ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-முதல் இரண்டு பத்துக்களின் ஸாரம்–ஸ்ரீ திருவாய் மொழியும்‌ ஸ்ரீ ரஹஸ்ய த்ரயமும் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ “பாராசர்ய வசஸ் ஸூதாம்‌ ‘” என்று ஸ்ரீ ராமாநுஜர்‌ சரரீகத்தை அம்ருதமாகக்‌ கொண்டாடுகிறார்‌. திருவாய்‌ மொழியை “பக்தாம்ருதம்‌’” என்று நாதமுனிகள்‌ கொண்டாடுகிறார்‌. ஸ்ரீ நம்மாழ்வாரும்‌ தம்முடைய திருவாய்‌ மொழியை “ தொண்டற்கமுதுண்ணச்‌ சொல்‌ மாலைகள்‌ .சொன்னேன்‌” என்று அமிர்தமாகக்‌ கூறுகின்றார்‌. இவ் வமிர்தம்‌ ஆத்ம ஸ்வரூப போஷகம்‌ -இவ்விரண்டும்‌ கொண்டே ஆத்ம ஷேமம்‌ பெற வேண்டும் –

சாரீரகத்தில்‌ ஸ்ரீவேத வ்யாஸர்‌ சதுஸ் ஸூத்ரியான உபோத்காதத்துக்கு அநந்தரம்‌ ஈக்ஷத்யதிகரணமான ஸாஸ்த்ர ஆரம்பத்தில்‌ பரமாத்மா ஜகத்‌ காரண பூதன்‌ அசித்‌ விலஷணன்‌ என்பதனை அறுதி யிட்டார்‌. அவ் வதிகரணத்திலேயே :*தந் நிக்ஷ்டஸ்ப மோக்ஷோப்தேசாத்‌” என்று அவனே மோஷ உபாய பூதன்‌ என்று அறுதியிட்டார்‌. ஐகத்‌ காரணத்தை யிறே வேதாந்தம்‌ மோஷ உபாயமாக அறுதியிட்டது. அடுத்த ஆநந்த மயாதி கரணத்தில்‌ அவனே பரம ப்ராப்ய பூதனென்பதனையும்‌, அவன்‌ பக்த விலஷணன் என்பதனையும் யும்‌ முத்த விலக்ஷணன்‌ என்பதனையும்‌ உபய விலஷணன் என்பதனனையும்‌, *ஆநந்தமய : அப்யாஸாத்‌” “காமாச்ச நாநுமா நாபேஷா’! நேதரோ அநுபபத்தே:”” *பேத வ்யபதேசாச் ச” என்று ஸூத்ரகாரர்‌ அறுதியிட்டார்‌. அடுத்த அந்தரதி கரணத்தில்‌ அவன்‌ திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்‌ என்‌றறுதி யிட்டார்‌. இவற்றினுடைய விவரணமே மேல்‌ 149 அதிகரணங்களாகும்‌. ஆக ஜகத்காரண பூதன்‌ உபாயோபேய பூதன்‌ ப்ரக்ருதி புருஷ விலக்ஷணன்‌ திவ்ய விக்ரஹ விசிஷ்டன்‌ பரமாத்மா என்று வ்யாஸ ஸித்தாந்தம்‌ தேறுகிறது–

நம்மாழ்வாரும்‌ திருவாய்மொழியில்‌ அவனே உபாய பூதன்‌ என்‌பதனை அருளினன்‌ என்று முதற் பத்திலும்‌, அவனே ப்ராப்ய பூதன்‌ என்பதனை மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனி’” என்று ‘இரண்டாம் பத்திலும்‌, அவன்‌ திவ்ய விக்ரஹ விஸிஷ்டன்‌ என்பதனை “முடிச் சோதி அடிச் சோதி கடிச் சோதி’” என்று மூன்றாம்‌ பத்திலும்‌ அருளிச் செய்தார்‌. இதன்‌ விவரணமே மேலிற் பத்துக்களாகும்‌. ருசி ஜநக விக்ரஹ யோகத்தைத்‌ திருக் குறுங்குடிப்‌ பதிகத்திலும்‌, உபாய பாவத்தை வானமாமலைப்‌ பதிகத்திலும்‌, உபேய பாவத்தைத்‌ திருக் குடந்தைப்‌ பதிகத்திலும்‌ ஆழ்வார்‌ விவரிக்கிறார்

ஆக பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன்‌ சிதசித்‌ விலக்ஷணனாய்‌ ஜகதேக காண பூதனாய் உபய லிங்க விஸிஷ்டனாய் உபய விபூதி விஸிஷ்டனாய் உயோபேய பூதனாய் திவ்ய மங்கள விக்ரஹ. விசிஷ்டனாய்‌ வேதாந்த வேத்யனவான்‌ என்‌ற வர்த்தம்‌ ஸுதா த்வய ரஸமாகும்

ரஹ்ஸ்ய த்ரப ஸாரம்‌
ரஹஸ்யங்கள்‌ மூன்றும்‌ நமக்கு ஜ்ஞாந அநுஷ்டாந பல நிதானங்களாய்க்‌ கொண்டு தாரக போஷக போக்‌யங்கள்‌: வ்யக்தம்‌ ஹி பகவாந்‌ தேவ: ஸாக்ஷாந் நாராயண : ஸ்வயம்‌ | அஷ்டாஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்‌த்ததே ॥’” என்றபடியே தேசிக ஜிஹ்வையிலே இருந்து ஸிஷ்ய ஹ்ருதய கு,ஹாந்தகாரத்தைக்‌ கழித்துப்‌ பரஸேஷதைக ரஸமான பரி ஸூத்த ஸ்வரூபத்தை வெளியிட்டு ஸத்தா லாபத்தைப்‌ பண்ணுகையாலே திருமந்த்ரம்‌ தாரகம்‌. சரமோபாயத்திலே ப்ரவர்த்திக்கும் படியான ஜ்ஞாந விஸேஷ உபாய ஹேது வாகையாலே ஸ்ரோதவ்ய ஸேஷ மில்லாதபடி உபாயோபதேஸ பர்யவ ஸாநமான சரம ஸ்லோகம்‌ போஷகம்‌– ஸக்ருதுச்சாரணத்தாலே பரம புருஷார்த்த, ஹேதுவாய்க் கொண்டு ஸதாநுஸந்தா நத்தாலே க்ருதார்த்த னாக்‌குகையாலே த்‌வயம்‌ போக்‌யம்‌. இப்படி யிறே ரஹஸ்ய த்ரய வைபவமிருப்‌பது.

இவற்றின்‌ ஸாரார்த்த ஸங்க்‌ரஹமாவது :-விவேகம் தான்‌ மூன்றுபடி யாயிருக்கும்‌. ஆத்மாநாத்ம விவேகமென்றும்‌, உபாயாநுபாய விவேகமென்‌றும்‌, புருஷார்த்த அபுருஷார்த்த, விவேக மென்றும்‌.
இந்த விவேகத்துக்கு ஸ்த்தாநமா யிருப்பதும்‌ மூன்‌றுபடியா யிருக்கும்‌. தத்வமென்றும்‌-விதாமெநன்‌றும்‌
அபிமதமென்றும்‌.
-இதில்‌ ஸ்வரூப ப்ரதி பாதகமான திருமந்தரம்‌ தத்வமாவது.-ஹித விதாயகமாய்‌ சரண்யாபி,மதியாலே ப்ரவ்ருத்தமான சரம ஸ்லோகம்‌ விதாந மாகிறது. -புருஷார்த்த ப்ரதிபாதகமான மந்த்ர ரத்நம்‌ அபிமதமாவது.

திருமந்த்ரார்த்த ஸங்க்‌ரஹம்‌
இதில்‌ தத்வ ரூபமான திருமந்தரமும்‌ பத,ரூபத்தாலே மூன்றுபடியா யிருக்கும்‌. இதில்‌ பிரதம பதத்தாலே சேதநனுடைய ஸ்வரூபம்‌ சொல்லுகிறது–மத்‌யம பதத்தாலே ஸ்திதி சொல்லுகிறது. தீருதிய பதத்தாலே வ்ருத்தி சொல்லுகிறது-இந்த ஸ்வரூப ஸ்திதி, ப்ரவ்ருத்திகள்‌ மூன்‌றும்‌ எம்‌பெருமானிட்ட வழக்கா யிருக்கும்‌, ப்ரதம பதத்தாலே இவனுடைய அநந் யார்‌ஹத்வம்‌ சொல்லுகிறது–மத்‌யம பதத்தாலே அநந்ய ஸரணத்வம்‌ சொல்லுகிறது. தீருதிய பதத்தாலே அநந்ய போக்‌யத்வம்‌ சொல்லுகிறது. இவனுக்கு ப்‌ரதி ஸம்பந்தி,யாயிருக்கிறவனுடைய ஸேஷித்வம்‌ சொல்லுகிறது ப்ரதம பதத்தாலே. அவனுடைய ஸரண்யத்வம்‌ சொல்லுகிறது மத்யம பதத்தாலே. அவனுடைய போக்‌யத்வம்‌ சொல்லுகிறது த்ருதிய பதத்‌தாலே. ப்ரதம பதத்திற்‌ சொல்லுகிற ஜ்ஞாத்ருத்வமும்‌, மத்‌யம பதத்திற்‌ சொல்லுற கர்த்ருத்வமும்‌, த்ருதிய பதத்திற்‌ சொல்லுகிற போக்த்ருத்வமும்‌ எம்பெருமானிட்ட வழக்கா யிருக்கும்‌

திருமந்த்ரம்‌ ஸாமாந்யேந ஸ்வரூப பரமாயிருக்கும்‌. சிலர்‌ வாக்ய த்ரய மென்று நிர்வஹிப்பர்கள்‌. சிலர்‌ வாக்யைக வாக்யத்தாலே ஏக வாக்யமென்று நிர்வஹிப்பர்கள்‌-சிலர்‌ ஸ்வரூப புருஷார்த்த பரமென்று நிர்வஹிப்பர்கள் -சிலர்‌ அர்த்த, பஞ்சக பரம்‌ என்று நிர்வஹிப்பர்கள்‌, .சிலர்‌ ப்ரபத்தியையும்‌ கூட்டி ஷடர்த்த,பரமென்று நிர்வஹிப்பர்கள்‌, சிலர்‌ ஆத்ம ஸமர்ப்பண பர மென்று நிர்வஹிப்பர்கள்‌. *திருவெட்டெழுத்தும்‌ கற்று நானுற்றதும்‌ உன்னடியார்க் கடிமை”” என்று பத,த்ரயத்துக்கும்‌ தாத்பர்யார்த்தம்‌ ததீய ஸேஷத்வ மென்று அருளிச் செய்தார்‌ திருமங்கையாழ்வார்‌. ப்ரதமாசார்யரான நம்‌மாழ்வாரும்‌ “பயிலும்‌ சுடரொளி’” *நெடுமாற்கடிமை-களிலே இவ் வர்த்தத்தை அருளிச் செய்தாரிறே . ஆக, ப்ரதம பத ஸித்‌தமான ஸேஷிகளும்‌ ததீயரேயாய்‌, மத்‌யம பத ஸித்‌தமான ‘ஸரண்யரும்‌ ததீயரேயாய்‌, தீருதிய பத ஸித்‌தமான ப்ராப்யரும்‌ ததியரேயான படியால்‌ திருமந்த்ரத்துக்குத்‌ தாத்பர்யமான அர்த்தம்‌ ததீய ஸேஷத்வமென்‌றறிகை-

ப்ரணவம் தான்‌ அக்ஷர ஸ்வபாவத்தாலே மூன்றுபடியா யிருக்கும்‌–அகார மென்றும்‌ உகார மென்றும்‌ மகார மென்றும்‌. அதில்‌. அகாரம்‌ காரணத்வத்தையும்‌ ரஷகத்வத்தையும்‌ ஸேஷித்வத்தையும்‌ ஸ்ரீயபதித்வத்தையும்‌ சொல்லக்‌ கடவதா யிருக்கும்‌, இதில்‌ காரணத்வத்தாலும்‌ ரஷகத்வத்தாலும்‌ உபாய பாவத்தை வெளியிடுகிறது. ஸேஷித்வத்தாலும்‌ ஸ்ரீய;பதித்வத்தாலும்‌ உபேய பாவத்தை வெளியிடுகிறது–

அகாரம்‌ பிரக்ருதி யென்றும்‌ ப்ரத்யயம்‌ என்றும்‌ இரண்டாய்‌, இதில்‌ ப்ரக்ருதியான அகாரம்‌ உபாயத்தைச்‌ சொல்லுகிறது. ப்ரத்யயமான சதுர்த்தி உபேயத்தைச்‌ சொல்லுகிறது என்றபடி-
உகாரத்தாலே பிறர்க்குரியன்‌ அன்று என்னுமிடம்‌ சொல்லி, நமஸ்ஸாலே தனக்குரியன்‌ அன்று என்னுமிடமும்‌ சொல்லுகிறது. நாராயண பதத்தில்‌ உண்டான பஹு வ்ரீஹி ஸமாஸத்தாலும்‌ தத் புருஷ ஸமாஸத்தாலும்‌ அந்தர்யாமித்வமும்‌ ஆதாரத்வமும்‌ சொல்லுகிறது. அந்தர்‌ யாமித்வத்தாலே எம்பெருமானுடைய ஸரீரித்வம்‌ சொல்லுகிறது. ஆதாரத்வத்தாலே அதியயம்‌ சொல்லுகிறது. ஆக இப்படி ப்ரணவத்தாலே தன்‌ ஸ்வரூபம்‌ பகவத் அநந்யார்ஹ ஸேஷத்வம்‌ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி- ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவர்த்ததமான மத்‌யம பதத்தாலே அத்யந்த பாரதந்தர்யம்‌ என்று உபபாதித்து. த்ருதிய பதத்தாலே இதுவும்‌ ஸரீரத்வ நிபந்தநம்‌ என்று உபபாதித்து, கீழ்‌ ப்ரஸ்துதமான ஸேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்‌ என்கிறது –

ப்ரதம பதத்தாலே பாணிக்‌ரஹ்ணம்‌ பண்ணுகிறது. மத்‌யம பதத்‌தாலே மண நீராட்டுிறது. த்ருதிய பதத்தாலே சதுர்த்தி,படுக்கையா யிருக்‌கிறது என்று பிள்ளை யுறங்கா வில்லி தாஸர்‌ நிர்வஹிப்பர்‌. திரு மந்தரத்துக்குத்‌ தாத்பர்யார்த்தம்‌ ஸகல வேத ஸாஸ்த்ர ருசி பரிக்‌ருஹீதம்‌. வாக்யார்த்தம்‌ பிராப்ய ஸ்வரூப நிரூபணம்‌: ப்ரதாநார்த்தம்‌ ஆத்ம ஸ்வருப நிரூபணம்‌-அநு ஸந்தநார்த்தம்‌. ஸம்பந்தநுஸந்தாநம் –

சரம ஸ்லோகார்த்த ஸங்க்‌ரஹம்‌
சரம ஸ்லோகம்‌ மூன்று படியா யிருக்கும்‌–பரித்யாகமென்றும்‌ ஸ்வீகார மென்றும்‌ ஸோக நிவ்ருத்தி யென்றும்‌.
“ப்ராப்தி ஹேதுத்வ புத்‌தி விட்டு ப்ரீதி ஹேது வென்று அநுஷ்டிப்பார்‌‘” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்‌.
*மாம்‌’” என்கிற பதத்தாலே ஸாத்‌ யோபாயங்களிற்காட்டில்‌ ஸித்‌தோ பாயமான தன்னுடைய வியாவ்ருத்தியைச்‌ சொல்லுகிறான்‌- பதர்க் கூட்டை விட்டுப்‌ பர்வதத்தை அண்டை கொள்ளுமா போலே” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்‌.
“இந்த ஸித்‌தோபாயத்தை விட்டு ஸாத்‌யோபாயங்களில்‌ அந்வயித்தானாகில்‌ மரக் கலத்தை விட்டுத்‌ தெப்பத்தைப்‌ பற்றுமோபாதி” என்று நிர்வஹிப்பர்‌ ஸோமாசி யாண்டான்‌.
அன்று ‘உன் முகம்‌ காணில்‌ முடிவேன்‌ என்கையாலே முகம்‌ தோற்றாமல்‌ நடத்தினேன்‌. இன்று *உன்‌ முகம்‌ காணா விடில்‌ முடிவேன்‌ ” என்கையாலே முகம்‌ தோற்றி நின்று நடத்‌தினேன்‌ என்று தன்‌ வ்யாபாராதிகளைக்‌ காட்டுகிறான்‌. அதாகிறது–*என்‌ கையில்‌ மடல்‌ உன்‌ கையிலே வரும்‌ படியாகவும்‌, என்‌ தலையில்‌ முடி உன்‌ தலையிலே வரும்படியாகவும் வேணு மென்று ஆசைப்பட்டு, உன் கால்‌ என்‌ தலையிலே படும்படி தாழ நின்றேன்‌”என்று தன்‌ ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுகிறான்‌ மாம்‌” என்று என்றபடி. அவதாரண ரூபமான ஏக ஸப்‌தத்தாலே ஸாத்‌ய ஸாதநங்களினுடைய ப்ருதக்‌ பாவ ஜந்யமான த்‌வித்வத்தையும்‌, ஸ்வீகர்த்தாவினுடைய அந்வயத்தால்‌ வருகிற த்‌வித்வத்தையும்‌ வ்யாவர்த்திக்கையாலே ஸரண்யனுடைய சுணை யுடைமையைச்‌ சொல்லுகிறது. “மாஸூச:’ என்கிற பதத்தாலே **வ்ரஜ’” என்கிற விதியோபாதி. *மாஸுச: என்கிற இதுவும்‌ விதி,யாகையாலே ஸ்வீகாரத்தோபாதி ஸோக நிவ்ருத்தியும்‌ கர்த்தவ்ய மென்கை, அதாவது உன்னைப்‌ பார்த்து நிர்பரனாப்‌. என்னைப்‌ பார்த்து நிர்பபனாய்‌ இரு என்கை. முன்பு ஸோகித்திலையாகில்‌ அதிகார ஸித்‌தி யில்லை, பின்பு ஸோகித்தாயாகில்‌ பல ஸித்‌தி யில்லை என்றபடி. பாஷ்ய காரர்‌ ஆழ்வானுக்குச்‌ சரம ஸ்லோகத்தை உபதேஸித்து, இருந்தபடி யென்‌? என்று. கேட்டருள, “ஒரு ஜந்மத்தில்‌ நின்று ஒரு ஜந்மத்திலே போந்ததாப்‌ போலே யிருந்தது’‘ என்று பணித்தார்‌. நஞ்ஜீயர்‌ சரம ஸ்லோகார்த்தத்தைக்‌ கேட்டு, ‘தலைச் சுமை போட்டாப்‌ போலே இருந்தது”! என்றார்‌. திரு மந்த்ரம்‌ திரு முகப்‌ பாசுரமா யிருக்கும்‌. சரம ஸ்லோகம்‌ வேட்டாயிருக்கும்‌. த்வயம்‌ படி யெடுப்பா யிருக்கும்‌, சரம ஸ்லோகத்துக்குத்‌ தாத்பர்யார்த்தம் ஸரண்ய ருசி ப்ரிக்‌ருஹீதம்‌. வாக்யார்த்த,ம்‌ ப்ராபக ஸ்வரூப நிரூபணம்‌. ப்ரதாநார்த்தம்‌ ஈஸ்வர ஸ்வரூப நிரூபணம்‌, அநுஸந்தாநார்த்தம்‌ நிர்பரத்வாநுஸந்தாநம்‌.

த்‌வயார்த்த,ஸங்கரஹம்‌ -த்வயம்‌–இருபத்தைந்து திருவஷரமாய்‌, வாக்ய த்‌வயமாய்‌. ஆறு பதமாய்‌ பத்தர்த்தமா யிருக்கும்‌. இதில்‌ பூர்வ கண்டத்திலும்‌ உத்தர கண்‌டத்திலும்‌ மா மலர்‌ மங்கை யாகிற ஸ்ரீரத்நத்தோடே கூடுகையாலே-இரு தலை மாணிக்கமா யிருக்கும்‌. அவன்‌ தேவகீ புத்ர ரத்நமா யிருக்குமோபாதி இதுவும்‌ மந்த்ர ரத்நமா யிருக்கும்‌. இந்த மந்த்ர ரத்நம் தான்‌ ஸ்ரீமத் பராங்குஸ முநிகள்‌, ஸ்ரீமந் நாத,முநிகள்‌, யாமுந முநிகள்‌, ராமாநுஜ முநிகள்‌, ஸ்ரீவரவர முநிகள்‌ ஆகிற முனிவர்களுடைய நெஞ்சாகிற செப்பிலே வைத்துச்‌ சேமிக்கப்‌ பட்டிருக்கும்‌.–

இந்த த்வயம்‌, அர்த்த,ப்ராதாந்யத்தாலே மூன்று படியாயிருக்கும்‌. விஸேஷண ப்ரதாந்ய மென்றும்‌ விஸேஷ்ய ப்ரதான்ய மென்றும்‌ விஸிஷ்ட ப்ரதாந மென்றும்‌. ஆஸ்ரயண தஸையில்‌ விஸேஷண ப்ரதாநமா யிருக்கும்‌. உபாய தஸையில்‌ விஸேஷ்ய ப்ரதாநமாயிருக்கும்‌. போக தசையில்‌ விஸிஷ்ட ப்ரதாநமா யிருக்கும்‌, ப்ரதம பதத்தில்‌ விஸேஷண பலத்தாலே ப்ராயஸ்சித்‌த வ்யாவருத்தியைச்‌ சொல்லுகிறது. . ப்ரதம பதத்தாலே உபாயாந்தர வ்யாவ்‌ருத்தியைச்‌ சொல்லுகிறது. த்விதிய பதத்தாலே உபேய வ்யாவ்ருத்‌தியைச்‌ சொல்லுகிறது. கிரியா பதத்தாலே அதிகாரி வ்யாவருத்‌தியைச்‌ சொல்லுகிறது. உத்தர வாக்யத்தில்‌ ப்ரதம பதத்தாலே ப்ராப்‌யாந்தர வ்யாவ்ருத்தியைச்‌ சொல்லுகிறது. த்‌விதிய பதத்தாலே தேவதாந்தர வ்யாவ்ருத்தியைச்‌ சொல்லுகிறது. இதில்‌ சதுர்த்தியாலே ப்ரயோஜநாந்தர வ்யாவ்ருத்தியைச்‌ சொல்லுகிறது. த்ருதிய பதத்தாலே ஸ்வபாவ வ்யாவ்ருத்தியைச்‌ சொல்லுகிறது. ப்ரதம பத விஸேஷணத்தில்‌ ப்ரதம அஷரத்தாலே புருஷகாராத்‌ய பாவவாதிகளை நிரஸிக்கிறது. அநந்தர பதத்தாலே நிர் குணண ப்‌ரஹ்ம வாதிகளை நிரஸிக்கிறது. ப்ரதம பதாந்தமான த்வி வசந(நாந்த பத,)த்தாலே நிர்விக்‌ரஹவாதிகளை நிரஸிக்கிறது. அநந்தர பதத்தாலே உபாயத்‌வித்வ வாதிகளை நிரஸிக்கிறது. க்ரியா பதத்‌தாலே அத்‌யவஸாயா பாவ வாதி,களை நிரஸிக்கிறது. மதுப்பாலே அநித்ய யோக, வாதி,களை நிரஸிக்கிறது. உத்தர வாக்யத்தில்‌ ப்ரதம பதத்தாலே ஆத்ம ஸாம்யவாதிகளை நிரஸிக்கிறது;: அநந்தர பதத்தாலே ஈஸ்வர ஸாம்ய வாதிகளை நிரஸிக்கிறது. இதில்‌ சதுர்த்தியாலே கிஞ்சித்கார புருஷார்த்த, ப்ரதிபட வாதிகளை நிரஸிக்கிறது. அநந்தர பதத்தாலே ஸ்வ ப்ரயோஜந வாதிகளை நிரஸிக்கறது–என்று நிர்வஹிப்பர்‌ நடுவிற்றிரு வீதிப்பிள்ளை –

க்ரியா பதத்தாலே உபாய ப்ரார்த்தனை. சதுர்த்தியாலே உபேய ப்ரார்த்தனை. இவை யிரண்டும்‌ அதிகாரி கருத்யம்‌. த்‌வயத்துக்குத்‌ தாத்பர்‌யார்த்தம்‌ ஆசார்ய ருசி பரிக்‌ருஹீதம்‌, வாக்யார்த்த,ம்‌ ப்ரார்த்‌தநா(ப்ராபக?) ஸ்வரூப நிரூபணம்‌. ப்ரதாநார்த்தம்‌ மிதுந கைங்கர்யம்‌. அநுஸந்தநார்த்தம்‌ ஸ்வ தோஷாநுஸந்தாநம்‌. ஏவம் பூதமான த்‌வயத்தில்‌ நிஷ்டை, யாவது–ஸ்வாசார்ய புரஸ்ஸரமாகக்‌ கோவலர்‌ பொற் கொடியான பிராட்டி யிருக்க ஸரணம் புக்குக்‌ கொடி வழியாகச்‌ சென்று ப்‌ரஹ்ம தருவை ஆஸ்ரயித்து இளைப்பாறி யிருக்கை-

ஸ்ரீமச்‌ சாரீரகாத்‌யாய சதுஷ்டயார்த்தங்களான காரணத்வ ஸேஷித்வ ப்ராபகத்வ ப்ராப்யத்வங்கள்‌ ரஹஸ்ய த்ரயமான ஸாஸ்த்ர ஸாரத்தாலே இங்கனே நிஷ்கர்ஷிக்கப் பட்டதாயிற்று.

1-திருமந்திரம் -இதில் முமுஷுக்கள் அறிய வேண்டிய ஐந்து அர்த்தங்களும் – : பர ஸ்வரூபம்‌ ஜீவ ஸ்வரூபன் உபாய ஸ்வரூபம்‌ உபேய ஸ்வரூபம்‌ விரோதி ஸ்வரூபம்‌ என்ற ஐந்தும் –
நம்மாழ்வார்‌ *உயர்வற”” என்ற முதற் பாட்டிலே –நலமுடையவன்‌ ”” என்று பர ஸ்வரூபத்தையும்‌, ‘என்‌ மனனே * என்று ஜீவ ஸ்வரூபத்தையும்‌, “ அருளினன்‌” என்று உபாய ஸ்வரூபத்தையும்‌, ‘ மயர்வு ** என்று விரோதி ஸ்வரூபத்தையும்‌, தொழு தெழு” என்று உபேய ஸ்வரூபத்தையும்‌ ஸங்க்‌ரஹித்து, “உயர்‌ திண்‌ ௮ணை ஒன்று” என்று பர ஸ்வரூபத்தையும்‌, ‘ பயில்‌ ஏறு கண்‌ கரு என்று ஜீவ ஸ்வரூபத்தையும்‌, **வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட” என்று விரோதி ஸ்வரூபத்தையும்‌, *நோற்ற ஆராவமுதே மானேய்‌ பிறந்த’‘ என்று உபாய ஸ்வரூபத்தையும்‌, ‘*எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌” என்று உபேய ஸ்வரூபத்தையும்‌ விஸ்தரேண அருளிச்‌ செய்து, மற்றைய எண்பதிலே பரம விசதமாக அருளிச்‌ செய்தார்‌. ஆகத்‌ திருவாய்‌ மொழி அர்த்த பஞ்சக ப்ரதிபாதகத்வேந திருமந்த்ர விவரணமாகிறது.

ஞாலத்தூடே”‘ (6-9-3), என்கிற பாட்டில்‌ அகாரார்த்தத்தை ஸங்க்ரஹமாக அருளிச்‌ செய்தார்‌. இப் பாட்டில்‌ அர்த்த பஞ்சகமும்‌ கூறப்பட்டுள்ளது.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ
?–6-9-3-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,-எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;
‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.

அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.

அகாரார்த்தத்தை முதல்‌ இரண்டு பத்துக்களாலும்‌, மகாரார்த்தத்தை இரண்டாம்‌ இரண்டு பத்துக்களாலும்‌, நமஸ் ஸப்தார்த்தமான ஸித்தோபாயத்தை ஐந்தாம்‌ பத்தாலும்‌, நமஸ் ஸப்தார்த்தமான உபாய வரணத்‌தாய் ஆறாம்‌ பத்தாலும்‌, நமஸ் ஸப்தார்த்தமான அநிஷ்ட நிவ்ருத்தியை ஏழு எட்டு என்ற இரண்டு பத்துக்‌களாலும்‌, நாராயணாய ஸப்தார்த்தமான இஷ்ட ப்ராப்தியை ஒன்பது பத்து என்கிற இரண்டு பத்துக்களாலும்‌ ஆழ்வார்‌ அருளிச்‌ செய்த படியால்‌ திரு மந்த்ர விவரணம்‌ திருவாய்மொழி யென்னலாம்‌ :.

ப்ரணவார்த்தத்தை ** கண்கள்‌ சிவந்து” பதிகத்தாலும்‌, நமஸ் ஸப்த ஸப்தார்த்தத்தை **கரு மாணிக்கம்‌”” பதிகத்தாலும்‌, நமஸ் ஸப்த ஆர்த்த அர்த்தத்தை “நெடுமாற்‌ கடிமை பதிகத்தாலும்‌, நாராயண ஸப்தார்த்தத்தை “கொண்ட பெண்டிர்” பதிகத்தாலும்‌, ஆய என்ற சதுர்த்தியின்‌ அர்த்தத்தை “பண்டை’ திருவாய்மொழியாலும்‌ அருளிச்‌ செய்திருக்கிற படியாலும்‌ திருவாய்மொழி மூல மந்த்ர விவரண மெனலாம்‌.

சீலமில்லா?? (4-7-1) என்ற பாட்டிலும்‌, *குரை கழல்கள்‌ . (4-3-7) என்ற பாட்டிலும்‌, *கோவாகிய” (9-8-7) என்ற பாட்டிலும்‌, **ஒழிவில்‌ 2 (3-3-1) “ வேங்கடங்கள்‌ ?’ (3-3–6) என்‌ற பாட்டுக்களிலும்‌ மூல மந்த்ரார்த்தமான அர்த்த பஞ்சகத்தை அருளிச்‌ செய்தார்‌.

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே
.–4-7-1-‘நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று;-‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;-வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று; ‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று; ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே
.–4-3-7-இப்பாசுரத்தில் முதல் அடியாலே, சேஷித்வ பிரதானமான பிரணவார்த்தமும், ‘குரைகழல்கள் கைகூப்புவார்கள்’ என்றதனால், நமஸ் சப்தார்த்தமும், ‘கூடநின்ற மாயனே’ என்றதனால், நாராயண சப்தார்த்தமும் சொல்லுகிறது 

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே
–9-8-7-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
.–3-3-1-இப்பாசுரத்தால், ப்ராப்ய பிரதானமான –கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச் செய்கிறார்:-‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,
சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற் சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;-‘இது,சப்த – சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை.
‘தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;-சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.-பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.-ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;-இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–
3-3-6—மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.-கைங்கர்யத்திலே ஈடுபடவே -கர்மங்கள் எல்லாம் தன்னடையே நசிக்கும் –கைங்கர்யம் செய்து கொண்டே குணானுபவமும் பண்ண வேண்டும் -என்றபடி -இனி, முதற்பாசுரத்திலே சொல்லாமல் விடப்பட்டதொரு பொருளைச் சொல்லுகிறார் மேல்:
தாங்கள் – மற்றை விஷயங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள்.
தங்கட்கு – இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. நல்லனவே செய்வார் – தங்கள் சொரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே செய்வார்கள்.
‘ஆக, இதனால், பலத்தை அனுபவிக்கிறவனுக்குப் பலத்தைப் போன்று விரோதி கழிதலைப் பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ?’ என்னில், ‘அது வேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான கைங்கரியத்தைச் செய்யாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்,’ என்கிறார் என்றபடி.
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தேன் வினையாயினகள் எல்லாம் –
மாயனை –சிந்திக்க போய பிழையும் -புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
-தாமரை இலை தண்ணீருக்கும் உப லஷணம் ‘ஆனால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் என்பதற்கு, ‘தங்களுக்கு நல்லவையாய்த் தோற்றியவற்றைச் செய்வார்கள்’ என்று பொருள் கூறின் என்னை?’ எனின், அங்ஙனங்கூற ஒண்ணாதே! ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற
அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே
. அதிகாரி வைலக்ஷண்யமும் –வ்ருத்தியின் -செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி – தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான்.

ப்ரணவார்த்தத்தை ( உலகமூண்ட’* பதிகத்தாலும்‌, நமஸ் ஸப்‌தார்த்தத்தை (உண்ணிலாவிய” பதிகத்தாலும்‌, **நாராயணாய”! ஸப்தார்த்‌தத்தை கங்குலும்‌” பதிகத்தாலும்‌ ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தார்‌.

*கொனள்றுயிருண்ணும்‌ விசாதி பகை பசி ‘”? (5-2-6) என்ற பாட்டிலே ஆழ்வார்‌ * வியாதி பகை பசி என்று வ்யாதி துர்பிஷ தஸ்கரா ‘: என்று கூறப்பட்ட ‘ விஷய ப்ராவண்யம்‌ ‘ “ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வயம்‌ ‘” ஆத்மா பஹாரம்‌”’ என்ற விரோதிகளைக்‌ கூறுகிறார்‌. இவை யித்தனையும்‌ மூலமந்த்‌ ரார்த்த விரோதிகளி்‌றே –

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே
.–5-2-6-யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி-

—

த்வயம்‌–த்வயார்த்தம்‌ தீர்க சரணாகதி யென்றது ஸார ஸங்கரஹத்‌திலே–அதிலே கண்டு கொள்வது.

–

சரம ஸ்லோகம்‌ :–பூர்வார்த்தத்திலே –மாம்‌’‘ என்று தன்‌ ஸெளலப்யத்தைக்‌ கூறினான்‌ கண்ணன்‌. அவனே சரண வரண அர்ஹன்‌–உத்தரார்த்தத்‌திலே அஹம்‌! என்று தன்‌ சக்தி பூர்த்தியைக்‌ கூறுகிறான்‌ கண்ணன்‌-சரணாகதர்களுடைய விரோதி பாபங்களைப்‌ போக்க வல்ல ஸர்வ சக்தன்‌ அவனே யிறே.

ஆழ்வார்‌ * கண்ணன்‌ கழல்கள்‌ ‘! (4-1-3) என்றருளிச்‌ செய்தார்‌. இது மாமின்‌ அர்த்தம்‌, ஆழ்வார்‌ **பனைத்தாள்‌ மத களிறு அட்டவன்‌!” (4-1-4) என்றருளிச்‌ செய்தார்‌. இது அஹமின்‌ அர்த்தமாகும்‌.

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-ஸர்வேஸ்வரத்வ ஸூ சகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –திருமுடி யோட்டை ஸ்பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை-பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ
.–4-1-4-பனை போலே பயாவஹமான காலை யுடைத்தாய் மத்த கஜமான குவலயா பீடத்தை கொன்றவன் திருவடிகளில் தலை சாயுங்கோள் –
கீழ்ப் பாட்டில் மாம் -இன் அர்த்தம் -இதில் அஹம் -இன் அர்த்தம் -வலிய பிரதிபந்தகங்களை நிரயத்னமாக தள்ள வல்லவனை ஆஸ்ரயிங்கோள் –

ஆழ்வார்‌ முதற்பத்தால்‌ பரத்வத்தையும்‌, இரண்டாம்‌ பத்தால்‌ பரத்வ ஸ்த்‌தாபகமான காரணத்வத்தையும்‌, மூன்றாம்‌ பத்தால்‌ காரணத்வ சங்கித தோஷ வ்யாவ்ருத்யர்த்தமாக வ்யாபகத்வத்தையும்‌, நான்காம்‌ பத்தால்‌ வ்யாப்தி நிறம் பெற நியந்தருத்வத்தையும்‌ அருளிச்‌ செய்து பரன்‌ அவனே என்கிறார்‌. ஐந்தாம்‌ பத்தால்‌ அவன்‌ காருணிகனாகையாலே பரம ஸுலபன்‌ என்றார்‌– ஆறாம் பத்தால்‌ கீழ்க் கூறிய பரத்வ ஸெளலப்ய பூர்ணன்‌ விஷயத்தில்‌ பரி பூர்ண சரணாகதியை அநுஷ்ட்டித்தார்‌. இது சரம ஸ்லோகத்தின்‌ பூர்வார்த்தத்‌தின்‌ அர்த்தமாகும்‌–ஏழாம்‌ பத்தால்‌ அவன்‌ சக்தத்வத்தை யுபபாதிக்கிறபடியா லும்‌, எட்டாம்‌ பத்தால்‌ அவன்‌ ஸத்ய காமன்‌ என்று கூறுகிறபடியாலும்‌, ஒன்பதாம்‌ பத்தால்‌ அவன்‌ ஆபத் ஸகன்‌ என்கிறபடியாலும்‌, பத்தாம்‌ பத்தால்‌ அவன்‌ ஆர்த்தி ஹரன்‌ என்று கூறுகிறபடியாலும்‌ விரோதிகளைப்‌ போக்க வல்ல ஸர்வசத்தி, புருஷார்த்த ப்ரததீவத்துக் கநுகுணமாக ஸத்யகாமன்‌, விரோதிகளைப்‌ போக்கவல்ல ஆபத்ஸகன்‌, விரோதிகளைப்‌ போக்குகிறான்‌ ஆர்த்தி ஹரன்‌ என்கிறார்‌–இது சரம ல்லோக்த்தின்‌ உத்தரார்த்தத்தின்‌ அர்த்தமாகும்‌. உத்தரார்த்தத்தில்‌ அஹம் ஸப்தத்தாலே சக்தித்வ ஸத்ய காமத்ம ஆபத் ஸகத்‌ வங்களும்‌ *“ஸர்வபாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி ” என்று ஆர்த்தி ஹரத்வமும்‌ கூறப்பட்டதிறே.

இவ்வளவால்‌ திருவாய்மொழி ரஹஸ்ய த்ரய விவரணம்‌ என்றதாயிற்று.

—

வேதாந்த த்வயம்‌
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த (தை. உப) –உயர்வற உயர்‌ நலமுடையவன்‌ (1-1-1)
விஜ்ஞாநம் ஆநந்தம்‌ ப்ரஹ்ம (ப்ருஹ–உப.)–இனனுணர்‌ முழுநலம்‌ (1-1-9)
ந தத் ஸமஸ்சாப்யதிகஸ் ச (ஸ்வேதா. உப)–மிருநரை யிலனே (1-1-2)
நாராயண பரோ ஜ்யோதி: (தை. உப).–பயிலும்‌ சுடரொளி மூர்த்தி (8-7-1)-
யதா கப்யாஸ்ம்‌ புண்டரீகம்‌ ஏவமஷிணீ (சா. உப).–பங்கயக் கண்ணணனை (8-7-1)
ஆ ப்ரணகாத்‌ ஸர்வ ஏவ ஸூவர்ண :–செம் பொன்‌ திரு வுடம்பு (2-5-1)
அப்ராப்ய மநஸா ஸஹ (தை. உப)-எண்ணின்‌ மீதியன்‌ (9-8.1)
யதோ வாசோ நிவர்த்தந்தே (தை. உப).—சொல்லளவன்‌று. (8-2-6)-
ஸர்வம்‌ கலு இதம்‌ ப்ரஹ்ம தஜ்ஜலான்‌–(சா, உப.)–தானே உலகெல்லாம்‌ தானே படைத்து– (10-6-9)-
நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே -பெரிய வப்பனைப் பிரமன்‌ அப்பனை–(8-1-11)
தேநேதம்‌ பூர்ணம்‌ புருஷேண (தை. ௨உப)–தானேயாகி நிறைந்து ( 10-7-2)
ஆபோ வா இதமக்ரே–“பெரிய நீர்‌ படைத்து அங்குறைத்து.(8-1-5)
அந்தர்யாமி பிராஹ்மணம்‌—-ஒருயிரேயோ-(8-1-5)
தாம்‌ வராஹோ பூத்வா அஹரத்‌ (தை.ஸம்‌.)-ஏனமாய்‌ நிலம்‌ கீண்ட (5-7-6)

விசக்ரமே ப்ருதிவீமேஷ (புருஷ ஸக்த)–வன் மா வையமளந்த (3-8-9)
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே (சா. உப)–தன்மை பெறுத்தி (8-7-7)
ஸர்வ பூதாந்தராத்மா நலிப்யதே லோகது;கேந (கடோபநிஷத் )-யாவையும்‌ யவரும்‌ தானாய் அவரவர்‌ சமயம்‌ தோறும்‌ தோய்விலன்‌ (3-4-10)
யத்தத்‌ அத்ரேச்யம்‌ : (மு. உப.)–பொறி யுணர் வவைவிலன்‌ (1-1)
ஸ ப்ரஹ்மா ஸ சிவ;ஸேந்த்ர -௮யனாம்‌ சிவனாம் திருமால் ( 8-8-11)
அந்தர் பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய. -கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ்‌ பொருள் தொறும்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌
ச்வோ$பாவா மர்த்யஸ்ய யதந்தகைதத் -(கட, உப)-பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌ (4-1-1)
பஹாுதா விஜாயதே-பல பிறப்பாய் -(1-3-2)
ஜ்ஞாதய : பர்யுபாஸதே ஜாகாஸி மாம்‌–(சா-20)–இல்லத்தாரும்‌ புறத்தாரும்‌ மொய்த்து. (8-8-8)
தமீஸ்வராணாம்‌ பரமம் மஹேஸ்வரம்‌–மணிசர்க்குத்‌ தேவர்‌ போலத்‌ தேவர்க்கும்‌ தேவாவோ ! (8-1-5)
ததேதத் ப்ரேய? புதீராத்‌ ப்ரேய த்‌ மித்ராத்‌ (ப்ர. உப).–கொண்ட பெண்டிர்‌ மக்கள்‌ (9-1-1)
வாசா விரூப நித்பயா–(தை ஸ்ம்‌)-தோற்றங்களாயிரம் (6-8-11)
நாஸ்யா ப்‌ரஹ்ம வித் குலே பவதி (மூ. உப)–நல்ல பதத்தால் வாழ்வர் (8-10-11)
வாஸூ தேவ்‌: ஸர்வம்‌ (தை) -எல்லாம் கண்ணன் (6-7-1)
வீபூதீனம்‌ நாஸ்த்யந்த-[கீதை)-எல்லையில் சீர் (2-5-9)
ப்ரஹ்ம தத்‌ பராதாத்‌ (ப்ரு, உப)–நாரணற்‌காளன்றி யாவரோ (7-5-2)

“வேதேஷு பெளருஷம்‌ ஸூக்தம்‌ தர்ம சாஸ்த்ரேஷு மாநவம்‌ பாரதே பகவத்‌ கீதா புராணேஷு ச வைஷ்ணவம்‌’”? என்கிறபடியே வேதாதிகளில்‌ பெளருஷ மாநவ கீதா வைஷ்‌வணவங்கள்‌ போல்‌ திருவாயமொழி அருளிச்‌ செயலில்‌ ஸாரம்—ஜகதி விததம்‌ மோஹந மிதம்‌ தமோ யேநாபாஸ்தம்‌” என்கிறபடியே வருத்தும்‌ புற விருள்‌ மாற்ற இதயத் திருள் கெட எய்தற்கரிய மறைகளை இன் தமிழால்‌ செய்தற்குலகில்‌ வந்தவர்கள்‌ ஆழ்வார்கள்–பரம்‌ பொருளான புருஷோத்தமனைக்‌ காண இரு கண்கள்‌ உபய வேதாந்தங்களாகும்‌. ஸ்வம்‌ ஸம்ஸ்க்ருத திராவிட வேத ஸூத்தை: பாந்தம்‌”? என்றருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீபராசர பட்டர்

இரும் தமிழ்‌ நூல்‌ புலவன்‌ கலியன்‌, இரும் தமிழ்‌ நூல்‌ திருவாய்‌ மொழியிறே. ஆழ்வார்‌ “என்னெஞ்சத்‌ துள்ளிருந்து இங்கிரும் தமிழ்‌ நூல்‌ இவை மொழிந்து (10.6.4) என்றருளிச்‌ செய்தாரிறே. நம்மாழ்வார்‌ அங்கியான நான்‌ மறை ஸாரத்தைக்‌ கண்டவர்‌, இவர்‌ ஒர்‌ ரிஷி. “(ரிஷிம்‌ ஜுஷாமஹே…ஸஹஸ்ர ஸாகாம்‌ ய: _அத்ராக்ஷ£த்‌’* என்றிறே பட்டர்‌ அருளிச்‌ செய்தது. தத்தாத் ருக்தாம்‌ பர்ணீ தடகத சடஜித்‌ த்ருஷ்ட ஸர்வீய ஸாகா’‘ என்றும்‌ “ஸாரம்‌ வேத்யம்‌ ஸ்வ வேதே ஸகலமகதயத்‌ ஸாநுகம்போ சடாரி,’*’ என்றும்‌ *அசேஷ வர்ணார்ஹ வேத” என்றும்‌ மறை முடி தேசிகனும்‌ ௮ருளிச்‌ செய்தாரிறே –

வடமொழி மறை வேத நூல்‌. இது இருந் தமிழ்‌ நூல்‌. அது ஆஜ்ஞஜை. இது ஆணை. அது வசையில்‌ நான் மறை. இது ஏதமில்‌ ஆயிரம்‌, அது சுடர் மிகு சுருதி, இது செவிக்கினிய செஞ்சொல்‌. அது ஒதுகின்றது உண்மை. இது பொய்யில்‌ பாடல்‌. அது பண்டை நான்மறை–நிற்கும்‌ நான்மறை. இது முந்தை ஆயிரம்‌ : அழிவில்லா ஆயிரம்‌. ஆக ஸம்ஸ்க்ருத வேத துல்யம்‌ த்ராவிட வேதம்‌. இதனைக்‌ கண்ட ரிஷி நம்மாழ்வார்‌. இவரை பகவான்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌-அதாவது மயர்வற மதிகலம்‌ அருளினன்‌ என்றபடி. *ப்ருந்தாவநம்‌ பகவதா க்ருஷ்ணேனாக்லிஷ்ட கர்மணா கபேந மநஸா த்யாதம்‌ கவாம்‌ வ்ருத்தி மபீப்ஸதா’” என்கிறபடியே கோ ரக்ஷணத்துக்காக நெருஞ்சிக் காட்டை தத் போக்யமான புல்லாம்படி திரு வுள்ளத்தாலே ஸங்கல்பித்த ஸர்வ சக்தி யானவன்‌ கோ ரக்ஷணத்துக்குப்‌ போலே ஐகத் ரக்ஷணத்துக்கும்‌ தானே கடவனாகையாலே ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக *எனைத்தோர்‌ பிறப்பும்‌–எதிர் சூழல் புக்கு–எனக்கே அருள்கள்‌ செய்ய–௮ம்மான்‌ திரிவிக்கிரமனை–விதி சூழ்ந்தது”? (2. 7.) என்று அனேக ஜன்மங்கள்‌ நான்‌ பிறந்த ஜன்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து எனக்கே தன் ப்ரஸாதங்களைப்‌ பண்ணும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை காற்கட்டிற்‌று என்று இவர்‌ பேசும்படி, கிருபையை இவரொருவர்‌ விஷயமாகவும்‌ ஒரு மடைப் படுத்தி, தன்னோடொத்த ஜ்ஞாக சக்திகளை யுடையராம்படி பண்ண. இப்படியவனால்‌ திருந்தின இவர்‌ ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப் போல்‌ அவனுடைய பேரும்‌ தார்களுமே பிதற்றும்படி யாக்கினார்‌. ஸர்வேஸ்வரன்‌ ஆழ்வாரொவருக்கே மயர்வற மதிநலம்‌ அருளினன்‌. ஆழ்வார்‌ உலகுக்கே மயர்வற மதிநலம்‌ அருளினார்‌. ‘ பெருங்கண்‌ எங்கும்‌ இலக்கற்று அன்பொடு நோக்கான திசையிலே ஆக்‌கையில்‌ புக்குழன்று மாறிப்‌ படிந்து துளங்குகிற இவர்‌ மேலே பட்டது என்றபடி. இது பக்கம்‌ நோக்கறப்‌ பண்ணின விசேஷ கடாக்ஷமிறே . “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌ என்‌ பைந் தாமரைக் கண்ணனே”’ என்றாரிறே ஆழ்வார்‌. இங்கே ஆளவந்தார்‌ ஐதிஹ்யம்‌ அநுஸந்தேயம்‌. **நா ஸெள புருஷகாரேண நசாப் யந்யேந ஹேதுநா கேவலம்‌ ஸ்வேச்சயை வாஹம்‌ ப்ரேக்ஷே கஞ்சித்‌ கதாசந ” என்றும்‌ *’நிர் ஹேதுக கடாஷேணே மதீயேந மஹா மதே ஆசார்ய விஷயிகாராத்‌ ப்ராப்‌நுவந்தி பராம்‌ கதிம்‌- என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப்‌ பண்ணப்பட்ட விசேஷ கடாக்ஷம்‌

“ஸர்வஜ்ஞரான பாஷ்யகாரர்‌ திருவடிகளிலே ஸேவித்து ததபிமத விஷயமாய்‌ ஸகல சாஸ்த்ரங்களை யுமாராய்ந்து அறுதி யிட்டிருக்குமவ ராகையாலே ஆப்த தமராயிருக்கும்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ இன்பமிகு மாராயிரத்‌திலே ‘”ஆநந்தாதி கல்யாண குணங்களை உடையனான தான்‌, மேலே பொன்னும்‌ நாறினாப்‌ போலே நிர்ஹேதுகமாக எனக்குத்‌ தன்‌ திறத்தில்‌ அஜ்ஞாந கந்த மில்லாத தொருபடி தன்னை யுள்ளபடி யறிவித்து’‘ என்றருளிச்‌ செய்துள்ளார்‌. பட்டர்‌ திருவடிகளை யாஸ்ரயித்து உஜ்ஜீவித்த நஞ்ஜீயரும்‌ அருளினன்‌-இத்தலை நன்மை தீமை பாராதே நிர்ஹேதுகமாகத்‌ தன் கிருபையாலே தந்தருளினான்‌. எனக்குத்‌ தந்தருளினான்‌ என்றாதொழிவான்‌ என்னென்னில்‌: அஸநேவஸ பவதி என்று சொல்லுகிற கணக்கிலே பகவத்‌ விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை யஸத் கல்பராக நினைத்திருக்கையாலே “‘ என்றருளிச்‌ செய்தருளினார்‌. *- முந்நீர்‌ வாழ்ந்தார்‌ சூட்டும்‌ கோவை ஆழி யென்கிற ஸாஷாத் க்ருத ஸ்வபரா வ்ருத்தாந்தர்க்கு யாத்ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ தோன்றும்‌” என்று அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌. * வெறிதே யருள்‌ செய்வர்‌ ”’ என்று இவ் வர்த்தத்தை (ஆழ்வார்‌) ஸ்பஷ்டமாக அருளிச் செய்தாரிறே. ‘“செய்வார்கட்கு ” என்று அருளுக்கு ஹேது ஸூக்ருதம்‌ என்னா நின்‌றதே யென்னில்‌ :–அப்போது *வெறிதே: என்கிற விடம்‌ சேராது என்று லோக தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. செய்வார்கட்கு என்றது-தான்‌ செய்ய நினைத்தவர்களுக்கு என்‌றபடி–*யமேவ ஏஷ வ்ருணுதே” என்று ௮வன்‌ வரணத்தைக்‌ கூறி, தேந லப்ய::” என்றதிறே ஸ்ருதி. ப்ரிய தம ஏவ ஹி வரணீயோ பவதி? என்ற ஸ்ரீபாஷ்ய வாக்யமும்‌ ப்ரீதி விஷய மாத்ரஸ்ய ந வரணீயத்வம்‌: கிந்து ஸ்வயம்‌ உபஸ்த்தி தஸ்ய ஸ்வீகார ஏவ. அத: ததவ்யாவ்‌ருத் யர்த்தம்‌ ப்ரிய தம இத் யுக்தம்‌ “ என்ற ஸ்ருத ப்ரகாசிகா வாக்யமும்‌ இங்கே யநுஸந்தேயங்கள்‌ : அருள்‌ பெறுவார்‌ மற்றையோர்‌. அவன்‌ அருள்‌ தருவான்‌ இவருக்கே யிறே. இப்படி யவனுடைய நிர்ஹேதுக விஷயிகாரத்தால்‌ ஆழ்வார்‌ தத்வங்கள விசதமாக அறிய வல்லராம்படி யானர்‌. ஆழ்வார்‌ தத்வ தர்சியிறே. ஆழ்வார்‌ கலியுகாரம்பத்தில்‌ ஸ்ரீவிஸிஷ்டாத்வைத ஸித்தாந்த நிர்த்தாரண ஸார்வ பெளமரிறே.

கலியுகா ரம்பத்தில்‌ தத்வ த்ரய ஸித்தாந்த ப்ரவர்த்தகரிறே நம்மாழவார்‌. இவர்‌ தத்வ தர்சி மாத்ரமே யன்று பரம விரக்தர்‌ பரம பக்தரும்‌ கூட. இவருடைய வைராக்யம்‌ அநிதரஸாதாரணமானது. தேவதாந்தர வைராக்யம்‌: ஐஸ்வர்ய கைவல்ய வைராக்யம்‌, ஆத்மாத்மீய வைராக்யம்‌: லோக யாத்ரா வைராக்யமென்று வைராக்யம்‌ பஹு விதம்‌ : இவை யித்தனையும்‌ ஆழ்வார்க்குப்‌ பரம பரிபூர்ணம்‌. திருவாய்மொழி நான்காம்‌ பத்தில்‌ வைராக்யத்தைப்‌ பூர்ணமாகத்‌ தம்மிடத்‌திலுள்ளதை ப்ரகாசப்‌ படுத்துகிறார்‌– ஐஸ்வர்ய கைவல்ய வைராக்கியத்தை -ஒரு நாயகம்‌’” பதிகத்தாலும்‌, தேவதாந்தர வைராக்யத்தை * தீர்ப்பாரையாமினி ‘* பதிகத்தாலும்‌, ஆத்மாத்மீய வைராக்யத்தை ” ஏறாளும்‌ :” பதிகத்தாலும்‌, லோக யாத்ரா வைராக்பத்தை ”நண்ணாதார்‌’” பதிகத்தாலும்‌ வெளிப்படுத்‌தினார்‌ ஆழ்வார்‌. ஒரு நாயகம்‌ பதிகம்‌ உபதேசப் பத்து. உலகத்தார்க்கு ஐஸ்வர்ய கைவல்ய ப்ராவண்யம்‌ கூடாது என உபதேசிக்கிறார்‌. அது தன்னையே ஸ்வாநுபவமாகக்‌ கூறுகிறார்‌ (ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்பக்‌ கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌. ஐங்கருவி கண்ட வின்பம்‌…சிற்றின்பம்‌'” என்று. ஆக ஆழ்வார்‌ வைராக்யத்தை உபதேசித்தவர்‌ மட்டுமல்லர்‌ வைராக்யத்தைப்‌ பூர்ணமாக உடையவர்‌. தீர்ப்பாரைப்‌ பதிகத்தில்‌ தேவதாந்தர வைராக்யம்‌ ப்ரகாஸ்ஸிதம்‌. இந்தப்‌ பதிகம்‌ தோழிப்‌ பாசுர மாயமைந்துள்ளது. ஆழ்வார்‌ மோஹங்கதர்‌. அவைஷ்ணவ ஸஹவாஸம்‌ ஆழ்வார்க்கு அஸஹ்யம்‌. அது தன்னைத்‌ தோழிப் பாசுரத்தாலே கூறுகிறார்‌ ஆழ்வார்‌ மோஹித்திருக்க அவைஷ்ணவர்கள்‌ உள்ளே நுழைந்தார்கள்‌. அது மோஹித்த ஆழ்வார்க்கு பாதகமாயிற்று, இதனால்‌ தேறுவது-தேவதாந்தர ஸம்பந்தமோ தத் ஸம்பந்தி ஸம்பந்தமோ ஆழ்வார்க்கு ஜ்ஞாதமாயே பாதகம்‌ என்பதன்று. ஸத்தயா… பாதகம்‌ என்றபடி, ஆக பர தேவதா ஸம்பந்தமும்‌ தத் ஸம்பந்தி ஸம்பந்தமும்‌ ஸத்தயா ஸாதகமென்றும்‌, தேவதாந்தர த்த ஸம்பந்தி ஸம்பந்தங்கள்‌ ஸத்தயா பாதகமென்றும்‌ கூறுகிறபடி. இதனால்‌ ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவத்வ பூர்த்தி கூறப்பட்டது–

ஏறாளும்‌ பதிகத்தில்‌ கூறப்பட்ட வைராக்யம்‌ ஆத்மாத்மீய வைராக்யம்‌. அவன்‌ விரும்பினால்‌ ஆத்மாவும்‌ ஆத்மீயமும்‌ உத்தேச்யம்‌, அன்றாகில்‌ அவை த்யாஜ்யம்‌ என்‌றபடி-ஸீதை ‘*நஹி மே ஜீவிதேநார்த்த:… விநா ராமம்‌ மஹாரதம்‌… என்றாப்‌ போலவும்‌, ஆளவந்தார்‌ ” நதேஹம்‌…தவ சேஷத்வ விபவாத்‌ பஹிர்‌ பூதம்‌ ஷணமபி ஸஹே ” என்றாப்‌ போலவும்‌ ஆழ்வார்‌ அருளிச்‌ செய்கிறபடி. ஆத்ம வைராச்யம்‌ ஆத்மீய வைராக்யம்‌ என்ற இந்த இரண்டினுள்‌ ஆத்மீய வைராக்யத்தை முந்துறக்‌ கூறிப்‌ பின்னை ஆத்ம வைராக்யத்தைக்‌ கூறுகிறார்‌ ஆழ்வார்‌ இப் பதிகத்தில்‌, இதன்‌ தாத்பர்யத்தை இருபத்து நாலாயிரத்தில்‌ பெரிய வாச்சான்‌ பிள்ளை யருளிச் செய்கிறார்‌ * ஆழ்வாருடைய ஆத்மாவில் காட்டில்‌ ஆத்மீயமான ஆழ்வார்‌ திரு மேனியை பகவான்‌ முந்துற முன்னம்‌ ஆசைப்‌ பட்டானாகையாலே அவன்‌ விரும்பிய அடைவிலே விடுகிறார்‌ ” என்று. ஈசனுகப்புக்கு வேறுபடில்‌ என்னுடைமை மிக்க உயிர்‌ என்றனக்கும்‌ வேண்டா எனும்‌ மாறன்‌!” என்றிறே ஜீயர்‌ அருளிச்‌ செய்தது-

திருமாலால்‌ அருளப் பட்ட சடகோபனால்‌ அருளிச்‌ செய்யப்பட்ட திருவாய்மொழி * த்ராவிட வேத ஸாகரம்‌”’ என்றும்‌ ** பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌ !* என்றும்‌ போற்றப் படுகிறது. ஸாகரம்‌-ரத்னாகரம்‌ என்‌,று சொல்லப்படுகிறது, ஸ்ரீசட கோப வாங் மயமும்‌ பரமார்த்த ரத்னாகரமானது –**தஸ்ய உதிதி நாம?” (சாந்தோ ) நிரஸ்‌த நிலஹேயன்‌-ஹேயப்ரதிபடன்‌ என்று பொருள்‌. *! உயர்வற ”’ என்று உகாரத்தில்‌. தொடங்கி * உயர்ந்தே!” என்று தகாரத்தில்‌ முடித்ததனால்‌ உதித ஸாமத்துக்கு உள் பொருளாய்‌ நிகில ஹேய ப்ரத்யநீகனாய்‌ ஸ்வாபாவிகமான எண்ணிறந்த கல்யாண குண விஸிஷ்டனாய்‌ இருக்கும்‌ மஹா புருஷனே திருவாய்மொழியில்‌ போற்றப்‌ படும்‌ பர தத்வம்‌-முதற்பத்திற்கு பர்வத்‌திலே நோக்கு என்பதற்கு **அப்யாஸம்‌’” என்ற அடையாளமுண்டு. அப்யாஸம்‌ ‘ஆவது திருப்பித்‌ திருப்பி ஒரு அர்த்தத்தையே சொல்லுவது. ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ நாயனார்‌ ‘வளவேழுலகம் முதலாய வானோரிறையை” *எப்பால் யவர்க்கும்‌ நலத்‌தாலுயர்ந்துயர்ந்து அப்பாலவன்‌?” ‘**எவையும்‌ யாவரும்‌ தன்னுள்ளே ஆகியுமாக்கியும்‌ காக்கும்‌ அவையுள்‌ தனி முதலம்மான்‌””? என்று முதல்‌ பத்தில்‌ அநேக விடங்களில்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அருளிச்‌ செய்தார்‌-இதுவே அப்யாஸமாம்–

சார்ந்த விரு வல்‌ வினைகளையும்‌ சரித்து மாயப் பற்றறுத்து தீர்ந்து தன் பால்‌ மனம்‌ வைக்கும்படி. எம்பெருமானால்‌ திருத்தப்பட்டு ஈரிலின்பத்திரு வெள்ளத்தில்‌ திளைத்த உள்ளத்தினரான இவ்வாழ்வார்‌ சேதனர்களைத்‌ திருத்தியபடி யாவது -ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ வண்புகழ்‌ நாராயணனே. ஸம்ஸார பந்த ஹேதுவான *நீர்‌ நுமது என்கிற அஹங்கார மமகாரங்களை : அஸங்க சஸ்த்ரேணச்ருடேன சித்வா ‘” என்ற அஸங்கமாகற சஸ்த்ரத்தாலே வேர் முதல்‌ மாய்த்து இறை சேர்மின்‌. எம்பெருமான்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து அநுஸந்தானம்‌ செய்வதற்கு உரிய மந்த்ரம்‌ பெரிய திருமந்த்ரமே. எம்பெருமானை நம்மால்‌ ஆஸ்ரயிக்க முடியுமோ? அவன்‌ மிகப்‌ பெரியவனன்றோ! என்றஞ்ச வேண்டா. அவன்‌ பத்துடை யடியவர்களுக்கு எளியவன்‌, நிலை வரம்பில பல பிறப்பாய்‌ எளிவரு மியல்வினன்‌. அவனுடைய உணர்வு கொண்டுணர்ந்து, கணக்கறு நலத்தனன்‌ அந்தமிலாதியம்‌ பகவன்‌ வணக்குடைத்‌ தவ நெறி வழி நின்று இரு பசை யறுத்து அவனை வழிபடுங்கோள்‌, அவனை’ வணங்கி வழிபட உத்யோகிக்கும் போதே பஜன விரோதிகள்‌ தானே அகன்‌று போம்‌. கழிமின்‌ தொண்டீர்கள்‌ கழித்துத்‌ தொழுமின்‌ அவனைத்‌ தொழுதால்‌ வழிகின்ற வல்வினை மாள்வித்‌து அழிவின்‌றி யாக்கம்‌ தரும்‌. பகவானை வழிபடுவது வேப்பங்குடி நீர் போல்‌ கசப்பாக இருக்கு மென்‌று அகல வேண்டா. அமுதிலுமாற்ற இனியனாயிருப்பதால்‌ அவனுடைய அநு ஸந்தானமும்‌ ** ப்ரத்யஷாவகமம்‌ தர்ம்யம்‌ ஸுஸுகம்‌ கர்த்‌துமவ்யம்‌ என்றபடியே மிகவும்‌ இனியதாக இருக்கும்‌. நம்‌ பிழையைக் கண்டு அஞ்ச வேண்டா-என்‌பிழைத்‌தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு ‘ என்றபடியே அவனுடைய பொறை ப்ரஸித்தமானது. அவனுடைய பெருமையையும்‌ நம்முடைய சிறுமையையும்‌ கண்டு அஞ்ச வேண்டா. அவன்‌ ஸுசீலன்‌. நம்மை ஸ்வீகரிப்பதினாலேயே அவன்‌ பெரும்‌ புகழ்‌ படைத்து உளனாகத்‌ தன்னை நினைத்திருக்குமவன்‌. அவன்‌ மிகப்‌ பெரியோன்‌, நாம்‌ அகிஞ்சனர்கள்‌. நம்மாலவனை ஆராதிக்க முடியாது என்று அஞ்ச வேண்டா. ஆர்வத்‌தோடு நாம்‌ ஸ்மர்ப்பிக்கும்‌ அணுவளவான வஸ்துவையும்‌ அவன்‌ பெறாப்பேறாகக்‌ கொள்ளும் பரிபூர்ணனானவன்‌. குடிலர்களான நம்மால்‌ அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்ச வேண்டா, அவன்‌ நீர் புரை வண்ணன்‌. நம்‌ நினைவுக்குத்‌ தகுந்தபடி தன்னை யாக்கிக்‌ கொண்டு நம்மோடு பழகக் கூடியவன்‌! ஓடும்புள்ளேறிச்‌ சூடும்‌ தண்‌ அழாய்‌ நீடுநின்றவை ஆடுமம்மான்‌. ஆகிலும்‌ அவனை நம்மால்‌ ஆஸ்ரயிக்கப் போமோ -அகேக ஜன்மார்ஜிதமான புண்யத்தினா லன்றோ அது ஸித்திப்பது என்றஞ்ச வேண்டா. விமுகர்களுக்கு ௮தி தூரஸ்த்தனாலும்‌ ஆநுகூல்யமும்‌ ஆசா லேசமும்‌ உடையவர்களுக்கு பக்திக்கும்‌ பரிகணகைக்கும்‌ ஒக்க வருமவன்‌. அவன்‌ நம்‌ அவஸ்த்த அனுகுணமாக சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க வல்ல விரகன்‌, ஆகையால்‌ வண் புகழ்‌ நாரணன்‌ திருவடிகளைப் பற்றி நலம்‌ செய்வதே நலம்‌ என்று உபதேசித்தருளினார்‌ முதற்பத்தில்

ஜகத் காரண வஸ்துவே பரம்பொருள் -நாராயணனே பரனாவான் -திருமகளார் தனிக் கேள்வன்‌. பெருமையுடைய பிரான்‌. அவன்‌ இரு மெய்வினை கடிந்து அரும் பயனாய மோக்ஷத்‌தையும்‌ தருமவன்‌. வேண்டிற்‌ றெல்லாம்‌ தரும்‌ கோதில்‌ வள்ளல்‌ மணி வண்ணன்‌. ஸ்ரீய: பதி த்வமும்‌, கருட வாஹநத்வமும்‌, திருமுடியில்‌ திருத்துழாய்‌ வலயத்தைச்‌ சூடுவதும்‌, பொரு மா நீள்படை ஆழி சங்கங்களைத்‌ தரிப்பதுவும்‌ பரத்வ சிஹ்னங்களாகும்‌. ஆக முதற்பத்தில்‌ ஆழ்வார்‌ ஸ்வாதீந த்ரிவித சேதனாசேதன ஸ்வரூப ஸ்‌திதி ப்ரவ்ருத்திகத்வமான பரத்வே பரத்வத்தைத்‌ தானும்‌ அநுபவித்து நமக்கும்‌ அநுஸந்‌திக்கைக்காக பரம க்ருபையினாலே உபதேஸித்தருளினார்‌. நாரணன்‌ திண் கழல்‌களைப்‌ பற்றி வணங்க வழி படுவதே உய்யும் வகை என்பது முதல்‌ பத்தின்‌ உபதேசப்‌ பத்தின்‌ ஸாராம்சமாகும் –

சாரீரகத்தில்‌ ப்ரஹ்ம சப்தார்த்தத்தை விவரிக்கும்‌ வழியாலே எம்பெருமானின்‌ பரத்வத்தைச்‌ சொல்லி அடுத்த ஸூத்ரத்திலே பரப்ரஹ்மத்துக்கு ஜகத்‌ காரணத்வத்தை லக்ஷணம்‌ சொல்லு மாற்றாலே சொன்னது போல ஆழ்வாரும்‌ முதல் பத்தாலே பரத்வத்தை அருளிச்‌ செய்து இரண்டாம்‌ பத்தாலே காரணத்வத்தை அருளிச்‌ செய்கிறார்‌–

சோராத எப்பொருட்டும்‌ ஆதியாம்‌ சோதிக்கே ஆராத காதல்‌ குரு கூர்க்‌ சடகோபன்‌. (2-1-1)
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்

மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்

தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

ப்ரவாஹ ரூபத்தாலே நித்யமாப்ப்‌ போருகிறதும்‌ துயரை விளைவிப்பதுமான பிறவி முதலானவற்றுக்கும்‌ அவற்றை யுடைய பொருள்களுக்கும்‌ அத்விதயமான காரணம்‌ எம்பெருமான்‌. அவ் வெம்‌பெருமான்‌ சேதனர்க்கு தன்னை வழி பட வேண்டுமென நினைத்து உபகரணங்‌களக்‌ கொடுத்து விட, கொடுத்த உபகரணங்களைக்‌ கொண்டு வழி கெட கடவா நின்றால்‌ இப்போது இங்ஙனே போயிற்றதாகில்‌ கரமத்திலே நம்‌ பக்கலிலே ருசியைப்‌ பிறப்பித்து மீட்டுக்‌ கொள்ளுகிறோம்‌ என்று அநுமதி தானத்தைப்‌ பண்ணி உதாஸீனனாயிருக்கும்‌, இப்படித்‌ தன்‌ நினைவைத்‌ தப்பிப்‌ போரச்‌ செய்‌தேயும்‌ கர்ஷகனாயிருப்பான்‌ ஒருகால்‌ நிஷ்பல மாயிற்றே என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே உத்யோகிக்குமா போலே ஒருகாலல்லா ஒரு கால்‌ ஆகிலும்‌ ஆகிறது என்று ஸ்ருஷ்டியா நிற்கும்‌. அத்த எம்பெருமானே வேர்‌ முதலாம் வித்தாய் என்று திரிவித காரணமும்‌ என்றார்‌. உபாதான-நிமித்த ஸஹகாரி என்று காரணம்‌ மூன்று விதம்‌. வேர்‌-ஸஹகாரி காரணம்‌. முதல்‌ -நிமித்த காரணம்‌. வித்து-உபாதான காரணம்‌. பத்த-முக்த-நித்யரென்கிற த்ரிவித சேதனர்க்கும்‌ ப்ரக்ருதி-நித்ய விபூதி-காலம்‌ என்‌று மூவகை அசேதனத்‌திற்கும்‌ காரணமாவான்‌. ஸூக்ஷ்ம சேதனாசேதந விசிஷ்டனாய்க்‌ கொண்டு எம்‌ பெருமான்‌ உபாதான காரணமாகவும்‌. ஞான சக்த்யாதி குணங்களோடு கூடிய வனாய்‌ ஸஹகாரி காரணமாகவும்‌ ஸங்கல்ப விசிஷ்டனாய்‌ நிமித்த காரணமாகவும்‌ ஆகிறான்‌ என்று எம்பெருமானுடைய காரணத்வத்தை அருளிச்‌ செய்தார் –இப்படிக்‌ காரண பூதனான எம்பெருமான்‌ தமக்குச்‌ செய்த உதவியை அருளிச்‌ செய்கிறார்‌

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
–2-3-2-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்

பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-அதனால்‌ ஆழ்வார்‌ அடைந்த பயன்‌-ஈறில்‌ என்றதால்‌ ஐச்வர்யத்தையும்‌-இரு என்றத்தால்‌ கைவல்யத்தையும்‌ நீக்கி-ஈ.றிலின்பத்‌ திருவெள்ளம்‌ என்றத்தால்‌ அந்தமில்‌ பேரின்பத்தைக்‌ காட்டி-திருவடி திரு அனந்த ஆழ்வான் இவர்களும் குமிழ் நீர் உண்ணுகிற விஷயத்தில் இ றே நான் அவகாஹிக்கப் பெற்றது

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-உள்ளம்‌ தேறிய பின்‌ தாம்‌ அடைந்த நிலை-அம்ருதத்தையும்‌ விஷத்தையும்‌ ஒக்க விரும்பும்‌ மனத்தைத்‌ தவிர்ந்து அநந்ய ப்ரயோஜனமாய்‌ உன் பாத பங்கயமே மருவித்‌ தொழும் மனம்‌ உடையேனானேன்‌

பொருளென்றில்‌ வுலகம்‌ படைத்தவன்‌ புகழ்‌ மேல்‌ –மருளில்‌ வண் குருகூர்‌.வண்‌ சடகோபன்‌. (2-10-11) என்ற -பாசுரத்திலே உலகம்‌ படைத்த எம்பெருமான்‌ புகழ்‌ மேல்‌ அதாவது. கல்யாண குணங்களிலே அடியேன்‌ மருளில்லாதவனானேன்‌. அதுக்கடி தேவரீர்‌. மயர்வற மதி நல மருளியதே என்றார்‌–எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலே தமக்குப் பிறந்த ஞனத்‌திற்குப்‌ பயன்‌ மோக்ஷமாகையாலே
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
-2-3-10-என்று இவ் வுலக விஷயங்களின்‌ லாப-அலாபங்களாலே வரும்‌ களிப்பும்‌ கிலேசமும்‌ ஜன்ம வ்யாதி ஜரா மரணங்களும்‌ நீங்கி சுத்த ஸத்வ மயமான எல்லையில்‌ தேஜோ ரூபமான திருமேனி யுடையோமாய்‌ ஆழியும்‌ சங்குமேந்து வானமும்‌ பூமியும்‌ ரக்ஷிக்கும்‌ எம்பெருமான்‌ அடியராம்‌ நித்ய ஸூரிகளின்‌ திரளிலே போய்ப்‌ புகுருவது எப்போதோ என்று அம்‌ மோக்ஷத்தைப்‌ பெறுவதில்‌ உள்ள ஆசையாலே ஆழ்வார்‌ அத்தைத்‌ தேடி, அது அப்போதே கிட்டப்‌ பெறாமையாலே–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே
–2-4-1-என்று கொம்பை யிழந்த தளிர்‌ போலே. “வாடி அவனைக்‌ காணு மாசை யுள்‌ நைந்து அக்னி ஸகாசத்திலே அரக்கும்‌ மெழுகும்‌ போல்‌ ௨ருகி உள்ளம்‌ மலங்க வெவ் வுயிர்த்து கண்ணீர்‌ மிகக்‌ கலங்கி” உள்ளம்‌ உருகி மனஸ்ஸூக்குத் தாரகமான. ஆத்மாவும்‌ உலர்ந்து நிற்க,-ஆழ்வார்‌ வாட்டத்தை நீக்கி எம்பெருமான்‌ மோஷத்தைக்‌ கொடுக்கப்‌ புகுந்தான்‌.

அவ் வாத்மாவின்‌ தாபம்‌ ஆறும்படி-
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே
–2-5-1-என்று பரம பதத்திலுள்ளார்‌ பக்கல்‌ பண்ணும்‌ ஸ்நேஹத்தை என்‌ பக்கலிலே பண்ணி கமர்‌ பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப்‌ போலே உள்ளூலாவி உரள்குளாலி யுலர்ந்து உலரந்து என்கிற என்‌ ஆவியிலே விடாயர்‌ மடுவிலே வந்து சேருமா போலே வந்து சேர்ந்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–2-6-2— ஆடியாடியில்‌ பிறந்த ஆற்றாமையால்‌ வந்த தாபமும்‌ தீர்ந்து கண்ணும்‌ குளிர்ந்திருக்கின்ற எம்பெருமான்‌, தாம்‌ ஆழ்வாரை ௮நுபவிக்‌கும்‌ போது ௮ந்ய பரதை ஆக வொண்ணாது என்று பார்த்து உலக ரக்ஷணத்துக்‌ குறுப்பான வ்யாபார மெல்லாம்‌ பண்ணி வேறொன்றில்‌ கண் வையாது ஆழ்வாரை அநுபவிப்பதை யொழிய வேறு பயன்‌ கருதாது ஆழ்வாரை விட்டு இனிப் பேரேன்‌ எனப் புகுந்தான்‌ என்‌ றருளி
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
–2-6-7-என்று ஆழ்வாரோடு ஸம்பந்தி ஸம்பந்திகளையும்‌, எம்பெருமானுடைய தாமரைக்‌ கண்கள்‌ நோக்காலன்றித்‌ தன்‌ முயற்சியால்‌ போக்க வரிதாப்‌ ஒரு காலும்‌ முடிந்து வெளிச்‌ சிறப்பதன்‌றியே எல்லை யில்லாத்‌ துன்பத்தையும்‌ தாபத்தையும்‌ தர வல்லதான ஸம்ஸாரமாகிற நரகத்தைக்‌ கிட்டும்‌ தண்மையைத்‌ தவிர்த்து அவர்களை முக்த ராக்கின படியையும்

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
–2-7-1-என்று தம்மோடு கீழ்‌ ஏழ்படி காலும்‌ மேல்‌ ஏழ்படி காலும்‌ ஸம்‌பந்தி ஸம்பந்தி களாயிருப்பார்‌ அனைவரும்‌ தன்‌ ஸம்‌பந்தமே காரணமாக கேசவன்‌ தமராகிற பெருஞ் சதிரைப்‌ பெற்றனர்‌-எனக்கே அருள்கள்‌ செய்ய விதி சூழ்ந்ததால்‌ என்கிறபடியே எம் பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபை யாகிற பெறுஞ்சதிரைப்‌ பெற்றனர்‌. அத்தால்‌ ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயானது ஊற்று மாறுதே பெருகுவதே என்று இவர்‌ தாமே ஆச்சரியப்படும்படி தம்மை வாழ்‌வித்த படியையும்‌ அருளிச்‌ செய்து–

இப்படித்‌ தம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகள்‌ அளவும்‌ வெள்ளமிடுற ப்ரிதியாலே எம் பெருமான்‌
1-நீந்தும்‌ துயரில்லா வீடு (2-8-9) என்றும்‌
2-கெடலில்‌ வீடு செய்யும்‌ (9-9-11) என்றும்‌
3-எம்மா வீட்டுத்‌ திறமும்‌ செப்பம்‌ (3-9-1)-என்றும்‌
கடக்க வரிதான பிறவி முதலியனவும்‌ அபக்ஷய விநாசங்களையும்‌ கடத்தும்‌ துக்க லேசமுமில்லாததும்‌–தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே என்று நிச்சயித்த அஹங்கார லேசமுமில்லாததும்‌ ஐச்வர்ய கைவல்யங்கள்‌ முதலான்‌ அல்ப புருஷார்த்தங்க ளன்‌றிக்கே சால உயர்ந்ததுமான மோக்ஷத்தைக்‌ கொடுக்கத்‌ தேடினான்‌ என்றார்-

ஆழ்வார்‌ அறுதி யிட்ட மோக்ஷம்‌-எம்பெருமான்‌ தமக்கென்று மோக்ஷம்‌ தருவானாகில்‌ அவ்வாறு அளிக்கப்‌ படும்‌ மோக்ஷம்‌ அஹங்காரத்தைக்‌ கொண்ட தாகையாலே ஐச்வர்யமும்‌ கைவல்‌யமும்‌ போன்று தம்‌ ஸ்வரூபத்திற்குச்‌ சேராது. அது பற்றிய பேச்சும்‌ தமக்கு அஸஹ்யமாயிருக்கும்‌. நின்‌ செம் மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை-அம்மா அடியேன்‌ வேண்டுவ தீதே–ஆதலால்‌ ப்ராப்த சேஷியான உன்னுடைய உட்புறம்‌ [உள்ளங்கால்‌] சிவந்து மேலே கரியனவாய்‌ பரம பூஜ்யமான திருவடிகளை அடியேன்‌ தலையிலே கொக்கு வாயும்‌ படு கண்ணியும்‌ போலே சேர்த் தருள வேணும்‌ என்று வகுத்த சேஷியான எம்பெருமான்‌ ஸ்வருபத்துக்கும்‌ சேஷ பூதனான தன்‌ ஸ்வரூபத்திற்கும்‌ சேரும் படி எம்பெருமான்‌ . தமக்கு பரம புருஷார்த்தத்தை உபகரித்தான்‌ என்று அறுதி யிட்டார்–பரனுக்கு ஓர்‌ அதிசயத்தை விளைவிப்பதே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்‌. அதற்காகவே அவன்‌ இருக்கிறான்‌. ஆதலால்‌ தம்‌ கைங்கர்யத்தால்‌ அல்லது தனக்கு மோக்ஷம்‌ கொடுப்பதால்‌ எம்பெருமானுக்கு உகப்பை விளைக்குமவனே சேஷ பூதன்‌. இப்படி உகக்குமவன்‌ சேஷி யாகிறான்‌. ஆகவே இருவர்‌ ஸ்வரூபத்திற்கும்‌ சேருமாறு எம்பெருமான்‌ ஆழ்வார்க்கு மோக்ஷ மளித்தான்‌ என்பது கருத்து –

ஆழ்வார்‌ உலக மக்களுக்குச்‌ செய்தருளிய உபதேசம்‌--இவ் விதம்‌ அறுதியிட்ட ஆழ்வார்‌ ௮றிவினால்‌ குறைவில்லா அகல்‌ ஞாலத்‌தவர்‌ உணர்ந்து நன்னெறியில்‌ வாழ்வதற்காக-ஸர்வ ஸமாச்ரயணீயனான எம்‌ பெருமானுடைய (முதற்பத்திலே விசதமாக அருளிச்‌ செய்த) ஸர்வ ஸ்மாத் பரத்‌வத்தை நிலை பெறுத்துவதற்குத்‌ தேவையான ஸகல பல ப்ரதத்வத்தை
1-திண்ணன் வீடு முதல் முழுதுமாய்‌ எண்ணின்‌ மீதியளன் எம்பெருமான்‌
[2-2-1]-என்ற பாசுரத்தில்‌ வீடு முதல்‌ முழுதுமாய்‌ மோக்ஷம்‌ முதலாக ஐச்வர்யம்‌ கைவல்யம்‌ முதலிய அனைத்துப்‌ பலங்களையும்‌ தருமவன்‌ எம்பெருமான்‌ என்றத்‌தாலும்‌: காரணத்வத்தை :-ஞான சக்தி முதலான கல்யாண குணங்களை உடையவனும்‌ தாங்கள்‌ அநீச்வரராயினும்‌ ஸர்வேச்வரனோடு ஒப்பாவார்‌ என்கிற ஸம்சயத்தை உண்டாக்குகிற தேவ ஜாதியையும்‌ மற்றும்‌ மானுடர்‌ முதலிய அனைத்துப்‌ பொருள்களையும்‌ தன்‌ ஸங்கல்பத்தாலே படைப்பதற்குத் தகுவான் என்னுமிடத்தைக்‌’ – கோள்‌ சொல்லிக்‌ கொடுக்கும்‌ புண்டரீகாஷனுமாவான்‌ என்று கூறுகிற
தகும்‌ சீர்த்‌ தள்தனி முதலிதுள்ளே மிகும்‌ தேவும்‌ எப்பொதளும்‌ படைக்க தரும்‌ கோலந்தாகரைக்கண்ணன்‌. (2-2-5) என்கிற பரசுரத்திலும்‌
கருத்தில்‌ தேவும்‌ எல்லாப்‌ பொருளும்‌
வருத்தித்த’மாயப் பிரானை
(2-9-8) என்கிற பாசுரத்திலும்‌
தன் உந்தியுள்ளே வாய்த்த திசை முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ ஆக்கினான் (2-9-9) என்கிற பாசுரத்திலும்‌ வெளியிட்டு
தேவும்‌ எப் பொருளும்‌ படைக்கப்‌ பூவில்‌ நான் முகளைப்‌ படைத்த தேவன் எம் பெருமானுக் கல்லால்‌ பூவும்‌ பூசனையும்‌ தகுமே. (2-9-4) என்கிற பாட்டிலே தேவ ஜாதியையும்‌ மற்றைப்‌ பொருள்களையும்‌ படைக்க வென்று ஒரு பூவிலே நாலு பூப் பூத்தாற் போலே நான்முகனைப்‌ படைத்த எம்பெருமான்‌ கண்ணனுக் கல்லது மற்‌றை யோர்க்குப்‌ பூவும்‌ பூசனையும்‌ தகாது. பூத் தகுவது ஸுகுமாரனுக்கு -பூசனை தகுவது முதன்மை யுடையவனுக்கு என்று சொல்லிய வித்தால்‌ ஸெளகுமார்யத்தையும்‌ முதன்மையையும்‌ திண்ணன்‌ வீடு என்கிற திருமால் பரத்துவத்தை அவதாரத்தே காட்டுகிற திருவாய் மொழியாலே வெளியிட்டார்‌.

அணைவது அரவணை மேல்‌ பூம்பாலை யாகம்‌ புணர்வதிருவரவர்‌ முதலும்‌ தானே இணைவனாம்‌ எப்பொருட்கும்‌ வீடு முதலாம்‌ புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே. (2-8-1) என்னும்‌ பாசுரத்தில்‌
அணைவது அரவணை மேல்‌–விடாயர்‌ மடுவிலே விழுமா போலே எம்‌பெருமான்‌ மென்மை நாற்றம்‌ குளிர்த்தி இவற்றை இயல்பாக உடைய திருவனந் தாழ்வானோடே அணைவதாகிற சேஷ சாயித்வத்தையும்‌
பூம் பாவை யாகம்‌ புணர்வது-போக்யதையே வடிவாக உடையவளும்‌ இயற்கையான [நிருபாதிக] பெண்மையை உடையவளுமான பெரிய பிராட்டி யாரோடே கலந்து வர்த்திக்கிற தாகிற ஸ்ரீ ய :பதித்வத்தையும்‌ .
இணைவனாம்‌ எப்பொருட்கும்‌–நான்முகன்‌-சிவன்‌ இவர்களுக்குக்‌ காரண பூதனுமாகையாலே வந்த மேன்மையை உடையவன்‌-தேவர்‌-மானுடர்‌-விலங்கு தாவரங்கள்‌ தோறும்‌ ஸஜாதீயனய்‌ வந்து அவதரிப்பான்‌ எம்பெருமான்‌. நான்‌ முகன்‌-ருத்திரன்‌ இவர்கள்‌ நடுவே வந்தவதரிப்பது உபேந்திரனாவது. சக்ர வர்த்தி ஸ்ரீவஸூ தேவர்கள்‌ அளவிலே அமைத்து (ஸங்கோசித்து] வந்து பிறப்பது, பெருங் கேழலாவது, குப்ஜாம்ர வ்ருஷமாவது ஆகா நிற்பன்‌ என்கிற அவனுடைய அவதாரத்தால்‌ வந்த எளிமையையும்

இப்படித்‌ தாழ விட்டுப்‌ பிறப்பது எத ற்காகவெனில்‌, வீடு முதலா-மோக்ஷமளித்தருள என்ன, அவதரித்த இடங்களிலே மோக்ஷ மளித்த இடமுண்டோ என்னில்‌-ஸ்ரீ ராமாவதாரத்தில்‌ பெரிய உடையாருக்கு -என்‌ அநுமதி பெற்று மேலான உலகினை அடைவாய்‌ என்றும் ராமபிரான்‌ ப்ரஹ்ம மேதத்தாலே பெரிய உடையாருக்கு ஸம்ஸ்காரம்‌ செய்து தன்‌ பதத்தையும்‌ அளித்தான்‌ என்றும் சொல்லுகிற படியே மோக்ஷமளித்தான்–ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில்‌ : கண்டா கர்ணன்‌ என்ற பிசாசத்துக்கு இந்திரன்‌ உள்ளதனையும்‌ உனக்கு அழிவில்லாத ஸ்வர்க்க வாஸம்‌ ஏற்படும்‌, இந்திரன்‌ போனவுடன்‌ ஸ்வர்க்கத்தை விட்டு என்‌ ஸாயுஜ்யத்தை அடைவாய்‌-என்றபடியே மோக்ஷமளித்தான்‌ என்றத்தால்‌ எம்பெருமானுடைய மோக்ஷம்‌ கொடுக்கும்‌.தன்மையையும்

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே
–2-8-4-என்ற பாசுரத்திலே அந்தமில் பேரின்பமான பரமபதத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே சென்று கிட்ட ஆசையுடையீர்‌ ! நினைக்கின்ற விஷயத்தின்‌ இனிமையாலே ஸாதந தசையே தொடங்கி ஸுக ரூபமா யிருக்கும்‌ எம்பெருமானுடைய கல்யாண குணங்களிலே படியுங்கோள்‌ என்று சொன்ன வாற்றால்‌ எம்பெருமானுடைய முமுஷுக்களாலே உபாஸிக்கப்படுகின்‌ற தன்மையையும் வெளியிட்டருளினார்–

எம்பெருமான்‌ நாரணனே ஸர்வ ஸ்மாத் பரன்‌ என்னுமர்த்தத்துற்குச்‌ சான்றாக
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே
–2-2-10-என்று ப்ரம்மா சிவன்‌ இந்திரன்‌ தேவர்‌ முதலியோர்‌, எம்பெருமான்‌ நாரணன்‌ பிராட்டியும்‌ தானுமாய்‌ இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே: திருப்பாற்கடலின்‌ இக்கரையிலே நின்று, கூப்பிட்டால்‌ இவர்‌களுக்குக்‌ காட்சி கொடுக்க பெரிய திருவடி திருத்தோளிலே புறப்பட்டால்‌ அவன்‌ திருவடிகளில்‌ விழுந்து வணங்‌கி நீ அவதரித்துத்‌ தாழ நின்று ஸ்வாதந்த்ர்யத்தை மறைத்து பாரதந்தர்யத்தை மேற் கொண்டு உனது முதன்மையையும்‌ மேன்மையையும்‌ பிறர்‌ அறியா வண்ணம்‌ மறைத்து நின்றாய்‌. ஆகிலும்‌ எங்களையும்‌ நாங்களிருந்த லோகங்களையும்‌ உன்‌ ஸங்கல்பத்தாலே தோற்று வித்தாய்‌. ஆதலால்‌ எங்களுக்குக்‌ காரணமான நீயே ஸ்வாமி என்று ஏத்துவர்‌ என்கிற மற்றைத்‌ தேவர்களுடைய வார்த்தையையும்
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
–2-8-6-என்று பாசுபதாஸ்திரத்தைப்‌ பெறுவதற்காக மலர்‌ முதலியவற்றைக்‌ கொண்டு சிவனை ஆராதிக்கப் போகும்‌ அர்ஜுனனை நோக்கி காக்குமியல்வினனாகிய கண்ணபிரான்‌ அம் மலர்களை நம் காலிலே இடு என்றருளிச்‌ செய்ய -ருத்ரனை சுத்தனாய்‌ சிவன்‌ என்று சொல்லும்படி செய்தருளிய கண்ண உலகளந்த திருவடிகளிலே அம் மலர்களை இட–வீரனும்‌ விஜயனும்‌ குந்தி புத்ரனுமான அர்ஜுனன்‌ கண்ணன்‌ திருவடிகளில்‌ ஸமர்ப்பித்த பூக்களை கங்காதரனாம்‌ ருத்திரன்‌ தலையில்‌ கண்டு கண்ணனே ஸர்‌வ ஸ்மாத் பரன்‌ என்று நிர்ணயித்தான்‌ -என்கிறபடியே தான்‌ இட்ட மலர்களை சிவன்‌ தலையில்‌ கண்டு பார்த்தன்‌ எம்பெருமான்‌ கண்ணனுடைய பரத்வத்திலே கலங்காதே தெளிவு பெற்றான்‌. அர்ஜுனன்‌ கண்ணன்‌ திருவடிகளிலே இட்ட மலர்களை யொத்த மலர்களை அல்ல, தான்‌ இட்ட மலர்களையே கண்டான்‌. அதையும்‌ பக்கங்களில்‌ காணாது இவன்‌ தலையிலே கண்டான்‌. ஆப்தர்‌ சொல்லிக்‌ கேட்கை யன்றிக்கே ச்ருதி ஸ்ம்ருத்‌யாதிகளா லன்றிக்கே தானே ப்ரத்யஷமாகக் கண்டான்‌ என்ற பொருள்‌ கொண்ட இப் பாசுரத்தாலே பெரிய ஞானத்தை உடைய அர்‌ஜூனனுடைய ப்ரத்யஷத்தையும்‌ காட்டி அருளினார்–

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே
–2-8-4-என்னும்‌ பாசுரத்திலே அவனைத் தொழ இழிவார்க்கு–புலனைந்து மேவும்‌ பொறி யைந்து நீங்கி என்றத்தால்‌ சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும்‌ இந்த்ரிய பாரவச்யத்தைத்‌ தவிர்ந்து என்கையாலே அல்ப-அஸ்திரத்வாதி தோஷங்கள்‌ நிறைந்த ஐம்புல வின்பங்களை அநுபவித்திருக்கும்‌ இவ்வுலக வாழ்வின்‌ துன்‌பத்தைக்‌ காட்டியும்‌, நலமந்த மில்லதோர்‌ நாடு புகுவீர்‌ என்றத்தால்‌ அந்தமில்‌ பேரின்பமாய்‌ தேச விசேஷமான பரமபதத்தே புக வேண்டியிருப்பீர்‌ என்கையாலே மோஷத்தின்‌ ஆனந்தத்தைக்‌ காட்டியும்‌, பலமுந்து சீரில் படிமின்‌ ஓவாதே-சில கார்யங்கள்‌ ஆரம்பத்திலே வருத்தம்‌ தருவனவாய்‌ முடிவிலே இன்ப மயமாக இருக்கும்‌. எம்பெருமானுடைய கல்யாண குணங்களின்‌ அநுபவம்‌ அங்ஙனன்‌றிக்கே இன்ப மயமாகவே இருப்பதால்‌ ஆரம்ப நிலையிலிருந்தே பலமாகவே இருக்கும்‌. தியானிக்கப்படும்‌ விஷயம்‌ இனியதாக இருப்பதாலே ப்ராப்ய [குணாநுபவ] தசை போலே ஸாதந [த்யான] தசையிலும்‌ இனிதாயிருக்கையாலே பலம்‌ முற்பட்டிருக்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்‌ என்று கூறுமாற்றால்‌ ஸாதந ரஸத்தையும்‌ காட்டி வேதாந்தங்களிலே சரீரத்தின்‌ நடுவில்‌ தாமரை மலர்‌ போன்ற உருவமுடையதும்‌ பரம்‌ பொருளுக்கு உறைவிடமுமான அல்பமான ஹ்ருதயம்‌ உள்ளது. அந்த ஹ்ருதயத்திலும்‌ சுடர்ச் சோதியாய்‌ விளங்குகின்‌றவனும்‌ சோகம்‌ முதலிய குறையற்றவனும்‌ ஆன மிக ஸூக்ஷ்மமான பரம் பொருள்‌ உள்ளான்‌. அவனுள்‌ இருக்கும்‌ குணங்களை உபாஸிக்க வேண்டும் என்றும்
பர ப்ரஹ்மத்தின் உறைவிடமாகையாலும் ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை யாகையாலும்‌ புரமாகச்‌ சொல்லப்பட்ட சரீரத்தில்‌ அற்பமாய்‌ தாமரை மலர்‌ போல்‌ வடிவுடையதான இருதயம்‌ எம்பெருமானுக்கு உறைவிடம்‌. அதில்‌ தானும்‌ சுடர்ச் சோதியாய்‌ அண்டினரையும்‌ ஒளிக் கொண்ட சோதியமாய்‌ ஆக்க வல்லவனுமாய்‌ ஸூஷ்மமான பர ப்ரஹ்மம்‌ உள்ளது. அதனுள்‌ உள்ளதை ஸ்ரவண மனனங்களாலே அறிந்து தியானிக்க வேணும்‌ என்று ஆசார்யன்‌ சிஷ்பனை விதிக்க
சிஷ்யன் -சரீரத்தினுள் தாமரை மலர் வடிவமான ஹ்ருதயம் இருப்பதாகவும் அதனுள் பர ப்ரஹ்மம்‌ இருப்பதாகவும்‌ அதனுள்‌ இருக்குமதை ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானிக்க வேண்டும்‌ என்றீர்‌, அந்த பரமாத்மாவினுள்‌ என்ன இருக்‌கிறது என்‌று கேட்க
ஆசார்யன்‌-இந்த பரம் பொருளிடம்‌ அனைவராலும்‌ விரும்பப்படும்‌ குணங்கள்‌ உள்ளன
. இந்த பரமாத்மா பாபம்‌ மூப்பு-மரணம்‌ சோகம்‌ பசி தாகம்‌ இவை யில்லாதவன்‌ ஸத்ய காமன்‌-ஸத்ய ஸங்கல்பன்‌ என்று பதில்‌ அளித்தார்‌ என்கிற ப்ரஸ்ந -ப்ரதி வசனங்களாலே ஹ்ருதயத்தினுள்‌ ௨றைகின்ற பரமாத்மாவையும்‌ அவனுள்ளே இருக்கும்‌ குணங்களையும்‌ தியானிக்க வேண்டும்‌ எனத்‌ தெளிவாக விதித்‌துள்ள ௮ந்த அந்தர்கதமான அபஹத் பாப்மத்வம்‌ முதலான குணங்களின்‌ உபாஸனத்தை அலமந்து வீய அசுரரைச் செற்றான்‌ பலமுந்து சீரில் படிமின்‌ ஓவாதே”-என்று விதித்து-அவ் வுபாஸனத்திற்கு சாஸ்த்ரங்கள்‌ நிஷேதித்ததை விட வேண்டி யிருத்தலால்‌ அவற்றைக்‌ காட்டி விடுமாறும்‌, அவ் வுபாஸனத்திற்கு உடலான ஷேத்ர வாஸம்‌ முதலான அங்கங்களைக்‌ காட்டி அவற்றைச்‌ செய்யுங்‌கோள்‌ என்றும்‌ உபதேசிக்கிறார் –

சதிரிள மடவார்‌ தாழ்ச்சியை மதித்து
திறமுடை வலத்தால்‌ தீவினை பெருக்கி
வல்வினை மூழ்கி நரகழுந்தி கீழ்மை செய்து
வலம்‌ கழித்து சூதென்று களவும்‌ சூதும்‌ செய்து கிளரொளி யிளமை கெடுலதன் முன்னம்

பிறரை அகப்படுத்திக் கொள்ள வல்ல சாமர்தயமும்‌ பருவத்தின்‌ இளமையையும்‌ உடைய மடவார்‌ திறத்தில்‌ நீங்கள்‌ பண்ணும்‌ தாழ்ச்சியை மதித்தும்‌ திரண்ட பலத்தால்‌ ப்ரயோஜநாந்தரங்களிலே ப்ராவண்யமாகிற பாவத்தைப்‌ பெருக்கியும்‌-உங்களால்‌ போக்கிக்‌ கொள்ள முடியாத மஹா பாபங்களிலே மூழ்கி-பிரிவால்‌ வரும்‌ க்லேசத்தை அநுபவித்து- எம்பெருமானை யொழிய மற்றதில்‌ ப்ராவண்யத்தைச்‌ செய்து-தன்னை ஆச்ரயிக்க உறுப்பாக ஸர்வேச்வரன்‌ தந்த மநுஷ்ய சரீரத்தைக்‌ கொண்டு பலத்தை உண்டாக்கி பின்னை அவனைப்‌ பற்றாது இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்‌கி அநர்த்தப்பட்டு நமக்கு நல்ல ஆதாயமென நினைத்து சதுரங்கம்‌ முதலியதும்‌ பர த்ரவ்யாபஹாரமும்‌ செய்து கள்ளனாய்‌ வஞ்சனாப்‌ இளமையைப் பாழே போக்காது

1-இளமையிலேயே அறம்‌ செய்ய வேண்டும்‌-என்றும்‌
2-ஆகையால்‌ மனத்தில்‌ விவேக முடையவன்‌ எப்போதும்‌ இளமையிலேயே ச்ரேயஸ்ஸுக்கு முயற்சிக்கக் கடவன்‌ – என்றும்‌ சொல்லுகிறபடியே இளமையிலேயே செய்ய வேண்டியதான திவ்ய தேச வாஸத்தை
வளரிளர்பொழில்‌ சூழ்‌ மாலிருஞ்சோலை சார்வது சதிரே -என்றும் –மாதுறு மயில் சேர்‌ மாலிருஞ்சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும் -வளர வளர இளைமையாகவே இருக்கும்‌ சோலை சூழ்ந்த திருமாலிருஞ்‌ சோலையைக் கிட்டுமிதுவே சாதுர்யம்‌. பேடையை உற்ற மயில்‌ சேர்ந்திருக்குமதாய் பூக்களைச்‌ சூடி நிற்கும்‌ திருமாலிருஞ்சோலையைக்‌ கிட்டுமிதுவே இவ்‌ வாத்மாவுக்குப்‌ பயன்‌]. என்ற பாசுரங்களாலும்‌–
3-மாலிருஞ்சோலை பதியது ஏத்தி: என்று திருமாலிருஞ்‌ சோலைப் பதியைத்‌ துதித்து எழுவதே பயன்‌ என்கையாலே ஸங்கீர்த்தனத்தையும்‌-
4-மாலிருஞ்சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே‘ என்று-திருமாலிருஞ்‌ சோலையைத்‌ தொழ வேணும்‌ என்று மனத்திலே பாரிப்பது ஒன்றே இவ் வாத்‌மாவுக்கு ஸம்ஸாரத்தை வெல்ல ஹேது என்கையாலே அஞ்ஜலியையும்‌
5-வலம்‌ செவ்து நாளும்‌ மருவுதல்‌. வழக்கே.” என்கிற பாட்டால்‌ வானோர்‌ ப்ரதஷிணமான அநுகூல விருத்தியைப்‌ பண்ணும்‌ திருமாலிருஞ்சோலையை நாள் தோறும்‌ ப்ரதஷிணம்‌ செய்து கிட்டி யிருத்தல்‌ ந்யாயம்‌ என்கையாலே ப்ரதஷிணத்தையும்‌
6-மாலிருஞ்சோலை நெறி படவதுவே நினைவது நலமே‘ என்கிற பாசுரத்தில்‌-திருமாலிருஞ்சோலைக்குப் போம்‌ மார்க்கத்தைப் பற்றிச்‌ சிந்தை செய்வதுவே புருஷார்த்தம்‌ என்கையாலே கதி சிந்தனத்தையும்‌ ஆகிற அங்கங்களைச் செய்து எம்பெருமானது பல முந்து சீரில்‌ படிமின்‌ என்று உபதேசித்தார்‌.

ஆக இரண்டாம்‌ பத்தால்‌
1-எம்பெருமானுடைய காரணத்வத்தை அறிவித்தல்‌
2-ஸர்வேஸ்வரனால்‌ ஆழ்வார்‌ தாம்‌ அறியாதன அறிவிக்கப்‌ பெற்று உள்ளம்‌ தேறுதல்‌
3-ஞான பலமான மோக்ஷத்தைத்‌ தேடி வாடுதல்‌
4-அந்த வாட்டம்‌ தீர எம்பெருமான்‌ ஆழ்வார்க்கு விசேஷமாக அருள்‌ செய்து மோக்ஷம்‌ கொடுக்க இருந்தது.
5-அந்த மோக்ஷத்தின்‌ தன்மையை ஆழ்வார்‌ அறுதி யிட்டுப்‌ பேசியது
6-ஆழ்வார்‌ இவ் வுலக மக்களுக்கு உபதேசிக்க ஒருப்பட்டு விட வேண்டு மவற்றை விட்டு திவ்ய தேச வாசம்‌ முதலான அங்கங்‌களோடு ஸ குண ப்ரஹ்மத்தின்‌ உபாஸனத்தை விதித்தது முதலிய அரும் பொருள்கள்‌ அறிவிக்கப்‌ பெற்றனவாம் –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading