பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு -
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 –
பொருள் தாயம் இத்யாதி – என்னுடைய நாதனானவனே- இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
--------–
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்- முன்பு இவன் கையில் கண்டவை அடைய -அட்டைகள் போல் சுவைப்பர் -என்கிறபடியே இவன் கையில் உள்ளவை நிச் சேஷமாக வாங்கிக் கொள்ளுவார்கள் – இவர்களைக் காணாமல் வைத்தது உண்டாகில்
------------
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய் -
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்--11-
எற்றுக்குறங்கும் பொருள்-எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு
கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்
எற்றுக்குறங்கும் பொருள்-
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உள்ளு கூடு பூரித்த தில்லை யாகில் எங்கள் ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகிற இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இருக்கும் படி அழகிதாய் இருந்தது –
அவனைத் தனியே அனுபவிக்கை கைவல்ய மோஷத்தோடே ஒக்கும் அத்தனை –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்று இருக்க வேண்டாவோ –
(கேவலம் -ஓன்று மட்டும் -பாகவதர் இல்லாமல் பகவானையே அனுபவித்தாலும் கைவல்யம் போல் ஆகுமே )
எற்றுக்கு உறங்கும் பொருள்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே –
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
ஏதுக்காகக் கிடக்கிறாய் –
எற்றுக்கு உறங்கும் பொருள் –
அவனை உகப்பிக்கப் பார்த்தாய் ஆகில் அவன் உடையாரையும் உகப்பிக்க வேணும் காண்
ஸ்வ பிரயோஜனமாக கைங்கர்யத்தில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோமே உனக்கு
1-உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேணும்
2-அவனைப் பிரிந்த அன்று -வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கைக்கு நாங்கள் வேணும்
3-நீயும் அவனும் அனுபவியா நின்றால்–எடுத்துக் கை நீட்ட நாங்கள் வேணும் –
ஆன பின்பு எங்களை ஒழிய உனக்கு விரகு உண்டோ –
எற்றுக் குறங்கும் பொருள் –
உறங்கும் பொருள் எற்றுக்கு-
உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது –
எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா-சொல்லாய் -என்கிறார்கள் –
இப்பாட்டில்
ஜாதி உசிதமான தர்மத்தை-
சாதனா புத்தி அன்றிக்கே-
கைங்கர்ய புத்யா -அனுஷ்டித்தால்-குற்றம் இல்லை என்கிறது
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி
எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன
இல்லை யாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –
புனமயிலே! முகில் வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என இயைத்து,
மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டியிருக்க,
நீ இங்ஙனே கிடந்துறங்குவது என்றிய? என க்ஷேபிக்கின்றனரெனக் கருத்துக் கூறுக.
---------
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் –
இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு
சொல்லத் தொடங்கினவாறே-கேளாய்--இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் –இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று- உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –ஆற்றாமையும் ஸ்வரூபம் ஆகையாலே அடைவு கெட மேலே விழுந்த படி –
---------
கலை கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16-
சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
அபிதாந வ்ர்த்தியாலும் தாத்பர்ய வ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாமையாலே
-----------
மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே
மேம்பொருள் –
இதுக்கு மூன்று படி நிர்வாஹம் –
1-மேல் எழுந்த பொருள் என்றும்
2-மேவின பொருள் என்றும்
3-மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்றும்
மேல் எழுகையாவது –
கர்மம் அடியாக வந்தேறி யாய் –
பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –
இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும்
ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி
நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –
மேவின பொருள் -என்றது –
துரத்யயா -என்கிறபடி
சேதனனால் பிரிக்க ஒண்ணாத படியாய் இருக்கை –
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று
உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இறே
இத்தோட்டை பொருத்தம் இருப்பது –
அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –
மேம்பாட்டை விளைக்கை யாவது -மெய்ப்பாட்டை –
தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –
பொருள் -என்று பதார்த்தம் –
அதாகிறது -தேஹம் –
இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-
---------
நம்பினேன் பிறர் நல் பொருள் தன்னையும்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-
பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவனை
பொருள் -என்று த்ரவ்யம்--நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது--இருப்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது-ஆழ்வார் அளவும் வந்த வன்று இறே இது அனந்யார்ஹம் ஆய்த்தாவது
நன் பொருள்-விலஷண த்ரவ்யம்--என் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள்-என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்-நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும் சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும் அது போலே அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில் ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இறே அவன்
இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இறே
நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று
ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வத்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –
போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
பிறர் நன் பொருள்-உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்
இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்
அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்
அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ
அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌஸ்துபத்தை அன்றோ நான் களவு கண்டது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
ஸ்வம்மும் -விலஷணமாய் -ஸ்வாமி யும் விலஷணமுமாய் இருக்க வன்றோ நான் இவ்வாத்மவஸ்துவை அபஹரித்தது
இவ்வாத்ம அபஹாரம் ஸ்வ தந்த்ரனுக்கும் தேஹாத்மா அபிமாநிக்கும் உண்டாமதாகையாலே இத்தால் தேஹாத்மா அபிமானம் சொல்லிற்று
அப்போது நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் என்று தேஹ ரஷண சேஷமாக-பர த்ரவ்யேஷ் வபித்யானம் -என்கிறபடியே-அந்ய த்ரவ்யங்களையும் ஆசைப்பட்டுப் போந்தேன் என்றுமாம்-அங்கு நன் பொருள் என்றது அவர்கள் நினைவாலே சொல்லுகிறது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-அவ்விடம் தன்னிலும் மேல் எழுந் த்ரவ்யங்களை யாசைப்பட்ட வளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும் மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது
-----------
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-
அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே இறே-
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இறே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்-சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – என்றும் -தத்ஹேது வ்யபதேசாச்ச -ப்ரஹ்ம ஸூத்ரம்-1-1-15–என்றும் சொல்லக் கடவது இறே
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்தானே )
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் / விருத்திக்காரர் -கீதாச்சார்யன் / ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே )இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது
அப்பொருளை-
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை-வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை--தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார்--விருப்பம் உள்ளாருக்கு வேதம் சொல்லும் -ஆழ்வார் சொல்லி விருப்பம் உண்டாக்குவார்-
----------
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடைந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம் –7–
சொல் பொருள் ஆளீர் –
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் நிலவரான நீங்கள்
சொல்லுடைமைக்கு உங்களில் காட்டில் இல்லை
ப்ரமேய ஜ்ஞானம் உடையார் உங்கள் அத்தனை இல்லை-
நல் பொருள் காண்மின் –
நன்றான அர்த்தத்தை கண்டு கொள்ளுங்கோள்
பேறும் தானேயாய் -தன்னைத் தருவதும் தானேயாய் இருக்கை
வாசகங்களில் தலை அகாரம்-
வாஸ்யங்களில் தலை கீழ் நான் சொன்னது-சூழ் புனல் குடந்தை என்று -இதுவே நல் பொருள்-
-------------
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4-
பிறர் பொருள் தாரம்-பிறர் தாரம் பிறர் பொருள்-விஷயாந்தரங்களிலே ப்ருஹையைப் பண்ணுமே – அவற்றில் வந்தால் வம்புலாம் கூந்தலாகவும் வேண்டாம் ஆயிற்று
பிறர் தாம் இத்தனையே ஆயிற்று ஆதரிக்கைக்கு வேண்டுவது –
----------
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-
சொல்-பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்
பொருளும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்
----------
சொல்லு வன் சொற் பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-
சொல்லு –
பிரத்யஷ்யாதிகளுக்கு அவிஷயமாய்-அர்த்தத்தையும் சொல்லக் கடவதான-சப்தம் –
வன் சொல் –இது தன்னிலும் நித்தியமான வேதம் –
பொருள் –துரவகாஹமான வேதார்த்தம் –
தானவையாய் –-அவற்றுக்கு நிர்வாஹகனாய்-(அனுபவிப்பவர்களுக்கும் அனுபவிக்கும் பொருள்களுக்கும் இவனே நிர்வாஹகன் )
--------------
மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம்-
பரந்து நாலுவகைப்பட்ட வேதத்தில் அவ்வோ இடங்கள் தோறும் சொல்லப்பட்ட பதார்த்தங்கள் அடங்க-தனக்கு சரீரதயா பிரகாரமாய் தான் ஒருவனே பிரகாரியாய் இருக்கையாலே சர்வ ஸ்மாத் பரனானவன்-வேதைச சர்வைஸ் ரஹமேவ வேத்யே-என்றான் இறே
-------------
ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-
ஒரு பொருள் –
உன்னை பெறுகைக்கு சாதனம் இதுவே என்று ஓர் அர்த்தத்தைச் சொல்ல வேணும்
---------
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-
உடனே உண்பன் நான் என்று –-இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே-சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )
ஒண் பொருள் –சீரிய அர்த்தம்
---------------
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் –
(இறுத்தேன் -கொடுத்தேன்-உறவுக்காரர்களுக்கு கொடுத்ததும்-இந்திரியங்களுக்கு கொடுத்ததும் )
சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால்அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே –பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே
ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற இரண்டையும் கடமை இறுப்பாரைப் போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்
------------
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-
கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே-தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு-திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
----------
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-
ஒண் பொருள் –
இது சத்தையை உண்டாக்கும் அர்த்தம் –
தான் மரிக்கும் இறே அர்த்த நிமித்தமாக-(லௌகிக பொருள் )
புருஷார்த்த உபயோகியான அர்த்தமுமாய் –
--------------------------
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதார்த்தின் முடிவும் இதுவே-பொருள் முடிவும் –பிரயோஜனத்தின் எல்லை –-அது ஏது என்னில்-உத்தமன் பேர் ஏத்தும் திறம் –எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய-ஒருக்கால் தனக்கும் பாங்கான போது அவனை அனுசந்திக்கப் -பின்பு இவன் கலங்கின சமயத்திலும் அவன் தானே தெளிந்து இருந்து இவனை அவ்வருக படுத்த வல்லவன்-திரு நாமத்தை யேத்துகை-மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –-ஒத்தினுடைய சங்கரஹம்-லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-இவன் பக்கலிலே ஒரு கால் ஸ்ம்ருதி மாதரம் யுண்டாக-பின்னையும் இவனுக்கு ஸ்மரிக்க ஒண்ணாத தசையிலும் –-அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
உணர்ந்து இருந்து நோக்க வல்லவன் திரு நாமத்தைச் சொல்லுமதுவே –
--------------
சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–
திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அறிந்து இருக்கச் செய்தே அறிந்ததாக ஒட்டாத போகத்தால்-அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம்
நினைமின் என்கிற இது-இரண்டு இடத்திலும் கிடக்கிறது-நெருக்கா முன் நினைமின்
திருப்பொலிந்த ஆகம் நினைமின்)-விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -
அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால் வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும்
பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்
---------
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58–
வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த வருள் –
இனிய விது வேம்பு போலே கையா நின்றதே ஆகிலும்-பாடு என்று அருளி அல்லது நிற்கப் போகாதே-அவனுடைய நீர்மையாலே தந்த அருள் –
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -
வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
கையும் திரு ஆழியுமான சேர்த்தி இருந்தபடி கண்டாயே-இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
----------
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று
----------
ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-
ஒண் குருதி அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்-அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை-சொல்லில்–சொல்லத் தொடங்கினால்-கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.
இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத் தந்து -இத்தைக் கொடு போய்
நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு கொடுத்து வாரும் -என்று போக விட –
அப்போது இப்பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய –அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும் தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் –-சாபத்தைப் போக்கினவனோ –
தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ பார்த்துக் கொள்ளும் அத்தனை –
---------------
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே-ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இவ்வளவே –இத்தகையன் என்று யாரால் சொல்ல முடியும்
தனக்கும் தன் தன்மை அறியான்
யதோ வாசோ –நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
எத்தனையேலும் ஞான அதிசரராக இருந்தாலும் அவனது பெருமையை பரிச்சேதிக்க வல்லார்கள் அன்றே-ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-
-----------
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –சகல சப்தங்களின் யுடைய அர்த்தங்களும் அவன் சங்கல்பத்தாலே உண்டாய்த்தின –
லோகத்தில் சொல்லப் படுகிற பதார்த்தங்கள் -என்றுமாம் –பகவத் குண சேஷ்டிதங்களைப் பரக்கச் சொல்லுகிற இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகள்
அதனால் பிரதிபாதிக்கும் தேவாதி ஆத்ம வஸ்துக்கள் – ஸமஸ்த சேதனர்கள்
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் திவ்ய சங்கல்பத்தால் தானே ஒரு வினாடி கூட மிச்சம் இல்லாமல் சத்தை பெற்று வர்த்திக்கின்றன-
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ-ஒரு நொடி மாத்ரம் போது போக்கு இன்றி--ஆச்சர்ய குணத்தில் (ஸத் குணத்தில் ) அகப்படாதது-பர ஹிம்சை விட்டு அவனை ஆஸ்ரயிங்கோள்-அவனுடைய குண விஷயம் அல்லாதன நிஷித்தங்கள்--சேதனர் பர ஹிம்சை பண்ணுகிற இதுக்கு ஹேது-அவனுடைய குண அனுசந்தானத்தைப் பண்ணாமை -என்றுமாம் -ஆன பின்பு -கல்யாண குணகனானவன் திருவடிகளை அழகிதாக அனுசந்தியுங்கோள் -என்கிறார் –உதைப்பளவு – க்ஷணம் பொழுதில்-வதைப்பொருள் -நசித்துப் போகும் வஸ்துக்கள்-
-----------------
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-
சென்று பொருள் –நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –(இப்பொழுது என்னை விட்டுப் பொருள் தேடிப் போகிறாயே )
திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல-கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை-யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள-நிஷேதிக்க முடியாத விஷயம்-எழுந்து அருள ஆகாலாதோ
திரு நாள் அணித்தாய் இருந்தது-நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்றுஇப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்
--------
நளிர் மதி சடையனும் நான் முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும் அகப் படக்-ஒரு பதார்த்தமும் பிரி கதிர் படாத படி எல்லாவற்றையும்
-----------------
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர் பொருள் இல்லை
கண் கண்டது ஒழியப் போகை அரிது-இது பொல்லாது என்று -பரம பதம் வேணும் என்று இருக்கில்-அவன் உகப்பதாகையாலே அது தருகையில் அவனுக்குப் பொருள் இல்லை
--------
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார்
அறம் பொருள் இன்பம் என்று –கீழே புருஷார்த்தத்தை மூன்று என்று சொல்லச் செய்தே இங்கு எடுத்ததுக்கு பிரயோஜனம் என் என்னில் மோஷம் இதின் உள்ளே ஓன்று என்று சொல்லுவார் உண்டாகிலும் என்று அவர்களுக்கு இடமறச் சொல்லுகிறாள் –
---------------
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே
தர்மார்த்த காம மோஷங்கள் என்று லோகத்திலே நன்றான வழியாலே மேற்பட்ட நாலு புருஷார்த்தத்தோடே அடங்கப் பெற்றோம் இறே –
முந்துற முன்னம் –அறம் என்கிறது தர்மத்தை –மன்னு மறம்-என்கிறது சாத்திய ரூபத்தாலும் சாதனா ரூபத்தாலும் ஒக்க கொண்டு நிற்பதொரு நிலை உண்டு இறே
பொருள் என்கிறது -அர்த்த புருஷார்த்தத்தை
இன்பம் என்கிறது -தாம் ஆதரித்த காம புருஷார்த்தத்தை
வீடு என்கிறது நாலாவதாகச் சொல்லுகிற மோஷ புருஷார்த்தத்தை –
---------------
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி –
அவஸ்துவான என்னை லோகத்திலே-ஒரு வஸ்துவாம் படி பண்ணி –
வஸ்து உபாதேயம்-ஆளவந்தார் துளி கடாக்ஷம் பெற்று-
என்னை –
பூர்வ காலத்திலே அசத்தாக -பொருள் அல்லாத என்னை-
புவியில்-
இருள் தரும் மா ஞாலத்தில்
ஒரு பொருளாக்கி –
ஒரு வஸ்துவாகும் படி பண்ணி -ப்ரஹ்ம வித்துக்களிலே அத்வதீயனாக பண்ணி-
பகவத் விஷயத்துக்கும் -கூட ஆள் ஆகாதபடி உலகியல் இன்பத்திலே உழன்ற படியால்
பெரியோர்களால் ஒரு பொருளாக மதிக்கத் தகாத என்னைக் கூட எங்கனம் பொருள் ஆக்கினாரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் –
வடுக நம்பியைப் போலே தம்மையும் பொருளாக்கி ஆள் கொள்ள வேணும் என்று பிரார்த்திப்பது காண்க –
அமுதனாரோ மேலோர்க்கும் வாய்த்தற்கு அரிதான நிலையை எய்தினவர் ஆதலின்-ஒப்பற்ற பொருள் ஆனார் –
ஒரு பொருள்-
ஒப்பற்ற பொருள்
சீரிய பேறு உடையாரான ஆழ்வான் திருவடிக் கீழ் சேர்த்து எம்பெருமானார்
பொருளாக்கினமையின் அமுதனார் ஒப்பு இல்லாத பொருள் ஆனார் -என்க-
கூரத் ஆழ்வான் சரண் கூடி –இராமானுசன் புகழ் பாடி -ஆள் செய்வதாக-மொழியைக் கடக்கும் –என்னும் பாசுரத்தில் அமுதனார் அருளி செய்வது இங்குக் கருத தக்கது –
இவ் ஒப்பற்ற நிலையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்ரம் அன்று –உலகு எங்கும் -என்பார் புவியில் -என்கிறார் –இனி இருள் தரும் மா ஞாலத்திலே என்னவுமாம் –
----------
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட –அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை-வைப்பாய வான் பொருள் என்று
சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று –
விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பதே கமல யுகம் பாதிரம் யம் ததீயம் -என்று
சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று அருளிச் செய்கையாலே –
அப்படி பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே –
இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற
எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4- என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்-ஸ்ரீ மது சூதனையே ஸ்ரீ ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே – நல்லன்பர் ஸ்ரீ எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர்
வைப்பாய பொருள் –பயன் பட பயன் பட -குறைந்து கொண்டே போம் –
ஸ்ரீ எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது – என்பார் -வான் பொருள்-என்றார் –வான்பொருள் என்று –வான் என்று விபு வாசகமாய் –குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம்
----------
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
ஆரணச் சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
சமுத்திர மத்யத்திலே -மறைந்து கிடக்கிற -தரைப்பட்டு கிடக்கிற-மகா ரத்னங்களை எடுத்துக் கொண்டு வந்து உபகரிப்பாரைப் போலே -கடல் போல் கம்பீரமாய் இருந்துள்ள வேதாந்த வாக்யங்களிலே –
தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மானச்ய விஜானதா -என்னும் படியாக –
ரகஸ்ய தமமாய் -விலஷண அர்த்தங்களை அடைவே கடாஷித்து –கீதா சாஸ்திர முகேன உபதேசித்து-ரஷித்து அருள –குக்ய தமமாக பிரதிபாதிக்கப்படுகிற-விலஷண அர்த்தங்களை எல்லாம் -கண்டு திரட்டி –
மன்மனாபவ மத பாகத்த -என்றும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
இரண்டு ஸ்லோகத்தாலே சகல சேதனருடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக -அர்ஜுன வயாஜேன பிரபத்தி-உபதேசம் பண்ணியும்-லோகத்தை எல்லாம் ரஷிக்க என்னவுமாம்
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
எம்பெருமானாரும் அந்த ச்லாக்கியமான கீதா சாஸ்தரத்துக்கு வியாக்யானம் பண்ணி யருளி அத்தைக் கொண்டு –
அன்றிக்கே –
திருக் கோட்டியூர் நம்பியை பதினெட்டு தரம் அனுவர்த்தித்து பரம குக்யம் என்று அவரால் உபதேசிக்கப் பெற்ற-
சரம ஸ்லோக அர்த்தத்தை கொண்டு –தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் –
அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –
------------
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –
பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் –-விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –பொருளும் தர்மமும்-அவ்வீட்டிற்கு சாதனமாய் உள்ளன பொருளும் தருமமும் –-பொருள் தருமத்திற்கு பயன்பட்டு சாதனம் ஆகும்-தருமம் நேரே சாதனம் ஆகும்-நியாயமான முறையிலே பாகவத ஆராதனா ரூபமான தருமத்துக்கு தேடப்படும் பொருள் புருஷார்த்தம் ஆகும்
தர்ம அர்த்த காமங்கள் மூன்றும் ப்ராக்ருதங்களுமாய்-ஸ்வரூப அந அநு ரூபங்களாயுமாய்-இஸ் சரீரத்தோடு அனுபவிக்கபடுமவையாய் இருக்கும்
பொருள் –தாச்யத்துக்கு உபயுக்தமாய் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றுக்கு சாதனமாய் இருக்கிற அர்த்தம் –
அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் –
தர்ம அர்த்த மோஷங்கள் கூடல் இன்பமான காமத்திற்கு உறுப்பாய் பயன்படுவன என்பது ஸ்வாமியின்-உபதேசம் –
தர்மம் பகவத் சம்ச்லேஷ ரூபமான காமத்துக்கு தடங்கலான பாபம் தொலைவதற்கு உபயோகப்படும் –
பொருள் தானம் முதலியவற்றால் அதற்கு உபகரிப்பதாகும் வீடு -அதனை மேலும் மேலும் தொடர்ந்து துய்ப்பதற்கு-ஹேதுவாகும் –
----------
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —
இனி நாம் பழுதே அகலும் பொருள் என் –
இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் –
நாம் என்றது
தம்மையும் ஸ்ரீ எம்பெருமானாரையும் –
அன்றிக்கே –
நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே –
ஸ்ரீ எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் –
---
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –
வேதப் பொருள் இது என்று உன்னி –
வேதாந்தங்களினுடைய தாத்பர்ய அர்த்தம் இதுவே என்று நிரூபித்து-இது வேதப் பொருள் என்று தாம் கொண்ட கொள்கையை அவர்கள் வேதப் பொருள்களாக ஆக்குகின்றனர்-வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –-தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –
செம்மைப் பொருளை அவர்கள் உன்ன வில்லை .-தாங்கள் கற்பித்த பொருளை வேதப் பொருளாக உன்னுகின்றனர்-உண்மைப் பொருளாகிய கயிற்றில் பொய்ப் பொருளாகிய பாம்பு தோற்றுவது போலே – உண்மைப் பொருள் ஆகிய -சத் -எனப்படும் ப்ரஹ்மத்தின் இடத்தில் பொய்ப் பொருளாகிய உலகம் தோற்றுகிறது -கயிற்றினில் பாம்பின் தோற்றம் அச் சொல் தொடரினால் நீக்கப் படுகிறது
ப்ரஹ்மத்தில் உலகின் தோற்றம் இச் சுருதி வாக்கியத்தால் நீக்கப் படுகிறது –
----------
ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –
செம்மை –செவ்வை -ஆர்ஜவம் –-ஆதி மத்திய அவசானங்களிலே-கரூபத சங்கர ஸ்ரீ தர ஆனந்த தீர்த்தாதிகள் போலே தத்தவத்தை உபதேசிக்க வேணும் என்று உபக்ரமித்து – நடுவே தம்முடைய குதர்ஷ்டி பஷத்துக்கு அனுரூபமாக சில அர்த்தங்களை கலந்து -பூர்வோத்தர விருத்தமாக சொல்லுகை அன்றிக்கே –
யதாவச்தித்தார்த்த வபோதகமாய்–உபநிஷத்துகளோடு ஏக வாக்ய தாபன்நமான-பொருள் –ஸ்ரீ கீதா பாஷ்யத்தை –
ஸ்ரீ கண்ணன் தேரினில் அர்ஜுனன் ஒருவனை நோக்கிச் சொன்னான் ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ எம்பெருமானாரோ-அதன் செம்மைப் பொருளைப் பாரினில் அனைவரையும் நோக்கி அருளிச் செய்தார் –ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதை செப்பினானே யன்றி -கேட்ட அர்ஜுனன் தெரிந்து கொள்ளும்படி செப்பிலன் .வ்யாமிச்ரேணை வவாக்யே ந புத்திம் மோஹயஸீவமே –என்று கலந்து கட்டியான வாக்யத்தினாலே என் புத்தியை மயக்குகிறாய் போல் இருக்கிறது -என்று கேட்கும் அர்ஜுனனே கூறுவது காண்க –ஸ்ரீ எம்பெருமானாரோ அனைவரும் தெரிந்து கொள்ளும்படி ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருளைச் சொன்னார் .
---------
மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –
அவப் பொருளாம் இருள் சுரந்து –ஜடாகலாப பச்ம ருத்ராஷ லிங்க தாரணம் தொடக்கமான-நிஷித்தார்த்தங்கள் ஆகிற அந்தகாரமானது வியாபித்து —
அவப் பொருள் -பொல்லாத பொருள் –
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது –
ருத்ர ஹரத்ர்யம் பக ஸ்த்தாணு விருபாஷாதி-சப்தங்களாலே நிஷித்த தர்ம ப்ரவர்த்தனான ருத்ரனுடைய வ்யாப்யத்வத்தை தெரிய மாட்டாதே வேதத்தில் –
ச ப்ரஹ்மா ச சிவா -இத்யாதிகளாலே -அவனே அவனும் அவனும் அவனும் – சாமானாதி கரண்யேன--உக்த வாக்யங்களினுடைய தாத்பர்யத்தையும் -உபக்ரமோபா சம்ஹாரத்தையும் பராமர்சியாதே – ப்ரசம சாபரங்களாயும்-அப்ரசித்தார்த்தங்களாயும் இருந்துள்ள-சூத சம்ஹிதாதிகளுக்கு அனுகூலமாக – அதுக்கு சொன்ன அவப் பொருளாகிற அந்த காரத்தை என்னவுமாம்
அன்றிக்கே –கூறும் அறைப் பொருள் என்று பதச் சேதமாய் –-அவர்கள் சொல்லுகிற காதுகமான அர்த்தவத்தை -என்க--காதுகம் என்கிறது ஆத்மா நாசகம் ஆகையாலே –அங்கனும் அன்றிக்கே-அறை என்று த்வநியாய் –கடலோசை யோபாதியான பொருள் என்னவுமாம் –அவப்பொருள் –பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும்-கீழ்ப் பொருளைப் பரம் பொருளாக்கியும்-உலகினுக்கு உபாதான காரணமாக பிரகிருதி தத்த்வத்தையும் நிமித்த காரணமாக மட்டும் பரம் பொருளையும் சொல்லுவது –வேதப் பொருள் ஆகாமையின்-அவப் பொருளாம் –
ஸ்ரீ நாராயணனே முதல் பெரும் கடவுள்-பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உள்ளானவர்களே -என்பதும் –உலகமாக அப் பெரும் கடவுளே மாறுதலின் -உலகினுக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் அவனே என்பதும்
வேத நூல் ஓதும் உண்மைப் பொருள் என்று அறிக –
எல்லா உயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் –
பதிம் விச்வச்ய -உதாம்ர்தத் வச்யேசான -லோக நாதம் புராபூத்வா –முழு ஏழு உலகுக்கும் நாதன் –என்றும்-சொல்லுகிறபடி-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி -நமக்கு எட்டாத நிலத்தில் அன்றிக்கே –-நாம் இருந்த ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் -என்கிற விசேஷ அர்த்தத்தை-லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி உபதேசித்தார் -அனைவருக்கும் தலைவன் -சேஷி ஒருவனே –
அவனே தன் சேஷித்வம் தோற்றச் சேஷ தற்பத்திலே ஸ்ரீ திருவரங்கத்திலே -பள்ளி கொண்டு இருக்கிறான்-என்னும்-மெய்ப் பொருளை ஸ்ரீ எம்பெருமானார் உணர்த்தி யருளினார் -என்றபடி .-தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன நற் பொருளாக மாற்றப் பட்டது -
------------
கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –
கட்டப் பொருளை மறைப் பொருள் என்று
பரம் ப்ரஹ்மை வாஞ்சம் ப்ரம பரிகதம் சம்சரதி-தத்பரோ பாத்ய லீடம் -இத்யாதி படியே-உப ப்ரஹ்மண விருத்தங்களாயும் -ஸூத்திர விருத்தங்களாயும் -ப்ரத்யஷ விருத்தங்களாயும் இருக்கையாலே-நிஹீன தர்மமான அர்த்தங்களை-வேதார்த்த அர்த்தங்கள் என்று –-கட்டம் -கட்டு –கட்டம்-கஷ்டம் என்னும் வடமொழிச் சொல் இங்கனம் ஆயிற்று –
கட்டப் பொருள் -கஷ்டமான பொருள்-செம் பொருளாய் அல்லாமல் வலிந்து உரைக்கும் பொருள் -என்றபடி –க்லிஷ்ட அர்த்தம் -என்பர் வடநூலார் –
இதுவே மறையின் கருத்தில் உள்ள பொருள் என்கின்றனர் கயவர் .
அது உலகத்தாரை மயக்கச் செய்யும் பேச்சு -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
----------
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்-பரந்த பவ்திக பதார்த்தங்களும் எல்லாம் தானாம் படி அவற்றுக்கு உபாதானமாய் அவ்வோ பதார்த்தங்கள் தோறும்
இவை மிசை படர் பொருள்-இவற்றின் கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள தேவாதி பதார்த்தங்கள் என்ன-இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் –இவற்றை அடியாகக்கொண்டு மேலே விஸ்திருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி.‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. ஆய் என்பான் என் என்னில் -பஹு ஸ்யாம் ( பொருள்களாக விரிகின்றேன்) என்கிற தனது விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி.அவை அவைதொறும்- அவ்வோ பதார்த்தங்கள் தோறும். அவற்றிலே வியாபிக்கும் இடத்திலே –பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி -ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போலே(ஒவ்வொரு பொருளிலும் அவ்வச்சாதித் தன்மை நிறைந்திருத்தல் போன்று )
எல்லாப் பொருள்களிலும் தனித்தனியே குறைவு அற வியாபித்து நிற்கும்
------------
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
ஒண் பொருள்– அகமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய் ஆவிர்ப்பூத ஸ்வரூபமான விலக்ஷண ஆத்ம வர்க்கம்--ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-
-----------
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்–ஆஸ்ரித ஆபி முக்யம் பிரயோஜனம் என்று இந்த லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய-தயா ஷமா ஓவ்தார்யாதி குண ப்ரதை விஷயமாக-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே-கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து-இவற்றை உண்டாக்கி கரண களேபரங்களை கொடுத்து விட்டால் கொடுத்த உபகரணங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களிலே
பிரவணராய் கை கழியப் புக்கால் நம் நினைவு தப்பிற்றே என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றிக்கே – ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும் பிரயோஜனப் படாதோ என்ற பலகாலும் உண்டாக்கா நிற்கும்-
-------------
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-
மன்னா மனிசரைப் பாடிப்-படைக்கும் பெரும்பொருள்! –என்னாவது,– எத்தனை நாளைக்குப் போதும், –நீங்கள் பாடிச் செல்லுந்தனையும் நிலை நில்லாத மநுஷ்யர்களை கவி பாடி பெறாப் பேறாகப் படைக்கும் உங்கள் பாரிப்பாலே பெரிய அர்த்தமானது எது உண்டாம் –உண்டானாலும் எத்தை நாளைக்கு விநியோக அர்ஹமாம்-பாடிப் படைக்கும் பெரும்பொருள்!-இந்த ஸ்ரீ யபதி குறைவற கொடானோ -என்று ஷேப யுக்தி--இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார்.
-------------
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்–ஒரு வஸ்து வென்று புத்தி பண்ண ஒண்ணாத படி அவஸ்துவான என்னை லப்த ஸ்வரூபனாம் படி அங்கீ கரித்து -அதுக்கும் மேலே -வாசிகமான கைங்கர்யத்தையும் கொண்டவனாய்-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம் -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –என் கார் முகில் வண்ணா –-பெருமை பார்க்காமல் அனுக்ரஹித்தாயே-வர்ஷிக்கும் ஸ்தலம் தான் பார்த்தாயோ –-உன் பெருமையை பார்க்காமல்-நீசன் என்றும் பார்க்காமல் ஔதார்யம் -செய்து அருளி -பிரயோஜன நிரபேஷமாய் பண்ணின படி-
------------------
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்–பூமி முதலாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கம ரூபமான பதார்த்தங்கள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–பலவற்றையும் பிரதமத்திலே படைத்தவனாய் -ஜகத் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்த ஸுலப்யத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனாய் –எனக்கு அநு பாவ்யனுமாய் நிரதிசய உஜ்ஜ்வல்ய யுக்தமான திரு வடிவை யுடையவனே –ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ-எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-‘நீ, உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்கிற போது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்?’ என்கிறார்.
அன்றிக்கே,-‘படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் அன்றோ? அது பெற வேண்டாவோ?’ என்னலுமாம்.-அழிந்த உலகத்தை உண்டாக்கின உனக்கு, உள்ளதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?
-------
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-பலவகைப்பட்ட தேவாதி பேதங்களை யுடைத்தாய் புண்ய பாப அனுரூபமாக விஸ்தீர்ணமான பதார்த்தங்களை எல்லாம் ஒன்றும் இன்றியே சூன்யமாய்க் கிடந்த த்விபரார்த்த கால அவசானத்திலே-
தேவாதி பேதங்களை யுடைத்தாய் கர்ம அனுகுணமாக விஸ்திருதமான பதார்த்தங்கள் ஒன்றும் இன்றிக்கே பாழாய் த்விபரார்ர்த்த காலம் சென்ற அளவிலே -தன் சங்கல்பத்தாலே தனக்கு இப்பால் உண்டான காரியத்தை பிறப்பிக்கும் நன்மையுடைய ஜலத்தை ஜலத்தை ஸ்ருஷ்டித்து -அது அண்டமாய் பரிணமித்தவாறே அதிலே சதுர்முகனை ஸ்ருஷ்டித்து-பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.-பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,-இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்.-கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற நிலையுடன் கூடிய காலத்து.
----------
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்–இந்த லோகங்களில் காட்டில் விஞ்சி புறம்பான மகாதாதி ஸமஸ்த பதார்த்தங்கள் பிராமண பிரசித்தமாய் தோன்றின யுண்டாகிலும் அவையும் நீ இட்ட வழக்கு-
---------
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை-திருச் செங்குன்றூர் ஒழிந்த அர்ச்சா ஸ்தலங்களான புகலிடமும் அவனை ஒழிந்து வேறாய் இருப்பது இல்லை -அதுவே அர்த்த ஸ்திதி ஆனாலும்-பொருள் அது -பொருளின் உண்மை அது –ஆகிலும் –இங்கனே இருந்தது ஆகிலும் –
--------
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-
இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல–அவனுக்கு இவ்விருப்பு ஒழிய வேறு புருஷார்த்தம் உண்டோ என்னில்-த்ரிவித சித் அசித் சேஷத்வமும் ஒரு பொருளாய் இருக்கிறது இல்லை –நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –
என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது-இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –
--இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –
மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்
--------------
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்-மற்றும் உள்ள புருஷார்த்தங்கள் தன்னிலே எனக்கும்-ஒரு புருஷார்த்தத்தை சேர்க்க தந்து விட்டானாகில்-தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும் -பின்னை அவன் நிரதிசய புருஷார்த்த பூதனான தன்னை ஆருக்கு கொடுப்பான் –-புறம்பு கொள்வார் இல்லாமல் மறந்தான் அல்லனே -கிருபாகார்யம் என்று கருத்து –இப் பொகடு சரக்கை கொள்வார் இல்லை என்று ஷேபம் -எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்-
----------
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்–கையிலே அர்த்தம் உண்டாய் செல்லக் கண்டார்கள் ஆகில்-மங்களா சாசனம் பண்ணி அவன் கொடுத்ததைக் கையிலே ஏற்றுக் கொண்டு யதாபிலஷிதம் போகா நிற்பர்--ஒருவன் கையில் அர்த்தம் யுண்டாய் பரிமாறக் காணில் –பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனர் சொல்லும் வார்த்தையைச் சொல்லுவார் -இன்னம் அர்த்தம் அநேகம் உனக்கு உண்டாக வேணும் என்பார்கள்-உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள்--நம் ஸம்ருத்தியே தனக்கு பிரயோஜனமாய் இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று குளிர பார்த்து -கண்ணற மாட்டான் என்று அறிந்த வாறே-ஏற்றி எழுவர்-இடலாகாதோ போக என்று எழுந்து இருப்பார்கள் –
---------------
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களினுடைய அறிதற்கு அரிய பொருள்களையும் நிஷ்கர்ஷித்துத் தருவதான ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர இதிஹாச புராணாதிகளான சாஸ்திரங்கள் – யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று சொல்லும் மர்யாதையாலே-அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்–அறிய அரிய பொருள் என்று அறிந்தனவாக கொள்ள அமையும்-துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ
அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது-
அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது-என்னும் இவ்வளவே அறிந்தது –
------------
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து --அவன் தானே இப்படி மேல் விழில்-விழும் அத்தனை போக்கி-தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு-அறியப் போகாது –-ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இறே பிரதானம் –அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று-இது இனிமை இருந்தபடி –
பஹூ மநோ ரத்தங்களைப் பண்ணுகிறான் –பாரிப்பு எண்ண முடியாத அளவு - என் கார்ய விஷயத்தில் பெரியவன் - இயத்தா ரஹிதன் அப்படிப்பட்டவன் என்ற அளவு அல்லன் -ஸ்வரூப அபரிச்சின்னன் என்று சொல்ல முடியாதே மனத்தில் செறிந்தான் திண்ணம் என்பதால் பிரகரணத்துக்கு சேராது – என்றவாறு-விசார அவ்விஷய பூதன்-என்று சொன்னாலோ என்னில்-ஸூ ஷ்ம விஷயம் -எண்ணில் நுண் பொருள் –
-------------
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்–அதி ஸூஷ்மாமாயை அல்பமான ஸ்தலங்கள் தோறும் -அந்த ஸ்தலங்களிலே ஸ்வயம் பிரகாசமான உஜ்ஜவலமான ஆத்ம வஸ்துக்கள் தோறும்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இடம் திகழ் பொருள் தொறும் –அவ்வச் சரீரங்களில் ஞான ஆனந்தங்களோடு கூடி மிளிருகிற ஆத்துமா தோறும்.
கரந்து – வியாபித்த பதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அன்யை ரத்ருஷ்டனாய்
(தான் நிறைந்திருக்கும் பொருளுக்குத் தெரியாதவாறு மறைந்து, )
எங்கும் பரந்து உளன் –
சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே-எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.
------------
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே-நினைக்கப் பட்ட ஸமஸ்த பதார்த்தங்களும் உபாதான காரணமாய் -ஸ்வரூப விகாரம் பிறவாதபடி-சம்ஹார சமயத்திலே புருஷார்த்த உபயோகியான கரணங்களை இழந்து கிடக்கிற தய நீய தசையைக் கண்டு ஐயோ என்று நினைப்பதொரு நினைவு உண்டு -அத்தைச் சொல்லுகிறது-அசித விசேஷிதான் ப்ரலய ஸீம நிசம்சரத கரண கலேபரைர் கடயிதுந்தயமாநமநா
வித்தாய்-தேவாதி சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய்
முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை –ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் –
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.
‘மேல் மனம் செய் ஞானம்’ என்று சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில்,
காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து
‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,
வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,
இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;-அதனை அருளிச் செய்கிறார்.
இனி, நினைத்தல் –
கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு,-‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக் கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று-பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ பிள்ளை யமுதனார்.
முதலில் சிதையாமே –-நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார்.
---------------
கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை திரு மால் இரும் சோலை யதே -4 -3-9 –
பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்-பெருகி வரும் திரு மலையில் இரண்டு அருகில் உள்ள பதார்த்தங்களையும் வாரிக் கொண்டு வருகையாலே-பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைமா கரிக்கோடும் அகில் குறடும் சந்தனமும் முதலாக (பெரிய திருமொழி ) தான் திரட்டின பல பதார்த்தங்களையும் என்னுடைய நாதனுக்கு திரு முன் காணிக்கை என்று இத்தை
சமரிப்பிக்கையில் உண்டான த்வரையாலே மிகவும் விரைந்து வாரா நிற்பதாய்
தன் பக்கல் அவஹாகித்தார் உடைய சகல சிரமங்களும் ஆறும் படி குளிர்ந்து இருப்பதான திரு சிலம்பாற்றை உடைய திரு மால் இரும் சோலை-ஆகிற இதுவே -விமலன் மலை-
---------------------
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –-கைம் முதல் உள்ளவையும் –வளை நிறம் போன்ற அனைத்தையும் -முன்னே கொண்டார்-
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –ஒரு வேடுவிச்சி குரங்கு இடைச்சி –சபரி சுக்ரீவன் யசோதை -இவர்களுக்கு ஸூலபனாய் நின்று –இங்கு அந்தராத்மாவாய் நின்ற நிலை சொல்ல வில்லை –
மேலே ஆர்க்கும் எய்தாது என்று இருப்பதால்-அதற்கு பிரதி கோடியாக சௌலப்யம் காட்டி அருளியதையே சொல்லும்-
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதைக சமதி கம்யராய் -ஸ்ரீ கீதை -15-15-நின்றார்
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு –பெரியாழ்வார் திருமொழி -4-3-11-என்னக் கடவது இறே
ஆத்மாத்மீயங்கள் இரண்டையும் கொண்டார் –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார்
இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்தது இறே –
முலைப் பால் உண்ணும் குழந்தை பருவத்திலே -பகவத் சம்பந்தம்
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய –அயோத்யா -40-5-போலே –
பிறக்கிற போதே வளை இழந்து கொண்டே போலே காணும் பிறந்தது –
இத்தனையும் சொல்லத் தகும் படி யோக்ய வஸ்து விறே
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த –
அன்வயத்திலே தரித்து வ்யதிரேகத்திலே தரியாமை-இவளுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
-------------- –
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்-ஒரோ வகையாலே ஒத்தும் ஒரேவகையாலே ஒவ்வாததுமான தேவ மனுஷ்ய ரூபேண பலவாய் பிரதிவ்யக்தய சங்க்யமான பதார்த்தங்களை விபூதியாக யுடையையாய்--ஞான ஏக ஆகாரதயா ஒத்து -ஸ்வயம் பிரகாசத்வ ஞாத்ருத்வாதி குண வைலக்ஷண்யத்தை யுடைத்தாய் ஸ்வரூப பேதத்தை யுடைத்தாய்-அஸங்யாதமான சித் அசித் பதார்த்தங்களை பிரகாரமாக யுடையையாய் –அவற்றினுடைய சாம்யா ஆகார திரோதாயகமான தேவ மனுஷ்யாதி ஆகாரங்களால் யுண்டான வேறுபாட்டுக்கு நிர்வாஹகனாய்--ஜாதியால் ஒத்தும் வ்யக்தி பேதங்களால் வேறுபட்டும் என்னுதல் -ஞாநை காகாரதையாலே ஒத்தும் -அஹம் த்வமாதி பேதத்தாலே வேறுபட்டும் என்னுதல் -இப்படி பலவகைப்பட்ட பதார்த்தங்கள் அசங்க்யேயமாய் இருக்கிற இத்தை விபூதியாக யுடையையாய்-எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே-வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி
----------
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-
அல்லாப் பொருள்களுமாய வெந்தை
மற்றும் இடி மின் தொடக்கமானவை எல்லா வற்றுக்கும் நியந்தாவான சர்வேஸ்வரன்
------------
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-
எழில் வேதப் பொருள்களுமாய் –தேஹா திரிக்தமான ஆத்ம வஸ்து
காரண அவஸ்தமான சித் அசித்துக்கள்-கல்யாண குணங்கள்-பகவத் ஸ்வரூபம்
இவற்றை பிரதிபாதிகக் கடவ வேதைக சமதிகம்யமான அர்த்தங்களும் தானாய்
--------
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-
மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை--மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு விஸ்த்ருதனாய் நின்றவனை--தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி
இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து-அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –
அயமாத்மா ப்ரஹ்ம
ப்ரஹ்ம தாஸா--என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )
---------------
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-
என் பொருளா -என்ன பிரயோஜனம் -மூலம் ஏது -என்று கேட்க -மக்நானுத் தீராதே லோகன் -என்கிறபடியே-சர்வரையும் உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த நீரும் சர்வேஸ்வரனைப் போலே என்னை உம்முடைய-கிரீடைக்கு இவ்வளவும் விஷயமாக்கி வைத்தீரே -என்ன -இவ்வளவும் உமக்கு அதிகாரம் இல்லாமையாலே
அப்படி வைத்தோம் -என்ன -அதிகாரம் உண்டேல் அரங்கர்-இரங்கரோ – அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ எதிராசா நீர் இரங்க வேண்டுவது -ஆனாலும் இப்போது நீர் இரங்க வேண்டுவது எந்த அதிகாரத்தை பார்த்து-என்று முன்பு தம்மை –அவமே புறத்திட்டது என் பொருளா –என்னும்படியை பிடிக்கிறார் காணும் -இன்று என்னைப் பொருள் ஆக்கி – என்கிற பாட்டிலே ஆழ்வாரும் அவன் மடியைப் பிடித்தார் இறே -நம்முடைய கிருபையாலே இன்று உம்மை இப்படி-பண்ணினோம் என்றீர் ஆகில் -அந்த கிருபையினுடைய ஸ்வபாவத்தை சொல்ல வேணும் என்கிறார் –
இதற்கு முன் நோக்காததும் -இன்று இலக்கு ஆக்கியதுமான பிரகாரம் தெரிவரிதாய் உள்ளது –
எம்பெருமானார் –நல்லோர் இன்று உம்மை ஆளாக்கினர் -ஆகையால் அருள் பெற்றீர்–என்றார்
-அன்நல்லோர் இது காறும் ஏன் ஆள் ஆக்கி கிற்றிலர் என்றார் -இவர்
இது காறும் உமக்கு இசைவில்லை -என்றார் அவர் –
இன்று இசைவு வந்தது எங்கனம் -என்றார் இவர்
அத்வேஷாதிகள் உம்மிடம் உண்டானமையால் என்றார் அவர்
அத்வேஷாதிகள் இன்று உண்டாவானேன் -என்றார் இவர்
அது ஈஸ்வர கடாஷம் ஆகிற பிரதம சூக்ருதத்தாலே என்றார் அவர்
அவ் வீச்வரனும் தேவரீர் அன்றோ –ஏன் முன்பே கடாஷித்து இருக்க கூடாது -இப்பொழுது-கடாஷிப்பதற்கு என்று ஒரு அதிகாரம் உண்டாயிற்றோ எனக்கு -ஆகையால் இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
------------
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய்-–5-7-3-
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய்-–9-8-8-
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்-10-8-9-
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்–ஒரு வஸ்து வென்று புத்தி பண்ண ஒண்ணாத படி அவஸ்துவான என்னை லப்த ஸ்வரூபனாம் படி அங்கீ கரித்து -அதுக்கும் மேலே -வாசிகமான கைங்கர்யத்தையும் கொண்டவனாய் ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்
பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்–இவன் செய்தபடி செய்கிறான்-என்று கிருபை பண்ணாது இருக்கிலும் இருக்கிறாய் –அடியேனை அநந்ய கதியாம்படி யுனக்கேயாய் இருக்கிற என்னை நிரவதிக கிருபை பண்ணி லப்த சத்தாகனாக்கி உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளின் கீழே பிரவேசிக்கும் படி வைக்கிலும் வைக்கிறாய்-அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய்
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
----
பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-
பழகு நான் மறையின் பொருளாய்
அபௌருஷேயமான வேதங்களின் அர்த்தம் இவனே இறே
அல்லாதவை ஏக விஜ்ஞான நியாய சித்தம் –
------
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-
மறையாய்-வேதங்களும் தான் இட்ட வழக்கு-தன்னை உள்ளபடி பிரதிபாதியா நின்ற வேதங்களாய் – –மறைப் பொருளாய்--வேத ப்ரதி பாத்யனாய் –அப்படிப் பட்ட வேதாந்த ரகஸ்யமாய்
-----------
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் (கட உபநிஷத் )-என்னும்படியே-உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே- ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய் நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-கோயிலிலே கண் வளருகிறவனே-புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே-
-------
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69–
செவிக்கும் பிரியமாய் இருப்பதும் சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேஸ்வரன் உடைய திரு நாமமே-லோகத்தாருக்கும் ஸூகமான ஸ்தானமும் அத் திரு நாமமே
கவி பாடுகைக்கும் பூரண விஷயமாய் இருக்கும் ஸ்ரீ யபதியை அடைந்தேன்
விசாரித்துப் பார்த்த இடத்தில் வேதாந்த அர்த்தமும் அதுவே –பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –இல்லாதன இட்டுச் சொல்ல வேண்டாதே பூரணமாக என் கவிக்குப் பிரதிபாத்யனானவனைப் பெற்றேன்-ஆராயில் வேதார்த்தமும் அத்தனையே-
-----
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-
உய்வதோர் பொருளால் –
விஷயங்களிலே கை கழியப் போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் –
இனி இவன் தானாக மீள மாட்டான் -என்று அது தானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –கிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது-பகவத் கிருபையை -கௌரவத்தாலே -உய்வதோர் பொருள் -என்று மறைத்துச் சொல்லுகிறார்-நாலாம் பாட்டில் -ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்
நம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே-நானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் நானே விநாசத்துக்கு ஈடான பரிகரம் தேடிக் கொள்ள எனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று
அசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று-
------------
பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்-பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது-பொருளாலே ஸ்வர்க்கத்தில் புக-யத்னம் பண்ணப் போகாது-அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –அர்த்த புருஷார்த்தத்தை சாதனமாகக் கொண்டு ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய பூமியிலே புக ஒண்ணாதே -என்னுதல்
அன்றிக்கே – வஸ்துத்வ புத்தி பண்ணி ப்ரஹ்மாதி லோகங்களிலே புகுவதாக அர்த்திக்க யத்நிக்கலாகாது –
--------
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –
அம் மறைப் பொருளால் -ஸ்ருதிகளுக்கு -சுத்த அபேத பிரதிபாதனமே பொருள் என்று குறும்பு சொல்லுகிற அந்த குத்ர்ஷ்டி மதநிஷ்டரை அடங்கலும் -அகிஞ்ச்சித்ஜ்ஞனாய் கர்ம வச்யனான சேதனனுக்கும் -சர்வஜ்ஞ்ஞனாய் அகர்ம வச்யனான – ஈஸ்வரனுக்கும் ஸ்வரூப ஐக்ய பிரதிபாதாகநத்தாலே அவற்றுக்கு தாத்பர்யம் சொல்ல ஒண்ணாமையாலே -விசிஷ்ட ஐக்யமே அவற்றினுடைய தாத்பர்ய விஷயீ பூதார்த்தம் என்று ஸ்வரூப ஐக்ய பிரதிபாதகனத்துக்கு -அத்யந்த பிரதி கூலங்களாயும் -விசிஷ்ட ஐக்ய பிரதிபாதாக நத்துக்கு அத்யந்த அனுகூலங்களாயும் -இருந்துள்ள -போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா – என்றும் – த்வா ஸூபர்ணா ஸ யுஜா ஸ காயா சமானம் வர்ஷம் ப்ரிஷஸ் வஜாதே -தயோ ரக்ய பிப்பலம் சாத்வத்தி அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி -என்றும் -இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சான்-ஏதத் சாம காயான் நாஸ்தே -என்றும் -யஸ் யாத்மா சரீரம் யஸ்ய பர்த்வீ சரீரம் -என்றும் -இத்யாதி பேத சுருதிகளையும்கடக சுருதிகளையும் உபன்யசித்தும் பஹூ முகமாக ப்ரசங்கித்தும் அந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யன்களைக்-கொண்டு தானே பாய்ந்தனன் -அந்த ஸ்தலத்தில் நின்றும் பலாயனம் பண்ணுவித்தார் –பாய்தல் -உதைத்தல் –
இறைவன் பால் பக்தி உணர்வு இல்லாதாருக்கு தம் பொருளைக் காட்டாது மறைப்பது பற்றி-வேதத்திற்கு இப்பெயர் வந்தது .பக்தி உணர்வு அற்ற மற்றவர்கள் மெய்ப்பொருள் காணாது-தம் தமக்கு தோற்றும் அவப்போருள்கள் கூறி இடர்ப்படுவதற்கு இதுவே காரணம் என்று உணர்க .-எந்த மறைக்குக் குத்ருஷ்டிகள் அவப்பொருள்கள் கூறினரோ-அந்த மறைக்கே மெய்ப்பொருள்கள்-கூறி அவற்றின் பலத்தினாலே அந்தக் குத்ருஷ்டிகளை உதைத்து தள்ளி விட்டார் எம்பெருமானார்-
---
மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை –
வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள
ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்
ஷரம் ப்ரதானம் அம்ர்த அஷரம் ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச –
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்
மேல் இருந்த என்றது –
இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி
அதாவது-சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –
நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே -என்னும்படி-சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கை-
---
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-
சொலப்படும் பொருளும் நீ –
ஸ்ருதி ஸ்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
--------
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-
பதங்களின் பொருளும் –
அவ்வோ பதங்களால் அறியப் படுகிற ஜீவ சமஷ்டியும் –
(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் போலே பொருள் ஜீவ சமஷ்டியைக் குறிக்கும் இங்கும் )
------
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-
கதையும்–இதிஹாஸ புராணங்களும்-பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும் -கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே-
இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது -சர்வ ஸூ லபனான உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களே –சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-
-------------
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—
மருந்தும் பொருளும் அமுதமும் தானே –
மருந்து என்று-விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று-உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று-உபேயத்தைச் சொல்லுகிறது –
விரோதியைப் போக்குவானும்--அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே -அநிஷ்ட நிவாரண பூர்வகமான இஷ்ட பிராப்தி பண்ணித் தருவானும் அவனே -என்றபடி
அன்றிக்கே-மருந்து என்று உபாயமாக்கி-பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது என்றுமாம் –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின ஜஞ்யாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து
அர்தியாய் வருகையாலே பொருளானான்-திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
----
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69–
கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே-ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் –பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –யாத்ருச்சிகமாக அன்றிக்கே ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும் அத்தனையே –நிறை பொருள் -நிறைவைச் சொல்ல சொற்கள் இல்லை -பரிபூர்ணமான வாஸ்யனாக நின்றவனை யாதிருச்சிகமாகப் லபித்தேன்-நேர் பட்டேன்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் – பகவத் கிருபையால் லபிக்கப் பெற்றேன்-யாதிருச்சிகமாக அளவு அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்க-வேதாந்த பொருளின் ஸித்தமான அர்த்தமும் அதுவேயாய் இருந்ததே-
------------
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு-76—
பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூற வந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
பாசுரங்களும் ஸ்ரீ ராமாயணமும் முன் நடந்த இதிஹாசங்களைப் ப்ரதிபாதிக்கிற மஹா பாரதமும்-அவற்றிலே சொல்லப்பட்ட அநேக அர்த்தங்களும்-செறிந்த அக்னியும் விசாலமான ஆகாசமும் ஆப்த தமம் என்று கேட்கப்பட்ட மனு ஸ்ம்ருதியும்
எழுதாமல் குரு முகமாகக் கேட்கப்பட்ட நான்கு வேதங்களும்
ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனுடைய ஸங்கல்பத்தினால் உண்டான தத்வங்கள் –பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்--அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –
லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
----
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –
இது விறே அப்படிப் பட்ட தர்மத்தின் உடைய பிரயோஜனம் ஆயிற்று
ஆகையாலே தர்மமும் காம சேஷம்
மோஷம் தானே தள்ளுண்டது
இனி சேஷிப்பது அர்த்தம் இறே –
ஒண் பொருளும் அன்ன திறத்தே –
சிறியார் பெரியார் இன்னார் என்று வாசி இன்றிக்கே எல்லாரும் ஒக்க நன்று நன்று என்று-விரும்புகிற அர்த்தமும் காம சேஷம் –
----------
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –
இயலும் பொருளும் இசையத் தொடுத்து –
தொடுத்து என்னும் சொல் -வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்களையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க -இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .
----
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –
பொருளும்
சமஸ்த புருஷார்த்த சாதனமாய் -ஸ்வ ஜனங்களோடு கூடி யாவஜ்ஜீவம் செய்கைக்கு உறுப்பாய்-இருந்துள்ள –
தன கனக வஸ்து வாஹனாதி சகல பதார்த்தங்களும்
பொருளும் –
பொருள் இல்லார்க்கு இவ் உலகமில்லை யாதலின் அது முந்துறக் கூறப்பட்டது
-----------
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –
பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் –
விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –
-------------
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–
தேவும் எப்பொருளும் படைக்க-தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்காக –
---
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க-ஈஸ்வரன் என்று சங்கிக்கலாம் படி மிக்க -ப்ரஹ்ம ருத்ராதி தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் -ஸ்ருஷ்டிக்க –
--------
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–எல்லா சேதனரும் எல்லா அசேதனங்களுமாகிற ஸமஸ்த பதார்த்தங்களும்-எவரும் யாவையும் எல்லாப் பொருளும் –சேதன வர்க்கத்தையும் அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வர்க்கத்தையும் சொன்னவற்றையும் கூட்டி-இப்படி இருக்கிற சகல பதார்த்தங்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது.
-----
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்–வருத்தித்த- மாயப்பிரானை யன்றி யாரே– தன் நினைவாலே தேவ வர்க்கமும் மனுஷ்யாதி சகல பதார்த்தங்களும்
சத்தை பெற்று அபி வ்ருத்தமாம் படி உண்டாக்கின -ஆச்சர்ய சக்தியாதிகளை யுடைய ஈஸ்வரனை ஒழிய ஆர் தான்
---------------
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –தனக்குள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருளும் இல்லை –-சர்வ வஸ்துவுக்கும் தத் வ்யதிரேகத்தில் சத்தா ஹானி ஸ்வரூப பிரயுக்தை-ஈஸ்வரனுக்கு இவருடைய வ்யதிரேகத்தில் சத்தை இல்லை என்று நினைக்கிற இடம் சீலக்ருதம் என்று கருத்து –
ந ததஸ்தி வினா யத்ஸ்யாத் -என்கிறபடியே ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருபத்தொரு வஸ்து சச விஷாணத்தோ பாதி முதலிலே இல்லை –
-அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
-இவன் இவரைக் கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது குணத்தால் –
---------
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்-எல்லா பொருளும் தானான சர்வாத்ம பாவமும் நிறம் பெற்று -மரகத மலை போல் உயர்த்தியும் நிறமும் உரமும் உடையனானான் –எப்பொருளும் தானாய் – சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரம் ஆகையால் தான் இட்ட வழக்காய் -ஸ்வ அதீனம் இல்லாததொரு பதார்த்தத்தைப் பற்றி இப்பாடு படுகிறானோ-எப்பொருளும் தனாய் – ஸ்வ வ்யாதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் -தன்னில் வேறாக நின்ற எல்லாப் பொருள்களும்
‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே பிரகாரமாம்படி தான் பிரகாரியாய்.
இதனால், ‘ஸ்வாதீனம் அல்லாதது ஒரு பொருளைப் பெற்றுதான் இப்பாடு படுகிறானோ?’ என்கிறார்.
--------------
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-
எல்லாப் பொருளும் விரித்தானை -கீத உபநிஷத் முகத்தால் இவ்வார்த்தை விசேஷங்களை விஸ்தீர்ணமாக உபதேசித்து-அர்ஜுனனுக்கு சார்வார்த்தங்களையும் வீசாதீ கரித்தால் போலே யுக்த அயுக்தம் அறியாதே
சிஷ்யாஸ் தேஹம் சாதிமாம் த்வம் ப்ரபன்னம் -என்று அர்ஜுனனுக்கு ஆத்ம யாதாம்யா ஞான பூர்வகமாக கர்மத்தை உபதேசித்து
தத் சாத்தியமான ஞானத்தை உபதேசித்து உபய அனு க்ருஹீதையான பக்தியை உபதேசித்து அவன் அதன் அருமையைக் கண்டு
அஞ்சின அளவிலே என்னையே தஞ்சமாகப் பற்று என்று அருளிச் செய்தான் இறே
எல்லாப் பொருளும் விரித்தானை –
முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன்,
‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப்
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
பொகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து,
எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை
அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு,
‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று,
கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.இங்கு வகை –உபாயம் இல்லை -அடியிலே இவனே உபாயம்
கிருஷ்ண த்ருஷ்ணையை வளர்த்ததே –குண சேஷ்டிதங்களை அனுபவிப்பது
அர்ஜுனனுக்கு உபாயம் -ஆழ்வாருக்கு ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து பக்தியை வளர்த்ததே ஆற்ற நல் வகை
------
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்-வேறு ஒரு பதார்த்தமும் இன்றி நீ நின்ற படியால்-ஸ்வ சரீரத்தில் வ்யாத்யாதிகள் சரீரி தானே சமிப்பிக்குமோபாதி
மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்-வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லாத படி சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டு நீ பிரகாரியாய் நிற்கையாலே
மற்று ஒரு பொருளும் இன்றி –
இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன என்று எவன் எண்ணுகிறானோ,
அவன் நனி பேதை ஆவான்; (ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று
மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே,
பரம் பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச் ஸ்வதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று,
ஈண்டு ‘இல்லை’ என்கிறது.
(ந இக நாநா அஸ்தி -அப்ரஹ்மாத்மாக தத்வம் இல்லை –
யத்ர அஸ்ய சர்வ ப்ரஹ்மாத்மகம் – கேன கம் பஸ்யத் -எத்தைக் கொண்டு எதை பார்க்க –
அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே
அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்
வேறு ஓன்று கொண்டு வேறு ஒன்றையும் பார்க்க முடியாதே )
---------------------------------------------------------------------
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply