ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் -ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்-ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்-

ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

பஜ⁴ே விஶேஷஸுந்த³ரம் ஸமஸ்தபாபக²ண்ட³னம் ।
ஸ்வப⁴க்தசித்தரஞ்ஜனம் ஸதை³வ ராமமத்³வயம் ॥ 1 ॥

ஜடாகலாபஶோபி⁴தம் ஸமஸ்தபாபனாஶகம் ।
ஸ்வப⁴க்தபீ⁴திப⁴ஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 2 ॥

நிஜஸ்வரூபபோ³த⁴கம் க்ருபாகரம் ப⁴வாபஹம் ।
ஸமம் ஶிவம் நிரஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 3 ॥

ஸதா³ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யனாமரூபவாஸ்தவம் ।
நிராக்ருதிம் நிராமயம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 4 ॥

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம் ।
சிதே³கரூபஸந்ததம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 5 ॥

ப⁴வாப்³தி⁴போதரூபகம் ஹ்யஶேஷதே³ஹகல்பிதம் ।
கு³ணாகரம் க்ருபாகரம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 6 ॥

மஹாஸுவாக்யபோ³த⁴கைர்விராஜமானவாக்பதை³: ।
பரம் ச ப்³ரஹ்ம வ்யாபகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 7 ॥

ஶிவப்ரத³ம் ஸுக²ப்ரத³ம் ப⁴வச்சி²த³ம் ப்⁴ரமாபஹம் ।
விராஜமானதை³ஶிகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 8 ॥

ராமாஷ்டகம் பட²தி ய: ஸுக²த³ம் ஸுபுண்யம்
வ்யாஸேன பா⁴ஷிதமித³ம் ஶ்ருணுதே மனுஷ்ய: ।
வித்³யாம் ஶ்ரியம் விபுலஸௌக்²யமனந்தகீர்திம்
ஸம்ப்ராப்ய தே³ஹவிலயே லப⁴தே ச மோக்ஷம் ॥ 9 ॥

இதி ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

———–

ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-

ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥1॥

ஸம்ஸாரஸாரம் நிகமப்ரசாரம்
தர்மாவதாரம் ஹ்ருதபூமிபாரம் ।
ஸதா³விகாரம் ஸுகஸிந்துஸாரம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥2॥

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥3॥

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த தாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥4॥

வேதாந்தகாநம் ஸகலை: ஸமாநம்
ஹ்ருதாரிமாநம் த்ரிதஶப்ரதாநம் ।
கஜேந்த்ரயாநம் விகதாவஸாநம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥5॥

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வச நாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥6॥

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஶ்வைகஸாரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥7॥

கலேதி பீதம் ஸ்வஜநே விநீதம்
ஸாமோ பகீதம் மநஸா ப்ரதீதம்
ராகேண கீதம் வசநாததீதம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥8॥

ஶ்ரீராமசந்த்ரஸ்ய வராஷ்டகம்
த்வாம் மயேரிதம் தேவி மநோஹரம் யே ।
படந்தி ஶ்ருண்வந்தி க்ருணந்தி பக்த்யா தே
ஸ்வீயகாமாந் ப்ரலபந்தி நித்யம் ॥9॥

ப்ரஹ்மாதி வேத ஸேவ்யாய
ப்ரஹ்மண்யாய மஹாத்மநே
ஜானகீ ப்ராண நாதாய
ரகுநாதாய மங்களம். ॥10॥

இதி ஸ்ரீ ராமசந்தர அஷ்டகம் ஸமாப்தம் ॥

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே
. –சிவவாக்கியர்
அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே


செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! 

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது “மெய்பொருளே” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் “நமசிவய” எனும் ஐந்தெழுத்தாகவும் அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!

வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!

எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!!!!

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!

இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம் செய்வார்கள்.

ராம ராம
ரா + ம
“ரா” நெடில் இருமாத்திரை அளவு ஒலிக்கும், இதனை உச்சரிக்கும்போது காற்றில் உள்ள பிராணன் பிரிக்கப்படும் அவ்வாறு பிரிக்கப்பட்ட பிராணன் “ம” ( ம்+அ உச்சரிக்கும்போது சுவாசம் உள்ளே சென்றுவரும்) இந்த எழுத்து நம் ஆக்ஞ்சையில் இருந்து ஒலிக்கிறது இது ஆக்ஞ்சையின் வழியாக பிராணனை உள்வாங்கும் நம் உயிர் ஆற்றல் பெருகும்

———————————————————

ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்–

ராமானுஜாய முனயே நம உக்தி மாத்ரம்
காமாதுரோபி குமதி: கலயன்னபீ⁴க்ஷம் ।
யாமாமனந்தி யமினாம் ப⁴க³வஜ்ஜனானாம்
தாமேவ விந்த³தி க³திம் தமஸ: பரஸ்தாத் ॥ 1 ॥

புத்தி கெட்டவனாய்-காமத்தினால் பீடிக்கப் பட்டவனாய் -இருப்பினும் ராமானுஜாய நம -என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லுமவன் – பகவானைச் சேர்ந்தவர்களான யோகியர் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் உள்ள எந்த மோஷத்தையேபெறுவதாக ஒதுகின்றனரோ அந்த மோஷத்தை  அடைகிறான் 

ஸோமாவசூட³ஸுரஶேக²ர து³ஷ்கரேண
காமாதி கோ³பி தபஸா க்ஷபயன்னகா⁴னி ।
ராமானுஜாய முனயே நம இத்யனுக்த்வா
கோவா மஹீஸ ஹசரே குருதேனுராக³ம் ॥ 2 ॥

ராமானுஜாய நம இத்ய ஸக்ருத்³ க்³ருணீதே
யோ மான மாத்ஸர மத³ஸ்மர தூ³ஷிதோபி ।
ப்ரேமாதுர: ப்ரியதமாம பஹாய பத்³மாம்
பூ⁴மா பு⁴ஜங்க³ ஶயனஸ்த மனுப்ரயாதி ॥ 3 ॥

வாமாலகானயனவாகு³ரிகா க்³ருஹீதம்
க்ஷேமாய கிஞ்சித³பி கர்துமனீ ஹமானம் ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நேக்ஷதே மாம்
மா மாமகோயமிதி முஞ்சதி மாத⁴வோபி ॥ 4 ॥

ராமானுஜேதி யதி³தம் விதி³தம் ஜக³த்யாம்
நாமீபி ந ஶ்ருதி ஸமீபமுபைதி யேஷாம் ।
மா மா மதீ³ய இதி ஸத்³பி⁴ரு பேக்ஷி தாஸ்தே
காமானுவித்³த⁴ மனஸோ நிபதந்த்யதோ⁴த:⁴ ॥ 5 ॥

நாமானுகீர்த்ய நரகார்தி ஹரம் யதீ³யம்
வ்யோமாதி⁴ ரோஹதி பத³ம் ஸகலோபி லோக: ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நாவிராஸீத்
கோ மாத்³ருஶ: ப்ரப⁴விதா ப⁴வ முத்தரீதும் ॥ 6 ॥

ஸீமா மஹீத்⁴ர பரிதி⁴ம் ப்ருதி²வீம வாப்தும்
வைமானி கேஶ்வர புரீமதி⁴ வாஸிதும் வா ।
வ்யோமாதி⁴ரோடு⁴மபி ந ஸ்ப்ருஹயந்தி நித்யம்
ராமானுஜாங்க்⁴ரி யுகள³ம் ஶரணம் ப்ரபன்னா: ॥ 7 ॥

மா மா து⁴னோதி மனஸோபி ந கோ³சரம் யத்
பூ⁴மா ஸகே²ன புருஷேண ஸஹானுபூ⁴ய ।
ப்ரேமானுவித்³த⁴ ஹ்ருத³ய ப்ரிய ப⁴க்த லப்⁴யே
ராமானுஜாங்க்⁴ரி கமலே ரமதாம் மனோ மே ॥ 8 ॥

ஶ்லோகாஷ்ட கமித³ம் புண்யம் யோ ப⁴க்த்யா ப்ரத் யஹம் படே²த் ।
ஆகார த்ரய ஸம்பன்ன: ஶோகாப்³தி⁴ம் தரதி த்³ருதம் ॥

——————

ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்

ப⁴க³வதி தவ தீரே நீரமாத்ராஶனோஹம்
விக³தவிஷயத்ருஷ்ண: க்ருஷ்ணமாராத⁴யாமி ।
ஸகல கலுஷப⁴ங்கே³ ஸ்வர்க³ஸோபானஸங்கே³
தரலதரதரங்கே³ தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 1 ॥

ப⁴க³வதி ப⁴வலீலா மௌளிமாலே தவாம்ப:⁴
கணமணுபரிமாணம் ப்ராணினோ யே ஸ்ப்ருஶந்தி ।
அமரனக³ரனாரீ சாமர க்³ராஹிணீனாம்
விக³த கலிகலங்காதங்கமங்கே லுட²ந்தி ॥ 2 ॥

ப்³ரஹ்மாண்ட³ம் க²ண்ட³யந்தீ ஹரஶிரஸி ஜடாவல்லிமுல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதா³பதந்தீ கனககி³ரிகு³ஹாக³ண்ட³ஶைலாத் ஸ்க²லந்தீ ।
க்ஷோணீப்ருஷ்டே² லுட²ந்தீ து³ரிதசயசமூர்னிர்ப⁴ரம் ப⁴ர்த்ஸயந்தீ
பாதோ²தி⁴ம் பூரயந்தீ ஸுரனக³ரஸரித்பாவனீ ந: புனாது ॥ 3 ॥

மஜ்ஜன்மாதங்க³ கும்ப⁴ச்யுத மத³மதி³ராமோத³மத்தாலிஜாலம்
ஸ்னானை: ஸித்³தா⁴ங்க³னானாம் குசயுக³ விலஸத்குங்குமாஸங்க³பிங்க³ம் ।
ஸாயம் ப்ராதர்முனீனாம் குஶகுஸுமசயைஶ்சி²ன்னதீரஸ்த²னீரம்
பாயான்னோ கா³ங்க³மம்ப:⁴ கரிகலப⁴ கராக்ராந்த ரங்க³ஸ்தரங்க³ம் ॥ 4 ॥

ஆதா³வாதி³ பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்
பஶ்சாத்பன்னக³ஶாயினோ ப⁴க³வத: பாதோ³த³கம் பாவனம் ।
பூ⁴ய: ஶம்பு⁴ஜடாவிபூ⁴ஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்
கன்யா கல்மஷனாஶினீ ப⁴க³வதீ பா⁴கீ³ரதீ² த்³ருஶ்யதே ॥ 5 ॥

ஶைலேந்த்³ராத³வதாரிணீ நிஜஜலே மஜ்ஜஜ்ஜனோத்தாரிணீ
பாராவாரவிஹாரிணீ ப⁴வப⁴யஶ்ரேணீ ஸமுத்ஸாரிணீ ।
ஶேஷாங்கை³ரனுகாரிணீ ஹரஶிரோவல்லீதள³ாகாரிணீ
காஶீப்ராந்தவிஹாரிணீ விஜயதே க³ங்கா³ மனோஹாரிணீ ॥ 6 ॥

குதோ வீசிர்வீசிஸ்தவ யதி³ க³தா லோசனபத²ம்
த்வமாபீதா பீதாம்ப³ரபுரவாஸம் விதரஸி ।
த்வது³த்ஸங்கே³ க³ங்கே³ பததி யதி³ காயஸ்தனுப்⁴ருதாம்
ததா³ மாத: ஶாந்தக்ரதவபத³லாபோ⁴ப்யதிலகு⁴: ॥ 7 ॥

க³ங்கே³ த்ரைலோக்யஸாரே ஸகலஸுரவதூ⁴தௌ⁴தவிஸ்தீர்ணதோயே
பூர்ணப்³ரஹ்மஸ்வரூபே ஹரிசரணரஜோஹாரிணி ஸ்வர்க³மார்கே³ ।
ப்ராயஶ்சிதம் யதி³ ஸ்யாத்தவ ஜலகணிகா ப்³ரஹ்மஹத்யாதி³ பாபே
கஸ்த்வாம் ஸ்தோதும் ஸமர்த:² த்ரிஜக³த³க⁴ஹரே தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 8 ॥

மாதர்ஜாஹ்னவீ ஶம்பு⁴ஸங்க³மிலிதே மௌளௌ நிதா⁴யாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுஷோவஸானஸமயே நாராயணாங்க்⁴ரித்³வயம் ।
ஸானந்த³ம் ஸ்மரதோ ப⁴விஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூ⁴யாத்³ப⁴க்திரவிச்யுதா ஹரிஹராத்³வைதாத்மிகா ஶாஶ்வதீ ॥ 9 ॥

க³ங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய: படே²த்ப்ரயதோ நர: ।
ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி ॥ 1௦ ॥

——————–——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading