திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி
எங்கனே என்னில்-
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்கிற இடத்தில்
முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்திலே
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று
கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது
நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும்
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்
கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்
நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
முதலில் அருளிய -நாராயணன் பர வஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –-ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு-அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் (பெரிய திருமொழி -6-10 )என்று – அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் – அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது –மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே பிராட்டி சந்நிதி யுண்டானால் சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –
கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை – ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை – பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே போக்க வல்லவன்-அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் –
மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
மா மாயன் மாதவன் என்றும் –
கேசவனைப் பாடவும் -என்றும் –
மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும்
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்–கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –
நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும்
நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும்
சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்
முதலில் அருளியதே விவரித்து மேல் 29
பாசுரங்களும் நாராயணனே நமக்கே பறை தருவான் -பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம் இது தன்னையே மேலில் பாட்டில் விபரிக்கின்றான –
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்-
மேல் பிராபகம் –பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –
முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –
நந்த கோபன் குமரன் –பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி-வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –
பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது-பெரியாழ்வார் மகள் ஆகையாலே சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –ஆற்றப் படைத்தான் மகனே -என்று இறே
ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் –விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று இவருக்கு தேவராய்
வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –இவர் மகளாய் ஆண்டாள் நிறம் பெற்றாள்-ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இறே
தமக்கு உத்கர்ஷமாகச் சொல்லுவது
நந்த கோபன் குமரன் –யசோதை இளஞ்சிங்கம் -முதலிலும் -அம்பரமே பாசுரத்திலும்-நந்தகோபாலா எழுந்திராய் -யசோதா அறிவுறாய் – தாய் தந்தை -உண்டே
வகுள மாலிகை -திருமலை நம்பி -இருவருமே திருமலையில் உண்டே
பெற்றும் பேறு இழந்தது தேவகியும் புற்றும்
முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல் ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –
கார்மேனி -செங்கண்-
வடிவாலே அணைத்து-கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-கண்ண பிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல் ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார் மேனி” எனப்பட்டது.-தங்கள் ஆடப் போகிற தடாகம்(கார் மேகத்தில் அன்றோ நீராடப்போகிறார்கள் )-செங்கண் அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் – அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே–அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே–ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –
செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்ய லாபத்தாலே திருக் கண்களும் செவ்வி பெற்று
திரு முகமும் குளிர்ந்த படி-கண்ணன் கோள் இழை வாண் முகம் – அதிலே நீரார் கமலம் போல் செங்கண்- தோழிமார் பாரி கோள் என்று ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த
கடாக்ஷமும் முகமும்-செங்கண்-கதிர் மதியம் போல் முகத்தான் – பங்கயக் கண்ணானை –
செங்கண் சிறுச் சிறிதே –-அங்கண் இரண்டும் கொண்டு என்று முடிய இம் முகமும் கடாக்ஷமும் இறே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –திங்கள் திருமுகம் -என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும் அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் -செங்கண் திருமுகம் -முகத்தையும்
ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்-
——–
1-7-10 மூன்றிலும்–நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்–நாராயணனே நமக்கே பறை தருவான்-இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்–சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –நாராயணன் மூர்த்தி-கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான் அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்–நாராயணன் – முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்—நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ – வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ – உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –நாற்றத் துழாய் முடி நாராயணன் -ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ-நாராயணன் -இங்கு மூன்றாவது -நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக்கடல் நிறைந்தவன்-ரம் -அழிய வைக்கும்
கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –
———
1-28-29-
முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை -பிராப்ய பிராபகங்களை
சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே -இப்படி –சப்த த்வயத்திலே அருளியதை காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து கறவை -என்று பிராபகம் முன்னாக -சிற்றம் என்று பிராப்யம் பின்னாக -அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும்
முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்- சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது – நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம்
உன் பொற்றாமரை அடி -என்றும் –சரண -சப்தார்த்தமும் –
சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –
மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே – மாதவனே என்றும் – மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –செல்வத் திருமாலால் -என்றும் – பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-
——-
முதலும் 29 பாசுரமும்
முதலில் பிராப்ய பிரதிக்ஜை-29 பாட்டில் பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –
——–
முதலும் இரண்டாவதும் -முதல் பாசுரத்தில் நாராயணனே -ஏவகாரம் -மாமேகம் என்றால் போலே-உபாய நைர பேஷ்யம் -நிர பேஷ உபாய பூதன் இறே பரமாத்மா –
இரண்டாம் பாட்டில் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -சில வியாபாரங்களை கர்தவ்யங்களாக கூறுவது -நிர பேஷ உபாயத்வ பஞ்சகம் ஆகாது – உபாயத்வேன துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லை கைங்கர்ய ரூபேண சாஸ்திர விஹிதங்களை கர்தவ்யங்கள் என்றபடி
நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –செய்யும் கிரிசைகள்-பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —இச்சைக்கு விதேயத்வம் உண்டோ – நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்-அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –
—————-
முதல்-26-30
முதல்-29-30-
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற – ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –ஆகையால் இப்பாட்டு திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று – இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.இம்மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை
மாலே மணி வண்ணா–நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்-சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.-வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள் தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட , மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.-பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே – அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான். என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்-மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .
உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யம் செய்யும் பொழுது ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து -ப்ரபல தர விரோதி –மற்றை நம் காமங்கள் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே –
எனக்கும் பிறருக்கும் அல்ல எனக்கும் உனக்கும் அல்ல -உனக்கே –
மாம் -ஏகம் -என்னையே -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்வது
இதே போல் ப்ராப்யத்தில் -அவன் ஆனந்தத்துக்காகவே -மேல் படி
போக்தாவாகவே இருக்க வேண்டும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ரங்கள் போக்யங்கள்
அஹம் அன்னம் நாமே போக்ய பதார்த்தம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )
கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த
ஞான சக்திகளும் தோற்றுகையாலே
நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்
7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது
———————
இரண்டும் முப்பதும்
இரண்டாம் பாசுரத்தில் -பையத் துயின்ற பரமன் -பாற்கடல் கிடக்கை
30 பாசுரத்தில் கடைந்த -கடல் கடைந்த சரித்ரம்
பௌவ நீர் கிடந்தது –கடைந்த பெற்றியோய் -திருச் சந்த விருத்தம் -28–
பையத் துயின்ற--பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே–ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது -சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-பரமன்-தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு-வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்-வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் – அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை–கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்றுஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –(திருச்சந்த 28)-
கடைந்த பெற்றியோய் – துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் – ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் –
———–
இரண்டும் -29 th பாசுரமும்
அடி பாடி -திருப்பாத கமலங்களின் அனுபவம் -தொடங்கி
அடியே போற்றும் -திருவடிகளின் அனுபவம் முடிக்கிறாள் –
அடி–6 -பிரயோகங்கள்
வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
அடி பாடி –மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே- திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்–பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே–அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்-அம்பரீஷன் துர்வாசர் )சிவந்து-ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்த வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்-பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் – பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்–இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ-திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்-சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)
மாற்றார் உனக்கு வலி தொலைந்து-உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே
உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும் குணங்களுக்குத் தோற்று வந்தோம் –லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே பழைய ராஜ்யத்தைக் கொடுத்து நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி –பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – -திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –-திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-அடி போற்றி அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள் சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை – போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்
கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்—உன் பொற்றாமரை அடியே –மகார்க்கமுமாய் போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை அடியே –போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு-திருவடியை ஆசைப்படும் இத்திரு )உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் — வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே இப் பொன்னடி இருப்பது –உன் –பொன்னடி – எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் – கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் – விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்0ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3) தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால் கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே அழித்தாய் உன் திருவடியால் -கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –
பரமன் அடி பாடி –அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –
———–
இரண்டும் முப்பதும் –
அடி பாடி -திருவடிகளை பிரஸ்தாபித்து கேசவனை -திருக் குழல் அனுபத்தில் முடிக்கிறாள்
பெரியாழ்வார் திருமொழி 1-2- போலே பாதாதி கேசம் அனுபவம் –
கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-பழம் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-பரமன் தன
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-
———-
இரண்டும் 29 th பாசுரமும் –
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
29th பாட்டில் கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –
செய்யும் கிரிசைகள் கேளீரோ–கேளீரோ – பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே- இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே- பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே-என்று
அவர்கள் இந்த லாப அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்-இருக்கையாலே -கேளீரோ -என்கிறார்கள் –மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணும் காலம் —
அசை இடுவார் உண்டோ – இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்-இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்-இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல-போதயந்த பரஸ்பம் பண்ண – ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி-கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து– நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் – இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் – வடிவு அழகிலும் பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி அந்நிய பரனாய் இருந்தான் –எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு-கேளீரோ (2 )-என்று பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் – இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று-
—————–
மூன்று-17-21-
மூன்றிலும் திரி விக்கிரம அனுபவம்
அவனே திரி விக்ரமன் இறே
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி–ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி – பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் – உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே சிறுப்பது பெருப்பதாகிறது-செய்யும் ஆனைத் தொழில்களும் — ஆஸ்ரித பக்ஷ பாதமும் – வடிவு அழகும் – வாத்சல்யமும் – அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –உத்தமன் – இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கிறபடி-தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே-
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி ஊடருத்து-விம்ம வளந்த – இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –உம்பர் கோமானே – இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-ஆண்களுமாய் பிரயோஜனாந்த பரருமாய் வேணுமோ முகம் கொடுக்கைக்கு – அநந்ய பிரயோஜனைகளுமாய் அபலைகளுமானால் ஆகாதோ
எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பருப்பதாக வேணுமோ – இருந்தபடியே காட்ட அமையாதோ-உன் வாசி அறியாதே அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி–பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான் தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-
————-
நான்கு -23 th பாசுரம் –
நான்காவது பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
23 th பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –
இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே- வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து- நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும் -என்ன- செய்யக் கடவ படியை – இன்ன படியும் இன்ன படியும் -என்று-கையோலை செய்து கொடுக்கிறார்கள்-நாட்டார் சிறுமை பாராதே-உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி-உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்-சமுத்ரத்திலே போய் புக்க வேணும் அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது -நடுவே சென்று இழிய வேணும் –கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்-நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்-ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்-ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்-அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய-சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்-பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்- அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் -நின்று அதிர்ந்து – அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது-மாறாதே நின்று அதிர வேணும் –ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்-
சீரிய சிங்காசனத்து இருந்து-நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ – பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது-சீரிய சிங்கம் என்றதோடு –அறிவுற்று என்றதோடு – தீ விழித்து -என்றதோடு – வாசி அற இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –இவையா இவையா என்று தனித் தனியே ஆகர்ஷகம் இறே-மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ-உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம் ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-சதுர்க்கதி இறே-நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை–எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்-இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பெண்காள் –ஒருவரை ஒருவர் எழுப்பி – எல்லாரும் திரண்டு நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி ஆய்ச்சியை எழுப்பி நம்மை எழுப்பி அண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –
———
நான்காம் பாசுரமும் 16th பாசுரமும்
வருண தேவனை அழைக்கும் ஆய்ச்சியர் ஆழி மழைக் கண்ணா -என்கிறார்கள் –
இது இ றே ஸ்ரீ வைஷ்ணவ திரு நாமம் –
ஏகாந்தீ வயப தேஷ் டவ்ய நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவய தஸய சர்வம ஸ ஏவ ஹி -என்னக் கடவது இறே –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் அடியான் என்று இறே —
இந் நியாயம் பதினாறாம் பாட்டிலே- கோயில் காப்பானே -வாசல் காப்பானே -என்ற இடத்திலும் ஒக்கும் —
ஆழி மழைக் கண்ணா —மழைக்கு த்ருஷ்டியாய் நிர்வஹிக்குமவன் ஆகையால் –
மழைக் கண்ணன் என்று அதிகரித்த காரியத்தை இட்டுச் சொல்கிறார்கள்–ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது, “குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால் இன்னது பிடித்தான் என்பது போலே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்-தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும் இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –
கோயில் காப்பானே –வாசல் காப்பானே- சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –இத்தால் சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது-யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் – ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே-
———–
ஐந்தாம் -16 th -28 th -29 th பாசுரங்கள்
ஐந்திலும் 16 th பாசுரத்திலும் -தூயோமாய் -தூயோமாய் -என்று கூறப் பட்டது இறே – சுத்தி
அறிவு ஒன்றும் இலாத ஆய்க் குலத்து பெண்களுக்கு சுத்தியாகச் சொல்லப் பட்டது -ஸ்ரீ வைஷ்ணத்வம் இறே-
அது ஆகிறது -அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் இறே
ஆத்ம யாதாத்மய ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு இந்த அசுத்தி இல்லாமை
இரண்டு பாசுரங்களிலும் சுருங்க கூறப்பட்டு -இது தன்னை 28 th -29 th பாசுரங்களில் விஸ்தரிக்கிறாள் ஆண்டாள் –
தூய பெரு நீர் யமுனை -அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே – திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வெற்றிக்கு கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-தூய்மை யாகிறது பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )கிருஷ்ணனும் பெண்களுமாக ஜல க்ரீடை பண்ணி ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –ஜலக் க்ரீடையிலே பெண்களும் அவனுமாக கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம்
தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க–தூயோமாய் -இடைச்சிகள் தூய்மை இறே – தலை இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா – அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா – நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய் -அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தூ மலர் – மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்-
அநந்ய பிரயோஜனமான பூ விறே-பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்-
தூயோமாய் வந்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் – அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல் ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –
————-
ஐந்து -21-25
பகவத் அவதாரத்தை மக ரிஷிகள் வசன அநு குணமாக -தோன்றும் -தோற்றம் -என்று வர்ணித்த ஆண்டாள் 25 பாசுரத்தில் ஆழ்வார்கள் திரு உள்ளப்படி பிறந்து என்கிறாள் -சம்சாரி தான் தாய் வயிற்றில் பத்து மாசம் தங்கி பிறக்கிறான் -அவன்- பிறப்பை அறுப்பானான பகவான்– பன்னிரு திங்கள் தாய் வயிற்றில் தங்கிப் பிறக்கிறான் –
இது இறே அவன் அவதார ரகசியம் -தத ச த்வாதசே மாசே -பன்னிரு திங்கள் வயிற்றில் என்னக் கடவது இறே
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை–பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் – முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது-தோன்றும் –தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி – கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி – பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்-பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே (ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )
ஒருத்தி மகனாய் பிறந்து –ஆவிர்பவிக்க லாகாதோ – பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ – பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் – இவன் பிறந்த போதே-ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்-நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும் அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –பிறந்து-சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால் தூணிலே தோன்றினாலே போலே ஆதல் – ஆனைக்கு உதவினால் போலே யாதல் – வந்து உதவ அமைந்து இருக்க ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்-
——–
ஐந்து -15-இவ்விரண்டு பாசுரங்களிலும் மாயனை -என்ற சொல் உள்ளது
அர்த்த பேதம் காண்க
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-மாயனை– பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே -மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது- ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்-
அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள்-மாயனை – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய் ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –யாதோ வாசோ நிவர்த்தந்தே– யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்– பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி – மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –மாயனை–தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்–தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று – அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-
——————-
ஆறாம் பாசுரம் -13 th பாசுரம்
இரண்டிலும் -புள்ளும் சிலம்பின -சொற்றொடர் இருப்பினும் பொருளில் வேற்றுமை உள்ளது-முதலில் கூட்டில் நின்றும் சிலம்பின படியை சொல்லிற்று –
மேலே கூட வழியே போகும் இடம் எல்லாம் ஆகாரார்த்தமாக சிதறின படியைச் சொல்லுகிறது – இது கால பேதத்தை அநு சரித்து சிஹ்ன பேதம் கூறின படியாம் –
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்—மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே- வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –-இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்-கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது -அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று– இப்போது பறந்து போகத் தொடங்கிற்–அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –
———–
ஏழும் எட்டும்
ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை ஆண்டாள் கூறுகிறாள் –
கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –-மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் – கண்ணுக்கு தோற்ற நின்று-
நம் விரோதிகளை போக்குமவன்-அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்-(சிலருக்கு அச்சம் கொடுக்கும் -அஸ்தானே பய சங்கை பண்ண வைக்கும் )திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-மாவாய் பிளந்தானை
நம் விரோதிகளை போக்கி நம் அச்சம் தவிர்த்த உபகாரகன் அன்றோ தாரானோ-மாவாய் –
ஸ்ரீ நாரத பகவான் நாம் முடிந்தோம் என்று கதறிக் கொண்டு வந்து விழும் படி இறே வந்து தோன்றின படி – நமக்காக கேசியைக் கொன்று திருவாய்ப்பாடியிலும் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும் உண்டான வன்னியம் அறுத்து பெண்ணும் பேதையும் சகடச் சாத்தாகப் போம்படி பண்ணினவன் நம் கார்யம் செய்யானோ-
——–
ஒன்பதும் பத்தும்
ஒன்பதாம் பாசுரத்தில் -அனந்தல் -என்றும்
பத்தாம் பாசுரத்தில் ஆற்ற அனந்தல் உடையாய் –
இதன் மர்ம அர்த்தத்தை வியாக்யானம் கொண்டு தெளிக–
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ–கிருஷ்ணனுக்கு நெடும் போது ஆடல் கொடுத்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ – நெஞ்சுக்கும் விஷயம் அங்கேயோ –தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள் பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள்
ஆற்ற வனந்தல் உடையாய்–சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ – நீ உணரும் படி காண அமையாதோ –
—————-
ஒன்பதும் -20 th பாசுரமும்
ஒன்பதாம் பாசுரத்தில் மா மாயன் -மாதவன் -வைகுந்தன் -என்று திரு நாம த்ரயத்தில் மத்யத்தில் மாதவன் – அருளி -மத்ய மணி நியாயத்தை கொண்டு அர்த்த நிர்வாஹம் பண்ண பாங்காக அமைந்து உள்ளது – மாதவன் ஆகையாலே மா மாயன் சுலபன் –
மாதவன் ஆகையாலே வைகுந்தன் பராத்பரன் -என்றபடி பரத்வ சௌலப்யங்களுக்கு நிதானம் ஸ்ரீ ய பதித்வம் -என்றபடி –
இருபதாம் பாட்டிலும் இதே நியாயத்தை கொண்டு வியாக்யானம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -உன் மணாளனையும் தந்து -என்றது ஆய்த்து–
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-மா மாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மாதவன் – அதுக்கடியான ஸ்ரீ ய பதி-
அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-(சுவையன் திருவின் மணாளன் –அவள் இடம் கற்ற சுவை ராஸிக்யம் -குருகுல வாஸம் )வைகுந்தன் – ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்-அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் –மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்- நீர்மைக்கு அடியான திரு நாமங்களும் இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்-
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கமும் தட்டொளியும் தந்து-ஆல வட்டமும் கண்ணாடியும் –
நோன்புக்கு வேண்டும் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்-தந்து உன் மணாளனை -உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பு என்று இருந்தோம்– அன்றாய்த்தோ உக்கத்தோ பாதி அவனையும் தர வேணும் –உன் மணாளனை –இவற்றோபாதி உனக்கு உபகரண கோடியிலேயாய்- தன் கார்யம் உன் புத்தி அதீனமாம் படி இருக்கிறவனை-புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு-
———
பத்தும் பதினொன்றும்
பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான் உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இ றே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
-பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள் நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –
போற்றப் பறை தரும் புண்ணியனால் -கிருஷ்ணம் தர்மம் சநாதநம் – புண்ணியன் ஆகையாவது – சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்-புண்ணியனால் -வீழ்ந்த -வீழ்க்கப்பட்ட இல்லையே -வீட்டில் பூச்சி போல் -வீழ்ந்தான் அன்றோ வல்லரக்கர் புக்கு அழுந்த தயரத மரகத மணித்தடம் –
முகில் வண்ணன் பேர் பாட-பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை -நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற-நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட-விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணன்-
———-
பத்தும் -19th பாசுரமும் –
பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால் வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி -அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை புறப்படச் சொலுவார் ராவணாதி களோ பாதி இறே -ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் – இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ-வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ – கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ- படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –-உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே ஒரு வார்த்தை சொல்லாய்-தன்னால் அல்லது செல்லாதே உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு ஒரு வார்த்தையும் அரிதோ – அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-
———–
பதினோராம் பாசுரம் -20 th
பதினோராம் பாட்டில் -செற்றார் -பதம் பாகவதர்கள் உடைய சத்ருக்களைக் குறிக்கிறது –
சர்வம் விஷ்ணு மயம் -என்று இருக்கும் பாகவதர்களுக்கு நேராக சத்ருக்கள் இல்லை –
பகவத விரோதிகளையே தங்கள் விரோதிகளாக நினைக்கிறார்கள் –
நின்பால் பொறுப்ப அரியன கள் பேசில் —-ஆங்கே தலையை அறுப்பதே கருமம் -என்னா நின்றது இறே –
இருபதாம் பாட்டில் -செற்றார் -பதம் பகவத் விரோதிகளைக் குறிக்கிறது
தன்னை ஒழிந்த அனைத்தையும் தனக்கு விபூதியாக கொண்டஸ்ரீ மன் நாராயணனுக்கு – விபூதிமானுக்கு நேராக சத்ருக்கள் இருக்க பிராப்தி இல்லை -ஆயினும் பாகவத அபசாரம் பட்டவர்களை தனது சத்ருக்களாக நினைக்கிறான் -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி-
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்-குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே–செற்றார்-இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் – சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் – பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு – தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி – சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-)பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்-
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்-நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் –-ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்று இருக்கிற தனக்கு சத்ருக்கள் இல்லை இறே – ஆஸ்ரிதருடைய சத்ருக்களே இறே தனக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் – ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணிக் கொடுக்கும் –பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் —சந்தம் மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி-செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-)
———
பதினொன்றாம் பாசுரமும் பன்னிரண்டாம் பாசுரமும்
பதினோராம் பாட்டில் கர்ம அனுஷ்டான தத்பரர் களுடைய பெண்ணை எழுப்புவதையும் –
அடுத்து -ஸ்வ தர்மத்தை காற் கடை கொண்டவனுடைய தங்கையை எழுப்புவதாகவும்
சொற் தொடர் அமைந்து உள்ளது -இது தன்னை பூர்வர்கள் நன்கு விளக்கி அருளி இருக்கிறார்கள் – கர்மம் உத்தேச்யமா த்யாஜ்யமா -என்று விசாரம் செய்து நிஷ்கர்ஷித்தார்கள் -வியாக்யானம் கண்டு தெளியவும் –
கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில் விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்-பல கறந்து –
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும் ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும் பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் – ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும் ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)-சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே-அவர்களுடைய அனுஷ்டானமும் இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்-விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே-நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–நற் செல்வன்–லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –
———-
12 th /21 th பாசுரங்கள்
12 th பாசுரத்தில் எருமை விருத்தாந்தம் -தனது கன்றுக்கு பால் கொடுக்காத நிலையில்
எருமை கனைக்கிற இது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்க பெறாத காலத்தில் பகவன்
குமிறின குமிறலுக்கு ஸ்மாரகம் -என்றவாறு –
21 th பாசுரத்தில் வள்ளல் பெரும் பசுக்கள் விருத்தாந்தம் -பாகவத ஸ்மாரகம் -பகவத்
விஷயத்தை வாரி வாரி வளங்கும் வள்ளல்கள் -தவ கதாம்ருதம் –க்ருண நதி யே பூரிதா ஜநா –என்று இறே கோபிகா கீதம் -ஆழ்வாரும் பதிகம் தோறும் வண் குருகூர் சடகோபன் -என்று தன்னை அருளிச் செய்து கொண்டார் இறே-அதிதி சப்த வாசயர் இறே பாகவதர்கள் -அதிதிகள்-திதி பார்த்து வருவது இல்லை -அவர்கள் வந்து நம்மிடம் பெற்று போகிறார்கள் –
இவர்கள் வந்து தம்முடைய பகவத் ஞானத்தை வழங்குகிறார்கள் -இதுவே வாசி –
கனைத்து-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –கன்றுக்கிரங்கி –தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி – எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்–கலம் இடுவார் இல்லை என்றால் அத்தால் தவிராது – முலையில் கடுப்பு போகாது – போந்தனையும் நின்று பால் சொரியும்-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே-சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –சிலர் அர்த்தியாய இருக்கச் செய்யாதே-வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது-அத்தை நினைத்து இறே ஸ்ரீ மதுர கவிகள் –அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே -என்றது-(இன்ப மாரியான )வண் சடகோபரான இவரைப் போலவே
அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும் முந்துற யுரைக்கேன் (9-8)- சொல்லுகேன் வம்மின் – நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்-
———
13th /22 nd பாசுரங்கள்
13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–ஜிதம் தே புண்டரீ காஷ–தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை – ஆங்கு மலரும் -இத்யாதி — ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும் திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –பங்கயக் கண்ணானை-கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்-தூது செய் கண்கள் இறே-9-9-9–இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும் அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –செங்கண் – வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை-அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம் ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம் வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே-பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே-நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே-கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் – என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே-ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே-அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே-ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)
————
14 th /23 rd பாசுரங்கள்
14th -தங்கள் திருக் கோயில்
23 rd -உன் திருக் கோயில் –16-நந்த கோபனுடையகோயில் காப்பானே நந்தகோபனுடைய கோயில் -உன் கோயில் என்றது
இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை -வாஸ பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது -இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய பிரதாந்யம் கோலக் கடவது இறே – பிரணவம் போலேயும் -ஹிருதய கமலம் போலேயும் -திருவரங்கம் நம்மூர் -என்னக் கடவது இறே –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ -திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் படி —தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ-தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள் தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –
நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளி—உன் கோயில்-நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் – இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே – பிரணவம் போலவும் – ஹ்ருதயக் கமலம் போலவும் திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் ) எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –உபய பிரதானம்-அர்ஜுனன் தேர் தட்டு-
ராச மண்டலம்-ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல்
நந்த கோபனுடைய கோயில் காப்பானே –நந்த கோபனுடைய கோயில் கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் – ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய் நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –
————-
15 th /29 th பாசுரங்கள்
இரண்டும் திருப்பாவை சாரம் பாசுரங்கள்
15 th -வ்யாக்யானத்தில் திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையில் சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது -அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ஸூ க்தி –
பாகதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து, ‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால், அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று – பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-
திருப்பாவை ஆகிறது இப்பாட்டு-பாகவத வைபவம் எல்லே பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே-மற்றை நம் காமங்கள் மாற்று–மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா-ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் – மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் பிதற்றும் பாசுரம்-பசிக்கு மருந்து -பசியைஉண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –
———–
15 th /23 rd பாசுரங்கள்
15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –23 rd பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி –
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்-ஒல்லை நீ போதாய் –உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி – புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்-போந்து எண்ணிக் கோள் – புறப்பட்டு மெய்ப் பாட்டுக் கொள்- மெய்க் காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்- ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்- பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ-
நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளி— சதுர்க்கதி இறே
நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை-நமக்கு இவை எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பிராட்டியோடே இறே கண் வளர்ந்து அருளுவது – அவள் எங்களைத் தனித் தனியே நோக்கி அருளும்படி
நப்பின்னைப் பிராட்டி திருக் கையை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்
——————-
17 th /24 th பாசுரங்கள்
17 th கழல் -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா—-சிவந்து ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்யப் பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே – இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்- இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கழல் போற்றி கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் – காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல் கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி -நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-
———-
18th /29 th பாசுரங்கள்
18 th பாசுரத்தில் நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th பாசுரத்தில் -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்-ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் – இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் – இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் – இவள் உகக்குமது ஆகையாலும் இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே–சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை கொள்ளாது ஒழிய ஒண்ணாது –பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் – ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ-நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ – வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது – பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –நீளா குலேந ஸத்ருசீ – எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –எங்களை-திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது – ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை – பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் – பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் – இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை-
————
19 th /30 th பாசுரங்கள்
19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால் சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –மலர் மார்பா-அவன் அண்டை கொண்ட அரணும்- இவள் ஜீவனமும் –முலையைப் பற்றி அவன் கிடைக்கும் – மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே-திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்-நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே – ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை – மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ-புடைக்கலந்தானை — வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள் நித்ய கிங்கர – கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் – அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்–இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்- உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும் இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –(பெரிய பிராட்டி ஸ்லோகம் கேட்டு அரங்கன் கவசம் வெடித்தது போல் ) வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இறே-
———–
22nd /23rd பாசுரங்கள்
22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி
சம்பந்தத்தை சொல்லி -23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இ றே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –
நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்–கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம் சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள் இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம் ஒருபடி வந்து கிட்டப் பெறுவதே -என்கை – விசத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே-அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம்-யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய் அனந்தரம் தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து – தேஹாத்ம அபிமானத்தை விட்டு ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் – புருஷார்த்தம் அவன் என்றும் – ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் – அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து திருவடிகளில் வந்து கிடக்கும் அளவாய் விட்டது இறே-
சங்கம் இருப்பார் போல் -22-என்ற வார்த்தையைக் கேட்டு
நீங்கள் அநந்ய கதிகள் என்பதே நப்பின்னைப் பிராட்டி பரிக்ரஹமாய் இருந்து வைத்து
என்று திரு உள்ளம் புண்பட்டு – உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் (சிறுபிள்ளை வார்த்தை -அமுக்கியமாக )கேட்டருள ஒண்ணாது – பேர் ஓலக்கமாய் இருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருள வேணும் -என்கிறார்கள்-கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார் குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது-இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-கண் வளருகிற போதை அழகும் –உலாவுகிற போதை அழகும் – கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே-இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் – வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு–81-
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –
பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-
என்னை உன் அழகிய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் –
திருவடிகளைத் தலையிலே வைத்து அருள வேணும் –
திருப்பள்ளி யுணர்ந்து பிராட்டியோடே கூட இருந்து அருள வேணும் –
எழுந்திருந்து என்னெதிரே வந்து அருள வேணும் -என்று இப்புடைகளிலே
தம்முடைய மநோ ரதங்களை யடைய அபேக்ஷிக்கிறார் –ப்ராப்தியை அனுபவித்தார் கீழ் -பிராப்தி பலத்தை அபேக்ஷிக்கிறார் இதில் –இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் – சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் — சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்- ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-
இதே போல்
19th /23rd பாசுரங்கள் –
19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –
26th /27th பாசுரங்கள் –
26th பாசுரத்தில் நோன்புக்கு உபகரணம் வேண்டிய ஆயர் -சிறுமியர்
அடுத்து -27th பாசுரத்தில் -நோன்பு முடிவு பெற்ற பிறகு -பெற வேண்டிய சம்மானத்தை பிரார்த்திக்கிறார்கள் –
1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –
2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )
உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன-பல சங்கங்கள் வேணும்-ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது –-பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் -திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்–பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –விதானமே புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்
கீழில்- தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –சூடகமே அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே – இவர்கள் ஆபரணம் பூண்ட கையை அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது – அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் – வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே – அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )தோள் வளையே -கையைப் பிடித்த அனந்தரம் – அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி- இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-தோடே தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –செவிப் பூவே -அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்-பாடகமே-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்–சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –-2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும் 4-ஸ்பர்சத்துக்கும் 5-தோற்று விழும் துறைக்கும்–சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற –கையைக் காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –
———–
2nd /26th பாசுரங்கள்-
2nd -செய்யாதன செய்யோம் -என்று பூர்வர்கள் செய்யாத கார்யங்களை செய்வது இல்லை
என்று பிரதிக்ஜை செய்தார்கள் -தத் அநு குணமாக அனுஷ்டாநத்தைக் கூறுகிறது 26th பாசுரம் –மேலையார் செய்வனகள் -என்று தங்களுடைய நோன்பு சிஷ்டாசார சித்தம் -ஆகையால் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள் –
செய்யாதன செய்யோம்-விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட-ஆசசரிக்க கடவோம் அல்லோம்-அதாகிறது – ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்- ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்-பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும் வியாசன் சொன்னான் மனு சொன்னான் ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள் யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று – ஞானவான்களுடைய வசனத்தையும் அனுஷ்டானத்தையும் அன்றோ பிரமாணமாகச் சொல்கிறது –வேதங்களுக்கு முன்னே அன்றோ தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது-யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ–
————-
27th /28th /29th பாசுரங்கள் –
கோவிந்த நாம த்ர்யார்த்தம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ –பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-பசுக்களுக்கும் தோற்குமவனே
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ–அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு – நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை – நம்மை அறிந்தாலும் விரகு இல்லை-அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா–பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-அபிதா வ்ருத்தியைப் போக்கி தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே -பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே – பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே-ப்ராப்ய ருசியாலே கண்ணாஞ்சுழலை இடுகையாலும் பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும் இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு-அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால் பர வ்யூஹாதிகளையும் யாதவ வம்சத்தையும் விட்டு இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் – கெடுவாய் நாங்கள் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்-என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை – இடையனாகையாலே அபிதாந வ்ருத்தி போமித்தனை -தாத்பர்ய வ்ருத்தி போகாது என்கை போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )
——–
28th /29th
கறவை -என்ற 28th பாசுரத்தில் -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –என்று பிராப்தியை சொல்லி -சிற்றம் -29th பாசுரத்தில் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று பிராப்தி பலமான கைங்கர்யத்தை பிரார்த்தித்த படி –
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது–உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-நீ எங்களுக்கு உறவு அன்றோ –நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே- ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் 1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது – எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு-பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ – ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்–திரு நாட்டிலே இருக்க்கவுமாம் ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை- காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை
உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )
உனக்கே நாம் ஆட்செய்வோம் –-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து நீ உகந்த அடிமை செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது-கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –
கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று – கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30) (கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது) இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் – (பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் – அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் – (நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்-அப்பாஞ்ச ஜன்யம் )-நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம் போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )
கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே-
————-
1st /30th பாசுரங்கள் –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு அநுபவ ரசிகர்களுக்கு பெரு விருந்து –
பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –
11-வைகுந்தன் -13-புண்ணியன் -14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –
16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -18-மணி வண்ணன்
19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்
30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இ றே பிறந்து படைத்த ஐ ஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இ றே -இவனே ஸ்ரீ ய பதி என்றபடி –
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply