ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் ஸ்வாமிகள்-

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் (அன்னமய்யா) (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) தென்னிந்திய இசையில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். திருமலை திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1408-1503) ஆந்திராவில் உள்ள தாள்ளபாக்கம் கிராமத்தில் பிறந்த தெலுங்கு வைணவ ஆச்சாரியர் ஆவார். இவர் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். 95 ஆண்டுகள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் துவாதசி (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். 

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாளபாக்கம் கிராமத்தில் ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மே 9, 1408- அன்று அன்னமாசாரியர் மகனாகப் பிறந்தார். நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவுத்தொழில் செய்துவந்தார். “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான “திம்மக்கா” அன்னமாச்சாரியாரின் மனைவி. மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

தாளப்பாக்கம் அன்னமாசாரியரின் தந்தை இவரை அடுத்த ஊருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் கட்டைத் தூக்கிவரும்படி ஏவினார். வைக்கோல் கட்டைத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சதியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருளால் கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினார். பெற்றோர்கள் இவரைத் தேடி வந்து தம் கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக திருமால் மீது பாடினார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயர் இவரைப் பாடுமாறு வேண்டினார். மனிதரைப் பாட மறுத்தவரை சாளுவ மன்னர் விலங்கிட்டுச் சிறையிலிட்டார். விலங்குகள் தாமே தெறித்து விழுவதைக் கண்ட மன்னர் இவரது பெருமையை உணர்ந்து பணிந்ததாக நம்பப்படுகிறது.

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இசைநூல்களை எழுதினார். சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் போன்ற பிற தெலுங்கு நூல்களையும் இயற்றினார். அன்னமாசாரியர் பாடிய இசைப்பாடல்கள் கீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல. இவை திருவேங்கடநாதன் புகழையும், நாம சங்கீர்த்தனங்களையும் பாடியவை. அன்னமாசாரியரின் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டில் சங்கீத வடிவம் பெற்றன. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.

இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர்.

அன்னமாச்சாரியார் 32,000-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றினார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலிலுள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறையில் வைக்கப்பட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் 1922-ல் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. கீர்த்தனைகள் சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என வகைப்படுத்தப்பட்டன. வைணவ ஆச்சாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தைத் தழுவிய இவரின் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்களைப் போன்ற கருத்துடையவை. ராமானுஜர் மீதும், ஆழ்வார்கள் மீதும் சில பாடல்களைப் பாடினார்.

அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, “மோக்காலு_மிட்டா” என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு “முழங்கால் முறிச்சான்” என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை “மோகாலு மிட்டா” என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு…) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதியக் கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் “ப்ரஹ்மம் ஒக்கடே” என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளைக் கண்டித்தார். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளைத் தொடர்ந்து கேட்பதினாலேயே பொருள் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டும் கீர்த்தனைகளை இயற்றினார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் எழுதினார். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் எழுதிய திவிபர்த ராமாயணா(இரண்டடி ராமாயணம்), சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டு நூல்களும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.

அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரைவரிசை செய்தார்.

அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகள் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தன. இவற்றால் கோயில்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமாச்சாரியரின் பாடல்களினால் ஆந்திரநாட்டில் பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆழ்வார், நாயன்மார் பாசுரங்களினால் உந்தப்பட்டு அன்னமாச்சாரியர் பக்திப்பாடல்கள் பாடினார்.

அன்னமையா பாடியவை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழை என்பது அறிஞர்கள் கருத்து. அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதினர்.

ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் “தலப்பாகமரா” எனப்படும் “சங்கீர்த்தன பண்டார” என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். “தலப்பாக” கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு “சங்கீர்த்தன பாதுகாப்பு அறை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. “ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. “சங்கீர்த்தன பண்டார” அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’அன்னமய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். இவரது பாடல்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொண்ணூற்றி ஐந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா பிப்ரவரி 23, 1503-ல் காலமானார்.2019-ல் ஆந்திர மாநிலம், துவாரகையில் அன்னமாச்சாரியாருக்காக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி – தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் – சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

இசைநூல்கள்

சங்கீர்த்தன லட்சணம்

தெலுங்கு நூல்கள்

வேங்கடாசல மாகாத்மியம்

12 சதக நூல்கள்

சிருங்கார மஞ்சரி

இரண்டடி இராமாயணம்

சிருங்கார சங்கீர்த்தனம்

அத்யாத்மிக சங்கீர்த்தனம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading