சங்கு சக்ர கதா முக்ய திவ்யாயுத கணா ஸதா ஸ்ரீச ரஷா விதாநாய சக்த்யா ஜாக்ரத ஜாக்ரத
திவ்யாயுத கூட்டங்களே நீங்கள் எப்பொழுதும் திருமாலின் ரக்ஷணத்தைச் செய்வதற்காக சக்திக்குத் தக்கவாறு மிகவும் ஜாக்கிரதை யுள்ளவர்களாக இருங்கள்
தத கடகடா சப்த சமா கர்ணந தத்பர ஆஜகாம வ்ரஜ ஜந ததர்ஸ ச மஹா த்ருமவ்
அப்பொழுது கடகட என்ற ஓசையைக் கேட்டு பரவசர்களான இடைச்சேரி ஜனங்கள் அங்கே வந்தார்கள் -பெரிய இரண்டு விருக்ஷங்களைப் பார்க்கவும் பார்த்தார்கள்-
வ்யாக்ராயமய தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யாமளார்ஜுனயோர் மத்யே ஜகாம கமலேக்ஷணே
அந்த யசோதைப் பிராட்டி வீட்டுக் காரியங்களில் நினைவுடன் இருக்கும் பொழுது தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு மருதமரங்களின் நடுவிலே சென்றார்-
ந பிபந்தி நவை அஸ்நந்தி தேவா ஏதத் அம்ருதமேவ த்ருஷ்டா த்ருப்யந்தி
தேவர்கள் சாப்பிடுகிறார்கள் இல்லை அருந்துவதுமில்லை -இந்த அம்ருதத்தையே பார்த்துக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்
யோ அந்யதா ஸந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மா அபஹாரிணா
எவன் வேறாக இருக்கிற ஆத்மாவை அதற்கு மாறாக எண்ணுகிறானோ -பகவத் சேஷமான இவ் வாத்மாவை ஸ்வ தந்த்ரன் என்றும் எண்ணுகிறானோ -ஆத்மாவை அபஹரித்த அந்தத் திருடனால் என்ன பாபம் தான் செய்யப்படவில்லை –
யதத விபச்சித ஹே கௌந்தேய புருஷஸ்ய அபி இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரஸபம் மன
ஓ அர்ஜுனா பக்தி செய்ய முயற்சிக்கின்ற வித்வானாய் இருக்கிற புருஷனுடைய மனத்தை கெடுக்கும் ஸ்வ பாவமுள்ள இந்திரியங்கள் பலாத்காரமாக இழுக்கின்றன –
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவம்ஸ சமிந்ததே விஷ்ணோர் பரமம் பதம்
வியாபகனான ஈஸ்வரனுக்கு யாதொரு உத்க்ருஷ்டமான ஸ்தானமோ அந்தப் பரம பதத்தை மேதாவிகளும் ஸ்தோத்ரம் செய்வதையே ஸ்வ பாவமாக யுடையவர்களுமானவர்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடின வராய்க் கொண்டு அடைகிறார்கள் –
அஸ்ய காயஸ்ய அந்த யத் தத் பஹிர் பவேத் யதி நாம அயம் லோக தண்ட மாதாய ஸூந காகாந் ச வாரயேத்
இந்த சரீரத்தினுடைய உள்ளே எது இருக்கிறதோ -அது வெளியிலே இருக்குமே யானால் -இந்த உலகமானது -ஜனங்கள் -தடியெடுத்து நாய்களையும் காக்கைகளையும் துறத்தும் –
தைவீ ஹ்யேஷா குண மயி மம மாயா தூரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே.–கீதை -7-14-
மம – என்னுடைய,
ஏஷா -இந்த,
குணமயீ – முக்குண ரூபமான,
மாயா – பிரக்ருதியானது,
ஹி – யாதொரு காரணத்தால்,
தை வீ – கிரீடையில் ப்ரவர்த்தித்த என்னாலுண்டு பண்ணப் பட்டதோ,(அக் காரணத்தால்)
துரத்யயா -தாண்டக் கூடாதது.
மாமேவ – ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விஸிஷ்டனான என்னையே,
யே – எவர்கள்,
ப்ரபத்யந்தே -சரண மடைகின்றார்களோ,
தே – அவர்கள்,
ஏதாம் மாயாம் – இந்த மாயையை,
தரந்தி – நிவ்ருத்தித்துக் கொள்கிறார்கள்
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிகோபம
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா
மீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஓத்ததும் எல்லாமே ஆபரணங்களால் கண்ணெச்சில் வாராமல் அலங்கரிக்கைக்குத் தகுந்ததாய் இருக்கும் திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காக அலங்கரிக்கப்படவில்லை –
ப்ரலம்ப பாஹும் ஆயாம துங்க உரஸ் ஸ்தலம் உந்நஸம் ஸ விலாஸ ஸ்மிதாதாரம் முக பங்கஜம் பிப்ராணம் -ஸ்ரீ விஷ்ணு -5-17-20-
நீண்டு தொங்குகிற திருக்கைகளை யுடையவரும் விசாலமாயும் உன்னதமாயுமான திருமார்பை யுடையவரும் -உயர்ந்த திரு மூக்கை யுடையவரும் -விசாலத்தோடு கூடிய திரு முறுவலுக்கு ஆதாரமான தாமரை போன்ற திரு முக மண்டலத்தை பரிப்பவருமான கண்ணனை அக்ரூரர் ஸேவித்தார்-
மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ் ருத்
தாயாய்த் தந்தையாய் உடன் பிறந்தவனாய் ப்ராப்யமாய் ரக்ஷகமாய் ஸ்நேஹிதனாய் இருக்கிறவன்-
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத
க்ருதஞ்ஞஸ்ய பஹுஞ்ஜஸ்ய லஷ்மணோ நாம நாமத-அயோத்-3-20-
உபகார ஸ்மரணமுடையராயும் -அல்ப உபகாரத்தையும் பஹுவாக நினைப்பவருமாய் இருக்கும் இந்த இராமபிராற்கு நான் பின்பிறந்த தம்பி -அவருடைய கல்யாணம் குணங்களால் தூண்டப்பட்டு கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இருக்கிறேன் -பேரினால் லஷ்மண என்றும் ப்ரஸித்தன்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பர ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர-தைத்ரிய-நாராயண அநுவாகம் -11-
ஸ்ரீ மந் நாராயணனே பர ப்ரஹ்ம மாவாகவும் இருக்கிறான்-பரதத்வத்தின் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே – பரமாத்மாவின் நாராயணனே
ஸர்வேஷாம் தர்மாணம் அகில வைஷ்ணவ விதி உத்தம விஷ்ணு பகவான் பக்தாந் ஆத்ம சரீர வத் ரக்ஷதே
எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மமானது உயர்ந்தது -ஸர்வ வியாபகரான ஸ்ரீமந் நாராயணன் பக்தர்களைத் தமது சரீரம் போலவே காப்பாற்றி அருளுகிறார்-
யத்ர அஷ்டாக்ஷர ஸம் ஸித்த மஹா பாக மஹீயதே
தத்ர வியாதி துர்பிஷ தஸ்கரா ந சஞ்சரிஷ்யந்தி
எந்த தேசத் தில் திருஅஷ்டாக்ஷர மந்த்ரார்த்த சித்தியை யுடைய மஹா பாக்யமான்கள் வஸிக்கின்றார்களோ -கொண்டாடப்படுகிறார்களோ -அங்கு வியாதி துர்பிக்ஷம் திருடு முதலியவை நடமாடுவதில்லை -பகவத் ஏக போகத்வ விரோதியான விஷய ப்ராவண்யமும் -பகவத் ஏக உபாயத்வ விரோதியான ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமடியாக வரும் உபாய துர் பிஷை -அநந்யார்ஹ சேஷத்வ விரோதியான ஆத்மபஹாரமான தஸ்கரம்-
யத்ர அபூஜ்யா பூஜ்யந்தே யத்ர பூஜ்யா அவமாநிதா
தத்ர துர்பிக்ஷம் மரணம் பயம் த்ரீணி விவர்த்தந்தே
எங்கு பூஜிக்கத் தகாதவர்கள் பூஜிக்கப் படுகிறார்களோ -எவ்விடத்தில் பூஜிக்கத் தக்கவர்கள் அவமதிக்கப் படுகிறார்களோ அங்கு துர்பிக்ஷம் என்ன மரணம் என்ன பயம் என்ன இம் மூன்றுமே மிகவும் விருத்தி அடைகின்றன –
ந ஸ்ருண்வந்தி பிது புத்ரா நஸ்நுஷா ந ஸஹோதரா ந ப்ருத்யா ந களத்ராணி அதரோத்தரம் பவிஷ்யதி -பாரதம் மோக்ஷ தர்மம் -42
கலியுகத்தில் தந்தையின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள் -நாட்டுப் பெண்களும் மாமனார் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-வேலைக்காரர்கள் எஜமானின் வார்த்தைகளை புத்திரர்கள் கேட்கமாட்டார்கள்-கணவனின் வார்த்தையை வேலைக்காரர்கள் கேட்கமாட்டார்கள்-கீழ் மேலாக மாறும்படியாக ஆகப் போகின்றது –
மேகஸ்யாமம் மஹா பாஹும் ஸ்திரஸ்த்வம் த்ருடவ்ரதம் ஜகதஸ் சோக நாஸநம் ராமம் கதா த்ரஷ்யாமஹே-அயோத்யா -2-8-
நீருண்ட மேகம் போலோ கருத்தவரும் -நீண்ட திருக்கைகளை யுடையவரும் -நிலையுள்ள பலத்தை யுடையவரும் ஆஸ்ரித ரக்ஷண விரதத்தில் ஊற்றமுள்ளவரும் உலகத்தின் வருத்தங்களைப் போக்கடிப்பவருமான ராமபிரானை எப்போதும் பார்க்கப் போகிறோம் -அயோத்யா வாசிகளின் மநோ ரதம்
கபிபிஸ் வ்யாப்தம் க்ருத்ஸ்னம் ப்ரகார பரிகாந்தரம் தீநா ராக்ஷஸா வனரீ க்ருதம் ப்ரகாராம் தத்ரு ஸூ –யுத் -41-97-
குரங்குகளால் சூழப்பட்டதான ஸர்வமான மதிள் அகழி இவற்றின் பிரதேசத்தை தைர்யமற்ற ராக்ஷஸர்கள் வாணர்களால் செய்யப்பட்டதோ போல் இருக்கிற பிரகாரத்தை கண்டார்கள் –
நஹி பலான ஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதவ் ஸ்திதம் மஹாத்மாநம் பகவத் அந் யஸ்ய கஸ்சித்
ரக்ஷண காரியத்தில் நிலை நின்றவரும் -ஸமஸ்தமானவர்களுக்கும் ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் காப்பாற்றும் திறமையானது இல்லை என்பது ப்ரஸித்தம்
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யா அர்ச்சிதும் இச்ச₂தி ।–
தஸ்ய தஸ்ய அசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம் யஹம் ॥—7-21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்-
துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் இயம் ச அஸி தேஷணா –ஸூந்தர-16-5-
சக்ரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த ஸ்வ பாவத்தையும் வயஸ்ஸையும் நடத்தையும் யுடையவளாயும் சமான குணத்தோடும் ராஜ லக்ஷணத்தோடும் கூடினவளாயும் இருக்கிற விதேக தேசத்து அரசனான ஜனகராஜனின் திருமகளான பிராட்டிக்குப் பெருமாள் தகுந்தவர் -அவருக்கு கறுத்த கண்களை யுடையவளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-
யா புரா பூதைர் அபி ந சக்யா த்ரஷ்டும் ராஜ மார்க்க கதா ஜநா தாம் ஸீதாம் அத்ய பஸ்யந்தி -அயோத்யா –38-8-
எந்த ஸீதாப்பிராட்டி முன்பு ஆகாச சஞ்சாரிகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ -ராஜவீதியிலுள்ள ஜனங்கள் எல்லாமே அந்த ஸீதாப் பிராட்டியை இப்போது பார்க்கிறார்கள் –
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷
சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்-அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது-
சாபம் ஆநய ஹே சவ்மித்ரே ஆஸீ விஷோபமாந் சராந் ச சாகரம் சோக்ஷயிஷ்யாமி ப்லவங்கமா பத்ப்யாம்யாந்து -யுத்த -21-22-
ஓ லஷ்மணா வில்லைக் கொண்டு வா -ஆஸீ விஷத்துக்கு ஒப்பான பாணங்களையும் கொண்டு வா -சமுத்திரத்தை வற்ற அடிக்கப் போகிறேன்-வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும் –
அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-14-
அவாப்த சமஸ்த காமனாதலால் ஒன்றிலுமே ஆதாரவில்லாதவன் -ஆகையால் எல்லா உலகையும் திருணமாக நினைத்து மாவனமாக பரமாத்மா இருக்கிறான் –
ஜிதந்தே ஹே புண்டரீகாக்ஷ விஸ்வ பாவந ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வஜ தே நம அஸ்து –ஜிதந்தா ஸ்தோத்ரம்
ஓ செந்தாமரைக் கண்ணனே -ஜகத் காரணனே -இந்திரியங்களுக்கு ஈஸ்வரனே -உனக்கு சேஷபூதன் பரதந்த்ரன் -இத்தால் கைங்கர்யத்தில் ஸ்வார்த்தா நிவ்ருத்தி சொல்கிறது -புருஷோத்தமனே சேதன உஜ்ஜீவனத்துக்கு முற்பாடானாய் கிருஷி பண்ணுபவனே -உனக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் –
லஷ்மணநேந ஈரிதம் வச ஸ்ருத்வா ஸ வாநரேந்த்ர ததா ராகு க்ரஸ்த அம்சுமாநிவ அத்யாத்தம் நிஷ் ப்ரப ஆஸீத் -ஸூந் -35-36-
இளைய பெருமாளால் சொல்லப்பட்ட வார்த்தையைக் கேட்டு அந்தப் ஸூக்ரீவ மஹாராஜர் அப்போது ராகுவினால் பீடிக்கப்பட்ட சந்திரன் போல் வாசா மகோசரமாய் இருக்கும்படி ஒளி இழந்தவனாய் ஆனார் –
மே ஹ்ருத்ய வயஸ்ய அஸி நவ் ஸூகம் துக்கம் ச ஏகம் ஹி இதி வாக்யம் ஸூக்ரீவ ராகவம் ப்ரஹ்ருஷ்டவத் உவாஸ -கிஷ்கிந்தா -5-35-
எனக்கு மனம் ஒப்பிய தோழனாய் இருக்கிறாய் -நம் இருவருக்கும் ஸூக துக்கங்கள் ஒன்றே என்கிற வாக்கியத்தை ஸூக்ரீவ மஹாராஜர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து ஸந்தோஷம் உள்ளவராய்ச் சொன்னார் –
அத்ருஷ்ட பூர்வ வ்யஸனா யசஸ்விநீ ராஜபுத்ரீ தேந துக்கேந ருததீ மாம் கிஞ்சித் நைவ அப்ரவீத் -அயோத்யா -58-35-
காணப்படாத முன்பு வ்யஸனத்தை வுடையவளும் புகழுமுடையவளான ஜனகராஜன் திருமகளான பிராட்டி அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டே என்னைக் குறித்து ஒன்றுமே வார்த்தை சொல்ல வில்லையே -என்று ஸூமந்திரர் solkiraar சொல்கிறார் –
த்வயக்ஷர து ம்ருத்யு பவேத் த்ரயக்ஷரம் ப்ரஹ்மணஸ் பதம் மம இதி த்வயக்ஷர ம்ருத்யு நமம இதிச ஸாஸ்வதம்
இரண்டு அக்ஷரங்களோ என்றால் ம்ருத்யு சப்த வாஸ்யமான ஸம்ஸாரமாயிருக்கும் -மூன்று அக்ஷரங்கள் ப்ரஹ்ம சப்த வாஸ்யமான ஆத்மாவினுடைய ஸ்வரூப யதாத்ம்ய பரமாய் இருக்கும் -மம என்கிற இரண்டு அக்ஷரங்களும் நாசகமானது -ந மம என்கிற மூன்று அக்ஷரங்களும் நிலை நின்ற ஸ்வரூபம் –
கதாசித் சகடஸ்ய அத சயாந மது ஸூதந ஸ்தந் யார்த்தீ சரணவ் ஊர்த்வம் சிஷேப ப்ரருரோத ஹி -ஸ்ரீ விஷ்ணு -5-6-1-
ஒரு கால விசேஷத்தில் -அதாவது தாயும் கூட இல்லாத சமயத்திலே வண்டியினுடைய கீழே சயனித்துக் கொண்டிருந்த மதுவை நிரசித்த கிருஷ்ணன் முலைப்பால் அபேக்ஷிக்கிறவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தார் -அழுதார் என்று ருஷி ஸந்தோஷிக்கிறார்-
வித்யயா விநயா வாப்தி ஸா சேத் அவிநயாவஹா ஸ்வ மதாரி கர தாயாம் கிம் குர்ம கஸ்யவா ப்ரூம
வித்யையினால் விநயத்தைப் பெற வேண்டும் -அவ்வித்யையோ என்றால் அவிநயத்தைக் கொடுப்பதாய் இருந்தால் -தன் தாயாரே விஷத்தைக் கொடுப்பாளே யானால் என்ன செய்வோம் -யாரிடம் சொல்வோம் –
“அர்ஹஸேச கபி சிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண
விதிதாத்மநா” சுந். 36 : 10. பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.-எதனால் அறியப்பட்ட ஸ்வ பாவத்தை யுடைய அப்பெருமாளாலே அனுப்பப் பட்டாயோ அதனால் ஓ வானர உத்தமனே என்னுடன் ரஹஸ்யமான சமாசாரங்களைச் சொல்லு வதற்கும் தகுதியுள்ளவன் –
“சம்அபிபாஷிதும்” என்றதிலே யுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்-நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் – என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் சர்வ காம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.-நான் அங்கு ஸ்ரீ ராம பிரானுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக் கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக் கூடியதாய் இருந்தது.
த்யாயதாம் பும்ஸாம் அபவர்க்க ப்ரத ஹரி சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் ஆநு ஷங்கிகாந் போகாந் ச ததாதி –
த்யானம் செய்கிற புருஷர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் பிரான் சரீரத்தில் ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன இவை முதலான கூட வரும் போகங்களையும் கொடுக்கிறார் –
“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ் ஸுகம் தேவி த்வத் திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது.-ஓ தேவியே தேவரீருடைய திருக் கண்களாலே கடாக்ஷிக்கப் பட்ட புருஷர்களுக்கு சரீர ஆரோக்யம் என்ன ஐஹிக ஐஸ்வர்யம் என்ன சத்ரு பஷங்களின் ஜயம் என்ன ஸூகம் என்ன இவைகள் கிடைக்கத் தகாதவைகள் அல்ல –
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷
சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம் முதிர்ந்த பழுத்த ஆசையே காமம் இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது-
ந குரூணாம் அக்ரத வக்தும் ந ஷமம் கிம் ப்ரவீஷி விரஹ அக்னிநா தக்தாநாம் குரவ கிம் கரிஷ்யந்தி ஸ்ரீ விஷ்ணு -5-6-27-
நம்முடைய பெரியோர்களுடைய முன்பு மதுரைக்கு எழுந்து அருளுகிற கண்ணனைத் தடுக்கச் சொல்வதற்கு தகுந்தது அன்று-என்று எதற்காகச் சொல்கிறாய் -விரஹ அக்னியால் தஹித்த நமக்கு பெரியோர்கள் என்ன செய்வார்கள் —அன்னை என் செய்யில் என்-5-3-6-–கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு சைந்ய பிரதாபிந:”-என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.-“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.
யத்ர ருஷயஸ் ப்ரதமஜ யே புராணா-யஜுர்-அச்சித்திரம் – -யாதொரு பரம பதத்தில் சர்வத்தையும் சாஷாத்கரிக்க வல்லவர்களான யாதொரு நித்ய ஸூரிகள் அநாதி ஸித்தர்களாயும் அநேக காலமானாலும் நூதனமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் யுடையவர்களாயும் இருக்கிறார்கள் –முன்னை அமரர்—5-3-6--“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
கௌசல்யா லோக பர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மம அர்த்தே
சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56. என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.-விஸால மனஸ்ஸை யுடைய கௌசல்யா தேவிமார் உலகங்களுக்கு நாதனான எவரைப் பெற்றாரோ அவரை என் நிமித்தமாக ஸூகத்தை கேள் -தலையால் நமஸ்காரமும் பண்ணு-இத் திருவாய்மொழியை-5-3-7- ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க, ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று, ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார். “கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே, ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.
சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.-சமுத்ரத்திலே மிதக்கின்றதும் களைப்பை அடைந்ததும் உடைந்த ஓடம் போலே “ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழி தான் இருப்பது;
அஹம் உபஸ்தேயை ஈத்ருஸை விவ்ரை யத் உபஸ்தித மம் ஏஷ அதுலா ஹ்ரீஸ் பவந்த மே ப்ரஸீதந்து –ஆரண்ய-10-9-
நான் வந்து அடையத் தகுந்த இப்படிப்பட்ட பிராமணர்களால் நான் அடையப்பட்டேன் என்பது எனக்கு இது மிகவும் லஜ்ஜையாய் இரா நின்றது -நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும் -என்று பிரார்த்தித்த படியைச் சொல்கிறார்-
கோவிந்தேதி யத் அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் ந அபஸர்பதி -பார உத்யோ -58-22-
திரௌபதியானவள் வெகு தூரத்தில் வசிக்கிற என்னை கோவிந்தா என்று அழுதாள் என்பதை யாதொன்று யுண்டோ அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போல் என் மனஸ்ஸின் நின்றும் நீங்கவில்லை –
யஸ் அசவ் மாம் நிவர்த்தயிதும் சித்ரகூடம் உபாகத ஸிரஸா யாஸத தஸ்ய வசனம் மயா ந க்ருதம் யுத்த -24-19-
என்ன இந்தப் பரதாழ்வான் என்னை திருப்பி அழைத்துக் கொண்டு போவதற்கு சித்ரகூட பர்வதத்துக்கு வந்தானோ -தலையாலே இரங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தையானது என்னால் செய்யப்படவில்லை —அடிசேர் முடியினர் ஆகி –-தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே,-பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ?
ந ச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள–அயோத்யா -53-31-
ராகவ! – ரகு வம்சத்தில வதரித்த ஸ்ரீ ராமனே !
த்வயா – உம்மாலே,
ஹீநா – ரஹிதையான,
ஸீதா – ஸீதாதேவி,
ந ச – பிழைக்க மாட்டாள்,
அஹமபி -நானும்,
ந ச – பிழைக்க மாட்டேன்,
அபி ஜீவாவ :- பிழைத்தோமானால்,
ஜலாத் – ஜலத்தினின்றும்,
உத்ருதெள – எடுக்கப்பட்ட,
மத்ஸ்யாவிவ – மீன்கள் போல,
முஹுர்த்தம் – முஹுரத்த காலமே(ஜீவிப்போம்)
ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பலபரார்த்தன
மாம் நயேத் யத் காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –ஸூந்தர -9-30-
சத்ருக்கள் பலத்தை ஒழிப்பவரான பெருமாள் கங்கையை பாணங்களாலே நெருங்கினதாகச் செய்து என்னைக் கொண்டு போவராகில் அந்தப்படி செய்வதும் தான் அந்தப் பெருமாளுக்கு சமானமாக ஆகும்
ராமஸ்ய தயிதா நித்யம் பார்யா பிராண ஸமா ஹிதா -சங்ஷேப இராமாயண
ராமனுக்கு அதிபிரியையும் எப்பொழுதும் மனதில் தரிக்கத் தகுந்தவளும் உயிருக்கு நிகரானவளும் நன்மைகளிலேயே ஊக்கமே கொண்டவளுமான சீதாப் பிராட்டியார்
யாம் மடல் ஊர்ந்தும்--செய்யக் கடவது அல்லாததனைச் செய்தே யாகிலும். என்றது,
“சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:
தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30. “என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம்,
மடல் ஊர்ந்தே யாகிலும் என்றபடி.
யஸ் சமாஷரை சதுர்ப்பிர் பாதைஸ் மஹரிஷிணா கீத ஸ்லோகத் வமாகத ச அநு வ்யாஹரணாத் ஸோக -பால-2-40-
எந்த ஸ்லோகமானது சமமான அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்களுடன் வால்மீகி மஹரிஷியினால் சொல்லப்பட்டதாய் ஸ்லோக லக்ஷணங்களுடன் கூடியதாக ஆனதோ அதுவானது சோகத்துக்குப் பிறகு சொல்லி இருப்பதனால் சோக வேகத்தினால் சொல்லினது –
“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.
“விஷஸ்ய தாதா--இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே--கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?-சஸ்த்ரஸ்ய வா-விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?” ராவணனுடைய வீட்டில் எனக்கு விஷத்தைக் கொடுக்கிறனாகவோ ஆயுதங்களைக் கொடுக்கிறவனாகவோ யாரும் இல்லை–வி்ஷஸ்ய தாதா –விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்-சஸ்த்ரஸ்ய வா –ஆயுதத்தை யாவது.வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-இராக்ஷசனுடைய வீட்டில்.இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.-5-4-ஊரெல்லாம் துஞ்சி –
“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்ட வுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்-
“புல்லேந்தீவர பத் ராபம் சதுர் பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம் ஜாதம்
துஷ்டாவ ஆநக துந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.–ஆநக துந்துபி-வஸூ தேவர் –காவி சேர் வண்ணன் –அலர்ந்த கரு நெய்தல் இலை போன்ற தேஜஸ்ஸை யுடையவரும் நான்கு திருக் கரங்களைக் கொண்டவரும் -ஸ்ரீ வத்ஸ மருவைத் திருமார்பில் யுடையவருமான அந்தக் கண்ணனை நன்றாகப் பார்த்து வஸூ தேவர் ஸ்தோத்ரம் செய்தார்
மன ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி
முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.-நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் – இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக் கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,-அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.
“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே,
எடுத்து விட்டுப் பொருகையும் தமக்கே பணியா யிருக்கும்.
பிரஹர்த்தாச-அடிப்பவர்” –-தூசித் தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதா யிருக்கும்.
சேநா நய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்து விட்டால், இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒரு சேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.-வராமலே அடிக்க வல்லவன்-காகுத்தன் வாரானால் –இவர் மனசை அடித்தது வாராமல் இருந்து அன்றோ இதுவும் ஒரு வகை அணி வகுப்பு –
பெண் பிறந்தே –பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்.
“நாஸா நாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிப வாகர: வியாதீ நாம் ஆகர: தோயம் – பாபா நாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.-கோபம் நாசங்களுக்கு இருப்பிடம் -ஆசையானது அவமானத்துக்கு இருப்பிடம் -ஜலம் வியாதிகளுக்கு இருப்பிடம் -இதே போல் “பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவ தன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.-ஏ தூதனே -இந்த ராமபிரானுக்கு ஸ்நேஹத்தால் என்னைவிட மேற்பட்டவனாகவாவது என்னுடன் துல்யனாகவாவது வேறொருவனும் இல்லை -தாயாரும் இவ்வாறு இல்லை -தகப்பனாரும் இவ்விதம் இல்லை-எவ்வளவுக்குள் பிரியனான ஸ்ரீ ராமபிரானுடைய என்னைக் கூட்டிக் கொள்ள செய்யும் முயற்சியை அவ்வளவு வரைதான் ஜீவித்து இருப்பேன்-“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய, ‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,-அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று, அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
அஸ்மாத் பீஷா வாத பவதே –அந்தப் பரம் பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது”
கிருஷ்ண ரதஸ்ய உச்சை சக்ர ரேணு நிரீஷ்யதாம் யேந ஹரி தூரீ பூத ஸ ரேணு அபி ந லஷ்யதே ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-8-31-
ஸ்ரீ கண்ணனுடைய ரதத்தினுடைய மேலே கிளம்பியிருக்கிற சக்ரத்தின் தூசியானது பார்க்கப்படட்டும் -எதனால் கண்ணன் வெகு தூரத்திலே உள்ளவரானாரோ அந்தத் தூளியையும் காணப் படவில்லை -என்பன போன்று,-ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –-வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான்
“தச் சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா தத் அப்ராப்தி மஹா துக்க விலீநா ஸேஷ பாதகா.”-சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம்
கதா அந்யா கோப கந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.
“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்-
என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்”-துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள் கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.” இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”– என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.-பிறகு வெட்கமடைந்த அந்தப் பால பருவமுள்ள சீதாப்பிராட்டியார் பர்த்தாவினுடைய ஜயத்தைப் பற்றிய சந்தோஷத்தினாலே -த்ரிஜடை சொன்னதைக் கேட்டு அது ஸத்யமாக இருக்குமானால் நான் உங்களுக்கு ரஷகையாக ஆகிறேன்-“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, –என்னை ஆராய்வார் ஆர் –-தன்னை ஆராய்வார் தேட்டமாய், ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-
“தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம் புஜ:
பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ-ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவை யுடையனுமாய்,-சிரிப்புடன் கூடிய தாமரை போன்ற திருமுகம் -பீதாம்பரம் புஷ்ப மாலை தரித்தவரும் -மன்மதனுக்கு மன்மதனாய் இருக்கும் கண்ணன்“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப் போந்தவனும் வருகின்றிலன்..-நம் கண்ணனும் வாரானால்– பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.-பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணக் கடவேன்”
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”-என்பது. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 63-தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்.
அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷
காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-
அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷
இவ்வாத்மா-1-வெட்டப்பட முடியாதவன்-2-எரிக்கப்பட முடியாதவன் –-3-கரைக்கவும் முடியாதவன் –-4-உலர்த்தப்படவும் முடியாதவன் –இவ்வாத்மா-1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –-2-நித்தியமாக இருப்பவன் –-3-நிலையான தன்மை உடையவன் –-4-அசைக்க முடியாதவன் –-5-பழமையானவன் –-6-அந்தராத்மாவா இருப்பவன் –-7-ஒரே மாதிரியாக இருப்பவன்-
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?-பர புரார்த்தந:- அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?-மாம் நயேத் யதி –-நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்- அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?” இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்; அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் – அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.
“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக் கூட்டங்களையும் சிங்கக் கூட்டங்களையும் புலிக் கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடி யிருக்கின்ற பெண் தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என்றபடி.
கை வந்த சக்கரத்து--இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?-அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.“பாவஜ்ஞேந –இளைய பெருமாள் பர்ண சாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,-அக்நி சாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச் செய்தது;-பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச் செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.-அவர் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. –-சஷூஸ் ச்ரவா கட்செவி –-கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந- இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத் தக்கது’ என்று செய்தார்.-என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண- போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா--ஐயரும் ஒருவரே! தாம் பரம தார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”
ஏஹி ஏஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தேவவர அப்ரமேய ப்ரஸஹ்ய மாம் பாதய லோகநாத ரதோத்தமாத் பூத ஸரண்ய சங்க்யே
விகஸிதமான தாமரை இதழ் போன்ற திருக் கண்களை யுடையவன் -வாரீர் வாயிற் சகல பிராணிகளுக்கும் ரக்ஷகனானவனே -யுத்தத்தில் என்னை ஸ்ரேஷ்டமான தேரிலிருந்து பலாத்காரம் செய்து விழவிடு -லோகங்களுக்கு நாதனவானவனே -தேவர்கள் ஸ்ரேஷ்டனே -அளவிடமுடியாதவனே -தேவரீருக்கு நமஸ்காரமான மங்களா ஸாஸனம் ஆகக் கடவது -இச் சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப் பெற்றால்,-ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன், என் கையில் ஆயுதத்தைப் பொகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோக நாத- வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ் வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப் பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்
அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வ த்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.
“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக் கண் வளர்ந்தருளுகின்றீர்”-
ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்
காலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத
ஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா –2-75-ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ-சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்-இந்த அர்ச்சாவதார நிலை தான் சகல ஜன ஹிதமானது-என்று இப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே-ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்-கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான-கடாக்ஷங்களால்-தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர் ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக திருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்-
“விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.-வாரீர் சக்ரவர்த்தியே உம்முடைய தேசத்திலே கழுத்தளவு தண்ணீர் உள்ள காலத்திலேயே மரங்களும் பெருமாள் விஸ்லேஷ பீதத்தாலே பீடிக்கப்பட்ட சோகமுடையவைகளாய் மலர் மொட்டு அரும்புகளுடன் கூடி மிகவும் வாடி வதங்கி கருவி உலர்ந்தன-
“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.-ஷட்குண பூர்ணரான பரத்வாஜரே அயோத்யாவில் உத்தேசித்துப் போகிற எனக்கு நான் போலும் வழியிலே எல்லா மரங்களும் காலம் இல்லாத காலத்தில் பழங்களை யுடையதாகவும் தேன்களைப் பெருக்குகிறது களாயும் ஆகக்கடவதுகள் என்று பெருமாள் யாசித்துக் கொண்டார்-
ஹே வானர த்வயா பாஷிதம் ராம நான்யமநா இதி யத்ச சோக பராயணா யத்ச விஷ ஸம்ஸ்ருஷ்டம் அம்ருதம் –ஸூந்தர–37-2-
உம்மால் சொல்லப் பட்டதான ஸ்ரீ பெருமாள் என்னைப் பிரிந்த விடத்தில் என்னை யல்லது யறியார் என்று யாதொன்றும் பிரிவிலே தளரா நின்றார் என்றும் இவை இரண்டுமே விஷத்தோடு கூடிய அம்ருதம் போல் இருக்கிறது -அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.-5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;-ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ
ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்த வா வானப்ரஸ்த பிஷு க அதாபதி ஏகம் தினம் அநாஸ்ரமீ ந திஷ்டேத் –“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது”-கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்;-சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.
பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-
பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,-சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒரு சேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும்படி உனக்கு
இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,-எனக்குள்ள வாசி கேளாய்,மாயாம் ந சேவே –நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,-பத்ரந்தே – உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான். ந வ்ருதா தர்ம மாசரே- நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.-சுத்த பாவம் கத:- நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா- வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன், பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.
வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்”
நான்கு தோளும்–“ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.-“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்.-
வந்து எங்கும் நின்றிடும் –‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான்-கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன. “வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.-
நின்றிடும் திசைக்கும் நையும் – “சிந்நம் பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருஸு: ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீ ராம பிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப் பட்டதாகவும் பிளக்கப் பட்டதாகவும் கொளுத்தப் பட்டதாகவும் முறியடிக்கப் பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே, இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று, நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் – ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும், ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
சக்ர சாபநிபே சத்ரு ஸூதநீ சாபே க்ருஹீத்வா -கிஷ்கிந்தா -3-9--இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவைகளும் சத்ருக்களைக் கொல்லுபவைகளுமான விற்களைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற நீங்கள் யாவர் என்று ஸ்ரீ ராம லஷ்மணர்களைப் பார்த்து திருவடி வார்த்தை
பக்கம் நோக்கி நிற்கும் –5-5-5-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை, ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.”
“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமி வர்த்தந:
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன் படி.
“அத பாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணு தர்மம். –தர்ம புத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.(வி முக்த அந்ய –சவாசனமாக விட்டு )அதபாதக பீத: த்வம் – தரும புத்திரன் ஓர்-தடவப் பொய் -ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜ சூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அத பாதக பீத: த்வம் – மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், –பாதகம் –நிஷித்த அனுஷ்டானம் – அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியா கலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்- கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த்-சமமாய்- தோற்றின ஆயிற்று.-வி முக்தாந்ய சமாரம்ப: சர்வ பாவேன நாராயண பர: பவ- உப்பைத் தொட்டுப் புளியைத் தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல்,
புறம்புள்ளவற்றை முழுதையும்-அகட- பொகட்டு, உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் பொகட்டிருக்கப் பார்.”
“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது,-அபஹத பாப்மத்வாதிகள்,
சேஷத்வ பாரதந்திரியாதிகள்,-பரபக்திகள் இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா -ந த்வம் ஸமர்த்தஸ்யதாம் ஹார்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே -ஆரண்ய -37-108–நான் கண்ட பின் – 5-5-7--அக் கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்ட பின். “யாவரொருவருக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராம பிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது அன்றோ”
பவாம்ஸ்து ஸ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே,
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ச தேஅயோ31-25-
பவாம்ஸ்து-நீரோ,
வைதேஹ்யா ஸஹ- ஸீதா பிராட்டியோடு கூட,
கிரிஸாநுஷு – மலைத் தாழ்வரைகளில்,
ரம்ஸ்யதே – க்ரீடிப்பீர்,
அஹம் -நான்,
ஜாக்ரத : – விழித்துக் கொண்டும், ஸ்வபதஸ்ச- தூங்கிக் கொண்டு
மிருக்கிற, (ஸர்வ அவஸ்தையிலுமென்றபடி )
தே – உமக்கு,
ஸர்வம் -எல்லா வடிமையும்,
கரிஷ்யாமி – செய்வேன்.
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.-ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:-யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது, இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.
கையுள் நன் முகம் வைக்கும் – –5-5-8--அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.-உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது. “உலக நாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக் கை.-இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது. அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது. இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் – நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.
மை கொள் மாடம்-––5-5-8--பழைமையாலே யாதல்;-ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15. “ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலே யாதல்.
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –5-5-9- தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள் தான். “யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.-“எந்தச் சீதா பிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.
மன்னு மாடம் –“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசு தேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5.38:9.
“கண்ண பிரானுடைய திரு மாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் -5-5-10–நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல். “ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4. நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்; எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.
சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு–தம் த்ருஷ்ட்வா தே தேவாஸ் சங்கு சக்ர கதா தரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஊர்ஜிதம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9:67.-“பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது அந்த ப்ரமாதி தேவர்கள் திருச்சங்கு திருவாழி திருக்கதை இவைகளைத் தரித்துக்கொண்டு இருப்பவனும்
-புதிதான ரூப ஸந் நிவேசத்தை யுடையவனும் -சத்ருக்களை அவமானம் பண்ணுவதற்கு பெரிய கிளர்த்தியை யுடையவனும் தேஜஸுக்களின் ஸமூஹமாய் இருக்கிற அந்தப் விஷ்ணுவைப் பார்த்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.
“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
“கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் -கண்ணனாக ஆகி யிருக்கிற என்னுடைய பாட்டு கேட்கப் படட்டும்-என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;” -துஷ்டனான ஓ காளியனே இங்கு நில்லடா நான் கிருஷ்ணனடா என்று மற்றவள் சொன்னாள்-பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;-கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.
தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான் பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
“தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –
“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.-பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.-“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,
கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி– இனியும் நானே இருப்பேன் – இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை – அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே-“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”- “தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே — ததா -மோஷ தசையில் அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் –ஏகி பூதம் -பிரகாரத்வேன அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது-ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் – அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே – அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே-தேவாதி வாசி கர்ம நிபந்தம்-பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் – பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் – பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே – ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –-ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல், சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.
ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷
இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும் சேஷியாகவும் இருக்கிறேன்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.-“ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள்
“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –“அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னா நின்றாள்.என்பது, சுலோகம்.
நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கத ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.
“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ –திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –.
அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷
அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது –
உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது – ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்-உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன் -உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்குத் தானே இவ்வளவும் அருளினான் –
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் –-வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.-“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின-
உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –-“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.-“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார்-
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”- என்பது, சாம வேதம். பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள். “விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
“ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்.
அன்றிக்கே,
“பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸ்ரீ சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்- “இந்திரனே! உன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –-“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11-“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.-“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,-ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.
எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.-“உலகங்கட்கு எல்லாம் தலைவன்”
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
பஜனம் என்றாலே ப்ரீதி பூர்வகம் தானே புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி என்று அந்வயம் -தாத்பர்ய சந்திரிகை – ப்ரீதி தானே உபாயம் -பக்தி இல்லை -இரக்கமே உபாயம் என்றபடி –
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் –தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்– க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம பலே ஸ்ப்ருஹா.—
இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14৷৷படைத்தல் முதலிய கர்மங்கள் என்னைக் கட்டுப் படுத்துவது இல்லை –எனக்கு படைத்தல் முதலான செயல்களின் பயனில் ஆசை இல்லை – இவ் வண்ணமாக எவன் என்னை அறிகிறானோ அவன் பாவங்களினால் கட்டுப்படுவது இல்லை-ஸூபர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை –ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்--என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.
கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.-அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
ஹே த்விஜோத்தம விஷ்ணோர் ஸ்ரீ அநபாயினி ஜகன்மாதா ஏஷா நித்யைவ ஸர்வகத விஷ்ணு யதா இயம் தயைவ –ஸ்ரீ விஷ்ணு 1-8-17-ஓ ப்ராஹ்மணர் உத்தமமான மைத்ரேயரே -சர்வேஸ்வரனுடைய ஸம்பத்தாயும் பர வ்யூஹாதி பஞ்ச அவஸ்தைகளில் கூடவே இருப்பவளாயும் -லோக மாதாவாயும் இருப்பவளான இப்பிராட்டியார் நித்யனாய் எப்போதுமே கூடவே இருப்பவள் -ஸர்வ வியாபியான விஷ்ணுவுடைய ஸ்வ பாவம் போலவே இவளும் அப்படியே இருக்கிறாள் – –
அசிந்தியாத்மா ஜகத்பதி விஷ்ணு பக்தைர் பாகவதைர் ஸஹ ஸ்ரியா ஸார்த்தம் வைகுண்டேது பரே லோகே ஆஸ்தே
நினைவுக்கு எட்டாத ஸ்வரூபத்தையுடைய ஜகத்பதியான விஷ்ணுவானவர் மனன சீலர்கள் கைங்கர்ய சீலர்கள் பிராட்டமார்களுடன் ஸ்ரீ வைகுண்டமாகிற உத்க்ருஷ்டமான நித்யவிபூதியிலே எழுந்தருளி இருக்கிறார்
கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும்,-வாநராதிபதே வாக்யம் ஸ்ருத்வா ஸர்வான் உதீஷ்ய ச ஈஷத் உத்ஸ்மயமாந ஸ்ரீ ராமன் லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.- “புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –-கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-
ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ--ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக் கூடியது;
ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்--பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,-மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.
ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-ஸ்நேஹத்தை முன்னிட்டு த்யானமானது பக்தி என்றும் சொல்லப்படுகிறது -பஜ என்கிற தமது ஸேவையில் சொல்லப்பட்டு இருக்கிறது -ஆகையால் பக்தி என்கிற ஸப்தத்தினால் உயர்ந்த சேவையானது வித்வான்களால் சொல்லப்படுகிறது –
“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு(ஜடபரதர் இடம் ஞானம் தூக்கி இருக்கும் )-கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது என்றபடி இங்கு
குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது. “என்னை அடியவனாகக் கொள்வதில்-வைதர்மம்– சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையான போது அல்லேனாய் விடுவேன்–
ஆத்மா கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் ச பிரயோஜனம் -பூர்வ மீமாம்ஸா-ஸாஸ்த்ரம் ப்ரயோஜனவத்தாம் போது கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33–ஆத்மா கர்த்தாவாக வேண்டும் -உத்தர மீமாம்ஸா –
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்—கங்காதி தீர்த்தேஷு மத்ஸ்யா வஸந்தி தேவாலயே பக்ஷி சங்கா ச நித்யம் வஸந்தி தே பாவோஜ்ஜிதா பலம் ந பலந்தே தீர்த்தானி புண்யா யதநா ச முக்யா-கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே-ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே –வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது
ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவத அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்-ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்-வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக் குறைவு விபரீத ஞானமும் அறிவின்மையுமே உண்டாகின்றன –
மாறு சேர் படை நூற்றுவர் –த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”-“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.
மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக-அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக-என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக-நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-
செய்த வேள்வியர் –-சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.-வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.-சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.
இடம் கொண்ட –வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது. “தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.-ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-
தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,-தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.-நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,-“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.-“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
ஹ்ருதாகாஸே சிதாதித்ய நிரந்தரம் ஸதா பவதி ந அஸ்தமேதி ந ச உதேதி ஸந்த்யாம் கதம் உபாஸ்மஹே-மனதாகிற ஆகாயத்தில் ஞான ஸ்வரூபனான ஸூர்யபகவான் இடைவெளியில்லாமல் எப்போதும் பிரகாசிக்கிறான் -அஸ்தமனம் அடைவதும் இல்லை -உதிக்கிறதுமில்லை -எவ்வாறு ஸந்த்யையை உபாஸிப்போம்-
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,-ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.-உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;
யோ அநந்த ப்ருத்வீம் தத்தே ஜகத்யர்த்தே அவதீர்ண ஸ மாம் அக்ரூர இதி வஹ்யதி -ஸ்ரீ விஷ்ணு -5-17-12-யாதொரு திருவனந்தாழ்வான் ஸீரோ பூஷணம் போல் இருக்கிற பூமியைத் தரிக்கிறானோ அந்தப் பூமி விஷயமாக ப்ரயோஜனத்தின் பொருட்டு அவதரித்து அருளிய அந்தப் கிருஷ்ணன் என்னை குற்றமற்ற அக்ரூரனே என்று அருளிச் செய்தார் -பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ-
ஆரா அமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.-“ஸஹபத்நியா –பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப் பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிவது.“விசாலாக்ஷ்யா – பரந்த கண்களை யுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக் கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.
அடியேன் –மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்-ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்-“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ ஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக் கண் வளர்ந்தருளுகின்றாய்.-நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,-ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,-வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம்-இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.-
என் நாதனே! எம்மானே என் வெள்ளை மூர்த்தி –பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.”“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” -என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்-தம் நாந்தரேமி.-அந்த ஈஸ்வரனை அதி க்கிரமிக்க வல்லேன்-
“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் -தேயாமை இல்லாமல் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி –பிரக்ருதிம் ஸ்வாம்-பெருமை குறையாமல் -இச்சையால் பிறக்கிறேன்-தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.-பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை-பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.-“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும்-பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.-“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண்-“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”–பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.-“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாந் தத் ப்ரவீது மே” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.-“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும் அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.-நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.-இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.
ஹே ந்ரூப யத்ர ஏதா சமஸ்த ஸக்தய ப்ரதிஷ்டிதா ஹரே மஹத் விஸ்வரூப வைரூப்யம் தத் ரூபம் அன்யத்-ஸ்ரீ விஷ்ணு -6-7-70- ஓ அரசனே யாதொரு திவ்யமங்கள விக்ரஹத்தில் கீழ்ச் சொல்லிய எல்லாமே சக்திகளுக்கும் நிலை பெற்று இருக்கின்றனவோ -பகவானுடைய பெரிதும் விஸ்வத்தில் உண்டான ரூபங்களைப்பற்றி விலக்ஷணமாய் இருக்கிறதுமான அந்த திவ்ய மங்கள விக்ரஹம் அப்ராக்ருதமாய் இருக்கும் –
யுவா ஸூவாஸா பரிவீத யஸ் ஆகாத் ய ஜாயமாநோ பவதி ஸ ஸ்ரயான் உ பவதி -யவ்வனத்தை யுடையவனும் -நல்ல வஸ்திரம் அணிந்தவனும் நித்ய ஸூரிகளால் சூழப்பட்ட யாதொரு பரமாத்மா இங்கு திருவவதரித்தாரோ -அதனாலேயே மிக்க தேஜஸ்ஸை யுடையவனாகிறான் –
பவான் ஸ்ரீ மான் சக்ராயுத விபு நாராயண தேவ த்வம் ஏக ஸ்ருங்க வராஹ பூத பவ்ய ஸ பத்நஜித் -யுத்த -120-130-தேவரீர் பிராட்டியாருடன் கூடிய திருவாழியை யுடையவரும் -சர்வவியாபியான ஸ்ரீ நாராயணன் என்ற தேவரீர் ஒரு கொம்புள்ள வராஹ அவதாரமே செய்தீர் -சென்ற வரும் சத்ருக்களை ஜெயித்தவர் –
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் ஞான மயம் தப-முண்டகம் -1-1-10-யாதொரு ப்ரஹ்மம் சகலத்தையும் அறிந்ததோ -சகல விஷயங்களையும் அறிந்ததோ -யாதொரு ப்ரஹ்மத்துக்கு ஸங்கல்பம் ஞானமயமாய் இருக்கிறதோ-
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.
ஆகாசத்தை நோக்கி- திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு-வாயு புத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்-
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –
“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்-கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம்-(பக்தி யோகம் -) சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்-பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு – நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –
“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
“தஸ்ய-அந்த எனக்கு,
அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே.
மே -அத்யாகாரம் செய்துகொண்டு -அந்த எனக்கு -உத்தம -புருஷ வாக்கியம் –
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,-எத் துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத் துணைக் காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும். “இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.
“இமாம் அஸித கேசாந்தாம் ஸத பத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்--மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.-இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –-ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்–அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா- இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:–இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருக்கும்.”-“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகால பலி நோ வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.
“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.-இவர், இவ்வாற்றாமையோடே இருந்து-மதுவையும் குடிப்பது இல்லை
“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.-நித்திய ஸூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம்-இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக”-
ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.– இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில் “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி
விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள். கீழ் திருப்பாசுரம், “மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.) என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.-5-9-2-
“பத்ம கேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது, “தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது -மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று,- இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி-மால்ய வானில் விரஹ தாபத்தால் பெருமாள் -பிராட்டி மூச்சுக்காற்று போல் கிஷ்கிந்தா
“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.-காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத யத காந்தா– காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
‘காலைப் பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.-பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல் காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார்
“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி
ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8.-ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன, “பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் –
“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி
ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.–தத்ர காஷாயிந:–அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே-அழுக்குச் சட்டையும் தாங்களுமா யன்றோ இருப்பது.-“விருத்தாந் – முதிர்த்தவர்களை;”
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;”பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.-விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”-பேணாத பரிவட்டங்களை யுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — ) மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.
ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”“உபவாஸ க்ருஸாம் தீநாம் காம ரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.-திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சில வார்த்தை விண்ணப்பம் செய்ய, அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம் கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியா நின்றாய்,
“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.-அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.
ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.-தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,-“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.-எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”-அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”– என்பது, ய. 4. 4. 3-விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.-வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்”-ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.
“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”– என்பது ஸ்ரீகீதை. 3 : 20-“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”-பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயா–கழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்திய வாசம் செய்யா நின்றால், நாமும் நித்திய வாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய பேற்றினைப் பெற வல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருத்தலன்றோ.
கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.-தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும் பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’-மஹா ராஜனான சக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தை யில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக் கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தரையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடே கூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய் அது போகைக்கு நினைவு பண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.
அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.-இந்தச் சீதா பிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது இந்தப் பிராட்டியிடத்தும் நிலை பெற்றிருக்கிறது”-பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு-நன்னலம் நம் பிரானது” என்ற போதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.
வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”– என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும் இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;-குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்-“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-, நிர்ஹேதுகத்வம் என்றபடி.-தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.
யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம்-. “துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ ஸ்ரேஷ்டரான அந்தப் பெருமாளை நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி. குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.
“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17.-“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே-கனிவாய் மடவீர்”-ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும் சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள்
“தேவோ நாம சகஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.-நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான்-ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.
“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.-இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்
“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.-சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,-இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.-என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்”
“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீ ராமா.பால. 18 : 8-“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப் பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.
“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்”-ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.
கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”-என்பது தோத்திர ரத்நம், 31.-என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன”
துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 15.-“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’
“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.-திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனா யிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்-இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்; ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது
“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.-ஜாபாலி என்கிற ப்ராஹ்மண உத்தமர் பரதாழ்வானை சமாதானம் பண்ணிக் கொண்டு தர்மத்தை அறிந்தவருமான ஸ்ரீ ராமபிரானை தர்மத்தின் நின்றும் விலகிய இந்த வார்த்தையைச் சொன்னார் –
அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு – அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.-ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன. கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது”
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:-என்பது, பாரதம் கர்ண பர்வம்.-“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர் அந்தர்யாமியாக இருக்கிறார்-
அஸதாம் தர்ம ஸங்கல்ப ஸதாம் ஸந்தாபகாரணம் உபோஷி தஸ்ய வ்யாக்ரஸ்ய பாரணம் பசு மாரணம் -கெட்டவர்களுக்கு தர்மம் செய்வதால் சங்கல்பிப்பதானது நல்ல ஸத்துக்களுக்கு உபத்ரத்வத்தைச் செய்யக் காரணமாகும் -உபவாஸமிருந்த புலிக்கு பாரணமாவது பசுவை மரிக்கச் செய்வது தான் –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”-வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.-சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இருந்தவாறும்-–“உடஜே ராமம் ஆஸீநம் ஜடா மண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-
கிடந்தவாறும்-“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21-1-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” :
ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய:
ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.-“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்-
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவா பரிசோபமா ஸர்வ பூஷணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -கிஷ்கிந்தா -3-14- நீண்டும் அழகாய் திரண்டும் பரிகங்களை ஒத்தும் எல்லாமே ஆபரணங்களால் கண் எச்சில் வாராமல் அலங்கரிக்கத் தகுதியாய் இருக்கிற திருத்தோள்கள் என்ன ப்ரயோஜனத்துக்காகப் அலங்கரிக்கப் படவில்லை –
ப்ரஜாபதே ததா த்வம் ஆவிஸ்ய ஸ்ருஷ்டிம் கரிஷ்யாமி தத அஹம் அமராதி விபேததி ஸ்ருஷ்ய ஸ்வ ரூப-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஓ பிரம்மாவே பிறகு உம்மை அனுபிரவேசித்து ஸ்ருஷ்டி செய்யப் போகிறேன் -பிறகு நான் தேவம் முதலிய வேறுபாட்டினால் ஸ்ருஷ்டிக்கு யோக்கியமான பதார்த்தமாக ஆகப் போகிறேன் –
“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாம நிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –
நர யந் நாம ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ மாப்நோதி ந ஸம்ஸயம் ஸர்வ லோகார்த்தி ஹர சத்ரு கேஸரீ ஹரி மம மங்கள்ய விவ்ருத்தயே அஸது –என்பது, விஷ்ணு தர்மம்-““எவனுடைய திரு நாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ-இதில் ஒரு ஸம்சயமும் இல்லை -எல்லா உலகங்களின் பீடைகளைப் போக்கடிப்பவருமான அந்த ஸ்ரீ நரஸிம்ஹ பகவான் எனக்கு மங்கள மேன்மேலும் வருவதற்காக வேண்டும் – –கொடிய வல் வினையேன் –திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-
“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீ ரூபமாஸ்த்தித:தத் தானவேப்ய ஆதாய புந தேவேப்ய ப்ரததவ் ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா-1-9-109-அந்த விஷ்ணுவானவர் ஸ்த்ரீ வடிவம் கொண்டு மோஹிக்கச் செய்து அந்த அமுதத்தைப் அஸூரர்களிடமிருந்து வாங்கி மறுபடியும் தேவதைகளுக்குக் கொடுத்தாய் –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply