முக்தி பல விவரணம்–ஸ்ரீ உ.வே. திருநாங்கூர் ப்ர. ப. அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் (வித்வான், ஸ்ரீரங்க மந்திரம் விருக்தாவனம் )
சாரீரக மீமாம்சையில் ஸமந்வய, அவிரோத, ஸாதக, பல அத்யாயங்கள் என நான்கு அத்யாயங்கள் உள்ளன. . அதில் நாலாவதான பலாத்யாயத்தில் முதல் பாதத்தில் ஸஞ்சித புண்ய பாபங்களுக்கு விநாசமும் உத்தராகங்களுக்கு அச்லேஷமும் உபாஸகனுக்கு உபாஸனா பலமாகச் சொல்லப் பட்டது. இரண்டாவது உத் க்ராந்தி பாதத்தில் ஸ்தூல சரீரத்திலிருந்து உபாஸகன் புறப்படும் பிரகாரம் சொல்லப்பட்டது. உபாஸகனுக்கு ஸுஷும்நா நாடியில் ப்ரவேசித்து ” தயோர்த்தவமாயகந் நம்ருதத்வமேதி ” என்கிறபடியே மூர்ததந்ய நாடி வழியாக சிரக் கபாலத்தைப் பேதித்துப் புறப்படும் ப்ரகாரத்தைக் கூறித்து. ஹார்தனான பரம புருஷனின் அநுக்ரஹத்தினால் இது ஏற்படுகிறது: இப்படி ஹார்தனை பரம புருஷனின் அநுக்ரஹத்தினால் ஸ்தூல சரீரத்தை விட்டு புறப்படுகிற உபாஸகன் எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள ஆதி வாஹிகர்களான தேவர்களால் அர்ச்சிராதி மார்க்கத்தாலே விரஜா நதி வரையில் பஹுமாந பூர்வமாக ஆதரித்து அழைத்துச் செல்லப் படுகிறான் என்று மூன்றாவது அர்ச்சிராதி பாதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. விரஜா நதியில் அவகாஹிப்பதால் ஸூஷ்ம சரீரமும் கழிந்து விடுகிறது. அமாநவ கர ஸ்பர்சத் தாலே வாஸநா ரேணுவும் கழிந்து முக்தனாகிறான். அர்ச்சிராதி கதி சிந்தனம் உபலக்ஷணமாக அமாநவ கர ஸ்பர்சாதிகளுக்கும் ஆகும் -நாலாவது பாதத்தில் சொன்ன முக்தனுடைய பலா நுபவத்தை இங்கு சிறிது விளக்க முயல்கின்றனன்.
ஏஷ ஸம்ப்ரஸாதோ 5ஸ்மாச் சரீராத் ஸமுத்தாய பரஞ் ஜ்யோதி ரூப ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே ” என்று முக்தனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிரப்பாவம் வேதத்தில் ஓதப் பட்டிருக்கிறது. இவ் வாக்யம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை ப்ரஜாபதி வித்யா ப்ரகரணத்திலுள்ளது. பகவத் பக்தனான ஜீவாத்மா ஸ்தூல சரீரத்திலிருந்து கிளம்பி அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தை யடைந்து தன்னுடையதான வாஸ்தவிகாகாரமான ஜ்ஞான: விகாஸத்தை உடையவனாய் விளங்குகிறான் என்று எடுத்த ச்ருதியின் அர்த்தமாகும், “ஏகம் த்வேவ தே பூயோ அநுஷ்வாந்யா ஸ்யாவி”’ என்று முன்பு ஜாக்ரதாத் யவஸ்தை அடைந்து ஸம்ஸாரத்தில் சுழன்ற ஜீவனே ஜன்மாந்தர சஹஸ்ர நற் தவப் பயனாக எம்பெருமானை அறிந்து ஆஸ்ரயித்து பக்தி செய்து முக்தனால் எம்பெருமானைக் அனுபவித்து இன்புறும்படியை மேலும் உனக்கும் உபதேசிக்கிறேன் என்று சதுர்முகன் இந்த்ரனைக் குறித்து முக்த ஸ்வரூபனான ஜீவாத்மாவையே நிரூபிப்பதால் ஏற்படுகிறது. புண்ய கர்ம பலத்தால் தேவாதி சரீரத்தை யடையும் போது *ஸ்வேந ரூபேண”’ என்று ச்ருதி கூறவில்லை. “ஸ்வம்” ் என்கிற சப்தம் தனக்கு அஸாதாரணமான ஸ்வரூபத்தைக் குறிக்கும், ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவானவன் ‘*அஹம்” என்று எப்போதும் ப்ரகாசித்தாலும் தர்ம பூத ஜ்ஞான ஸங்கோசத்தோடும் ஒளபாதிக ஆகாரத்தோடும் கூடியே தோற்றுகிறான். அவித்யா, கர்ம, வாஸநா, ருசி, ப்ரக்ருதி ஸம்பந்தம் கழிந்த பின்பே ஜ்ஞான ஸங்கோச மின்றிக்கே உள்ளபடியான தன்னுடைய அஸாதாரணாகாரங்களோடு விளங்குகிறான். இதுவே ”ஸம்பத்யாவிர் பாவஸ் ஸ்வேந சப்தாத்’” (ப்ரஹ்ம ஸூத்ரம் 4.4, 1) என்கிற ஸுூத்ரத்தின் பொருளாகும். நிர் தர்மகமாய் நிர் விசேஷமாக விருக்கும் ஜ்ஞாந : மாத்ரமான ஆத்மா நித்ய பிரகாசமா யிருக்கும், அவித்யையால் அவனுடைய ஸ்வரூபம் மறைந்து அவித்யை கழிந்த பின்பு ப்ரகாசிக்கிறது என்கிற அத்வைத மதம் சரியல்ல. ப்ரகாச மாத்திரமான ஆத்மாவுக்கு மறைவு ஏற்பட்டால் ஆத்மாவே அழிந்து விடும். ஆத்மாவை பிரகாசம் முதலிய தர்மங்களுடன் கூடியதாக ஒத்துக் கொள்ளும் பக்ஷத்தில் தான் “முக்தன் ஆவிர்பூத ஸ்வரூபனாகிறான் * என்கிற ஸூத்ரம் நன்கு பொருந்து மென்று அதிகரண ஸாராவளியிலும் அதன் வியாக்யானமான – சிந்தாமணியிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது–
முக்தாத்மா தனக்கு அஸாதாரணரணமாய் ஸ்வாபாவிகமான ஆகாரத்துடன் விளங்குகிறான் ‘என்று முதல் அதிகரணத்தில் நிரூபித்தார். உண்மையான ஆகாரம் எப்படிப்பட்டது என்று விசாரம் எழுகிறது. ப்ராஹ்மாதிகரணத்தில் இதைப் பற்றி வியாசர் விசாரித்து ** ஏவமப்யுப ந்யாஸாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதராயண:”‘ (. 4.4.7) என்கிற ஸூத்ரத்தில் நிஷ்கர்ஷித்திருக்கிறார். ஒளடுலோமி என்னும் ஆசார்யர் “விஞ்ஞான கன ஏவ” என்கிற சுருதியினால் நிர் விசேஷ ஜ்ஞாந மாத்திரத்தை ஆகாரமாகச் சொல்லி யிருப்பதால் ஜ்ஞாந மாத்திரமாய் இருக்கிறான் முக்தன் என்கிறார். ஜைமினி என்னும் ஆசார்யர் ”ய ஆத்மா அபஹத மாப்மா விஜரோ, விம்ருத்யு; விசோக;, விஜிகத்ஸ :, அதிபாஸ :, ஸத்ய காம:, ஸத்ய ஸங்கல்ப:’” என்கிற ச்ருதியில் ஸ்ருதமான அபஹதா பாப்மத்வ ஸத்ய காமத்வாதி கல்யாண குண விசிஷ்டமாக முக்தனான ஆத்மா விளங்குகிறான் என்றார். வேத வ்யாஸ பகவான் கட்டடங்க ஜ்ஞான ஸ்வரூபமா விருக்கும் முக்தாத்மா அபஹத் பாப்மத்வம் முதலான குணாஷ்டகத்துடனே விளங்குகிறான் . விஜ்ஞாந கனத்வத்துக்கும் குணாஷ்டகத்துக்கும் விரோதமில்லை. கட்டடங்க ஜ்ஞானாநந்த ஸ்வரூனாய் அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விசிஷ்டனான ஸர்வேச்வரன் ” நிரஞ்ஜன பரமம் ஸாம்யமுபைதி” என்றும் “தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்’” என்றும் சொல்லுகிறபடியே தம்மோடு ஒக்க அருள் செய்பவனாதலால் அழுக்குக் கழிந்த ரத்னம் போலே முக்தாத்மா நிரதிசய ஜ்ஞானக் கதிரை உடைய ரத்னமாகத் திகழ்கிறான் என்று அருளிச் செய்தார். அதிகரண ஸாராவளியில் ஸ்ரீ வேதாநத தேசிகன ‘”ஜ்ஞாநத்வே கிம்பலம் ஸ்யாதிதி மிஷது குணைஸ் தாத்ருசம் ப்ரஹ்ம ஸாம்யம்” என்று ஆரம்பமாகும் ஸ்லோகத்தில் இவ் விஷயத்தை அருளிச் செய்தார்.–
எம்பெருமானோடு ஸாம்யத்தை யடைந்த முக்தாத்மா அவனுடைய லீலைக்கும் அநு பவத்துக்கும் அனுகூலமான பதார்த்தங்களைத் தானே அப்ரதிஹத ஸங்கல்பனைகையால் தன் ஸங்கல்ப்பத்தினாலேயே ஸ்ருஷ்டித்து பகவல் லீலாதுபவத்தில் தானும் பங்கு கொண்டு திளைக்கிறான் என்று ‘ஸங்கல்பாதிகரணத்தில் நிரூபித்தார். இவ் வதிகரணத்தில் அத ஏவ சாநந்யாதிபதி:*’ (ப்ர. 4.4.9) என்கிற ஸுூத்ரத்தில் அயர்வறு மமரர்களுக்கும் அதிபதியாக ஸர்வேச்வரன் எழுந்தருளி யிருப்பதால் முக்தனுக்கும் அவனே அதிபதியாக விளங்குகிறபடியால் : * அத ஏவ சாநன் யாதிபதி:” என்று சொல்ல வில்லை. ** அத ஏவ நந் யாதிபதி: ” என்கிறார், எம்பெருமானைக் காட்டிலும் வேறுபட்ட பிறருக்கு அடிமை யன்று. கர்ம வச்யர்களான ஸம்ஸாரிகளை ‘*அந்யராஜாநஸ்தேக்ஷப்ய லோகா பவந்தி *’ என்று பேசுகிறது முக்தனுக்கும் ஸர்வேச்வரனுக்கும் ஸ்வரூப பேத மிருந்தாலும் சரீர சரீரி பாவ ஸம்பந்தத்தாலே அநந்யத்வமுண்டு, ஆகவே :“அவிபாகேந த்ருஷ்டத்வாத்” (ப்ர. 4.4.4) என்னும் ஸூத்ரத்தில் விபாகம் அதாவது ஸ்வதந்த்ர பேத புத்தி யில்லாமல் அஹம் ப்ரஹ்மாஸ்மி’” என்று அவி பக்தனாகவே எம்பெருமானை முக்தாத்மா அனுபவிக்கிறான். அப்ருதக் ஸித்த ஸம்பந்தம் காரணமாக **அஹம் ப்ரஹ்ம ப்ரகாரோஸ்மி” என்று பொருள் கொள்ள வேண்டும், ஸ்வதந்த்ர பேதம் கிடையாதாகையால் விபக்தனாக–ஸ்வதந்தரனான தன்னை அநுபவிப்பது மோக்ஷமாகாது.–
ஆகவே * பாரதந்தர்யம் பகவதி ப்ராப்ய நிர்கத பந்தன: ஸ்வாதந்தர்யமதுலம் லப்த்வா தேநைவ ஸஹ மோததே’‘-என்று அவிபாகாதிகரணத்தின் அர்த்தத்தை பகவச் சாஸ்த்ரத்தில் நிஷ்கர்ஷிக்கப் பட்டிருக்கிறது. முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு ”ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா'” என்று ஸாஹித்யத்தைச் சொல்லுகிறது. ச்ருதியில் சொல்லப்பட்ட பேதமும், ஸாம்யமும், ஸாஹித்வமும் ஜீவ ஈச்வர பேதத்தையே காட்டுகிறது. உலகில் வேறொருவனோடேயே ஸாம்யம் சொல்லப் படும், ஆகையால் முக்தன் தன்னை எம்பெருமானைக் காட்டிலும் அந்யநாகவே அனுபவிக்கிறான் என்று பூர்வ பக்ஷம் ஏற்பட அதற்குப் பரிஹாரமாக ‘அவிபாகேந த்ருஷ்டத்வாந் ‘ என்கிற அதிகரணம் அவதரித்திருக்கிறது. இங்கு வேதாந்த தேசிகன் அதிகரண ஸாரா வளியில் அருளின ஸித்தாந்தம் ‘*மைவம் தத்வம் ஹி முக்தெள ஸ்புரதி தயோ: பேத பாகாம் ச இஷ்ட! ஸித்தே தேஹாத்ம பாவே த்விஹ நஹி கடதே தத் ஸ்வநிஷ்டத்வ த்ருஷ்டி:”” என்று. வெவ்வேறு பேர்களுக்கும் பேதமிருந்தாலும் ப்ரபா ப்ரபாவான்களுக்குப் போலே அநந்யத்வமுண்டு. ஸாஹித்யம் போக்ருத்வ ஸாஹித்யமன்று. போக்யமான கல்யாண குணங்களோடு கூட எம்பெருமானையும் அநுபவிக்கிறான் என்று போக்ய ஸாஹித்யமே விவஷிதம். பரம ஸாம்யமும் அரசனுக்கும் அமாத்யனுக்குமுள்ள போக ஸாம்யம் ஆகும். ஆகையால் முக்தன் எம்பெருமானுக்கு எப்போதும் பிரியாத அடியனாய் தன்னை அநுபவிக்கிறானே தவிர ஸ்வ தந்த்ரனாகத் தன்னை அநுபவிக்க வில்லை என்பது ஸித்தாந்த ஸாரமாகும் –
எம்பெருமான் தன்னைக் காட்டிலும் உயர்ந்த வேறு ரத்னம் இல்லாதபடி உயர்ந்த விலக்ஷண ரத்னம் போன்றவன்: ஒரு சமயமும் அழுக்கு அடையாமல் இருக்கும் அம்சம் போன்றவர்கள ,நித்ய ஸூரிகள். எப்போதும் அழுக்கோடு கூடி இருக்கும் ரத்னம் போன்றவர்கள் ஸம்ஸாரிகள். அழுக்குக்கள் நிச்சேஷமாய் கழிந்து போன பிறகு சுத்தமாக விளங்கும் ரத்னம் போன்றவர்கள் முக்தாத்மாக்கள் என்று அதிகாரி சிந்தாமணியில் விளக்கப் பட்டிருக்கிறது. தேசிகனும் அதிகரண ஸாராவனியில் ஜுயதி ஸமயே ரஞ்ஜ கோபாதிமுக்தே, தத்வந் நாதாநுகம்பா – ஸூரி துல்யம் தஸ்மாதாகந்துகேபி ப்ரதிஹதி விரஹாத் தாத்ருஸேதீ விலாஸே ப்ரத்யாபந்ந ஸ்வதாய க்ரம இஹ கதித: ப்ராப்த ஸித்தே: ப்ரதீச: ?’ என்றருளிச் செய்தார். உபாதிகளான் அவித்யாதிகள் நிச் சேஷமாக கழிந்த பிறகு ஆவரணத்துக்கு ப்ரஸக்தி யில்லாமையால் எம்பெருமானை அடைந்த முக்தாத்மாவுக்கு உண்டான ஸ்வரூப ஆவிர்ப்பாவ பலமான புத்தி விகாஸம் எப்போது முள்ளது. எப்போதும் “தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:’” என்கிறபடியே எம்பெருமானை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் . வேண்டிய போது அவனுக்கு ஸகல விதமான கைங்கர்யங்களைப் பல வடிவுகளையும் எடுத்துக் கொண்டு பண்ணிக் கொண்டு ஸூகமாக *’நின் தாளின் கீழ் வாழ்ச்சி * என்கிறபடியே ஸர்வ காலமும் வாழுகிறான் என்று அபாவாதிகரணத்தின் தேறின பொருளாகும். இந்த அதிகரணத்தில் முக்தனுக்கு சரீரம் உண்டா இல்லையா என்கிற விசாரம் ஏற்படுகிறது. பாதரி ஆசார்யரின் மதப்படி சரீரம் கர்ம மூலமாகையால் கர்ம ஸம்பந்த ரஹிதனான முக்தனுக்கு சரீரம் உண்டாகப் ப்ரஸக்தி யில்லை. ஜைமினி ஆசார்யரின் மதத்தில் முக்தன் ஒரு வடிவோ பல வடிவுகளோ எடுத்துக் கொண்டு பலவித அடிமைகள் செய்து களிக்கிறான் என்று. ” ஸர்வமஹ பச்ய: பச்யதி ஸர்வமாப்நோதி ஸர்வச: ” *ஸ ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி” என்று ச்ருதி பேசுகிறது. இவ்விடத்தில் “’ த்வாதசாஹவநு பயவிதம் பாதராயணோத” என்று பாதராயணரின் நிர்வாஹம், சரீரேந்த்ரியாதி நிரபேக்ஷமாகவே எம்பெருமானையும் அவன் விபூதியையும் பூர்ணமாக அனுபவிக்க வல்லவனாகையால் முக்தனுக்கு ௮நேக விக்ரஹ பரிக்ரஹம் ஐச்சிகம். இது கர்ம மடியாகவன்று. பகவானுடைய ஸங்கல்பம டியாக ஏற்படுகிறது. கைங்கர்யம் செய்வதற்கு சரீராதிகள் அவச்யம் வேணும். அநுபவத்திற்கு சரீராதிகளின் அபேஷை யில்லை என்று வியாசரின் திருவுள்ளம் ஸம்ஸாரியின் ஜ்ஞானம் ஸங்குசிதம். கர்மாதீனமாக ஸங்கோச விகாஸங்களுண்டு -அஸங்குசித ஜ்ஞானனாயும் சக்தனாயு மிருக்கிற முக்தனுக்கு அநேக சரீர பரிக்ரஹத்துக்கு வேண்டிய ஜ்ஞாந வியாப்தி உண்டு. செளபரிக்கு அநேக சரீர பரிக்ரஹம் கர்மாதீனம். இவர்களுக்கு இச்சாதீனம். ஸர்வ விஷயாநுபவத்திற் குரித்தான ஜ்ஞான வியாப்தியும் முக்தர்களுக்கு எப்போது முண்டு. சரீர பரி க்ரஹத்துக் குறுப்பான ஜ்ஞான வயாப்தி கேவலம் ஐச்சிகம்- ஆகையால் முக்தர்களுக்கும் ஸ்வரூப விபுத்வமுண்டு என்று சொல்ல வேண்டிய ஆவஸ்யகதை இல்லை-இதைத் தான் *ப்ரதீபவதாவேசஸ் ததாஹி தர்சயதி”” என்று ஸூத்ரகாரர் அருளிச் செய்தார். முக்தனுடைய தர்ம பூத ஜ்ஞாநம் விபு.
முக்தனுக்கு எம்பெருமானோடு பரம ஸாம்யத்தைச் சொல்லி யிருப்பதால் ஸகல ஜகத் ஸர்காதி கர்த்ருத்வமும் உண்டு என்று எழும் ஐயம் போகும்படி ஸூத்ரகாரர் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸந்நி ஹிதத்வாச்ச ‘” என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார். முக்தர்களுக்கும் ஸகல ஜகத் ஸர்காதி கர்த்ருத்வம் உண்டானால் ** ஜன்மாத்யஸ்ய யத: ” என்கிற ஸூத்திரத்தில் எம்பெருமானுக்குச் சொன்ன லக்ஷணத்திற்கு அதி வ்யாப்தி தோஷ மேற்படும். “*போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச ” என்கிற ஸூத்திரத்தில் எம்பெருமானுக்கும் நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் ஆநந்தத்தில் தார தம்யமில்லை. ஸ விபூதிகனான எம்பெருமானுடைய அநுபவம் இம் மூவருக்கும் ஸமமானதே என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஸாயுஜ்யமாவது போக்யம் ஸமானமாய் இருப்பது. ஸார்ஷ்டிதை யாவது போக ஸாம்யம். ஸர்வேச்வரனுக்கு அஸாதாரண லக்ஷணங்கள் முக்தனுக்கு இல்லை யென்று தேறின பொருள்.
ஸர்வேச்வரன் ஸ்வதந்த்ரனானாலும் அத்யந்த ப்ரியனாய் தனக்கு ஆத்ம ஸமானமான ஸகாவாய் தன்னை யடைந்த முக்த சேதனனை ஒருகாலமும் கை விடான். அகர்ம வச்யனாய் பகவதனுபவத்திலேயே ஊன்றி யிருக்கும் முக்தனுக்கும் அவனுடைய அனுபவத்தை விட்டு வர பிரஸக்தி யில்லை. ஆகையால் முக்தனுக்கு பகவதனுபவம் நித்யமானது. ஒரு நாளும் ஸம்ஸார ஸம்பந்தமில்லை என்று ‘*அநா வ்ருத்திச் : சப்தாத் அநாவ்ருத்திச்: சப்தாத் ‘” என்று அந்திம ஸூத்திரத்தில் ஸூத்ரகாரர் யுக்தி ஸஹக்ருதமான ச்ருதி வசனத்தாலும் பகவத் வசனத்தாலும் மூதலித்தருளினார்.
இவ்வண்ணம் ஸம்ஸாரம் கழிந்து முக்தியில் ஜீவன் ப்ரஹ்மமாக ஆகி விடுகிறான் என்று சொல்லுகிற சிலருடைய பக்ஷம், முக்தாத்மா ஜடமானவன். துக்க நிவ்ருத்தி மாத்திரமே உள்ளது என்று மற்ற ஒரு பக்ஷம் -முக்தாத்மா ஞான மாத்திரமே -ஞான குணமும் ஆனந்த அனுபவமும் கிடையாது என்று மற்ற ஒரு பக்ஷம் -இவ்விதமான பக்ஷங்களை நிரஸித்து முக்தி பலத்தை ஸூத்ரகாரர் நிர்ணயித்து அருளினார் –
நிகமனம் -அப்ராக்ருதமான ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானைக் கிட்டி அந்தமில் பேர் இன்பத்து அடியரோடு இருந்து ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதுர் கண்டு என்கிறபடியே மிதுன சேஷியை சேவித்து அனுபவித்துக் கொண்டிருப்பதே நம் ஸித்தாந்த சம்மதமான மோக்ஷ பலமாகும் -எம்பெருமானோடே கூட முக்தர்களும் அனுயாத்ரையாக இவ் விபூதிக்கும் வருவதும் உண்டு -லோக அனுக்ரஹத்திற்காக எம்பெருமான் இவ் விபூதியில் திருவவதரிப்பது போலே முக்தர்களும் சில சமயங்களில் பகவத் சங்கல்ப விசேஷத்தாலே இவ் விபூதியில் அவதரிப்பதும் உண்டு -இது கர்மத்தால் அல்ல -கிருபா பலத்தினால் அடிக்கழஞ்சு பெறும் -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -மாம் ப்ராப்தே -என்று சொல்லப் பட்டு இருக்கிற முக்தி பலமாகும்
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே. வித்வான் திரு நாங்கூர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply