ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்
ராம — ராமனுக்கு; அநுஜ — பிற்பாடு உண்டான–இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்-யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான்.
ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.
லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள்
ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி
ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம் -(தயா ஶதகம் 8)
பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில் (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.-க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை-வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||-தயா ஶதகம் 7-நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில் அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.
ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.
ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.-பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் | யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா ப்ரபாவ:||(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)-பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.
ராமாநுஜ என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும்
ராமாநுஜ என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.
ராமாநுஜ என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது.தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே-என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தமாகும்
ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது.
ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.-வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் || ( யதிராஜஸப்ததி)
தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் || ( தயாஶதகம்)
ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது.-அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.-எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது.
ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.-பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள்.
ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார்.
ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு.த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி⁴:(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத் கதா³சித் ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம்(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:|| (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்” (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே| ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்) தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² (ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி) ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம் (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
(ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய: (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³ நிக³மே (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)ஶ்ராவ்யவேதா³த் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய: (தாத்பர்யரத்னாவளி)ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார்
ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது.
ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது.
ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார்.
ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார்–ஆசார்ய நிஷ்டை-வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே(நாச்சியார் திருமொழி)
ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்)
ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.-தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.
ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது.
ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது.
ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்-ஸ்ரீதத்வமுக்தா கலாபம்)-தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்|| (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)
ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)-மஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்| சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் || (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)-பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார்.-ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம்-ஸ்ரீதத்வடீகை
ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது.ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும்
ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)
ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது-ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்)-ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं
ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)
என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.
ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார்
ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார்-உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை),
ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.-ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)-வ்யாதாநீத் வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்
)ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)
ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.-பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந் (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது. இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா(அதிகரணசாராவளி)அஶ்ரௌஷம் சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி)நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்)வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்)ததூக்தா ….. மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி)
ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்)இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை)யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)
ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார் (ரஹஸ்யத்ரயஸாரம்)
மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply