ஸ்ரீ பூதத்தாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே மற்ற யாழ்வார்களுடைய ஸ்ரீ ஸூக்திகளும் –

வேதத்தை வேங்கடத்தான் -ஸ்ருதி ஸிரஸீ ப்ரஹ்மணே ஸ்ரீநிவாஸே
ஷேமுஸீ பக்தி ரூபம் -அன்பே தகளியாக
இருகண் மூங்கில் வாங்கி –தேன் கலந்து நீட்டும் -ராமானுஜ முனி வேழம் -பூதத் திருவடி தாழ்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும்

என் நெஞ்சமேயான் -அருளிச் செய்ததாலேயே பூதத்தாழ்வாரும் நம்மாழ்வாரைப் போலவே தமது திருக் கையை திரு நெஞ்சிலே வைத்து சேவை சாதிக்கிறார் திருக் காஞ்சியிலே-மூவரும் மூன்று நாள்களிலும் புறப்பாடு கண்டு அருள்கிறார் – -முதல் நாள் நடுவிலே பொய்கையாழ்வார் -இரண்டாம் நாள் நடுவிலே பூதத்தாழ்வார் -மூன்றாம் நாள் நடுவிலே பேயாழ்வார் -அவருக்கு மட்டுமே கிரீடம் உண்டு -திருவரங்கத்தில் சதயத்தில் மட்டுமே மூவர் புறப்பாடு –

பிராட்டிக்கு புருஷகாரத்வம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்தவர் இவரே-

கார் கலந்த மேனியான்-திருநாராயணப்பெருமாள் —
கை கலந்த ஆழியான் –தேவப்பெருமாள் -எந்நெஞ்சமேயான் –
உலகமுண்ட பெருவாயன் -திருமலை
பாம்பணையான் -கோயில் திருவரங்கம் –

பர்த்தா ஸ்தானம் -ஆழ்வார்கள் -ஸ்பஷ்டமாக அருளிச் செய்யவில்லை –இவர் மட்டுமே அருளிச் செய்ததாலே -ஆழ்வாருக்கு சிரஸ் ஸ்தானம் இவருக்கே-

—

பூதத்தாழ்வார் திருமங்கை ஈடுபாடு
அஞ்சலி ஹஸ்தம் வேல் இல்லாமல் சேவை திருக்கடல்மல்லை

பூதம் சிரஸ் -நம்மாழ்வார் இவர்
திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம்
ஆழ்வார் திருநகரி மட்டுமே மங்களா சாசனம் நம்மாழ்வார் தானே
திருவாலி திருநகரியும் திருமங்கை ஆழ்வார் தானே
இரும் தமிழ் நூல் புலவன்
தடம் பருகும் முகில் கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்

மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து-பொய்கையாழ்வார் -அன்பு கூறும் பூதத்தாழ்வார் -அடியவர் -பேயாழ்வார் -முதல் ஆழ்வார்கள்–அடியவர் –-அன்பு கூரும் அடியவர் –-ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவர்--என்று வகுத்துக் கொண்டு-அடியவர் -என்றது பேய் ஆழ்வாரை –இவர் –திருக்கண்டேன் –இன்றே கண்டேன் -திருவடி ஒன்றே உத்தேச்யம் என்று உபகிரமித்து
பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி-என்றும்
முயன்று தொழு நெஞ்சே தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும் –
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்றும்-மத்யத்தில் -40-60-பாசுரங்களில் பேசி அருளி –
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்கு சார்வு
-என்று
அவசானத்திலும் தாளையே பேசித் தலைக் கட்டினார்-ஆக இப்படி அடியையே சிக்கெனப் பிடித்து -பேய் ஆழ்வார் அடியார் -ஆகிறார் –

அன்பு கூரும் அடியவர் -அன்பு மிகுந்த அடியவர் -பூதத் ஆழ்வார்–அன்பே தகளியா -தொடங்கி
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று-தம் அன்பு மிகுதியை வாய் விட்டு உரைத்தவர் –

இனி-அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் – பொய்கை ஆழ்வார்–பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் – இப்படிப் பட்ட மூன்று அடிவர்கட்கும் ஆரா வமுதம் ஆனான் -திருக் கோவலூர் ஆயன்–

கோவலூர் -பார்த்தன் தனது தேர் முன் நின்றான் -ஆயனர்
சூழ் விசும்பு -குடந்தை கோவலன் தமர்

பேசிற்றே பேசும் ஏக கண்டர் ..
நல் தமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்று இமையோர்
–முதல் ஆழ்வார்கள் ..
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து அன்று எரித்த திரு விளக்கு -பூதத் ஆழ்வார்—
இறைவனை காணும் இதயத்து இருள் கெடஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திரு அடி –
ஞானம் தமிழ் புரிந்த நான்
-என்றார் இவர்

1- ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே —

வடி கோல வாழ் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பன்னாள் –

வடி கோல வாழ் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பன்னாள் – நெடிது ஓங்கி
மாவளரும் சோலைச் சிரிவரங்க மாமலையாய்!
பாவளரும் நெஞ்சுடையாய் பார்
—

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-கீழே நாரணனைக் கண்டேன் என்றார்–-இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)அழகிய வடிவமும், நீண்டு பரந்த கண்களையும் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் (லட்சுமி தேவி)–இறைவனுடைய (பெருமாளின்) திவ்யமான அழகையும், அவனது வடிவழகு பொருந்திய திருமேனியையும் பல நாட்களாகக் கண்டும், அந்த அழகில் மயங்கி அவளை விட்டு நீங்காமல் எப்போதும் அவனது மார்பிலேயே வீற்றிருக்கிறாள்–அழகிய கண்களைக் கொண்ட லட்சுமி தேவி, எம்பெருமானின் பேரழகைக் கண்டு வியந்து, அவனை விட்டு ஒருகணமும் பிரியாமல் அவனது திருமேனியிலேயே தங்கியிருக்கிறாள்-

படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்-வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள் – ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய் சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்–(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு-அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு) செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்--செவ்வியை உடைத்தாய்-ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு காலம் எல்லாம் அகலாள்–ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –-வைத்த கண் வாங்க மாட்டாமையும்-கால் வாங்க மாட்டாமையும்–அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ கோலத்தால் இல்லை குறை –-அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )-பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற விஷயம் என்று அறிந்த பின்பும் ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –-அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் – இவளுக்கு விசிஷ்டம் -(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது-தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது – எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –கோல இத்யாதி – நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு குறைவற்று இருக்கையாலே – இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –கிண்ணகத்தில் இழிவாரைப் போலே எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் – பரப்பு உண்டாகையாலே-இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

இத்தை ஒற்றியே நம்மாழ்வாரும் –
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றார் – -..

திருப் பொலிந்த ஆகத்தான் -40 என்றும் —
செய்ய நெடு மலராள் மார்பன் -52 -என்றும் – –
திரு மங்கை நின்று அருளும் தெய்வம்-57 -என்றுமாக அருளி இருக்கிறார் – ..

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—40-மறந்து இருக்கலாம் படியோ அவ்வடிவு அழகு இருக்கிறது -என்கிறார்-நெடும் காலம் ஆஸ்ரயிக்கப் பெற்றிலோம் -அதுக்கு மேலே தோஷ பூயிஷ்டர் என்று அஞ்ச வேண்டாம்-ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-14-என்னுமவள் கூட இருக்கிறாள் –-பெரிய பிராட்டியாராலே விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையவன் திருவடிகளை நினைமின்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார்-நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் –அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால் சாலவதிகன் –அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் -என்று கொண்டு
நித்ய கடாஷத்தைப் பண்ணி நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனை –அவ்யபிசாரியான லஷணம்-லஷ்மீ பத லாஷைக லஷணம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-9–திருவடிகளிலே செம்பஞ்சு மார்விலே காணில் அவனே பரதேவதை -ஜகத் காரணத்வாதி அப்ரயோஜகம்–திருவில்லாத் தேவர் -நான்முகன் -53-ஸ்ரீ யபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா ந-என்று  கீதா பாஷ்யம் –-கல்யாண குணங்களுக்கு முன்னே எடுக்கையாலே நிரூபக தர்மம் –

காண கழி காதல் கைமிக்கு காட்டினால்
நாண படும் என்றால் நாணுமே -பேணி
கரு மாலை பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நங்கள் திரு
-என்று புருஷகாரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாக அருளி இருக்கிறார் – ..

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-திருமாலை நாங்கள் திரு பேணிக் காட்டும்–ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே-அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-பொன்மேனி –இருவருடைய ஒளியாலும் இத்தனை தோஷம் பாராமல் மேல் விழுந்தால் அத்தால் வந்த அபராதத்தைப் பொறுப்பித்து-ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -166-4-என்று
சேர்க்கைக்கு ஈடான பரிவரம் குறைவற்று இருந்த பின்பு–நாணப் படும் என்றால் நாணுமே – இத் தலைக்கு அபி நிவேசத்தால் குறைவற்று இருந்தது –அத் தலை தோஷாதோஷா  நிரூபணம் பண்ணும் விஷயம் அன்றிக்கே இருந்தது-ஆன பின்பு இனி ஏதடியாக லஜ்ஜிப்பது –நங்கள் திரு –புருஷகாரமாகைக்கு ப்ராப்தி –பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை –சாபராதன் என்று மீளவும் போகாது –முறையில் நிற்கவும் ஒண்ணாது –

வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -என்று மாறனும்- –

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
–4-5-11-இத்திருவாய்மொழி கற்றார்க்கு-பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டியார் என்கிறது-திருமலை -மாரி மாறாது-திரு நகர் வாரி மாறாது
பிராட்டியுடைய ஆசன பத்மம் வேரி மாறாது –வேரி -பரிமளம்-இதுக்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என் என்னில்-தனக்கு முன்பே தான் காட்டிக் கொடுத்த சம்சாரியை விரும்பும் சீலமாயிற்று இதில் சொல்லிற்று-இந்த சீல குணம் ஒருவருக்கும் நிலம் அன்று -தான் அறிதல் -மயர்வற மதி நலம் அருள பெற்ற இவர் அறிதல் செய்யும் இத்தனை யாயிற்று-இப்பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார் என்னும் பிரசாத அதிசயத்தாலே –சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற தசையில் அவனை விலக்கி- நானே இதுக்கு பலம் கொடுக்க வேணும் என்று தனக்கு பரமாக ஏறிட்டுக் கொண்டு பலம் கொடுக்கும் -என்று தனக்கு பரமாக ஏறிட்டுக் கொண்டு பலம் கொடுக்கும் –-வினை தீர்க்குமே-
இது திருவாய்மொழி கற்றார் உடைய பகவத் அனுபவ விரோதியான சகல பிரதிபந்தகங்களையும் போக்கும் இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்தில் படியும் நடையும் என்கை –

பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே-என்று மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த மங்கையர் கோனும் அருளிச் செய்வார்கள் இத்தை அடி ஒற்றியே .

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே  —11-6-10-(திரு மகளால் அருள் பெற்று பிராட்டியாலே பேறு -த்வயார்த்தம் )

—————-

2-பாகவத சேஷத்வம் ..

தோள் இரண்டு எட்டு எழும் மூன்று முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் – தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு –
–சரம் துரந்தான்- ராமபிரான் ––அவன் தாழ் இரண்டும் தொழுவார் – -பரதாழ்வான்–அவன் -பாதம் அவை தொழுவார்-சத்ருக்ந ஆழ்வார் — ..-தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல –ஆர் –-ராஷசனாக அமையும் – குரங்குகளாக அமையும் –ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் – பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –பாதம் அவை தொழுவது அன்றே – தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது – ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது-மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –பாதமவை தொழு தென்றே – அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் – அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –சீர் கெழு தோள் – அவர்களில் தமக்கு உள்ள வாசி – இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –பாதமவை தொழுவதன்றே – ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே சீர் கெழு தோள் -என்கிறார் –

அடியவர் களுக்கு ஆட் படுதலும்
அடியவர் அல்லாத வர்களை நெஞ்சாலும் நினையாமல் ஆனவனும் –
வியதிரேகத்திலும் அருளி இருக்கிறார் ..

சிறந்தார்க்கு எழு துணையாம் செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -44.-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள்-சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் –-பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே-பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் ––இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –சாஸ்திர அதிகாரத்துக்கு  யோக்யதை உள்ள மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து அவன் சுவட்டையும் அறிந்து பின்னை மறந்தவன் மனுஷ்யர்க்கு உடல் அல்லன் இறே –இவர் தம் திரு உள்ளத்தால் மனுஷ்யராக நினையாதவர்கள் மனுஷ்யர்கள் அல்லர்கள் ஆகாதே தான் – குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே–ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது – அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் – மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி -11-7-9-என்னக் கடவது இறே –

இத்தை ஒற்றியே -.
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
-என்கிறார் ..
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –-தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே – பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார்

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ்  அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர்  என்று என் மனத்தே வைத்தேனே
–11-7-9-தன்னைப் பேணாதே எருதுகளை அடர்த்தவனுக்கு –அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள-சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே
–2-6-1-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –-இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –-அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று- கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே–எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் ) அ வஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .
(அ வஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் –-பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார் ..

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம்
–70-ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –-ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது-அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்-ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு  ராஜ்யத்தைக் கொடுக்கும் –-தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-

கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்துக் கொண்டு இருப்பவர் அருளுகிறார் ..-கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய்-பாகவத சேஷத்வத்தைக் காட்டி கொண்டு எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்

வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-பரிமளம் பிரவஹியா நின்றுள்ள
பெரிய வீதிகளை உடைத்தான திருக் கடல் மல்லையிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
சர்வ ஸ்வாமி உடைய திருவடிகளையே அனுசந்திக்கும் சேஷ பூதர் சேஷத்வத்திலே நின்றவன் –
ஜ்ஞான ஆநந்தங்கள் அல்ல நிரூபகம் பாகவத சேஷத்வமே
என்கிறார் –

———-

3-ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசத்தில் –திரு கடல் மல்லை -மட்டும் –
வேறே ஒரு ஆழ்வாரால் -10-பாசுரங்கள் மேல் மங்களா சாசனம் பண்ணப் பட்டு உள்ளதே

திருவாலி திரு நகரியை கலியன் மட்டுமே -30-பாசுரங்கள் அருளி இருக்கிறார் –

திருக் குருகூரை மாறன் மட்டும் -10-பாசுரங்கள் மங்களா சாசனம் பண்ணி இருக்கிறார்

———————

4-..யானே இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் –என்றார் பூதத்தாழ்வார் –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான்
–யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது
-74-யானே இரும் தமிழ் நன் மாலை –-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –யானே தவம் உடையேன்  யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்- அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் – சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –பெரும் தமிழன்-அல்லேன் பெரிது – த்ரமிட  சாஸ்த்ரத்தில் என்தனை அவகாஹித்தார் இல்லை –-வேறு சிலவர் எனக்கு ஒப்பு அல்லர் என்று சொல்லும் அவ்வளவேயோ தான் –பெரிது-நல்லேன்-நான் அறக் கை விஞ்சினேன் அல்லேன் –-என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –நல்லேன் பெரிது –
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –
நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –
ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

கலியனும்-தம்மை – இரும் தமிழ் நூல் புலவன் என்று சொல்லிக் கொள்கிறார் ..

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-என் நெஞ்சத்து –-சம்சாரத்திலே விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சு என்று இவர் இறாயா நின்றார் -இவர் என்னது என்ற இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான் –இவர் அயோக்யம் என்று அகல -அதுவே ஹேதுவாக அவன் புகுர நில்லா நின்றான் –-உள்-கார்யார்த்தமாக இருக்கை அன்றிக்கே தன் விடாய் தோற்ற உள்ளே புகுந்தான் –இருந்து -புறம்பு ஒரு விபூதி உண்டு என்று நினையாதே ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இரா நின்றான் –இங்கு -பரம பதத்தில் பரிமாற்றத்தை சம்சாரத்திலே உண்டாக்கினான் –இருந்தமிழ் -விலக்ஷணமான தமிழ் -இருந்தமிழ் – அந்த பரமபதத்துக்கும் அடங்காதபடி ஆயிற்று இவற்றின் பெருமை – கேட்டு ஆரார் -10-6-11-என்னக் கடவது அன்றோ ––நூல்-பின்பு லக்ஷணம் கட்டுவார்க்கும் இதுவே கொண்டு செய்ய வேண்டும் படி இருக்கை –இவர் ஆற்றாமையால் சொன்ன இத்தை -லக்ஷனோ பேதமாக்கினான் யாய்த்து-
இவை -தமக்கும் கொண்டாட வேண்டி இருக்கும் இவை – மொழிந்து-பாடினான் அவனாய் தாம் கற்றுச் சொன்னாரோ பாதி யாக நினைத்து இருக்கிறார் –

—————

.5-.பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இரு கண இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை
-என்கிறார் –

த்வயம் அர்த்தம் எம்பெருமானார் திருவேங்கடத்தில் -அருள –
அனந்தாழ்வான் –பெருகு மத வேழம்–எம்பெருமானார் -நமக்கு -பிடிகள் ஸ்தானத்தில் ..
இரு கண இள மூங்கில்-த்வய மந்த்ரார்த்தை ..
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்–எனக்கு தேன் -பால் அமுது நமோ நாராயணமே –
திரு மந்த்ரம் — கீதா அம்ருதம் -இரண்டையும் கலந்து – –
வான் கலந்த வண்ணன் வரை -திருவேங்கட மாலை ஆகும் –
என்று காஞ்சி ஸ்வாமி அருளிச் செய்வார் –

பேத ஸ்ருதிகளையும்
அபேத ஸ்ருதிகளையும்
கடக சுருதி உடன் கலந்து அருளி
என்றுமாம்-

இந்த காட்சியையே கலியனும் திருப் பிரிதி பதிகத்தில்
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரசவாரி தன் இளம்பிடிக்கு அருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே

கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை யளை மிகு தேன் தோய்த்துப்
பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே–
1-2-5-ஓர் இடத்திலே படுக்கையாய் இருக்க – வேறு ஒரு இடத்திலே போகத்துக்கு ஏகாந்த ஸ்தலமாகக் கொண்டு விரும்பி இருப்பரைப் போலே ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் இங்கே வந்து இருந்தான் ஆயிற்று – மாதா பிதாக்கள் கூட இருந்து பிரஜையினுடைய ஹித சிந்தனை பண்ணுமா போலே
ஸ்ரீ பிராட்டியும் தானுமாய்  இருந்தான் ஆயிற்று –ராஜாக்களுக்கு போக்ய த்ரவ்யங்கள் குறைவற்று இருக்குமா போலே தேன் குறைவற்று இருக்கும் ஆயிற்று –பிரசம் என்று தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பேர் வாரி என்று அவற்றின் உடைய தேன் அதிலே வளர்ந்த மூங்கில் முளைகளை கொடு புக்குத் தோய்த்து – அதில் பருக்கை-(கோது -சக்கை-) தட்டாதபடி அதின் வாயிலே பிழியும் ஆயிற்று – பருக்கை தட்டுமாகில் மிடற்றுக்கு கீழ் இழிச்ச மாட்டாதாய்  ஆயிற்று-
அதுக்கடி இளம் பிடி யாகை – தேனில் ரசம் பெறுகைகாக -அதிலே தோய்த்து -பின்னே அதில் கந்தல் உண்டு கோது அது தட்டாதபடி பிழியும் – அதில் உண்டான பருக்கையும் கூட பொறாதபடி யாயிற்று இதினுடைய பிரகிருதி மார்த்த்வம் இருக்கும் படி –திர்யக்குகளுக்கும் தன்னுடைய ரஷ்யத்தினுடைய ரஷணமே யாத்ரையாய் இருக்கும் ஆயிற்று-ப்ரஹ்மாதிகள் உடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அவர்களை ரஷிக்கும் போலே யாயிற்று -திர்யக்குகளுக்கும் தன்னுடைய ரஷ்யத்தின் உடைய ரஷணமே யாத்ரையாய் இருக்கும் ஆயிற்று –ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் தானுமாய் சம்ஸ்லேஷித்து வர்த்தியா நிற்குமவன் அந்த சம்ஸ்லேஷ அநந்தரமாக மது பான கோஷ்டியாய் செல்லா நிற்கும் இறே அதுக்கு உப லஷணம்-

—————

6-..உபாய சூன்யதை –
ஸ்வ பிரவர்த்தி நிவ்ருத்தி பகவத் பிரவர்த்தி சாதனம் –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தன்னால் முடியாத நிலையில் –
ஆதி மூலமே என்றதும்
அரை குலைய தலை குலைய ஓடி வந்தானே –

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் – கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்று முடித்து அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து
-22–இத்தாலே அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி—இதுக்குத் திருஷ்டாந்தம் –எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –-அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று-அனுக்ரஹம் உள்ள போது மிடுக்காய் இருக்கும்-நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்-அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் – விலக்காமை–

அவனை பெற ருசி இருக்க வேண்டுமே -சேதனராக இருப்பதால் –-அந்த ருசியும் அவனை அடைய சாதனம் இல்லையே -அதிகாரி ஸ்வரூபமே -.

தனக்கு அடிமை பட்டது தான் அறியேன் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை- வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று —
மழை பொழிய ஏரி கட்டுவது சாதனம் இல்லையே –அவன் அருள் பொழியும் பொழுது தேங்கி வைக்க -பங்காக இருக்க தான் ருசி என்றவாறு – இவ்வாத்மா தனக்குக் கூருபட்டது சேஷத்வம் –-எம்பெருமானுக்கு கூருபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் ––இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் – தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் – சம்யக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்-இப்படி பிரமாண பிர சித்தியாலும்-ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-இங்கனே இருக்கச் செய்தே  இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேஸ்வரன் தன உடைமையைப் பெறுவானாக வந்து புகுரப் புக்கால் விலக்காத மாத்ரமே உண்டாய் இருப்பது – அவன் மால் இறே -அவன் வ்யாமுக்தன் ஆகையாலே தானே வந்து மேல் விழப் புக்கால் அப்போது இடம் கொடுப்பது இவ்வளவே இறே இவனுக்கு வேண்டுவது இனி மேல் உள்ளது அவனுக்கே பரமாய் இருக்கும் இறே –வடுக நம்பி –எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா –-அசலகத்திலே ஸ்ரீ வைஷ்ணவன் திருநாமம் இட சஹிக்க அமையும் -என்றார் –நஞ்சீயர் -திருவரங்கப் பெருமாள் தாசர்க்கு -எம்பெருமான் என்றால் நெஞ்சு நமக்குத் தகையாதபடி பண்ணின இத்தை மறவாதே கொள்ளும் -என்று அருளிச் செய்தாராம் –இத்தால் – ஒரு ருசி மாதரம் இவன் தலையில் உண்டாமது ஒழிய பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளப் போமோ என்றபடி இதுக்குத் திருஷ்டாந்தம் மேல்

—————

7-இளம் கோயில் .-
திரு உள்ளம் வந்து சேர தான்
திருப் பாற் கடலிலும் திரு வேங்கடம் முதலான திவ்ய தேசங்களிலும் எழுந்து அருளி இருக்கிறான் –..

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல் என்று ஒழிந்தன கொலே பாவம் – வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
..என்கிறார் நம்மாழ்வார் –அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் – என்னோடே கலந்த பின்பு–ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில் தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு-வேறே ஒரு குறையில்லை என்று சொன்னால் போலே
இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்-உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்-அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்-புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்-(நீங்கினால் தாரகம் இல்லை என்று இருப்பவன்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்-நாராயணோ வசதி சங்கு சக்ர )

இதையே பூதத் ஆழ்வார்-
வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன்
வெள்ளத்து இளம் கோயில் கை விடேல்
என்று-பால் ஆலயம் போலே – –இளம் கோயில்–கை விட வேண்டாம் என்கிறார் –திருமலையைக் காட்டில் என் ஹ்ருதயத்தில் பண்ணின அபி நிவேசம் கண்டு எனக்காக அவ்வோ திருமலைகளிலும் வந்து நிற்கைக்கும் அடியான திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படி புல் எழுந்து போய்த்ததோ என்று இரா நின்றேன் – ஆன பின்பு என்பாடு வருகைக்கு பாலாலயமான திருப் பாற் கடல் உண்டு –அவ் விடத்தை விட்டதாகாது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறேன் -வேண்டிக் கொண்டேன் -என்கிறார்-கல்லும் கனைகடலும்  வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்-பெரிய திரு -68–என்னக் கடவது இறே-இளம் கோயில் கை விடேல் –
க்ருதஜ்ஞனாக வேணும் காண்-உபகரித்த இடத்தை மறக்கலாமோ –-சௌபரிக்கு ஐம்பது ஸ்திரீகளை மாந்தாதா கொடுத்து ஒரு நாள் வந்து – பெண்காள் உங்களுக்கு ஒரு குறை இல்லையே -என்ன
ஒரு குறை யுண்டு -என்னை அல்லது புறம்பு அறி கிறிலேன்-என்றாப் போலே-இவரும் புறம்பு இல்லை -என்று அஞ்சுகிறார் –

—————

8-.ஞானப் பிரான் –
ஸ்ரீ வராஹ மூர்த்தி தான் ஞான பிரதானம் பண்ணி அருளுகிறார் – –

என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்று திரு விருத்தம் தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –.

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-
ஞானப் பிரானை அல்லால் இல்லை
-என்கிறார் – –.

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே
-45–ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –மாசுடம்பில் நீர் வாரா –ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–கேழலான தேஜஸ்ஸூக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது இருக்கை-சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர்–பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்-இவ்வ காலம்-இக்காலத்தில்–ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே -இக் கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ-பிரளய ஆர்ணவமும் ஸம்ஸார ஆர்ணவமுமான ஆபத்தின் வாசி போரும் இறே –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
– 99-சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று –என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது என் என்ன –இவை யாபன்னமான வன்று -பரார்தமாகத் தன்னைப் பேணாதே ரஷிப்பான் ஒருவனைப் பற்ற வேண்டாமோ –இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –(ஆபத்து வந்த பிரளயத்தில் ரஷித்தவன் ஹேது-ப்ரதிஜ்ஜை -இவனை அல்லால் வேறே நல்லது அல்ல

கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -திருவாய்மொழி-
தலைக் கட்டும் போதும் அருளிச் செய்கிறார் – ..

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-மாசுடம்பில் நீர் வாரா நின்ற நிலை இறே இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயமாய்த்து –பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு-என்கிறபடியே பிரணயிநி அழுக்கோடு இருக்க தாமான படியே வருவாராகில் பிரணயித்தவத்துக்கு நமஸ்காரமாம் அத்தனை இறே -அவன் அழிவுக்கு இட்ட வடிவைப் பற்றி இறே இவர் ஆலத்தி வழிக்கிறது –ஒன்றாய் -வராஹ சஜாதீய மாத்ரம் என்னுதல் –த்ரைலோக்யத்தையும் கண் செறியிட்டால் போலே விம்ம வளர்ந்தபடியாலே அத்விதீயம் என்னுதல் –

பன்றியாய் அன்று பார் அகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
-கலியன் – ..

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-4–பிரளயம் கொண்ட பூமிக்கு ஸ்வ ரஷணத்தில் அந்வயம் உண்டாம் அன்று இறே-விஷயம் கொண்ட நெஞ்சை உடையேனான நான் எனக்கு ஹித சிந்தனை பண்ணுவது –ஆகாசம் வெளி யடையும் படி விம்ம வளர்ந்த அவன் ரஷ்யத்தின் அளவு இல்லாதபடி யாயிற்று-ரஷகனாவன் வடிவைப் பாரித்த படி –
பூமி பிரளயத்தில் புக்கு முடிந்து போக புக்கவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமானான் –பல சம்ருத்தி காணப் பணைக்கும் வடிவைக் கொண்டான்–மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம்–11-8--மஹிஷி உடம்பு பேணாதே -பாசி தூர்த்தது -என்றவாறே காந்தனான தானும் உடம்பு பேணாதே-மாசேறின உடம்பை உடையவன் ஆனான் ( மாசறு சோதி வடிவை மாற்றி )
மானமிலா – ஈஸ்வரத் அபிமானம் பின்னாட்டாத படி இருக்கை-மாயா மிருகத்தை கண்ட போது இனத்தில் மான்கள் வந்து மோந்து பார்த்து விசஜாதீயம் என்று கடக்க போயிற்றின இறே
அங்கன் அன்றிக்கே –-ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்கிறது இங்கும் அனுவர்த்திக்கிற படி
ஆத்மானம் வராஹம் மன்யே என்று இங்குமாம்–பூமிப் பரப்படங்க அண்ட பித்தியோடே புக்கு சேர்ந்தத்தை ஒட்டு விடுவித்து எடுத்த-மிடுக்கை உடையவன்-ஆழியான்-ரஷிக்கும் இடத்தில் ஒரு பரிகர அபேஷை இல்லை –-ஒரு பரிகரம் கொண்டு ரஷிக்க பார்த்தான் ஆகில் அதுக்கு ஈடான பரிகரம் உடையவன்-அருளே-அபிமானம் பண்ணக் கடவதல்ல விஷயங்களிலே அபிமானம் பண்ணியும்-(வென்றியே வேண்டி) சோகிக்க கடவ அல்லாததுக்கு சோகித்தும்-(வீழ் பொருட்கு இரங்கி) நரக அவஹமான விஷயங்களை அநுபவிக்க மநோரதித்தும் (வேற் கணார் கல்வியே கருதி)-நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என்று இப்படி கை கழிந்த என்னை–இனி இவன் தானாக மீள மாட்டான் என்று அதுவே ஹேதுவாக எடுக்க ஒருப்பட்ட-சர்வேஸ்வரன் கிருபையாலே-அருளே -என்னவுமாம்-அருளாலே என்னவுமாம்

எயிற்று இடை மண் கொண்ட எந்தை இரா பகல் ஓதுவித்து எம்மை
பயிற்றி பணி செய்ய கொண்டான்
–பெரியாழ்வாரும் -..

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்
பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –ஓதுவித்து–என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-கீழில் பாட்டில் சொன்ன தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து –ஒதுவித்து-பயிற்றிப் – இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-பணி செய்யக் கொண்டான் – ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கண்டு- வராக
தனி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து
–-அவன் திருவடிகளை பணிபவர்களே திரு மேனியையும் சேவிக்கும் பாக்யம் பெறுவார் என்கிறார் —இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷி -உபகாரகன் -என்றும் தன்னையே வணங்கும்படி பண்ணினவன் -உணரும் போதே -என் நாயகன் செய்த படி என்-என்று உணருகை –பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-அணி யுருவன் –-மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை–அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –பணியுமவர் கண்டீர்-
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-என்னும்படியே சாதனா தசையிலே இனிதாய் இருக்கும் படி – பலத்துக்குப் பலம் இறே –மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து-— அவர்கள் நீல ரத்னம் போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை மகிழ்ந்து காணப் பெறலாம்-

திருக் கடல் மல்லை பதிகத்தில் கலியன் – –-
ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானதிலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லை தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே
–என்று அருளிச் செய்கிறார் – .அப்போது ஏறிட்டுக் கொண்ட வடிவை காட்டி பழைய வடிவை அழித்தான்–அபிமத விஷயத்தோடே கலக்கைக்காக-அவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே – படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே மஹா வராஹமான  வடிவில் எழிலைக்  காட்டி இவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம்
)பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள அத்தை எடுக்கைகாக-நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன் இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –

—————

9-.மூவர் அனுபவம் ..

பயின்றது அரங்கம்-என்றும் பயின்றதுவும் வேம்கடம் -என்றும் ஒரே பாசுரத்தில் அருளுகிறார் -..

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
என் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்
.என்றும் –

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத் தீ
மறையாவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்
-என்றும்-இரண்டு பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து இருக்கிறார் – .

இமையோர் தலைவா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
வரம் தரும் மா மணி வண்ணன் -என்றும்
பேர் அருள் ஆளன்-என்றும் அருளுவார்கள்–-இவர் தாம் ஸ்பஷ்டமாக – –அத்தியூரான்-என்கிறார் ..-கருட சேவை என்றும் பிரசித்தமாய் இருப்பது-இவர்-புள்ளை ஊர்வான்-அருளியதால் தானோ !..

நம்மாழ்வாரும் , திருமங்கை ஆழ்வாரும் இவரைப் போலே –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -மூன்றையும் மங்களா சாசனம் செய்து உள்ளார்கள் –

பூதத்தாழ்வார் -மூலவர் -..-
என் நெஞ்சமேயான்–தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போலே
–நம்மாழ்வாரும் –அயர்வறும் அமரர்கள் அதிபதி துயர் அரு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..

அது போல அவதார ஸ்தலத்திலும் –-சிந்தை இடு திரியா ஏற்றினேன் என்பதற்கு ஏற்ப-நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..

——————–

10-பெரும்தமிழ்–
இரும் தமிழ்–
ஞான தமிழ் -என்று தாம் கூறிக் கொண்டது போலே –
இவர் திவ்ய பிரபந்தம் ஸ்ரேஷ்டம் என்றவாறு -.

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே . M A V ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

—————————————————-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading