ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -திருப்பாவை —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –ஸ்ரீ வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் உடன் தொகுத்தவை–

நாராயணனே -திருப்பாவை -1-
பாற் கடலுள் பையத் துயின்ற -திருப்பாவை –2-
மன்னு வட மதுரை மைந்தனை -திருப்பாவை –5-
விண்ணோர் தலைவா -கேசவா -ஆயர் குல முதலே -திருவாய் மொழி -1-5-6-

பர வ்யூஹ விபவ நிலைகள் மூன்றையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உதசருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம்
பர வ்யூஹ விபவ ஆத்மாநா த்ரிவிதம் பரஹம இதி பாகவத சித்தாந்த -பராசர பட்டர்
க -பிரமன் -ஈச சிவன் இவர்களுக்கு உதபாதகனாய் ஆஸ்ரயநீயனான ஷீராப்தி சாயீ கேசவன்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

விண்ணோர் தலைவா –விரோதி பிரசங்கம் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவனே –
கேசவா–அவர்களை போல் அன்றியே ப்ரயோஜனாந்தர பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் சத்தா ஹேதுவாகையாலே கேசவன் என்னும் திருநாமம் யுடையவனே –
மனை சேர் ஆயர் குல முதலே -குடிசில் கூடக் கொண்டு திரிகையாலே மனையோடு சேர்ந்த ஆயருடைய குலத்துக்கு மூலமானவனே
மா மாயனே -அபர்யந்தமான நவ நீத ஸுர்யாதி ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே –
மாதவா-அதுக்கு அடியாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்று பிராமண ஸித்தமான இவ்வாதார கதமான ஸ்ரீ யபதித்தவத்தாலே -மாதவன் என்ற திருநாமம் யுடையவனே

விண்ணோர் தலைவா –
நிரந்தர அனுபவம் பண்ணுவாரை ஒரு நாடாக யுடையவனே –
கேசவா –
அவர்களால் பர்யாப்தி பிறவாதே திருத்தி அடிமை கொள்ளுகைக்கு -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான் -என்று
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகனுமாய் -தன் மத்யச்தனாய் வந்து அவதரிக்கும் படி –

மனை சேர் ஆயர் குல முதலே –
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல்
இவ்வருகே இடையர் இருந்த மனைகளிலே வந்து அவர்கள் குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே
மனை சேர்ந்த ஆயர் என்னவுமாம்
மூங்கில்களை கையோடு கொண்டு போய் பசுக்களுக்கு புல் உள்ள விடத்தே வளைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்கை
புலவிக் குல வானவர் தம் கோ -என்னும் அதுக்கு அவ்வருகே யாயிற்று ஆயர் குல முதலே -என்கிற இது
மா மாயனே
சர்வ சக்தியாய் இருந்து வைத்து வெண்ணெய் களவிலே இழிந்து அதை தலைக் கட்ட மாட்டாதே கட்டுண்டு நிற்கும் ஆச்சர்யம்
மாதவா –
இவ் வெளிமைக்கு நிதானம் இருக்கிற படி -அவளை உகப்பிக்கை யாகிறது -ஆஸ்ரிதற்கு எளியன் ஆகை இறே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –

வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்
மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள் என்னவுமாம் –

இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயணா சப்தார்த்தம் -என்றும்-

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்
நாராயண பரம் பரமம் -என்றும்
பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-

சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்-
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

பையத் துயின்ற
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே-பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது-சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே-நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –கௌசல்யா ஸூ ப்ரஜா ராம — உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்-
நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ-என்று பயப்பட்டு-
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்-ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய-ஹ்யாகதோ-மதுராம் புரீம் -என்னக் கடவது இறே

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –-மல்லை  மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே -அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )–நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப் பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே- பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் –பரம பதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே – கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு – கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –
பரம பதம் கலவிருக்கை என்னும்படி-பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை – விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை-
பிராப்யமும் தானே யாகை-இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை –
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு-அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே- அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு-நித்யனானவன்-
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு-சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே-மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

——–

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் -அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று – சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-(நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது – அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்-விலக்காமையும் அதுக்கு அடியான சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசங்கமாம் –

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்–ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை –சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே-உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே – இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது–இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-தருவான் –பிராப்தி உண்டானாலும் அவன் தரக் கொள்ள வேணும் என்னுமிடம் தோற்றுகிறது-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்- ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா –தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்-நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்-அருள் தருவான் அது நம் விதி வகையே

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1

நல்ல வருள்கள்
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-

நமக்கே தந்தருள் செய்வான் –நிர்ஹேதுகமாகையாலே விலக்ஷணமான ஆத்மந ஆஸந்தி அந்த பிரவேச
விரோதி நிவர்த்தக அனுபவங்களுக்கு அடியான நிரவதிக கிருபைகளை-தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னிடை வைத்தாய் -என்கிற கணக்கிலே -நமக்கே அசாதாரணமாக தந்து மேலும் இடை விடாமல் அருள் செய்வானாய்
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே
– -9-4-2-

கண்ணே உன்னைக் காணக் கருதி –எனக்கு தர்சன சாதன பூதனாய்க் கொண்டு த்ருஷ்ட்டி யானவனே –-சாதன பூதனான உன்னையே சதா தர்சனம் பண்ணி அனுபவிக்கக் கருதி –காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே-பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –-அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இ றே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –

————–

மலரிட்டு நாம் முடியோம் -திருப்பாவை -2-
இனிப் பிறவி யான் வேண்டேன் -திருவாய்மொழி -10-6-1-

அவன் தானே வந்து சூட்டில் செய்யல் ஆவது இல்லை என்பதால் நாம் விசேஷித்து அருளுகிறாள் –
ஆழ்வாரும் என் புத்தியால் விட்டேன் -அவன் இருத்தலில் செய்யல் ஆவது இல்லை -ஈட்டு திவ்ய ஸ்ரீ ஸூக்தி

மலரிட்டு நாம் முடியோம் – சுரும்பார் குழல் கோதை -என்றும்–வாசம் செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது – அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை -பூச் சூடுகை போக ரூபமாகையாலே -மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் –என்கிறது –தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால் சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்–நாம் முடியோம் – அவன் தான் மாலையைக் கொடு வந்து-மயிரை முடித்து அலங்கரித்து-விரல் கவ்வி- இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை- அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை – நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே – அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை -யான் வேண்டேன் – என் புத்தியால் விட்டேன் – அவன் இருத்தில் செய்யலாவது இல்லை-

————-

தூயோமாய் -திருப்பாவை -5–தூயோமாய -திருப்பாவை -16
ஆசற்றார் மாசற்றார் -திருமாலை -22

பிரயோஜனாந்தர பரத்வமும் -உபாயாந்தர -பரத்வமும் -இல்லாத தூய்மை
ஆசு -மாசு -குற்றம் –
பகவானே உபய உபேயங்கள் என்று அறிந்த தூய்மை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-இடைச்சிகள் தூய்மை இறே – தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே – அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே – (தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ ) விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது – அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது – திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய்-அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –-அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

ஆசு -குற்றம்-உபாய விஷயமாக வரும் குற்றம் –அதாகிறது
1-பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
2-அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது –
தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

மாசற்றார்-
இதுவும் ஒரு மானஸ தோஷம் ஆயிற்று –-அதுவும் பிராப்ய ஆபாசங்களிலே பிராப்ய புத்தியைப் பண்ணி இருக்கை –அவன் தன்னையே பற்றி ஐஸ்வர்யாதிகளை லபித்துப் போகா நிற்பர்கள் –அங்கன் அன்றியே-அவன் தன்னையே பெற வேண்டும் என்று இருக்கை -மாசறுகை யாவது –

————-

நாராயணன் மூர்த்தி கேசவன் -திருப்பாவை -7–வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்
கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை -சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்
கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்-கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து-உறங்கக் கடவையோ

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை–கோ ரக்ஷணத்துக்கு முடி சூடினவனாய் ரஷ்ய விரோதியான மதுவுக்கு நிராசகனாய் – அத்யுஜ்ஜ்வல தேஜோ ரூப ஸிம்ஹம் போலே விரோதிகளுக்கு அநபிபவ நீயனானவனை-அதாவது ஆஸ்ரித பவ்யனாய் இருக்கையும் -தத் விரோதி நிரசீலனாய் இருக்கையும் அநாஸ்ரிதர்க்கு அ நபிபவ நீயனாய் இருக்கையும் –ஜ்வலந்தம் – விளங்குகின்றவனை’ என்கிறபடியே, ‘கோளரி’ என்கிறார்.-(உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்)

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

கோளரியஸ்ய சா ஜனகாத்மஜா -அப்ரமேயம் ஹி தத் தேஜ--என்கிற பெருமை
எல்லாம் தோற்ற மேணானிப்போடே வந்தபடி-மாதவன் – பரம ரசிகன் என்று தோற்ற நடந்து வந்த படி –கோவிந்தன் – விவாஹமாய் இரா நின்றது -ஆராலே என்ன விக்நம் வரும் -என்று அறியாமையாலேஎல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொடு வந்தபடி

——-

மாமாயன் மாதவன் வைகுந்தன் -திருப்பாவை -9-
தீ வினைக்கு அரு நஞ்சே -தேவி மணாளனை -ஆயனை -திரு விருத்தம்-89-
சௌலப்யம் பரத்வம் இரண்டுக்கும் மூல காரணம் ஸ்ரீ மத் வத்வம் -மத்ய மணி ந்யாயம் –மஹா மாயன் -172—மாதவன் -73-வைகுண்ட: 406
72. பூகர்ப்ப:, 73. மாதவ:, 74. மதுஸுதன: |

ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || –8-

மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்-குண மாயா சமாவ்ருத -ஜிதந்தா–குணங்கள் என்ற மாயை மூலம் மறைத்த படி-மாயை என்பது பொய் என்ற பொருளில் இல்லை என்ற படி-மம மாயா துரத்யயா-பகவத் ஸ்வரூபம் திரோதானகரி தானே பிரகிருதி -நாம் மருள் உற்றவர் -தெருள் உற்ற ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-எல்லையில் மாயன் -3-10-8-

வைகுண்ட: — –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்-குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூகர்ப்ப: — பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை.-ஓம் பூ கர்ப்பாய நம
பூமியை ரக்ஷித்து அருளுபவர் உண்டு உமிழ்ந்து இத்யாதி செய்ததால்-பார்வண்ண மடமங்கை பத்தர் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்-அரவாகி சுமத்தி யால் -எயிற்றால் ஏந்தி —அறிந்தால் சீறாளோ -விராடன் ஸ்துதி
மாதவ: — திருவுக்கும் திருவாகிய செல்வர்.-அஸ்ய ஈசாநா ஜகதீ விஷ்ணு பத்நீ–புருஷ ஸூக்தம்ஹ்ரீஸ் ச தே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17--மஹா விஷ்ணுவே உனக்குப் பூமா தேவியும் மஹா லஷ்மியும் பத்னிகள்-நித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ -அநபாயிநீ- யதா ஸர்வ கதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
அந்தணரே உலகின் தாயான இந்த மஹா லஷ்மி நித்தியமாக இருப்பவள்
ஒரு நொடி கூட மஹா விஷ்ணுபைப் பிரியாமல் உள்ளவள்
மஹா விஷ்ணு எவ்விதம் வியாபித்து உள்ளானோ அது போன்று இவளும் எங்கும் வியாபித்து உள்ளாள்-திருவுக்கும் திருவாகிய செல்வன்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்-மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
மதுஸூதந: — மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி.: —இந்திரியங்களுக்கு மது என்று பெயர்-இவற்றைத் தன் பக்கம் இழுப்பதால் மது ஸூதனன் எனப்படுகிறான் நித்ய ஸூரிகளின் இந்திரியங்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் தன் வசப்படுத்தி வைத்துள்ளதாலும் அவனுக்கு மது ஸூதனன் என்னும் பெயர் என்றுமாம்

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே-அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-

மாதவன் –
அதுக்கடியான ஸ்ரீ ய பதி–அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-சுவையன் திருவின் மணாளன் –

வைகுந்தன் –
ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்
அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் -பெண்களையே அன்றிக்கே ஆண்களையும் அடிமை கொண்டு ஒரு நாட்டுக்காக கையாளாய் இருக்குமவன் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தை உடையவன் –

மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்-நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக
ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை-பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை

நல் வினைக்கு இன்னமுதினை ––
பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )நிரதிசய போக்யனாய் பரம ப்ராப்யனாய் உள்ளவனை-இப்படி பாபங்களை போக்குகைக்கும் – தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –

பூவினை மேவிய தேவி மணாளனை
பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே நித்ய வாஸத்தை யுடையளாய் நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே-சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-வல்லாயனை–மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –

———–

சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது-ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய-பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே -தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –கோபஸ்ய வசமே இவான்-க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்–விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே – ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்–தன் இச்சா ரூபமான அபிமத விக்ரகங்களை பரிக்ரஹித்துஆஸ்ரித வாத்சல்யத்தை யுடைய தான் ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலே தன் சீற்றம் முடிப்பானாய் இருப்பானாய்-பிரஜையை நலிந்தவர்களை தாய் தனக்கு சத்ருசு என்று நிலைக்குமா போலே-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது
ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )

அருள் என்று நமக்கு உத்தேச்யம் –ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி –(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

கொண்ட சீற்றம் –
சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம் தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால் சரீரி பேசாது இரானே
வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே
இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –ஓன்று உண்டு-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

———–

பொல்லா அரக்கனை -திருப்பாவை -13
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–13-

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி-நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது- முன்பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம்) -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் விபீஷணஸ் து தர்மாத்மா –நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-த்வன் நீச -என்றாள் இறே(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )-மாயா மிருகத்தைக் காட்டுவார் – மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப்
ஸூ கேச்யா-என்றும்-சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –பிரித்த கொடுமையில் –அனந்யா ராகவேணாஹம்-என்றும்-அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்
இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும்-இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-கடு விசை யரக்கன்-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான
ராவணன் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

பொல்லா  அரக்கன் -திருப்பாவை -13
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு-துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா-அநர்த்த ஹேதுவான சரீரத்தோடு உண்டான சம்பந்தத்தை அறுக்க உத்யோகித்தாலும் என்னால் அறுக்கலாம் படி அல்ல –துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-தன்பக்கல் போக்யதா புத்தியைப் பிறப்பித்து, ஈஸ்வரனுடைய போக்யதையை திரஸ்கரிப்பிக்கும் .
எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இ றே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி–பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.சிறையிலே கிடப்பாரைப் போலே பிரக்ருதியிலே கிடக்கிற நான் ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும் நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்-இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

———-

கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளி களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –மறுவலிடாத படி கிழங்கோடு வாங்கின படி–கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப் பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி-மோடி பருத்து இருக்கிறபடி-சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய் -தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

கல்லெடுத்து
அவன் எடுத்தது –சோலை சூழ் குன்றாய் இருக்க –
கல்லெடுத்து –அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.-வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க– ஒரு சிலா மாதரத்தை எடுத்தால் போலே ஒசழக்காகச் சொல்கிறாள் –ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்த போதை அநாயாசத்தை கண்டு இருந்தவள் ஆகையாலே இந்த சக்தி இறே இவள் ஹ்ர்தயத்தில் கிடப்பது -கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே என்று இருக்குமவள் இறே –
அசக்தாதிகாரம் இது சக்தாதிகாரம் இது -சாதனாந்தரங்கள் -என்கிற வார்த்தைகள்
நம் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் புகுரக் கடவது அன்றியே இறே இருப்பது –
சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை –ஈஸ்வர சக்தியைக் கொண்டு
தலை எடுக்கைக்கு என்று இருக்கும் கோஷ்டி இறே

பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-

———-

சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் -திருப்பாவை -14-
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள் திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்-அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே -ஜிதம் தே –பண்ண வைக்குமே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை
ப் பாடேலோ ரெம்பாவாய்-14-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும் திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை-ஆசைப்படப் பண்ணுமதுவும் அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

தாமரைக் கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
(ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு – ஆங்கு மலரும் குவியும் என்கிற திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –-விடவே செய்து விழிக்கும் -(1-7)-கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரிசங்கொடு-ஆழி ஏந்தித்தாமரைக் கண்ணன் -ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை-முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி-திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,-ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி-.பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும்
விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா –
செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே
உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

செய்ய கண்ணா-புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே-உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –

————–

நாயகனாய் நின்ற -திருப்பாவை -16
தெருள் கொள் -திருவாய்மொழி -5-7-3-
நாயணன் -நந்தகோபனுக்கும் -கோயில் காப்பானுக்கும் அந்வயம்
தெருள் கொள் -அடை மொழியை நான்மறைக்கும் -வல்லவா -இரண்டுக்கும் அந்வயம் –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும் பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே-தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது-பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு-ஞானாதிசயத்தை யுடையராய்க் கொண்டு நாலுவகைப்பட்ட வேதங்களையும் தங்கள் நினைத்தபடி நிர்வகிக்க வல்லவர்கள் பலரும் பகவத் அனுபவத்தால் சம்பன்னராய் வர்த்திக்கிற ஸ்ரீ வர மங்கல நகருக்கு-தெருள் கொள் நான்மறை என்று வேத விசேஷணம் ஆகவுமாம்-வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்

————

அம்பரம்–உம்பர்கோமானே எழுந்திராய் -திருப்பாவை -17
நல்கி ..பொழில் ஏழும் வினையேற்கே -திருவாய்மொழி -1-4-5-
அகலிடம் படித்து –வாரான் -திருவாய்மொழி -9-9-2-
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு -கலியன் -9-4-9-
ஆண்டாளும் -பராங்குச பரகால நாயகிகளும்  வருந்த ஒரே காரணம்
நாட்டுக்கு உள்ள நியாயம் அந்த புரத்துக்கு இல்லையாய் யாயிற்றே
சாமான்யத்தில் பண்ணும் ரஷணம்  விசேஷத்தில் இன்றிக்கே இருப்பது என்று –

ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்களாய் மானவர்களுக்கோ கார்யம் செய்யலாவது –
அபலைகளுமாய் அனன்யா பிரயோஜனைகளுமான வர்களுக்கு கார்யம் செய்யலாகாதோ
வரையாதே உகப்பாரையும் யுகவாதாரையும் தீண்டுகிற நீ -ஆசைப்பட்ட எங்களைத் தீண்டல் ஆகாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்யக் கடவ யுனக்கு நாங்கள் அர்த்திக்கை குற்றமோ –
நீ நிபுணரான இந்த்ராதிகளுக்கோ கார்யம் செய்யலாவது -அநிபுணரான எங்கள் கார்யம் செய்யலாகாதோ
உறங்குவாரை தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தாரை தழுவல் ஆகாதோ
அவிசேஷஞ்ஞமான விபூதிக்காக உன்னைக் கொடுத்தால் வாசி அறிவார்க்கு உன்னைக் கொடுக்கலாகாதோ –
கழஞ்சு மண்ணை ஆசைப்படாதே உன்னை ஆசைப்பட்டது இழவுக்கு உடலாயத் தாகாதே

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து–எங்கும் அளிக்கின்ற –பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்-இப்போது வாராது ஒழிகிறான் – என்றது-–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்-தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கி
உலகங்களைக் காப்பாற்றும்போது, கார்த்த்வயா புத்தி இன்றிக்கே -செய்து தீர வேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறு தன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள்.
அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி.-தான்-அபேக்ஷிப்பார் இன்றிக்கே -விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள்.-காத்தளித்தல் என்பது–விருப்பமில்லாதன வற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல்.-பொழிலேழும் உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள்.
அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு
அதனோடு மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும்.
ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக் கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக் காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள்-வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-
‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி.-வினையேன்-‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம் படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.

இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு,-பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன் மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும்,-வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் – ஜகத்துக்கு கண் (வழி )காட்டியாக வேதத்தை உண்டாக்கி-அத்தாலே ப்ரதிபாத்யனான தன்னைக் கிட்டுகைக்கு சாதனமாக யாகாத்ய உபகரணங்களையும் உண்டாக்கி அதுக்கு பல பூமியான ஸ்வர்க்கங்களை உண்டாக்கி ஜகத்துக்கு பிரகாசத்தை பண்ணக் கடவரான சந்திர ஸூர்யர்களையும் உண்டாக்கி அவ் வழியாலே ஜகதாகாரனாய் இருக்கிறவன் –அருள் தந்தவா நமக்குப் – அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே- (ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய ஸூவ ஜன ரக்ஷிதா -கண்ணனைப் போல் இல்லாமல்
தம் ஜனங்களையும் ரக்ஷிக்கும் ராமனும் நமக்கு அரிதாவதே )

———-

பஞ்ச சயனம் -திருப்பாவை -19–அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி –மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு- கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –கண் உறங்குவதே-பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்-பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது-அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது – அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-
சுருண்டு நெய்த்து பரிமளிதமாய் என்றாப் போலே அஞ்சு வகைப் பட்டிருப்பதாய்த்
(இருட்சி நீட்சி சுருட்ச்சி குளிர்ச்சி அழகு ஐந்தும் -அல்லும் -இருட்டு -கறுத்து )
இருண்டு இருந்துள்ள மயிர் முடியை உடைய பிராட்டியை கொடு போங்கோள்-அஞ்சு -என்று அஞ்சு வகைப் பட்டிருக்கை – அல் -என்று இராத்திரி-அத்தால் இருட்சியை நினைக்கிறது –ஓதி -என்று மயிர் முடி –

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் -அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை
ந கச்சித் ந அபராத்யதி என்னும் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

————

கப்பம் தவிர்க்கும் -திருப்பாவை -20-கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்-கப்பம் தவிர்க்கும்–கப்பம் -என்கிறது கம்பம் -என்கிறபடி -அதாவது நடுக்கம் – கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துக் கிடக்கிறது –அஸூர ராஷசராலே குடி இருப்பு உள் பட இழந்து-புகலிடம் அற்றுப் படுகிற நடுக்கைத்தை தவிர்க்கை –நாட்டார் நடுக்கத்தை தவிர்க்கக் கடவ நீ –-எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்-அவர்கள் நடுக்கத்துக்கும் எங்கள் நடுக்கத்துக்கும் வாசி அறிய வேண்டாவோ –அவர்கள் நடுக்கம் எதிரிகள் நிமித்தமாக-உன்னைக் கிடையாது ஒழியப் புகுகிறதோ -என்று எங்களுக்கு நடுக்கம்-கப்பம் -என்று இறை யாகவுமாம் –ராவணாதிகளுக்குப் பணிப் பூ விட்டு திரியாமைக்காக-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–
9-4-7-

ரண்டு கூறாம் படி பண்ண வல்ல திரு நகத்தை யுடையவுமாய் -ஆர்த்தருடைய ஆர்த்தியைத் தீர்க்கும் நரசிம்ம ரூபி யானவனே -நகத்தாயே-நகந்தாய் என்று மெல்கிக்  கிடக்கிறது –நகத்தாய்-என்று வல்லொற்றை மெல்லொற்றாய்க் கிடக்கிறது என்று கிடக்கிறது-இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல-நகத்தை உடையவனே-நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் ஹிரண்யனுடைய மார்பகத்தில் பெரிய இடத்தை இரு கூறாம்படியாக நகத்தை தாவும்படி பண்ணின ஸ்ரீ நரஸிம்ஹமான திவ்ய ரூபத்தை யுடையவன்-

——————

பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -திருப்பாவை -21
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர்  எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –

ஆற்றப் படைத்தான் மகனேஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்-நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே 
—4-9-5-

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே   –
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு-ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும் உகந்து அருளின நிலங்கள் –தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

———-

அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல்  போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் நீ கிருபை செய்து அருள வேணும் இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை- ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
–1-9-3-

ஹேய ப்ரத்ய நீகமாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்வரூப வைலக்ஷண்யமும்- நித்ய ஸூரி நிர்வாஹகத்வ ரூபமான மேன்மையும்-விலக்ஷண விக்ரஹ யோகமும் —
புண்டரீகாக்ஷத்வமும் -கருட வாஹனத்வமும் -ஸ்ரீ யபதித்வமும்–ஆகிற பரத்வ சிஹ்னங்களாய் யுள்ள அறு சுவையும் -தாரா நின்றான்-என் அளவில் நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்-
——————————————–

கன்று குணிலா எறிந்தாய் -திருப்பாவை -24-விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்-குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க) மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க) வாசியற பழி கேடன் என்று சொல்லும் படி இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய்
ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் –

குணம் போற்றி-பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ – அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் ––குன்று குடையா வெடுத்தாய்-விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான்
நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –ஆநிரைக்கு அழிவு என்று  மா மழை நின்று காத்து உகந்தான் – பசுக்களுக்கு அழிவு வருமன்று மகா வர்ஷத்தை மலையை எடுத்துக் கொண்டு நின்று காத்து இவற்றுக்கு உறுப்பாக பெற்றோம் -என்று உகந்தவன் –நில மா மகட்கு இனியான்- பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே- பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –

———–

ஒருத்தி மகனாய் -திருப்பாவை -25
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய்  வளர்ந்ததும் கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 ) தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்-சர்வ வியாபகனுமாய் நித்யனுமாய் இருக்கிற மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் ) சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே – தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –இவன் பிறந்த போதே ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே  நம் பிறப்பு பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )

ஒருத்தி மகனாய் பிறந்து வளர -திருப்பாவை -25
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

அங்கே பிறந்து இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி-ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்-திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும் ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-ஈன்ற முதல்  தாய் சடகோபன் -மொய்ம்பால்  வளர்த்த இதத்தாய் இராமானுசன் –இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –

அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –
வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

தீங்கு -திருப்பாவை -25
பொல்லா  -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

———————-

மாலே -திருப்பாவை -26
நெடுமாலே -திருவாய்மொழி -5-8-1-
இருவரும் ஆஸ்ரித வ்யாமோகத்தை அருளுகிறார்கள் –
சம புத்தியால் மாலே இடைப்பென்கள் வார்த்தை மால் வியாமோகம்
நெடுமால் மிக வியாமோகம் -நீராய் அலைந்து கரைய என்கிற அடைவு

மாலே-முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் – சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு-ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே – ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே – பெண்களை பிரியாமைக்கு இறே-மாலே -மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
உன் பக்கல் உள்ள நிரதிசய அநு க்ரஹத்தாலே நீராய் உருகும்படி பண்ணி வைத்து எனக்கு
அரியையாய் இருக்கிறவனே -உன் பக்கல் யுண்டான ஸ்நேஹாதிசயத்தாலே அசேதனமான என்னுடைய சரீரமும் கூட அத்யந்த சிதிலமாம் படி பண்ணுகிற அபி நிவேச ப்ரகர்ஷத்தை யுடையவனே-ஜலமயமாம் படி கட்டுக் குலைந்து ஒரு நிலையில் நில்லாத வ்யாகுலமாய்
ஆஸ்ரயமும் தெரியாதபடி கரையும்படியாக உருகப் பண்ணா நிற்கிற அபரிச்சின்ன போக்யதா மஹாத்ம்யத்தை யுடையவனே-நெடுமாலே!-1-சர்வேஸ்வரன் என்னுதல் -2-போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -3-வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -4-இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –5-தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -6-தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்

ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின்,-நெடுமாலே’ என்கிறார். என்றது, எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு என்றபடி.
அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராத படியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-நெடுமால்’ என்னில் என்னுமித்தனை.
மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை.
அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் – மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்-சர்வேச்வரன் என்றபடி.
அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.-
பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது -என்றவாறு-

——–

சூடகமே -திருப்பாவை -26
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம் -பிடித்த கைக்கும் அணைத்த தோளுக்கும் அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும் ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப்  பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –

சூடகமே-பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்-

தோள் வளையே –அந்த ஸ்பர்சத்தாலே -அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

தோடே-தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

செவிப் பூவே –அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு –முகந்து பார்க்க )விஷயமான இடம்

பாடகமே–அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம் –

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

கை வண்ணம் இத்யாதி –
அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் –
பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது-தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-

1-கை வண்ணம் தாமரை —-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற – இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால் குறையும் தலைக் கட்டும் கண் – இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே
அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே- அடியும் அக்தே -என்றது உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

கூடாரை வெல்லும் கோவிந்தா -திருப்பாவை -27
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது – கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது-வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே–பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்தி — விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –

கூடாரை வெல்லும் –-ஆந்தனையும் பார்த்தால் –-ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் – வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும் அங்கதனை இட்டும் பின்பு வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் – வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 ) ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது-பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் – லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்-பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் ) ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற துரியோதனனை வெல்ல வல்லனானான் –நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும் தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

எல்லாரையும் வெல்வது குணத்தால் – கூடுவாரை சீலத்தாலே வெல்லும் – கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்-ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் — சீலம் அழகுக்கு இலக்காகும் –அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்-சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்-அம்பு தோல் புரையே போம் – அழகு உயிர்க் கொலை யாக்கும்

சீர்-அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் – சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

கோவிந்தா – கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத மாத்ரத்திலே ரஷித்த படி –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

மகா மேருவிலே  தன் வெற்றி எல்லாம் தோன்றும்படி தன் அடையாளத்தை இட்டுப் போந்தான்-அப்படியே பரம பதம் கலவிருக்கையான  ஈஸ்வரன் இங்கு நின்றும் இவர் பக்கலிலே வரும் அளவும் உண்டான பாவக் காட்டையும் சீய்த்து இவர் வன்னியத்தையும் அறுத்து இவர் –சென்னித் திடரில் பாத இலச்சினை-வைத்த படிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகிறது –இவர் வருதல் இருவரும் பாதி பாதி வழி வருதல் செய்கை அன்றிகே அவன் தானே வந்தான் ஆய்த்து –மலைக்கு உள்ளது விலக்காமை இறே
1-அப்படியே வருவானும்
2-வழியில் உள்ள விரோதிகளை போக்குவானும்
3-தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் -தானே இறே -இவர்க்கும்

பொறித்தாய்-கர்ம பாரதந்த்ர்யத்தால் பொறித்த பொறி போல் அன்றி-ஈஸ்வர பரதந்த்ர்யமாக பொறித்த பொறி-

—————

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -திருப்பாவை -28
நம்பீ -திருமாலை -25
குண பூர்த்தி -அனுபவம் இருவரும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -நைச்ய அநு சந்தானம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அவன் மேன்மை அனுசந்தானம் –
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் -என் கண் இல்லை -நின் கணும் பக்தன் அல்லேன் -நைச்ய அநு சந்தானம் –

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ சர்வ நிரபேஷன் -என்கை-எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ-உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –

1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-

1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –2-ஸாவதியும் அன்று –3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-(1-எதையும் எதிர்பாராமல்-2-எல்லைக்கு உட்படாதது-3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )

1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே

1-நிரபேஷனைப் பற்றாய் —2-பூர்ணணைப் பற்றாய் –3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –

நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் – நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையேபயன் இருவருக்கும் ஆனபின்பு--மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா-இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்- அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி-கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-

கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் – கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்

களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் –ப்ராஹ்மண்யம் –ஒளித்திட்டேன் – ப்ராஹ்மண்யம் இல்லாமை என் அளவாய் போகை அன்றிக்கே இவ் வர்ணம் தான் தண்ணிது -என்னும்படி பண்ணினேன் –விசிஷ்டராய் இருப்பாரைக் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ என்று கொண்டு அவர்களுக்கும் அவத்யமாம் படி திரிந்தேன் – இது இறே நான் கர்ம யோகத்தில் நின்ற நிலை-என் கண் இல்லை--என் விஷயமாக எனக்கு ஒன்றும் இல்லை – ஆத்ம விஷய ஞானம் எனக்கு இல்லை -என்கை-கர்ம யோகம் இல்லை என்ற போதே தத் சாத்யமான ஜ்ஞான யோகம் இல்லை என்னும் இடம் அர்த்த சித்தம் அன்றோ -என்னில் – இஜ் ஜன்மத்தில் அனுஷ்டித்த தொரு கர்மம் இல்லை யாகிலும் பூர்வ ஜன்மத்தில் கர்ம யோகம் பக்வமாய் அவ் வளவிலே தேக விஸ்லேஷம் பிறந்து அனந்தர ஜன்மத்திலே ஜ்ஞானம் நைசர்க்கிகமாய் இருக்கும் இறே – அதுவும் இல்லை என்கை –

ஆனால் பக்தி யோகம் இருந்தபடி என் என்னில் –நின் கணும் பக்தனும் அல்லேன் –
கண்டார்க்கு ஸ்ப்ர்ஹை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத உன் பக்கல் எனக்கு ஸ்நேஹமும் இல்லை –கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க –
உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –அதவா
கர்ம ஜ்ஞான பக்திகள் மூன்றையும் தனித் தனியே உபாயமாகச் சொல்லுவாரும் உண்டு –
அந்த பிரகாரத்தில் சொல்லிற்றாகவுமாம் –கர்மனை வஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய –என்றும்-சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்-பக்த்யாத் வனன்ய யாசக்ய -என்றும் – சொல்லக் கடவது இறே –இது இறே கர்ம ஜ்ஞான பக்திகளிலே நான் நின்ற நிலை –மற்றும் இவ் விஷயத்தில் அறிவுடையார் – நோற்ற நோன்பு இலேன் -என்றும்
கறைவைகள் பின் சென்று -என்றும்-ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் தம் தாம் வெறுமைகளை பேற்றுக்கு உடலாக முன்னிட்டுக் கொண்டு போரக் கடவதாய் இறே இருப்பது –

நம்பி –நான் உபயாந்தரங்களில் வெறுமையில் பூரணன் ஆனவோபாதி
தேவரீர் சீலாதி குண பரிபூர்ணன் அல்லீரோ – தேவரீர் உடைய பூர்த்தி சஹகார நிரபேஷம் அன்றோ –அறிவொன்றும் இல்லாத -அநந்தரம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றாள் இறே –கடல் வண்ணா – தேவரீர் உடைய சீலாதி குண பரி பூர்த்தி எல்லாம் வேணுமோ – வடிவு அழகே அமையாதோ என் பேற்றுக்கு –-ஒரு கடலோடு ஸ்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இறே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது –ஐயப் பாடு அறுத்துத் தோன்றும் அழகன் – இவ் வடிவு அழகு இறே இவர் பற்றாசாகச் சொல்லிப் போந்தது –

———–

கறைவைகள் -திருப்பாவை -28 -த்வய பூர்வ வாக்யார்த்தம் –-அகலகில்லேன் -திருவாய்மொழி -6-10-10–த்வய பூர்வ வாக்யார்த்தம்-சிற்றம் -திருப்பாவை -த்வய உத்தர வாக்யார்த்தம் – ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி –த்வய உத்தர வாக்யார்த்தம் -மேம்பொருள் -திருமாலை -38-த்வ்யார்த்தம் –

மேம்பொருள் -திருமாலை -38-மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலேஇப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான்
என் என்னில்-வ்யுத்பத்தி வேளையிலே-பிராப்யம் முன்னாகவும்-பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இறே-ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இறே வ்யுத்பத்தி வேளை இருப்பது –அனுஷ்டான வேளையிலே ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இறே ஸ்வர்க்க சித்தி பிராபக நிஷ்டையால் இறே பிராப்யம் சித்திக்கும்-அப்படியே இப் பாட்டிலே வுயுத்பத்தி வேளையாய் த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –அதில் பூர்வ பாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்-அவ் விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து

மேம்பொருள் போக விட்டு -என்றும் ஐம்புலன் அகத்தடக்கி -என்றும் நமஸ் சப்தார்த்தம் சொல்லப் பட்டது-மெய்ம்மையை மிக உணர்ந்து -என்கிற இது –
நாராயண பதத்தில் –நார -சப்தார்த்தம் சொல்லிற்றாய் அந்த சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தியை ஒழிய ஸ்திதி இல்லாமையாலே சேஷித்வம் ஆர்த்தமாய் சொல்லிற்றாய்
ஆக –நாராயண -சப்தார்த்தம் சொல்லிற்றாய் -ஆய்த்து-உணர்ந்து -என்று கொண்டு
ஜ்ஞாத்ருவ பரமாகச் சொல்லுகையாலே பிரணவார்த்தம் சொல்லிற்றாயிற்று-இப்பாட்டில் குறையும் பூர்வார்த்தத்தில் சொல்லுகிற பிராபகத்தைச் சொல்லுகிறது –உன் கடைத் தலை இருந்து –உன் தலைக்கடை -என்றபடி – சரணவ் -என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –காம்பற தலை சிரைத்து -என்ற இடம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை சொல்லுகிறது –சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும் நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்
உன் -என்கிற இதிலே –லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –கடைத்தலை -என்றது
சரணவ்  -என்றபடி –இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில் உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான் போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –சோம்பரை –
என்றது –பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான அதிகாரியைச் சொல்லிற்று –

—————–

வங்கக் கடல் கடைந்த மாதவனை -திருப்பாவை -30
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –

வங்கக் கடல் கடைந்த-தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )-விண்ணவர் அமுதுண்ண என்று ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன் அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

மாதவனை –ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் –
அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது -பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக – -என்கிறது –பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து
அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –
கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

———-

மாதவனை திருமாலால் -திருப்பாவை -30-
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீ ய பதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை  இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி

செல்வத் திருமாலால் –உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –-இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை-திருமால் –செல்வம்-திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது-இங்கு உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம்
வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –(மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே)செல்வத் திருமாலால் உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே-இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்–புருஷகார யோகம் என்ன கைங்கர்ய வர்த்தகம் என்ன இரண்டு ஆகாரத்தையும் யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டனானவனுடைய மாதவன் என்கிற திரு நாமத்தை
பூர்வ கண்ட மர்யாதையாலே உபாயத்வேன ஆஸ்ரயணீயன் என்றும்
உத்தர கண்ட மர்யாதையாலே உபேயாத்வேன புருஷார்ய பூதன் என்றும் அனுசந்தித்து
உச்சரிக்கைக்கு -கிடையாதது கிடைத்தது -என்ற பேர் ஆதாரத்துடன் சொல்ல வல்லி கோளாகில்-மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி –
ஆச்சார்யா ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது-பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122-ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று –

————-

தண் தெரியல் -திருப்பாவை -30
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் -அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பைங்கமலத் தண் தெரியல் –பிராமணருக்கு தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை – தண்ணம் துழாய் அழல் போல் (திருவிருத்தம் -3 )-என்று வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே கொதித்துக் கிடவாதே
பெரியாழ்வார் கழுத்தில் மாலை –பிரித்தவன் மாலை போல் அன்றே சேர்ப்பார் மாலை –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading