ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –ஆறாம் பத்து –

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று

“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.-ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்-அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவர்.

தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.-நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்”-இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகு ப்ரவீர ஸ்ருத்வா வஸோ வாலி ஜகன் யஜஸ்ய ஸம்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.-இவ்விதமாக வருந்துகின்ற வாலியின் பின் பிறந்தவனான ஸூக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு வீரர்களான பகைவர்களை அழிப்பவரும் ரகுகுல ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ பெருமாள் கண்ணீரோடு கூடினவராய் ஒரு முஹூர்த்த காலம் மனம் கலங்கினவராக ஆனார் –-“ஸத்ரோ: பஸ்யத யுத்த லுப்த ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை அஹம் த்வயா கா புருஷ க்ருத என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.-பிரசித்தமான வீரத்தன்மை யுடையவனும் சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனும் சத்ருவானவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யுத்தத்தில் ஆசை கொண்ட நான் உன்னால் தாழ்ந்த மனிதனாகச் செய்யப்பட்டேன் என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே | நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே |-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 1-|நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்

தத் ஸந்நிதன யத் அம்ருத ப்லவநாதிவ விஸ்மயஸ்திமிதம் அஸ்தமித அந்ய பாவம் ஆனந்த மந்தம் அபூத் தத் மதீயம் ஹ்ருதயம் அதுநா அங்காரசம்பிதமிவ வ்யதமாநம் ஆஸதே -மாலதீ மாதவ நாடகம் -அந்த மாலதியின் ஸமீபத்தில் எந்த மனதானது அமுதத்தில் மூழ்குவது போல் ஆச்சர்யத்தால் அசைவற்றதாகவும் -மறைந்து போன மற்ற எண்ணங்களை யுடையதாகவும் ஆனந்தத்தால் மந்தமாகவும் ஆயிற்றோ அந்த எனது மனதானது இப்போது மாலதியின் பிரிவில் நெருப்பு தணலால் சூழப்பட்டது போல் வருத்தமுள்ளதாக இருக்கிறது-

ஹே பிரபோ பாண்டு புத்ராணாம் பஸ்யதாம் த்வயி ஜீவிதி அபி ஸ அஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிகிலிஷ்டா சபாம்கதா -உத்யோக -83-ஓ பிரபுவான கிருஷ்ணனே பாண்டு புத்ரர்களான ஐந்து பேரும் பார்த்துக்கொண்டே இருக்கும் போதும் அந்த நான் கேச க்ரஹத்தையும் அடைந்து இன்னும் அதிகமாக துன்பம் அடைந்தும் சபையை அடைந்தேனே –

மஹதி ஆபதி ஸம் ப்ராப்தே பகவான் ஹரி ஸ்மர்த்தவ்ய புரா மஹாத்மநா வசிஷ்டேந கீதம் மயாஜ்ஞாதம் உத்யோக -83-
பெரிய ஆபத்து நேர்ந்த போது ஷாட் குண்ய பரிபூர்ணரும் ஆஸ்ரித விரோதி நிரசனத்தை ஸ்வ பாவமாக யுடையவருமான பகவான் நினைக்கத் தகுந்தவர் என்று முன்பு மஹாத்மாவான வஸிஷ்ட மஹரிஷியினால் சொல்லப்பட்டதானது என்னால் அறியப்பட்டது –

“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.-பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பது போலே-வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.-ஹநூமதா–தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே, வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது. வாநரேண– சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே. – ருஷி கொண்டாடுகிறான்.

கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹே புக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம்
கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
-இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.-ரஹஸ்ய சமாசாரங்கள் சொல்லப்பட்டன -பத்தினிகள் காண்பிக்கப் பட்டார்கள்-வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப் பட்டது–இதற்கு மேல் ஸ்நேஹம் என்ன இருக்கிறது” என்னும்படி இருக்கை.

மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகர ஸ்திரீ கலாலாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.-கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,-மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன் படி.-அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகா நின்றானோ-

“ஜீவிதம் தார யிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே
ஸத்யேந அஹம் ப்ரலீமி தே
”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘

இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பா தீர த்ருமேஷூ அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.-“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது”-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-உடன் மேயும்-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம:
புநர் ஜாது தார்மிகம் ராமம் அந்தரா”-
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள் கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ–இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக் கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –தீர்க்க சத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம: புனர் ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம்.
தார்மிகம் ராமம் அந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக் கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியே யன்றோ அவன் படிகள்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-ஶ்லோகம் 2 –மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.-(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”-என்னுமாறு போலே,-சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.

“வ்ருஷமூலே நிரானந்தாம் ராக்ஷஸீபி ஸமாவ்ருதாம் நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.-“மரத்தின் அடியிலே ஆனந்தம் இல்லாதவளும் ராஷஷிகளால் சூழப்பட்டு இருப்பவளுமான பிராட்டியை அந்த அநுமான் கை கூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாம முடையவராய்-நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,-ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,-ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.– அபிகம்ய அபிவாத்யச–அருகில் சென்று வணங்கினார்”

“கர்மணை வஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.
-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.-“கர்மத்தால் சித்தி பெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.-விடல் இல் வேத ஒலி முழங்கும் –

“ஸீதான் மாம்ஸேந சந்தயன் (ராமம் ) கிரி பிரஸ்தே நிஷஸாதேஇதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.-இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னா நின்றன என்னுதல்.-உடன் மேயும் என்பதற்கு,-ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினி கிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

த்ருஷ்டா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதிபந்தமிவ ஓஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவஸா பிரதிபேஷிரே -சபா -75-

பராக்ரமத்தினால் தபிக்கச் செய்பவர்களைப் போலே -அப்படி எழுந்தருளி இருக்கும் கண்ணனைப் பார்த்து தகுந்தபடி கேசவனிடத்தில் பரவசர்களாய் நமஸ்காராதி கார்யங்களைச் செய்தார்கள் –புணர்த்த கையினராய் –

சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- ) அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.-முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.-இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்

“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:
”-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர –காணப் பட்டாள் சீதை”-கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

யோ பகவத் ஞானம் தத்யாத் குர்யாத் தர்ம உபசேவனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யாத்வா ந தத்துல்யம் கதஞ்சன

யாதொரு ஆச்சார்யன் ஈஸ்வர விஷயமான ஞானத்தைக் கொடுக்கிறானோ -தர்ம அனுஷ்டானத்தைப் பண்ணுகிறானோ -பூர்ணமனான பூமியையும் கொடுத்தாலும் எப்படிப் பிரயாசப் பட்டுப் பார்த்தாலும் ஆச்சார்யன் செய்த உபகாரத்துக்கு சமானமாக ஆகாது –

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”
-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.-பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து”-ஒரு வண்ணம் சென்று புக்கு –கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.

ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.”வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,( கேகேய தேசத்துக்கு தூதர் போனது )கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்”

“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”
-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள் சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்”என்றது போன்றும், –“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.-விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,-விரஹ நோயால் தின்னப்பட்ட தன் வடிவினைக் காட்டுகிறாள்.

“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-தாநி பூய ஸமாஸஷ்வ மாம் சோக ந சமாவிசேத் ராமஸ்ய யாநி ஸிஹ்நாநி லஷ்மணஸ்ய சயாநிவை லஷிதாநி ஹே விஸாலாஷி தாநி வதத மே ஸ்ருணு–என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.-ஓ வானர உத்தமரான ஹனுமாரே பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவு மான அடையாளங்கள் எவைகளோ அந்தப் அடையாளங்களை மறுபடியும் நன்றாகச் சொல்லும் -எதைக் கேட்பதனால் என்னை வருத்தமானது புகாதோ -என்று சீதாப் பிராட்டியாராலே கேட்கப்பட்ட ஹனுமார் மீண்டும் சொல்கிறார் -பெருமாளுடைய எந்த அடையாளங்களும் இளைய பெருமாளுடைய எந்த அடையாளங்களும் உம்மால் பார்க்கப்பட்டதோ -நீண்ட திருக் கண்களை யுடைய பிராட்டியாரே அந்தப் அடையாளங்களைச் சொல்கின்ற அடியேனிடமிருந்து கேட்பாயாக” என்றான் திருவடி.

ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா மயா இதம் கால ப்ராப்ய தத் தஸ்ய மஹாத்மநா –ஸ்ரீராமா. யுத். 1 : 13-இரண்டு தேகத்தையும் உபஹரித்த மஹாத்மாவான அந்தத் திருவடிக்கு என்னாலே-அத்வேஷம் -தகையாத சமயத்தை யடைந்து கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கன ரூபமான ப்ரத்யுபகாரமோ ஸர்வ ஸ்வ தானத்துக்கு சமானமாக ஆகக்கடவது-பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -விஷ்ணு -1-2-1-

விகார ஸூன்யனும் -கிலேச கர்ம ஸூன்யனும்-நித்யனாயும் -ஸ்வ தந்த்ர ஆத்மாவாயும் -தன் ஸ்வரூபத்துக்குத் துல்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாயும் -எல்லாவற்றையும் ஜெயிக்கத்தக்க சக்தியையும் யுடையவனாயும் -இருக்கும் விஷ்ணுவின் பொருட்டு வணங்குகிறேன் –

“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித
:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.-–-சிறந்த திரு உள்ளம் கொண்ட பெருமாளோ என்றால் -பிராட்டியாரோடே கூட -பிராட்டி இடத்தில் அடைந்த திரு உள்ளமுடையவராயும் -அந்த பிராட்டிமார் திரு உள்ளத்தில் எப்பொழுதும் ஸ்திரமாய் இருக்கப்பட்ட வராய்க் கொண்டு அநேகமான ருதுக்களைப் போகத்துக்காக க்ரீடித்தார் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;-இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீ
த்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்-வேறு கொண்டே கூறுமின் –அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.–

“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந் ஸ தஸ்மிந் ஹ்ரிஸ்ரேஷ்ட அர்த்த ஸாதநே நிச்சயதார்த்த ஹி ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1-
ஸூக்ரீவ மஹாராஜர் திருவடியிடம் விசேஷமாக சமாசாரத்தைச் சொன்னார்-அந்த ஸூக்ரீவ மஹாராஜர் வானர உத்தமமான திருவடியிடத்தில் காரியத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நிச்சயமான எண்ணமுடையவர் அல்லவா -திருவடி கார்யம் செய்து தலைக்கட்டுவார் என்ற நம்பிக்கை யுள்ளவர் என்றபடி –

உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.-தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க – வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் – மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”-
என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26-தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தை யுடையவர்” என்று வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ-ஏறு சேவகனார்க்கு – வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.

“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,-ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்-பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே, அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127-)

ஸ்தலஸ்யஸ்ய ராமஸ்யச ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தானவ -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -தரையிலிருக்கும் பலராமனுக்கும் ரத்தத்திலிருக்கும் ராஷசனுக்கும் யுத்தம் தகுந்ததன்று என்று தேவர்கள் கந்தர்வர்கள் அஸூரர்கள் சொன்னார்கள் –

“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம் அத்யருணே க்ஷணம்
கஜ யுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்
”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54-வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுக மண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”-புகர் கொள் சோதி –குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளி பெற்ற தேஜஸ்ஸு.

யதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா நிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ -விஷ்ணு -4-6-15-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.-(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-
என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.-“தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பினார்”-தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –-தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,-

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—
৷৷4.6৷৷

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே – எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே – என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்-மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.

மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”
-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணு புரா. 5. 3 : 7.-பிறந்ததும் வீங்கு இருள் வாய் – “எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்”-விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது,-இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.

உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர் புஜம்-எல்லாருக்கும் அந்தராத்மாவாக இருப்பவனே!-நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.-த்வி புஜோ வா சதுர் புஜோவா” என்பது.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் – அடியார்கள் வேண்டிய உருவம்-

ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”
-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்”-தான் தன சீற்றத்தினை முடிக்கும் –அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.

“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.-“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது”-தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன்-எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.-சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? 

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்”
-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-அவனுக்கும் பெரு நிலை நின்றாரையும் முதுகு காட்டும்படி செய்த பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14-ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ-என்கிறபடியே கனத்தார் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் உடையார் இல்லாமையால் -ஆகையால் இறே மண் மிசைப் பெரும் பாரம் என்று விசேஷிக்கிறது –இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம்-

“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”
-என்பது, பாரதம் ஆரண்ய பர்வம், 49 : 20–த்ருத்ராஷ்டன் சொன்னது-“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ, அந்தத் தர்ம புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது-

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”
– என்பது, பாரதம் மௌசல பர்வம்.-நீண்ட கண்களை யுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹ யித்வா ஜகத் சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழ விட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;-கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண் மிசைத் தன தாமமே புக்கான்.-உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி-

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”-என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.-எல்லா உலகங்கட்கும் காரணன் -உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களையும் செய்கிறவன்-கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.-ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே- “மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.-அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.-ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”-
என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும் சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.-லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.-அன்றிக்கே,-இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வ மாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ
”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.-கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிற வனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”

“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.-புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலை யன்றோ இவளது!

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்-பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய், மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய், மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி”

தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித
:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.-பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தை யுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”

மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத் விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.-அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது-

“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்

ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.-“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம்
ராமம் ஏவ அநுபஸ்யதி”
-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.-ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் ஸ்ரீ ராம பிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”

பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ஸ்ரூயதாம் நர
:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், -கதிதா’ –“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்”- -என்னாது,-“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம் பெற்றன என்று தோற்றுகிறது.-

சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள்–“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,-, ஞாத்ருத்வ சுருதிகள்-யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள்,-, பேதாபேத சுருதிகள்,--“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.-“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்-பேத சுருதியே தத்துவார்த்தம்; -அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை -. சகுண சுருதிகள்-“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.-, நிர்க்குண சுருதிகள்-“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.-சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப் பற்றி வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச் சொல்ல வந்தது; கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று 

“தத் குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப் பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே ஞானம் என்று சொல்லப்படுகிறது

ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. -எப்பொழுதும் புத்தியினால் ராமா ராமா என்று எண்ணிக் கொண்டு இருப்பவளும் அவரையே வாக்கினால் சொல்லுகிறவளுமான நான் அப்படிச் சொல்வதற்கு தகுதியானதும் அவரையே வாஸ்யமாக யுடையதான கதையை அப்படியே நான் கேட்க்கிறேன் -அப்படியே பார்க்கிறேன் –சுலோகத்திலே-“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும்,-“வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.-நாவினால் நவிற்று போலே –

“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:–ஸ்ரீராமா. அயோத். 59 : 10.-இராமனைப் பிரிந்த பிரிவில் “மரங்களும் வாடி நின்றன”

விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்”“தர்மாத்மா சத்ய சவ்தாதி குணாணாம் ஆகாரஸ் ததா உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்”, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ-இவரை எல்லார்க்கும் ஒப்புச் சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன் பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” 
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ
”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85-ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச்
செய்யத் தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”

பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-
என்பது, பாரதம்-திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”-பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.-ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன்-ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.-

தேவ கார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”
–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.-அந்த ஸீதாப்பிராட்டி தேவ .பூஜையைச் செய்து அபிஷேகமடைந்த பர்த்தாவைப் பூஜிக்க வேண்டிய விதங்களை அறிந்தவளாய் -சந்தோஷமடைந்த மனமுடையவனாய் ராஜாக்களின் லக்ஷணங்களை அறிந்தவளாய் சக்ரவர்த்தி திருமகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்

தோற்றது மெய்யே –-ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே
”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”-சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”
–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.-“ஷண நேரமும் பிழைத்திருக்க மாட்டேன்”-என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன் வசப்படாத சரீரத்தை யுடையவளானாள் என்பது கருத்து.

ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–
என்பது, ஸ்ரீராமா. பால, 3–10. : காண் பெரும் தோற்றத்து –-கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையை யுடைய தோற்றத்தை யுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.-ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்-

ஆந்ரு ஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”-
என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.-எம் காகுத்த நம்பிக்கு–குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.-குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.-“குணங்களுக்கு எல்லாம் நிலைக் களமானவர்-அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –

“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30-என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –என்று இருக்குமவள் அன்றோ.-என் கற்புடையாட்டி –மிக்க அறிவையுடைய என்மகள்.

ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-
என்பது, உத்தர ராமாயணம்.-பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு வேண்டிய பொருள்களை வரவழையுங்கோள் -கால விளம்பமாக வேண்டாம்-நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்
”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.-தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.-பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ. தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது-அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?-இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.-“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31-புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி-ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –-நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—7-19-பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:
”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.-ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது-புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.-அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.-சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.-கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –-ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?

“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா”-என்பது, சுருதி வாக்கியம்-“அந்த முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”

கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.-‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது-என்பதே யன்றோ அவனுடைய திரு வார்த்தை.

பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்-தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்”

கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது,
ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீ குகப் பெருமாள் கூறியது.-“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணும் போலிருக்கிறது ”கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச
”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,)-தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப் போக விட்டாயாகில், இன்னும்-பெருமாள் இருக்கில் கீழ் வயிற்றுக் கழலையாகிறது’ என்று-அங்குப் போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய |
|-ஶ்லோகம் 3 –

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தை யுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

காசித் கிருஷ்ணேதி கிருஷ்ணேதி பரோக்த்வா லஜ்ஜாம் உபாயயவ் காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் அவலம்பிதம் யயவ் -விஷ்ணு -5-13-19-
ஒருவள் கிருஷ்ணா வென்றும் கிருஷ்ணா வென்றும் சொல்லி வெட்கமடைந்தாள் -மற்ற ஒருவள் அன்பினால் ஒன்றுமே தெரியாதவளாய் அந்த கிருஷ்ணனுடைய ஸமீபத்தை சீக்கிரமாகச் சென்றாள்-

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி
”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.-கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;-அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்க வேணும்’ என்று சபையை அடைந்தான். -அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக் கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’-விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறி கொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ ஸ்வரூபம்;-ஸ்வரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கை வாங்கி யிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.-சபா மத்யே ஜகர்ஹே-
“நியமாதி க்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்தி பூர்வம்வா
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்
”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.-தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்க வேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.-புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே.-ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷ வஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?-தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச் செய்து தாம் தாம் இராச்சியத்தைக் கைக் கொண்டு போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்;-என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.-கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:--அவர் பிரிந்த உடனே முடிய வல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?-அவர் பொகட்டுப் போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.-நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:–தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவி தாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.-பரதன் ஸ்ரேஷ்ட ராம பக்தன் -பரதனாக இருந்தபடியால் தவிர தம்பியான படியாலே அன்று –

“யத்ஹிமாத்ரா க்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வன துர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”
– என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15-தாயாரால் எந்தப் பாபம் செய்யப்பட்டதோ நான் அதையும் விரும்பவில்லை -இங்கிருந்து கொண்டே காடாகிய கோட்டையில் இருக்கும் ராமனைக் கை கூப்பிப் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன்

“துக்காபி தப்தோ பரதோ ராஜ புத்ரோ மஹா பல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந
”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38..-தசரத புத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை”

ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேச காலௌ ஹி நசார்த்த தர்மௌ அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:
”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.-இளைய பெருமாளைப் பார்த்துத் தாரை கூறியது-விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப் பட்டிருக்கின்ற எங்களை என் படுத்துகிறீர்” என்றாள் -நீர் காம சாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான் செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.-

நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3.-“ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”

அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந.
நேஹ பஸ்யாமி ராகவம்”-
என்பது,-ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.-இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான்
இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.

“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்ய கர்மணா தஸ்ய இதம் ஆஸ்ரம பதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை: திக் இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82-புண்ணியமான சரித்திரங்களை யுடைய அகத்திய முனிவராலே தெற்குத் திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”

ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.-“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் –தத தேந வ்யாஸேந பலவத் க்லிஸ்ய மாநயா ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுக ஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந்–38-24- திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது-

த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.-இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது-“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக் கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப் பல தடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”

தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்”-நாராயண பரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப் பார்.-

அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோ பவ”
–என்பது, பாரதம். இது,
தரும புத்திரனைப் பார்த்துத் தர்ம தேவதை கூறியது. அடுத்து அடுத்து இராஜ சூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.-

கிருஷே சிஷ்யஸ்ய ஸம் ப்ரீத்யா ஸாத்விகாநாம் ப்ரஸாதத லப்தம் வித்தம் ச தாம்பத்யம் லுப்தை அந்யத்து க்ருஹ்யதே க்ருஹ்யதே
பயிர் செய்கையினாலும் சிஷ்யர்கள் ஆதாரத்தினால் ஸமர்ப்பித்தாலும் பெரியவர்களின் அனுக்ரஹத்தாலும் அடையப்பட்ட தனமானது ஸாதுக்களுக்கு பத்யமானது -நல் வழியில் வந்தது -பணத்தில் அதிக ஆசையுள்ளவர்களால் இதைத்தவிர மற்றவை பெற்றுக் கொள்ளப் படுகிறது-

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.-இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி ‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரக மீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.“ த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா
”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.-“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே

யத்ர ஸர்வம் யதஸ் ஸர்வம் யஸ் ஸர்வம் யஸ் ச ஸம்ஸ்ரய அநந்தஸ்ய ஸர்வ கத்வாத் அஹம் ஸ ஏவ அவஸ்தித-விஷ்ணு -1-19-85-
யாதொரு விஷ்ணுவிடத்தில் ஸர்வ பதார்த்தமும் இருக்கிறதோ -எங்கிருந்து ஸர்வமும் உண்டாகிறதோ -ஆதலால் எவர் ஸர்வாத்மகமாக இருக்கிறாரோ -எவர் எல்லாவற்றுக்கும் சரண்யராக இருக்கிறாரோ த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் அநந்தன் எங்கும் இருப்பதால் அவராகவே இருக்கிறேன் –

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”
-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18. இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை நுகர்ந்தவளான நான்”என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.-கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது”

“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34.-“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப் பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.

“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –

யாகதி: யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம் மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30.-திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமி தானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த மேலான வுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக-பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச் செய்தது.-

ஹிரண்யம் வா ஸுவர்ணம் வா ரத்நாநி விவிதானி வா . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.-வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன, ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.-இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக் கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-இஸ் ஸ்லோகத்தில், “திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை அடங்கியிருக்கவும், பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயி ஏவ ஸோபநா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்ற பின் வந்து சேர்ந்த திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. -“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும், மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” -த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே 

“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹத சத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்
”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24.
பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீ ராம பிரானைப் பார்க்கிறேன் என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவ ராஜ்யம் முதலான மேன்மைகள்
என்னால் அடையப்பட்டன”

அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:
”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.-அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,-ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,-மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,-வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக–தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?-வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி(தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.: –

–நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44-“குற்றம் செய்யாதார் யாவர்

“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸ கண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9.-ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”-இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி கூறியது

யாம் கபீனாம் சஹஸ்ராணி ஸூ பாஹு நி அயதாநிச திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸ இயம் ஆஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.–எந்தப் பிராட்டியை ஆயிரம் -பதினாறாயிரம் வானரங்கள் எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்”–(எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி )அந்த இவள் என்னாலே பார்க்கப்பட்டாள்

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்ம வத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.-அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின் காலில் முற்பட விழுந்தான்;-அத்தலை இத்தலையானபடி’

யஸ்மாத் தர்மான் ஆசினோதி ச ஆச்சார்ய கதாசன தஸ்மை ந த்ருஹயேத் ஸஹி வித்யாத தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்ம-ஆபஸ்தம்ப ஸூத்ரம்
எவரிடமிருந்து தர்மங்களைத் தெரிந்து கொள்கிறானோ அந்தப் ஆச்சார்யருக்கு ஒரு பொழுதும் துரோகம் செய்யக் கூடாது -அவரே தானே வித்யையினால் சிஷ்யனுக்கு ஞானம் ஜென்மம் அருளினவன் -அதுவே உயர்ந்த ஜென்மம் –

யோ தத்யாத் பகவத் ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம். -எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக் கடவன், உலக முழுதினையும் கைம் மாறாகக் கொடுத்தாலும் ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாக மாட்டாது”

பஹுஸ்யாம்” என்பது, சுருதி.-பல பொருள்களாக ஆகக் கடவேன்-என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.

“ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்

அஸி தேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,“கறுத்த கண்களை யுடையவள்

தத: தே ப்ரீத மநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3-“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்து கொண்டு ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினார்கள்–மஹாத்மாநம் – நான்கு பேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இது தான் தரமோ இவனுக்கு?-“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச ப்ரத்யர்சயந் ஹரி ஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.-“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.-பருத்த முக முள்ளவர் களானார்கள்-

ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.-“சுக துக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே

சலத்வலயசாலிநீ ஏகா கோபீ பரிவ்ருத்தி ஸ்ரமேண ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. -“கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற தனது கையைக் கொடுத்தாள்”-வைத்தாள் என்னாமல், “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச் சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-“துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”

“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6.-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்”

“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.-எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே அன்னமாக வுடைத்தா யிருக்கிறது”

நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2-“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்

வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று-சந்திரன் -மூலமாக ஸத்வாரகமானாற் போலே, காட்சியும் ஸத்வாரகம்எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”

“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15-சூரியனிடத்துள்ள ஒளியைப் போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்-சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.

அவ்யக்ர மநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவார யிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.-சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்”பிராட்டியைக் கண்டு வந்தமை அறியாதிருக்கச் செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால் ருசியமூக மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்து போன காலம் கடந்திருக்கச் செய்தேயும் மது வனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாக வேணும்’ அன்றோ. பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜ புத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

“ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.-“பெரியதான தேரில் இருந்தார்கள்”-மாயப் போர் தேர்ப் பாகன் அன்றோ -போர் பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”-ன்று தானே அருளிச் செய்தான் அன்றோ.-

“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.-“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?-த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.-நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.-சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” 
அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன–என்னுமாறுபோலே.

“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால் தான் எனக்குப் பயன் யாது?”

“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்த ஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது-பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப் பட்டது”-நைவ தம்ஸாந் – ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“-மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை”-காட்டு ஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்”,

ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்

அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-“அங்குரூரன் கொடிய மனமுடையவன்

“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.-இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்க லோகத்திற்குச் செல்லுவேன்”-எங்குச் சென்றாகிலும் கண்டு -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-

மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.-ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும் அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”-தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத் தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும் என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். -“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”

ஸபுத்ர பௌத்ரஸ் ஸ கண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”-என் திருமார்வற்கு –எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?

கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;-பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”-அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.-ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம்

“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”என்பது, ஜிதந்தா-தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்”

ஹே கோவிந்த ஸம் ப்ரமை துஷ்ய ந ஏதத் பரமம் தனம் அந்யதாவா விசேஷேண த்வாம் அர்ச்சியிதும் ஷம க -பாரதம்
ஓ கண்ணனே எங்களுடைய பரபரப்பினால் மாத்ரம் சந்தோஷம் அசையும் -இது தான் எங்களுக்கு மிகப் பெரிய தனம் -இல்லாவிட்டால் விசேஷமாய் தேவரீர் பூஜை செய்வதற்குத் தகுந்தவன் யார் -எவருமில்லை என்றபடி –பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்-விதுரனின் பரபரப்பே உகந்தான் அன்றோ

“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தி யுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்”

“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.-கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1

உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை

உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு

“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.-இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்”

அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.-இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன

அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இரா நின்றான்”

“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, ஸ்தோத்திர ரத்நம். 24.-பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது
இப்போது உனக்குக் கிடைத்தது”

அநந்த பவார்ணவாந்த சிராய நிமஞ்சத மே கூலமிவ லப்தோஸி பகவன் தயாய அநுத்தமம் பாத்ரம் இதம் த்வயாபி இதாநீம் லப்தம் -ஸ்தோத்ர ரத்னம்
த்ரிவித பரிச்சேத ரஹிதனே சம்சாரக்கடலில் உள்ளே அநாதி காலம் எல்லாம் அழுந்தி கிடக்கும் எனக்குக் கரை போலே நீ அகப்பட்டாய் -ஞாநாதி குண பூர்ணனே தயைக்கு உத்தம உத்தமமான பாத்திரமாக இந்த வஸ்து தேவரீராலும் இப்போது அடையப்பட்டது –

ஹே லஷ்மண த்வயம் மயா ஸார்த்தம் இமாம் வஸூந்தராம் ப்ரஸாதி -மே த்வதீயம் அந்தராத்மாநம் த்வாம் இயம் ஸ்ரீ உபஸதிதா -அயோத்யா -4-43-
ஓ லஷ்மணா என்னுடன் கூட இந்தப் பூமியை ஆளக் கடவாய் -என்னுடைய இரண்டாவதான ஆத்மாவாய் இருக்கிற உன்னை இந்த லஷ்மியானது வந்திருக்கிறது –

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19-என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்”

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.-இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்-

வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது-சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் – புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் – ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்-1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.-2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.-3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;-சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது- “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது (மகராலய:-மீன் குட்டை –அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.-சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”-அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –-பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே-“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.-மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;-தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.-அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,-திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.-விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?-என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.-இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.-பெரு வாயா –திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் “வட்டிக்கு வட்டி ஏறின கடனைப் போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை”-குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

“யஸஸ: ச ஏக பாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19-கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”-விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20-“எல்லாராலும் அறியப்பட்டவர்”-பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது-

“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்”-“ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸ புராணம்- “அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்-

வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ண பர்வம்.-ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய கல்யாண குணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல-பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.-“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீ ராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”உலப்பு இல் கீர்த்தி அம்மானே –-

தேவ வாசஸ்பதிர் யதா ஸத்ய வாதீ மதுரவாக் மூர்த்திமாந் கந்தர்ப்ப இவ ரூபவாந் ஸூபகஸ் ஸ்ரீமான் -ஸூந்தர -34-30- ப்ரகாசகரான பிரஹஸ்பதி போல் யதார்த்த வாக்குடையவர் -செவிக்கினிய வாக்குடையவர் -பிரசஸ்த ஸரீரமுடைய மன்மதன் போல் ஸூந்தர ரூபமுடையவர் -ரமணீயர் -காந்தியை யுடையவர் —தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . ..ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”-மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –-

நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.

இஷு ஷயாத் நிவர்த்தந்தே ந அந்தரிக்ஷ ஷிதி ஷயாத் மதி ஷயாத் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-பாணங்கள் இல்லாமையால் திரும்புகிறார்கள் -பூமி ஆகாயம் இவை அழிந்துவிட்டன என்பதால் அல்ல -அது போலே புத்தி இல்லாமையால் திரும்புகிறார்களே ஒழிய கண்ணனுடைய குணங்கள் முடிந்து விட்டன என்பதால் அல்ல –

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்-

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.- நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.-இராவணனே யானாலும்” 

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.- படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.-ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.-காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே, அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.-நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன். நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.-வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”-என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.-“கணவனைத் தழுவிக் கொண்டாள்” என்னுமவள்.-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை, எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை.-முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;-இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் –-இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.-தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு-முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.-கர்ப்ப பூதா: தபோதநா:- தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது, தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;-அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ – பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே,-ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் – முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை; ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே – இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடைய வர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது; அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை:
தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.-“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில் தரிக்கப்படுகின்றது”

ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.-மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”-என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : -“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை”

ராக்ஷசை வத்யமாநாநாம் வாநராணாம் மஹா சமூ ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.-“ராக்ஷஸர்களால் ஹிம்சை செய்யப்பட வானரர்களுடைய பெரிய கூட்டங்கள் ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன”

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.-இராஐஸ தமஸ குணங்கள் தலை எடுத்தபோது ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்கள்; முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும் புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று ஸ்துதி செய்யத் தொடங்குவர்கள்-

ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65-“ஓ நாதனே! அசுர சேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து உன்னைச் சரண் அடைந்தார்கள்”

ஸ பிரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.-அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்”

அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.-சிவபெருமான் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு விஷ்ணுவைப் பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடு கூடச் சொல்லுதற்கு விரும்பினான்-

தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.-ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபை செய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்; எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடு பட வேண்டும்-

தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.-நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்”

கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,-சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?”

“ந கால: தத்ரவை ப்ரபு:”-அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்-“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்-திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்-

அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –த்வயத்துக்கு லக்ஷணம்

நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை

ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.-“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்-

“மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3-பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்”

தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.-பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ –துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.-

அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.-“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லா நிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;-ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”.என்னப் பண்ணுமவள்-

காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32-“தன் இருப்பிடத்தை அடைந்தான்

ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:” என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது,-வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.-உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்ல வேணும் என்ன, “இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,-தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.-பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்

“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.-தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்”

உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன்,
அவனுக்கு இவள் ஈஸ்வரி என்று சொல்லுகையாலே.“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ ஸூக்தம்.“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.-ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.-கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.-எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே, அவள் கடாக்ஷம் அடியாகப் புருவ நெரிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும்-நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளா ஸூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் ஸ்வரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது

ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 17.-“போக மாத்ர ஸாம்ய லிங்காத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 21.-உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,-“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே-

“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,

முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.-கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”

பாபாநாம் வா ஸுபாநாம் வா–இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம். நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.-வதார்ஹாணாம் –தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,-‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்-உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.-“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும் “நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.-பிலவங்கம–பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.-அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;-யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,-அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;-நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.-கார்யம் கருணம் – இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்-ஆர்யேண –இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.-அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.-நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.-ந கஸ்சித் ந அபராத்யதி- சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்! திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25-வீற்றிருந்து –“அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்”

கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.-ஸ்வாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;-இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading