ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்-கையார் சக்கரம் -5-1–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி தோழியையைப் பார்த்தும் தலை மகனைப் பார்த்துச் சொல்வதாகவும் –
முன்னிலை படர்க்கை சொல்லும் இடங்கள் -தமேவ சரணம் -அந்த பரமாத்மாவை சரணம் -தன்னை சொன்னது போலே-தோழி தலைமகனைப் பார்த்து சொல்வதாகவும்-மூன்றும் கொள்ளலாம்—பொருள் (வரின்) வயில் பிரிதல் துறை-திரை கடல் ஓடியும் திரவியம் தேட போகும் தலைவன் -ஆழ்வாரை விட்டு பகவான் பிரிகிறான் -எந்தப் பொருளைத் தேடிப் போவான்-கிளவித் தலைமகன் –பாகவத உத்தமர்கள் ஆழ்வாரை விட்டுப் பிரிவதைச் சொன்ன படி— ஆழ்வாரைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால் பிரிவு ஸூசகம்-திருவேங்கடமுடையானைப் பாடினீரே-அவனே தானே இவர்களுக்கு பெரிய நிதி –
திருவேங்கட முடையானே பிரிக்க நினைத்தாலும் பாகவதர்களைப் பிரியக் கூடாதே
சம்சார விஷ வருஷத்துக்கு இரண்டு அம்ருதம் கதாசித் கேசவ பக்தியும் பக்த பக்தியும் -பக்த சமாஹம்
வா -விகற்பம் -இதுவோ அதுவோ -துல்ய விகற்பம் -எதுவும் சமம்-வியவஸ்தித விகற்பம் -பாகவத பக்தி தான் உத்தேச்யம் – இல்லை என்றால் கேசவ பக்தி கொள்ளலாம் என்பர் உடையவர்

சிலர் போகப் பார்க்க சிலர் சொல்வதாக கொள்ள வேண்டும்-நம்மாழ்வார் திருமலையில் எழுந்து அருளி உள்ளாரா –திருவேங்கடமுடையான் எதிர் சூழ் புக்கு திக்கு தோறும் ஸந்நிதி கொண்டு அருளுகிறார் அன்றோ-திரை கடல் ஓடியும் திரவியம் தேடப் போகும் தலைவன்-

குன்றம் எடுத்த கண்ணனே இங்கு -அது தான் பற்றிய மலை -இது தன்னைப்பற்றிய மலை –
ஆதாரமும் ஆதேயமும் அவனே-குன்றம் ஏந்தி வினையாகக் கொண்டால் -ஸ்ரமம் தீர்க்க வந்தான் –
பெயர்ச் சொல்லாக் கொண்டு இதுவே திரு நாமம்-கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் இவனே -உம்பர் நம்பி வந்து அடைகிறார்கள்-எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே –
பேசுவது நீர்மை ஸ்வபாவிக்கமாக இல்லாமல் அப்பியாசம் பண்ணி வரவழைத்த வலிமை –
அனுகூலமாக பேசுவது போல் பாவனை செய்து பிரிவை ஸூசகம் -அதனால் வலிமை –கற்றது திண் எனவே-கண்ணால் காண்பது காதால் கேட்பது எல்லாம் மாறி உள்ளன-பராங்குச நாயகியேயே சொத்து என்று இருந்த இவர்கள் வேறே பொருளை சம்பாதிக்க அன்றோ போகிறார்கள்தனம் மதீயம் என்று சொன்ன வார்த்தையையும் பொய்ப்பித்து-தேவு மற்று அறியேன் என்று இருக்க மாட்டாமல் பிரிகிறார்கள் -)

வஞ்சப்பேச்சு சொல்லி தலைவன் பிரிய-உன்னை விட்டுப் பிரியேன் பிரிந்தால் தரியேன் -பொய் சொல்லக் கற்றான்–தன்னோடே கலந்த தசையில் தனது பக்கலிலே வ்யாமோஹ அதிசயத்தாலே
நீசமாகப் பண்ணும் யுக்தி சேஷ்டிதங்கள்-கண்டு அத்தாலேயே பிரியக் கடவ என்று அறிந்த தலைமகள் சொல்லுகிறாள்-

இப்படி தோழி இவளை தர்ப்பித்த   அளவிலே நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின படியைக் கண்டு யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது-இப்படி செய்கைக்கு அடி பிரிய நினைத்தானாக வேணும் என்று அதி சங்கை பண்ணுகிறாள் –

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர் பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை அறிந்து அருளின இவர் – அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார்
–இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்-பிரியலுற்ற அன்பரை நோக்கி இவ் வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம்

காலமும் இதுவேயாய் நாயகனும் வந்து ஸம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
இன்னபடி அப்ரியமும் விளையும் என்று தெரியாது இறே
தலைமகன் பொருள் வயிற் பிரிவை நினைத்து அத்தாலே தன் தடுமாற்றம் தோற்றப் பரிமாற
அவள் அத்தை அறிந்து நினைத்தபடி இது வன்றோ-தன்னுடனே இருக்கச் செய்தே பிரிவதாக நினைத்தாய் -என்று அத் தலைமகள் வார்த்தையாய் இருக்கிறது –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி   தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
—8–தலைவன் பொருள் வயிற் பிரிதல் -குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –

காண்கின்றனகளும் –
நின்றால் போலே நில்லா-காலை எடுத்து தலையிலே வைப்பது கும்பிடுவது -ஆகிறபடி –(இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே -காலைத் தொட்டு இதுவே என்று காட்டினான் வயலாலி மணாளன் )

காண்கின்றனகளும்
ஹர்ஷ ஹேதுக்கள் எல்லாம் நிற்க நெஞ்சு தடுமாறுவது-அஞ்சலி பண்ணுவது
பாத உப ஸங்க்ரஹணம் பண்ணுவதாகத் தொடங்கினான்
அதைக் கண்டு -நீர் தாம் இப்போது எங்கு இருந்து தான் இவை எல்லாம் செய்கிறது தான் -என்னுமே இவள்
பிறருக்கு சேஷ பூதராய் இருப்பாருக்குப் போக்கு உண்டோ-பிரியேன் பிரியில் தரியேன் -என்றால் போலே சொல்லத் தொடங்குமே இவன்

கேட்கின்றகளும்
தாத்ருசமான சேஷ்டிதங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே

கேட்கின்றகளும் –
அடியேன்
-என்பது-வாயது விரல் மார்பத்து எழுத்து என்று சொல்லுகிற சாடு சதங்கள்-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
செயல்களும் சொற்களும் அனுசந்திக்கில்-நினைப்பது தலைமகள் தானே-காணில் நெஞ்சால் காணில் என்ற அர்த்தம் -ஆகவே மானஸ வியாபாரம்-

பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன் தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்–பாண்மையாய் இரா நின்றது-மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து-பல படியும்
செய்வது சொல்வது ஆகிறன-இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்-ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

காணில் –
நிரூபிக்கில்-நெஞ்சு என்னும் உட் கண்ணால்   காணும் உணர்ந்து –

நம் பிள்ளை ஈட்டில்
ஸ்ரீ ராமாயணத்தில்-பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கழுத்து தோள் மாலை சாத்தி
சக்ரவர்தியைக் காணச் செல்ல-தாற்காலிகமாக பிரிவு-இங்கும் பிரிவு பக்தி வளர்க்க -ஆர்த்தி உண்டாக்க-பதி ஸம்மானம் சீதா-மைய கண்ணாள் பார்க்க-திவ்ய அந்தப்புரம் கனக புரம்
சக்ரவர்த்தி அருளப்பாடு கேட்டு சுமந்திரன் வர-பிராட்டி இரண்டு மூன்று திருவாசல் அளவும் மங்களா ஸாஸனம் பண்ணிக் கொண்டு புறப்பட-புரிந்து பார்த்து அருளி-அத்தைக் கண்ட பெருமாள்
அங்கும் இங்கும் –பரிவர் இல்லை -என்று நினைத்து பண்ணுவதைக் கண்ட பெருமாள்
பின்னவும் தவிர மாட்டாதே வரும் அளவும் தாரகமாக தனது தோள் மாலையை இவள் தோளிலே இட்டு
முறை மாறாடி தாழ்வுகளைச் செய்து போனாள்-
அஸீ தேக்ஷிணா -இந்தீவர மாலை இட்டாள் அப்போது பிரிவு போல்- இங்கும் பிரிவு

இப்போது பிரியும் வருத்தம் அவனுக்கு உண்டோ என்னில்
உண்டு-விஷயம் நித்ய அபூர்வம் இருவருக்கும் உண்டே
இவனைப் பற்றி சொல்ல ஆள் இல்லையே -ஆழ்வாரே தானே சொல்ல வேண்டும்
பிரிவில் செய்வது என்ன அதி சங்கை இருவருக்கும் உண்டு–இவள் தனக்கும் தன்னுடைய ஸ்வரூபம் அறிந்தாலும் அப்ருதக் சித்த விசேஷணம் அறிந்து கவலைப் படக் கூடாதே
பெருமாளுக்கும் ஸ்வரூப ஞானம் -இல்லை
இவளையே எங்கும் பக்க நோக்கு அறியான் என்று இவளையே பார்த்துக் கொண்டு இருக்கிறான்
விஷயம் விலக்ஷணமானால் இத்தனையும் பட வேண்டாவோ என்று இருக்கிறான் ஆயிற்று
விஷயம் ஏதேனுமாக தம்மதானால் நான் பட வேண்டுமோ ஆழ்வார் நினைவு

தம் தமதமானால் நல்லதானால் ஆறி இருக்கலாமோ
எல்லாம் செய்தாலும் முன்பு போல் செய்யாமல் இருப்பதால் நெஞ்சிலே இருப்பதை அறிவார்-

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —பெரிய திருமொழி- 8-1-9-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் – நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –-சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )ஸ்வரம் வைத்து அர்த்தம்-அனுபவம் நித்யம்-விஷயமும் நித்யம் ஆனால் நித்யம் அபூர்வ விஷயம்–இத்தால் சொல்லிற்று ஆயிற்று-நித்ய அனுபவம் ஆனாலும் பிரிவுக்கு சம்பாவனை இல்லை என்றாலும்-பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்–இது எல்லாம் பகவத் விஷயத்தில்
இங்கு பாகவத விஷயத்தில்
இவர் அவகாஹம்-திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல
கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை
யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள
நிஷேதிக்க முடியாத விஷயம் எழுந்து அருள ஆகாலாதோ
திரு நாள் அணித்தாய் இருந்தது நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்று
இப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்

இந்நாள் –
இன்று –

பாண் குன்ற நாடர் –
பாண்
-புலமையை இரா நின்றது-வண்டுகள் பாடா நின்றுள்ள திருமலையைத் தேசமாக உடையவர்
குறிஞ்சி நிலத்து தலைமகன் -என்றபடி-இந்நாள் பாண்-ஸ்தோத்ரம் புலமை அர்த்தவாதம் புகழ்ச்சி
பாண் -வண்டுகள் என்றுமாம் –

இந்நாளில் பாண் குன்ற நாடர்
வண்டுகள் குறிஞ்சி ஓசை ரீங்காரம்

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மிக்க பிருவ்ருத்திகள் அறிந்தோம்-

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம் –
தன் உடைமைக்கு  தான் செய்யும் அளவன்றிக்கே-பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –பயில்கின்றன-சம்ஸ்லேஷம் உச்சி வீடு விடாதே இருக்கிறபடி
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டு வைத்துப் போய் உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே இருந்தால் போலே   —பயில்கின்றன வர்த்தமானம்-தலைமகன் பிரிந்த பின்பும் இன்னும் அனுசந்தானம் நெஞ்சில் சொல்லுகிறபடி –

மாண் குன்றம் ஏந்தி –
ஒன்றை ஆதாரமாக கொண்டும்-ஒன்றை ஆதேயமாகக் கொண்டும் ரஷித்த படி
மாட்சி -அழகு
ஏந்தி -அநாயாசேன-இருந்தபடி –அன்று குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவனே-இன்று பரன் சென்று சேர் வேங்கடம் 

தண் மா மலை வேங்கடத்து –
குளிரருவி வேங்கடம் -என்னும்படி ஸ்ரமஹரமான திருமலை

உம்பர் நம்பும் –
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்
-என்னும்படியே-நித்ய ஸூரிகள் சமாராதானம் பண்ணுகிற இடம்-(ப்ரம்மா திருவாராதனம் தேவப் பெருமாள் இன்றும் ஆற்றுக்கு நடுவில் எழுந்து அருளி அவனது ஆராதனை ஏற்றுக் கொண்டு அருளுகிறார் )ஒக்கச் சந்திப்பர் வேங்கடத் தத்தனை -என்னும்படி நித்ய ஸூரிகள் விரும்பும் படி தாங்கள் அனுசந்தித்த மேன்மை அன்றிக்கே நீர்மை மிக்க இடமானவாறே விரும்புவார்கள் –
(இங்குள்ளார் உடன் ஓக்க ஸூ சீலன் -அத்தைச் சேவிக்க அங்குள்ளார் இங்கு வருகிறார்கள் )

சேண் குன்றம்-உயர்த்தியான சிகரங்கள் -என்றுமாம் –சென்று பொருள் –நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –(இப்பொழுது என்னை விட்டுப் பொருள் தேடிப் போகிறாயே )படைப்பான் – சாத்தியங்கள் இல்லை-எல்லாம் சித்தம் என்றபடி கண்டோம் –கற்ற –இவை பண்டு இல்லை
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –திண்ணனவே –அம் மேன்மை எல்லாம் போய்
திண்மை எங்கே உண்டாயிற்று-

பாண்மை மாண் குன்றம் ஏந்தி   தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும் சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –
மநோ ஹரமாய் கோவர்த்தனம் ஏந்திய-ஸ்ரம ஹரமாய் மிக உயர்த்தியான அயர்வறும் அமரர்கள் விரும்புவதும் செய்த-சுமந்து –வானவர் கோனுடன் –தடம் குன்றமே-ஸ்லாக்யமான -உயர்ந்த சிகரத்து – சென்று பொருள் சம்பாதிக்க-நீ பேசும் வஞ்சனைப் பேச்சுக்கள் செயல்கள்-

பரிபூர்ண உத்தம புருஷன் தலைமகனாய் இருக்க-தேசாந்தத்துக்குப் -பொருள் தேடிப்போக வேணுமோ
ஸ்வ ஆர்ஜித பொருள்கள் கொண்டே பித்ரு தேவ கார்யங்கள் செய்து அவர்களுக்குப் ப்ரீதி ஏற்படுத்த வேணுமே-

பாணர்-குடுகுடிப் பாண்டி வேஷம் கட்டி பாடி ஆடுவது போலே -உண்மையான அன்பு தூண்டிய செயல்கள் அல்லவே
பாண் குன்றம் -வண்டுகள் இசை பாடும் மலை
குன்ற நாடார்-திருவத்தி மலை -திருவேங்கட மலை -திருமாலிருஞ்சோலை மலை திரு மெய்யமலை –கல் நெஞ்சர் என்று குன்ற நாடார் என்கிறார்-மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர்-ரக்ஷணத்துக்கு -மலையை எடுத்தும் மலை மேல் நின்றும்-சமயோசிதமாக செய்து அருள்பவன் அன்றோ–குன்றமேந்தி -திரு நாமம் -/மாண் குன்றமேந்தி -வாமனனே கிருஷ்ணன் என்றுமாம் –
வையம் அளந்த மாயன் என்னப்பன் -என்று குரவை ஆய்ச்சியாரோடு  கோத்ததும்     -6–4-கிருஷ்ணாவதாரம் சொல்லும் திருவாய் மொழியில் வாமனன் பற்றி அருளிச் செய்தமையும் காணலாம்

கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய் குளிர்த்தியை யுடைத்தாய் பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே-மாட்சிமை -நன்மை-மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய் குன்றம் ஏந்தியுமானவன் என்று வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி-பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்-(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –-நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும் நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்-உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –இவ்விடத்தே-குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி-(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

ஸ்வா பதேசம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய சம்ச்லேஷம் இருந்தாலும் பிரிவை அதி சங்கை பண்ணி
அத்தனை உயர்ந்த செல்வம் இழப்போமோ என்று இருக்குமே
அகலகில்லேன் இறையும் -தண்ணீர் தண்ணீர் என்னும்படி அபிநிவேசம் இருக்குமே
இப் பாட்டிலும் மேலில் பாட்டிலும் இத்தையே சொல்லிற்று ஆயிற்று
பாகவத சகவாசம் சமாஹம் இருக்க -அவ்விருப்பு ஒழிய -எம்பெருமான் உள்ள திவ்ய தேசத்துக்கும் போகக்கூடாது என்று பாகவத ஸஹவாஸ ஸ்லாக்யதையைச் சொன்னபடி
அடியார் அடியார் கூடும் –இது வல்லால் மூவுலகு பெறினும் வேண்டாவே -வேறே இடம் போவது தப்பு 

தாத்பர்யம்–இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்-திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக-அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய-அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு-இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை–நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது-நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய் முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன் இப்பொழுது சர்வ சுலபனாய் அது ஊருக்காக இங்கு உலகுக்காக அப்போது 125 வருஷங்கள் இப்பொழுது நித்தியமாக அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள் அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள் உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10- நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன் பேறாகத் திருவருளைச் செய்து.-என்னை முற்றவும் தானானான்–உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல்.-அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான்-

5-1-கையார் சக்கரத்து-ப்ரவேஸம்

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்துவ
பர்யந்தமான பகவத் கைங்கரியம் என்றார்;
நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐச்வர்ய கைவல்யங்கள் என்றார்;
அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்கிறார் இவ் வைந்தாம் பத்தால்.

பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ காருணிகத்வ –
சரண்யத்வ – சக்தித்வ -சத்ய காமத்வ ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ –விசிஷ்டன்
மயர்வை அறுக்க தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகாரக் கைம்மாறு இன்றி
க்ருதஜ்ஞாதா பல பிரதி க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று
காலாசத்தி பலகதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறர் அறியப்
பத்துத் தோறும் வெளியிட்டு அருளுகிறார் –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை –218

நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற துக்கத்தை அநுசந்தித்து,
அதற்குப் பரிஹாரமாகப் பகவானுடைய பரத்துவ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று
பகவானுடைய பரத்துவத்தை உபதேசித்தார் மேல் திருவாய்மொழியிலே;( உபதேசித்து திருத்தினார் )
இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே-கிட்டம்-உலோகத்துண்டு.-
ஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே
ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து,
அதற்குக் காரணம்
தம் பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான கிருபையாலே
செய்தானத்தனை என்கிறார் இத் திருவா ய்மொழியில்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற “விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்ற
பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ‘நிர்ஹேதுகமான’ என்கிறார்.

அநாதிகாலம் பிறந்து இறந்து புத்தி பூர்வம் விரும்புவது ஐம்புல இன்பங்களையேயாய்,
தன்பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு படாத வார்த்தைகளே யாயிருக்க, நான் புத்தி பூர்வம் செய்து போந்த
பிராதி கூல்யங்களை மறந்து, ஞானம் பிறந்த பின்பு என்னை
அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய், என்னை இவ்வளவாக அங்கீகரித்தான்;
பிறரையும் யான் திருத்த வல்லேனாம்படி செய்தான்’ என்று தாம் பெற்ற
பேற்றின் கனத்தைச் சொல்லி ஈடுபட்டு அநுபவிக்கிறார் என்றபடி.

நிர்ஹேதுகம்’ என்றால், எல்லார்க்கும் இத் திருவருள் கூட வேண்டுமேயன்றோ? அங்ஙனம் இல்லை ஆதலின்,
ஒரு காரணம் பற்றியே கிருபை செய்தான் என்று கொண்டால் என்னை? எனின், அதற்கு விடை அருளிச் செய்கிறார்
அநாதி காலம்’ என்று தொடங்கி. “பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
தன் பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு படாத வார்த்தைகளே யாயிருக்க’ என்றும்,
அவன் என்னாகி ஒழிந்தான்” என்றதனைத் திரு வுள்ளம் பற்றி ‘நான் புத்தி பூர்வம்’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்” என்றது,
காப்பாரார்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றித் “மெய்யே பெற்றொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி’ என்கிறார்.

1-பகவானுடைய பரத்துவ ஞானத்தைத் தம் நெஞ்சிலே படுத்தின படியையும்,
2- அதற்கு உறுப்பாய் இருப்பது ஒரு நன்மை தமக்கு இன்றிக்கே இருந்த படியையும்,
3- அநாதி காலம் தாம் விபரீதங்களையே செய்து போந்த படியையும்,
4-புருஷார்த்தத்திற்கு உபாயமாகச் சொல்லுகிறவற்றில் தாம் ஒன்றும் கனாக் கண்டு அறியாதே இருக்கிற படியையும்,
5-‘புருஷார்த்தம் வேணும்’ என்னும் நினைவும் இன்றிக்கே இருந்த படியையும், –
6-சம்சாரத்திலே தரை காண ஒண்ணாதபடி ஆழ்ந்து நோவு படா நிற்கச் செய்தே ‘நோவு படா நின்றோம்’
என்று அறிவிக்கவும் மாட்டாதே உணர்த்தி அற்று இருக்கிற படியையும்,
7-அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம்
என்னும்படி இனிய பொருளாகத் தோன்றின ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்த படியையும்,
8-அதற்கு மேலே அவன் பக்கல் இச்சை இன்றிக்கே இருக்க அவனை உகந்தார் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லிப் போந்த படிகளையும் நினைத்து, இப்படி எல்லா வகைகளாலும்
தண்ணியேனாய் இருக்கிற என்னை, அவற்றுள் ஒன்றனையும் பாராமல்,
9- ‘தான் சர்வ சேஷி’ என்னுமிடத்தையும் ‘தன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்’ என்னு மிடத்தையும் –
10-என் நெஞ்சிலே படுத்தி என்பக்கலிலே ஆராக் காதலனாய் என்னோடே வந்து கலந்தான் என்று –
இப்படி பத்து பத்தாக உபகரித்தானே -தாம் பெற்ற பேற்றினைச் சொல்லிப் பேருவகையர் ஆகிறார்.

இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்களை விவரிக்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி.
கையார் சக்கரத்து”, “அம்மான் ஆழிப் பிரான்” என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றிப்
பகவானுடைய பரத்துவ ஞானத்தை’ என்று தொடங்கியும்.
பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம் பற்றி,அதற்கு உறுப்பாய்’ என்று தொடங்கியும்,
புறமே புறமே ஆடி” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அநாதி காலம்’ என்று தொடங்கியும்,
நின் கண் நெருங்க வைத்தே என தாவியை நீக்க கில்லேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘
புருஷார்த்தத்திற்கு’ என்று தொடங்கியும்,
நாவாய் போல்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘புருஷார்த்தம் வேணும்’ என்று தொடங்கியும்,
அலை நீர்க் கடலுள் அழுந்தும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்சாரத்திலே’ என்று தொடங்கியும்,
உள்ளன மற்றுளவா” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அமுதம் இருக்க’ என்று தொடங்கியும்,
போனாய் மாமருது” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அதற்கு மேலே’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
தான் சர்வ சேஷி’ என்றது, “அம்மான் ஆழிப்பிரான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
உய்ந்தொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் திருவடிகளில்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
அடியேனோடும் ஆனான்” “என்னை முற்றவும் தானானான்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி ‘ஆராக் காதலனாய்’ என்கிறார்.

முதல் இரண்டு பத்தாலே ப்ராப்ய பூதனுடைய சேஷியினுடைய ரக்ஷகத்வ போக்யத்வங்களைச் சொல்லி
அநந்தரம் மூன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும் ப்ராப்தாவான பகவச் சேஷ பூதனுடைய
தத் ஏக அனுபவத்தையும் தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லி
ஆக நாலு பத்தாலும் சித்த ரூபமான பராவராத்ம யாதாத்ம்யத்தை அருளிச் செய்தாராய்
அநந்தரம் அஞ்சாம் பத்தாலும் ஆறாம் பத்தாலும் சித்த உபாய பூதனான ஈஸ்வர விஷயத்தில்
சேதனனுக்கு சாத்தியமான உபாய ஸ்வீ காரத்தை அருளிச் செய்கிறார்

அதில் இந்த அஞ்சாம் பத்தில் ஸித்தமான உபாய ஸ்வரூபத்தினுடைய யாதாம்யத்தை நிரூபிக்கிறது -எங்கனே என்னில்
கீழ்ச் சொன்ன தத் ஏக பிரியத்வத்தாலே -பகவத் கைங்கர்யமே உத்தேச்யம் -என்று பிறருக்கு உபதேசிக்கும்படி
தமக்கு இவ்விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தை அனுசந்தித்து -இதுக்கடி அவனுடைய உபாய பாவம் -என்று நிஷ்கர்ஷித்து
உபாய பூதனுடைய கிருபா பாரவஸ்யத்தையும்
அதடியாக ஆஸ்ரிதரை பாகத்தை இட்டுத் திருத்திக் கொள்ளும் ஆகாரத்தையும்
திருந்தினார்க்கு நிரதிசய ப்ரேமத்தை உண்டாக்கி ப்ராப்ய த்வரையை ஜெநிப்பிக்கும் படியையும்
ப்ராப்ய அ லாப்ய தசையில் ஆர்த்தி பிறந்தார் பக்கல் அவனுடைய ரக்ஷகத்வ சாமர்த்யத்தையும்
அப்ராப்ய வ்யசனத்தோடே ஹார்த்தமான அனுபவம் நடைக்கையாலே ப்ரீதி அப்ரீதிகளை சமமாக உண்டாக்கும் படியையும்
ஆர்த்தி அதிசயத்தாலே அநு கரிக்கும் படி அவன் இவனுக்கு அஹம் பாவ விஷயமாம் படியையும்
இப்படி ஆர்த்தி பிறந்தால் அகிஞ்சனனார்க்கு தன் உபாய பாவத்தை பிரகாசிக்கும் படியையும்
போக ஆகாங்ஷை யுடையார்க்கு அவ்வுபாயத்தில் பிரதிபத்தி விசேஷ கரத்வத்தையும்
பரிபூர்ண அனுபவ ப்ராவண்யம் பிறந்தால் பிரதி பன்னமான உபாயத்தில் விசுவாச ஜனகத்வத்தையும்
அதிசயித சக்தியான உபாய விஷயத்தில் அபி நிவிஷ்டரானார்க்கு அந்த விசுவாசத்தை யாவது பிராப்தி அனுவர்த்திக்கும் படியையும்
அருளிச் செய்து நிர் உபாய பூதனுடைய யாதாம்யத்தை நிஷ்கார்ஷித்து அருளுகிறார் –

அதில் முதல் திருவாய் மொழியில்
உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை ப்ரதிபாதிப்பதாக
க்ருத்ரிம அநு கூல்யவான்கள் பக்கலிலும் சர்வ ஸூலபனான ஈஸ்வரனுடைய கிருபை அவ்யபிசரிதை என்னும் இடத்தையும்
அந்த கிருபா பாரவஸ்யத்தாலே அஹ்ருதய யுக்தியே பற்றாசாக அவன் அபி நிவிஷ்டனாய் மேல் விழும்படியையும்
ஆஸ்ரிதருடைய கின்னதாயையும் போக்கித் தன்னை அனுபவிக்கும் படியையும்
அனுபவ பிரதிபந்தக தோஷ நிவர்த்தகத்வத்தையும்
தோஷ ரூப சரீராதிகள் நிவர்த்தகனுக்கு விதேயம் என்னும் இடத்தையும்
தோஷ ரூப ப்ரக்ருதியோடே இருக்கச் செய்தேயும் அந்த தோஷம் நெஞ்சில் படாதபடி விலக்ஷண விக்ரஹத்தை அனுபவிப்பிக்கும் படியையும்
போக்தாவின் நிகர்ஷம் பாராதே ப்ரேமத்தை ஜெநிப்பித்து தானும் மேல் விழுந்து அனுபவிக்கும் என்னும் இடத்தையும்
அனுபவிக்கும் அளவில் சர்வவித்த பந்துவாய் புஜிப்பிக்கும் படியையும்
இப்பந்தத்தோடு அசாதாரண ஆகார சிஹ்ன விசிஷ்டனாய் அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
அந்த ஆகாரத்தை அழிய மாறியும் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணும் படியையும்
அனுசந்தித்து -இப்படி உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை அனுபவிக்கிறார் –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே
.–5-1-1-

கை ஆர் சக்கரத்து--வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று.-இது தான் ஆபரணமுமாய் வினைத் தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது.-ஒரு கைக்குப் படையாய்-யுத்தத்துக்கு – இருக்குமே யன்றோ?-கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப் படுகைக்கு உடலாய்,-விரோதிகளைத் துணிக்கைக்கும் உடலாய் ஆயிற்று இருப்பது.

என் கரு மாணிக்கமே –சிரமஹரமாய் நீல இரத்தினம் போலே பெரு விலையனான வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!-கையுந் திருவாழியுமான அழகை நினைத்தால் அடைவே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை நினைக்க வல்லர் அல்லரே,
பின்னர் வடிவழகிலே கால் தாழ்ந்தார், படி கடந்து அவ் வருகு போமவர் அல்லரே. –
படி தாண்டா பத்னி -திருமேனி அழகிலே படியுமவர் அன்றோ –

என்று என்று –இதனை ஒரு கால் சொல்லித்தான் விட்டேனோ. பகவத் விஷயத்தில் உட் புக்கது எல்லாம் குற்றமாய்த் தோற்றுகிற தாயிற்று;
போராது’ என்று இருக்கையாலே. இது பொல்லாததாய் இருந்தது இல்லையே! என்ன, அழகே யன்றோ,-பாவ பந்தத்தோடு சொன்னேனாகில்.

பொய்யே கைம்மை சொல்லி –-பொய் என்பதும், கைம்மை என்பதும் ஒரு பொருட் சொற்கள். ‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
பிறரை வஞ்சித்தல் அன்றிக்கே, முற்றறிவினனான சர்வேச்வரனும் ‘இது மெய்’ என்று பிரமிக்கும்படி பெரும் பொய்யை அன்றோ சொல்லிற்று என்றபடி.
பொய்யும் மெய்யுமாகக் கலந்து தான் சொன்னேனோ என்பார் ‘பொய்யே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.

புறமே புறமே ஆடி –இப்போது ‘புறம்’ என்கிறது, ஐம் புல இன்பங்களை.
பகவத் விஷயத்தில் இறங்கியது போராது’ என்று இதனைப் ‘பொய்’ என்னா நிற்கச் செய்தேயும், ஐம் புல இன்பங்கள் புறம்பாய்த் தோற்றுகின்றன ஆயிற்று இவர்க்கு;
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்னுமவரே யன்றோ? ஜாதி, உருவங்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே ஆயிற்று
விஷயங்கள் தோறும் தனித் தனியே கால் தாழ்ந்தபடி. இது தான் எப்பொழுதை நிலையைப் பற்றச் சொல்லுகிறார்? என்னில்,
முக் காலத்தில் உள்ளவையும் சம காலத்தில் போலே தோற்றுகையாலே சென்ற பிறவிகளில் நிகழ்ந்தனவற்றை நோக்கிச் சொல்லுகிறார் என்னவுமாம்;
மயர்வு அற மதிநலம் பெற்ற பின்பும் தமக்கு விஷயத்திற்குத் தகுதியாகப் போராமையாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.
உம்முடைய நிலை இதுவாகில் பேறு இருந்தபடி என்?’ என்ன, அருளிச் செய்கிறார் மேல்:

மெய்யே –என் பக்கல் உள்ளவை பொய்யே ஆயினாற் போலே, அவன் அடியாக வந்தது ஆகையாலே மெய்யேயாய் இருக்குமே அன்றோ.-பேற்றில் கண்ணழிவு சொல்லலாவது இல்லை என்றபடி.

பெற்றொழிந்தேன் –பரம பதத்து ஏறப் போனாலும் இப் பேற்றினை அசையிட்டு இருக்குமத்தனை. என்றது, இனி, இதனைக் காட்டிலும் ஏற்றம் செய்யலாவது இல்லை என்றபடி. ‘காரணம் இல்லை’ என்னா நின்றீர், பேறு கனத்திருந்தது; இதற்கு அடி என்? என்ன,

விதி வாய்க்கின்று –-பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகாநின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ? ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈச்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.

காப்பார் ஆர் –எது காக்கும் -சொல்லாமல் -கர்மம் -எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லையே -அவ்வளவு அல்பம் – இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ? இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார்-காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார். என்றது, பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது,
ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது; பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது,-பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?-கிருபைக்குப் பரதந்திரப் பட்டவனான நீ காக்கவோ? கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? 

“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே எம்பார், ‘சர்வ ஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ – ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி. இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

கண்ணபிரான்-உபகார சீலனான கிருஷ்ணனே! ஒரு தாயினுடைய மெய்க்குப் போக மாட்டாத நீயோ என்னுடைய பொய்க்குப் போகப் புகுகிறாய்,-ஓர் ஆய்ச்சி கையிலே கட்டுண்ட நிலையிலே அந்தத் தளையினின்றும் தப்ப விரகு அறியாதே சத்தியும் இன்றிக்கே
இருந்த நீயோ போகப் புகுகிறாய்? ஆர்ஜவமான கட்டை அவிழ்க்க மாட்டாதவன் பொய்யான பந்தத்தை அவிழ்க்கமாட்டான் என்றபடி.

இனிப் போனால் அறையோ –இனிப் போனாயாகில் அறையோ அறை.
என் பக்கலிலே ‘மெய்’ என்று பெயர் இடலாவது ஒரு பொய் பெற்ற பின்பு போனாயாகில் அறையோ அறை.-பகவானுடைய கிருபையைப் பக்க பலமாகக் கொண்டு ஈச்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறைகூவுகிறார்.
கண்ண பிரான்’ என்பது, விளிப்பெயர்.
அன்றிக்கே, கண்ண பிரானானவன் இனிப் போனால் அறையோ அறை என்று பொருள் கொண்டு முன்னிலைப் படர்க்கையாகக் கோடலுமாம்.-

—————

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.
–5-1-2-

தெளிந்த ஞானத்தாலே, ‘இறந்த காலம்’ என்று இவர்க்குத் தோற்றுகிறது இல்லை யாயிற்று.
சர்வேச்வரன் செய்து கொடுத்த தெளிந்த ஞானம் வயிறு எரிகைக்கு உடலாய் விட்டதித்தனை.

என் பொல்லா மணியே-“அதன்பின் கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசத்தை அடைந்த ஆயர்கள் அங்கு வந்தார்கள்”,-“தாமரைக் கண்ணனான அந்தக் கண்ண பிரானும் சென்றார்” என்கிறபடியே, இவற்றைத் தப்பிப் போய், முரிந்து விழுகிற ஓசையைக் கேட்டு
முன்பு இல்லாததனைக் காணும் காட்சியாலே சிவந்த மலர்ந்த கண்களும் தானுமாய் இருக்கிறபடி.
“புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை” என்னக் கடவதன்றோ.
அழகிது என்னில், நாட்டில் உள்ள அழகைப் போன்றது ஆம் என்று நினைத்து,
வேறுபாடு தோன்ற ‘பொல்லா மணியே!’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, நாட்டார் கண்டு கண்ணெச்சில் படாமைக்குக் கரி பூசுகிறார் என்னுதல்.
அன்றிக்கே, தொளையாதமணி; அதாவது பிறரால் அநுபவிக்கப்படாத மணி என்னுதல்;
பொல்லல் – தொளைத்தல். இதுவும் யசோதைப் பிராட்டி அருகில் நின்று சொன்ன வார்த்தை.

தேனே! இன் அமுதே! என்னும் இவை இரண்டானும் நிரதிசய போக்யமாய்,
போன உயிரை மீட்கவற்றாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
“அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்”-இரண்டாம் திருவந்தாதி-85- என்று சொல்லுகிறபடியே நிரவதிக போக்கியமாயிருக்கை.

என்னாகி ஒழிந்தான்–நான் இட்ட வழக்கு ஆனான்.-என்னை யுடையவன் நான் இட்ட வழக்கு ஆனான்,-உடையவன் தான் உடைமை யானான்:

விபூதியையும் நான் இட்ட வழக்கு ஆக்கினான்-விபூதியை யுடையவனாய்க் கொண்டு என்னுள்ளே புகுந்தான் என்னுதல்-அந்தாமத்தன்பு மட்டும் இல்லாமல் உபய விபூதி அன்பும் என்னிடம் வைத்தான் —-உன் ஆகம் முற்றும் அகத்து அடக்கி என்றவாறு-

———-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
 –5-1-3-

பொய்யே கைம்மே –உள்ளன மற்றுளவாதல்- சில சொன்னதை விவரியா -நின்று
வாக் மாத்ரத்தாலே உன்னைப் பெற்ற பின்பு உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப் படேன்

உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் -உடன் இருந்து அறியும் உன்னையும் –-சர்வஜ்ஞ்ஞன்-சர்வ அந்தர்யாமியான நீயும் மெய் என்று கருதும் படி உன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மனசை-தவிர்ந்தே--அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும் படி முழுகும் விஷயம் இறே-உன்னை-மித்ர பாவேன-வந்தாலும் -நத்யஜேயம் -என்னும் உன்னை-வேஷம் கொண்டு வந்தாரையும் -ப்ராப்தனும் போக்யமுமான உன்னை-உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்-ஒரு படி காண வல்லோமே-ஒரு படி -சாடு-கொஞ்சம் -திருமேனி–நிதி எடுத்தாரைப் போலே லபித்து
அசந்நேவ என்று இருந்த நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்-

பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே -இவ் வேலையிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக கொண்டு-அவசர பிரதீஷனாய் கொண்டு -கண் வளர்ந்து அருளுகிறவனே-உனக்கு சத்ருசமான பரமபதத்தை விட்டு வி சத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாகக் கொண்டு கண் வளர்ந்து அருளின பின்பு-நான் விட்ட அன்றும் என்னை விட மாட்டாத இருக்கிற உன்னை ஒழிய – முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க –என் கொள்வனே-பச்சை கொண்டு -பல வேளையிலே -நிஷ் பலங்களாக –இருக்கும் விஷயங்களைப் பற்றவோ-ஆராதிக்கும் இடத்தில் -துர் ஆராதரராய் -வருந்தி ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களைப் பற்றவோ-

———-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
 –5-1-4-

வன் கள்வனேன்-களவாவது -பர த்ரவ்ய அபகாரம் –-வலிய களவு சோரேண ஆத்ம அபஹாரிணா –என்கிறபடியே-பகவத் அதீயமான ஆத்ம வஸ்துவை அன்றோ -நான் என்னது என்று இருந்தது-(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்)-த்ரவ்யங்களை உபாதானம் பண்ணுகிற இடத்தில் ஆத்ம வஸ்துவை பிரதானமாகச் சொன்னார்கள் இறே
த்ரவ்யம் விலக்ஷணமாவது -உடையவன் சர்வேஸ்வரன் ஆவது -இனிச் சொல்ல வேண்டா இறே

மனத்தை வலித்து--இதர விஷயங்களில் பிரவணமான மனஸை அவற்றின் நின்றும் மீட்டு-
மனத்தை மீட்டு என்னாதே -வலித்து-என்கிறது அவற்றில் நெஞ்சு பட்ட உறுதியை நினைத்து –நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது அவை என்னை மேலிடுகை –
இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரசவம் மன -ஸ்ரீ கீதை –-கண்ண நீர் கரந்து
அவற்றினுடைய அலாபத்தாலே பாய்கிற கண்ண நீரையும் மாற்றி-நின் கண் நெருங்க வைத்தே-அம் மனசை உன் பக்கலிலே கொண்டு போந்து மூட்டி நிரந்தரமாக அனுசந்தித்து-எனது ஆவியை நீக்க கில்லேன்-இத் தேகத்தில் காட்டில் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன்-என் கண் மலினம் அறுத்து-இதுக்கு அடி என் பக்கல் உண்டான மாலின்யம் இறே –-மலினம் -மாலின்யம் -அதாவது பிரகிருதி சம்பந்தம் -மெய்யனாகக் கெட்டேன் என்கிறார் — மெய் -சரீரம் -அத்தை அறுத்து உன் திருவடிகளில் என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் –கண்ணனே –சோக நிவர்த்தகன் அன்றோ -நீ எனக்குச் செய்து அருள வேண்டியது -அழகிய வடிவைக் காட்டி-மாஸூச -என்னும் அத்தனை அன்றோ – அவ்வடிவைக் கண்டால் மற்று ஒன்றினைக் காணா என்னும்படியாய் இறே இருப்பது –

வேறு ஒரு நிர்வாகம்-ஸ்வரூப அனுரூபமான பாசுரத்தை வாயாலே சொல்லி நிற்கச் செய்தேயும்-வன் கள்வனேன்-உத்தேச்ய வஸ்துவை -கடுக லபிக்கப் பெறாத இன்னாப்பாலே -மஹா பாபி -என்பாரைப் போலே வன் கள்வன் என்கிறார்-மனத்தை வலித்து-இத்யாதி –
பக்தி பாரவச்யத்தால் சிதிலமாகிய – மனஸை திண்ணியதாக்கி-தன் கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள்-என்கிற கண்ண நீரையும் மாற்றி–நின் கண் நெருங்க வைத்தே-கால் ஆளும் நெஞ்சு அழியும் என்கிறபடியே உன்னைக் கிட்டியவாறே உடை கொலை பண்ணும் மனஸை தரித்து நின்று உன்னை அனுசந்திக்கும் படி பண்ணி – இந்த நிர்வாகத்தில் மலினம் -பக்தி பாரவஸ்யம் -உற்ற நல் நோய் அன்றோ இது –

இச் சரீரத்தின் நின்றும் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறேன் அல்லேன் சேர்க்கும் சக்தன் அல்லன்-இவன் தான் தன் விரோதியைப் போக்கி கிரமத்திலே வந்து கிட்டுகிறான் என்று ஆறி இராதே-நினைத்த கார்யம் தலைக்கட்ட வல்ல நீயே என் விரோதியைப் போக்கி என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும்-கண்ணனே
பக்தி உபாயம் அன்று என்று சோகித்தவனுக்கு -(உன் திருவடி- )நல் விரகு சொல்லிக் கொடுத்தவன் அன்றோ நீ-

—————-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே
.–5-1-5-

நண்ணியும் நண்ணகில்லேன் –-பெற்று வைத்தே பெறாதார் கணக்கானேன்.
பிறந்த ஞான லாபத்தை நினைத்து ‘நண்ணியும்’ என்கிறார்.
சரீர சம்பந்தத்தோடே இருக்கிற இருப்பை நினைத்து ‘நண்ணகில்லேன்’ என்கிறார்.

நடுவே ஓர் உடம்பில் இட்டு – ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே-‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார்.
சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை,
பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றா நின்றதே அன்றோ?
அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ?-இராஜ புத்திரன் வழியிலே போகா நிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?

புண்ணை மறைய வரிந்து – தோலை மேவிக் கைப்பாணி இட்டு மெழுக்கு வாசியிலே மயங்கும்படி பண்ணின இத்தனை ஒழிய, அகவாய் புறவாய் ஆயிற்றாகில் காக்கை நோக்கப் பணி போருமித்தனையே அன்றோ?-போர வைத்தாய் புறமே – ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றா நின்றதாயிற்று,-சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு.
புறமே –உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய்-தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்த போது பர தந்திரங்கள்’ என்று இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே ‘போர வைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார். பிரஜை தானே கிணற்றில் விழுந்தாலும் -மாதா நோக்கிற்று இலள்-என்னுமத்தைக் கொண்டு -அவள் தள்ளினாள் -என்ன கடவது இறே –ஸ்வரூப பாரதந்தர்யோபாதி கர்மமும் அவனைக் குறித்து பொறுத்தோம் என்ன கழி கிறி திறே-

————-

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
–5-1-6-

“போர வைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’ என்று பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட, அவ் வடிவழகைக் கண்டவாறே தம் முடம்பை மறந்து பிரீதராய், கண்டு கொண்டேன் என்கிறார்-இவரை மெய்ம் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.

திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே, கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள் தோறும் பிரவேசித்துத் திரியும் படும் பாட்டுக்கு ஒரு முடிவு இல்லை அன்றோ? 

கண்டு கொண்டொழிந்தேன் –-உத்தேசிய வஸ்துவைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன். பிறவி நீங்கினேன் என்றபடி.-முறுவல் எடுத்த கலம்” என்னும்படி திரு முகத்தைச் செவ்வி பெறுத்தா நின்றுள்ள புன்சிரிப்பையும், இழவு மறக்கும்படி-குளிரக் கடாக்ஷிக்கிற திருக் கண்களையுமுடையனாய்-அடியார்களைக் காப்பாற்றுதலாகிற பரம தர்மத்திலே தன்னிலும் முயலா நின்றுள்ள திருவாழியை யுடைய அழகிய திருக்கையையும்,-அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும்,‘இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும் படியான சம்பந்தத்தை யுமுடையவனைக் காணப் பெற்றேன்-நீல தோயத மத்யஸ்த்தா -என்னும் படி இறே ஹிருதயத்திலே இருக்கிற படி-முன்பு இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.-இவரை -மெய் மறக்க பண்ணிற்று அவன் வடிவு அழகு-சரீரம் காரணமாக வந்த துக்கத்தை மறக்கப் பண்ணிற்று.-

———–

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.
–5-1-7-

நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.-பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.-பாபம் இல்லாதவருக்கு பள்ள மடை -பாபம் உள்ளவர்க்கு மேட்டு மடை -வெள்ளம் வந்தால் வாசி இல்லையே –கர்மம் ஆகிய கரையிலே -நின்றால் அத்தையும் சேர்த்து அழித்துப் போகுமே –

உயர்ந்த பிறவி ஆசாரம் ஞானம் இவைகள் ஒன்றும் இன்றிக்கே இருக்கின்ற யானையானது முற்பிறவியின் வாசனையாலே, முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவு பட்டவாறே திருவடிகளை நினைக்க, சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல் மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று
அந்த உபகாரத்தின் நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.

கை தலை பூசல் இட்டே – தலையிலே கையை வைத்து வாயாலே கூப்பிட்டு என்னுதல்;
மாறாதே அஞ்சலி செய்து என்னுதல்; -தலையிலே வைத்த கை மாறாமல் என்னுதல்.-பூசல் இடுதல் –பிரசித்தமாகக் கூப்பிடுகைக்கும், ஒன்றோடு ஒன்று சம்பந்திக்கிறதற்கும் பேர். எம்பிரானும் என் மேலோனே- எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான். என்றது,
நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற என்றும் ஒக்க
மெய்ம் மாலாய்ப் போருகின்றவன் விடுவானோ என்றபடி.
இது இருந்த படியால், எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் 
எவ்வளவு மஹா பாவத்தைப் பண்ணினார்க்கும் பகவானுடைய கிருபை பெருகா நின்றுள்ள இடத்தில் தப்ப விரகு இல்லை அன்றோ?-

————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே
.–5-1-8-

மேவித் தொழுஉம் மாலார் – இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில்
உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.-வந்து –
தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல் தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து.-இன நாள் – இப்போது, என்றது, முக் கணத்தில் அறியாது இருக்க, இங்ஙனே விடிந்து கொண்டு நிற்கக் கண்டேன் 

பரம யோகிகள் நெஞ்சிலும், திருப் பாற் கடலிலும், பெரிய பிராட்டியார் திருமுலைத் தடங்களிலும் இருக்கக்கூடிய அவன், நித்ய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலைபெற்று நின்றான்.-இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ?

இனி அவரே ஆவார்- இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும் ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம்.
யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.
அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.-

—————–

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே
.–5-1-9–

பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-

“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார்-அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி-இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ -திருவாய். 6. 9 : 1.-என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது;
ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச் செய்தார்.
இவர் தாம் பூ வேளைக்காரரைப் போலே, இவை காணாத போது கை மேலே முடிவார் ஒருவரே யன்றோ.-பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக் கொண்டு முடியுமவர்கள்.-கைமேலே முடிவார்-கைமேலே காணாத போது-போரிலே முடிவார் –ஆஆ! என்று அருள் செய்து –-லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர் இப் பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார்.-ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.-

————

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே
.–5-1-10-

சர்வேசுவரன் தன் கிருபையாலே ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹோபகாரத்தை நினைத்த க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.ஆளுடையான் ஆனான்--என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒரு வார்த்தை சொன்னேன்.-என்ற அஃதே கொண்டு–என்று கூறிய இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு.-நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான், –-இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்
(ஸ்ருஷ்ட்டி அவதாராதி முகத்தால் பண்ணின கிருஷி பலம் அன்றோ
தடுப்பை விலக்கியதுமே பலிக்கும் -)-உகந்து –-பலத்தை அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, சந்தோஷமும் தன்னதே ஆயிற்று.-பல போக்தாவும் அவனே –-நாம் போக்யம் என்ற உணர்வே வேணும்-

தானே இன் அருள் செய்து–நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன் பேறாகத் திருவருளைச் செய்து.-என்னை முற்றவும் தானானான்–உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல்.-அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல்.“ஆக முற்றும் அகத்து அடக்கி”–திருவாய்மொழி. 4. 3 : 3.- என்றாரே அன்றோ முன்னரும்.

நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும். நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.-

———

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.
–5-1-11-

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் என்கிறார்.

கமலத் தடங்கண்ணன் தன்னை –-மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக் கண்களை யுடையவன்.-அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. -திரு மேனி முழுவதும் திருக்கண் வியாபிக்க -பட்டர் –
மேலே “நிறமுடை நால் தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.-ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சின போது, சிரமஹரமான வடிவைக் காட்டித் தன்னை-முழுக்கக் கொடுத்துத் திருக் கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.

பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் – நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே, எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப்பெறுவர்.-தாய்க்கு உகப்பு –சேய்க்கு பிராப்தம்-

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து
 ——-41-இரும்பைப் பொன் ஆக்குவது போலே நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய ஸூரிகள் பேற்றை உபகரிக்கும் எம்பெருமான் உடைய நிர்ஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஆழ்வார் -என்கை-க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading