தருளி இருக்கிறார்கள்‌. ராவணனுடைய மைத்துனனான மது என்னும்‌ அஸுரனை அழித்து ஸத்ருக்னாழ்‌வான்‌ இந்த நகரத்தை ராஜ தானியாகக்‌ கொண்டு சில காலம்‌ ராஜ்ய பரிபாலம்‌ செய்தார்‌ என்‌னும்‌ சரித்ரம்‌ உத்தர ஸ்ரீராமாயணத்திலே காட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும்‌ மேலே பகவான்‌ ஸ்ரீகண்ணபிரானாகத்‌ திருவவதரித்துப்‌ பால லீலைகள்‌ செய்தவிடமிறே இது! இந்த மதுரா நகரத்தின்‌ பெருமைகளை நமது ஆசார்யர்கள்‌ மிகவும்‌ வியந்து கொண்டாடிப்‌ பேசியிருக்கிறார்‌கள்‌ , மதுரை என்பது கோகுலம்‌ , கோவர்த்தநம்‌ , ப்ருந்தாவநம்‌ இவற்றுக்கும் உப லக்ஷணம்-
மதுரா நாம நகரீ புண்யாபாபஹரீ ஸூபா |யஸ்யாம்‌ ஜாதோ ஜகந்நாத, : ஸாக்ஷாத்‌ விஷ்ணு : ஸநாதந : ||
[யாதொரு நகரத்தில்‌ உலகங்களுக்கெல்லாம்‌ நாயகனும்‌ அநாதி யானவனுமான ஸாஷாத் விஷ்ணு (க்ருஷ்ணனாய்த்‌) திருவவதாரம்‌ செய்திருக்கிறானோ அப்படிப்பட்ட மதுரை என்னும் நகரம்‌ அவனைத்‌ தருகைக்கு உபாயமாகவும்‌ பாபத்தைப்‌ போக்கடிப்பதாகவும்‌ ஸ்வயம் ப்ராப்ய மாகவும்‌ இருக்கிறது] என்றார்களிறே ! (இந்த ஸ்லோகத்துக்கு நமதாசார்யர்கள்‌ வ்யாக்யாநம்‌ அருளிச் செய்துள்ளனர்‌ – திருப்பாவை – 5) நம்மாழ்வாரும்‌ –
கண்ணனல்லாலில்லை கண்டீர்‌ சரண்‌ அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்‌ திண்ணமா நும்முடைமை உண்டேல்‌ அவனடி சேர்த்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மதாதும்‌ அவனன்றி மற்றில்லையே(9-1-10) என்று அருளிச் செய்துள்ளார்‌ .
இந்த ஸ்லோகத்தில்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளை வடமதுரைக்கு ஸமமாக நிரூபிக்கிறார்‌ . வடமதுரையும்‌ மதுரமானது மாமுநிகளும்‌ ஸ்ரீஸூக்திகளும்‌ மதுரமானவை . நல்ல விவேக புத்தியுள்ள ரஸிக ஸிகாமணிகள்‌ அயோத்யை, மாயாபுர்‌, காஸி , காஞ்சீ , அவந்திகை (உஜ்ஐயிநி) முதலான மற்ற நகரங்களில்‌ விருப்பம்‌ அற்றவர்களாய்‌ ராமாநுஜைகாந்திகளாய்‌ – பலராமனுக்குத்‌ தம்பியான கண்ண பிரானிடத்திலேயே ஏகாந்த பக்தியை உடையவர்களாய்‌ அவனையே எல்லாமாக அத்யவஸித்து விளங்குகிறார்கள்‌ . அதாவது க்ருஷ்ண பக்தியிலேயே திளைத்திருக்கிறார்கள்‌ . அதி மதுரமான மாமுநிகளுடைய ஸ்ரீஸிக்திகளில்‌ ஈடுபட்ட மஹா மதி களான நல்லவர்கள்‌ ஜ்ஞாந வைராக்ய பக்திகளை உடையவர்களாய்‌ , மாட மாளிகைகளையும்‌ விட்டவர்களாய்‌ , அவற்றில்‌ பற்றற்றவர்களாய்‌ , மாயையின்‌ – மாயிக விஷயங்களின்‌ ஸங்கத்‌துக்கு அதி தூரத்தில்‌ இருக்கிறவர்களாய்‌ , காஸி வாஸியான தேவதாந்தரத்தையும்‌ விட்டவர்‌ களாய்‌ , காஞ்சீ – அரை நூல் மாலை முதலான பூஷணங்களிலும்‌ விருப்பம்‌ இல்லாதவர்களாய்‌ – ப்ராப்ய ப்ராபக ஆபாஸங்களை விட்டவர்களாய்‌ அதாவது புருஷார்த்தாந்தரத்திலும்‌ ஸாதநாந்‌ தரத்திலும்‌ அந்வயிக்காதவர்களாய்‌ விளங்குகிறாரகள்‌ என்றபடி -பரமை காந்திகளாய்‌ – எம்பெருமானாரையே ப்ராப்யமாகவும்‌ ப்ராபகமாகவும்‌ அத்யவஸித்து – எம்பெருமானார்‌ திருவடிகளே ஸரணம்‌ என்று யதீந்த்ர ப்ரவணராய்‌ – விளங்கு கிறார்கள்‌ . மாமுநிகள்‌ தம்மை ஆஸ்ரயித்தவர்க்கு தம்மைப் போலே யதீந்த்ரரான நம்‌ ஸ்வாமி எம்பெருமானாரிடத்தில்‌ ப்ராவண்யத்தைப்‌ அநுக்ரஹித்தருளுவர்‌ என்றபடி. யோகி ஸ்ரேஷ்ட ரான அந்த மாமுநிகள்‌ நமக்கு நன்மைகளை அநுக்ரஹிக்க வேணும்‌ என்று ப்ரார்த்திக்கிறார் –

—

யத் வாணீ மப ராஜிதாம் மது ஜிது ல்லா ஸாஸ் பதம் ஸந்ததம்
சேஷ அஹீந பல த்விஜேந்த்ர மஹிதாம் முக்தா வலீ பந்து ராம்
ஸூ த்தஸ் ஸம் ப்ரதிபத்ய ஹ்ருஷ்யதி ஜநோ நோபைதி பாபோத்தர
தஸ்மாத் காந்த வரான் முநேர் அநுப மாத் தைவம் பரம் நாஸ்ரயே
–23-

முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ வைகுண்ட நகரத்தைப் போன்று ஒருவராலும் ஜயிக்கப் படாதவையோ-
மேலும் முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் இடைவிடாது எம்பெருமானுடைய முக மலர்த்திக்குக் காரணமாக இருப்பதையோ-மேலும் முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகளை பாபிஷ்டன் அடைய மாட்டானோ-மேலும்
முத்துப் போன்ற சொற்களால் தொடுக்கப் பட்ட பெருமை வாய்ந்த எந்த மணவாள மா முனிகளுடைய
ஸ்ரீ ஸூக்திகளை அடைந்து ஸ்ரீ ப்ராஹ்மண உத்தமர்கள் ஆனந்தம் அடைகிறார்களோ -அப்படிப்பட்ட ஒப்பற்ற பெருமை வாய்ந்த அழகிய மணவாள மா முனிகளைக் காட்டிலும் மேலான தெய்வத்தை ஏற்க மாட்டேன்-

ஒருவராலும் ஜயிக்கப் படாததும் -எம்பெருமானுக்கு முக உல்லாசதத்தை அளிப்பதாயும் -முக்தர்களின் வரிசையால் மாலை போன்று தோற்றுவதுமான பெருமை வாய்ந்த பரம பதத்தில் ஆதி சேஷன் -குறைவற்ற சேனையை உடைய விஷ்வக் சேனர் -த்விஜேந்த்ரன் -பெரிய திருவடி யானவர்கள்
எப்பொழுதும் ஆனந்தம் அடைகிறார்கள் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளும் அபராஜிதை என்றவாறு –-பாஹ்ய குத்ருஷ்டிகளால் பங்கம் அடையாதவை -எம்பெருமான் முக உல்லாசத்துக்கு உரித்தானவை –-இந்த ஸ்லோகத்தில்‌ மாமுநிகளின்‌ ஸ்ரீஸூக்தியை அபராஜிதையாக நிரூபிக்கிறார்‌ . அபராஜிதா என்று ஸ்ரீவைகுண்டம்‌ எனப்படும்‌ பரமபதத்திற்குத்‌ திருநாமம்‌ , இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட விஸேஷணங்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திற்கும்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளுக்கும்‌ பொருந்‌தும்‌. பரமபதம்‌ ஸ்ரீவைகுண்ட நாதனான எம்பெருமானுக்கு போக பூமியாகும்‌ . மேலும்‌ அது ஆதி ஸேஷன்‌ (திருவநந்தாழ்வான்‌ ) , அஹீநபலன்‌ அஸங்க்யாத = எண்ணற்ற ஸேனையை உடைய ஸேனை முதலியார்‌ , த்விஜேந்த்ரன்‌ – பக்ஷி ராஜனான பெரிய திருவடி இவர்களால்‌ ஸேவ்யமாநமாய்‌ இருக்கிறது . மேலும்‌ முக்த புருஷர்களுடைய பங்க்திகளாலே (கூட்டங்களாலே) சூழப்பட்டு அழகாக விளங்குகிறது . அந்த திவ்ய நகரத்தை ப்ரக்ருதி பந்தத்திலிருந்து விடுபட்டவனே அடைந்து பரப்ரஹ்மாநுபவத்தால்‌ ஆனந்தத்தை அடைகிறான்‌ -பாபோத்தரன்‌ – பாபிஷ்டன்‌ அத்தை அடைய மாட்டான்‌-பாப ராசியை உதறித்‌ தள்ளினவன்‌ என்று பொருள்‌ . அந்த ஸூத்தனே பரமபதத்தை யடைந்து ப்ரஹ்மாநந்தத்தைப்‌ பெறுகிறான்‌ என்றபடி. இதைப் போன்று மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளும்‌ அபராஜிதா – ஒருவராலும்‌ ஜயிக்கப்படாதவை . பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களுடைய துர்‌வாதங்களால்‌ பங்கமடையாதவை . எம்பெருமானுடைய முகோல்லாஸத்துக்கு உரித்தானவை . ஆதி சேஷனுக்குக்‌ குறையாத புத்தி பலமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களான ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்‌ களால்‌ பூஜிக்கப்படுகிறவை . முத்துப் போன்ற நற் சொற்களால்‌ தொடுக்கப்பட்டு மநோ ஹர மாக விளங்குபவை. பாபியானவன்‌ மாமுநிகளுடைய ஸ்ரீஸூக்திகளைக்‌ கேட்கவும்‌ பாக்யம்‌ அற்றவன்‌ . புண்ய ஸாலியாய்‌ ஸூத்தனாய்‌ இருப்பவனே மாமுநிகளுடைய அருளிச் செயலைக்‌ கேட்டு ஆநந்தத்தை அடைகிறான்‌ – இப்படிப்பட்ட வைபவத்தை உடையவராய்‌ ஒப்பில்லாதவரான மாமுநிகளைத் தவிர வேறொரு தெய்வத்தைப்‌ பேணக் கடவேன்‌ அல்லேன்‌ அடியேன்‌ என்கிறார் –

—

யத் வாணீ விரஜா வகாஹந கலா தவ்தாத்மநா மாத்ம நாம்
ப்ரஜ்ஞா தர்ஜித நிர் ஜரேஸ் வர குரு பிரவ்டிம் சமாடவ் கதே
பக்தி ஸ்ரீ சத தீ யதே ஸிக பதா தாரா ஜரீஜ் ரும்ப்யதே
முக்திர்யாதி கரா பசேய பலதாம் ஸோ அவ்யாத் வரோ அஸ்மான் முனிஸ்
–24-

எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள் பரி ஸூத்தமான மனஸ்ஸை உடையவர்களாக ஆகிறார்களோ–மேலும்-எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் சேதனர்கள்
உடைய விசேஷ ஞானமானது தோற்கடிக்கப் பட்ட தேவ குருவான ப்ரஹஸ்பதியின் ஆழ்ந்த ஞானத்தை அளவுபட்டதாகச் செய்கிறதோ–மேலும்-எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால் ஸ்ரீ யபதியான எம்பெருமான் பாகவதர்கள் ஆச்சார்யர்களுடைய திருவடிகளை ஆஸ்ரயமாக உடைய சேதனர்களுடைய பக்தியானது விருத்தி அடைகிறதோ –மேலும்
-எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற விரஜா நதியில் மூழ்குகிறதாகிற திறமையால்
கைக்கு எட்டிய பலமாகிற மோக்ஷத்தை சேதனர்கள் அடைகிறார்களோ அப்படிப்பட்ட வர வர முனியானவர் நம்மை ரக்ஷித்து அருள வேணும்-

எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்
பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுடைய பிரஜ்ஜை -அறிவு புத்தி -யானது எப்பேர் பட்ட பிரௌடியை -சாமர்த்தியத்தை அடைகிறதோ-எந்த புத்தியின் பிரௌடியானது -அறிவின் சிறப்பானது -தேவ குருவான ப்ருஹஸ்பதியின் புத்தி பிரௌடியையும் மிரட்டுகிறதோ-மேலும் -எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால்-பரி ஸூத்த மனஸ் கரான சேதனர்களுக்கு ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் இடத்திலும்-ததீயாரான பாகவதர்கள் இடத்திலும் ஆச்சார்யர்கள் இடத்திலும் உண்டான பக்தி ப்ராவண்யமானது-மேன்மேலும் விருத்தி அடைகிறதோ
-மேலும்-எந்த மா முனிகளுடைய நிர்மலமான ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற விரஜா நதியில் நீராடும் புண்ணியத்தால் அவர்களுக்கு மோக்ஷ பலமும் கிடைக்கிறதோ அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

—

யஸ் சிஷ்யாஸ் திஷ்யடிம்ப ப்ரதிமகு மதி துஸ் தர்கஸம்பர் கஜாத
த்ரயந்த ஸ்வாப ரூபா ப்ரதிம நிரவதி த்வாந்த கல்பாந்த ஸூர்யா
ஸ்ரீ மத் ராமாநுஜார்யோதி தமத மமதா மூர்தய கீர்த்தி மந்த
ஜாக்ரத் யஸ்மை நமஸ் ஸ்தாத் வர வர முநயே அநந்த நிஸ் துல்ய பூம்நே
–25-

எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள் கலி புருஷனின் புத்ர ஸமானரான குத்ருஷ்டிகளுடைய குதர்க்க வாதங்களின் சேர்க்கையால் உண்டான வேதாந்த உறக்கம் போன்ற எல்லை அற்ற அந்தகாரத்துக்கு பிரளய கால ஸூர்யன் போன்று இருப்பவர்கள-நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் அபிமானம் உடையவர்களாக புகழப் படுகிறார்கள்-நம் ஸ்வாமி எம்பெருமானார் வெளியிட்ட மதமான விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்-விழிப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்-எல்லை ஏற்றதும் ஒப்பு இல்லாததுமான சிஷ்ய சம்பத்தை யுடைய நம்முடைய அந்த மணவாள மா முனிகளுக்கு ப்ரணாமங்கள் இருக்கட்டும்

எந்த மா முனிகளுடைய சிஷ்யர்கள் கலி புருஷ புத்ர சமானர்களான-கலி கோலா ஹலமே வடிவு எடுத்த – குத்ருஷ்டிகளின் ஸ்ருதி விருத்தமான -குதர்க்க -விதண்டா வாதம் -சம்பந்தத்தால் உண்டான வேதாந்த மூர்ச்சை யாகிற ஒப்பற்ற காட அந்தகாரத்தை -அடர்ந்த இருளைப் -போக்கடிப்பதில் பிரளய கால ஸூ ர்யனைப் போல் விளங்குகின்றனரோ-திஷ்யன் -கலி புருஷன் -டிம்ப -சிஸூ-ஸ்ரீ ராமானுஜர் வளர்த்து அருளிய விசிஷ்டாத்வைத தர்சனம் -இராமானுஜ தர்சனம் -நிலை நாட்டுவதில்-ஸதா ஜாகரூகராய்-எப்போதும் விழிப்புடன் -இருப்பவர்களாய் இருக்கிறார்களோ-ஒப்பு உயர்வு அற்ற வைபவ சாலியான அந்த மா முனிகளுடைய திருவடிகளுக்கு அடியேன் உடைய பிராணாமம் என்றும் உரித்தாகுக –

மணவாளமா முநிகளுடைய திருவடி ஸம்பந்தமுடைய ஸ்ரீவைஷ்ண வோத்தமரகள்‌ உபய வேதாந்த பரவரத்தகாசார்யரகளாய்‌ எம்‌பெருமானார் தர்ஸநத்தை வளர்த்துக கொண்டு ஸங்கராதி குத்ருஷ்டிகளின்‌ மதங்களை நிரஸித்துக்‌ கொண்டு , ஸிஷ்ய-ப்ரஸிஷ்ய பரம்பரையாக இம் மண்ணுலகத்தில்‌ திகழ்கின்றனர்‌ என்றபடி . குத்ருஷ்டிகளின்‌ குதரக்கங்களால்‌ வேதாந்த ஸாஸ்தரமானது வருத்தப்பட்டு மூர்ச்சை யடைந்து விட்டது . ஆகையால்‌ உலகில்‌ உண்மையான அறிவு போய்‌ அஜ்ஞாந அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான இருள்‌ மேலிட்டது – அந்த விருளை எம்பெருமானார்‌ கருத்தை வளர்த்து வரும்‌ மாமுநிகளுடைய ஸிஷ்யரகள்‌ போக்கடித்து உண்மை யான ஜ்ஞாநத்தை உலகத்தாருக்குப்‌ புகட்டி இவ்வுலகில்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியை மேன்மேலும்‌ வளரத்துக் கொண்டு போருகிறாரகள்‌ !இப்படிப்பட்ட ஸிஷ்யஸம்பத்தை உடைய மாமுநிகளுடைய திருவடிகளில்‌ அடியேன்‌ எப்போதும்‌ தண்டனிடுகிறேன்‌ என்கிறார்‌ .-பாடபேதத்தில் கலிகோலாஹலமே வடிவெடுத்த வர்கள்‌ என்று ப்ரஸித்தரான குமதிகள்‌ என்று பொருளாகக் கடவது –

—

அநி மிஷத நுர் ப்ரஹ்மா நிர்வேத பாவ நிபந்தநம்
பஜதி கில யஸ் ஸ்ரீ மன் மத்ஸ்ய அவதார துலாம் ஹரே
ச ஜயதி ஸதாம் சங்கஸ் ஸுவ்ம்யோ பயந்த்ரு சமாஸ்ரய
தமிஹ ஸததம் சேதஸ் சேவஸ்வ ஸத் குண சேவதிம்
–26-

இமையாத கண்களை யுடைய சரீரகரான நான் முகன் மநோ வேதனை அடைந்ததனால்
ஸ்ரீ மத்ஸ்ய அவதாரத்தோடே சாம்யத்தை அடைகிறார் அல்லவா-எந்த மணவாள மா முனிகளை ஆஸ்ரயமாக உடைய சாதுக்களின் குழாம் மத்ஸ்ய அவதாரத்தோடு சாம்யம் அடைகின்றதோ ஸத் குணங்களுக்கு நிதியான அந்த மா முனிகளை மனமே இங்கு எப்பொழுதும் சேவித்துக் கொண்டே இருப்பாயாக –

இது முதல் பத்து ஸ்லோகங்களால் பக்த வர்க்கங்களின் தசாவதார சாம்யம்-மத்ஸ்ய மூர்த்தி -அநிமிஷ தநு-இமையாத கண்ணை உடையதாய் இருக்கும் –-மத்சயங்களுக்கு கண் திறந்தே இருக்கும் – அடியார்கள் குழாங்களும் -அநிமிஷ தநுவாய் -எப்போதும் விழிப்புடன் இருந்து பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து வேதத்தின் துன்பத்தைப் போக்கடிப்பர்–

பரஹ்மா நைமித்திக ப்ரளயத்தில்‌ தூங்கச்‌ செய்தே அவருடைய முகத்திலிருந்து நான்கு வேதங்களும்‌ நான்கு குழந்தைகளாக வெளியில்‌ வந்து விளையாடிக்‌ கொண்டிருக்கும்‌ போது ஸோமுகன்‌ என்னும்‌ அஸுரன்‌ அந்த வேதங்களை அபஹரித்துக்‌ கொண்டு ப்ரளய ஜலத்தில்‌ மறைந்து விட்டான்‌. ப்ரஹ்மா துயிலெழுந்து தமக்குத்‌ தநமாகவும்‌ கண்ணாகவும்‌ இருக்கும்‌ வேதங்கள்‌ இல்லாமல்‌ துன்பப்பட்டு ஸ்ரீஹரியை த்யாநித்தார்‌. பகவானும்‌ மத்ஸ்யாவதாரம்‌ எடுத்து அந்த அஸுரனைக்‌ கொன்று ப்ரளய ஜலத்தில்‌ மூழ்கி யிருக்கும்‌ நான்கு வேதங்களையும்‌ ப்ரஹ்மாவுக்கு மீட்டுக்‌ கொடுத்து அவருடைய துயரைத்‌ தீர்த்தான்‌ . மத்ஸ்ய மூர்த்தி அநிமிஷ தநு : இமையாத கண்ணை உடைத்தா யிருக்கும்‌. மத்ஸ்யங்களுக்கு கண்‌ திறந்தே இருக்கும்‌ .-அபாரத்தம்‌ பண்ணும்‌ ஆஸுர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளால்‌ வேதத்திற்கு பயமேற்பட மாமுநிகளுடைய அடியார்கள்‌ குழாமும்‌ அதைப்‌ போக்கும்‌ பொருட்டு அநிமிஷ தநுவாய்‌ (எப்போதும்‌ விழிப்புடன்‌ இருந்து) பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸித்து வேதத்தின்‌ துன்பத்தைப்‌ போக்கடிக்கும்‌ . ஆகவே இது மத்ஸ்யாவதாரத்திற்கு ஸமாநமாய்‌ இருக்கும்‌ என்றபடி-

பாடாந்தரமாக ( 26வது ஸ்லோகமாக வேறு ஒரு பாடம்‌ காணப்படுகிறது )
வேத ராஸி மநகம் ஸரோஜ ஜம் பிராபயந் நதி விஷண்ண மாஸ்ரிதம்
மத்ஸ்ய தேவ சத்ருஸோ விபாதி ய தம் பஜேய வர யோகி சேகரம்
–இதில் மா முனிகளுக்கே மத்ஸ்ய சாம்யம்–தன்னை ஆஸ்ரயித்த மிகுந்த துக்கத்தை உடைய தாமரையில் தோன்றிய ப்ரஹ்மாவுக்கு குற்றம் அற்ற வேதங்களை அடைவித்து –அதாவது வேதத்தை இழந்த நாபீ கமல உத்பூதரான ப்ரஹ்மாவுக்கு கொடுத்து அருளிய மத்ஸ்ய மூர்த்தி தம்மை ஆஸ்ரயித்த சேதனனுக்கு தாமரையில் தோன்றிய பொய்கை ஆழ்வார் மூலமாகக் குற்றம் அற்ற திராவிட வேதத்தை அடைவித்து எந்த மா முனிகள் பிரகாசிக்கிறாரோ அந்த சிறந்த யோகிகளுக்குத் தலைவரானவரை பஜிப்பாயாக —

—

பிராப யந்நம் ருத காங் ஷிண அம்ருதம் மந்த ராக பரணே அபி சாதர
திவ்ய கூர்ம சத்ருஸோ யதாஸ்ரித ஸத் குணோ அவது ச மாம் வரோ முனி
–27-

மந்த்ர மலையைத் தாங்குவதில் ஆதாரத்தை உடையவனாய் அம்ருதத்தை விரும்பிய தேவர்களுக்கு அம்ருதத்தை அடைவித்து அவர்கள் இடம் ஆர்வத்தை உடையவன் ஸ்ரீ கூர்மாவதார எம்பெருமான்-எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர்கள் -ஸ்ரீ கூர்மாவதார சாம்யத்தை உடையவர்களாய் மோக்ஷத்தையே விரும்புபவர்கள்-சிறிதே வைராக்யம் உடையவர்களே ஆனாலும் அவர்களை ரக்ஷிப்பதில் ஆர்வம் உடையவர்களாய் அவர்களுக்கும் மோக்ஷத்தை அடைவிக்கும் கல்யாண குணங்களை உடைய அந்த மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –மந்த ராக பரணே அபி சாதர-மந்தராகிறார் -குறைந்த விருப்பம் உடையவர்கள் –அல்ப அநு கூல்யம் உடையவர்கள்-மந்த்ர அக என்று மலை பக்ஷம்-மந்த ராக -இவர்கள் பக்ஷம்-பாட பேதமும் உண்டு -இதில் மா முனிகளையே ஸ்ரீ கூர்மாவதார ஸத்ருசம் என்று சொல்லும் –

ஸ்ரீகூர்மமூரத்தி எம்பெருமான்‌ மந்தரமாகிற மலையை தரிப்பதில்‌ ஆதரத்தை உடையவனாய்‌ அம்ருதத்தை விரும்பிய தேவர்களுக்கு கடலைக் கடைந்து செய்து அம்ருதத்தைக்‌ கொடுத்தருளினான்‌ . அம்ருதமென்று மோக்ஷத்திற்கும்‌ பெயர்‌ . மாமுநிகளை ஆஸ்ரயித்த ஸத் புருஷரகளும்‌ மோக்ஷத்தை விரும்பித்‌ தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோக்ஷ ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறார்கள்‌ மந்த,ராக,பரணே அபி ஸாதர: மந்தராகராகிறார்‌ – குறைந்த விருப்ப முடையவர்கள்‌ –அல்பாநுகூல்யமுடையவர்கள்‌ – அவர்‌ களிடமும்‌ ஆதரத்தை உடையவர்கள்‌ . மந்தர அக – மந்தர மலையென்று கூர்ம பக்ஷத்தில்‌ அரத்தம்‌ – மந்த * ராக என்று இவர்கள்‌ பக்ஷத்தில்‌ அர்த்தம்‌ . இப் புடையில்‌ திவ்ய கூர்மத்துக்கு ஸமாநமானவர்கள்‌ மாமுநிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ – அந்த மாமுநிகள்‌ தம்மை ரக்ஷிக்க வேணும்‌ என்று ப்ரார்த்திக்கிறார் -இந்த ஸ்லோகத்தில்‌ உத்தரார்தத்தில்‌ பாடபேதமுள்ளது. இது மாமுநிகளையே – திவ்ய கூர்ம ஸமாநராக நிரூபிக்கிறது . மாமுநிகளுடைய அடியாரகள்‌ பக்ஷத்தில்‌ பூர்வார்தத்தில்‌ சொல்லப்பட்ட அரத்தமே மாமுநிகள்‌ விஷயத்திலும்‌ வைத்துக் கொள்வது . இந்த பக்ஷத்தில்‌ இரண்டு ஸ்லோகங்கள்‌ மாமுநிகள்‌ விஷயம்‌ . மேல்‌ ஸ்லோகங்கள்‌ மாமுநிகளுடைய அடியார்கள்‌ விஷயங்கள் –

–

ஸுவ்கர்ய வாந் யத் பத பக்தி சாலீ பவாப்தி மக்ந உத்தரண ப்ரவீண
ஆடீ கதே ஹ்யாத் யகிடே ரபி க்யாம் முனிஸ் ச ந பாது வரோ பயந்தா
–28-

எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி மிகுந்த அடியவன் முமுஷு வான ஒரு சேதனனுக்கு
அவன் தன்னை ஸூ லபமாக ஆஸ்ரயிக்கும் படி இருப்பவன் ஆவான்-ஆஸ்ரித ரக்ஷணத்தை சுலபமாகச் செய்யக் கூடியவன் என்றபடி-இத்தால் அவன் சம்சார ஆர்ணவத்தில் மூழ்கி இருப்பவர்களை மேலே உயர்த்தி விடுவதில் வல்லவனான ஸ்ரீ ஆதி வராஹ மூர்த்தியின் பெயரை -சாம்யத்தை அடைகிறான்
இப்படிப்பட்ட சிஷ்ய ஸம்ருத்தியை உடைய மா முனிகள் நம்மை ரஷித்து அருளட்டும் –-ஸுகர்யவான் –ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் பிரளய ஆர்னவ உத்தாரணம்-ஆத்ய கிடி -ஸ்ரீ ஆதி வராஹ நாயனார்–

எம்பெருமான்‌ விஷயத்தில்‌ ஸெளகர்யவான்‌ என்பதற்குப்‌ பன்றியின்‌ தன்மையை உடையவன்‌ என்று அர்த்தமாகக் கடவது – பாசி தூரத்துக்‌ கிடந்த பார் மகட்குப்‌ பண்டொருநாள்‌ மாசுடம்பில்‌ நீர் வாரா மானமிலாப் பன்றியாம்‌ (நா.தி. 1 1-8) என்று நாச்சியார்‌ அருளிச் செய்தபடி , ப்ரளயார்ணவத்தில்‌ மூழ்கிக்‌ கிடந்த பூமியை உத்தரிப்பித்தருளினார்‌ ஸ்ரீ வராஹநாயனார்‌ . இப்புடையில்‌ ஆதிவராஹ ஸாம்யத்தை மாமுநிகளுடைய பக்தன்‌ அடைகிறான்‌ என்று ஸ்லேடையில்‌ நிரூபித்தபடி . கிடி : – வராஹம்‌. ஆத்யகிடி : – ஆதி வராஹம் –

–

ஹிரண்ய ஜித் யத் பத பக்த சாலீ ந்ருஸிம்ஹ பாவம் ப்ரகடீ கருதி
ச மே விதத்தா மது லாநு பாவோ வரோ பயந்தா குசலான் யஜஸ்வரம்
–29-

மாமுனிகளின் திருவடிகளில் பக்தி உடையவர்-ஹிரண்ய ஜித் -பொன்னில் ஆசையை வென்றவரான –
ஹிரண்யனை வென்றதால் ஸ்ரீ நரஸிம்ஹருடைய தன்மையை வெளிப்படுத்து கிறார்களோ – ஒப்பற்ற பிரபாவம் உடைய புருஷ ஸிம்ஹம் என்னும் படியான அந்த மணவாள மா முனிகள் நித்யமான நன்மைகளை -குசலங்களை -அளிக்க வேணும்-மாமுநிகளுடைய திருவடிகளில்‌ பக்தி பூண்ட ஸ்ரீவைஷ்ணவன்‌ ஹிரண்யஜித்‌ ( பொன்னை ஜயித்தவன்‌ – அதாவது பொன்‌ முதலான ஜஸ்வர்யத்தில்‌ ஆசையை வென்றவன்‌ ) என்றபடி . ஸ்ரீந்ருஸிம்ஹ பகவான்‌ ஹிரண்யாஸுரனை ஜயித்தவன்‌ . எம்பெருமான்‌ நரங்கலந்த சிங்க மாகத்‌ தோன்றி ந்ருஸிம்ஹ பாவத்தை வெளிப்படுத்துகிறான்‌ . புருஷ ஸிம்ஹம்‌ என்றபடி ஒப்புயர்வற்ற ப்ரபாவ ஸாலியான மாமுநிகள்‌ எப்போதும்‌ நமக்கு குலங்களை – நன்மைகளை உண்டு பண்ணட்டும்‌ என்கிறார்-

—

பஜதே கில வாமன உப மாம் ஸூ மநோ வைரிபலிஸ் மயம் ஹரந்
ஸூப விக்ரம பூத் யதாஸ்ரித தமுபாஸ வரயோகி சேகரம்
–30-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்தவர் -சாத்விகர்களுடைய பலமுடைய விரோதிகளின்-பலிஷ்டர்களின் –
கர்வத்தை அழித்து ஸ்ரீ வாமன அவதாரத்துக்கு சமமான தன்மையை அடைகிறார்களோ-ஸோபனமாகத் எங்கும் சஞ்சரிப்பவராக –தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –-ஸூபமான த்ரிவிக்ரம அவதாரத்தை உடையவராக ஆனாரோ-அந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகளை உபாஸிக்கிறேன் -பக்தியுடன் சேவிக்கிறேன் –தீர்த்தகரராமின்‌ திரிந்து – என்றும்‌ சொல்லுகிறபடியே ஸூபமான பூ ஸஞ்சாரத்தை உடையவன்‌. ஆகையால்‌ ஒங்கி யுலகளந்த உத்தமனான த்ரிவிக்ரமனுடன்‌ ஒத்தவனாகிறான்‌ – அந்த மாமுநிகளை அடியேன்‌ உபாஸிக்கிறேன்‌ – பக்தியோடு ஸேவிக்கிறேன்‌ –

—

மஹீ பர குத் ருக் பல ஷபண தஷிணவ் ஜோப்ருத
யதங்கரி சமுபாஸ்ரயா பர ஸூ ராம சாதரம்ய கா
ஜெயந்த் யகில பாபபீ மஹித விஷ்ணு தர்மாந் விதா
ச நோ வர வர முனிர் விதரது ஸ்ரீ யம் சந்ததம்
–31-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்தவர்கள் பூமிக்கு பாரமான குத்ருஷ்ட்டி பலத்தை அழிப்பதற்கு சாமர்த்தியம் உடைய தேஜஸ்ஸை உடையராய் எல்லா பாபங்களைச் செய்வதில் பயந்தவர்களாய் மிகவும் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியவர்களாய்-பூமிக்கு பாரமான துஷ்ட ஷத்ரியர்களை அழிப்பதில் வல்லமை யுடைய தேஜஸ்ஸை உடையரான ஸ்ரீ பரசுராமரோடே சமமான தன்மையை உடையவர்களாய் வெற்றி பெறுகிறார்களோ-அந்த ஸ்ரீ மா முனிகள் எப்பொழுதும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை அளித்து அருளட்டும் –இதில் பாட பேதத்தால் -தாம் வென்ற பூமி முழுவதும் காஸ்யபருக்குக் கொடுத்து விட்டு மஹேந்திர மலையில் -அர்ணவ நிவாஸம் கொண்டால் போல்
அடியவர்களும் எம்பெருமானுடைய குணக்கடலில் நித்ய வாஸம் பண்ணி பகவத் குண அனுபவமே நியதமாக பண்ணுவார்கள் –இந்த பாடமே சிறந்ததாகும்‌ . இதனால்‌ பரசுராமரோடு மற்றொரு ஸாம்யமும்‌ வரவரமுநி ப்ருத்யரகளுக்குச்‌ சொல்லப் படுகிறது . பரசு ராமர் – வென்றி மா மழு வேந்திமுன்‌ மண்மிசை மன்னரை மூவேழு கால்‌ கொன்ற தேவன்‌ . அதன்‌ பிறகு ஒரு யாக விமேஷத்தைச்‌ செய்து யாக தக்ஷிணையாக (தாம்‌ ஜயித்துப்‌ பெற்ற பூமி முழுவதையும்‌) காஸ்பருக்குக்‌ கொடுத்து விட்டுப்‌ பிறகு தேவரகள்‌ வஸிக்குமிடமான மஹேந்த்ர மலையில்‌ தவம்‌ புரிந்து வந்தார. இப்படி அவர் தம்முடைய சரித்ரத்தைத்‌ தாமே பெருமாளுக்குச்‌ சொவ்வதாக ஸ்ரீராமாயணத்திலே பாலபாண்டம்‌ 75வது ஸரக்கத்தில்‌ நாம்‌ காணலாம்‌-தசாவதார ஸ்தோத்ரத்தில்‌ வேதாந்தாசாரயர்‌ அருளிச்செய்துள்ளபடிப்‌ பாரத்தால்‌ பரசு ராமர அரணவ நிவாஸத்தை நியதமாக நித்யமாக உடையவர்‌ என்பதாகிறது. மாமுநிகளுடைய அடியார்களும்‌ எம்பெருமானுடைய குணக்கடலில்‌ நியத வாஸத்தை உடையவர்கள்‌ , நியதமாக பகவத் குணாநுபவத்‌தையே பண்ணுமவர்கள்‌ என்று பொருள் –

—

ஸஹஜா நக லஷ்மண அந் விதா வஸூ மத்யுத் பவயா ஸ்ரீய உஜ்ஜ்வலா
ரகு வர்ய சமா யதாஸ்ரிதா வர யோகீ ச ஸூபம் தநோ து ந
–32-

எந்த மா முனியை ஆஸ்ரயித்தவர்கள்-ஸ்வ பாவிக -உடன் தோன்றிய குற்றம் அற்ற ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணங்களோடே கூடினவர்களாயும்-லஷ்மணா -அந் விதா -இரண்டு பதம் இங்கு -லஷ்மண ந் வித -ராகவன் பக்ஷத்தில் –-பூமியில் உத்பத்தியான செல்வத்தாலும் -ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ யாலும் விளங்குகிறார்கள் –உடன் பிறந்த குற்றம் அற்ற-பாப ரஹிதரான – இளைய பெருமாளுடன் கூடினவரும்
யாக பூமியில் தோன்றிய ஸ்ரீ சீதாப் பிராட்டியால் பிரகாசிக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
சமானர்களாய் உள்ளனரோ-தயா ஸாகரமாயும் -சரணாகத வத்சலராயும் -ஸதாச்சார்ய பராயணர்களாயும் – பெரியோர்களுக்கு விதேயர்களாயும் -இப்படி சிஷ்ய சம்பத்தை உடைய –
அந்த மா முனிகள் நம்முடைய மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

இந்த ஸ்லோகத்தில்‌ மாமுநிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ ராகவனான சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸமாநவர்கள்‌ என்று இரண்டு ஸ்லிஷ்டவிஸேஷண பதங்களாலே நிரூபிக்கிறார்‌. பெருமாள்‌ கூடப் பிறந்த தம்பியாய்‌ பாப ரஹிதரான இளைய பெருமாளோடு கூடியிருப்பவர்‌ யாக பூமியில் இருந்து தோன்றிய ஸீதா பிராட்டியுடனான ஸம்பந்தத்தாலே (ஸ்ரீராமாயணம்‌ ஆரண்ய காண்டம்‌ 18-37) என்கிறபடியே அளவிட முடியாத தேஜஸ்ஸாலே விளங்குகிறார்‌ –மாமுநிகளுடைய அடியார்களும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநத்திலே ப்ரஸூதரகளா யிருக்கையாலே ஸ்வாபாவிக நிர் தோஷ ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தோடு கூடினவர்களாய்‌ பூமியிலுண்டான தந தாந்ய ஸம்ருத்தியோடு கூடியவர்களாய்‌ பகவத்‌-பாகவத-ஆசார்ய கைங்கர்ய ஸ்ரீயோடு விளங்குகிறார்கள்‌ . லக்ஷ்மண அந்வித என்று ராகவன்‌ பக்ஷத்தில்‌ ஒரே பதமாகக்‌ கொள்ளவும்‌. லக்ஷ்மணா – அந்விதா : என்று இரண்டு பதமாக இவர்கள்‌ பக்ஷத்தில்‌ கொள்ளவும்‌ . லக்ஷ்ம – லக்ஷணம்‌ ; லக்ஷ்மணா என்று த்ருதீயா விபக்தி. லக்ஷணங்களோடு அந்விதா : = கூடினவர்கள்‌ என்று பொருள்‌ கொள்ள வேணும்‌. பெருமாளைப்‌ போன்று தயா ஸாகரமாகவும்‌ ஸரணாகத வத்ஸலர்களாகவும்‌ ஸதாசார்ய பராயணர்களாகவும்‌ பெரியவர்களுக்கு விதேயர்களாகவும்‌ இவர்கள்‌ விளங்குகிறார்கள்‌ என்றும்‌ கண்டு கொள்வது . இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸம்பத்தை உடைய மாமுநிகள்‌ நமக்கு எப்போதும்‌ ஸூபத்தைக்‌ கொடுக்கட்டும் –

—

அதிகத பலபத்ராபி க்யயா யத் பாதாப்ஜ ப்ரவண ஜன சமஷ்டயா வாஸூ தேவாக் ரஜஸ்ய
அநி தர ஜன லப்யா லப்யதே சாம்ய லஷ்மீ ச ஜெயது வர யோகீ நிஸ் துலா வேல பூமா
–33–

எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய கோஷ்டியால்
பலம் மங்களம் கீர்த்தி இவை அடையப் படுகின்றனவோ-அதி கத -பல -பத்ர -அபி க்யயா -பஹு வ்ரீஹி ஸமாசார்த்தம் – எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளில் ப்ராவண்யம் உடையவர்களுடைய குழாத் தாலே ஸ்ரீ கண்ணபிரானுக்கு மூத்தவராய் பல பத்ரன் -நம்பி மூத்த பிரான் -உடன் மற்றவர்களால் அடைய முடியாத சமானமாக ஐஸ்வர்யம் அடையப் படுகிறதோ ஒப்பற்ற பெருமையை உடைய அந்த மா முனிகள் -சர்வ ஸ்ரேஷ்டராக -வெல்லட்டும்-

நம்பி மூத்தபிரானுக்குப்‌ பல பத்ரன்‌ என்று திரு நாமம்‌. ஸ்ரீவஸுதேவருடைய திருக் குமாரனன கண்ணனுக்குத்‌ தமையனான பலராமனோடு ஸாம்ய லக்ஷ்மியானது எந்த மாமுநிகளுடைய திருவடித் தாமரைகளில்‌ ப்ரவணரான (பக்தி பூண்ட) ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கோஷ்டியாலே அடையப் படுகிறதோ , ஒப்புயர்வற்ற எல்லை யில்லாப்‌ பெருமையை உடைய அந்த மாமுநிகள்‌ ஸர்வ ஸ்ரேஷ்டராக விளங்கக் கடவர் ! 1) அதிகத – பல பத்ர – அபிக்யயா 2) அதிகத – பல பத்ர – அபிக்யயா -என்பதற்கு அடையப்பட்ட பல பத்ரன்‌ என்கிற பெயரினால்‌ என்று நம்பி மூத்தபிரான்‌ பக்ஷத்தில்‌ பொருள்‌ . அடையப்பட்ட பலம்‌ , மங்களம்‌ ,கீர்த்தி இவைகளை உடையவர்கள்‌ என்று மாமுநிகளுடைய அடியார்கள்‌ பக்ஷத்தில்‌ பொருள்‌ கொள்ளக் கடவது . (பஹு வ்ரீஹி ஸமாஸம் )

–

ஸ தர்ம ஜாத அர்ஜுன சித்த ஹர்ஷ ப்ரத்வம்ஸி பக்ஷ ஷபண ப்ரவீணா
யதாஸ்ரயா கிருஷ்ண துலாம் பஜந்தே பாயாத்ஸ ந காந்த வரோ முனீந்த்ர
–34-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்து இருக்கிறவர்கள்-தர்மத்தோடே கூடின வெண்மையான தூய மனஸ்ஸின் சந்தோஷத்தை அழிக்கிற பக்ஷத்தை-நாஸம் செய்வதில் திறமையை உடையவர்களாய்
அர்ஜுனனுடைய சந்தோஷத்துக்கு அழிவை விளைவிக்கிற துர்யோதனன் முதலிய துஷ்ட பக்ஷத்தை நாஸம் செய்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸமமான தன்மையை அடைகிறார்களோ-அந்த மா முனிகள் நம்மை ரக்ஷிக்கட்டும்-கண்ணன் பக்ஷத்தில் தர்ம ஜாதர் -தர்ம புத்திரர்-அடியார்கள் பக்ஷத்தில் தர்ம ஸமூஹம் –தர்ம புத்ரரோடு கூடின அர்ஜுநனுடைய ஸந்தோஷத்திற்கு அழிவை விளைவிக்கிற துர்யோதநன்‌ முதலிய துஷ்ட பக்ஷத்தை அழிப்பதில்‌ ஸமர்த்தன்‌ கண்ணன்‌ என்றபடி –மாமுநிகளுடைய அடியார்கள்‌ பக்ஷத்தில் தர்ம ஸமூஹம்‌ நிஷ்கல்மஷமான வெளுத்த மனது – நல்ல அறன்களையும்‌ நிர்மலமான மனதையும்‌ உடையவர்களான ஸாத்விகர்கள்‌ -அவர்களின்‌ ஹர்ஷத்தை(ஸந்தோஷத்தை) அழிக்கிற பக்ஷம்‌ ஆஸுர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மதம்‌ – அதைத்‌ தொலைக்க வல்லவர்கள்‌ ஸ்வாமியுடைய ஸிஷ்யர்கள்‌ . இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸம்ருத்தியை உடைய மாமுநிகள்‌ நம்மைக்‌ காத்தருள வேணும்‌ என்று ப்ரார்த்திக்கிறார் –

–

கலி தோஷம் அசேஷத ஷிதவ் ஷபயன் கல்கி துலா விஹார பூ
யது பாஸ்ரித சஞ்ஜனஸ் ச ந சததம் ஸுவ்மய வரோ அபி ரக்ஷது
–35-

எந்த மா முனிகளை ஆஸ்ரயித்த நல்லோர் பூமியில் கலியின் தோஷத்தை ஓன்று விடாமல்-நிஸ் சேஷமாக நாசம் செய்து –க்ருத யுக தர்மத்தை ப்ரவர்த்திப்பிக்கறவர்களாய் -கல்கி அவதாரத்தோடு
சமானமாக விளங்குகிறார்களோ -விஹார பூ -விஹரிக்கும் இடமாய் விளங்குகின்றார்களோ –
இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்தை உடைய அந்த மா முனிகள் எப்போதும் ரக்ஷித்து அருள வேணும்
–கலியும்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ கடல் வண்ணன்‌ பூதங்கள்‌ மண் மேல்‌ மலியப்‌ புகுந்திசை பாடி யுழிதரக்‌ கண்டோம்‌ * என்றும்‌ * திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து பெரிய கிருத யுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக * என்றும்‌ * கொன்று யிருண்ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌ நின்றிவ்‌ வுலகில்‌ கடிவான்‌ நேமிப் பிரான்‌ தமர்‌ போந்தார்‌ * என்றும்‌ நம்மாழ்வாரருளிச்‌ செய்த படியே மாமுநிகளுடைய அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கலி தோஷத்தை நிஸ் ஸேஷமாக பூமியில்‌ போக்கடிக்கிறார்‌கள்‌ என்றருளிச்‌ செய்தபடி-இது ஸ்ரீராமாநுஜருடைய அபராவதாரமான மாமுநிகளுடைய அடியார்கள்‌ திறத்தில்‌ மிகவும்‌ பொருந்தக்‌ கடவதாய்‌ இருக்கும்‌ . கல்கி பகவானும்‌ கலி தோஷத்தை பூமியில்‌ நிஸ் ஸேஷமாகப்‌ போக்கி க்ருத யுக தர்மத்தை ப்ரவர்த்திப்பதற்காக திருவவதரிக்கப்‌ போகிறான்‌ என்று புராண ப்ரஸித்தி உள்ளது –ஆக பத்து ஸ்லோகங்களினால்‌ மாமுநிகளுடைய பக்தர்களுக்கு தஸாவதார ஸாம்யம்‌ சொல்லப்‌ பட்டது- இப்படிப்பட்ட ஸிஷ்ய ஸம்பத்தை உடைய மாமுநிகள்‌ நம்மை எப்போதும்‌ காத்தருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

—

தசாவதார ஸாம்யத்துக்கு அடுத்து கோயில் திருமலை பெருமாள் கோயில் எம்பெருமான்களோடே
சாம்யம் இது முதல் மூன்று ஸ்லோகங்களால்
அருளிச் செய்கிறார்-

அஹீந போக ப்ரவணஸ் சமிந்தே ஸ்ரீ ரெங்க தாமா கில ரெங்க பர்த்து
சாதர்ம்யமா ஸாத்ய யதங்க்ரி பக்த பாயாத் ச ந ஸுவ்மய வரோ முனீந்த்ர–
36-

எந்த மா முனிகளுடைய திருவடிகளில் பக்தி உடையவர்கள்-ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் செய்பவர்களாய்-ஆதி சேஷன் ஆகிற படுக்கையை அனுபவிக்கிற ஸ்ரீ ரெங்க நாதனுக்கு சமமான பண்பை அடைந்து பிரகாசிக்கிறார்களோ-குறைவற்ற பகவத் அனுபவ போகத்தில் ஆழ்ந்த யோக ஸ்ரேஷ்டரான மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும்-அஹீந போகம் -அஹீ -இந-போகம் -அரவரசின் உடலும் என்றும் -அஹீந போகம்-குறைவற்ற போகமும் –எந்த மாமுநிகளுடைய திருவடிகளிலே பக்தி பூண்டவரான ஸ்ரீவைஷ்ணவர்‌ குறைவில்லாத பகவத்‌ குணாநுபவத்தில்‌ ஈடுபட்டிருக்கிறவராய்‌ திருவரங்கத்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவராய்‌ ஸ்ரீரங்கவிமானத்தில்‌ திருவநந்தாழ்வானுடைய திருமேனியாகிற அரவணையில்‌ ப்ர்தியோடு கண்வளரும்‌ திருவரங்கராஜனோடு ஸாம்யத்தைப்‌ பெற்று விளங்குகிறாரோ அந்த மணவாள மாமுநிகள்‌ நம்மை ரக்ஷிக்கட்டும்‌ ! என்றபடி, * அஹீநபோக * என்பதில்‌ ஸ்லேடை = அஹி – இந – போகம்‌ என்கிற பதம்‌ அரவரசின்‌ உடலையும்‌ அஹீந – போகம்‌ என்கிற பதம்‌ குறைவில்லாத போகத்தையும்‌ குறிக்கும்–

—

வ்ருஷாசல ஸ்திதம் பஜன் வஹந்ந நாரதம் ஸ்ரீயம்
ஸூ துர் லபாக மாகி லாரத் ததாந கேலி கீர்த்தி மாந்
விபாதி வேங்கடேச வத் யதங்க்ரி சேவிநாம் கண
ச ந ஸ்தநோது மங்களம் வரோ பயந்த்ரு தேஸிக
––37-

எந்த மா முனிகளுடைய திருவடியை ஆஸ்ரயித்த குழாம் தர்மத்தில் அசையாது ஊன்றி இருக்கும் நிலையை அடைந்தாய் எப்பொழுதும் கைங்கர்ய ஸ்ரீயை உடைத்தாய்-கிடைத்தற்கு அரிய சாஸ்திரங்களின் -வேதாதிகள் –அருளிச் செயல்கள் -ரஹஸ்யார்த்தங்கள் – எல்லா அர்த்தங்களையும் கொடுப்பதில் இன்பம் அடையும் புகழை உடையவர்களாய் -வ்ருஷா சலத்தில் நிலை நின்று இருக்கும் தன்மையை அடைந்து-திருவேங்கட முடையானைப் போல் பிரகாசிக்கின்றதோ-அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை விருத்தி செய்து அருளட்டும் –-வ்ருஷ -அசலம் -ஸ்திதம் -எருது மலை வாஸம் -என்றும் தர்மம் பேராத நிஷ்டை -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடன் விளங்கா நிற்பவர்கள்–

பூர்வார்தத்தில்‌ இருக்கும்‌ மூன்று விஸேஷணங்களும்‌ திருவேங்கட முடையானுக்கும்‌ ஸ்லேஷாலங்கார ரீதியில்‌ பொருந்தக்‌ கடவதாயிருக்கும்‌ . வ்ருஷாசலமென்று திருமலைக்குப்‌ பெயர்‌. வ்ருஷ – எருது , அசலம்‌ – மலை , ஸ்திதம்‌ – இருப்பை . வ்ருஷாத்ரியில்‌ நிலை நின்றவன்‌ திருவேங்கடமுடையான்‌ எப்போதும்‌ அலர்மேர்மங்கையுறைமார்பன்‌ . பக்தர்களுக்கு மிகவும்‌ துர் லபமான எல்லா புருஷார்த்தங்களையும்‌ அவரவர்‌ விரும்பியபடி கொடுப்பதான விளையாட்டை உடையவன்‌ -உலப்பில்‌ கீரத்தியம்மான்‌ , வ்ருஷ-தர்மத்‌ திலிருந்து , அசல – பேராத , ஸ்திதம்‌ – நிலையை-மாமுநிகளுடைய அடியார்‌ குழாமோ எப்போதும்‌ தர்மத்திலே நிலை நிற்கும்‌. வ்ருஷம்‌ என்று தர்மத்திற்கும்‌ பெயர்‌. எப்போதும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடு விளங்கா நிற்கும்‌. அறிவதற்கு அரிதான வேதாதி ஸாஸ்த்ர திவ்ய ப்ரபந்த ரஹஸ்யார்த்தங்களையும்‌ விளையாட்டாகவே உபதேஸித்தருளுவதால்‌ உண்டான புகழை உடையதாய்‌ இருக்கும்‌ –

—

பக்த அகிலார்த் தாதிக மைக ஹேதும் ஸ்ரீ புண்ய கோட்ய ஆயதனம் யதீயம்
விதந்தி ஸந்தோ வரதே ந துல்யம் வரோ முனிர் நஸ் ச தநோது பத்ரம்
–38-

தம்மிடம் பக்தி கொண்டவர்கள் எல்லா அர்த்தங்களையும் அடைவதற்கு ஒரே காரணமும்-கைங்கர்ய ஸ்ரீ யும் -கோடிக்கணக்கான -எண்ணற்ற புண்ணியங்களுக்கு இருப்பிடமும் எவருடையதோ-மா முனிகளை ஆஸ்ரயித்த அந்த நல்லோர்கள்-எண்ணற்ற புண்ணியங்கள் எவருடையதோ அந்த வரதராஜப் பெருமாளோடே சாம்யத்தை அடைகிறார்கள் –இப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அந்த மா முனிகள் நமக்கு – கல்யாண பரம்பரையை -மங்களங்களைப் பெருக்கி அருளட்டும் –

ஸத் புருஷரகள்‌ எந்த மாமுநிகளுடைய அடியவரை வரதனோடு ஒப்பிட்டு அறிகிறார்களோ அந்த மணவாளமாமுநிகள்‌ நமக்கு எப்போதும்‌ கல்யாண பரம்பரையை அருளட்டும்‌ ! என்கிறார்‌ – காஞ்சியில்‌ அத்திகிரியில்‌ புண்ய கோடி விமாநத்தில்‌ எழுந்தருளி இருக்கும்‌ அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதியான பேரருளாளன்‌ எல்லாருக்கும்‌ வரம்‌ தரும்‌ பெருமாளாக ஸேவை ஸாதித்‌ தருளுகிறான்‌ . மாமுநிகளுடைய அடியார்களும்‌ தன்னை யடைந்த பக்தர்களுக்கு அவர்கள்‌ விரும்பும்‌ அரத்த பஞ்சகம்‌ , தத்வ த்ரயம்‌ , ரஹஸ்யார்த்தங்கள்‌ முதலான உஜ்ஜீவந ஹேதுவான எல்லா ஸாஸ்த்ராரத்தங்களையும்‌ ப்ரஸாதித் தருளுகிறார்கள்‌ -புண்ய கோடி விமாநத்தை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ தேவப் பெருமாள்‌ -கைங்கர்யஸ்ரீக்கும்‌ கோடிக்கணக்‌கான புண்யங்களுக்கும்‌ இருப்பிடமானவரகள்‌ மாமுநிகளுடைய அடியார்கள்‌ – ஆதலால்‌ அவர்கள்‌ வரதனேடு ஒத்தவர்கள்‌ என்கிறார்‌-

–

காந்தம் வரம் ப்ராப்ய ஸதீ மதீ யா மதி பரஸ்மின் புருஷே விரக்தா
தத் ஸத் குணாஸ் வாதரஸை கலோலா பதி வ்ரதோ தா ஹரணத்வ மேது
–39-

அழகிய மணவாள மா முனிகளையே அடைந்து அடியேனுடைய புத்தியானது-பர புருஷன் விஷயத்திலே விருப்பம் அற்று இருப்பவளாய்-தனது பர்த்தாவின் நல்ல குணங்களையே அனுபவிப்பதிலேயே ஸந்தோஷம் அடைபவளாய் –-ஸதீ -என்று போற்றப்படுபவளாய் -இருக்கும் பதி வ்ரதைக்கு எடுத்துக் காட்டான தன்மையை அடையட்டும் –இந்த ஸ்லோகத்தில்‌ அடியேனுடைய நல்ல புத்தியானது அழகிய மணவாள மாமுநிகளையே பற்றி அவருடைய குணாநுபவரஸத்திலேயே ஈடுபட்டு மற்ற விஷயங்களில்‌ பற்றற்றதாய்‌ பதி வ்ரதைகளுக்கு உதாஹரணமாய்‌ அமையட்டும்‌ என்று தம்முடைய தன்மையை வெளியிடுகிறார்‌-உலகில்‌ பதி வ்ரதையான ஸ்த்ரரி அழகிய பர்த்தாவைப்‌ பெற்று அவனுடைய நல்ல குணங்களை அநுபவிப்பதிலேயே விருப்பமுற்று பர புருஷரிடத்தில் விரக்தியை உடையவளாய்‌ ஸதீ என்று போற்றப்படுகிறாள் –

–

இது முதல் ஆழ்வார்கள் இடத்திலும் அருளிச் செயல்கள் இடத்திலும் மா முனிகளின் ஈடுபாட்டின் அதிசயத்தை அருளிச் செய்கிறார்–

ஸரஸி க்ருத விஹாரம் த்யான மாத்ரேண பும்ஸாம்
சமித ஸகல தாபே ஹம்ஸ ஸம் ஸேவ்யமாநே
பஜதி முத ம வேலாம் ஸந்ததம் யஸ்ய சேதஸ்
ச பவது வர யோகீ மானஸே மாமகீ நே
–40-

த்யானம் செய்வதாலேயே சேதனர்களுடைய எல்லா தாபங்களைப் போக்குபவராயும்-மற்ற பொய்கைகள் ஸ்நானம் செய்ய சில தாபங்களைப் போக்கடிக்கும் –-பொய்கையாழ்வாரை த்யானம் செய்யும் மாத்திரத்திலே சகல தாபங்களும் தானே போகுமே –-பரம ஹம்ஸர் களாலே ஸேவிக்கப் படுபவரான பொய்கையாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்தியான முதல் திருவந்தாதியை அனுபவிக்கிற எவருடைய திரு உள்ளம் எல்லை அற்ற இன்பத்தை அடைகிறதோ அந்த மா முனிகள் அடியேனுடைய மனஸ்ஸிலே நித்ய வாஸம் செய்து அருள வேணும் – அடியேனுடைய மனஸ்ஸாகிற ஸரோவரத்தில் மா முனிகள் ஆகிற பரம ஹம்சம் விஹகரிக்கட்டும் -என்றபடி-(1) தம்மை த்யாநம்‌ பண்ணும்‌ அதிகாரிகளுடைய ஸகல ஸாம்ஸாரிக தாபங்களையும்‌ போக்கடிப்பவராய்‌ (2)பரம ஹம்ஸர்களான யோகிகளால்‌ ஸேவிக்கப் படுபவராய்‌ விளங்கும்‌ பொய்கை யாழ்வாராகிற ஸரோவரத்தில்‌ விஹரிக்கிற எந்த மாமுநிகளுடைய திருவுள்ளமானது எப்போதும்‌ அதிகமான ஸந்தோஷத்தை அடைகிறதோ -அந்த மணவாளமாமுநிகள்‌ அடியேனுடைய மநஸ்ஸில்‌ விஹரிக்கக் கடவர்‌ . அடியேனுடைய மநஸ்ஸாகிற ஸரோவரத்தில்‌ மாமுநிகளாகிற பரமஹம்ஸம்‌ விஹரிக்கட்டும்‌ !-மற்ற பொய்கைகள்‌ ஸ்நாநம்‌ பண்ணுமவர்களின்‌ சில தாபங்களையே போக்கடிக்கும்‌ . பொய்கை யாழ்வாரோ தம்மை ஸ்நேஹத்தோடு சிந்தித்த மாத்ரத்தில்‌ ஸகல தாபங்களையும்‌ போக்கடித்‌ தருள்வர்- என்றபடி.

–

சார அசார விவேச நைக ரசிகம் ஸாரஸ்வதம் ஸாரஸம்
ஸுவ்ரா ஹார ஜரீ சஹோதர பரீ பாகேந லோகோத்தரம்
பக்த்யா சீலயதஸ் ஸூ ஸீல ஜன தோத்தம் ஸம் பதாப்ஜ த்வயம்
நித்யம் சிந்தய சித்த சாதர பரம் ஸுவ்மயோ பயந்துர் முநே
–41-

சாரம் உள்ளது சாரம் அற்றது இவற்றை பிரித்து அறிவதில் ஊன்றி இருப்பதும்-தேவர்களின் ஆஹாரமான அம்ருத ப்ரவாஹத்தின் உடன் பிறந்தது போன்ற பக்குவமான தன்மையால் உலகில் மிகச் சிறந்ததுமான பொய்கையாழ்வாருடைய ஸ்ரீ ஸூ க்தியான முதல் திருவந்தாதியை பக்தியுடன் அநுஸந்திக்கும் மா முனிகளின் அடியார்களான சாத்விகர்களுக்கு ஸீரோ பூஷணமாய் இல்ல இரண்டு திருவடித் தாமரைகளை மனமே எப்பொழுதும் கௌரவத்தோடே சிந்தித்து இரு –இந்த ஸ்லோகத்தில்‌ பொய்கை யாழ்வாரருளிய முதல்‌ திருவந்தாதியாகிற திவ்ய ப்ரபந்தத்தை பக்தியோடு நித்யமாக அநுஸந்தித்தருளும்‌ மாமுநிகளுடைய நல்ல ஸீலமுடைய பரம ஸாத்விக-ஜந-ஸிரோ பூஷணமான திருவடித்‌ தாமரைகளை ஆதாரத்தோடு நித்யமும்‌ சிந்தை செய்‌ என்‌ மனமே! என்கிறார்‌ பொய்கையாழ்வாருடைய ஸ்ரீஸூக்தி எப்படிப்பட்டது என்‌னில்‌ நல்லது தீயதுகளை அழகாகப்‌ பகுத்தறிவிப்பது . மேலும்‌ தேவர்களின்‌ ஆஹாரமான அம்ருத ப்ரவாஹத்துடன்‌ உடன்பிறந்ததைப்‌ போன்று இனிமையாகவும்‌ திவ்யமாகவும்‌ (குற்றமற்றதாகவும்‌) இருப்பது.

—

பூதார்த்தஸ் வோக்தி ஸந்தர் சித நிகம ஸிகா கூட தத்வார்த்த ஜாதே
பூதாக்யே யோகி வர்ய பகவதி ஸததம் பக்தி தோ லக்ந சித்தம்
சேவஸ்ய ஸ்வாந்த காந்தம் நிரவதிக குணை ஷாந்தி காருண்ய முக்யை
காந்தம் ஜா மாதரம் தம் நிரவதிக குணை ஸ்வாத முக்தாந்ய சங்கம்
–42-

என் மனமே -வேதாந்தினுடைய ரஹஸ்யமான தத்வார்த்தங்களை உள்ளது உள்ளபடியே இரண்டாம் திருவந்தாதியிலே நன்றாக வெளிப்படுத்தி அருளிய பரம பூஜ்யரான ஸ்ரீ பூதத்தாழ்வார் இடத்திலே பொறுமை கருணை இவற்றை முக்யமாக உள்ள எல்லையற்ற நற் குணங்களை அனுபவிப்பதால் எல்லை யற்ற கல்யாண குணங்களோடு கூடியவரும் முக்தியைத் தவிர மற்ற விஷயங்களில் விரக்தியை உடையவருமான அந்த மா முனிகளை எப்பொழுதும் பக்தியுடன் மனம் ஊன்றியவராக ஆஸ்ரயிப்பாயாக –

ஓடித் திரியும்‌ யோகிகள்‌ என்றும்‌ , இன் கவி பாடும்‌ பரமகவிகள்‌ என்றும்‌ போற்றப்படும்‌ முதல்‌ ஆழ்வார்கள்‌ மூவரில்‌ நடுவராய்‌ பரம பூஜ்யரான பூதத்தாழ்வார்‌ திறத்தில்‌ எப்போதும்‌ பக்தி யோடு கூடின சிந்தனையை உடையராய்‌ ஒப்புயர்வற்றதான க்ஷமை , கருணை முதலிய குணங்‌களால்‌ விளங்குமவராய்‌ இருக்கும்‌ அழகிய மணவாள மாமுநிகளை எப்போதும்‌ என்‌ நெஞ்சே ! நினைப்பாயாக ! மாமுநிகளுடைய குணாநுபவ ரஸத்தாலே விஷயாந்தரங்களில்‌ பற்றை விட்டு என்றபடி. பூதத்தாழ்வார்‌ அருளிச் செய்துள்ள இரண்டாம்‌ திருவந்தாதியானது வாஸ்தவமான அர்த்தத்தையே காட்டுகிறது- . இதில்‌ வேதாந்தத்தின்‌ ரஹஸ்யமான அர்த்தங்களெல்லாம்‌ தெளிவாக காட்டப்பட்டிருக்கின்றன –

—

மஹதாஹ் வய பாத பத்மயோ மஹதுத்தம் சிதயோர் மது வ்ரதம்
வர யோகி நமேவ சாதரம் மதிராஸீ தது மாமிகா அந் வஹம்
–43-

பெரியோர்களால் மிகவும் மதிக்கப்பட்ட சென்னிக்கு அணியாக பூணப்பட்ட ஸ்ரீ பேயாழ்வாருடைய
திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற மா முனிகள் இடமே என்னுடைய மனம் ப்ரீதியுடன்
ஒவ் ஒரு நாளும் அமர்ந்து இருக்கட்டும் –பெரியோரகளால்‌ சென்னிக் கணியாகப்‌ பூணப்பட்ட பேயாழ்வாருடைய திருவடித் தாமரை களில்‌ வண்டான மாமுநிகளையே என்‌ மனம்‌ ஆதரத்தோடு எப்போதும்‌ நாடக் கடவது ! திருமழிசைப் பிரானைத்‌ திருத்திப்‌ பணி கொண்டவர்‌ பேயாழ்வாராவர்‌ – மாமுநிகளுடைய திருவுள்ளம்‌ பேயாழ்வாருடைய திருவடித் தாமரைகளின்‌ போக்யதையில்‌ ஈடுபட்டது. ஹஸ்தி கிரி நாதரண்ணாவின்‌ திருவுள்ளமோ மாமுநிகளுடைய திருவடித் தாமரைகளின்‌ போக்யதை யில்‌ ஈடுபட்டது என்று தேறுகிறது-

–

ஸ்ரீ விஷ்ணு சித்த பத பத்ம ரஜ அநு ஷங்காத் சித்தம் யதீயம ரஜஸ் கதயா ஸமிந்தே
அவ்யாஜ வத்சல தயா ப்ரதி தஸ் ஸதா அஸ்மான் அவ்யாத்ச ஸூ ந்தர வரோ முனி ஸார்வ பவ்ம
–44-

விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாருடைய தாமரைத் திருவடிகளின் துகளின் சம்பந்தத்தால் எவருடைய திரு உள்ளம் ரஜோ குண சம்பந்தம் அற்றதாக ப்ரகாசிக்கிறதோ வாத்சல்யத்தால் ப்ரஸித்தரான மணவாள மா முனி ஸ்ரேஷ்டர் நிர்ஹேதுகமாக அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –
ரஜஸ் சம்பந்தத்தால் ரஜஸ் போயிற்றே என்ன ஆச்சர்யம் –

எந்த மாமுநிகளுடைய திரு வுள்ளம்‌ ஸ்ரீவிஷ்ணு சித்தரான பெரியாழ்வாருடைய திருவடித்‌ தாமரைகளின்‌ துகள்களின்‌ ஸம்பந்தத்தாலே ரஜோ குண ரஹிதமாய்‌ விளங்குகிறதோ –வத்ஸலர்‌ என ப்ரஸித்தி பெற்றவரான அந்த மணவாளமாமுநிகள்‌ எப்போதும்‌ அடியோங்களை நிர்ஹேதுகமாகவே ரக்ஷிக்கக் கடவர்‌ . பூர்வார்தத்தில்‌ ரஜஸ் ஸம்பந்தத்தாலே ரஜஸ்‌ ஸம்பந்தமில்லாதது என்று விரோதம்‌ தோற்றுகிறது . பெரியாழ்வாருடைய திருவடிப் பொடியாலே ரஜோ குண ரஹிதமாய்‌ ஸூத்த ஸத்வ குணமுள்ளதாய்‌ விளங்குகிறது என்று பரிஹாரம்–

–

ஷீரம் சர்கர ஏவ யத் விஹிதயா ஸாபிக் யயா வியாக்யயா
ஸ்ரீ கோதா குரு பாரதீ ஸூ மஹிதா புஷ்ணாதி சா மாது ரீம்
தஸ்ய ஸ்ரீ பத பத்ம யுக்ம மநிஸம் காந்தோ பயந்துர் முநே
ஸ்மாரம் ஸ்மாரமஹம் விதூ தது ரிதோ யாயாமநா யா சத
–45-

எந்த மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானத்தால் – ஸ்ரீ ஆண்டாளுடைய திருத்தகப்பனார் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி சக்கரை உடன் சேர்ந்த பால் போல் இனிக்கிறதோ அந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளை எப்பொழுதும் நினைத்து நினைத்து ஸூ லபமாக பாபங்கள் அழிக்கப் பட்டவனாக அடியேன் ஆக வேண்டும்-சர்க்கரை சேர்ந்த பால்‌ எப்படி மிகவும்‌ இனிதாக இருக்குமோ அப்படியே மாமுநிகள்‌ அருளிச்‌ செய்துள்ள ஸுப்ரஸித்த வ்யாக்யாநத்தோடு கூடின (ஆண்டாளுடைய திருத் தகப்பனாரும்‌ ஆசார்யருமான பெரியாழ்வார்‌ அருளிச் செய்த) பெரியாழ்வார்‌ திருமொழி மிகவும்‌ மாதுர்‌யத்தோடு கூடினதாகக்‌ கொண்டாடப் படுகிறது. விஸதவாக் ஸிகாமணியான ஸ்ரீமணவாளமாமுநிகளுடைய திருவடித் தாமரைகளை எப்போதும்‌ ப்ரேமத்தோடே அநுஸந்தித்து அதனால்‌ அநாயாஸ மாகவே பாபங்கள்‌ கழியப்‌ பெறுவேன்‌ என்கிறார்‌ . பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த பெரியாழ்வார்திருமொழி வ்யாக்யாநத்தில்‌ நான்கு பத்துக்களின்‌ வ்யாக்யாந ஸ்ரீகோஸம்‌ கரையானுக்கு இரையாகி விட்டதால்‌ அடியார்களுடைய ப்ரார்த்தனைக்கு இணங்கி மாமுநிகள்‌ வ்யாக்யாநம்‌ அருளிச்‌ செய்து அருளினார் –

—

யத் க்ருதாந் மங்களா சாஸநாத ந் வஹம் மங்களாநி ஸ்ரீ யோ வல்லபோ விந்ததி
தஸ்ய கோதா குரோர் மங்களா ஸாஸனம் குர்வதே ஸ்யான் மஹா யோகிநே மங்களம்
–46-

எந்த ஒரு ஸ்ரீ பெரியாழ்வாரால் மிதக்கியமாகச் செய்யப்பட மங்களா சாசனத்தால் ஸ்ரீ யபதி மங்களங்களை அடைகின்றானோ-ஸ்ரீ கோதையின் திருத்தகப்பனாரான ஸ்ரீ பெரியாழ்வாருக்கு மா முனிகளால் மங்களா சாசனம் செய்யப்படுவதால் மா முனிகளுக்கு மங்களம் உண்டாகட்டும் -நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் உண்டாகட்டும் என்றவாறு –மங்களாவஹையான பிராட்டிக்கு வல்லபனாய்‌ மங்கள ஸ்வரூபனுமான திருமாலும்‌ எந்த பெரியாழ்வாருடைய நித்ய மங்களாஸா ஸந பலத்தால்‌ மிகவும்‌ மங்களங்களைப்‌ பெறுகிறானோ , அந்த பெரியாழ்வாருக்கு நித்யம்‌ மங்களா ஸாஸநம்‌ செய்யும்‌ மாமுநிகளுக்கு நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் உண்டாகக்கடவது

—

ஷோணீ சார புரீ க்ருத அவதரணே ஸ்வீ யோக்தி சந்தர்சிதா
சேஷாம் நாய ஸி ரோ ரஹஸ்ய நிகரே ஸ்ரீ பக்தி சாரே முனவ்
பக்த்யா பூஷித மாநஸே வர முனவ் பக்திம் பராம் பிப்ரதோ
பக்த்யா நித்யம் உபாஸி ஷீய விலஸத் தத் பக்தித ந்யா நஹம்
–47-

மஹீ சார க்ஷேத்ரம் எனப்படும் திரு மழிசையில் திருவவதரித்த பக்திசாரரான -திருமழிசைப் பிரான்
இடத்தில் பக்தி பூண்டவரும் -அவரது இரண்டு அருளிச் செயல்களான திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி இரண்டிலும் ஓன்று விடாமல் அவரால் காட்டப் பட்ட வேதாந்த ரஹஸ்யங்கள் -வேதாந்த விழுப்பொருளை -அனைத்துமே நிரம்பிய திரு உள்ளத்தை உடைய மா முனிகள் இடம் மேலான பக்தியை உடையவர்களாய் விளங்கும் அடியார்களான பாக்ய சாலிகளை அடியேன் எப்பொழுதும் உபாஸிக்க -ஆஸ்ரயிக்கக் கடவேன் –-யான் முகமாய் அந்தாதி மேல் இட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து என்று அவரே அருளிச் செய்துள்ளார் –மஹிஸார க்ஷேத்ரமான திருமழிசையில்‌ திருவவதரித்தவரும்‌ தம்முடைய இரண்டு திவ்ய ப்ரபந்தங்களில்‌ எல்லா வேதாந்த விழுப் பொருள்களின்‌ ஸாரத்தையும்‌ வெளியிட்டருளியவரும்‌ * பக்திஸாரர்‌ * என்று போற்றப்படுமவருமான திருமழிசைப் பிரானிடத்தில்‌ அன்பு பூண்டவர்‌ ஸ்ரீமணவாளமாமுநிகள்‌ * அவரிடத்தில்‌ பரம பக்தியை உடைய பாக்யஸாலிகளான அடியார்களை அடியேன்‌ பக்தியோடு நித்யம்‌ ஸேவிக்கக் கடவேன்‌-

—

யச் சித்தம் ரகு சேகர அங்கரி கமல த்வந்த ஏக பந்தீ க்ருதம்
தஸ்ய ஸ்ரீ குலசேகரஸ்ய பதயோ ஸூக்தவ் ச ஸக்தா சயம்
தத்வத் ரங்க புஜங்க புங்கவ கிரி ப்ரேம அநு வித்தாசயம்
சேதஸ் காந்த வரம் விபாவய ஸதா யோகீஸ்வரம் சாதரம்
–48-

மனமே எவருடைய திரு உள்ளமானது சக்கரவர்த்தி திரு மகனுடைய இரண்டு திருவடித் தாமரைகளில்
கட்டப் பட்டு இருக்கிறதோ -அந்த ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளில் அவரது ஸ்ரீ ஸூ க்திகளான
ஸ்ரீ பெருமாள் திரு மொழியிலும் பக்தி நிறைந்த திரு உள்ளத்தை உடையவராய் -அதைப் போன்று ஸ்ரீ கோவிலிலும் ஸ்ரீ திருமலையிலும்-(புஜங்க புங்கவன் -சர்வ ஸ்ரேஷ்டரான ஆதி சேஷன் -கிரி -மலை -சேஷாசலம் -என்றவாறு ) ப்ரேமம் நிறைந்த திரு உள்ளத்தை உடையவருமான ஸ்ரீ மா முனிகளை மனமே நினைத்து இருப்பாயாக –எந்த குலசேகராழ்வாருடைய திருவுள்ளம்‌ பெருமாளுடைய திருப் பாத கமலங்களில்‌ ஈடுபட்டு அவருடைய புகழைப்‌ பாடுவதிலேயே நாட்டமுடையதோ அந்த குலசேகராழ்வாருடைய திருவடிகளிலும்‌ , அவர் தம்‌ ஸ்ரீஸூக்தியாகிற பெருமாள் திருமொழியிலும்‌ ஈடுபட்ட திருவுள்‌ளத்தை உடையவரும்‌ -அந்த ஆழ்வாரைப் போலவே திருவரங்கத்திலும்‌ ஸேஷாசலமான திருமலையிலும்‌ ப்ரேமத்தோடு கூடின திருவுள்ளத்தை உடையவரும்‌ -யோகிகளில்‌ தலைவருமான மாமுநிகளை -மனமே! நீ ஆதரத்தோடு நிச்சலும்‌ நினைக்கக்‌ கடவாய்‌ ! புஜங்க புங்கவன்‌ – ஸர்வ ஸ்ரேஷ்டரான ஆதி ஸேஷன்‌ ; கிரி – மலை – ஸேஷாசலம்‌ என்றபடி-

—

ஸ்ரீ ரங்காதிப திவ்ய மங்கள வபுஸ் ஸுவ்ந்தர்ய சார அம்ருத
ஸ்ரோத மக்ந முனீந்திர வாஹந குணோதந் வந்நி மக்நாசயம்
சேதஸ் காந்த வரம் விசிந்த்ய முனிம் யச் சிந்தனம் சந்ததம்
குர்வந்தோ ஹி விதந்தி தைவம பரம் சந்தோ ந யஸ்மாத் பரம்
–49-

ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தினுடைய ஸுவ்ந்தர்ய சாராம்ருத பிரவாகத்தில் ஆழ்ந்தவரும்-முனி வாஹனர் என்று பெயர் பெற்ற ஸ்ரீ திருப்பாணாழ்வார் உடைய குணக்கடலில் மூழ்கிய நெஞ்சை உடையவருமான ஸ்ரீ மா முனிகளை நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்து இருப்பாயாக -இவ்வாறு சதா சிந்திக்கும் அடியார்கள் – என் அமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றே இருப்பார்களே –திருவரங்கத் தரவணையில்‌ பள்ளி கொள்ளும்‌ பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்‌தைத்‌ திருவடி முதல்‌ திருமுடியளவாக அநுபவித்து அந்த எம்பெருமானுடைய திருமேனியின்‌ ஸெளந்தர்ய-ரஸமாகிற ( அழகு-வெள்ளமான ) அம்ருத-ப்ரவாஹத்தில்‌ மூழ்கினவராய்‌ லோக ஸாரங்க மஹா முநிகளுடைய திருத் தோளில்‌ ஏறிப் போகையால்‌ * முநி வாஹநர்‌ * என்று கொண்டாடப்படும்‌ திருப் பாணாழ்வாருடைய குணக் கடலில்‌ மூழ்கின திருவுள்ளத்தை உடையவரான மணவாளமாமுநிகளை பேதை நெஞ்சே ! நீ எப்போதும்‌ சிந்தை செய்வாயாக ! எந்த மாமுநிகளை சிந்தித்திருக்குமவர்களான நல்லடியார்கள்‌ அவரைத் தவிர மற்றொரு தெய்வத்தை நினைப்பார்களோ ! * என்கிறார் -திருப்பாணாழ்வார்‌ * என்னமுதினைக்‌ கண்ட கண்கள்‌ மற்றொன்றினைக்‌ காணாவே * என்றார்‌. மாமுநிகளுடைய அடியார்களோ மாமுநிகளை யன்றி மற்றொன்றினைக்‌ காணார்கள்‌ . இதுவே சரம பர்வ நிஷ்டையாகும்

—

யத் பாத ரேணு வஹ நேந ஸூ கந்த மௌலிஸ்தம் ப்ரஹ்ம பந்த மதி கச்சதி முக்தி பந்த
தத் விஷ்ணு பக்த பத ரேணு முனீந்திர பக்தம் காந்தோ பயந்த்ருமுனி மன் வஹம் ஆஸ்ரயேயம்
–50-

எந்த ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருடைய திருவடி தூளியைத் தரித்து நறு மணம் பெற்ற முடியைப் பெற்றவர்கள் சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அத்யந்த பகவத் பாரதந்தர்யத்தை அடைகிறார்களோ அந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம் பக்தியை உடைய ஸ்ரீ மா முனிகளை ஒவ் ஒரு நாளும் ஆஸ்ரயிப்பேனாக –எந்த தொண்டரடிப் பொடி யாழ்வாருடைய ஸ்ரீபாத ரேணுவை தரிக்கிறபடியால்‌ நல்ல வாஸனை யுள்ள முடியை உடையவர்கள்‌ ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டு ப்ரஹ்ம ஸம்பந்‌தத்தை அடைகின்றனரோ , அந்த தொண்டரடிப் பொடி யாழ்வார்‌ திறத்து பக்தி பூண்டவரான ஸ்ரீமணவாளமாமுநிகளை அடியேன்‌ ஆஸ்ரயிக்கக் கடவேன்‌ !

–

யது பாது காத்வ மதி கச்சதி சம்ய மீந்த்ர தஸ்மிந் முனவ் வகுள மாலிநி பத்த பாவம்
தத் ஸூ க்தி சாகர சதுஷ்டய பூர்ண சந்த்ரம் ஸுவ்ம்யோ பயந்த்ருய மிநம் சரணம் வ்ருணே அஹம்
–51-

எந்த ஸ்ரீ நம்மாழ்வாருடைய பாதுகையாய் இருக்கும் தன்மையை ஸ்ரீ எதிராஜரான நம் உடையவர் அடைகிறாரோ மகிழ மாலை அணிந்த அந்த ஸ்ரீ நம்மாழ்வார் திறத்தில் ஊன்றிய திரு உள்ளத்தை உடையவரும் அவருடைய ஸ்ரீ ஸூக்தி கடலான நான்கு திவ்ய பிரபந்தங்களுக்கும் பூர்ண சந்திரன் போன்றவருமான ஸ்ரீ மா முனிகளை சரணமாகப் பற்றுகிறேன் –-சந்த்ர தர்சன ஹர்ஷத்தால் கடல் பூரிக்கும் கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள் அன்றோ திரு மூல நன்னாள் –யதிராஜரான எம்பெருமானார்‌ எந்த நம்மாழ்வாருடைய பாதுகையாக விளங்குகிறாரோ , மகிழ்மாலை மாரபினரான அந்த நம்மாழ்வாரிடத்தில்‌ பாவ பந்தத்தை யுடையவராய்‌ , அந்த ஆழ்வார்‌ அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்த கடல்களுக்கும்‌ பூரண சந்த்ரனாய்‌ விளங்கும்‌ ஸ்ரீமணவாளமாமுநிகளை அடியேன்‌ சரணமாகப்‌ பற்றுகிறேன்‌ ! * என்கிறார்‌. பூரண சந்த்ரனைக்‌ கண்ட ஸந்தோஷத்தில்‌ கடல்‌ கொந்தளிக்கும்‌ -அதைப் போன்று மாமுநிகளுடைய திருவவதாரத்தால்‌ நம்மாழ்வார்‌ அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களும்‌ ஸம்ருத்தி மிக்கதாகின்றன . * கந்த மலர்ப்பொழில்தழ்‌ குருகாதிபன்‌ கலைகள்‌ விளங்கிடு நாள்‌ * இறே மாமுநிகளுடைய திருவவதார திநமான திருமூல நன்னாள்–

–

மூர்த்தோ யோ பக்தி பூமா முரரிபுத யோ யன் மஹிம் ந கலா அபி
வ்யாஸாதீ நாம லப்யா புஜக விஹக ராட் ஸைன்ய ப்ருத் விஸ்மயாய
யத் ஸூக்தி நாம் கரிம் ணே ஸ்ப்ருஹயதி ஸகலோ அப்யாக மோ அபவ்ருஷேய
தஸ்மிந் ந்யஸ்தாத்ம பார சடஜிதி வர யோக்யஸ்து மே ஸ்வஸ்தி பூம்நே
–52-

எந்த நம்மாழ்வார் முரனை அழித்த ஸ்ரீ கண்ணபிரான் திருவடிகளில் பரமபக்தியே வடிவானவரோ –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ-எவருடைய பெருமையில் பதினாறில் ஒரு பங்கு கூட வ்யாஸாதிகள் அடைய முடியாதோ-அநந்த கருட விஷ்வக் சேனாதிகளுக்கும் கூட ஆஸ்ரயிக்க விஷயம் ஆனவரோ-எவருடைய ஸ்ரீ ஸூக்திகளின் மஹிமையை வேதங்களும் கூட அடைய விரும்புகின்றனவோ-அந்த ஸ்ரீ நம்மாழ்வார் இடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஸமஸ்த பாரத்தை யுடைய மா முனிகள் அடியேனுடைய பூர்ண மங்களங்களுக்கு காரணமாக இருக்க வேண்டும்–

முரரிபுவான கண்ணன்‌ திருவடி யிணையில்‌ பரம பக்தியே வடிவானவரான படியாலே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் என்று நம்மாழ்வாரைக்‌ கொண்டாடுகிறார்‌ ஸ்ரீபராஸரபட்டர்‌. எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தினால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப் பெற்ற ஆழ்வாருடைய பெருமையின்‌ ஏகதேஸம் கூட தம்முடைய யத்நத்தினால்‌ ஜ்ஞாந பக்திகளைப்‌ பெற்ற வ்யாஸாதிகளால்‌ அடைய முடியாது. மேலும்‌ இவருடைய வைபவம்‌ நித்ய ஸூரிகளான அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளையும்‌ வியக்கச்‌ செய்யும்‌! அபெளருஷேயமாகவும்‌ நித்ய நிர்தோஷமாகவும்‌ மூல ப்ரமாணமாகவும்‌ இருக்கும்‌ பெருமைகள்‌ பெற்ற வேதங்களும் கூட ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளின்‌ பெருமையை அடைய விரும்புகின்றனவே ! இப்படிப்பட்ட வைபவங்கள்‌ பொருந்திய நம்மாழ்வாரிடத்தில்‌ ஸமர்ப்பிக்கப்பட்ட ஸமஸ்த பாரத்தையும்‌ உடையவரான மாமுநிகள்‌ தம்முடைய அனைத்து நன்மைகளுக்கும்‌ கடவராக வேணும்‌ என்று பிரார்த்திக்கிறார் –

—

சடாராதி ஸ்ரீ மத் வதன ஸரஸீ ஜாத மிஹிர
ததீய ஸ்ரீ பாதாம் புஜ மது கரஸ் தஸ்ய வசஸாம்
சதுர் ணாம் ஸிந்தூ நாமம் ருத கிரனோ பக்த ஜனதா
ஸூர த்ருபாயான் மாம் வர முனி வரோ வேள மஹிமா
–53-

நம்மாழ்வாருடைய திரு முக மண்டலமான தாமரையை அலர்த்த வல்ல ஸூர்யனாகவும் அவர் தம் திருவடிகளில் வண்டாகவும் அவர் அருளிச் செய்த நான்கு பிரபந்த சாகரத்துக்கு பூர்ண சந்த்ரனாகவும்
பக்த ஜனங்களுக்கு அபேக்ஷித்ங்களைக் கொடுக்க வல்ல கல்பக வ்ருக்ஷமாகவும் எல்லை அற்ற பெருமை யுடைய ஸ்ரேஷ்டரான மா முனிகள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –நம்மாழ்வாருடைய திருமுக மண்டலமான கமலத்தை விகஸிப்பிக்கக் கடவ ஸூரியனாய்‌ , அவர்தம்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ படிந்த வண்டாய்‌ , அவருடைய ஸ்ரீஸூக்திகளான நான்கு திவ்ய ப்ரபந்தங்களான நான்கு ஸமுத்ரங்களை ஸந்தோஷத்தினால்‌ பொங்கி யெழச்‌ செய்யும்‌ பூர்ண சந்த்ரனாய்‌ , தம்மை ஆஸ்ரயித்த பக்த ஜநங்களுக்கு தேவ லோகத்திலுள்ள கல்பக வ்ருக்ஷம்‌ போன்று அபேஷிதங்களைக்‌ கொடுக்கும்‌ வள்ளலாய்‌ , எல்லை யில்லாத வைபவத்துடன்‌ கூடிய முநி ஸ்ரேஷ்டரான மாமுநிகள்‌ என்னை ரஷித்தருள வேணும் –

—

ஸடரிபு முனி த்ருஷ்டாம் நாய கூடார்த்த தத்த்வ ப்ரகடந படு லோகாசார்ய ஸூக்த்யர்த்த ஜாதம்
வ்ய வ்ரு ணத பவ பாஜாம் குப்தயே ய க்ருபா வாந் பவது ச வர யோகீ ஸ்ரேயஸே பூயஸே ந
–54-

ஸ்ரீ நம்மாழ்வார் கண்ட வேத ரஹஸ்யார்த்தங்களை -அர்த்த ரசங்களையும் பாவ ரசங்களையும் -உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் திறமை மிக்க லோகாச்சார்யரான ஸ்ரீ நம்பிள்ளையினுடைய ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளின் அர்த்தங்களை சம்சாரிகளை ரக்ஷிப்பதற்காக எவர் எடுத்து விவரித்து உரைத்தாரோ
பரம காருணிகரான அந்த ஈட்டுப் பெருக்கரான மா முனிகள் நம்முடைய ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக நன்கு விளங்கட்டும்–நம்மாழ்வாராலே காணப்பட்டு வெளிப்படுத்தப் பட்ட த்ராவிட வேதமான திருவாய் மொழியின்‌ அர்த்த-ரஸம்‌ பாவ-ரஸம்‌ இவைகளை நன்றாக வெளியிட்டருளினவர்‌ லோகாசார்யரான நம்பிள்ளை- இவற்றை கருணையை யுடைய எவர்‌ ஸம்ஸாரிகளான நம்‌ போல்வர்களுடைய ரக்ஷணத்துக்காக விரிவாக உபந்யஸித்தருளினாரோ அந்த மாமுநிகள்‌ நமக்கு அதிகமான ஆத்ம நன்மைகளை திருவுள்ளம்‌ பற்றி யருள வேணும்‌ ! ஈடு முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்று மாமுநிகள்‌ போற்றப் படுகிறாரிறே ! அத்தைத்‌ திருவுள்ளம்‌ பற்றி அருளிச் செய்தபடி –

–

தாத்ருக் கேசர பூஷ த்ருஷ்ட சதுராம்நா யங்க ஷட் கதாமக
ஸ்வ உக்த்யா நந்திதே கேசவ கில கலி ப்ரத்வம்ஸி யோகீஸ்வர
நித்ய உத்புத் வயதீய ஹ்ருத் ஸரஸிஜ புஷ்ணாதி ஹம்ஸஸ் ரியம்
ச ஸ்ரே யாம்ஸி தநோ து ந பிரதிகலம் காந்தோ பயந்தா முனி
–55-

அப்படிப்பட்ட வகுள மாலையைத் தமக்கு பூஷணமாக அணிந்தவரான ஸ்ரீ நம்மாழ்வாரால் காணப்பட்ட
நான்கு திராவிட வேதங்களுக்கு ஆறு அங்கங்களான தம்முடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே எம்பெருமானை
உகப்பிக்கும் கலி கன்றியான திரு மங்கை ஆழ்வார் அல்லவா-இவற்றை அநுஸந்திப்பதால் எப்பொழுதும் மலர்ந்த எவருடைய இதயத் தாமரையில் கலி கன்றியான-திருமங்கை ஆழ்வார் ராஜ அம்சமாக விளங்குகிறாரோ-அந்த அழகிய மணவாள மா முனிகள் எப்பொழுதும் நமக்கு ஆத்ம நன்மைகளைச் செய்து அருள வேணும் –

வகுள பூஷணரான நம்மாழ்வாராலே ஸாக்ஷாத் க்ருதமான த்ராவிட வேதமான நான்கு திவ்ய ப்ரபந்தங்களுக்கும்‌ ஆறங்கங்களாக ஆறு திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்தவராய்‌ , தம்‌ முடைய திவ்ய ப்ரபந்தங்களினாலே எம்பெருமானுடைய திருவுள்ளத்தை உகப்பிக்கிறவராய்‌ , கலிகன்றியான திருமங்கையாழ்வார்‌ , எப்போதும்‌ அந்த அருளிச் செயல்களை அநுஸந்திக்கிற படியால்‌ தெளிந்து மலர்ந்த எந்த மாமுநிகளுடைய திரு வுள்ளத்திலே ராஜ ஹம்ஸமாக இருந்து கொண்டு அதை விஹரித்து மகிழ்வுறச்‌ செய்கிறாரோ , அந்த மாமுநிகள்‌ நமக்கு க்ஷணம்‌ தோறும்‌ ஆத்ம நன்மைகளைச்‌ செய்தருள வேணும்‌ ! கேஸரம்‌ –வகுளம் –

—

ஸ்வ கரல சாச்சி தாக்ர கரவாள ஜிதாப்தி ஸூதா தயித ஹ்ருதாந பாய நிகமாந்த நிகூட தநம்
கலிரிபு யோகி வர்ய மநிசம் ஹ்ருதயே நிததத் மநஸி விஹார மேது ஸததம் மம காந்த வர
–56-

தம் திருக் கையிலே விளங்குகின்ற கூரான நுனியை யுடைய வாளால் வெல்லப்பட்ட எப்பொழுதும் பிரியாத அலை மகள் நாதன் இடம் இருந்து அபஹரிக்கப் பட்ட வேதாந்தத்தில் மறைந்துள்ள தனமான
திரு மந்த்ரத்தை யுடைய திரு மங்கை ஆழ்வாரை எப்பொழுதும் திரு உள்ளத்தில் தரித்து இருக்கிற
மா முனிகள் எப்பொழுதும் அடியேன் மனத்தில் மகிழ்வை அருள வேணும் -விஹரிக்கக் கடவாராக –தம்முடைய திருக் கையில்‌ விளங்கும்‌ கூரார்ந்த வாள் வலியால்‌ திருமகள்‌ கேள்வனை ஜயித்து அவனிடமிருந்து அபஹரிக்கப்பட்ட திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரமாகிற அழியாத தநத்தை உடையவராய்‌ கலியை விரட்டி ஒட்டினவரான திருமங்கை மன்னனை எப்போதும்‌ திருவுள்ளத்‌திலே வைத்துக்‌ கொண்டிருக்கும்‌ ஸ்ரீமணவாளமாமுநிகள்‌ அடியேனுடைய மனதில்‌ எப்போதும்‌ விஹரிக்கக் கடவராக-

—

யத் ஹஸ்தந் யஸ்த சஸ்த்ரம் ஸகலயதி கலிம் யஸ்ய சாரஸ் வதம் து
ஸ்ரோதஸ் ஸ்ரோத்ரு ந சேஷா நபி சபதி ஹதா சேஷ தாபான் விதத்தே
தஸ்மிந் நிர் தூத திஷ்யே ஜகததி பதநஸ்தேயநிஸ் துல்ய பூம் நி
ந்யஸ்தாத்மா ஸ்வஸ்தி விஸ்தாரயது மம ஸதா ஸுவ்மய ஜாமத்ரு யோகீ
–57-

எந்த ஆழ்வாருடைய திருக்கையில் இருக்கும் ஆயுதமான வேல் கலியை தூளாக்குகிறதோ –-எவருடைய ஸ்ரீ ஸூக்திகளுடைய ப்ரவாஹமானது கேட்பவர்கள் அனைவருமுடைய எல்லா தாபங்களையும் உடனேயே போக்குகிறதோ கலியை விரட்டியவரான லோக நாதன் என்னும் எம்பெருமானுடைய தனத்தை அபஹரித்த ஒப்பற்ற மஹிமை பொருந்திய ஆழ்வார் இடத்தில் திரு உள்ளத்தில் வைத்தவரான அழகிய மா முனிகள் நமக்கு எப்பொழுதும் மங்களங்களை அருள வேணும் –எந்த ஆழ்வாருடைய திருக்கையில் இருக்கும் வேலாயுதம் கலியைத் துகளாக்குகிறதோ -எந்த ஆழ்வாருடைய திருமொழிப்‌ பெருக்காறு கேட்பவர்‌ அனைவர்களுடைய ஸகல தாபங்களையும்‌ அப்போதே போக்குகிறதோ எம்பெருமானுடைய தநத்தை அபஹரிக்கையால்‌ வந்த அஸாதாரண மஹிமை பொருந்திய அந்தத் திருமங்கையாழ்வாருடைய திருவடிகளில்‌ தம்முடைய ஸமஸ்த பரத்தையும்‌ ஸமர்ப்‌த்து வாழும்‌ அழகிய மணவாளமாமுநிகள்‌ எப்போதும்‌ அடியேனுக்கு மங்களத்தைப்‌ பண்ணி யருளட்டும் -பாஹு வ்ரீஹி ஸமாஸாத்தாலே கலியை விரட்டி ஒட்டினவர்‌ என்று பொருள் –

—

யத் வாணீ ரஸ பூம தாரித ஸூதா வேணீ முதா ஸம்யமி
ஷோணீ பால முகைஸ் ததந்ய விமுகை ராஸ் வாத்யதே சாதரம்
வேதாந்த ஸ் ப்ருஹணீய வைபவ வதீ கேதாந்த க்ருத்தேஹி நாம்
கோதாம் தாம் சரணம் ஸ்ரயன் வர வரோ மோதாய ந கல்பதாம்
–58-

வேதங்களாலும் விரும்பப்படுவதாய் -வேதங்கள் அனைத்துக்கும் வித்தாய் – சேதனர்களுடைய துக்கத்தைப் போக்குவதாய் -பாபங்களைப் போக்கும் பரமன் அடியைக் காட்ட வல்லதாய் –
ஸ்ரீ ஸூ க்திகளின் ரசத்தாலே அம்ருத ப்ரவாஹத்தையும் கீழ்ப் படுத்த வல்லதாய்
ஆனந்தத்தினால் திருப்பாவை ஜீயரான யதிராஜர் போல்வரால் இதைத் தவிர மற்ற விஷயங்களில் விருப்பம் அற்றவர்களாய் ஆதாரத்தோடு அனுபவிக்கப் படுகிறதாய் விளங்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்த அந்த ஆண்டாளை சரணமாகப் பற்றிய மா முனிகள் நமக்கு ஆனந்தத்தை அளிக்க வேணும் –

எந்த ஆண்டாளுடைய ஸ்ரீஸூக்தியானது (திருப்பாவை , நாச்சியார்‌ திருமொழி) –
1-வேதாந்தங்களாலும்‌ ஆசைப்படத்தக்க (வைபவத்தை) உடையதாய்‌ ,
2-மநுஷ்யர்களுடைய து :க்கங்களை அடியோடு போக்கடிக்கும்‌ தன்மையை உடையதாய்‌
3-இனிமையின்‌ ஆதிக்யத்தினால்‌ அம்ருத ப்ரவாஹத்தையும்‌ கீழ்ப் படுத்த வல்லதாய்‌ ,
4-இதர விஷயங்களில்‌ வைராக்யமுடைய யதிராஜரான நம்‌ ஸ்வாமி எம்பெருமானார்‌ முதலான பூரவாசார்யர்களால்‌ நித்யம்‌ ஆதரத்தோடு அநுபவிக்கப் படுவதாய்‌ விளங்குகிறதோ அந்த ஆண்டாளுடைய இணை யடிகளை ஸரணமாகப்‌ பற்றிய மாமுநிகள்‌ நமக்கு எப்போதும்‌ ஆநந்தத்தைக்‌ கொடுத்தருள வேணும்‌! கோதையின்‌ ஸ்ரீஸூக்தி வேதமனைத்துக்கும்‌ வித்தாய்‌ பாபங்களைப்‌ போக்கிப்‌ பரமனடி காட்ட வல்லது . திருப்பாவையை நித்யம்‌ அநுஸந்தித்து வரும்‌ உடையவர்‌ திருப்பாவை ஜீயர்‌ என்றே போற்றப்படுகிறார்‌ –

—

யத் ஸூக்திர் முக்தி ஹேதும் பிரகட யதிதராமாக மாந்தாதி ரூடம்
லஷ்மீ காந்த அநு வாதம் ஸ்புரத மித குண ஆச்சார்ய வர்யாபிதா நம்
கோதாம் தாமாத ரேண ப்ரணித ததி வர யோகி ந்யஸ்த சித்தா
சந்தஸ் ஸந்தோஷ வந்தோ விததபி பஜதாம் ஸ்வாந்த சந்தாப சாந்திம்
–59-

எந்த ஆண்டாளுடைய ஸ்ரீ ஸூ க்தியானது வேதாந்தத்தில் தேறிய அர்த்தமான மோக்ஷ உபாயமாக
எம்பெருமானை ஆஸ்ரியப்பதை விட பிரகாசிக்கும் குணங்களை உடைய ஆச்சார்யனை மோக்ஷ உபாயமாக நன்றாக வெளிப்படுத்துகிறதோ-அந்த ஸ்ரீ கோதா நாச்சியாரை ஆதாரத்தோடு ஆஸ்ரயிக்கும் மா முனிகள் இடம் ஊன்றிய மனத்தை உடைய ஆனந்தம் உடைய சாதுக்கள்
தங்களை ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மனத்தில் உள்ள கிலேசத்தை நீக்கி சாந்தி அடையச் செய்கிறார்கள் –-நல்ல என் தோழி -இத்யாதி சரம பர்வ நிஷ்டை -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
இது அன்றோ பரம ரஹஸ்யம் –

எந்த ஆண்டாளுடைய ஸ்ரீஸூக்தியானது திருமாலை முதல்‌ பர்வமாகவும்‌ , மிகவும்‌ ப்ரகாஸிக்‌கிற க்ஷமாதி குணங்களை யுடைய ஆசார்யனை சரம பர்வமாகவும்‌ கொண்டு ஸ்ரீய : பதியினுடைய அபிமாநத்தை மோக்ஷத்திற்கு அப்ரதாந காரணமாகவும்‌ ஆசார்யாபிமாநத்தையே முக்ய காரணமாகவும்‌ பற்றுகிற வேதாந்த ரஹஸ்யார்த்த ஸாரமான சரம பர்வ நிஷ்டையை மிகவும் தெளிவாக விளக்குகிறதோ அந்த ஆண்டாளை பக்தியோடு த்யாநம்‌ செய்கிற மாமுநிகளிடத்‌தில்‌ நிலை நின்ற சிந்தையை உடையவர்களாய்‌ , அதனாலேயே ஸந்துஷ்டர்களா யிருக்கிற சரம பர்வத்தால்‌ ஊன்றி இருக்கும்‌ மஹான்கள்‌ தம்‌ ௮பிமாந-அந்தர் கதரான பக்தர்களுக்கு உண்டு பண்ணுகிறார்கள்‌ என்றபடி–நல்ல வென்‌ தோழீ… என்கிற பாசுரத்தில்‌ ஆண்டாள் தன்னுடைய சரம பர்வ நிஷ்டையை வெளியிட்டருளினாள் –

—

யந் மௌலிஸ் பர்சதீ வ்யத் பரிமள பரிதாம் மாலிகாம் மூர்த் நி பிப்ரத்
தன்யம் ஸ்வம் மன்யதே ஸ்ரீ நிதிர் அபி புருஷஸ் தாமமேயா நுபாவாம்
கோதாம் பக்த்யா யதிஷ்மாபதி மிவ ஸததம் லால யந்தம் மஹாந்தம்
சேவந்தே யோகி நம் யே ஹ்ருதய கலய தாநன்வஹம் தேஸி கேந்தரான்
–60-

எந்த ஆண்டாளுடைய குழலின் ஸ்பர்சத்தால் பிரகாசிக்கிற நறு மணம் நிறைந்த மாலையைத் திரு முடியில் தரித்து இருப்பதால் ஸ்ரீ யபதியான புருஷோத்தமனும் தன் பயனாகக் கருதுகிறானோ
அந்த அளவிட முடியாத ப்ரபாவத்தை உடைய ஆண்டாளை யதிராஜர் போன்று எப்பொழுதும் கொண்டாடும் மஹா யோகியான ஸ்ரீ மா முனிகளை எவர்கள் பக்தியோடு சேவிக்கிறார்களோ அந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை எப்பொழுதும் மனமே அநுஸந்திப்பாயாக –

ஸ்ரீய : பதியான புருஷோத்தமனும்‌ எந்த ஆண்டாளுடைய கந்தம்‌ கமழும்‌ திருக் குழலின்‌ ஸம்பந்தத்தாலே மிகவும்‌ பரிமளத்தோடு கூடின சூடிக் களைந்த மாலையைத்‌ தலையில்‌ சூட்டிக்‌ கொள்வதால்‌ தன்னை தந்யனாக நினைக்கின்றானோ , எல்லை யற்ற ப்ரபாவத்தையுடைய அந்த கோதா தேவியை எம்பெருமானாரைப்‌ போன்று எப்பொழுதும்‌ பக்தியோடு ஸ்லாகித்துக்‌ கொண்டாடும்‌ மாமுநிகளை எந்த ஆசார்ய ஸ்ரேஷ்டர்கள்‌ ஸேவிக்கிறார்களோ , அவர்களை ஹே மனமே! நீ நித்யம்‌ அநுஸந்திப்பாயாக –

—

சட வைரிமுநே பரம் ந தைவம் விதிதம் யேந ததே கதை வதே ந
மதுரம் கவிம் ஆஸ்ரிதஸ் தமீட்யம் வர யோகீ விததாது பாவுகம் ந
–61-

நம்மாழ்வாரை விட மேலான தெய்வம் எவரால் அறியப் பட வில்லையோ அந்த ஒரு தெய்வத்தை உடைய தேவு மற்று அறியாமல் குருகூர் நம்பி பாவின் இன்னிசையைப் பாடித் திரிந்த ஸ்துதிக்கத் தக்க ஸ்ரீ மதுர கவிகளை ஆஸ்ரயித்த மா முனிகள் நமக்கு நன்மைகளைத் தந்து அருள வேணும்-ஸடகோப முநியைத்‌ தவிர மற்றொரு தெய்வம்‌ அவரையே பர தெய்வமாகப்‌ பற்றின எந்த மதுரகவியால்‌ அறியப்பட வில்லையோ , துதிக்கத்‌ தகுந்த அந்த மதுரகவி யாழ்வாரை ஆஸ்ரயித்தவரான மாமுநிகள்‌ நமக்கு நன்மைகளை அருள வேணும்‌! தேவு மற்றறியேன்‌ குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித்‌ திரிவனே என்றாரிறே மதுரகவிகள் –

—

யத் பதாப்ஜ அநு பந்தஸ் ஸகல தநு ப்ருதாம் கல்பதே முக்தி ஸித்த்யை
யத் சம்பந்தாத் கரஸ்தாம மநுத ச யதிஷ் மாபதி ஸ்வஸ்ய முக்திம்
தஸ்மிந் கூராதி நாதே நிரவதிக குணே பக்திமாம் ரேட யந்தம்
முக்த்யை பக்த்யோ பஜந்தோ வர முனி மநகா தேஸிகா மே தயந்தாம்
–62-

எவருடைய திருவடித் தாமரைகள் சம்பந்தமே எல்லா சேதனர்களுடையவும் முக்தி பெறுவதற்கு
சாதனமாக கருதப் படுகிறதோ அந்த ராமானுஜரே தன்னுடைய மோக்ஷம் எவருடைய சம்பந்தத்தால் கைப்பட்டதாக எண்ணினாரோ-இதற்கு மேல் இல்லை என்னும்படியான குணங்களை உடைய அந்த கூரத்தாழ்வான் இடம் இடைவிடாத பக்தியைப் பண்ணும் மா முனிகளை மோஷார்த்தமாக பக்தியுடன் ஆஸ்ரயிக்கும் ஆச்சார்யர்கள் அடியேனுக்கு தயை பண்ணி அருள வேணும் –எந்த எம்பெருமானாருடைய ஸம்பந்தமே எல்லா சேதநர்களுடைய மோக்ஷத்திற்கும்‌ காரணமாக இருக்கிறதோ அந்த எம்பெருமானாரும்‌ எந்த கூரத்தாழ்வானுடன்‌ உள்ள ஸம்பந்தத்தாலே தமக்கு மோக்ஷம்‌ கைகூடிற்று என்று அநுஸந்திக்கிறாரோ எல்லையில்லாத நற்குணங்களை உடைய அந்த கூரத்தாழ்வான்‌ திறத்தில்‌ நித்யம்‌ இடைவிடாத பக்தியைப்‌ பண்ணும்‌ மாமுநிகளை மோக்ஷத்திற்காக ஆஸ்ரயித்தவரகளாய்‌ பாபமற்றவர்களான ஆசார்யர்கள்‌ அடியேன்‌ விஷயத்தில்‌ க்ருபை பண்ணி யருள வேணும்‌ !

அர் வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த் நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்தி மாபு
ஸோ யம் ராமாநுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ் தாம்
யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத-
–பின்னுள்ள ஆசார்யர்கள்‌ எவருடைய திருவடித் தாமரையிணையோடு ஸம்பந்தம்‌ பெற்றும்‌ , முன்னுள்ள ஆசார்யரகள்‌ எவருடைய திருமுடியோடு ஸம்பந்தம்‌ பெற்றும்‌ மோக்ஷம்‌ அடைந்‌தனரோ , அந்த ராமாநுஜ முநிவரே எவருடைய ஸம்பந்தத்தாலே தமக்கு மோக்ஷம்‌ கைப்பட்டதாகக்‌ கருதினாரோ , அத்தகைய கூரத்தாழ்வான்‌ எப்படி வர்ணிக்கப்படுவார்‌-என்பது அநுஸந்தேயம்–மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அன்றோ -–ஆழ்வான்‌ விஷயமாக திருவரங்கத்தமுதனார அருளிச் செய்ததை உட்கொண்டு என்று ஆழ்வானைக்‌ குறிப்பிடுகிறார்‌-

—

யதிபதி பத யுக்மம் தைவதம் யஸ்ய நான்யத் தமிஹ வடுக பூர்ணம் சாதரம் பாவ யந்தம்
ஸததம பிலஷந்தம் தஸ்ய நிஷ்டாம் கரிஷ்டாம் வர வர முனி வர்யம் சந்ததம் சிந்தயேயம்
–63-

யதிராஜருடைய திருவடித் தாமரைகளைத் தவிர எவருக்கு வேறு தெய்வம் இல்லையோ அந்த வடுக நம்பியை இங்கு பிரியத்தோடு எப்போதும் நினைப்பவரும்-அவர் தம் ஆழ்ந்த உறுதியை -அந்திம உபாய நிஷ்டையை -தமக்கு விரும்பும் முனிகளிலே ஸ்ரேஷ்டரான மா முனிகளை எப்போதும் சிந்திக்கக் கடவேன்-எந்த வடுக நம்பிகளுக்கு எம்பெருமானாருடைய திருவடி யிணையைத் தவிர மற்றோர தெய்வம இல்லையோ அந்த வடுக நம்பியை ஆதரத்துடன்‌ திரு வுள்ளத்திலே அநுஸந்தித்து அவருடைய அந்திமோபாய நிஷ்டையை எப்போதும்‌ தமக்கு விரும்பும்‌ மாமுநிகளை எப்போதும்‌ உஜ்ஜீவந ஹேதுவாக அநுஸந்திக்கக் கடவேன்‌-

—

ஸடரிபு முனி த்ருஷ்ட ஸாம வேதம் வ்யவருணு த யோ யதிராஜ சாஸநே ந
தமிஹ சடஜிதாஹ் வயம் ஸ்ர யந்தம் வர முனி வர்ய முபாஸி ஷீய நித்யம்
–64-

நம்மாழ்வார் கண்ட சாம வேத சமமான திருவாய் மொழியை நம் ஸ்வாமி எம்பெருமானாருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே எவர் ஆறாயிரப்படி வியாக்யானம் செய்து அருளினாரோ அந்த திருக் குருகைப் பிரான் பிள்ளானை ஆஸ்ரயித்த வர வர முனியை எப்பொழுதும் ஆஸ்ரயிக்கக் கடவேன்-

–

ஸடாரி த்ருஷ்ட வேத மௌலி பாவ ஸம் ப்ரகாஸ க்ருத்
க்ருதேத ரோக்தி மௌலி வேத்ய யோகி சேகர ஸதா
ஸமாதி ஸத் குணோததவ் நிமஞ்ஜ தீவ யஸ்ய தீ
வரோ பயந்த்ரு யோகி நம் நிரந்தரம் தமாஸ்ரயே
–65-

ஒருவராலும் செய்யப் படாததும் நம்மாழ்வாரால் சாஷாத் கரிக்கப் பட்டதுமான திருவாய் மொழியின்
கருத்தை தெளிவாக வெளியிட்ட வேதாந்தி என்று அறியப் படும் சம தமாதி ஸத் குணக் கடலான –
க்ருதேத ரோக்தி மௌலி வேத்யர் -நஞ்சீயர் இடம் எப்பொழுதும் எவருடைய திரு உள்ளம்
ஆழ்ந்து இருக்கிறதோ அந்த மா முனிகளை இடைவிடாது ஆஸ்ரயிக்கிறேன்
-வேதாந்த வேத்யர்‌ என்று நஞ்ஜீயரைச்‌ சொல்லுகிறது . த்ராவிட வேதமும்‌ அபெளருஷேயமே ! அது நம்மாழ்வாரால்‌ வெளியிடப்பட்டது மாத்ரமே !

—

தத மது ரக பீர த்ராவிடாம் நாய பாஷ்யம் யது தி தமிஹ சந்த ஸந்ததம் சீல யந்தி
ஸ ஹி விஹரதி கிருஷ்ணோ தேசிகோ யஸ்ய சித்தே ச தி சது வர யோகீ பத்ர மவ்யாஹதம் ந
–66-

ஒன்பதினாயிரம் போன்று இனிமையானதும் ஆழமானதுமான திராவிட வேத பாஷ்யமானது
எவரால் அருளிச் செய்யப் பட்டு அத்தை நல்லோர்கள் எப்பொழுதும் கௌரவிக்கிறார்களோ
அந்த ஆச்சார்யரான கிருஷ்ண ஸூரி என்னும் பெரிய வாச்சான் பிள்ளை எவருடைய திரு உள்ளத்தில் இன்புறுகிறாரோ அந்த மா முனிகள் நமக்கு தடைவிடாத மங்களங்கள் அருள திரு உள்ளம் பற்ற வேணும் –

—

ஸூதா சிந்தோர் இந்தோஸூ ஸூஹ்ருத திக பீரம் ஸூ மதுரம்
யதுக்தம் பாஷ்யம் தச் சட ஜித் உதிதாம் நாயா சிரஸ
ஸ கிருஷ்ணார்ய புஷ்ணன் ஹ்ருதி விஹரணம் யஸ்ய ஜயதி
ஸ்ரியம் சந்தன் யான்மே வர முனி வரஸ்ய ப்ரதிதி நம்
–67-

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதாந்தமான திருவாய் மொழிக்கு மிகவும் ஆழ்ந்ததாய் மிக்க இனியதாய் அம்ருதக் கடலுக்கும் சந்திரனுக்கும் நட்ப்புடைத்தாய் விளங்கும் வியாக்யானமானது எவரால் அருளிச் செய்யப் பட்டதோ அந்த கிருஷ்ணன் என்னும் பெரிய வாச்சான் பிள்ளை எவருடைய திரு வுள்ளத்தில் ஆனந்தத்தை உண்டு பண்ணிக் கொண்டு தாமும் ஆனந்தமாக விளங்குகிறாரோ அந்த வர வர முனி தினம் தோறும் அடியேனுக்கு கைங்கர்ய ஸ்ரீ யை வளர்த்து அருளிச் செய்ய வேண்டும்-சந்திரன் ஸூர்யனது ஒளி வாங்கி பிரகாசிப்பது போல் திருவாய் மொழி அர்த்த விசேஷங்களை விளக்கியே ஸ்ரீ கிருஷ்ண பக்தியை வளர்க்கும் தன்மையால் சந்திரனுக்கு மித்ரன் என்றவாறு –

இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யாநம்‌ சந்த்ரனுடைய பண்புகளைத்‌ தன்னிடத்திலே கொண்டு உள்ளது. சந்த்ரன்‌ ஸ்வயமாக ப்ரகாஸிப்பவன்‌ அல்லன்‌ ; ஸூர்யனுடைய ஒளியை ப்ரதி பலித்து அதைக்‌ கொண்டே ப்ரகாஸிப்பவன்‌- இருபத்து நாலாயிரப் படியும்‌ தான் தோன்றியாக எந்த அர்த்தத்தையும்‌ காட்டாது ; தனக்கு மூல பூதமான திருவாய்மொழியில்‌ காட்டப் பட்டுள்ள அர்த்த விஸேஷங்களைக்‌ கொண்டே ப்ரகாஸிக்கும்‌. மேலும்‌ சந்த்ரன்‌ காமத்தை வளர்ப்பவன்‌ * கண்ணனுக்கே ஆமது காமம்‌ * (இராமாநுச நூற்றந்தாதி 40) என்கிறபடியே க்ருஷ்ண பக்தியை வளர்ப்பது இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யாநம்‌. சந்த்ரனுக்கு எல்லாரையும்‌ மகிழ வைக்கும்‌ தன்மை உண்டு. கற்றறிந்த பெரியோர்கள்‌ இருபத்து நாலாயிரப் படியில்‌ காட்டப்‌ படும்‌ ஸாஸ்த்ர ஸம்ப்ரதாய அர்த்த விஸேஷங்களின்‌ ரஸமநுபவித்து மிகவும்‌ மகிழ்ச்சியை அடைவர்‌. இப்படி இருக்கும்‌ பொதுவான தன்மைகளைத்‌ திருவுள்ளம்‌ பற்றி இதை சந்த்ரனுக்கு மித்ரனாய்‌ அருளிச் செய்கிறார் –

—

நிகில நிகம மௌலி சார ஸாரம் ப்ரதயதி யத் த்ரவிடாக மாந்த பாஷ்யம்
ததிஹ ஜயதி யத் பிரசாத சீதம் ஹ்ருதய ஸதா வர யோகி நம் பஜஸ்வ
–68-

எந்த திராவிட வேத வியாக்யான மானது அனைத்து வேதாந்த மிக்க சாரமாக விளங்குகிறதோ
அந்த இருபத்து நாலாயிர வியாக்யானமும் எவருடைய-பிரசன்ன மதுரமான வியாக்யானத்தால் –
பிரசாதத்தினால் குளிர்ந்து இங்கு பிரகாசிக்கிறதோ அந்த மா முனிகளை என் மனமே எப்பொழுதும் ஆராதிப்பாயாக – இது ஈட்டுக்கும் பொருந்தும்-மாமுநிகள்‌ க்ருபையாலே அருளிய ப்ரஸந்ந மதுரமான உபந்யாஸத்தினால்‌ இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யாநமும்‌ கேட்பவர்களுக்குக்‌ குளிரந்த ஸுகத்தை உண்டு பண்ணுகிறது என்றபடி –

—

ஸூதா சாரா காரம் ஸகல நிகமாந்தார்த்த முகுரம்
யத் யுக்தம் தத் பராங்குச நிகம பாஷ்யம் சரண யன்
ஸமிந்தே யத் சங்கஸ் ஸ விஹரதி கிருஷ்ணோ குரு வர
ஸதா யச் சித்தே தம் வர வரம் உபாஸே முனி வரம்
–69-

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதம் ஆகிய திருவாய் மொழிக்கு அருளிச் செய்யப்பட
எந்த வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப்படி யானது -அம்ருத சாரமாய் வேதாந்தங்கள் அர்த்தங்களை எல்லாம் தெளிவாகக் காட்டும் கண்ணாடியாய் ஸ்ரீ வைஷ்ணவ சமுதாயத்து தஞ்சமாய் விளங்குகிறதோ எதனோடு சேர்ந்து கொண்டு அந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்கிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை எவருடைய திரு உள்ள கமலத்தில் எப்போதும் உல்லாஸமாக
ஆனந்தத்தை அளித்துக் கொண்டு விளங்குகிறதோ அந்த மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன் –

–

ஸர்வஜ் ஜேந த்ருதா ஹி யேந சிரஸா சா கிருஷ்ண பாத உத்பவா
ஸ்ரீ பராங்குச வேத மௌலி விவ்ருதிஸ் ஸ்வர் வாஹிநீ ஸோ த ரீ
தாபம் ஸர்வ ம பாகரோ தி பவி நாம் தத்தே பராம் நிர் வ்ருதம்
ஸேவே தஸ்ய பாதாப்ஜ யுக்ம மநிசம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
–70-

எந்த பரம சிவனால் தலையால் தாங்கப் பட்ட ஆகாசக் கங்கை சம்சாரிகளுடைய எல்லா தாபங்களையும் போக்குகிறதோ அதைப் போன்று நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள வேதாந்தம் ஆகிய திருவாய் மொழிக்கு விவரணமாய் வடக்குத் திரு வீதிப் பிள்ளையிடம் இருந்து தோன்றிய ஈடு -அது எல்லாம் அறிந்த ஸ்ரீ மா முனிகளால் திரு முடியில் தரிக்கப் பட்டு கங்கையின் சகோதரி யாக சம்சாரிகளுடைய எல்லா தானங்களையும் போக்கி மேலான ஆனந்தத்தையும் அளிக்கிறதோ
அந்த ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரான மா முனிகளுடைய திருவடித் தாமரை யுக்தத்தை எப்பொழுதும் சேவிக்கிறேன் –ஸ்ரீக்ருஷ்ணபாதர்‌ என்ற திருநாமமுடைய வடக்குத் திருவீதிப்‌ பிள்ளையைக்‌ குறிக்கிறது –ஸ்ரீ வைஷ்ணவ ஸமுதாயமானது எவரை ஆசார்யராகப்‌ பற்றி விளங்குகிறதோ நம்மாழ்வார்‌ அருளிச் செய்துள்ள த்ராவிட வேதாந்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யாநமாய்‌, அமுதின்‌ ஸாரமாய்‌ , எல்லா வேதாந்தார்த்தங்களையும்‌ கண்ணாடி போன்று தெளிவாகக்‌ காட்டுவதாய்‌ இருக்கிற எவரருளின ஈடு முப்பத்தாறாயிரப்படியை ஸ்ரீவைஷ்ணவ ஸமுதாயமானது தமக்குத்‌ தஞ்சமாகப்‌ பற்றி விளங்குகிறதோ -அந்த ஆசார்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை எவருடைய ஹ்ருதய கமலத்தில்‌ எப்போதும்‌ உல்லாஸமாக விளங்கு கிறாரோ அந்த மாமுநிகளை அடியேன்‌ ஆஸ்ரயிக்கிறேன்‌ ! என்கிறார்‌–

ஸ்ரீ க்ருஷ்ண பாத ஸூரி யாகிற வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையின்‌ உபந்யாஸத்தையே முப்பத்தாறாயிரப் படியாக பட்டோலை கொண்டருளினார்‌ . இந்த முப்பத்தாறாயிரப்படி வ்யாக்‌யாநமே ஈடு எனப்படுகிறது . இது திருவாய்மொழிக்கு மிகப் பெரிய வ்யாக்யாநமாய்‌ ரஸவத்தரமாய்‌ அமைந்துள்ளது . இதை ஆகாச கங்கைக்கு சமமாகச் சொல்லலாம்‌. கங்கை கண்ணனுடைய திருவடியிலிருந்து உண்‌டானது -ஸர்வஞ்ஞன் என்று பேர்‌ பெற்ற ஸிவ பெருமானால்‌ திருமுடியில்‌ தரிக்கப்படுகிது ; ஸம்ஸாரிகளின்‌ தாபங்களைப்‌ போக்கி ஸெளக்யத்‌தைக்‌ கொடுக்கிறது ;இதைப் போன்று திருவாய்மொழியின்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யாநமும்‌ ஸம்ஸாரிகளுடைய ஸகல தாபங்களையும்‌ போக்கடித்து அவர்களுக்கு பகவத்‌ குணாநுப ஆநந்தத்தை உண்டு பண்ணுகிறது. இது ஸர்வஜ்ஞரான ஸ்ரீ மணவாளமாமுநிகளால்‌ திருமுடியில்‌ தரிக்கப்படுகிறது . இத்தைப்‌ பரக்க உபந்யஸித்தபடியால்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்று மணவாளமாமுநிகளுக்கு ப்ரஸித்தி உண்டாயிற்று- அந்த மாமுநி களுடைய திருக்கமல பாத யுக்மத்தை ஸதா அடியேன்‌ ஸேவித்து நிற்கிறேன்‌ -என்கிறார் –

–

ஸடரிபு நிகமார்த்த தத்த்வ போதம் ஜநயதி ய கில வாதி ஸிம்ஹ கோஷ
வர வர முனி வர்யம் ஆஸ்ரயே தத் ப்ரவண தியம் ப்ரஸமதி ஸத் குணாட்யம்
–71-

நம்மாழ்வாருடைய தமிழ் வேதத்தில் தத்வார்த்தத்தின் ஞானத்தை எதிர் வாதம் செய்பவர்களுக்கு
ஸிம்ஹ கர்ஜனையாகப் பேசும் எந்த வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அல்பரும் அறியும் படி செய்து அருளுகிறாரோ அதில் ஈடுபட்ட திரு உள்ளத்தை உடையராய் புலன் அடக்கம் முதலிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன்-எந்த வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயருடைய ஸிம்ஹ நாதமான பன்னீராயிரப்படி என்னும்‌ திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ திருவாய்மொழியில்‌ தத்த்வார்த்தங்களின்‌ அறிவை உண்டு பண்ணுகிறதோ , அந்த வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திறத்தில்‌ ப்ரவணமான அதாவது ஈடுபட்ட திருவுள்ளத்தை உடையவராய்‌ ஸமதமாதி ஸமஸ்த ஆத்ம குண ஸம்பந்நராய்‌ இருக்கும்‌ மாமுநிகளை அடியேன்‌ ஆஸ்ரயிக்கிறேன் –

—

சர ப்ரமுக திவ்ய ஸூர்யுதித திவ்ய ஸூக்த்யாசய
ப்ரகாஸந ஸமுத்பவாநி தர லப்ய கீர்த் யுஜ்ஜ்வலம்
குரும் ஹ்ருதி விபாவயந் வர முனிர் ஹி கிருஷ்ணாஹ் வயம்
மதீய ஹ்ருதயே ஸதா ஸ கருணம் விதத்தாம் ஸ்திதம்
–72-

பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் அருளிச் செய்த அருளிச் செயல்களின் அர்த்தங்களை பரப்புவதில் உண்டான வேறு ஒருவராலும் பெற முடியாத வ்யாக்யான சக்ரவர்த்தி என்ற புகழால் விளங்குகிற மஹா ஆச்சார்யரான விலக்ஷண கீர்த்தி உள்ள ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை திரு உள்ளத்தில் சிந்தை செய்து கொண்டு இருக்கும் மா முனி ஒருவரே கருணையோடு அடியேனுடைய ஹ்ருதயத்தில் எப்பொழுதும் நிலை பெற்று இருக்கட்டும் –

பொய்கை யாழ்வார்‌ முதலான எல்லா ஆழ்வார்களுடைய திவ்ய ஸூக்திகளான அனைத்து திவ்ய ப்ரபந்தங்களுக்கும்‌ வ்யாக்யாநம்‌ அருளிச் செய்து இத்தால்‌ உண்டான விலக்ஷணமான கீர்த்தியால்‌ * வ்யாக்யாந சக்கரவர்த்தி * என்ற புகழுடன்‌ விளங்கும்‌ ஸ்ரீக்ருஷ்ணராகிற பெரியவாச்சான் பிள்ளையை திருவுள்ளத்தில்‌ எப்போதும்‌ சிந்தை செய்யும்‌ மாமுநிகள்‌ அடியேனுடைய ஹ்ருதய கமலத்தில்‌ ஸதா வீற்றிருந்தருளட்டும்‌ ! * என்றபடி –

—

ரஹஸ்ய த்ரயாக்யம் ஜகத் தேசிக உத்தமம் ரஹஸ்ய த்ரய அந்தர் கதார்த்த ப்ரதீபம்
விவவ்ரே ஜகத் குப்த யே ய க்ருபாப்தி ச ந பாது ரம்யோ பயந்தா முனீந்த்
ர–73-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே அருளிச் செய்யப்பட முமுஷுப்படியை ரஹஸ்ய த்ரயத்தின்
உள் அர்த்தங்களை லோக ரக்ஷணத்திற்காக ஒளி விளக்காக விளங்கும் கருணைக் கடலான ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் செய்து அருளினாரோ அவர் நம்மை ரக்ஷித்து அருளட்டும்-ரஹஸ்ய த்ரயாக்யம் என்று கால ஷேப பிரபந்தம் ஆகிற முமுஷுப்படியையே சொன்னவாறு –ஸ்ரீபிள்ளை லோகாசார்யர்‌ அருளிச் செய்ததாய்‌ ரஹஸ்ய த்ரயார்த்தங்களை ஸாரமாகவும்‌ தெளிவாகவும் விளக்குகிற முமுஷுப்படியை கருணைக் கடலான எவர்‌ ஸம்ஸாரி ஜீவாத்மாக்கள்‌ உஜ்‌:ஜீவிக்க விவரித்தருளினாரோ அந்த மா முநிகள்‌ நம்மை ரக்ஷிப்பாராக !-திருமந்த்ரம்‌ , த்வயம்‌ , சரம ஸ்லோகம்‌ எனப்படும்‌ மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்த விஸேஷங்‌களை ஏற்கனவே பிள்ளை லோகாசார்யர்‌ அதி ஸங்க்ரஹமாகவும்‌ ஸம்ஸ்க்ருத ப்ரஸூரமாகவும்‌ அதி விஸ்த்ருதமாகவும்‌ அருளிச் செய்திருந்தும்‌ அவை பெண்ணுக்கும்‌ பேதைக்கும்‌ அதிகரிக்க முடியாம லிருந்ததால்‌ முமுஷுப்படி என்னும்‌ ரஹஸ்ய க்ரந்தத்தை கடைசியில்‌ அருளிச்‌ செய்‌தார்‌. இதற்கே மாமுநிகள்‌ வ்யாக்யாநம்‌ அருளிச் செய்துள்ளார்‌. திருமந்த்ரார்த்தம்‌ என்னும்‌ திருநாமத்தை உடைய இது கால க்ஷேப க்ரந்தமாக நம்‌ பெரியோர்களால்‌ கைக் கொள்ளப்‌ படுகிறது . ப்ரபந்நாதிகாரியானவன்‌ அவஸ்யம்‌ திருமந்த்ரார்த்தத்தைக்‌ காலக்ஷேபம்‌ செய்ய வேணும்‌ . மூலத்தில்‌ ரஹஸ்ய த்ரயாக்யம்‌ என்று முமுக்ஷுப்படியே குறிப்பிடப் படுகிறது –

—

ஸ்ரீ மல் லோக குரூதி தா ஸ்ருதி சிரஸ் ஸித்தாந்த ஸஞ்ஜீவி நீ
ஸா தத்த்வ த்ரித யாஹ்வயா கில க்ருதி யத் வ்யாக்யய அலங்க்ருதா
ஸ்லாகா லோல பணீந்த்ர மௌலி விலஸத் ரத் நாம் ஸூ நீ ராஜி தா
பாயான் நஸ் ஸததம் ஸ ஸூந்தர வரோ யோகீ குணைஸ் ஸூ ந்தர
–74-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்டதாய் வேதாந்த சித்தாந்த அர்த்த விசேஷங்களை
விளக்குகின்ற தத்வ த்ரயமாகிற கிரந்தம் எவருடைய வியாக்யானத்தால் அலங்கரிக்கப் பட்டு ஆதி சேஷன் தன் திரு முடியை அங்கீ காரமாக ஆட்டுவதால் விளங்குகிற ரத்னங்களின் ஒளியால்-நீராஜநம் -ஆலத்தி செய்யப்பட்டு பிரகாசிக்கிறதோ -குணங்களால் சிறந்து விளங்கும் அந்த மா முனிகள் நம்மை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –வேதாந்த ஸித்தாந்த தத்த்வாரத்தங்களை விளக்குவதாய்‌ ஸ்ரீபிள்ளை லோகாசார்யரால்‌ அருளிச்‌ செய்யப்பட்ட தத்த்வ த்ரயம்‌ என்னும்‌ க்ரந்தம்‌ எந்த மாமுநிகளுடைய வ்யாக்யாநத்தினால்‌ அலங்‌கரிக்கப்பட்டு மாதுரயாதிகளாலே திருவநந்தாழ்வானாலும்‌ ஸிரஸா ஸ்லாகிக்கப்பட்டு அவனுடைய பணா மணிகளின் ஒளியால்‌ நீராஜநம்‌ (ஆலத்தி) பண்ணப்பட்டு விளங்குகிறதோ – திரு வநந்தாழவானும்‌ மாமுநிகளுடைய தத்த்வ த்ரய வ்யாக்யாநத்தைத்‌ தலை யாட்டி ஸ்லாகிக்கிறான்‌ என்றபடி . நற் குணங்களால்‌ அழகாக விளங்குகிற அந்த மாமுநிகள்‌ நம்மை எப்போதும்‌ காப்பாற்றி யருள வேணும் –

–

ஸ்ருதி ஸ்ம்ருதி சரோ முனி ப்ரப்ருதி ஸூரி ஸூ க்திஸ் புரத்
ப்ரஸூந ரசிதா துலாநக வரார்ய ஸூக்திஸ் ரஜஸ்
பிபர்தி ஸூப ஸுவ்ரப ஸ்ரீய முதார யத் பாரதீ
ச மே தி சது ஸூ ந்தரோ வர முனிஸ் ஸூபம் ஸாஸ்வதம்
–75-

ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் உடைய ஸ்ரீ ஸூ க்திகள் இவற்றை மூலமாகக் கொண்டு தோன்றியதும்-ஒப்பற்றதும் குற்றமற்றதும் தலை சிறந்த ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரால் அருளிச் செய்யப் பட்ட-ஸ்ரீ வசன பூஷணம் என்னும் மலையானது எவருடைய வியாக்யானமான மங்கள மணம் உள்ள ஸ்ரீயை தரித்துக் கொண்டு இருக்கிறதோ வள்ளலான அந்த ஸ்ரீ மா முனிகள் அடியேனுக்கு நிலையான மங்களத்தை அருளட்டும்-திவ்ய கந்தத்துடன் கற்றோர்களுக்கு அணி கலனாய் அநு பாவ்யமாய் உள்ள வியாக்யானம் அன்றோ –1-ஸ்ருதி , ஸ்ம்ருதி , ஆழ்வாரகளின்‌ அருளிச் செயல்கள்‌ இவைகளின்‌ ஸ்ரீஸூக்திகளாகிற புஷ்பங்களாலே தொடுக்கப்பட்டதாய்‌ -2-ஒப்புயர்வற்றதாய்‌ -3-நிர்தோஷமாய்‌ -4-ஆசார்ய புருஷர்களிலே தலை சிறந்தவரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரால்‌ அருளிச் செய்யப்பட்டதாய்‌ விளங்கும்‌ * ஸ்ரீவசநபூஷனம்‌ * என்னும்‌ ஸ்ரீ ஸூக்தி மாலைக்கு எவருடைய வ்யாக்யாநம்‌ மங்களகரமாய்‌ உயர்ந்த நறு மணத்தைத்‌ தருகிறதோ , அந்த அழகிய மணவாளமாமுநிகள்‌ ஸாஸ்வதமான மங்களத்தை அடியேனுக்கு திரு வுள்ளம்‌ பற்றி யருள வேணும்‌ !ஸ்ரீமணவாள மா முநிகள்‌ அருளிச் செய்துள்ள வ்யாக்யாநத்தாலே ஸ்ரீவசநபூஷணம்‌ திவ்ய கந்தத்துடன்‌ கூடி கற்றோரகள்‌ தங்களுக்கு அணிகலனாய்‌ அநுபாவ்யமாய்‌ விளங்கா நின்றது என்று பொருள்‌-

—

ஜகத் குரு வர அநுஐ பிரதித சித்ர குர்வா சயா பிதா ந க்ருதி ஸம் ப்ரகாஸ ந படீ யஸீ யத் க்ருதி
அநந்ய ஸூலபா வ்யநக்த்ய நக சேமுஷீ நை புணீம் ச மே வர வரோ முனிர் விதரது ஸ்ரீயம் பூய ஸீம் —-76-

ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யர் உடைய அனுஜரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் அருளிச் செய்யப்பட ஆச்சர்யமான ஆச்சார்ய ஹ்ருதயமான திவ்ய கிரந்தத்தை விளக்குவதில் மேலானதும் மற்றவர்களுக்கு கிடைக்க அரிதான திறமை உடைய தோஷம் அற்ற ஞானம் நிறைந்ததுமான வியாக்யானத்தை அருளிச் செய்த மா முனிகள் அடியேனுக்கு நிறைந்த ஞான ஸம்பத்தை அளிப்பாராக –ஸ்ரீபிள்ளைலோகாசார்யருடைய திருத் தம்பியரான ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள்‌ நாயனாரால்‌ அருளிச் செய்யப்பட்டதாய்‌ ஸப்தாரத்த காம்பீர்யத்தோடு கூடியதாய்‌ விளங்குகிற ஆசார்ய ஹ்ருதயம்‌ என்னும்‌ அத்புதமான ப்ரபந்தத்தின்‌ அர்த்தங்களை நன்கு விளக்க வல்லதான எந்த மாமுநிகளுடைய வ்யாக்யாநமானது மற்றவர்களுக்குக்‌ கிடைக்க வரிதாய்‌ தோஷ கந்த ரஹிதமான அவருடைய வைதுஷ்ய பூர்த்தியை விளக்குகிறதோ அந்த மாமுநிகள்‌ அடியேனுக்கு அதிகமான ஜ்ஞாந ஸம்பத்தைக்‌ கொடுத்தருள்வாராக-

—

க்ருத்வா அநேகாந் யஹாந்ய ப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர ஸம்பாத கோரம்
தத்தாத் ருக் வாத யுத்தம் யதிபதிர நயத்யம் விஜித்ய ஸ்வ பக்ஷம்
தத் ப்ரோக்தம் ஞான சாரம் வ்யவ்ருணுத கில யோ மேய ஸாரம் ச ஸம்யக்
தஸ்மை நித்யம் நமஸ் ஸ்யாத் வர வர முநயே நிஸ்து லோதார பூம் நே
–77-

அப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர-அமோகமான -நிச்சயமாக பலன் அளித்தே தீரும் படியான நீதி உடன் கூடிய நியாய ஸாஸ்த்ரத்தைக் கொண்டு -17 நாட்கள் கோரமான போராட்டம் போன்று வாதப் போரை செய்து ஸ்ரீ யதிராஜர் எந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை தம் பக்ஷத்துக்கு கொண்டு வந்தாரோ அப்படிப்பட்ட வைபவம் பொருந்திய அருளாளப் பெருமாள் எம்பெருமானாரால் அருளிச் செய்யப் பட்ட ஸ்ரீ ஞான சாரம் ஸ்ரீ பிரமேய சாரம் இவற்றை நன்கு விளக்கி அருளிய அந்த இணை அற்ற உதார குணம் நிறைந்த ஸ்ரீ மா முனிகளுக்கு என்றும் நமஸ்காரங்கள் உரித்தாகட்டும் -நித்யம் அடியேன் தண்டம் சமர்ப்பிக்கக் கடவேன்-அப்ரதிம நய மஹா ஸாஸ்த்ர என்னும்‌ பாடத்தில்‌ அமோகமான நீதியாகிற மஹா ஸாஸ்த்ரம்‌ என்று பொருள் –

–

ப்ரபந்நா நாம் காயத்ர்யம்ருத கவி த்ருஷ்டா யதிபதி
ஸ்துதிர் யத் வ்யாக்யாதா ப்ரஜ நயதி ஸத்வ உத்தர முதம்
அஜஸ்ரம் ந பாயாத் வர முனி வர ஸீல கருணா
ஷமா வாத்சல்யாத்யை அநவதிக குணவ்க ஏகஸ் ச மதுர
—-78-

திருவரங்க அமுதனாரால் அருளிச் செய்யப்பட ப்ரபந்ந காயத்ரி என்று சொல்லப் படுகிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஸ்துதிக்கும் ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி எந்த ஸ்ரீ மணவாள மா வியாக்யானத்தோடே-ஸத்வ குணம் மிகுந்து இருக்கிறவர்களுக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணுகிறதோ-சீலம் தயை பொறுமை வாத்சல்யம் முதலிய எல்லை அற்ற குணக் கூட்டங்களால்
இனிமையாக இருக்கும் அந்த ஸ்ரீ மா முனிகள் எப்போதும் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –திருவரங்கத் தமுதனார்‌ அருளிச் செய்துள்ள ப்ரபந்ந காயத்ரி எனப்படும்‌ எம்பெருமானாருடைய ஸ்துதி ரூபமான இராமாநுச நூற்றந்தாதி யானது எந்த மாமுநிகளுடைய வ்யாக்யாநத்தோடு கூடினதாய்‌ பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நித்யம்‌ அநுஸந்தேயமாய்க்‌ கொண்டு பரமானந்தத்தை அளிக்கிறதோ – ஸீலம்‌ , தயை , பொறுமை , வாத்ஸல்யம்‌ முதலான குணங்‌களால்‌ விளங்குகிறவராய்‌ அடியார்களுக்கு இனியராய்‌ இருக்கிற அந்த மா முநிகள்‌ எப்‌போதும்‌ நம்மை ரஷித்தருள வேணும் –

—

விஷ்ணோர் யத் தர்சன அர்ச்சா சரணி மநு சரன் அர்ச்சனம் சத்த்வ பாஜாம்
சங்கஸ் ஸர்வோ அபி குர்வன் ஜயதி குண நிதிஸ் தத் கடாக்ஷ ஏக பாத்ரம்
தஸ்மாத் காந்தோ பயந்து ப்ரணத ஜன நிதே ஸ்ரீ மதோ தேசிகேந்த்ராத்
நாஹம் நாஹம் ந ஜானே பரமிஹ சரணம் தைவதம் நைவ ஜாநே
–79-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஜீயர் படி என்னும் எம்பெருமானுடைய திரு வாராதன க்ரமத்தை
அனுஷ்ட்டித்து சத்வ குணம் உள்ளவர்கள் அனைவருடைய குழாமும் திரு ஆராதனத்தைச் செய்து கொண்டு சத் குணங்களை நிதியாக உள்ள அந்த மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு பாத்திரமாக விளங்குகிறார்கள் – இங்கு அந்த ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும் அடி பணிந்தவர்களுக்கு நிதி யானவரான மா முனிகளைக் காட்டிலும் மேலான தெய்வத்தை நான் அறிய மாட்டேன்-உபாயமும் நான் அறிய மாட்டேன் அறியவே மாட்டேன்-எப்போதுமே ஜீயர் திருவடிகளே சரணம் என்றே இருப்பேன்-எந்த மாமுநிகளுடைய அடியவர்களான ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ எல்லாரும்‌ நம்‌ தர்ஸநத்துக்கு அநுகுணமாக அவர்‌ அருளிச் செய்துள்ள திருவாராதந க்ரமத்தை ப்ரதிபாதிக்‌கிற ஜீயர் படியில்‌ சொன்னபடி எம்பெருமானுக்குத்‌ திருவாராதனம்‌ பண்ணிக் கொண்டு அவருடைய கடாக்ஷத்திற்குப்‌ பாத்ர பூதராய்‌ மமதமாதி குண நிதியாக விளங்குகிறார்களோ , தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்குச்‌ சேம நிதியா யிருக்கும்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டரான அந்த மாமுநி களை ஒழிய வேறொரு தெய்வத்தை நானறியேன்‌ . மற்றொன்றை உஜ்ஜீவநத்துக்கு உபாயமாகவும்‌ நான்‌ அறியேன்‌ -எப்போதும்‌ ஜீயர்‌ திருவடிகளே ஸரணம்‌ என்று இருப்பேன்‌ -என்கிறார் –

—

ஸ்ரீ மத் காந்த வரஸ்ய தேசிக வரஸ்ய அங்க்ரீ ஸரோஜ உபமவ்
ஸம்ஸார ஆர்ணவ மக்ந ஸர்வ ஜனதா சாந்தாரணை கவ்ரதவ்
யே த்யா யந்தி ஸதா தத் அந்ய விமுகாஸ் தத் தர்சிதே ஸத் பதே
நிஷ்டாம் பிப்ரதி ஸத் குணைஸ் ஸூ ரபி தாஸ்தேப்யோ மஹத் ப்யோ நம
-80-

ஸ்ரீ மானான ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான மா முனிகளுடைய -ஸம்ஸாரக் கடலில் ஆழ்ந்து உள்ள
எல்லா சேதனர்களையும் கரை சேர்ப்பதையே விரதமாகக் கொண்ட பொன்னடியாம் செம் கமலமான
திருவடி இணைகளை யார் த்யானிக்கிறார்களோ -அவற்றைத் தவிர வேறு எதையும் காணாதவர்களான –அவர் காட்டிய நல் வழியிலேயே நிஷ்டையை உடையவர்களாக -நற் குணங்களால்
நறு மணம் உடையவர்களாக உள்ள அந்த மகான்களுக்கு நமஸ்காரம்-ஸத் குணங்களாலே நறுமணம் பெற்று விளங்குபவர்களான எந்த மஹா புருஷர்கள் -1-ஸம்ஸார ஸாகரத்தில்‌ மூழ்கி யிருக்கும்‌ ஜனங்களை அதைத்‌ தாண்டி அக்கரை காணும்‌ படியாகச்‌ செய்வதையே வ்ரதமாகக்‌ கொண்டிருக்கும்‌ மாமுநிகளுடைய கமல ஸமாநமான் திருவடிகளை – அவற்றைத் தவிர மற்றொன்றில்‌ நெஞ்சு செலுத்தாதவர்களாய்க்‌ கொண்டு – எப்போதும்‌ த்யாநிக்கிறார்களோ-2- எவரால்‌ காண்பிக்கப்பட்ட ஸத் ஸம்ப்ரதாயத்திலே நிஷ்டையை உடையவர்களாய்‌ இருக்கிறார்களோ அப்படிப்பட்ட மணவாள மா முநிகளுடைய பொன்னடியாம்‌ செங்கமலத்தைத்‌ தம்‌ ஸிரத்தால்‌ தரிக்கும்‌ மஹா புருஷர் களுடைய திருவடிகளுக்கே அடியேனுடைய ப்ரணாமம்‌ என்றும்‌ உரித்தாயிடுக !

—

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந
–81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –மாதுர்யாதிஸ யத்தாலே தேனையும்‌ அம்ருத ரஸத்தையும்‌ திரஸ்கரித்திருக்கும்‌ எந்த மாமுநிகள்‌ அருளிச் செய்துள்ள யதிராஜ விம்ஸதியானது ஸமஸ்த ஸம்ஸாரி சேதநர்களுக்கும்‌ எல்லா நன்மைகளையும்‌ விளக்கமாகக்‌ காட்டுகிறதோ , அந்த மாமுநிகள்‌ நமக்கு மங்களங்களைக்‌ கொடுத்தருள வேணும் –

—

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய
–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் – ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்-யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் – ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –யதிராஜ விம்ஸதியை அருளிச் செய்தவர்‌ இதரர்களுக்குக்‌ கிடைக்க அரிதான மஹிமையை உடைய யோகி-ஸ்ரேஷ்டரான ஸ்ரீமணவாளமாமுநிகள்‌. அவர்‌ யதீந்த்ர ப்ரவணர்‌ என்று ப்ரஸித்தி பெற்றவர்‌ . ஸ்துதிக்கு விஷயமான ஸ்துத்யரான நம்‌ ஸ்வாமி எம்பெருமானாரோ அளவற்ற குணப் பெருமைகளை உடையவர்‌ . இவரே உத்தாரகாசார்யர்‌ என்று ப்ரஸித்தராய்‌ இருப்பவர்‌ . இப்படி ஸ்தோத்ரு-ஸ்துத்ய-வைலக்ஷண்யத்தாலே (துதிப்பவர்‌ , துதிக்கப்‌ படு பவர்‌) ஆகிய இருவரின்‌ தனிப் பெருமைகளாலே யதிராஜ விம்ஸதி மிகவும்‌ உயரந்தது . இதற்கு ஸமமான ஸ்தோத்ரம்‌ வேறு ஒன்றும்‌ இல்லை என்று அத்யவஸித்திந்க்கும்‌ விலக்ஷண அதிகாரிகள்‌ கலியையும்‌ ஜயிக்க வல்லவர்கள்‌ ஆவார்கள்‌ –

—

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம்
–83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்-நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள் அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –எந்த மாமுநிகள்‌ அருளிச் செய்த யதிராஜரைப்‌ பற்றிய ஒப்பற்ற ஸ்தோத்ரமான யதிராஜ விம்ஸதி யானது தேனிலும்‌ த்ராக்ஷையிலும்‌ அம்ருத ரஸத்திலும்‌ விஞ்சி இருக்கும்‌ மாதுர்யத்தை உடையதோ , யதீந்த்ர ப்ரவணரான (யதிகளிலே தலை சிறந்தவரான நம்‌ ஸ்வாமி எம்பெருமானாரிடத்‌திலே பக்திப் பெருங்காதலை உடைய) அந்த மாமுநிகள்‌ அடியேனுக்கு மங்களத்தைத்‌ திருவுள்ளம்‌ பற்றி யருள வேணும் –

—

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம
–84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின் அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்-ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருளப் பெற்ற ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் – அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –வேதாந்தமாகிற பாற்கடலின்‌ அமுதமான யதிராஜ விம்ஸதி என்னும்‌ எந்த ஸ்துதியானது திருவரங்கத் தமுதனார்‌ அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதியின்‌ அரத்தாநுஸந்தாந மடியாகத்‌ தோன்றியதாய்‌ ஆண்டாளருளிய நாச்சியார் திருமொழியின்‌ ஸ்வாபதேஸார்த்தமான * ஆசார்யனே உபேயமும்‌ உபாயமும்‌ * என்னும்‌ ஆசார்ய நிஷ்டையை நிரூபிக்கிறதோ , இந்த்ரியங்களை அடக்கியாளும்‌ யோகிகளில்‌ தலை சிறந்தவராய்‌ இருக்கிற அந்த அழகிய மணவாள மாமுநிகள்‌ அடியேனுக்கு ஸ்வாமியாவார்‌. அவர் தம்‌ திருவடிகளில்‌ அடியேனுடைய ப்ரணாமங்களை ஸமர்ப்பிக்கிறேன்‌ என்கிறார் –

—

யதி வர பக்தி பூர்த்தி கலி தார்த்தி சமாஹ்வய யத் க்ருதி ரஸா வேதிந
கில தரந்தி பாவார்த் யுததிம்
தம் அநு தினம் யதீந்த்ர பத பங்கஜ ப்ருங்க வரம்
வர முனிம் ஆஸ்ரயாசய விஹாய தத் அந்ய ருசிம்
–85-

யதிகளில் ஸ்ரேஷ்டரான நம் ஸ்வாமி எம்பெருமானார் இடத்து முதிர்ந்த தமது பக்தியினால் தூண்டப்பட்டு – பரம பக்தி தலை எடுத்து – ஆர்த்தி என்ற பெயரை உடைய எந்த பிரபந்தத்தில் ரஸத்தை அறிந்தவர்கள் ஸம்ஸார தாபக் கடலைக் கடக்கிறார்கள் அன்றோ-நெஞ்சே யதிராஜருடைய திருவடித் தாமரைகளில் இருக்கும் தலை சிறந்த வண்டு போன்ற அந்த மா முனிகளை-தினம் தோறும் மற்றவற்றில் ருசியை அறவே விட்டு ஆஸ்ரயிப்பாயாக –ஆர்த்தி ப்ரபந்தத்தில்‌ மாமுநிகள்‌ நம்‌ ஸ்வாமி எம்பெருமானார்‌ திறத்தில்‌ பரம பக்தி தலையெடுத்து ஸம்ஸாரத்தின்‌ தாப த்ரயத்தை ஸஹிக்க முடியாமல்‌ தம்முடைய ஆர்த்தியை வெளியிட்டருளினார்‌. ஆர்த்தி ப்ரபந்தத்தின்‌ ரஸத்தை உணர்ந்த பெரியோர்கள்‌ ஸம்ஸார து :க்க ஸாகரத்‌தைக்‌ கடந்து பரம பதத்தை அடைகிறார்கள்‌ , * ஹே நெஞ்சே ! எம்பெருமானாருடைய திருவடித்‌ தாமரைகளில்‌ வண்டைப்‌ போன்று ஈடுபட்டிருக்கும்‌ அந்த மாமுநிகளையே நீ இதர விஷயங்‌களில்‌ ருசியை வாஸனையோடே விட்டு தினந்தோறும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பாய் –

–

ஸடாரி த்ருஷ்ட ஸாம வேத பாஷ்ய தர்சித அகில
பிராமண சங்கரஹோ மஹா உபகாரகோ மநீஷிணாம்
முதம் தநோதி யத் க்ருதிஸ் ஸமாஸ்ரயஸ்வ சாதரம்
மநோ ஹரோ பயந்த்ரு யோகி நம் தமன்வஹம் மன
–86-

நம்மாழ்வாரால் காணப்பட்ட சாம வேத சமானமான திருவாய் மொழியின் பாஷ்யம் ஆகிற ஈட்டில்
காட்டி அருளப் பெற்ற அனைத்துப் பிரமானங்களுக்கும் எந்த மா நுனிகளால் அருளிச் செய்யப்பட்ட
எந்த தொகுப்பானது பகவத் விஷய அதிகாரிகளுக்கு மிகுந்த உபகாரத்தைச் செய்து ஆனந்தத்தை
உண்டாக்குகிறதோ மனசை வசீகரிக்கும் அந்த மா முனிகளை ஹே மனமே தினம் தோறும் ஆதாரத்தோடு ஆஸ்ரயிப்பாயாக -அனு தினம் அனுசந்திக்கக் கடவாய் –ஹே மனமே ! நம்மாழ்வார்‌ கண்ட த்ராவிட ஸாம வேதமான திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈடு முப்பத்தாறாயிரப்படியில்‌ காட்டப்பட்ட ப்ரமாணங்களுக்கு ஆகரம்‌ எந்த மாமுநிகளால்‌ தொகுத்தருளிச்‌ செய்யப்பட்டு பகவத் விஷய-அதிகாரிகளுக்கு மஹோபகாரகமாய்‌ ஆநந்தாவஹமாய்‌ விளங்குகிறதோ , அந்த மாமுநிகளையே ஆதரத்துடன்‌ அநு திநமும்‌ அநுஸந்திக்கக் கடவாய் –

—

ஸ்வ க்ருத ஜகத் குரு தத்வ த்ரிதய வ்யாக்யான மான ஸங்க்ரஹத
பவி நாம் க்ருத உபகாரோ வர யோகீ பாதுநஸ் ஸததம்
–87-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருடைய தத்வ த்ரயத்துக்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்-மற்றும் பிராமணத் திரட்டல் சம்சாரிகளுக்கு உபகாரம் செய்து அருளினவரான யோகிகளில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –ஸ்ரீபிள்ளை லோகாசார்யரால்‌ அருளிச் செய்யப்பட்ட தத்த்வ த்ரயத்துக்கு மாமுநிகள்‌ வ்யாக்யாநம்‌ அருளிச் செய்துள்ளார்‌. தத்த்வ த்ரய வ்யாக்யாநத்துக்கு ப்ரமாணத் திரட்டும்‌ மாமுநிகளாலேயே அருளிச் செய்யப்பட்டது . இப்படி ஸம்ஸாரிகளுக்கு மஹோபகாரகராக விளங்கும்‌ அந்த மாமுநிகள்‌ நம்மை எப்போதும்‌ ரஷித்தருள வேண்டும் –

—

யதீ யய உபதேஸ ரத்ன மாலயா பரிஷ் க்ருதா
யத் அங்க்ரி பத்ம சேகரா ஜயந்தி தேசிக உத்தமா
தம் ஆஸ்ரி தஸ்ய ஸூ ந்தரோ பயந்த்ரு யோகி சேகரம்
பவ ஆர்ணவ அபி கோஷ் பத த்வமேதி தத் ப்ரபா வத
–88-

எவருடைய உபதேச ரத்ன மாலையை நன்கு அனுசந்தித்தவர்களாய் எவருடைய திருவடித் தாமரைகளை தலைக்கு அணிகலனாகக் கொண்டவர்களாய் விளங்கும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்கள் சம்சாரத்தை வெல்கிறார்களோ-அந்த மா முனி ஸ்ரேஷ்டரை ஆஸ்ரயித்த வர்களுடைய ஸம்ஸார ஆர்ணவமும் அந்த மா முனியின் பிரபாவத்தாலே குளப்படியாகும் தன்மையை அடைகிறது அவர்களுக்கு மோக்ஷம்‌ நிஸ்சயம்‌ –

மன்னுயிர் காள் இங்கே மணவாள மா முனியாம்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தால் தீண்டல் கடன் -எறும்பி அப்பா பாசுரம் அனுசந்தேயம்
–

—

சடாரி த்ருஷ்ட ஸாம வேத மௌலி ஸங்க்ரஹாத் மிகாம்
யத் யுக்திம் அன்வஹம் க்ருணன் வி முக்தி ஸம்பதாஸ் பதம்
ஸமேத தே ஸதாம் கணஸ் ஸ நஸ் ஸூபாநி சாதரம்
வரோ பயந்த்ரு யோகி ராட் தரங்க யத்வ நாரதம்
–89-

நம்மாழ்வார் கண்ட சாமவேதத்தின் தலையான திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹமாக எந்த மா முனிகளுடைய திருவாய் மொழி நூற்று அந்தாதியை மோக்ஷமாகிய செல்வத்தைப் பெறக் காரணமாக மஹான்கள் குழாம் நாள் தோறும் ஆதாரத்தோடு அனுசந்தித்து மென்மேலும் அனுபவிக்கிறார்களோ அந்த ஸ்ரேஷ்டரான மா முனிகள் நமக்கு இடைவிடாமல் மங்களங்களை வளரச் செய்து அருளுகிறார் –நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியின்‌ ஸங்க்ரஹமாய்‌ ஒரு திருவாய் மொழிக்கு ஒரு பாட்டாய்‌ அமைந்த எந்த மாமுநிகள்‌ அருளிச் செய்துள்ள திருவாய்மொழி நூற்றந்தாதியை நித்யம்‌ அநுஸந்திக்கும்‌ ஸத் ஸம்ப்ரதாய நிஷ்டர்களான மஹான்களுடைய கோஷ்டியானது மோக்ஷ-ஸாம்ராஜ்ய-ஸம்பத்துக்கு இருப்பிடமாய்‌ வ்ருத்தி யடையா நின்றதோ , யோகிகளுக்குத்‌ தலைவராய்‌ விளங்கும்‌ அந்த மாமுநிகள்‌ நமக்கு மேன்மேலும்‌ நன்மையைப்‌ பெருக்குவாராக –

—

துக்தோதந் வத்த வல மதுரம் ஸூத்த சத்துவ ஏக ரூபம்
ரூபம் யஸ் யஸ் புட யதி தராம் யம் பணீந்த்ர அவதாரம்
த்யாயந்தஸ்தம் வர வர முனிம் கே அபி தன்யா மஹாந்த
காலம் சர்வம் கலுஷ ரஹிதா ஹ்ருஷ்ட சித்தா ஹரந்தி
–90-

எந்த மா முனிகள் பாற் கடல் போன்று வெண்மையாகவும் இனிமையாகவும் ஸூத்த ஸத்வமே
உருவெடுத்தவராகவும் -உத்தம நம்பி போன்ற அந்தரங்கங்களுக்கு காட்டி அருளிய ஆதி சேஷ திரு அவதாரமே என்னும் உண்மையை மிகத் தெளிவாக்க காட்டுவதாக திரு மேனியை உடையவரோ அந்த மா முனிகளை த்யானிப்பவர்களான சில மஹான்கள் தன்யர்களாய் மனக்கலக்கம் அற்றவர்களாய் சந்துஷ்டியை உடையவர்களாய் உள்ள எஞ்சிய காலத்தை எல்லாம் ஸூ கமாகவே கழிக்கிறார்கள் –பாற் கடலைப்‌ போன்று வெண்மையையும்‌ மாதுர்யத்தை உடையதாய்‌ ரஜஸ்‌ தமஸ்‌ கலசாத ஸூத்த ஸத்வத்தையே வடிவாகக்‌ கொண்ட எந்த மாமுநிகளுடைய திருமேனி யானது அவரைத்‌ திருவநந்தாழ்வானுடைய திருவவதார விஸேஷமாகக்‌ காட்டுகிறதோ – உத்தமநம்பி முதலான அந்தரங்கரகளுக்கு மாமுநிகள்‌ தம்முடைய உண்மை நிலையில்‌ – திருவநந்தாழ்வானாக – ஸேவை ஸாதித்தருளினார்‌ என்பது ப்ரஸித்தம்‌. அந்த மாமுநிகளை நித்யம்‌ த்யாநம்‌ செய்யும்‌ சில பாக்யஸாலிகளான மஹான்கள்‌ திருவுள்ளத்தில்‌ கலக்க மற்றவரகளாய ஸந்துஷ்டியை உடைய வர்களாய்‌ ஸுகமாகக்‌ கால க்ஷேபம்‌ பண்ணுகிறார்கள்‌ (போது போக்குகிறார்கள் )-

—

ராஜச் சீ தம யூக மண்டல சரஜ்ஜ்யோத்ஸ்நா ஸநா பித்யுதி
காஷா யாம்பர தாரிணீ கரல ஸத் தண்ட த்ரயீ மண்டிதா
பாலாத் யங்க சமுல்ல ஸத் ஸூவி மலஸ் நிக்த ஊர்த்வ புண்ட்ர உஜ்ஜ்வலா
தீவ் யந்த் யாத்ம குணைஸ் ஸதா வர வர ஆகாரா அஸ்து மே பாவ நா
–91-

எந்த மா முனிகளுடைய திருமேனியானது -குளிர்ந்ததும் ஒளி யுடைய வட்டமான சரத் கால சந்த்ரனை
ஒத்த காந்தியை உடையதோ காஷாய வஸ்திரத்தைத் தரித்து இருக்கிறதோ – திருக்கையில் விளங்கும் மூன்று தண்டங்களால் அழகாக விளங்குகிறதோநெற்றி முதலான துவாதச ஸ்தானங்களில் திகழ்கின்ற தூய்மையான திரு மண் காப்புக்களால் பிரகாசிக்கின்றதோ – ஆத்ம குணங்களைப் பிரகாசிக்கச் செய்கின்றதோ அது எப்பொழுதும் அடியேன் நினைவில் திகழட்டும் –மா முனிகளுடைய ஸூ பாஸ்ரயமான திரு மேனி விஷயமாக பக்தியுடன் கூடின அவிச்சின்ன சிந்தனம் -அநுபவ ரூபமாக அடியேனுக்கு சித்திக்கும் படி அருள வேண்டும் -என்றபடி – ஆச்சார்யர் திருமேனி த்யானம் பிரபன்ன அதிகாரிகளுக்கு உஜ்ஜீவனத்துக்கு அவசியம் கர்த்தவ்யம் என்றதாயிற்று –

இந்த ஸ்லோகத்திலே அடியேனுடைய மநோ விருத்தியான பாவனை எப்போதும் மணவாள மாமுநிகளுடைய திருமேனி விஷயமாகவே உண்டாகக் கடவது – என்று பரார்த்திக்கிறார -ஸ்ரீ மணவாளமாமுநிகளுடைய ஸூபாஸ்ரயமான திருமேனி விஷயமாக பக்தியோடு கூடின அவிச்சிந்ந சிந்தநம்‌ அநுபவ ரூபமாக அடியேனுக்கு ஸித்திக்கட்டும்‌ – என்றபடி- எவருடைய திருமேனியானது பிரகாஸிக்கிற சரத்கால சந்த்ரனுடைய்‌ காந்தியை உடையதோ , காஷாய வஸ்த்ரத்தைத்‌ தரிக்கிறதோ , திருக் கையில்‌ விளக்கும்‌ த்ரி தண்டத்தாலே அழகாக விளங்குகிறதோ, நெற்றி முதலான பன்னிரண்டு ஸ்தாநங்களிலும்‌ திகழ்கின்ற த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களினால்‌ பிரகாசிக்கிறதோ ஆத்ம குணங்களை பிரகாசிக்கச் செய்கிறதோ அந்த மணவாளமாமுநிகளுடைய திருமேனியை விஷாயமாகக் கொண்ட த்யாநம்‌ ஸித்திக்க வேணும்‌ ! * என்றபடி. ஆசார்யருடைய திருமேனியை த்யாநிப்பத்தும் ப்ரபந்நாதிகாரிகளுக்கு உஜ்ஜீவநத்திற்காக அவஸ்யம்‌ கர்த்தவ்யமாம்‌ –

—

சிந்தா மே யதி ஸார்வ பவ்ம சரண ப்ரேமாத்மிகா ப்ரோல்லஸத்
சாந்தி ஷாந்தி தயாதி ஸத் குண மயீ ராகேந்து பாஸாம் நிதி
ஸ்ரீ மத் ஸ்வ அங்க்ரி ஸரோஜ பக்த ஜனதா மோக்ஷ ப்ரதானோத் யதா
பூயாத் ஸர்வ ஜகத் தி தாவ தரணா ஸுவ்ம்யோ பயந்த்ராத்மிகா
–92-

யதிராஜர் திருவடிகளில் ப்ரேமம் நிறைந்தவராயும் மிகவும் பிரகாசிக்கிற சாந்தி பொறுமை தயை முதலிய ஸத் குணங்கள் நிரம்பியவராயும்-பூர்ண சந்த்ர பிரகாசத்துக்கு நிதி போன்றவரும்
தம் திருவடித்தாமரைகளில் பக்தி உடையவர்களுக்கு மோக்ஷம் அளிக்க கார்யம் செய்பவராயும்
உலகம் முழுவதுக்கும் நன்மை செய்து அருளுவதற்காகவே திரு அவதரித்து அருளிய மா முனிகளை
உள்ளடக்கியதாக அடியேனுடைய சித்தம் அமையும் படி அருள வேணும் –ஞானத்துக்கு தனியாக ஆகாரம் இல்லையே -எந்த விஷயத்தை கிரஹிக்கிறதோஅந்த விஷயத்தின் ஆகாரத்தைக் கொண்டே அந்த ஞானத்தை வியாவஹரிக்க வேண்டுமே-மா முனிகள் விஷயமான அடியேனுடைய அனவ்ரத சிந்தனா ரூபமான தியானமும்-தத் ஆகாரமாக தத் ஏக விஷயமாக சித்திக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –

—

அங்கரீ ஸ்ருங்க லிதாப்ஜ கீர்த்தி விபவவ் தந் நால தம்பச் சிதவ்
ஜங்கே ஹஸ்தி கர ப்ரசஸ்தி ஹரணோன் நித்ரம் ததூரு த்வயம்
மத்யம் தான வஹ்ருத்ய மாயத புஜா மத்யம் கவாடோ பமம்
பாஹு த்வந்த்வ மமர்த்ய பூஜ விட பா ஹங்கார பாடச் சரம்
–93-

கண்டம் குண்டித கம்புடம்பர பரம் வக்த்ரம் சரச் சந்த்ரமஸ்
ஸுவ்ந்தர் யோதி தகர்வ சர்வண கலா பாண்டித்ய நித்ய உஜ்ஜ்வலம்
மௌலிம் நிஸ்துலமப்ய பாஸ்த பஜ தா தங்கம் வபுஸ் சாதரம்
தத் ஷீரோத ஸஹோ தரம் வர முநேஸ் சேதஸ் ஸதா பாவய
–94-

இரண்டு ஸ்லோகங்களும் சேர்ந்து யுக்மகம் –-திருமேனி அழகை அமலனாதி பிரான் படியே கூட்டி அனுபவிக்கிறார் –இரண்டாவது ஸ்லோகத்தில்‌ இருக்கும் க்ரியா பதம்‌ எல்லாவற்றிலும்‌ அந்வயமாகக் கடவது –
தாமரையின் கீர்த்தி வைபவத்தைத் துண்டிக்கக் கடவதான திருவடிகளும் யானையின் துதிக்கையின் பெருமையை தோற்கடிக்க -ஜாதக ரூகமான -விழிப்புடன் இருக்கும் திருத் தொடைகளும்
மெலிந்து இருப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் இடையையும்
அகன்ற கதவை ஒத்த புஜங்களுக்கு இடையில் உள்ள திரு மார்பையும்
சுவர்க்கத்தில் உள்ள கற்பக வ்ருக்ஷத்தின் கர்வத்தை அழிக்கும் அனைத்தையும் தர
வல்லவையான இரண்டு திருக்கைகளும்
சங்கத்தின் கர்வத்தை மழுங்கடித்து அழித்த வளைந்த திருக் கழுத்தையும்
சரத்கால சந்திரனுடைய ஸுவ்ர்யத்தினால் வந்த கர்வத்தை அழிப்பதாகிய கலையில்
பாண்டித்யம் உடைய திரு முக மண்டலமும்
ஒப்பு உயர்வு அற்று தன்னை ஆஸ்ரயிப்பவர்களுடைய மனக் கவலையைப் போக்கடிக்கும் எப்பொழுதும் பிரகாசிக்கும் திரு முடியையும்
சமானம் இல்லாது இருந்தும் தோற்கடிக்கப் பட்ட வெண்மையில் பாற் கடலின் உடன் பிறந்தது போன்ற
மா முனிகளின் திரு மேனியையும் ஹே மனமே ஆதாரத்தோடு எப்பொழுதும் ப்ரேமத்துடனே நினைத்து இரு –

—

புண்ட்ரைர் துவாதச பிர்யதா விதி த்ருதை ஸூப்ரை ரதப்ரஸவி
தத்தாக்ருக்சர தம்பு வாஹ படலீ ஸுவ்ந்தர்ய சம்பன் நிதி
தீ பக்த்யாதி குண ஏக சம்ப்ருத யஸஸ் ஸந்தோஹ ஸந்தே ஹதா
மூர்த்திஸ் ஸா வர யோகி ந பிரதிகலம் ஜாகர் து சித்தே மம
-95-

விதிப்படி தரிக்கப் பட்டதும்-தூய்மை நிறைந்த தேஜஸ்ஸை யுடைத்தான துவாதச திருமண் காம்புகளுடன் அதிக காந்தியை உடையதும்-அப்படிப்பட்ட சரத்கால மேக கூட்டத்தின் சவுந்தர்ய சம்பத்தின் நிதியாகிய ஞானம் பக்தி முதலிய குணங்கள் நிறைந்த கீர்த்தியே வடிவு கொண்டதோ என்று சந்தேகிக்கும் படியான மா முனிகளின் திவ்ய வடிவு க்ஷணம் தோறும் அடியேனுடைய சித்தத்தில் பிரகாசிக்கட்டும்
கீழே சிந்தை செய்ய திரு உள்ளத்துக்கு அருளிச் செய்து இதில் மா முனிகளே தமது கிருபா அதிசயத்தாலே பிரதி க்ஷணம் பிரகாசித்து காட்டி அருளப் பிரார்த்திக்கிறார்-க்ரமப்படி தரிக்கப்பட்ட தூய வெண்மையான த்வாதஸ ஊர்த்த்வ-புண்ட்ரங்களினால்‌ அதிக காந்தியை உடையதும்‌ , தூய வெண்மை மிக்க சரத் கால மேகங்களின்‌ கூட்டத்தின்‌ ஸெளந்தர்ய ஸம்பத்திக்குச்‌ சேம வைப்‌பான நிதியாகவும்‌ , ஜ்ஞாநம்‌ , பக்தி முதலான குணங்களின்‌ நிறைவினால்‌ ஏற்பட்ட மிக்க கீர்த்தியே ஒரு வடிவு கொண்டு விளங்குகிறதோ என்கிற ஸந்தேஹத்தை உண்டாக்கக்‌ கடவதாகவும்‌ இருக்கிற மணவாளமா முநிகளுடைய திருமேனி அடியேனுடைய ஹ்ருதயத்தில்‌ ப்ரதி க்ஷணமும்‌ ப்ரகாஸிக்கட்டும்‌ ! * என்கிறார் –

—

யன் மூர்த்தி த்யான மாத்ரம் சமயதி பவி நாம் ஞப்தி பூர்வம் விதத்தே
பக்திம் புஷ்ணாதி விஷ்ணவ் விஷய விஷயீ ணீ மா ஸூ முஷ்ணாதி த்ருஷ்ணாம்
ஸோ அயம் காந்தோ பயந்தா நிரவதிக குணஸ் தோமவிஸ்தாரி கீர்த்தி
ஸ்வர் கங்க உத்துங்க வீசி ப்ரஸமித ஜக தீவிஸ் வதா போ அவ தான்ந
–96-

எவருடைய திரு மேனியை த்யானம் செய்வதால் சம்சாரிகளுடைய துக்கங்கள் போகின்றனவோ
ஞானாதிகள் உண்டாகிறதோ-ஸ்ரீ மன் நாராயணன் இடம் பக்தியை வளர்க்கிறதோ
விஷயாந்தர ப்ராவண்யத்தை சீக்கிரமாக அபஹரிக்கறதோ-எல்லை அற்ற நற் குணங்களின் ஸமூஹத்தினால் எங்கும் பரந்த புகழை உடையவராய்-அந்த கீர்த்தி யாகிற ஆகாச கங்கையின் அலைகளால் உலகோரின் ஸமஸ்த தாபங்களைப் போக்க வல்ல -மஹிமை யுடைய மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருள வேணும் –

—

மாதர் வாணி நிரந்தரம் கதய தான் காந்தோ பயந் துர் குணான்
அந்தர் வாணி வரைர் வர பிரதர மாவாசார்ய முக்யைர் அநு தான்
பாதவ் தஸ்ய கரத் வயார்சய பவா தங்கா பவா தவ் சதா
தத் பக்தான் அநு சிந்த்யாசய தமோவை தேசிகான் தேசிகான்
–97-

ஹே தாயே சரஸ்வதியே வாணியே வித்வான்களில் சிறந்தவரான ஸ்ரீ வரத குரு ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ குரு ஆகிய முக்யமானவர்களால் ஸ்துதிக்கப் பட்ட மா முனிகளுடைய சமம் தமம் தயை முதலிய குணங்களை இடைவிடாது சொல்லக் கடவாய் -எனது இரு கைகளே எப்போதும் சம்சார பீதியைப் போக்க வல்ல அவருடைய இரண்டு திருவடிகளையும் அர்ச்சிப்பீர்களாக-தமோ குணத்துக்கு-வைதேசிகர்களான – அப்பாற்பட்ட-ஸூத்த சத்வ குணமே உடைய – அவர் இடம் பக்தியை உடைய ஆச்சார்யர்களை மனமே இடைவிடாது சிந்தித்து இரு –ஹே தாயே! ஸரஸ்வதியே! வாணியே! வித்வான்களில்‌ மிகச் சிறந்தவர்களான ஸ்ரீவரத நாராயண குரு , ஸ்ரீநிவாஸ குரு முதலான தேமிக-ஸ்ரேஷ்டர்களால்‌ எப்போதும்‌ துதிக்கப்‌ படுகிற அந்த மணவாள மாமுநிகளுடைய பக்தி , சம , தம , தயாதி குணங்களை நீ அநவரதம்‌ பக்தியோடு சொல்லக் கடவாய்‌ ! ஸம்ஸார பீதியைப்‌ போக்கக் கடவதான மாமுநிகளுடைய திருவடிகளை எனது இரு கைகளே ! நீங்கள்‌ பூஜிக்கக் கடவீர்கள்‌! ஹே மனமே! நீ தமோ குணத்திற்கு வைதேரிகர்களாய்‌ (-அப்பாற் பட்டவர்களாய்‌) ஸூத்த ஸத்த்வ குணத்தை உடையவர்களாய்‌ மாமுநிகளுடைய திருவடிகளில்‌ பக்தி பூண்டவர்களான ஆசார்யர்களை எப்போதும்‌ சிந்தித்திருப்பாயாக –

–

அஞ்ஞான அஹம் அக்ர ணீ ரத ச மாம் மன்யே ப்ருசம் பண்டிதம்
பாபீ யாநபி பாப லேச ரஹிதம் ஹா நிஸ்சி நோ மி ஸ்வயம்
பாஸ்வத் கர்ம விதே சகோ அபி கலயே ஸத் கர்ம நிஷ்டம் ஹ்ருதா
திங்மாம் நாத மஹா முநே ததது நா த்ராதும் த்வமேவ ஷம
–98-

ஞானம் அற்றவர்களில் அடியேன் முதன்மை யானவன்-அப்படி இருந்தும் அடியேனை மிக்க பண்டிதனாக நினைக்கிறேன்-பாபியாக இருந்தும் பாபம் சிறிதும் அற்றவனாக அடியேன் நிச்சயிக்கிறேன்-அந்தோ-பிரகாசிக்கிற ஸத் கர்மங்களுக்கு மிகவும் அப்பால் பட்டவனாக இருந்தும்
மனசில் ஸத் கர்மாக்களில் ஊன்றியே இருப்பவனாகவே நினைக்கிறன் –அடியேனுக்கு ஸ்வாமியான மா முனிகளே -அடியேனை அடியேனே திரஸ்கரிக்கிறேன்-ஆகையால் இப்பொழுது அடியேனை ரக்ஷிப்பதற்கு தேவரீர் ஒருவரே சக்தராகிறீர்–

—

நாஹம் ஸத் கர்ம கர்த்தும் படுர படுதரஸ் சாங்க்ய யோகம் விதாதும்
நைவத் யாதும் பரஸ்மாத் பரமம் அனுபமம் தாம பூமா நிதாநம்
நைவ ந்யஸ்யாமி தஸ்மிந் பரம நதி கமாத் தத்ர விச்வாஸ பூம் நோ
பக்தே ஸ் தஸ்மாது பாயோ வர முனி வர மே த்வத் கிருபைவா நபாயா
-99-

ஸத் கர்மங்களை செய்வதில் அடியேன் திறமை உடையேன் அல்லேன்-ஞான யோகத்தை அனுஷ்டிப்பதற்கு மிகவும் சக்தி அற்றவன்-ஒப்பற்ற பூமா நாயகனான பரமாத்மாவை த்யானிப்பதற்கும் சக்தி அற்றவன்-அவன் இடத்தில் மஹா விச்வாஸத்துக்கு பாத்ரனாக அறியாததால் அவன் இடத்தில் அடியேன் பாரத்தை ஒப்படைக்க வில்லை – ஆகையால் அகிஞ்சனனாய் அநந்ய கதியான அடியேனுக்கு மா முனிகளே அபாயம் அற்ற தேவரீருடைய கிருபையே முக்தி அடைவதற்கு உபாயம் ஆகும் –-ப்ராப்ய த்வரையான பரபக்திக்கும் தேவரீர் கிருபையே காரணம் என்றபடி –

அடியேன்‌ விஹிதமான ஸத் கர்மங்களைச்‌ செய்ய ஸமர்த்தனல்லேன்‌ -ஸாங்க்யயோகமான ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க மிகவும்‌ அஸமர்த்தன்‌ -ஆகையால்‌ பராத்பரனாய்‌ , ஒத்தார்‌ மிக்காரை யிலையாய மாமாயனாய்‌ , ஸ்ரீபூமிநீளாநாயகனாய்‌ , பரம தேஜஸ்வியான பரம புருஷனை த்யாநம்‌ செய்ய மிகவும்‌ அஸக்தனாக இருக்கிறேன்‌ -துஷ்கரமான உபாயாந்தரங்களை விட்டு எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸரணாகதி செய்யலாமே என்றால்‌ – அதற்கும்‌ அடியேன்‌ ௮திகாரி அல்லேன்‌ -பர ஸமர்ப்பணத்திற்கு ஆவஸ்யகமான மஹா விஸ்வாஸம்‌ அடியேனுக்கு உண்டாகவில்லை. ஆகையால்‌ அகிஞ்சநனாய்‌ அநந்யகதியாய்‌ இருக்கிற அடியேனுடைய மோக்ஷ புருஷார்த்த ஸித்திக்கு அபாயம்‌ சிறிதுமில்லாத தேவரீருடைய ஸ்வாபாவிகமான க்ருபையே உபாயமாகக் கடவது – என்கிறார்‌- தேவரீரே பரம க்ருபையினால்‌ அடியேனை உஜ்ஜீவிப் பித்தருள வேணும்‌ -என்று மாமுநிகளுடைய ஸந்நிதியில்‌ ப்ராரத்தித் தாராயிற்று -பாட பேதத்தால் ப்ராப்ய த்வரையான பரபக்திக்கும்‌ தேவரீர்‌ க்ருபையே காரணம்‌ – என்றபடி –

—

த்வத் ஸூக்த்ய ஏக ரஸ அம்ஸ்வத் அங்க்ரி யுகள ந்யஸ்த ஆத்ம ரஷா பரான்
த்வத் சேவ ஏக பரான் த்வதீய கருணாஸ்ரோதஸ்வி நீ சாகரான்
ஆசார்யான் மம வீஷ்ய மய்யபி ப்ருசம் நிஸ் ஸீம தோஷாஸ்பதே
ஸ்ரீ மன் ரம்ய வர ப்ரஸீத யமி நாம் ராஜன் நமஸ்தே நம
–100-

தேவரீருடைய ஸூ க்திகளிலேயே ருசியை யுடையவர்களாய் தேவரீருடைய திருவடித் தாமரை இணைகளிலே சமர்ப்பிக்கப் பட்ட சர்வ பரத்தை உடையவர்களாய்-தேவரீருடைய கைங்கர்யத்திலேயே ஊன்றி இருப்பவர்களாய் தேவரீருடைய கருணை யாகிற நதிக்கு கடல் போன்றவர்களான அடியேனுடைய ஆச்சார்யர்களைக் கடாக்ஷித்து எல்லையற்ற தோஷங்களுக்கு இருப்பிடமான அடியேன் விஷயத்திலும் கிருபை செய்து அருளுவீராக ஸ்ரீ மன் அழகிய மணவாளரே யதி ஸ்ரேஷ்டரே அடியேனுக்கு தேவரீர் உகப்புக்காகவே – அடியேன் உடைய உகப்புக்காக இல்லாமல் -ஆகும்படி கிருபை பண்ணி அருள வேண்டும் -என்று விண்ணப்பம் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
நமோ நம என்று ஆதார அதிசயம் தோற்ற விண்ணப்பம் செய்து அருளுகிறார் –

ஸ்ரீமதே ஸெளம்ய ஜாமாத்ரு முநீந்த்‌ராய மஹாத்மநே | ஸ்ரீரங்க,வாஸிநே பூயாந் நித்ய ஸ்ரீர் நித்ய மங்க,ளம்‌ |–மஹாத்மாவான ஸ்ரீமானான ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ மணவாள மாமுநிகளுக்கு நித்யமான ஸ்ரீயும்‌ மங்களமும்‌ உண்டாக வேணும்‌ !

இது ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணா ஸ்வாமிகளால்‌ அருளிச் செய்யப்பட்ட மாமுநிகள்‌ விஷயமான மங்கள ஸ்லோகம்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய கட்டளையினால்‌ திருவரங்கத்தை நித்ய வாஸஸ்தாநமாகக்‌ கொண்டு ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீரீயாக விளங்கியவராய்‌ மிக்க பெருமையை உடையவராய்‌ தம்‌ மங்களாஸாஸந பலத்தாலே எப்போதும்‌ திருவரங்கனுடைய திருவரங்கச்‌ செல்வத்தை வளர்த்துக் கொண்டு போரும்‌ மணவாளமாமுநிகளுக்கு நித்யஸ்ரீயும்‌ நித்ய மங்களமும்‌ உண்டாக வேணும்-

ஸ்ரீநாக,புர்யபிஜந : ப்ரவாதி,ப,யங்கர : | விவவ்ரே ஸதகம்‌ த்வேதத்‌ த்‌,ராவிட்‌,யா பாஷயா ஸ்புடம்‌ |-திருநாங்கூரைச்‌ சேர்ந்த ப்ரதிவாதிபயங்கரர்‌ (அண்ணங்‌கராசார்ய ஸ்வாமி) இந்த ஸதகத்தைத் தெளிவாக தமிழ்மொழியில்‌ விவரித்தருளினார்‌.

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading