ஸ்ரீ கஜேந்திர ரக்ஷண பர சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-56-57-58-59-

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந
ஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்
தேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந
–56-

கஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது

சம்வஹத்ப்ய–திருவடி வருடா நின்ற

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய –ஸ்ரீ தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்

சரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை

அபஹ்ருத்ய–இழுத்துக் கொண்டும்

ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஸ்ரீ ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்

லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்
விளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்

ஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்

ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்

ஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்
நம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –

பஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து
கண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –

ஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கேட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்

ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து
அங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி
ஸ்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற
திருவடிகளைப் பிடியா நின்றுள்ள ஸ்ரீ பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –
ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-
இப்படி வ்யாகுலரான ஸ்ரீ பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –

————–

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-

கரி ப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்

அஸ்வீக்ருத ப்ரணீத மணி பாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்

கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று ஸ்ரீ திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –

அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்

பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற

பகவத் த்வராய நம–ஸ்ரீ எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்

நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –

நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று
ஸ்ரீ கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது
ஸ்ரீ சேனை முதலியார் கை கொடுக்க அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும்
அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க அத்தை அங்கீ கரியாமலும்
அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே
வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள ஸ்ரீ பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி
த்வரித்த அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

————–

யம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந
ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்
கிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே
தேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-

ஸ்ரீ ரெங்க பந்தோ

கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்

யம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு ஸ்ரீ திருவடியை

யம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –

அஸக்ருத்-ஒழிவில்லாமல்

விஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற

தியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்

மந்தாரம் –வேகம் அற்றதாக எண்ணா நின்றவராய் இருந்தும்

மந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி

த்வம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்

தம் அத்யஷிபஸ் –அந்த ஸ்ரீ கருடனை வெருட்டி ஒட்டினீர்

மிஞ்ச -அன்றியும்

தம் தார்ஷ்யம் -அந்த ஸ்ரீ கருத்மானையும்

உதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்

இந்தச் செய்தியை ஆராயும் இடத்து

பிரணமதி ஜனே தி தசா –ஆஸ்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை

காந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –

ஸ்ரீ பெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –
ரக்ஷண பாரிப்பு இருந்தபடி-

ஸ்ரீ பெரிய திருவடி வேகத்தை நிரூபித்து
தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –

அப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய திருவடி வேகமும் போறாதே
அவரையும் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்
ஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து
பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு ஸ்ரீ தேவர் எழுந்து அருளிற்று –

இப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை
பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் – படியாய் அன்றோ இருந்தது என்கிறார் –

———————-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-

ஸ்ரீ ரெங்கேசய

அநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே

திக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு

ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை
அடைவு கெட அணிந்து கொண்டவராய் –

வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்
விசாலத்தோடு கூடியவராய்

ஆஜ கந்த-எழுந்து அருளினீர்

இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்

சரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்

வன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்
பொலிந்தன–எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம்

பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை
அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின
தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading