ஸ தாம் புஷ்கரிணீம் கத்வா பத்ம உத்பல ஜஷா குலம்
ராமஸ் சவ்மி த்ரி ஸஹிதோ விலலாபா குலேந்த்ரிய -1-1-
இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –
உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா
ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது
——-
மயூரஸய வநே தூநம் ரக்ஷஸா ந ஹ்ருதா ப்ரியா
தஸ்மாந் ந்ருத்யதி ரம்யேஷு வநேஷு ஸஹ காந்தயா –1-40-
தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-3-6-1–மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-10-3-1-கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –
———-
பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்ச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர -1-71-
ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–1—பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு மேற்பட
ஆழ விழியுமது அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –
———-
பத்ம ஸுகந்திக வஹம் சிவம் சோக விநாஸநம்
தன்யா லஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம் –-1-105-
ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–8-2-
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ
பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ
பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம் -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம் -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்-
ஈடு -1-4-7–பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு ஸூதநே –3-9-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்-8-1-1-சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –
அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –
விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —
ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –
வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து-1-2-1-
வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும்
அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-
(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் போலே )
சத்ரு நாசனே -என்கிறது கிடக்க –
சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
உகப்பாரோடு உகவதாரோடு வாசி யற இரண்டு திறத்தாரையும் அழிக்கும் ஆயிற்று –
சக்ர சாப நிபே -இத்யாதி
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க
வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –
க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச் செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –
————-
ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவ பரி கோபமா
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -3-15-
நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-திரு விருத்தம் -44-
நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —
ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத் தோள்களைக் கண்ட போதே –
ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம் தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –
பாஹவ-ராமஸ்ய தஷிணோ பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )
சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –
கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –
(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )
————
நாந் ருக் வேதவிநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண
நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் –3-29-
பெரிய திருமொழி-8-1-
என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –
நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )
———–
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -4-11-
ஈடு -1-1-1- இளைய பெருமாளை நீர் இவருக்கு என்ன ஆவீர் என்ன -பெருமாள் ஒருபடி நினைத்து இருப்பர் -நானும் ஒருபடி நினைத்து இருப்பன் -என்றார்
அவர் நினைத்து இருக்கும்படி என் -நீர் நினைத்து இருக்கும்படி என் என்ன
அவர் தன் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்றார் இறே –
———–
லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –4-18-
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-
லோக நாத புரா பூத்வா –
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே
இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்
ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் – என்று அருளிச் செய்து அருளினாராம்
———
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்நா நாம் பரா கதி
ஆர்த்தா நாம் ஸம்ஸ்ரயஸ் ஸைவ யஸஸ்ஸைக பாஜநம் –15-19-
திருவிருத்தம்-58-
திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால் மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
ஆஸ்ரித ரஷகனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது ஒரு நிழல் கண்டிலேன் –
நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
நிவாச வ்ருஷ ஸாதூநாம்-
வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-
அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-
கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன
அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –
பெருமாள்-என்றாள் –
ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன –
சொல்லுகிறாள்
நிவாச வ்ருஷ ஸாதூநாம் –
இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும்
பழமாயும்
நிழலாயும்-
தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழியச் செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் –
இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –
(வாஸம் மட்டும் அல்லவே
நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம்
கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )
நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ –
செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –
ஆபன்நாநாம் –
ஒதுங்கோம் என்னாமை போராது காண் –
ஆபன் நராகவும் வேணும் காண் –
நான் தான் ஆபன்னன் அன்றோ –
உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –
ஆர்த்தா நாம் –
ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –
ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன் வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –
இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு
இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன
யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்-
இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –
நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே
அவர்களை சொல்லுகிற இதில் ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க
இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் –
வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே –
கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –
ஏக பக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-
முந்துற சம்சாரத்தில் நொந்து –
பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-
அநந்தரம்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய் –
இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –
(நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே
ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்
ஆபன்னானாம் கைவல்ய பரர்
ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி
அனைவருக்கும் -பராம் கதி )
————-
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுர் ஊர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்த்துஸ் சைவ அநுஜம் ஸுபா –19-26–
திருவாய்மொழி – -5-10–6-நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)
நின்றும் –6-9-3-
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.
———————
நிஸ் ஸ்வநம் சக்ர வாகாணாம் நிசம்ய ஸஹ சாரி ணாம்
புண்டரீக பலா சாஷீ கதம் ஏஷா பவிஷ்யதி –30-10-
திரு விருத்தம் -51-
அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே –
ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று
அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை –
அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று
(இப்படி ஓசை படுத்தின இடத்துக்கு மேல்
பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதா பிராட்டிக்கு )
நிச்வசஞ் சக்ரவாகாநாம் –
பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான படி–
சஹ சாரணாம்-
பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-
புண்டரீக விசாலாட்ஷி-
வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே
வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –
கதேமேஷா பவிஷ்யதி –
என்ன துன்பம் பட்டாளோ-
—————-
க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் –-32-17-
திருவாய்மொழி – -1-1-5-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே-
———–
ஸா ப்ரஸ் கலந்தீ மத விஹ்வாஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸ லக்ஷணா லஷ்மண ஸந்நிதானம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி -33-38-
மென்னடைய அன்னங்காள்–திருவாய் ஈடு-1-4-3-
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –
—–
கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே –33-41-
திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply