ஸ்ரீ வார்த்தா மாலா -வார்த்தை -423-

பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் –
ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான் –

(அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சனன் அநந்ய கதி த்வமேவ உபாய பூதோ மே பவ பிரார்த்தனா மதி மாம் -சரணா கதிரித்யுக்தா -சா -தேவேசமின் பிரயுஜ்யதாம்-அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்-)

——————

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –

இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயா ப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வேத மரியாதைக்கு பஹிர்ப்பூதன்

2-ஷூத்ரஸ் –ஷூத்ரத்வம் அவது-நீச விஷயங்களில் அதி சபலன் –உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து-அதுக்கு மேலே விநாச ஹேதுவான நீச சேவையிலே அதி சபலன்-

3-சலமதிர்-நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது-வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால் அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –

4-அஸூயா ப்ரஸ்வபூ –பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே-பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –

5-க்ருதக்ந –உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை–கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று
மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும் பஹிஷ்க்ருதன் -என்கை-

6-துர்மாநீ –இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும்-சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து-ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –

7-ஸ்மர ப்ரவஸோ –தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக நினைத்து இருக்கிற அளவன்றிக்கே விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும்
பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும் அனர்த்தப் பட்டேன் -என்கை –

8-வஞ்சன பர –காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் – அவ் விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –
சூதனாய்க் கள்வனாகி –திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-

9-ந்ரு ஸ்ம்ஸ –தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே –தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல் க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன்
–திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

தவ சரணயோ -கதம் -பரிசரேயம் –துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான்
நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே எங்கனே பரிசர்யை பண்ணுவன்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் – அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை

(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –
நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன் நின்னடி இணையில் பணி செய்வேனே
–62-

சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –

——————————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||-ஶ்லோகம் 62 –

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன், நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
ந்ருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜல தேர பாராது த் ததீர்ண –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

——————————————

1-அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் –5–

கள்வனேன் ஆனேன் –விறகு களவு கண்டவனில்  காட்டில் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கு பாபம்ப்ரசுரமாய் இருக்கும் –சூத்ர தனத்தை அபஹரித்தவனில் காட்டில் ப்ராஹ்மண தனத்தை அபஹரித்தவனுக்குபாபம் விஞ்சி இருக்கும்-த்ரவ்யங்களில் தலையான ஆத்ம வஸ்துவை யாயிற்று அபஹரித்தது-சர்வேஸ்வரன் உடைமையை யாயிற்று என்னது என்று போந்தது –(நம்பினேன் பிறர் நன் பொருள் –என்றவாறு)-பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்-சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்-த்ரவ்யம் குணஸ்ததா கர்ம ஜாதிச் சேதஸ்கதாச்ரய-என்று பதார்த்தம் சொல்லுகிற இடத்தே த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தது-பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது-ஆத்மவஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய் இத்தை உடையவன் சர்வேஸ்வரனாய் இறே இருப்பது –

படிறு செய்து இருப்பேன் –மிடறு தின்றால் சொறிய ஒண்ணாதாற் போலே பஸ்யதோ ஹரனானேன்-நான் தேக ஆத்ம அபிமானம் பண்ணிப் போந்ததுவே அன்றிக்கே
ஈஸ்வர சேஷம் இவ்வாத்ம வஸ்து என்று இருப்பான் ஓர் ஆஸ்திகன் உண்டாகில்
தேகாத்ரிக்தமாய் இருப்பதொரு வஸ்து ஆவது என் -ஈஸ்வரன் ஆவது என் – என்று காண காணப் பறித்தேன்-நன் பொருள்
-விலஷண த்ரவ்யம்-எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் –நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள்-நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-அந்யன் ஆகிறான்-கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்களிலே கூட்டுப் படாதவன் இறே-அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில் ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார் சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இறே அவன்-இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இறே

நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று-ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வத்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் – போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-பிறர் நன் பொருள்-உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்-இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்-அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்-அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ-அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது-சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும் மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது

கண்டவா திரிதந்தேனேலும் –முன்னடி தோற்றாமையாலே கை வந்தபடி பரிமாறினேன் இத்தனை போக்கி சாஸ்திரங்கள் ஆகாதது என்றத்தை அறிந்தும் மீண்டிலேன்
(கண்டவாறு திரிந்தது -கண்ணால் கண்ட சாம்சாரிக வழி கேட்டவாறு –சாஸ்திரம்- வேதம்-ஸ்ரவணம்-மனனம் – அறிந்து செல்ல வில்லை)-ந்ருபசு –அல்லாதவற்றோடு பரிமாறுமத்தை ஜனனி பக்கலிலும் பரிமாறத் தேடும்-

2-ஷூத்ரஅற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை-இப்படி இருப்பன அநேகம்-சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –இத்தால் பெற்றது ஏது என்ன-அகன்று ஒழிந்தேன்-சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்-உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை-முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.

3-சலமதிநின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்

4-அஸூயா ப்ரசவ பூதீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-

மனஸா து விசுத்தேன-என்றும்-யேது ஜ்ஞான விசுத்த சேதச -என்றும் மன ஸூத்தியைப் பேற்றுக்கு பரிகரமாக சொல்லக் கடவது இறே அந்த ஸூத்தி எனக்கு இல்லை -என்கிறார் –ஓர் தூய்மை என்றது –காம குரோத லோப த்வேஷாதிகளிலே ஓன்று குறைந்து அதில் ஸூத்தனாகப் பெற்றிலேன் –ஷம்காதாசித்மாக இல்லையாகவும் பெற்றிலேன் –வாயிலோர் இன் சொல் இல்லை-மனஸ் ஸூத்தி இல்லையானாலும் வாயில் பிரிய வசனங்கள் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை -என்கிறார் –ஓர் இன் சொல் ஆவது – இதற்கு முன்பு ஒருவரை குளிர -என் -என்று அறியேன் –குளிர என்றார் திறத்திலும் அனுகூலமாக ஒரு மாற்றமும் சொல்லியும் அறியேன் –நெடுஞ்சொல்லால் மறுத்த நீசனேன் -என்கிறபடியே
அபிமத விஷயங்களை உகக்கும் போது ஸ்ரவணமாய்த்து இருப்பது –

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன்
அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-5-

தாரித்ரத்தாலே நெருக்குண்டு–ஆரேனும் ஆகிலும் எல்லாரும் கூட எனக்கு ஒரு கால் வாயிலே இடுகைக்கு கேட்டு அது தர வேணும் என்று – முனியே -என்பாரைப் போலே கூப்பிடும் ஆயிற்று – துற்றாகிறது ஒரு கால் வாயிலே அள்ளிவிடுமதாயிற்று –இப்படியே தயா நீயமாம்படி சொல்லிக் காலைக் கட்டினவர்களுக்கு –இடுமின் என்றதே வேண்டியதே தான் -மேலே இரக்க என்றது சொல்லிக் காலைக் காட்டியதைக் காட்டுமே)அவர்களுக்கு இல்லையே –என்னும் போது சொல்லும் வார்த்தையில் கொடுமையை அனுசந்தித்து – நாம் இவனை ஓன்று அபேஷித்து வர இவன் இல்லையே என்ற பாசுரத்தைக் கேட்டு இன்னமும் ஜீவிக்க இருக்குமதில் இத்தனை நஞ்சு பெற்றோம் ஆகில் முடிந்தோம் போம் ஆயிற்று என்று கால தத்வம் உள்ளதனையும் அவன் நெஞ்சு புண் பட்டு கிடக்கும்படி சொன்ன கொடுமையை சொல்லுகிறதாயிற்று –அந்தோ – என்கிறார் ஆயிற்று மேல் வருகிற நலிவை அனுசந்தித்து-

5-க்ருதக்னசெய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-

மைந் நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந் நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந் நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந் நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே   யேத்தீர்களே –11-6-1-

மை மாறாதே நின்றால் போலே ஒத்த-அந்தக் கடலிடத்தே-லோகம் ஒன்றும் இன்றிக்கே –விபூதி அழிகின்றது என்று அழியாமல் நோக்குகைக்காக கடைந்து நெய்யிட்ட திரு வாழியை உடையவன் திரு வயிற்றிலே நெடும் காலம் கிடந்தது –அறிகிறிலீர் – பத்து மாசம் சுமந்ததுக்காக -தாய் -என்னா -நின்றீர் கோளே-உபகார ஸ்ம்ருதி கிடக்க-ஸ்வாராத தேவதையைப் பற்ற வேண்டாவோ-உபகார ஸ்ம்ருதியை விடாதே கொள்ளுங்கோள் –

6-துர்மாநீசதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-

சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்

அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இறே நினைத்து இருப்பது –தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள்-இனிய பேச்சை உடையவர்களாய் இருந்துள்ளவர்கள் உடைய-அகவாய் மயிர்க் கத்தியாய் இருக்கச் செய்தேயும் அன்பு கலந்த இனிய வார்த்தைகளாலே வசீகரிக்க வல்லவர்கள்-ஆதலின் –இன் மொழியார் -என்கிறார் – -மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்-போகிறோம் போகிறோம் என்று இருக்குமே-போகாதே பின்னை வெள்ளாட்டியை இட்டுப் பரிபவிப்பர்கள்-அதற்கும் போகானே பின்னை ஆணை இட்டு எழுப்பிப் பார்ப்பார்கள்-அதற்கும் எழுந்திரான்- பின்னை காலைப் பற்றி இழுப்பார்கள்-இவன் தூணைக் கட்டிக் கொள்ளும்- இப்படியால் அவர்களாலே சிறுமை உறுவர்கள்- பலம் கிடைக்கும் வேளையில் பிறக்கும் சிறுமையை நினைந்து வெறுத்து-அவனை தம் திருவாயால் அருளிச் செய்ய மாட்டாமையால் மற்று ஓன்று -என்கிறார்-

7-ஸ்மர பரவசமாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற
வில்லுக்கு குடிமகனாய்த் திரியும் பாரினாரோடும் கூடுவதில்லை யான்-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட் செய்யுமவன் நான்-

8-வஞ்சனபரசூதனாய் கள்வனாகி-திருமாலை-16-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே-16-

தம்முடைய பூர்வ விருத்தம் அருளிச் செய்கிறார் –சூதாவது –பஸ்யதோ ஹரத்வம்-களவாவது –பர த்ரவ்யத்தை என்னது என்று இருக்கை –பிரமாண விஷயமான பரத்வத்தை இல்லை என்கை –இனி காஷ்ட அபஹாரம் பண்ணினவனுக்கும் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கும் அபஹாரம் ஒத்து இருக்கும்-த்ரவ்ய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-சண்டாள த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்-வசிஷ்ட த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும் த்ரவ்யம் ஒன்றானாலும் ஸ்வ வான்களுடைய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-இத் த்ரவ்யம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ருஹணீயமான ஆத்ம த்ரவ்யம் உடையவனும் சர்வேஸ்வரன் ஆகையாலே தோஷத்துக்கு அவதி இல்லை என்கை –ஆக –களவாகிறது –ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –

சூதாவது-பஸ்யஹோரத்வம் –அதாவது-சத்வர்த்தனாய் இருப்பன் ஒருவன் பர சேஷமாய்க் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு – தர்ம அதர்மங்கள் உண்டு என்று அறிதல் – இவை எல்லாம் பொய் காண் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்ளுகை –

அகவாயில் நினைவு இது வானால் – பின்னை இதுக்கு வர்த்தகராய் இருப்பார் உடன் சஹாவாசம் பண்ணுவது-தூர்தரோடு இசைந்த காலம் – பிராப்தமான சர்வேஸ்வரனை விட்டு அப்ராப்த விஷயங்களிலே அதி பிரவணர் உடன் பொருந்தி போந்த காலம் –இப்படி இருந்த காலத்தை ஸ்மரிக்கையும் கூட அசஹ்யமாய் இருக்கிறது ஆய்த்து இவர்க்கு –இப்படி அனர்த்தப் பட்டு போந்த காலத்துக்கு தொகை இல்லை கிடீர் –ஆத்மாவுக்கு நிலை நின்ற ஸ்வரூபம் ஸ்ரீ வைஷ்ணவ சஹவாசமேயாய் இருக்க அனர்த்த ஹேதுவான ஸ்வ பாவத்தை உடைய வர்களோடு காலத்தை போக்குவதே-பாகவத சஹவாசம் பகவத் விஷயத்தோடு மூட்டி விடுமோபாதி விபரீதர் உடைய சஹவாசம் விஷய பிராவண்யதுடன் மூட்டி விடும் இறே –

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை-ஸ்திரீகள் உடைய
கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு கால் வாங்க மாட்டாத என்னை -ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய ஜன்ம வ்ருத்தங்களாதி அறியான் –கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை – அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை தோற்றும்படி யாய்த்து பார்ப்பது-கண் என்று பேரால் – வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது –-இது தானும் மணி வலை இறே-கண்ணுக்குளே மணியும் உண்டு இறே-அத்தைப் பற்றி வலை என்கிறது –
புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி தான் கிட்டாதே அகல நிற்கும் –அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தோடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன் தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது – இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –வலையுள் பட்டு அழுந்துவேனை –மீண்டு கால் வாங்க ஒண்ணாது-அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை-கிடந்தது உழைக்கும் இத்தனை-விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய் விட்டது –

9-ந்ருசம்சகொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-3-

கொன்றேன் –மடி தடவி விட்டிலேன் –அர்த்தம் கொடு வந்தான் ஆகில்-பின் துடர்த்தி யறக் கொன்று பறிக்கும் – வெறும் கையன் ஆகில் -நான் -அவள் பக்கல் என் கொடு போகக் கடவனாக நீ வெறும் கையே வந்தது என்று சொல்லுவன் -கொல்லுவன்-பல்லுயிரை – அனுதாபம் பிறத்தது இல்லை-பிராயச் சித்த அதிகாரமும் இல்லை –அனுதாபம் உண்டாகில் ஓன்று இரண்டு அளவிலே மீளும் இறே –அப்போது இறே பிராயச் சித்த அதிகாரமும் உள்ளது –இப்போது இற்றை குற்றமாக சொல்லுகிற நீர்-அன்று அது செய்வான் என் -என்ன 

குறிக்கோள் ஓன்று இலாமை யினால் – தேஹாத்ரிக்தமாய் இருப்பதோர் ஆத்ம வஸ்து உண்டு –இது செய்யில் நரக அனுபவம் தப்பாது ஒன்றாதல்-அன்றிக்கே-இத்தை உடையான் ஒருவன் உளன்-அவன் சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருப்பான் ஒருத்தன்-அவனுக்கு இது அசஹ்யமாய் இருக்கும் என்று புத்தியில் படாமையால் செய்தேன் –அவனைப் பார்த்தல்-
நாம் நின்ற நிலை இது என்று ஆராய்தல் செய்யாமையாலே-ஒரு தலை அறியிலும் பர ஹிம்சை பிரவ்ருத்தியான் இறே –

விஷயார்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ணுகிற நாளில் முன்னடி தோற்றாமையாலே
பர ஹிம்சையைப் பண்ணிப் போந்தீர் ஆகில்-பின்பு த்ரவ்யங்களையும் பெற்று
அபிமத விஷயங்களும் கை புகுந்து நீரும் அவளுமாய் ரசித்து இருக்கிற அளவிலே
தான் ஆர்த்த விஷயத்தில் ஐயோ -என்றீரோ என்ன –காத்திகை புதியதுக்கும் நாம் இட வேணும் என்னுதல்-இவன் ஜீவிக்க வேணும் -என்னுதல்-செருக்காலே -யாதல்-இட்டறியேன் என்பது-அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே –(உரைத்தது இல்லை என்று சொல்லாமல் –உரைத்து அறியேன் என்பதால் இந்த வியாக்யானம்)இனிதாக –ஒருவன் அர்த்தித்து வந்தால் இரப்பாளனாய் வந்தவனுக்கு குறைவறத் தரப் பெற்றிலேன் என்று ஆறுதலாக வார்த்தை சொன்னான் ஆகில் இவன் தான் செய்வது என்-தன் வெறுமையால் அன்றோ தாரா விட்டது -என்று அவனும் ஆறிப் போம் இறே-அங்கன் அன்றிக்கே நாமும் நம் தாரித்ரயமுமாய் பட்டது படாதே இவன் வாயில் வார்த்தை கேட்க்கைக்கு என் செய்ய அபேஷித்தோம் -என்று உள்ளதனையும் நெஞ்சு புண் படும்படி யாயிற்று இல்லை என்பது –

10-பாபிஷ்டஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை–என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக;-நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ? முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,
அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

கதமஹமிதஎன் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்னான் செய்கேன் –உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்-யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்--நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம் மூன்றாலும் இவர்க்குண்டான மனோ பாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று; க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி.-இங்கே, “என் நான் செய்கேன்’ என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி அநுசந்தேயம்-

துக்க ஜலதேர பாராதுத்ததீர்ண -(து:க்க ஜலதே:அபாராதுத்தீர்ணஸ்)
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி-அநேகம் வேல்களை ஒருமுகமாகச் சேர்த்து வைத்தால் போலே-ஓராளும் ஒரு நோக்கும் நேராய்-
அவ்வளவு அல்லாத பரப்பை உடைத்தான கண்கள் இமையோடு இமை பொருந்துகிறன வில்லை -பிரிவாற்றாமையால் உண்டான துக்க சாகரத்திலே ஆழ்ந்து –

தவ பரிசரேயம் சரணயோ –உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே சாஷாத் கரித்து என்றோ நான் உன்னைக் கிட்டுவது எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –இப் பாட்டு ப்ரஹ்மாதிகளை சொல்கிறது என்பாரும் உண்டு -மேலே அவர்களை சொல்லுகையாலே அது உசிதம் அன்று –குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;–நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப்
பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –

பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-9-

பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே
பாபங்களையே பண்ணி-பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய
பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –மற்றேல் ஓன்று அறியேன் –-ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை-என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக; நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ?
முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-2-

மான் ஏய்ந்து இருக்கிற நோக்கை உடைய –அகவாய் நஞ்சாய் இருக்கச் செய்தேயும்
இவனை ஒழிய செல்லாதாரைப் போலே இருக்க நோக்குமவர்கள் ஆயிற்று –அகவாய் ஆராய்வதற்கு  ஈடான அளவில்லையே இவனுக்கு – கார்ய புத்யா ஆராயா நிற்கச் செய்தேயும் -அநந்ய ப்ரயோஜனைகளாக நோக்குகிறார்களாகக் கொண்டு அதிலே துவக்குண்ணும் -ஆயிற்று –நாண் மடம் அச்சம் என்கிற இவற்றில் மடப்பத்தை உடையாராய் இருப்பர்கள் இறே -அத்தாலே சொல்லுகிறது-சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்துக்கு உள்ளது எல்லாம் தங்களுக்கு உண்டாக நினைத்து இருப்பது-சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு
லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே –
அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன் –ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு -அவ்விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

கானமும் வானரமும் விடுமா இவற்றுக்கும் ஓலக்கம் கொடுக்கிறவனுக்கு நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுக்கை ஏற்றமோ–முடி சூடினவனை தட்டியிலே இருந்த படி சொல்லுகை ஏற்றமோ-திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இறே –-அநாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே ஜனனிக்கு ‘தாய்க்கும் -மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் ஜென்மம்;சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
ஷூத்ர ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாது காண்’ என்று ஒருவன் சொன்னால்,அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்;
சல மதி -அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது-‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்;
அஸூயா பிரசவபூ-ஹிதம் – நன்மை சொன்னவனுடைய-உத்கர்ஷம் – உயர்வினைப் பொறாதவன்;
க்ருதக்ந -உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்;
துர்மாநீ- அபகாரங்களைச் செய்து போதலேயன்றி -ஹிதம் -நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்;
ஸ்மர பரவச -அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
வஞ்சன பர -புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில் நின்றும் அபகரிப்பவன்;
ந்ருசம்ச ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றி யிருப்பவன்;
பாபிஷ்ட்ட- இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’பாபத்திலே யாயிற்று ஊன்ற அடியிட்டு இருப்பது என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்-‘இது ஆளவந்தார் அருளிச் செய்ததே யாகிலும், நான் என் வாயால் இப் பாசுரம் சொல்ல மாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன,‘நம் இராமாநுஜனை யுடையை யாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச் செய்தாராம்)ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,-அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதி யில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி-‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

———-

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –சர்வேஷமேவா  லோகாநாம் பிதர  மாதர  ச மாதவ -என்றும் –உலக்குக்கோர் முத்தைத்  தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே-ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –இருக்குமவன் -என்னவுமாம் –க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

யாளும் எம்பிரானுமாய் – அடிமை கொள்ளக் கடவ என் ஸ்வாமியாய் – உக்தமான ஜ்ஞான கார்யமாகக் கொண்டு – கைங்கர்ய ருசி பிறந்தால் -அடிமை கொள்ளுகைக்கு ஸ்வாமி யுமாய் -என்கை – இவை தான் சர்வவித பந்துவுமாய் இருக்கிற படிக்கு உப லஷணம் –மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ர்த் கதிர் நாராயணா -என்றும் –-எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கா சென்னுடை வாழ் நாள் –என்றும் சொல்லக் கடவது இறே-ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து –ஒன்றுக்கு ஓன்று நெடுவாசிப் பட்டு –இப்படி அசங்யாதமான ஜன்மத்தைத் தவிர்த்து-ஆத்ம ஸ்வரூபம் ஏகமாய் இருக்க -ஒருத்தனுக்கு ஒருத்தன் உடைய ஜன்மம் ப்ராப்யமாயும்-அவன் தனக்கே ஒருவனுடைய ஜன்மம் த்யாஜ்யமாயும் இறே இருப்பது –ஓர் ஓர் ஆகாரத்திலே ஒத்தும் -ஓர் ஓர் ஆகாரத்திலே வைஷம்யப்பட்டும் இருக்கும் ஜன்மங்கள் என்றுமாம் –ஜ்ஞானக ஆகாரதயா -கர்மத்தாலே தேவ  திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபத்தாலே விஷமமாயும் இருக்கை–மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை -என்னக் கடவது இறே-

நம்மை ஆட்கொள்வான் – நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை -நித்ய ஸூரிகளைக்  கொள்ளும் அடிமை கொள்ளுகைக்காக – ஜன்மங்கள் தோறும் உடன்கேடாய் போந்ததாகையாலே திரு உள்ளத்தைக் கூட்டி –நம்மை -என்கிறார் –-முத்தனார் –அஸ்பஷ்ட சம்சார கந்தரானவர்-முத்தர் -என்று ப்ரத்வம்ஸா பாவத்தைச் சொல்லுகிறது அன்று –
தன்னுடைய ஹேய பிரத்யநீகை ஸ்வாபாவிகம் ஆகையாலே ப்ராக பாவத்தைச் சொல்லுகிறது-முகுந்தனார் – முக்தி பூமி ப்ரதானவர் -இத்தால் நித்யர் வ்யாவ்ர்த்தியைச் சொல்லுகிறது-ஆக –இரண்டாலும் -விரோதி நிவ்ர்த்தி ஹேதுவான -ஜ்ஞான சக்தியாதி பூர்த்தியையும் மோஷ ப்ரதத்துவதுக்கு அடியான ஔதார்யத்தையும் -சொல்லிற்று ஆய்த்து

புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே – சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி – நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ – ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ – கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க –
துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –ஏழை நெஞ்சமே – பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே – ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்-நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –ஏழையர் -அறிவிலோர்-

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading